Thursday, April 25, 2013

செருப்பு வாங்கும் போது


செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.
தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும். தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.

மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.

எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.

உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.
அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.


--
*more articles click*
www.sahabudeen.com



Wednesday, April 24, 2013

Fwd: Burma Muslims



As received.

 

Dear Brothers

Please send to more peoples to know what is happening in Burma like done in Gujarat. It is repeating every where.

 

    Muslims in Burma need our Help & Duas (look at the Janaza salaah and the anguish on their faces - if this doesnt touch our hearts , nothing will - May Allah Ta'ala grant them all Sabr and those who have passed on - JANNATUL FIR



Thanks to support,


Muslim bhai….

 
 

 




People react as the bodies of victims of a fire are brought for their funeral at yaeway cemetery in yangoon
April 2,2013


 

 

 



Muslim religious leader gather a masjid .Following a fire that killed children at masjid in Yangoon Myanmar
April 02, 2013


 
 
 




Kuwaiti Muslims have surrounded Burmes embassy for last two days demanding to expel Burma ambassador for killing muslim in Burma


 

Please share this news around the world because Burma Gov. doesn't let international media to cover this massacre .
They already killed thousands of our Muslim brothers last time, raped and killed thousands of our  sisters, daughters & mothers.
Please share this with other Muslim brothers & sisters so they can at least pray for our Muslim brothers, mothers & sisters.  
We are Muslims and our Muslim brothers need our help.

Help Burma by just  conveying this message to others.

Jazak Allah Khair
,




சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.



--
*more articles click*
www.sahabudeen.com


சாப்பிட்டு முடித்து விரல்களை சூப்புவது நபிவழியாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக் கொள்ளட்டும். அவற்றில் எதில் பரக்கத் உள்ளது என்பதை அவர் அறியமாட்டார். மேலும் "உங்களில் ஒருவர் உணவு உண்டால் (இறுதியில்) உணவுத் தட்டை வழித்து உண்ணட்டும்'' என்றும்,
உங்களின் "எந்த உணவில் பரகத் உள்ளது ' அல்லது"(உங்களின் எந்த உணவில்) உங்களுக்கு பரக்கத் வழங்கப்படும்' (என்பதை அவர் அறியமாட்டார்)''

அறிவிப்பவா்: அபூஹுரைரா(ரலி) நூல் : முஸ்லிம் 4140

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள்.

விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாக பார்க்கப்படுகிறது. மேலை நாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்து விட்டனர்.

உண்பதற்கு கரண்டியைப் பயன்படுத்துவது மேலை நாட்டவரின் அநாகரிகத்தால் உருவாக்கப்பட்ட வழக்கமாகும்.

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்க மாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்து விட்டு போவார்களே தவிர கழுவ மாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி.
விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்பதால் அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் விரல்களைப் பயன்படுத்தி
சாப்பிடுவதும் விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்

பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிடும் என்பதால் விரல்களைக்
சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

இதை அறிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள்

இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்து விடுங்கள்.

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும் கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இதை சமையல்கட்டில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள்.

உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது.

நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும் இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காக்வும் விட்டு விடக் கூடாது

Tuesday, April 23, 2013

நபிகளின் நல்லுரைகள்

அழிவில்லாத கல்வி

நபிகளின் நல்லுரைகள்

* சன்மார்க்க கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமையாகும்.

* மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதற்காக எவர் ஒரு ஊருக்கு புறப்பட்டு விடுகிறாரோ அவர் அதனைக் கற்று மீண்டும் ஊர் திரும்பும்வரை சன்மார்க்க வழியில் ஈடுபட்டவராகவே கருதப்படுவார்.

* இஸ்லாத்தை உயிர்ப்பிப்பதற்காக ஒருவன் கற்றுக்கொண்டு வரும்
சமயத்தில் மரணித்து விடுவானேயானால் சொர்க்கத்தில் நபிமார்களுடன் இருக்கும் நற்பதவியை கிடைக்கப் பெற்றவனாகிவிடுகிறான்.

