Tuesday, November 1, 2011

இதை நான் சொல்லலை, டாக்டரம்மா சொல்றாங்க


 

மகப்பேறு மருத்துவர் டாக்டர் அமுதா ஹரி: கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இதை பாலோ செய்தால் ஆபத் தில்லாத பிரசவமும், ஆரோக்கியமான குழந்தையும் நிச்சயம். 

முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும் . இல்லாவிட்டால் அபார்ஷன் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு. மூன்றாவது மாதத் துவக்கத்தில் முதல் ஸ்கேன் செய்து கருக் குழாயிலிருந்து கர்ப்பப்பைக்கு கரு வந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது ஸ்கேன் மூலம், குழந் தைக்கு நார்மலான, நல்ல இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம். மூன்றாவது ஸ்கேனை 16லிருந்து 20 வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இது குழந்தையின் அங்க அவயங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு.நான்கு, ஐந்து, ஆறாம் மாதங்களில் சர்க்கரையும், பி.பி., யும் உயர் ரத்த அழுத்தமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
 

குழந்தையின் அசைவு நான்காம் மாதத்திலேயே தொடங்கிவிடும். அப்படித் தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். வாரம் அரை கிலோ எடை ஏறுவது தான் ஆரோக்கியமான, சரியான விஷயம். பிரசவ காலத்தில் கடைசி மூன்று மாதங்களில்தான் சரியான எடை கூடும்.
 

கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக் கூடாது. குழந் தையின் எடை கர்ப்பப் பையை அழுத்தி ரத்த ஓட்டத்தைத் தடுக் கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லை என்றாலோ, வலி இல் லாமல் சிறுநீர் மாதிரி தண்ணீர் போய்க் கொண்டு இருந்தாலோ, சில சமயம் வலியுடன் நீர்போவதும் உணர்ந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
 

வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலியைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும்; சிசேரியனைத் தவிர்க்கலாம். ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; பயப்படக்கூடாது.

இணைய தளம் சிறப்பாக அமைத்திட!



தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம்.

1. முகப்பு பக்க அளவு:

உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் வழியாகத்தான் அனைவரும் நுழைவார்கள். (பொதுவாக இந்த முகப்பு பக்கத்தினை index.htm அல்லது default.htm என்று அழைப்பார்கள்.) எனவே இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். முகப்பு பக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அதனைக் காண விரும்புபவர்கள் எரிச்சல் அடைந்து ஆர்வம் குறைந்து தளத்தைக் காணும் முயற்சியைக் கைவிடுவார்கள். உங்களுடைய தளத்தினைப் பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் காண விரும்புவார்கள் எனில் இந்த முகப்பு பக்கத்தின் அளவு 90 கேபிக்குள் இருப்பது நல்லது. இதுவே இந்திய மக்கள் தான் காண்பார்கள் என்றால் 50 கேபி என்ற அளவிற்குள் இருப்பது நல்லது. இந்த அளவு எச்.டி.எம்.எல். வழி தகவல், பிளாஷ் மற்றும் அனிமேஷன் ஆகிய அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

2. முதல் ஈர்ப்பு:

எந்த பொருளும் மக்களை முதல் பார்வையிலேயே கவர வேண்டும் என்பது பொதுவான ஒரு விஷயமாகும். இன்டர்நெட் தளத்தின் முகப்பு பக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே உங்களைப் பற்றிய தகவல்கள் நச் என்ற வகையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக அதே சமயத்தில் தளத்தின் உள்ளே சென்று பார்க்கும் வகையில் அமைய வேண்டும்.

3. நேரம்:

இப்போது பிளாஷ் தொகுப்பு உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இதனைப் பார்ப்பவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிப்பது நல்லதல்ல. இது அதிக நேரம் எடுக்கும். கட்டாயம் பிளாஷ் காட்சி ஒன்று தேவை என்றால் அதனை பார்வையாளர்கள் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுக்கும் வசதியும் தரப்பட்டிருக்க வேண்டும். வெறும் டெக்ஸ்ட் மட்டும் கூட அழகாக அமைக்கப்படலாம் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தளத்தைக் காண வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும். உங்கள் தளத்திற்கும் பெருமை சேர்க்கும்.

