Tuesday, January 5, 2016

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!

முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், 
சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?

சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.

என்ன நன்மை?

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, January 3, 2016

சொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்!

மின் சாதனங்கள்... பாத்ரூம் இணைப்புகள்!

கனவு வீட்டை ஏறக்குறைய கட்டிமுடிக்கும் தருவாயில் இருக்கிறோம். இன்னும் செய்ய வேண்டியவை வொயரிங் மற்றும் பாத்ரூம் பொருத்துவகை வேலைகள் மட்டுமே. அவற்றை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

வொயரிங் வேலைகளைப் பொறுத்தவரை, நாம் ஏற்கெனவே இதற்கான ஃப்ளக் பாயின்ட்கள் தேவையான இடங்களில் வைத்துள் ளோம். இந்த வொயரிங் வேலைகள் முடிந்தபிறகு பெயின்ட் பூசுவதே நல்லது. தனி வீடு கட்டுபவர்கள் பலரும் அருகிலுள்ள கடைகளில் இருந்து வொயரிங் பொருட்களை வாங்குவதையே வழக்கமாக வைத்திருக் கின்றனர். இதைத் தவிர்ப்பது நல்லது. நம்பிகையான மொத்த விற்பனையாளர்களிடம் வாங்குவதன் மூலம் தரமான பொருளை குறைந்த விலையில் வாங்கலாம்.

ஐஎஸ்ஐ தரம் கொண்ட பொருட்களையே வாங்குவது பாதுகாப்பானது. இந்தப் பொருட்களை வாங்கும்போது அதற்கான ரசீதுகள், கேரன்டி அட்டைகள்  உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும்.

நமது வீட்டில் பயன்படுத்த உள்ள மின் சாதனத்துக்கேற்ப நமது வொயரிங் வேலைகளில் தரம் இருப்பது அவசியம். எதிர்காலத்தில் சில வசதிகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதுதான் சிறப்பு.

முக்கியமாக, இப்போது ஏ.சி அல்லது வாட்டர் ஹீட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப இணைப்புகள் கொடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கேற்ப வொயரிங் வேலைகள் இருக்க வேண்டும்.

முக்கியமாக, ஒவ்வொரு பிளக் ஃபாயின்டுக்கும் இரண்டு தனித்தனி வொயர்கள் மூலம் மின் இணைப்பு தர வேண்டும். அதிக மின்சக்தி மற்றும் குறைந்த மின் சக்தியை இழுக்கும் வொயர்கள் தனித்தனியாக கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக, இன்வெர்ட்டர்கள், ஹீட்டர்கள், வாஷிங் மெஷின் மற்றும் சமையலறை சாதனங்கள் போன்றவை அதிக மின்சக்தி இழுக்கும் மின் சாதனங்களாக இருக்கும். மின்விளக்கு, விசிறி போன்றவைக் குறைந்த மின்சக்தியையும் இழுக்கும் தன்மை கொண்டவை. எனவே, இதற்கேற்ப அனைத்து இடங்களிலும் பக்காவாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஏ.சி மற்றும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் பிளக் பாயின்ட்களுக்கு (15 ஆம்ஸ்) 7/20 திறன்கொண்ட வொயர்கள் பயன்படுத்த வேண்டும். வாஷிங் மெஷின், கிரைண்டர், ஃப்ரிட்ஜ், இண்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோ ஓவன், இன்வெர்ட்டர் போன்ற சாதனங்கள் பயன்படுத்தும் இடங்களில் (15 ஆம்ஸ்) 3/20 திறன் கொண்ட வொயர்களும், அயர்ன் பாக்ஸ் மற்றும் இதர சாதனங்கள் பயன்படுத்தும் ப்ளக் பாயின்ட்களில் 1/80 திறன்கொண்ட வொயர்கள் பயன்படுத்தவேண்டும்.

பொதுவாக, மூன்று பின்கள் உள்ள பிளக்கையே பயன்படுத்த வேண்டும். ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை, பாதுகாப்பு நிறைந்த பலவகை பாக்ஸ்கள் இப்போது நிறையவே கிடைக்கின்றன.

