Sunday, March 6, 2011

ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.
வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள். படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம்.
இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம். பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்லிய இசையை கேட்படி தூங்கலாம்.
அதுவும் இல்லையென்றால் கனமான போர்வை இழுத்துப் போர்த்தி படுக்கலாம். அல்பமான குறட்டைக்காக டைவர்ஸ் வரை போவது ரொம்ப ஓவர். சிலர் அடித்துப் போட்டாற்போல கொஞ்சம்கூட அசையாமல் தூங்குவார்கள். வேறு சிலர் புரண்டுகொண்டே இருப்பார்கள். உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுத்து தூங்குவது கஷ்டமான விஷயம்தான்.
இதுபோன்ற நபர்கள், பார்ட்னருக்கு தொந்தரவு கொடுக்காமல் தரையில் படுத்து புரள்வது சிறந்தது. சிலர் அதிகாலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். உங்கள் இனியவர்/இனியவள் மிட்நைட் 1 மணிவரை டிவி பார்த்துவிட்டோ, புத்தகம் படித்துவிட்டோ தூங்க செல்லும் நபராக இருக்கலாம்.

அப்படியிருந்தால் அதிகாலையில் எழுந்திருக்கும் நபர், முதல் வேலையாக வீடு முழுவதும் ட்யூப்லைட் போட்டு அமர்க்களம் பண்ணக்கூடாது. முடிந்த அளவு நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே தன் வேலைகளை முடிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
இல்லற இன்பத்துக்குப்பின் சிலருக்கு உடனடியாக தூக்கம் சொக்கும். பார்ட்னர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க பிரியப்படலாம். ‘குட்நைட்’ சொல்லி அவரை கடுப்பேற்றாமல், உங்கள் தூக்கத்தை அட்லீஸ்ட் 10 நிமிஷமாவது அவருக்காக தியாகம் செய்துவிட்டு பேசிக்கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற சின்னப் பிரச்னைகள்தான் விஸ்வரூபமெடுத்து பிரிவு வரை போகிறது. பார்ட்னருடன் மனம் விட்டுப் பேசினால், மென்மையாக எடுத்துச் சொன்னால் சிறிய அளவாக இருக்கும்போதே பிரச்னைகளை அகற்றிவிடலாம். படுக்கைஅறை போலவாழ்க்கையும் இன்பமாகும். ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
 


உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்

அருகம்புல்லும் அதன் மருத்துவ குணமும்!

சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.


"தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!



தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. 
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையின் பயன்கள்:

1) புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. குறிப்பாக கொப்பரை தேங்காய் ஆண்மையைப் பெருக்கும் .

2) தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

3) மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

4) மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

5) தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

6) தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

7) தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

8) தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

9) முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

10) இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.


பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்


பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்printEmail
மருத்துவம் - ஆங்கில மருத்துவம்
திங்கள், 25 டிசம்பர் 2006 04:49
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடினால் அதனை 'டயாபடீஸ்' என்கிறோம். குறைந்தால் அதன் பெயர் என்ன? அதுவும் உடலுக்குப் பிரச்னையா?

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் "ஹைப்போ கிளைசி மாலா" ஏற்பட்டு, கைகள் நடுங்கும். பதறும். உடனே ஒரு சாக்லெட் போன்ற இனிப்புப் பொருளை வாயில் போட்டுக்கொள்வது நல்லது. இன்சுலின் தவறுதலாக அதிகம் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த அபாயம் உண்டு.

------oOo------

சமையல் சோடா(cooking soda / baking soda)  உபயோகிப்பது உடல்நலத்திற்குக் கெடுதலா? ஆமாம் எனில், அதற்கு மாற்று என்ன?

உப்பு போல சமையல் சோடா என்பது இயற்கையானதில்லை. ஒரு வகையான கெமிக்கல்தான். எனவே, அதற்கு மாற்று கிடையாது. அதை அளவு தெரிந்து பயன்படுத்தினால், நமக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்காது. ஆனால், அளவுக்கதிகமாகப் பயன்படுத்தினால் டையரியா, டிஸன்ட்ரி போன்றவை ஏற்படலாம். ஒரு கிலோ இட்லி மாவுக்கு ஒரு சிட்டிகை (பிஞ்ச்) சோடா மாவு பயன்படுத்தினால், உப்பல் நன்றாக இருக்கும். அதிகமாகப் போட்டால் இட்லி உப்பாது. வயிறுதான் உப்பும்.

------oOo------

இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (Wisdom Tooth)  தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்க முடியுமா?

பொதுவாக பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் ஞானப்பல் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள். மூன்றாவது கடவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும். ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.

இதனால் எல்லாம் பிரச்னை இலலை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்து விடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார்.

------oOo------

பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' என்ன தொடர்பு? கப்பல், விமானம், பஸ் பயணங்களில், சிலருக்கு வாந்தி வருவது ஏன்? பயணத்துக்கும் 'குமட்டலுக்கும்' தொடர்பு உள்ளதா?

நம்முடய ஸ்திர நிலையை மூளை உணர்வதற்கு நான்கு சிக்னல்கள் தேவை.