* மார்க்கக்கல்வியை தேடிப்புறப்பட்டவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.

* மனிதன் கல்விக்காக செய்கிற தருமம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.

* கற்றுக்கொடுப்பவரும் கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.

* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.

* எந்த ஒரு அடியானை இறைவன் இழிவுபடுத்த விரும்புகிறானோ அவனை மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதை விட்டு நீக்கி விடுகிறான்.

* மார்க்க கல்வி நபிமார்களின் உரிமைப் பொருள். செல்வம் பிர்அவ்னின் உரிமைப் பொருள். அதிகமாக வணக்கம் புரிவதைவிட அறிவை அதிகமாக்கிக் கொள்வதே மேலாகும்.

* கல்விக்கு அழிவே இல்லை. அதுபோன்று அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவே இல்லை.

* எனக்குப்பின் மார்க்கக்கல்வி வெகுவிரைவில் அகன்றுவிடும். பின்பு குழப்பங்கள் வெளிப்பட்டுவிடும். அறியாமை மிகைத்துவிடும். அதனால் மக்கள் மத்தியில் கட்டாயக் கடமையான விஷயங்களில் கூட (சண்டை) சச்சரவுகள் உண்டாகிவிடும். அவர்களை சமாதானம் செய்து வைக்கும் அளவுக்கு அறிவுள்ளவர் அப்போது இருக்கமாட்டார்கள்.

* எனது உம்மத்தினரை நாசப்படுத்தும் வஸ்துக்கள் இரண்டு; 1. கல்வி கற்பதை விட்டுவிடுவது 2. பொருள்களை சேர்ப்ப தில் முழு நேரத்தையும் செலவு செய்வது.

* நம்மிடத்தில் ஒரு ஹதீஸை அல்லது ஒரு சட்டத்தைக் கேட்டு அறிந்து கொள்வது ஆயிரம் ரகஅத் நபில் தொழுவதை விட மேலானதாகும். ஏனென்றால் அவர் மார்க்க கல்வி கற்கும் நிலையில் அவருக்கு மரணம் வருமேயானால் (ஷஹீதாக) வீரத்தியாகியாக மரணிக்கிறார்.

* உங்களுக்கு மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்தவரை கண்ணியப்படுத்துங்கள்.

* அல்லாஹ்வின் சேவைக்கு அல்லாமல் வேறு (உலக வாழ்வின்) நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தையே தன் இருப்பிடமாகக் கொள்வான். 

பிராணிகளிடம் அன்பு செலுத்துங்கள்

விலங்குகளிடத்தில் நபிகள் நாயகம் அதிக அக்கறை கொண்டிருந்தார். அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.

ஒரு முறை, நபிகள் நாயகம் ஒரு வழியில் சென்றபோது கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஒட்டகத்தைப் பார்த்துச் சென்றார். மீண்டும் அவ்வழியே வந்தபோது ஒட்டகத்தின் உரிமையாளரை பார்த்து "இந்த ஒட்டகத்திற்கு தீனி போட்டீரா?' என்று கேட்டதற்கு, அவர் "இல்லை' என்றார். ""அறிந்துகொள்ளும். நாளை கியாம நாளில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த ஒட்டகம் வழக்காடும்,'' என்று எச்சரித்தார். ஆடு, மாடு, மற்றும் கால்நடைகளுக்கு துன்பம் செய்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகிறது. ஈயின் இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் அவ்விஷத்திற்கு மருந்தும் உள்ளது. ஈ, உங்கள் பானம் உள்ள பாத்திரங்களில் விழும்போது மருந்துள்ள இறக்கையை மேல் துõக்கியும், விஷமுள்ள இறக்கையை (பானத்தில்) முக்கியவாறே விழும். ஆகவே நீங்கள் அவ்விரு இறக்கைகளையும் முக்கிய பின் வெளியே எடுத்து விடுங்கள்,'' என்ற தகவலையும் சொல்லியுள்ளார். அவர் ஆடுகள் பற்றி கூறும்போது, "" செம்மறி ஆடுளை அன்புடன் நடத்துங்கள். அவற்றை பாதுகாத்து வாருங்கள். ஏனென்றால் சொர்க்கத்தில் உள்ள நாலுகால் பிராணிகளில்அவையும் உள்ளன,'' என்றார்.