4. தொடர்பு:

நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதனைக் காண்பவர்கள் உங்களிடம் சில விளக்கங்கள் வேண்டி உங்களைத் தொடர்பு கொள்ள எண்ணலாம். எனவே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என முகப்பு பக்கத்திலேயே குறிப்பிட வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்கலாம். அல்லது பார்ப்பவரின் கம்ப்யூட்டரில் உள்ள இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி நேரடியாக மின்னஞ்சல் அனுப்பும் வசதியையும் ஏற்படுத்தலாம்.

5. புதுமை

ஆம் அதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணைய தளத்தை புதுப்பித்துக் கொண்டிருங்கள். அதற்காக அடியோடு அதனை மாற்ற வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் அவ்வப்போது இருப்பது உங்கள் தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கும்.

6. சரக்கு

ஆம் உங்கள் நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது உங்களின் தனிப்பட்ட தளங்களில் தகவல் சரக்கு நிறைய இருக்க வேண்டும். உங்கள் நிறுவனம் எந்தப் பொருளையேனும் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருளைப் பற்றி மட்டுமின்றி உங்கள் நிறுவனம் அதன் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு பற்றியும் நிறைய தகவல்களை நீங்கள் தரலாம்.

7. மேம்பாடு

உங்கள் நிறுவனம் போல, உங்கள் அமைப்பு போல இயங்கும் மற்றவற்றின் இணைய தளங்களையும் நீங்கள் அடிக்கடி சென்று பார்த்து அவர்கள் செய்திடும் மாற்றங்கள், மேம்படுத்தும் தகவல்கள் ஆகியவற்றையும் கண்டறிந்து ஆய்வு செய்து உங்கள் தளத்தையும் அதே போல இல்லாமல் அதைவிடச் செறிவாக மேம்படுத்துங்கள்.

8. சோதனை

உங்கள் இணைய தளம் உங்களுக்குப் பிடித்த பிரவுசரில் மட்டும் சரியாக இயங்கக் கூடாது; மற்ற பிரவுசர்களிலும் மிகச் சரியாக இயங்க வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பினரையும் உங்களால் கவர முடியும். அத்துடன் பல்வேறு ரெசல்யூசன் அமைப்பிலும் உங்கள் இணைய தளத்தைச் சோதனை செய்து பார்த்திட வேண்டும். வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இயக்கிப் பார்த்திட வேண்டும்.

9. படங்கள்

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இறங்குகின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறிய வேண்டும். வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்த படங்கள் எப்படி இறங்கி இயங்குகின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

10. சொல்லும் மொழி

உங்கள் மொழி நடையை ஸ்டைலாக அமைப்பதற்கு முன் அதில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழை இல்லாமல் இருப்பதனை ஒன்றுக்குப் பல முறை உறுதி செய்து கொள்ளுங்கள். தமிழ் மொழியில் உங்கள் தளத்தில் தகவல்கள் தரப்பட்டால் அந்த எழுத்துருவினை டவுண் லோட் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும். அந்த வசதி உள்ளது என்பதனை ஒரு ஜேபெக் பட பைலாகவோ அல்லது ஆங்கிலத்திலோ அமைக்கலாம்.

11. எழுத்துரு

அனைவருக்கும் தெரிந்த எழுத்துருக்களில் உங்கள் தகவல் தளத்தை அமைப்பது நல்லது. அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் பழக்கப்பட்ட தளம் போல உங்கள் தளம் காட்சியளிக்கும்.

12. எளிதான தாவல்

உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்திலிருந்து தகவல்களுக்காக நேயரை மற்ற தளத்திற்கு இழுப்பது மிக எளிதான ஒன்றாக இருக்க வேண்டும். அவை உடனடியாக இறக்கம் செய்யப்படும் வகையில் தரப்பட வேண்டும். எந்த பக்கத்தில் இருந்தாலும் பிற பக்கங்களுக்குச் செல்வதற்கு எளிதான வழி அமைத்துத் தரப்பட வேண்டும்.