உதாரணமாக, பிளக்கில் 'பின்' சொருகும்போது துவாரப் பகுதி திறந்தும், வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான குளோஸிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக, ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி போன்றவற்றுக்குத் தனியாக இணைப்பு தருவதுபோல 'எர்த் கனெக்ஷனும்' தனித்தனியாகத் தரவேண்டும். 'எர்த் கனெக்ஷன்' தரும்போது அது சரியான முறையில், அதாவது, ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு 'எர்த் கனெக்ஷன்' தரவேண்டும்.

பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால், அங்குப் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். மின்சாரப் பயன்பாட்டில் கூடுதல் பாதுகாப்புக்கு ELCB (Earth leakage circuit breaker)  என்ற கருவியை மெயினில் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் அதுவாகவே 'ஆன்' ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு.

 பாத்ரூம் இணைப்புகள்!
பாத்ரூமில் நாம் ஏற்கெனவே குழாய்கள் பதித்து வைத்துள்ளோம். இதில் தேவையான ஃபிட்டிங்குகளைப் பொருத்தவேண்டும். முக்கியமாக, வால் மிக்ஸர் அவசியம் அமைத்துக்கொள்ள வேண்டும். இதில் சுடுதண்ணீர் மற்றும் சாதாரணத் தண்ணீர் இரண்டையும் பிரித்துக் கொடுக்கும். பொதுவாக, இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறுவனத்தில் சிறப்பாக இருக்கும். எல்லாப் பொருட்களையும் ஒரே நிறுவன பொருட்களாக வாங்குவதைவிட, நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப தனித்தனியாக தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

முன்பு இந்தியன் மாடல் டாய்லெட்கள்தான் எல்லா வீடு களிலும் பொருத்தப்பட்டு வந்தன. இப்போது மெள்ள மெள்ள வெஸ்டர்ன் டைப் டாய்லெட் செட்டுகள் பல வீடுகளில் வரத் தொடங்கிவிட்டன. தற்போது கட்டப்படும் வீடுகளில் இளவயதினருக்கு இந்தியன் மாடல் டாய்லெட்டையும் வயதானவர்களுக்கு வெஸ்டர்ன் டைப் டாய்லெட்டுகளையும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், வெந்நீர் பைப்புகள், ஷவர், முகம் கழுவும் பேசின், இதற்கு அருகில் வைக்க ஒரு ஸ்டாண்ட், துண்டு போடுவதற்கான ராடு, பாத்ரூம் கிளீனிங் பொருட்கள் வைப்பதற்கான கப்போர்டுகள் அல்லது ஸ்டாண்ட், வயதானவர்கள் பிடித்துக்கொள்ள வசதியான கைப்பிடிகள் ஆகியவற்றைப் பொருத்துவது அவசியம்.

இதுதவிர, எக்ஜாஸ்ட் ஃபேன், பாத்ரூமில் நல்ல வெளிச்சம் கிடைப்பதுபோல கிரவுன்ட் கிளா


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, January 1, 2016

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாமே!

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாமே!
தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.
அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.
அந்த வகையில் எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
தேன்
காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும்.

மூலிகை டீ
டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

முட்டை
தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால்
பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

கோதுமை பிரட்
நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

வாழைப்பழம்
காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும். அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளில் போதுமான அளவில் இரும்புச்சத்து மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இயற்கையான சர்க்கரையானது நிறைந்துள்ளது. எனவே இத்தகைய ஆப்பிளை காலையில் ஒன்றோ அல்லது செரிலுடன் சேர்த்தோ சாப்பிட்டால், மிகவும் நல்லது.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது. எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

காபி
காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும். மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, December 27, 2015

இந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..!

உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா?

இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம்.
 

உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும். 
CPU சுத்தம்: 
1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம். 

2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.

3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம்  குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும். 

4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை...

தீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும். 
KeyBoard சுத்தம்: 
அடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம "தங்கம்பழனி" சார் "தொழில்நுட்பம்" தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க...