ஒரு மனிதன் ஒரு குருவியை அடித்தால் கூட, கியாம நாளில் அதைப்பற்றி விசாரணை செய்யப்படுவான். நீங்கள் ஒரு சிறிய சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டுவீர்களானால் அல்லாஹ் உங்கள் மீது அன்பையும் அருளையும் பொழிவார். நீங்கள் சேவல் கூவுவதைக் காதில் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளை வேண்டுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது (அந்த நேரம்) வானவரைக் கண்டுள்ளது. அதல்லாமல் நீங்கள் கழுதையின் சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு கேளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அது ஷைத்தானைக் கண்டுள்ளது. எவராவது வீட்டில் நாயை வளர்ப்பாராயின், அவருடைய நன்மைகளில் ஒவ்வொரு தினமும் ஒரு கிராத் அளவு நன்மை குறைந்துவிடும். வேட்டைநாய் அல்லது வயல்களை காவல்புரியும் நாய் அல்லது கால்நடைகளை காவல் புரியும் நாய்களுக்கு இது பொருந்தாது.

மார்க்க விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனக்கூறிய நாயகம், ""என்னுடைய உம்மத்தவர்களில் கருத்து வேற்றுமையும் பிரிவினைகளும் விரைவில் ஏற்படும். நல்ல வார்த்தைகளும் கெட்ட பழக்கங்களும் உடைய ஒரு கூட்டத்தினர் குர்ஆன் ஓதுவார்கள். அது அவர்களுடைய தொண்டையைக் கடக்காது. எய்யப்பட்ட பிராணியிலிருந்து வெளியேறும் அம்புபோல் அவர்கள் தங்களுடைய சன்மார்க்கத்திலிருந்து வெளியேறி வருவார்கள்,'' என்கிறார்.



--
*more articles click*
www.sahabudeen.com



Sunday, April 21, 2013

ஃப்ரிட்ஜ் - கூல்! கூல்!


அத்தியாவசிய வீட்டுச் சாதனங்களில் ஒன்றாகிவிட்டது ஃப்ரிட்ஜ். சரி, ஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப் பயன்படுத்துவது என்று  தெரிந்துகொள்ளலாமா?

'நம் ஊரின் அறை வெப்ப நிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட். ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் ஃப்ரீஸரின் வெப்ப நிலை ஜீரோ டிகிரி பாரன்ஹீட். ஃப்ரீஸர் தவிர்த்த மற்றப் பகுதிகளை ரெஃப்ரிஜிரேட்டர் என்கிறோம். இதன் வெப்ப நிலை 37 - 40 டிகிரி ஃபாரன்ஹீட்'' என்று தொடங்கினார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா முத்துக்குமார்.

''ஃப்ரீஸரில் ஐஸ் க்ரீம், ஐஸ் கட்டி, அசைவ உணவுகள் போன்றவற்றை வைக்கலாம். ஃப்ரீஸருக்குக் கீழே உள்ள பகுதி 'சில்லர்' எனப்படும். இதில் பால் பாக்கெட், தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை வைக்கலாம். அடுத்து உள்ள பகுதிகளில் மாவு, பூ எனப் பாதுகாக்க வேண்டிய எந்தப் பொருட்களையும் வைக்கலாம். காய்கறி மற்றும் பழங்கள் வைப்பதற்காகத் தனிப் பெட்டி இருக்கும். அதில் மட்டுமே காய்கறி, பழங்களை வைக்க வேண்டும். கதவுப் பகுதியில் தண்ணீர் பாட்டில், ஜூஸ் பாட்டில், மருந்துப் பொருட்கள், சாக்லேட், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை வைக்கலாம். 

