Monday, June 3, 2013

முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !

முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம்... ஆலோசனை சொல்கிறோம்' என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள். உண்மையில் கர்ப்பம் தரித்தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்பவதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்...''

டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:''கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட்டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத் துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்

தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை...

வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் 'கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனால் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னிங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு... சாப்பிடவே முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதாகும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளலாம்.

மார்பகத்தில் வலி: முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தையும், தொட்டாலே வலியையும் உணர்வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கையான தகவமைப்புக்காக இந்த மாற்றங்கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகம் சேகரமாவது காரணமாகவும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட்டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.

அடிவயிற்று வலி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை... இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகிறது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாக உணரப்படலாம். ரத்தப் போக்கு தென்பட்டாலோ... வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத்துவப் பார்வை அவசியம்.

வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட்டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய்வது... இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்கு காரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவையில்லை. தானாகவே சரியாகிவிடும். 

வரி விழுதல்: உடல் எடை கூடுவதால் மார்பகம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவுக்கு உதவும்.

எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்பானது. அதிகரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடையாலும் கர்ப்பவதிகளின் எடை மேலும் அதிகமாகும். தாய்ப்பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகிறது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: கர்ப்பவதிகளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச்சிதைவை தடுப்பற்காக செயல்படும் 'ப்ரோஜெஸ்டிரோன்' (றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ) ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய காரணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்கவிளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் 'பைல்ஸ்' ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரியாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச்சிக்கலை 'பைல்ஸ்' அளவுக்கு முற்றவிடாது... நீர் அருந்துவது, நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்து மாத்திரைகள் காரணமெனில்... அவற்றைக் குறைத்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இயற்கை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். 

நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை அழுத்தத்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, படுக்கையில் தலைக்கு இரண்டு தலையணைகள் வைத்துக்கொள்வது போன்றவற்றால் இதை தவிர்க்கலாம்.

மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும். பெரும்பாலானவர்கள் இதை 'சளி' என்றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.

முதுகுவலி மற்றும் கால்வீக்கம்: இடுப்பு எலும்பு விரிவடையத் துவங்குவதாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும் முதுகுவலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழாய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.
போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.''

http://pettagum.blogspot.in/2012/06/blog-post_7004.html



--
*more articles click*
www.sahabudeen.com


கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!

கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!

'சரியா பல் தேய்ச்சியா..?'
-
இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல; குழந்தையைப் பிரசவிக்கக் காத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும்தான்!

'பல் சுகாதாரத்தை கர்ப்பிணிகள் அலட்சியப்படுத்தினால்... பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது!' என்று எச்சரிக்கின்றன, வாய்க்குழி சுகாதாரத்துக்காக 'வாய்ஸ்' கொடுத்துவரும் சர்வதேச அமைப்புகள்.

இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த பல் பாதுகாப்பு சிறப்பு மருத்துவரான என்.குருச்சரண் விரிவாகப் பேசுகிறார்...
'
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீரியோடண்டாலஜி (American Academy of Periodontology) என்கிற ஈறு நோய்கள் மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய எச்சரிக்கையை எழுப்பி வருகிறது!

குணப்படுத்த முடியாத ஈறு வியாதியுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறைப்பிரசவமும், எடை குறைவான குழந்தைகள் பிறக்கவும் ஏழு மடங்கு அதிக வாய்ப்புகள் உருவாவதாக அந்த அமைப்பின் ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