1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.

2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்... 

3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்... 

4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்.. 

தீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம "பளிச்"ன்னு மின்னும்.

Mouse சுத்தம்:
நாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.

இப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. "Air Bump" வச்சும் சுத்தப்படுத்தலாம்.
 

Screen சுத்தம்: 
அதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும்.  ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற "வெல்வெட்"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...

இதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.....

நன்றி. 

- சுப்புடு
http://www.softwareshops.in/2013/10/tips-for-computer-maintenance-with-cpu-cleaning.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, December 25, 2015

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்?

கம்ப்யூட்டர்  வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.

"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. "

இப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.

ஒரு நாளில் திடீஎன  கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.

பொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப்படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.

கம்ப்யூட்டர் ஸ்பீடாக டிப்ஸ்

ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.

  • கம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும். 
  • Recycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும். 
  • டெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம். 
  • இன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp%  என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். 
  • சிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும். 
  • ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும். 
  • Refresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு  D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும். 
  • டெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும். 
  • தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள். 
  • மாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும். 
நன்றி.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, December 23, 2015

நல்லவற்றைப் பாராட்டுங்கள்!

கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
பல ஆண்டுகளாக அந்தக் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, பதவி உயர்வு பெற்று இந்தப் பதவியை அவர் அடைந்திருந்தார். அவரது ஆளுமையின் காரணமாக . அவரது தலைமையில் அந்த நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி பெற்று முன்னேறியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள அந்த நிறுவனத்தில், மிகச்சிறந்த உறவுக ளோடும், நட்போடும் நிர்வாகம் நடந்ததற்கு அந்தச் செயல் இயக்குநர் தான் காரணம்.
நிர்வாகம் அவருக்குக் கொடுத்திருந்த சுதந்திரம், அதிகாரம் அனைத்தையுமே மனித நேயத்தோடும், சாதுர்யத்தோடும் தொழில் வளர்ச்சிக்காகவே ஒருமுனைப்படுத்தி, தொழிலாளர் களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருமுறை நடந்த விழாவின் போது அந்தச் செயல் இயக்குநரைக் =கடவுள்+ என்று ஒரு தொழிலாளி புகழ்ந்து சென்றார். ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் நமது தமிழகத்தில் எல்லோரையுமே, =இந்திரன், சந்திரன், கடவுள், வழிகாட்டி+ என்று புகழ்வது வெகு இயல்பு. தகுதி வாய்ந்த ஒருவரைப் பாராட்டும்போது உணர்ச்சி வேகத்திலும், உற்சாகத்திலும் உயர்வு நவிற்சியில் =கடவுள்+ என்று சொன்னதில் தவறில்லை.