பொதுவாக ஃப்ரிட்ஜுக்குள் பொருட்களை வைக்கும்போது அது எந்தப் பொருளாக இருந்தாலும் தனித் தனி பாலிதீன் அல்லது துணிப் பைக்குள் வைத்துத்தான் வைக்க வேண்டும். ஆனால், அந்தப் பைகளில் சிறிய சிறிய துளைகள் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் ஈரப்பதம் சரியாகப் பராமரிக்கப்படும்.

மாவு, துவையல் மற்றும் பூ, இஞ்சி, பூண்டு விழுது போன்ற வாசனைப் பொருட்களைக் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்துவைக்கலாம். இப்படி வைக்கும்போதுதான் ஒரு பொருளில் உள்ள வாசனை அடுத்த பொருளுக்குப் பரவாது. மேலும், சில பொருட்களுக்கு வாயுவை உண்டாக்கக்கூடிய தன்மை இயல்பாக இருக்கும். அப்படி உருவாகும்போது, அது மற்ற பொருட்களையும் பாதிக்கும். உதாரணமாக, ஆப்பிளுக்கு ஈதரை உருவாக்கக் கூடிய தன்மை உண்டு. மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளோடு ஆப்பிளையும் சேர்த்துவைக்கும்போது எல்லாமே கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. கேக் வகைகளுக்குப் பிற பொருட்களின் மணத்தை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் தன்மை இருப்பதால், அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாகச் சுற்றிவைக்க வேண்டும்'' என்றவர், எந்தப் பொருட்களை எத்தனை நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம் என்பதையும் விரிவாகச் சொன்னார்.

'பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களைப் பொருத்தவரை, பிரிக்காமல் இருக்கும்பட்சத்தில் அதில் அச்சிடப்பட்டு உள்ள தேதி வரையிலும் வைத்துப் பயன்படுத்தலாம். பிரித்துவிட்டால், சில நாட்களுக்குள் முழுவதையும் பயன்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஸ்பூனைப் பயன்படுத்தி எடுக்கும்போது, அதன் வழியாகக் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.

பிஸ்கட், பிரெட் போன்றவற்றை அறை வெப்ப நிலையிலேயே வைத்திருக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் வெப்ப நிலை குறைந்து வறண்ட நிலைக்கு மாறிவிடும். காய்கறி, பழங்களைப் பொருத்தவரை மொத்தமாக வாங்கிவைத்துப் பயன்படுத்தும்போது, முதலில் நீர்ச் சத்து அதிகம் உள்ளவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதால், சத்துக்களின் அளவில் மாற்றமோ அல்லது வேறு பிரச்னைகளோ கிடையாது. குறிப்பிட்ட தேதியையும் தாண்டிப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஃப்ரிட்ஜை அசுத்தமாகவைத்திருப்பது, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது மற்றும் வெப்ப நிலை மாறுவது போன்ற சூழ்நிலைகளில்தான் ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்திருந்துவிட்டு திரும்பவும் பயன்படுத்தினால், மறுபடியும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலைக்கு சூடுபடுத்திய பிறகே சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் பாக்டீரியா தொற்று அழியும். சமைத்த பொருட்களை அடிக்கடி ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சூடுபடுத்தி மறுபடியும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெப்ப நிலை மாறுவதால் உணவின் தரமும் சுவையும் மாறுவதோடு தொற்றுகளும் ஏற்படலாம்'' என்று எச்சரிக்கிறார் திவ்யா.
'ஃப்ரிட்ஜை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?' என்ற கேள்வியை மெக்கானிக் சரவணன் முன்வைத்தோம்.