13. விளம்பரம்

உங்கள் இணைய தளம் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக விளம்பரங்களுக்கு இடம் தருவது தவறில்லை. ஆனால் அவை அளவுக்கு மீறி இடம் பெறக் கூடாது. இரண்டு விளம்பரங்களுக்கு மேல் இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கும்.

14. பாதுகாப்பு

இணைய தளத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம் அதன் பாதுகாப்பு. உங்கள் இணைய தளத்தினுள் யாரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு வளையங்களை அமைத்து அவற்றை அடிக்கடி மாற்றி மாற்றி அமைத்துவிட வேண்டும்.

உங்கள் இணைய தளப் படங்களை பிறர் திருடாமலிருக்க செய்ய வேண்டியவை:

பலரும் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் அவை சார்ந்த படங்களை இணைத்து இணைய தளங்களை அமைக்கிறார்கள். ஆனால் இந்த தளங்களைப் பார்க்கும் நேயர்கள் இவற்றில் உள்ள படங்களை அப்படியே காப்பி செய்து தங்களுடைய விருப்பப்படிப் பயன்படுத்துகிறார்கள். சிலர் அவற்றை மற்றவர்களுக்கு விற்று விடுகிறார்கள். சிலரோ அவற்றைக் கீழ்த் தரமாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த திருட்டை எப்படித் தடுப்பது? இது குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம். இணைய தளங்களில் பொருத்தப்பட்டு காட்சியளிக்கிற படங்களை காப்பி செய்ய முடியாதவாறு தடுக்க சில வழிகள் உள்ளன. உங்கள் வழிகளை மீறி படங்களைச் சாதாரண பயனாளர்களால் காப்பி செய்ய முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் விற்பன்னர்களால் காப்பி செய்ய முடியும்.

ரைட்கிளிக் செய்வதை தடுக்க:

பொதுவாக ஓர் இணைய தளத்தில் உள்ள படத்தால் ஈர்க்கப்பட்டவர் அதை காப்பி செய்ய அதை ரைட்கிளிக் செய்வார். மெனு கிடைக்கும். அதில் Save Image As என்பதைப் போன்ற கட்டளை தெரியும். அதை கிளிக் செய்தால், அந்தப் படம் அவர் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும். எனவே ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி, ரைட்கிளிக் செய்தால் மெனு கிடைக்காதவாறு செய்து விட வேண்டும். மெனு கிடைக்காததால் Save Image As கட்டளையை அவரால் செயல்படுத்த முடியாது. ரைட்கிளிக் செய்யும் பொழுது கிடைக்கிற மெனுவில் வேறு நல்ல பயனுள்ள கட்டளைகளும் உள்ளன. எனவே ரைட்கிளிக்கால் கிடைக்கிற மெனுவைத் தடுத்துவிட்டால், அந்த நல்ல கட்டளைகளை உங்கள் இணைய தளத்துக்கு வருபவர்களால், உங்கள் வெப் தளத்தில் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும். மீண்டும் உங்கள் தளத்துக்கு வரமாட்டார்கள்.

வேறு படத்தை காப்பி செய்யும்படி ஏமாற்ற:

ரைட்கிளிக் செயலை ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தடுக்கக் கூடாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? Rollover என்ற ஜாவாஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்த வேண்டும். யாரும் காப்பி செய்யக் கூடாது என நீங்கள் நினைக்கிற படத்தை வெப் பக்கத்தில் காட்டுங்கள். மவுஸை அந்த படத்தின் மேல் கொண்டு சென்றால் வேறு படம் தெரியும்படி, ஜாவாஸ்கிரிப்டில் Rollover கட்டளையில் கூறிவிடுங்கள். எனவே உங்கள் வெப் பக்கத்தை பார்வையிடுபவருக்கு அந்த படம் தெரியும். ஆனால் அதை காப்பி செய்ய மவுஸை அதன் மேல் கொண்டு போனால் அந்த படம் மறைந்து வேறுபடம் காட்சியளிக்கும். எனவே ரைட் கிளிக் மூலம் காப்பி செய்தால் அந்த புதிய படம்தான் அவர் கம்ப்யூட்டரில் காப்பியாகும். எப்போதும் உங்கள் படம்தான் தெரிய வேண்டும் மவுஸைக் கொண்டு போனவுடன் வேறு படம் தெரியக் கூடாது என நினைத்தால் அதற்கும் வழி உள்ளது. Transparent Gif படத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பிறகு Embedded style sheet மூலம் அந்த Transparent Gif படத்தின் கீழே உங்கள் படத்தை வைத்து விடுங்கள். உங்கள் படத்தின் மேலே கண்ணாடி காகிதம்போல் Transparent Gif வீற்றிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாது. ரைட்கிளிக் செய்து படத்தை காப்பி செய்கிறவர்களுக்கு கண்ணாடி காகிதமான Transparent Gif படமே காப்பியாகும். அதன் கீழேயுள்ள உங்கள் படம் காப்பியாகாது.