விழா முடிந்தபின் நிர்வாக இயக்குநர்களின் உறவினர் ஒருவர், =என்னங்க, உங்களை வைத்துக்கொண்டே மேடையில் உங்கள் செயல் இயக்குநரைக் கடவுள் என்று இப்படிப் புகழ்கிறார்களே! இது சரிதானா?+ என்று கொஞ்சம் வித்தியாசமான தொனியில் கேட்டிருக்கின்றார்.
அதற்கு மூத்த இயக்குநர், =அந்தப் பெருமை எங்களுக்குச் சேர்ந்ததல்லவா?+ என்றபடியே புன்னகைத்தபடி சென்றுவிட்டார்.
எவ்வளவு பெரிய மனது? எப்படிப்பட்ட உயர்ந்த குணம்?
ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடந்து விட்டால், ஏதோ தன்னால்தான் இந்த வெற்றியெல்லாம் என்று ஆகாயத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை மிகவும் அலட்சியமாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில், நல்லவர்களைப் பாராட்டும்போது பெருமைப் பட்டு அதை ஆமோதிக்கின்ற அற்புத மனிதர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அவர்கள் நடத்தும் எந்தத் தொழிலுமே நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாராட்டுக்கு ஏங்கும் ஒரு பகுதி உண்டு. தான் சமைப்பதைக் குடும்பத்தில், உள்ளவர்கள் உண்டுதான் ஆக வேண்டும். அது அவர்கள் தலையெழுத்து என்று ஒரு குடும்பத் தலைவிக்குத் தெரிந்தாலும் =இன்னிக்கு கோழிக்குழம்பு சூப்பர்+ என்று கணவன் சொல்லும்போது ஏற்படும் உற்சாகம் எத்தனையோ மனவருத்தங்களை அழிக்கின்ற மாமருந்து அல்லவா?
ஆலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஓர் அதிகாரியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து செய்யும் வேலைகளில் தவறு செய்தால் உடனே கண்டிக்கத் தெரிந்த மேலாளர்கள், நல்ல பணி ஒன்றைச் செய்யும்போது நான்குபேர் முன்னிலையில், பாராட்டும்போது ஏற்படுகின்ற மனநிறைவும், மகிழ்வும் சொன்னால் விளங்காது. அனுபவித்தால்தான் தெரியும். ஒருவரை உளமாரப் பாராட்டும்போது, பாராட்டுப் பெறுபவரும், பாராட்டுபவரும் அடைகின்ற மகிழ்ச்சி உற்சாகம், வெற்றி வெளிச்சத்தின் உச்சம் அல்லவா?
சில சமயங்களில் பாராட்டுக்குரியவரை, பாராட்டப்படவேண்டிய செயல்களை, பாராட்ட வேண்டிய பொருட்களைப் பாராட்டாமல் தவறில்லை.
ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லித் தூற்றும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
வடநாட்டின் ஒரு பகுதியில் பிரசித்தி பெற்ற முகவர் எனது நண்பர். அவர் இறக்குமதியாகும் ஒரு புகழ்வாய்ந்த நிறுவனத்தின் இயந்திரங்களை நூற்பாலைகளுக்கு விற்றுவந்தார். இவர் இறக்குமதி செய்து விற்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட உற்பத்திக்கான தயாரிப்பில் அப்போது தான் ஈடுபட்டார்கள்.
ஏற்கனவே, இந்த நிறுவனத்தின் அளவு பெயர் பெற்ற, புகழ்வாய்ந்த நிறுவனம் ஒன்று அந்த இயந்திர உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. சந்தையில் புதிதாக நுழைவதால், சில புதிய உபகரணங்களோடு சில முன்னேற்றங்களோடு நமது முகவர் பெருமை யோடும் உற்சாகத்தோடும் அறிமுக வேலையை ஆரம்பித்தார்.
அறிமுகத்திற்காக எழுதிய கடிதத்தில், தான் விற்கும் இயந்திரங்களை உபயோகித்தால் வருடத்திற்கு சில லட்ச ரூபாய்கள் சேமிக்கமுடியும் என்று கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் உபயோகித்து வந்த இயந்திரங்களால் அளவிடமுடியாத நட்டம் ஏற்படும் என்றும் அப்படியாகும் நட்டம், =கிரிமினல் வேஸ்ட்+ என்று குறிப்பிட்டுவிட்டார். =கிரிமினல் வேஸ்ட்+ என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது மிகப்பெரிய இழப்பாகவும், ஆலைக்கு மிகவும் ஆபத்தான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மறைமுகமாக அந்த இயந்திரங்களைத் தேர்வு செய்து ஆலையை நடத்திவரும் நிர்வாகிகளைக் குறை சொல்வது மாதிரியும் அமைந்து விட்டது. இதனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராயிருந்த ஓர் ஆலையின் நிர்வாக இயக்குநருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.
==என்னைக் =கிரிமினல்+ என்று எப்படி நீ அழைக்கலாம். உன்னுடைய இயந்திரங்களை வாங்காமல், பல காலமாக நான் உபயோகித்துப் பலன் அடைந்து வரும் இயந்திரங்களை உபயோகிப்பது கிரிமினல் குற்றமா? நாளை உன்னுடைய இயந்திரங்களை விடவும் சிறப்பான இயந்திரங்கள் சந்தைக்கு வந்தால், இன்று விற்பனையாகும் உனது இயந்திரங்களை வாங்குபவர்கள் =கிரிமினல்+களாகி விடுவார்கள் அல்லவா?