'மாதத்துக்கு ஒரு முறை ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தக் கூடாது. ஃப்ரிட்ஜில் உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியில் எடுத்துவிட்டு, சோப் தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை சுத்தமாகத் துடைக்க வேண்டும். பின்னர் இரண்டு எலுமிச்சம் பழங்களை எட்டுத் துண்டுகளாக வெட்டி, ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜுக்குள் உள்ள கெட்ட வாசனை நீங்கும். சில சமயம் ஃப்ரிட்ஜினுள் வைத்த பொருள் ஏதேனும் கெட்டுப்போக நேரிடலாம். அந்தச் சமயத்தில் கெட்டுப்போன பொருளை வெளியில் எடுத்துவிட்டு எலுமிச்சையை வெட்டிவைத்தால் அழுகல் வாசம் போய்விடும்.

பொதுவாக ஃப்ரிட்ஜ் குளிர்ச்சியாக இருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்ந்துவிடும். இதை ஆவியாக்கும் வசதி ஃப்ரிட்ஜிலேயே உள்ளது. அதற்கென உள்ள பொத்தானை அழுத்தினால் அந்தத் தண்ணீர் இரண்டு மணி நேரத்தில் ஆவியாகிவிடும். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தித் தண்ணீரை ஆவியாக்காமல்விட்டால், கொஞ்ச நாளிலேயே ஃப்ரிட்ஜுக்குள் இருந்து தண்ணீர் வெளியே கசியும்.

கிரைண்டருக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது. மாவில் உள்ள ஈரப் பதம் ஃப்ரிட்ஜில் தொடர்ந்து படும்போது விரைவிலேயே துருப்பிடித்துவிடும். ஃப்ரிட்ஜுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதற்காக அம்மோனியா, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்ற வாயுக்கள் முன்பு பயன்படுத்தப்பட்டன. இவை ஓசோன் படலத்தில் துளையை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், தற்போது ஃப்ரியான், ஆர்134ஏ போன்ற வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்கிறார் சரவணன்.

'தற்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், ஃப்ரிட்ஜின் வெப்ப நிலை ஒரே சீராக இருப்பது இல்லை. இதனால் அதற்குள் இருக்கும் பொருட்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு, வீணாகிவிடும். அந்தப் பொருட்களைச் சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், செரியாமை போன்ற பிரச்னைகளும் உண்டாகும். சமயங்களில் உணவு நஞ்சாகும் சாத்தியமும் உண்டு. எனவே இரண்டு நாட்களுக்கு மேல் உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை ஃப்ரெஷ்ஷாகச் சாப்பிடுவதே நல்லது' என்கிறார் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளரும், பொது மருத்துவருமான கே. சிவசுப்ரமணியன்.
உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜினுள் வைத்துப் பயன்படுத்தும் கால அளவுகள் இதோ:
 புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், பொரியல் போன்ற சமைத்த பொருட்கள் -
ஒரு நாள்
 புளிக் குழம்பு, காரக் குழம்பு -
இரண்டு நாட்கள்
 உப்பு, காரம் சேர்த்த சமைக்காத அசைவ உணவுப் பொருட்கள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, துவையல் - ஒரு வாரம்
 கேக் வகைகள் - மூன்று நாட்கள்
தயிர், மோர் - நான்கு நாட்கள்
(புளிக்காத தயிர் என்றால் ஒருநாள் மட்டும்)
 சீஸ் - ஆறு மாதங்கள்
 முட்டை, பழங்கள், காய்கறிகள் -
மூன்று வாரங்கள்
http://pettagum.blogspot.in/2012/08/blog-post_8351.html

--
*more articles click*
www.sahabudeen.com



Saturday, April 20, 2013

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

இடுப்பு வலியிலிருந்து தப்பிக்க

மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்' வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்ற ன் கீழ் ஒன்றாக, வரிசையாக, கருத்தெலு ம்புகள் அமைந் துள்ளன. இதற்கு `வெர்டி ப்ரே' என்று பெயர். மனிதன் முதற்கொண் டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கு ம் இந்த குருத்தெலும்புகள் உண்டு.

 ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடை யில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்' என்று சொல்லக்கூடிய அதிக எடையைத் தாங் கக்கூடிய, அதி ர்ச்சியைத் தாங்கக்கூடிய, `ஷாக் அப்ஸார்பர்' என்று சொல்வார்க ளே, அதைப் போன்ற ஒரு `அதிர்ச்சி தடுப் பான் டிஸ்க்' இருக்கிறது. சைக்கிள், கார், ஸ்கூட்டர், பைக், மோட்டா ர் பம்ப் போன்றவற்றில் `வாஷர்' என்ற ஒன்று இருக்குமே, அதைப் போலத்தான், இதுவும் ஒவ்வொரு குருத்தெலும்புக்கும் இடையில் இயற்கையாக அமையப் பெற்றிருக்கிறது.

புரோட்டியோ கிளைகான் (புரோ ட்டீன் + கார்போஹைட்ரேட்) கொல்லாஜன், தண்ணீர் மற்றும் குறைந்த அளவில் கொஞ்சம் எலாஸ்டிக் பைபர் சேர்ந்த கூட்டு ப்பொருளால் ஆனது தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்' ஆகு ம். ஒரு பட்டர் பிஸ்கெட் எப்படி இருக்குமோ, அநேகமாக, அதே வடிவில், அதே சைஸில் தான், இந்த `அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்' இருக்கும். தண்டுவடம், மொத்தமாக முன்னே, பின்னே, குனிய, நிமி ர, வளைய, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் பெரிதும் உபயோகப் படுகிறது.

மேலும் தண்டு வடத்திலுள்ள எல்லா குருத்தெலும்புகளும் தனித்தனியாக ஒன்றோடொன்று சேர்ந்திருக் கவும் இந்த டிஸ்க் பயன்படுகிறது. மனி தனின் தண்டுவடத்தில், மொத்தம் 23 டிஸ்க் இருக்கிறது. கழுத்துப்பகுதியில் ஆறும், முதுகின் நடுப்பகுதியில் பன்னி ரெண்டும், இடுப்பின் பின்பகுதியில் ஐந் தும் இருக்கின்றன. இந்த டிஸ்க்கின் வெளிப்பகுதி `ஆன்னுலஸ் பைபர்' என்கி ற அடுக்கினாலும் உருவாக்கபட்டிருக்கி றது.

 

உடம்பில், குறிப்பாக முதுகுப்புறத்தில் ஏற்படும் அழுத்தத்தை, ஒரே சீராக பிரித் தனுப்பும் வேலையை, வெளிப்புற `ஆன் னுலஸ் பைபர்' செய்கிறது. உள் புறமுள்ள `நியூக்ளியஸ் பைபர்' ஒரு டூத் பேஸ்ட் போன்று, ஒரு ஜெல்லி போன்று வழவழவென்று இருக்கு ம். இதுதான் `ஷாக் அப்ஸார்பர்' வேலையைச் செய்கிறது. அதாவதுதண்டு வடத்துக்கு வரும் பிரஷர் முழுவ தையும் தாங்கிக் கொள்ளும் வேலை யை, இந்த நியூக்ளியஸ் பைபர் தான் செய்கிறது.

 

உயரத்திலிருந்து நாம் குதிக்கும்போது, ஓடு ம்போது, தாவும்போது, தாண்டும்போது, அதிக எடையுள்ள பொருளை தலைச் சுமை யாக தூக்கும்போது, குனியும்போது, நிமிரு ம்போது, வளையும்போது, நெளியும் போது ம் ஏற்படும் எல்லாவிதமான அழுத்தத்தை யும், இந்த `டிஸ்க்' தான், தாங்கிக் கொண்டு குருத்தெலும்புகள் பாதிப்படையாமல், உடை ந்து விடாமல், பாதுகாத்து வருகிறது.