படத்தைத் துண்டுகளாக மாற்றி வெப் தளத்தில் போட:

ஒரு படத்தை அப்படியே உங்களது இணையப் பக்கத்தில் வைக்காதீர்கள். அதைப் பல துண்டுகளாகப் பிரித்து அந்த துண்டுகளை வெப் பக்கத்தில் அமைத்திடுங்கள். எனவே உங்கள் படத்தை காப்பி செய்ய விரும்புகிறவர் அந்த துண்டுகளையெல்லாம் காப்பி செய்து பின்பு ஏதாவது இமேஜ் எடிட்டிங் புரோகிராம் கொண்டு அவற்றை ஒட்ட வைக்க வேண்டும். இந்த எரிச்சல் பிடித்த வேலைக்கு பயந்து அந்த துண்டுகளை காப்பி செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

படத்தினுள் வாட்டர் மார்க்கை நுழைக்க:

படத்தை அப்படியே வெப் பக்கத்தினுள் கொண்டு வரக்கூடாது. அந்த படத்தின் உள்ளே உங்கள் பெயர் அல்லது வேறு ஏதாவது எச்சரிக்கைச் செய்தியை வாட்டர் மார்க்காக நுழைத்து விட வேண்டும். படத்துக்கு இடையூறு இல்லாமல் ஆனால் படத்தை காப்பி செய்பவர்களுக்கு அது பயன்படாதவாறுவாட்டர் மார்க் இருக்க வேண்டும். ஏதாவது இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் கொண்டு வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். யார் கண்களுக்கும் தெரியாத வாட்டர் மார்க்கை உருவாக்கலாம். இதற்கெனவே சில சாப்ட்வேர்கள் உள்ளன. வாட்டர் மார்க் தெரியாததால் எல்லாரும் உங்கள் படத்தை காப்பி செய்யலாம். ஆனால் அப்படி காப்பி செய்தவர்கள் மீது சட்டப்படி நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.

அம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:)


 

''மம்மிக்கு வேலை இருக்குடா பாப்பா... நீ சமத்தா டி.வி பார்த்துட்டு இருப்பியாம்... நான் வேலை முடிச்சுட்டு வந்துருவே னாம்!'' என்று தங்கள் செல்லங்களை டி.வி முன் அமரவைத்துப் பழகும் அம்மாக்கள் சிறிது காலம் கழித்து, ''என் குழந்தை என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் நைநைன்னு அழுதுட்டே இருக்கு. டி.வி போட்டாதான் அழுகையை நிறுத்துறா!'' என்று புலம்புவார்கள்.

நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும் முன்னரே டி.வி-யின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு, எதிர் காலத்தில் பெற்றோர் மீது பாசப் பிணைப்போ, நேச அரவணைப்போ இருக்காதாம். ஸ்கூல் மிஸ், கார் டிரைவர், கராத்தே மாஸ்டர் போலப் பெற்றோரையும் தனது தினசரி அலுவல்களை முடிக்க உதவும் ஆளாக மட்டுமே கருதுவார்களாம்.
 