உனது இயந்திரங்களின் சிறப்பைக் கூறுவதை விட்டுவிட்டு, மற்றவற்றை இகழ்ந்து பேச நீ யார்? இனிமேல் எனது ஆலைக்குள் காலடி எடுத்து வைக்காதே. உன்னுடைய வேறு எந்தப் பொருளையும் வாங்கக்கூடாதென்று ஸ்டோர்ஸுக்கு உத்தரவு அளித்துள்ளேன்+ என்று காய்ந்து விட்டார்.
அவ்வளவுதான். இன்று வரை அந்த ஆலைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். அவரது உறவினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து, இவரது கடிதத்தில் உள்ள வரிகளைப் படித்துக்காட்டி, இப்படிப்பட்ட ஆணவத்தோடு விற்பனை செய்யும் இவரை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிபாரிசும் செய்து விட்டார்.
நண்பர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாகப் பழகிவந்த சில நல்ல நண்பர்களை, தனது வாடிக்கையாளர் களை இழந்துவிட்டார். ஒரே காரணம், மற்றவர்களை, அவர்களது தயாரிப்பை, சிறப்பை மதியாமல் போனதுதான்.
ஆயிரம் பொருட்கள் சந்தையில் உள்ளன. அத்தனை பொருட்களையும் யார் யாரோ வாங்கிச் செல்கிறார்கள். உபயோகத்தைப் பொறுத்தும், வாங்கும் சக்தியைப் பொறுத்தும் தரத்தை வாடிக்கையாளர்களே நிர்ணயித்து, அதற்குத் தகுந்த மாதிரி விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் எதையும் இகழ்ந்து பேசவோ, மதிப்பின்றிப் பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புகழ்ந்து பேசவும், பாராட்டவும் அனைவருக்குமே உரிமை உண்டு.
எதிர்மறையான எண்ணங்களும், வெளிப்பாடுகளும் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால் மனதைக்குறுகிய வட்டத்திற்குள் பிணைத்துவிடாமல், விசாலமாக்குவது மிக மிக அவசியம்.
ஜப்பான் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. =டொயோட்டா+ நிறுவனம் தயாரிக்கும் கார்களில் மட்டும்தான் அங்கு பணிபுரிபவர்கள் வருவார்கள். அந்த நிறுவனத்துக்கும் உதிரிபாகங்கள், மூலப் பொருட்கள் வழங்குபவர்கள்கூட அந்த, =டொயோட்டா+ வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டுமென்றுகூட எதிர்பார்ப்பார்கள்.
இது நிறுவனத்தின் மீது உள்ள பக்தி, நம்பிக்கையின் வெளிப்பாடு, போட்டி நிறுவனமான ஹோண்டா, சுசூகி போன்றவற்றின் தயாரிப்புகளைப் பற்றிக் கேட்டால், குறை சொல்லமாட்டார்கள். =தெரியாது+ என்று புன்னகைத்தபடியே சென்று விடுவார்கள்.
ஏனோ, நமது தேசத்தில் மட்டும் நம்முடைய எல்லாமே, =ஒசத்தி+, மற்ற எல்லாமே தாழ்வு என்ற ஒரு அடிப்படை மனோபாவம் எல்லாச் செயல்களிலுமே பிரதிபலிக்கின்றது. நல்லதைப் பாராட்டும் குணநலன்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கற்பித்து வந்தால் போதும், நமது எண்ணம் கூட மாறிவிட வாய்ப்புண்டு.
'ஷாங்காய் நகரில் பஞ்சாலை இயந்திரப் பொருட்காட்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதில் எங்கள் தாய் நிறுவனமான, =ஹெபாஸிட்+ பங்கு பெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, சைனாவில், =ஸ்பிண்டில் டேப்+ மற்றும் பெல்ட்கள் தயாரிக்கும், =நைபெல்ட்+ என்ற நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களது, =ஸ்பிண்டில் டேப்+புகளைப் பற்றி விசாரித்து, அங்கிருந்து சாம்பிள்களைக் கையால் எடுத்துப் பார்த்தேன். உடனே அங்கிருந்தவர், =இது எங்களது புதிய தயாரிப்பு. இயகோகா டேப்புகளுக்கு இணையானது+ என்று கூறினார்.
நான் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். நான்தான் இயகோகா நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் என்று தெரிந்ததுமே, என்னை அமர வைத்து உபசரித்து, அங்குள்ள அவர்களது அதிகாரிகளை வரவழைத்து என்னை அறிமுகப்படுத்தி, இயகோகா டேப்புகள் சிறப்பானவை என்று கூறினார். ஒரு போட்டியாளர் என்று தெரிந்தும் அந்த நிறுவனத் தலைவர் அன்று என்னை நடத்திய விதம் எவ்வளவு பாராட்டுக் குரியது. போற்றத்தக்கது.
இன்று =நைபெல்ட்+ சைனாவில் நல்ல முன்னேற்றமடைந்து ஒரு சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இயகோகா டேப்புகள் இந்தியாவி லிருந்து இன்றும் சைனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.
வெற்றி வெளிச்சம் நல்லவற்றை பாராட்டு முனைபவர்களது முன்னேற்றத்தின் மீது என்றும் படிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
 இயகோகா சுப்பிரமணியன் - நமது நம்பிக்கை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Monday, December 21, 2015