1. காதுகளின் உள்பகுதியில் உள்ள திரவம், முப்பரிமான சமநிலையை அறிவிக்கிறது.

2. கண்கள், சுற்றுப்புறத்துக்கும் நமக்கும் உள்ள அசைவு வேறுபாடுகளை உணர்த்துகின்றன.

3. காலிலும் உட்காரும் இடத்திலும் உள்ள அழுத்தம் மூலம் புவிஈர்ப்புவிசை நம் உடலை எப்படி பாதிக்கிறது, எது மேல், எது கீழ் என்பதை உணர்கிறோம்.

4. தசைகளுடன் இணைந்த நரம்புகள், செய்திகள் உடலின் எந்தப் பகுதிக்கு நகர்கிறது என்பதை அறிவிக்கிறது.

இந்த நான்கு செய்திகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால், குமட்டல் வரும். குறிப்பாக, பிரயாணத்தின்போது புத்தகம் படித்துக்கொண்டிருந்தால் கண்கள் நகர்வதை கவனிப்பதில்லை. காதுகள் நகர்தலை உணரும்போது, விளைவு சுழட்டல் குமட்டல்! இது அதிகமாக இருந்தால் மருத்துவரை ஆலோசித்து ஆவோமின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். 


Printer இனை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில...


*Printer இல் அதிக தாள்களை அடுக்கி வைக்க கூடாது.


*Laster Printer இல் ஒரு தடவை எடுத்த பின் தாளை மீண்டும் Printer  எடுப்பது   நல்லதல்ல. ஏனெனில் இல் இருந்து வெளிவரும் வெப்பம் ஏற்கனவே அச்சான மையை உருக்கி உள்ளே கறையாக படியும் 


*Printer இல் பேப்பர்கள் அடிக்கடி சிக்கினால் பேப்பரை மாற்றுங்கள் அவ்வாறே சுருக்கு கோடு வந்தால் தடிப்பான பேப்பரை போடவும் 


*Printer இல் பயன்படுத்தப்படும் காட்ரோனார்களை அதன் பாவனை முடிவு திகதி க்கு முன் பயன்படுத்த வேண்டும் 


*ரோனர்களை நிலைக்குத்தாக வைக்காது கிடையாக வைப்பதே நல்லதாகும்


*ரோனர் காட்ரேச்சுக்களை வெப்பம்படும் பகுதிகளில் வைக்க கூடாது


*சுத்தம் செய்யும் போது Printer Manual  ஐ பின்பற்ற வேண்டும் 


*உள்ளே தூசுதுணிக்கை செல்லாதவாறு பராமரிக்க வேண்டும்




Autorun.inf - வைரஸை நீக்கும் உபயோகமான Software


Autorun.inf என்பது CD / DVD மற்றும் USB drive கள் கணினியில் உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில் எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe ) இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico

இது நிச்சயமாக வைரஸ் இல்லை. ஆனால் வைரஸ்கள் உங்களின் ஒவ்வொரு டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவுகின்றன. பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும். இதனால் உங்கள் கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது. இக்கோப்புகளை சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.






இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Smart Virus remover இதன் சிறப்புகள்,

1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது.
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.
Registry Disabled,
Task manager Disabled,
Enable Folders options
Enable run
Enable command prompt


மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.

3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)




Download now clicked செய்து தரவிறக்கவும்
இதன் தரவுச் சுட்டி http://www.fiberdownload.com/Download/20831/Smart-


கணினி ஆன் செய்தவுடன் bios ஆ


கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

*1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

*4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

*5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

*6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

*7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும். 




அச்சச்சோ மறந்து போச்சே"


அச்சச்சோ மறந்து போச்சே"
"அச்சச்சோ மறந்து போச்சே" என்று பலரும் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.இதற்கு காரணம் நினைவாற்றல் இல்லாதது தான்.
நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப்பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். உங்களுக்காக சில குறிப்புகள்
1.
ஞாபகசக்தியை அதிகரிக்கம் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீட்சை,திராட்சை, மாதுளை,ஆரஞ்சு முதலியன.
2.
சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
3.
பள்ளிக் குழந்தைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்து கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரவில் 12  பாதாம் பருப்புகளை ஊறப்போட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு சாப்பிடுவதால் நரம்புகளும் பலமாகின்றன. அரைக்கும் முன் பாதாமின் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாமில் 490 கிராம் பாஸ்பரஸ்,தாதுஉப்பு இருக்கிறது.குளுட்டாமிக் அமிலமும் இதில் உள்ளது.
4.
கோதுமை,சோளம்,பார்லி,காராமணி,பீட்ரூட்,சோயாபீன்ஸ்,வெங்காயம்,வெள்ளைப்பூண்டு,புதினா ஆகியவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது.இதை தவிர பால்,தயிர் முதலியவற்றையும் உணவில் சோ்க்க வேண்டும்.
நினைவாற்றல் குறைவதற்கு மிக முக்கிய காரணம் கவலைகள்தான். இரத்த ஓட்டக்குறைவும், நோய்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூனளக்கு சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும்.மூளையை சோர்வடையால் பார்த்துக் கொள்வது நினைவாற்றலை அதிகரிக்கும்.