இந்த ஈறு வியாதி, கர்ப்பிணிகளின் உடலில் சில உயிர்ம திரவங்களின் அளவை அதிகரிப்பதுதான், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணம்.
ஈறு வியாதியை உண்டாக்கும் 'போர்ஃபிரோ மோனஸ் ஜிஞ்ஜிவாலிஸ்' (Porphyromonas Gingivalis) என்ற பாக்டீரியா, கர்ப்பிணியின் வயிற்றில் பனிக்குட நீரில் இருப்பது, 2007-ம் ஆண்டில் டாக்டர்களால் கண்டறியப்பட்டது. அதன் பிறகுதான் கர்ப்பிணிகளுக்கான ஈறு சுகாதாரம் பற்றிய விழிப்பு உணர்வை, மேலைநாடுகள் துரிதப்படுத்தின. ஆனால், அடிப்படை சுகாதாரத்துக்கே அல்லாடும் நம் நாட்டில் ஈறு பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வோ, அக்கறையோ இன்னமும் ஏற்படவில்லை. ஈறு பாதிப்பால் உருவாகும் பாக்டீரியா, 'எக்லாம்சியா' (Eclampsia) என்கிற வலிப்பு நோயையும் உருவாக்கக்கூடியது.

 

ஈறு கோளாறு உள்ளவர்களின் ரத்தத்தில் 'சி ரியாக்டிவ் புரோட்டீன்' (C-Reactive Protein) என்கிற கெடுதலை உண்டு பண்ணும் புரோட்டீனின் அளவு, 65 சதவிகிதம் அதிகமாகக் காணப்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.
கர்ப்பக் காலத்தின்போது பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோயை அதிகமாக தூண்டிவிடுவதோடு, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியையும்  இந்த ஈறு கோளாறின் கூறுகள் கடினமாக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது!' என்ற குருச்சரண்,

''என்ன, இதையெல்லாம் கேட்டுவிட்டு திகிலடைந்துவிட்டீர்களா? அதற்காக நான் இதைச் சொல்லவில்லை... திகில் அடையவும் தேவையில்லை. எந்த அளவுக்கு சுகாதாரமாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இதைச் சொல்கிறேன்'' என்று சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
''
வாய்க்குழி சுகாதாரம் என்பதில் பல், ஈறு, நாக்கு போன்றவற்றின் சுகாதாரமும் உள்ளடங்கி இருக்கிறது. பெரும்பாலானோர் பல் தேய்ப்பதையே கடமையாக நினைக்கிறார்கள். 'சாதாரண ஈறு பாதிப்புத்தானே' என அசமந்தமாக இருந்துவிடுவதால் குறைப்பிரசவம் நிகழவும், எடை குறைவாக குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். பிறவிக் கோளாறுகள்கூட ஏற்படலாம்.

இதையெல்லாம் கேட்டு பயப்படத் தேவையில்லை. தினமும் ஈறுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது பெரிய சிரமம் இல்லையே..! அத்தகைய எளிதான முயற்சிகளைக்கூட செய்யாமல் பெரிய விளைவுகளுக்கு நாமே நம்மை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது'' என்றவர், விளைவுகளைத் தடுக்கும் வழிமுறைகளையும் சொல்லத் தொடங்கினார்...

''18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குதான் ஞானப்பல் எனப்படும் மூன்றாவது கடைவாய்ப்பல் முளைக்கத் தொடங்கும். சாப்பிடும்போது, பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையிலான 'கேப்'பில் உணவுப் பொருட்கள் சிக்கிக்கொள்ளும். பல் துலக்கும்போது அவை சரியாக அகப்படாது. இதனால், ஈறில் கிருமிகள் உருவாகி சீழ் ஏற்படும். ஆகவே, ஞானப்பல் முளைக்கும் தருணத்தில், கர்ப்பம் தரிக்க நேரிட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக, பல் மற்றும் ஈறு சிகிச்சைக்காகத் தரப்படும் சில வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிகவும் வீரியமானவை. மாத்திரை, மருந்துகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதை மனதில் கொண்டு, தாயாகப் போகும் பெண்கள், குடும்ப வாரிசுக்காகத் திட்டமிடும்போதே குழந்தைக்கான இடைவெளி, உடல் ஆரோக்கியம், குடும்பப் பொருளாதாரம் போன்ற அம்சங்களுடன் முன்னெச்சரிக்கையுடன் பல் சொத்தை பிரச்னையையும் பரிசோதித்துக் கொள்வது நல்லது'' என்றவர் ஈறு பராமரிப்புக்காக பட்டியலிட்ட டிப்ஸ்கள் பெட்டி செய்தியில்!