''அப்படியா?'' என்ற ஆச்சர்யத்துடன் குழந்தைகள் உளவியல் நிபுணர் தேவகியிடம் வினவினேன். ஒற்றை வார்த்தையில் 'ஆமாம்’ என்று ஆமோதித்தவர், இன்னும் பல அதிர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். ''பொழுதுபோக்குச் சாதனம் என்பதைத் தாண்டி டி.வி எனும் இயந்திரம் ஒரு வீட்டின் சூழலையே கட்டுப்படுத்தும் மாஸ்டர் மெஷினாக மாறிவிட்டது. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று அலுப்பாக வீடு திரும்பும் இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில், தத்தமது குழந்தைகளுக்கே போதுமான நேரம் செலவிட முடியாமல் திணறுகிறார்கள். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் 'எப்படியோ அமைதியாக இருந்தால் சரி’ என்று குழந்தைகளை டி.வி-யிடம் தத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அதன் மிக மோசமான பின்விளைவுகளைப்பற்றிய விழிப்பு உணர்வு அவர்களிடம் இல்லை.

ஒன்றரை முதல் மூன்று வயது வரையில் ஒரு குழந்தை கிரகித்துக்கொள்ளும் விஷயங்கள்தான் அந்தக் குழந்தையின் மனநல வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும். ஒரு குழந்தைக்கு உலகத்தின் ஃபேன்டஸிகளைக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு தாயைச் சேர்ந்தது. எப்படி சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் ஒரு குழந்தைக்கு 'ஸ்பூன் ஃபீட்’ செய்கிறோமோ, அதைப்போலத்தான் மனநலன் சம்பந்தப்பட்ட சங்கதிகளையும் தரம் பிரித்து ஒரு குழந்தைக்குப் புகட்ட வேண்டும். ஆனால், அப்படியான எந்த ஃபில்டரும் இல்லாமல் உலகின் அத்தனை நல்லது, கெட்டதுகளையும் மொத்தமாகக் கடை பரப்பும் டி.வி-யைக் குழந்தையின் கையில் கொடுத்தால் என்ன நடக்கும்?

'அம்மாவுக்கு வேலை நிறைய இருக்கு. அதனால நம்மகூட விளையாட மாட்டாங்க’ என்று தானாகவே முடிவெடுத்து, தாயிடம் இருந்து விலகிவிடுகிறது. அதே சமயம், அந்த நேரம் தன்னை வசீகரிக்கும் டி.வி கேரக்டர்களோடு ஒன்றிவிடுகிறது. வீட்டுக்கு யாராவது உறவினர்கள் வந்தால்கூட, அவர்கள் அம்மா, அப்பாவுக்குத்தானே சொந்தக்காரர்கள் என்ற நினைப்புடன், 'வாங்க... வணக்கம்!’ என்று வர வேற்காமல் இருப்பதன் காரணமும் இதுதான்.

பஞ்ச தந்திரக் கதை கள் போன்றவற்றை சி.டி -யில் காண்பிப்பதைத் தவிர்த்து, நம் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அந்தக் கதைகளைச் சொல்ல வேண்டும். பல்லாங் குழி, தாயம், தட்டாங்கல் போன்ற பாட்டிக் காலத்து விளையாட்டுக்களை விளையாடக் கற்றுக் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் கை, மூளை, கண்கள் போன்ற உடல் உறுப்புகளுக்குப் பலம் சேர்க்கலாம்.

தொடர் டி.வி பழக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை அத்தனை சாமான்யத்தில் வெளியே கொண்டு வர முடியாது. 'டி.வி பார்ப்பதைக் குறை!’ என்று அவர்களைக் கட்டாயப்படுத்தும்போது கோபம் அதிகமாகி, கை, கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள். நாமும் பயந்து போய், அவர்களை டி.வி பார்க்க அனுமதிப்போம். அப்படிச் செய்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. அழுது அடம்பிடித்தாலும் டி.வி-யின் இயக்கத்தை நிறுத்திவிட்டு, அமைதியாக நம் வேலை யைப் பார்த்துக்கொண்டு இருந்தால், 'நம் பாச்சா இவர்களிடம் பலிக் காது’ என்று நம் சொல் பேச்சு கேட்கத் துவங்குவார் கள். அதே சமயம், அழுகையை நிறுத்தியதும் மனது கேட்காமல் குழந்தைகளிடம், 'அம்மா தெரியாமத் திட்டிட்டேன்... ஸாரிடா!’ என்று செல்லம் கொஞ்சாதீர்கள். அப்படிச் செய்வது பேராபத்து. 'தப்பு செய்தாலும், அம்மா மன்னித்துவிடுவாள்!’ என்ற எண்ணத்துக்கு அது நீர் ஊற்றும். வேறு வழியே இல்லை... இந்தக் காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது கத்தி மேல் நடப்பதைக் காட்டி லும் ஆபத்தானது. ரொம்பவே பக்குவமாகக் கையாள வேண்டும். ரிமோட் எப்போதும் உங்கள் கையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்... நான் சொல்வது டி.வி ரிமோட் மட்டுமே அல்ல!''
 என்று புன்னகைக்கிறார் தேவகி!