தொண்டையை காப்பாற்றுங்கள்

தொண்டைக்கு வரும் பாதிப்புகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர்.
பொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்?
பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன.
குழந்தைகளுக்கு தொண்டையில் வரும் முக்கியமான பாதிப்பு எது? ஏன்?
குழந்தைகளுக்கு தொண்டை வியாதிகளைப் பற்றி கூறும் போது, பொறுப்பான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பேணிக்காக்கிறார்கள் என்பதை கண்டு வியந்திருக்கிறேன். குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே இரத்த சோகை என்று நினைப்போம். ஆனால் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று ஆராய்வர். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர்.
குழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வருகிறது. தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது
சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும்.
டான்ஸிலைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது?
அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய்களில் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளினால் வருபவையே. ஆதலால், தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மருத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.
டான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விடும் என்கிறார்களே? உண்மையா?
தொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம். நான் மூன்று வயது குழந்தைக்கும் செய்திருக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையின் பிரச்சினையை எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து தீர்க்கும்படி வற்புறுத்தினர். இப்பொழுது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அடிக்கடி வரும் ஜுரம், தொண்டை வலி தீர்ந்து விட்டது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.
சில குழந்தைகளுக்கு உச்சரிப்பில் குழப்பம் இருப்பது எதனால்?
குழந்தைகள் மழலையாக பேசும். சில குழந்தைகளுக்கு டா, தா முதலிய வார்த்தைகள் உச்சரிப்பது கடினமாக இருக்கும். இதற்கு காரணம் நாக்கிற்கு அடியில் சுருக்கு இருப்பதால் தான். இதனை ஐந்து வயதிற்குள் சரி செய்து விடுவது நல்லது. இல்லாவிடில், அவர்களுக்கு பின்னாளில் உச்சரிப்பு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு.
உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டுமா?
சில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடை படுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் புற்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர் புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம் இதற்கு அதன் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். உணவு உட்கொள்ள தடை, எடை குறைதல், வாந்தி, கழுத்தில் கட்டி கிளம்புதல், குரல் மாற்றம், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதனை கண்டறி வதற்கு என்டோஸ் கோபி என்ற உள்நோக்கி கருவி இப்போது உள்ளது.
பான்பராக் போன்ற போதை பாக்கு பழக்கம் தொண்டையை பாதிக்கும் தானே?
இப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சரளமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. இதற்கு கு€செடிளளை என்று பெயர். பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க ஊசி மருந்தை செலுத்தினால் இதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய லாம்.
குரலையே பிரதானமாக கொண்டவர்களுக்கு தொண்டையில் என்னன்ன பாதிப்பு வரலாம்?
மேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல் போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லா விடில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி வரும் வாய்ப் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்?
வாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத்துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.
நன்றி: தமிழ் கூடல்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, December 19, 2015

இனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்

நிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள்.
ஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 வயதிற்குள் லைஃப்பில் செட்டிலாகி 50 வயதிற்குள் ரிட்டையர்டாகும் அவசரம் தெரிகிறது.
அதனால் நேர்முகத்தேர்விற்கு வரும் யாரும், 'என்ன சம்பளம்?' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை? என்று கேட்பதில்லை..
ஒரு நிறுவனத்தில் இருந்து சிறப்பாக உழைத்து படிப்படியாக முன்னேறவேண்டும் என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. கூடுதலாக கிடைக்கும் ஆயிரங்களுக்காக எத்தனை முறை வேண்டு மானாலும் கம்பெனி மாறத்தயாராக இருக்கிறார்கள்.
இரண்டு வருடத்திற்கு முன்னால், '30000 ரூபாய் சம்பளம் கேட்கும் தகுதியுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று ஒரு எஃப். எம் ரேடியோ நிறுவனம் ரேடியோ ஜாக்கிக்காக விளம்பரம் கொடுத்திருந்தது. அப்போது ஆர்.ஜேக்களின் அதிக பட்ச சம்பளமே இருபதாயிரம்தான். இன்று அவர்களேகூட அப்படி விளம்பரம் கொடுக்க மாட்டார்கள். எனெனில் இன்று தகுதியில்லாத வர்கள்கூட அதை கேட்கத்தயாராக இருக்கிறார்கள்.
யாரும் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று சொல்வதாக அவசரப்பட்டு விடாதீர்கள். இலக்குகளில் தவறில்லை. அதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்கு பதிலாக முறையாக அடைவது எப்படி என்பதைத்தான் இதில் பார்க்கப்போகிறோம். நாம் அடைய விரும்பும் பொருளாதார இலக்கிற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி? என்பதற்கான வழி காட்டுதல்தான் இத்தொடர்.
இண்டர்வியூவில் எந்தக்கேள்வி கேட்டாலும் சில பேர் விழிப்பார்கள். சரி நாம் பயிற்சி கொடுத்துக் கொள்ளலாம் என்று சம்பளத்தை நிர்ணயித்தால், 'என்ன சார். எம்.பி.ஏ படிச்சிட்டு டென் தவுசண்ட்தானான்னு வீட்டுல கேட்பாங்க.' என்பார்கள் சற்றும் வெட்கம் இல்லாமல்.
படிப்பு ஒரு தகுதியல்ல. அதை படித்திருந் தால்தான் தகுதி. காலேஜ் கொடுத்த சர்டிபிகேட், நீ அங்கே படித்தாய் என்பதற்குத் தானே தவிர நீ நன்றாகப் படித்தாய் என்பதற்கான தல்ல… இல்லையென்றால் இண்டர்வியூ என்ற ஒன்றே தேவையில்லையே என்று விளக்க வேண்டி வரும்.
உங்களின் தகுதிதான் உண்மையில் உங்களுக்கு சர்டிபிகேட். கட்சிதாவிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் போல கம்பெனி மாறிக் கொண்டே இருப்பவர்களை இன்று யாரும் ரசிப்பதில்லை. ரெசெஷன் போன்ற நேரங்களில் முதல் கத்தி இவர்கள் தலையில்தான் விழும். எனவே நம் தகுதிகளை வளர்த்துக்கொண்டு சிறப்பாக முன்னேறும் வழிகளை இதில் விவாதிப்போம்.
நேர்முகத்தேர்வில், தேர்வாளர் நீங்கள் 'கேட்கும் சம்பளம் குறைவு' என்று நினைக்க வேண்டும் இல்லையா? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் சம்பளம் சின்னதாக தெரிய வேண்டும் என்றால் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை இருகோடுகள் தத்துவம்தான். உங்கள் திறமைகள் பெரிதாக தெரிய வேண்டும்.
நம் தகுதிக்கோட்டை உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்போம்.
நன்றி: – சாதனா – நமதுநம்பிக்கை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com