ஈறுகளை பராமரிப்பது எப்படி?
காலை, இரவு இருவேளையும் பல் துலக்க வேண்டும். 
 இரவில் வாய்மூடி தூங்கும்போது வாய்க்குழியில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்துவிடும். அந்த இடத்தில் அனரோபிக் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். பல் மற்றும் ஈறு இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகளில் செயல்படும் இந்த வகை பாக்டீரியாவினால், ஈறுகள் சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். ஒவ்வொரு முறை திடமான மற்றும் திரவமான உணவுகளை சாப்பிட்டவுடன், வாய்க் கொப்பளிப்பது அவசியம்.

உணவுத்துகள் சிக்கிக் கொண்டால், கையில் கிடைத்த குச்சியை வைத்து சிலர் பல், ஈறுகளை பாடாய்ப்படுத்திவிடுவார்கள். அவசியமெனில், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் நூல் போன்ற டென்டல் ஃபிளாஸ் (Dental Floss) கொண்டு எளிமையாக பல் இடுக்குகளை தூய்மைபடுத்தலாம்.

நாக்கை எப்போதும் சுத்தமாக வைத் திருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு நாக்கில் ஏதாவது படிமானம் தேங்கி இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் இரும்புச்சத்து மருந்துகள் இந்தப் படி மானத்தின் தடிமனை மேலும் அதிகரிக்க  செய்து, நாக்கின் மேல் பகுதியை கிருமிகளுக்குப் புகலிடமாக்கிவிடும்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல், ஈறு, வாய் இவற்றை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
கர்ப்பக் காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சொத்தைப்பல் எடுப்பது கூடவே கூடாது.

http://pettagum.blogspot.in/2012/06/blog-post_7349.html



--
*more articles click*
www.sahabudeen.com


இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

*
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்-உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

*
மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

*
தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

*
வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

*
தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

*
சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

*
வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

*
காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

*
குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

*
நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

*
சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

*
வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

*
பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

*
வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

*
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

*
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

*
வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

*
ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

*
கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

*
வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.

*
பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

*
ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

*
இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

*
காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

*
கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

*
தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

*
முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

*
உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, June 1, 2013

MOHAMMED SPEECH



--
*more articles click*
www.sahabudeen.com


MOHAMMED SPEECH

வீட்டுக்குறிப்புகள்

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சமயங்களில் பலன் கொடுக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து எழுதியிருக்கின்றேன். யாருக்கேனும் தக்க சமயத்தில் இவை கை கொடுத்தால் மகிழ்வாக இருக்கும்! 
* மழையில் நனைந்து ஷூக்கள் ரொம்பவும் ஈரமாக இருக்கின்றனவா? அவற்றினுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரை அடைத்து வைத்து விடுங்கள். பேப்பர் எல்லா ஈரத் தையும் இழுத்துக் கொண்டு விடும். 

*
சட்டைக் காலர்களிலும், கை மடிப்பு களிலும் உள்ள அழுக்குகள் எப்படித் துவைத்தாலும் போக மறுக்கிறதா? முதல் நாள் இரவே அவற்றின்மேல் கொஞ்சம் டால்கம் பவுடரைத் தடவி வைத்துவிட்டு, மறுநாள் காலை வழக்கம்போலத் துவைத்து விடுங்கள். அழுக்கு இருந்த இடம் தெரியாமல் போய் விடும். 

*
சட்டைகளிலோ, பெட்ஷீட்டுகளிலோ ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சூயிங்கத்தின் மேல் ஐஸ் கட்டியால் தேய்த்தால் சுலபமாக வந்து விடும். 