அம்மாக்களுக்கு டிப்ஸ்.....


 

உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிறபோதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள். 

நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.
 

யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.
 

எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.
 

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.
 

எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.
 

படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.
 

தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.
 

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.
 

குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.
 

குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.
 

குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.
 

என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.
 

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.
 

சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.
 

இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
 

பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள். பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.
 

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.
 

உங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா??



செல்பேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்னசெய்வது என தெரியாமல் பெரும்பாலும் வெயிலில் வைப்பது, லைட் கீழே வைப்பது, சிலர் இன்னும் முன்னேறி அடுப்படியில் வைத்து காய வைப்பது என சரியாக தவறு செய்வார்கள். 
செல்பேசி தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யவேண்டும்??
தண்ணீரில் விழுந்த போனை எடுத்து பேட்டரியை உடனே கழட்டிவிட வேண்டும். ஏனெனில் ஈரமான செல்பேசியின் பாகங்கள் சாட்சர்க்யூட் ஆகி போன் மேலும் டேமேஜ் ஆகாமல் இருக்கும். 
பேசியை எவ்வளவு கழற்ற முடியுமோ அவ்வளவு கழற்றி வெள்ளையான காட்டன் துணியை வைத்து துடையுங்கள்.
பின் மெலிதாக வெப்பம் வரும் இடமாக பார்த்து காயவைக்க வேண்டும். நேரடியாக வெயிலில் வைக்க கூடாது. நிழலில் உலர்த்துங்கள். அடுப்படியும் வேண்டாம்.
 
அவ்வளவு தான் நீங்கள் செய்ய முடியும். மறுபடி பழைய மாதிரி பேசியை பூட்டி இயக்கி பாருங்கள். இயங்கினால் லாபம். இல்லாவிட்டால் போ வாங்கிய தொகையில் 5 சதவீதம் தொகையை தயார் செய்து கொள்ளுங்கள். ரிப்பேர் கடையில் ரிப்பேர் செய்யதான். முடிந்த அளவு தனியார் சர்வீஸ் சென்டர்களை நாடுங்கள். கம்பெனி சர்வீஸ் சென்டர்களில் தரமாக இருந்தாலும் விலை நியாயமாக இருக்காது. (ஏசி பில்லை யார் கட்டுவது??)

குழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்


 

. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.

3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.

4. நூலகத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்லுங்கள். அங்கிருந்து புத்தகம் எடுத்து வீட்டில் படித்துவிட்டு திரும்ப ஒப்படைக்கும் முறைக்கு பழக்கப்படுத்துங்கள்.

5. தினமும் சிறிது நேரமாவது குழந்தையுடன் அமர்ந்து நீங்களும் படியுங்கள்.

6. குழந்தை உடைகளைத் தானே அணிந்துகொள்ள தேவையான நேரத்தை அளியுங்கள்.

7. தேவையான நேரம் உறக்கம் கொள்ள அனுமதியுங்கள்.

8. குழந்தைகளுக்குத் தனியான ஒரு அலமாரி ஒதுக்குங்கள். அவர்களது பொருட்களை அங்கு வைத்து பராமரிக்கப் பழக்குங்கள்.

9. குழந்தையின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்துகொள்ள வலியுறுத்துங்கள்.

10. வீட்டில் சிறு தோட்டத்தை அவர்களுக்காக கொடுங்கள் அல்லது சில தொட்டிச் செடிகளையாவது கொடுங்கள். செடிகளை வளர்த்து அனுபவம் பெறட்டும்.

11. தினமும் குழந்தைகளுடன் சிறு நடை (walking) செல்லுங்கள். அவர்கள் வேகத்துக்கு மெதுவாக நடக்கவேண்டும். அப்பொழுது சுற்றியுள்ள விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்லுங்கள்.

12. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

13. குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் நீங்களும் உடன் பாருங்கள். பின் என்ன பார்த்தீர்கள் என்பது பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.

14. வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்க வேண்டும் என பழக்குங்கள்.

15. அடிக்கடி குழந்தைகளைக் கொஞ்சுங்கள்.

கணவன் - மனைவி ஜோக்ஸ்



(கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு) 

கணவன்: அன்பே, வந்துட்டேன்
 

மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
 

கணவன்: BAD COMMAND OR FILE NAME.
 

மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
 

கணவன்: ABORT,RETRY,IGNORE.
 

மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
 

கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
 

மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
 

கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
 

மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
 

கணவன்: DATA TYPE MISMATCH.
 

மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
 

கணவன்: BY DEFAULT.
 

மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
 

கணவன்: HARD DISK FULL.
 

மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
 

கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
 

மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
 

கணவன்: TOO MANY PARAMETERS.
 

மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
 

கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
 

மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
 

கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
 

மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
 

கணவன்: SHUT DOWN THE COMPUTER.
 

மனைவி: நான் போறேன்.
 

கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


 

கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.

வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 - 125, டீயில் 15 - 75, கோகோவில் 10 - 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 - 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 - 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்

சிரிச்சா நல்லது...


 

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு
ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.
ஆச்சரியமா இருக்கு...

பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?

துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில
படமே போடல ஸார்..அது தான்...!
ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்..
 அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .
சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.:
 தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.
முதல் பெண் : “ஏண்டி! வாயில லிங்கம் எடுக்கற சாமியார்கிட்ட போனியே, என்ன ஆச்சு?”

மற்றொரு பெண்
 : “ம். அவர் என்னை ‘வாந்தி’ எடுக்க வச்சுட்டாரு...
நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....
ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர்
 : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா... 
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு
நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பெரியோர் நிச்சயிக்கும் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்கு பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம்.

நபர் 2: எப்படி?

நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா?
ஒரு மனிதன் தனது மனைவியால் மிகவும் கஷ்டப் பட்டான். அவர் அவனுக்கு அடங்காமல் இவனை ஆட்டுவித்தாள். இந்த உலகத்தில் பெண்களே இல்லாத இடத்திற்குப் போய் சந்தோஷமாக இருக்க போகின்றேன். நான் பட்டது போன்ற வேதனையை என்மகனும் படக்கூடாது என்று நினைத்து தனது ஒரே மகனையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போய்.... 

மனிதர்களே இல்லாத ஓர் தீவில் மகனுடன் வாழ்ந்து வந்தான். வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் ஒரு சிறிய கப்பல் அந்த தீவிற்கு வந்தது. அதிலே ஒரு குடும்பம் வந்திறங்கியது அதிலே ஓர் இளம்மங்கை ஒருத்தியும் இருந்தாள். தகப்பனும் மகனும் அங்கே (உடைகள் இல்லாது) வந்த போது அந்த மங்கை இவர்களைக் கண்டதும் பயத்தில் ஓ....வென்று கத்தியபடி ஓடத்தொடங்கினாள்.
 

அவள் ஓடிய சிறிது நேரத்தில் அந்த கப்பலும் தீவினை விட்டு போய்விட்டது. அப்போது மகன் தந்தையைப் பார்த்து கேட்டான்.
 

" நாங்கள் கண்டது என்ன அப்பா?"
 

"ஓ....அதுவா அது பிசாசு! அந்தப் பிசாசு எங்களைக் கொன்று இரத்ததைக் குடிக்கும்"
 

ஆ! அப்படியா என்று மகனும் பயத்துடன் கேட்டான்.
 

இரவு பாதி தூக்கத்தில் மகன் சொன்னான்.
 

"அப்பா, அப்பா அந்த பிசாசு அழகா இருந்தது என?
 

அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 :cyclopsani: :cyclopsani: :cyclopsani:

சுட்ட ஜோக்


 

1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- பிதாஜி....
2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...
3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
6) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....
7) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
8) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
9) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
10) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
11) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
12) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?
13) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”