*
உங்கள் வீட்டு ஃப்ரிசரினுள் அடிக்கடி நிறைய ஐஸ் கட்டிகள் சேர்ந்து விடுகின்றனவா? அதனுள்ளே கொஞ்சம் உப்பைத் தூவி வைத்து விடுங்கள். ஐஸ் உறையாது. 

*
கதவிடுக்குகள் கிறீச் ஒலி எழுப்பி இம்சிக்கின்றனவா? அந்த இடங்களில் பென்சிலால் தேய்த்து விடுங்கள். பென்சி லில் உள்ள கிராஃபைட் சத்தத்தைக் குறைக்க உதவும். 

*
அடிப்பிடித்துக் கறை படிந்த பாத் திரங்களினுள் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி, அத்துடன் கொஞ்சம் பிளீச்சிங் பவுடரையும் போட்டு இரவு முழுக்க அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை சோப்பு போட் டுக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென மாறும். 

*
தேங்காயை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டு உடைத்தால் அதன் நாரை சுலபமாக நீக்க முடியும். தேங்காயும் சரி பாதியாக உடையும். 

*
துணிகளில் மருதாணிக் கறை கள் பட்டுவிட்டால், அந்த இடத்தை வெது வெதுப்பான பாலில் ஊற வைத்துப் பிறகு சோப்பு போட்டுத் துவைத்தால் கறை நீங்கும். 

*
கொஞ்சம் அம்மோனியா அல்லது வினிகர் கலந்த குளிர்ந்த தண்ணீரில் கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவினால் அவை புதிது போல பளபளக்கும். 

*
முட்டையின் வெள்ளைக் கருவை அடித்து வைத்து, அத்துடன் கொஞ்சம் உப்பையும், சில துளிகள் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து வைத்துவிட்டால் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். 

*
காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீ ரில் சிறிது நேரம் போட்டு வைத்துவிட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வேக விட்டு எடுக்கவும். 

*
துணிகளை தேய்க்கும்போது சில துளிகள் யுடிகோலனை விட்டுத் தேய்த்தால், சென்ட் போட வேண்டிய அவசியமில்லா மல், நல்ல மணமுடனிருக்கும். 

*
மெழுகுவர்த்தி ஸ்டான்டினுள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதற்கு முன்பாக கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். மெழுகு எரிந்து முடிந்ததும் அதை நீக்குவது சுலபமாக இருக்கும். 

*
வாஷ பேசின் அடைத்துக் கொண்டிருக்கிறதா? ஒரு கைப்பிடியளவு சோடா பை கார்பனேட்டும், ஒரு கப் வினிகரையும் ஊற்றி, அதன்மேல் தண்ணீரையும் ஊற்றி விடவும். அடைப்பு நீங்கி வாஷ பேசின் சுத்தமாகும். 

*
கை விரல்களில் ஏதேனும் இரும்புத் துகளோ, கண்ணாடித்துகளோ புகுந்து கொண்டு விட்டதா? அந்த இடத்தில் முதலில் கொஞ்சம் ஃபெவிகாலைத் தடவுங்கள். அது காய்ந்ததும் உரித்தெடுங்கள். அத்துடன் சேர்ந்து விரலினுள் மாட்டிக் கொண்ட துகளும் வந்து விடும்.

1.
தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும். 

2.
சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும். 

3.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. 

4.
வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். 

5.
தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும். 

6.
அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும். 

7.
சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும். 

8.
அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும். 

9.
கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது. 

10.
மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும். 

11.
நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும். 

12.
நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும். 

13.
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும். 

14.
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

15.
முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும். 

16.
உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும். 

17.
எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது. 

18.
குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும். 

19.
இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது. 

 20. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

21.
குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

22.
கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

23.
சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

 24. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

25.
ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

 26. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

27.
தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

 28. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும். 

29.
மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

--
*more articles click*
www.sahabudeen.com