அதற்காக, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க் இருக்கிறது என்பதற்காக, இஷ்டம் போல் இருநூறு கிலோ எடை யைத் தூக்கி தலையில் வைத்தால், இந்த `டிஸ்க்' தாங்காது. ஒரு குறிப்பிட்ட அளவு எடை, ஒரு குறிப்பிட்ட உய ரத்திலிருந்து குதித்தல், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளைதல், இப்படி எல்லா செயல்களிலுமே, ஒரு குறிப் பிட்ட அளவுக்குத்தான் இந்த `டிஸ்க்' கால் கண்ட் ரோல் பண்ணி, உடம் பை பாதுகா க்க முடியும்.

 

அளவுக்கு மீறினால் இந்த `டிஸ்க்' கால் ஒன்றும் செய்ய முடியாது. மனி த உடம்பு ரப்பரினால் செய்யப்பட்டத ல்ல. இந்த டிஸ்க்கிலுள்ள ஆன்னு லஸ் பைபரில், சுமார் 65 சத வீதம் நீரும், நிïக்ளியஸ் பைபரில், சுமார் 80 சதவீதம் நீரும் இருக்கும். ரத்த சப் ளை இந்த டிஸ்க்குகளுக்குக் கிடை யாது. வயது ஆக, ஆக நியூக்ளியஸ் பைபர் அடுக் கிலுள்ள நீர்ச்சத்து குறைந்து கொண்டே வரும்.

 

இதனால், அதனுடைய பலமும் குறைந்து கொண்டே வரும். அதனால்தான் வயதான காலத்தில், சின்னப்பிள்ளை மா திரி, ஓடியாடி வி ளையாடாதீர்கள் என்று பயமு றுத்துவதுண்டு. வயதான காலத்தில் முதுகெலு ம்பில் அடிபட்டாலோ, கீழே விழுந் தாலோ, அந்த ஷாக், அந்த அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய சக்தி குறைந்து விடும். எனவே வயதான கால த்தில் அதிக ஓட்டம் ஓடாதீர்கள்.

விபத்தின் போதோ அல்லது தாறுமாறாக மேலே யிலிருந்து கீழே குதிக்கும்போதோ, பைக், ஸ்கூ ட்டரில் போகும்போது, பள்ளத்தில் தூக்கிப்போ டும்போதோ, இந்த அதிர்ச்சி தடுப்பான் டிஸ்க்கு க்கு உள்ளேயிருக்கும் ஜெல்லி போன்ற பொருள், பிய்த்துக் கொண் டு, பிதுங் கிக் கொண்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பிக்கும்.

 

இப்படி பிதுங்கிக்கொண்டு வெளியே வரும் `ஜெல்லி'தான், அருகிலுள்ள நரம்பை அழுத்தும். சிலபேருக்கு இந்த நரம்பு அழுத்தப்படுவ தால் தான், தொடையில் ஆரம்பித்து, காலின் கீழ் பகுதி வரை, தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. இடுப்பின் பின்பகுதியில் இருக்கும் ஐந்து டிஸ்க்குகளுக்கு `லம் பார் டிஸ்க்' என்று பெயர்.

 

உடலில் ஏறும் எடையையும், உடல் எடையையும், அதிகமாக தாங் கக்கூடியது, இந்த `லம்பார் டிஸ்க்'தான். அதே மாதிரி இடுப்பு வளைய, குனிய, நிமிர, இடுப்பைச் சுற்ற இந்த `லம்பார் டிஸ்க்'

நிறைய வே பயன்படுகிறது. அதே மாதிரி இந்த `லம்பார் டிஸ்க்கில் ஏற்படு ம் பாதிப்பு தான், இடுப்பு வலியாக நமக்கு காட்டுகிறது.

 

கல்யாணம், கச்சேரி போன்ற விழாக்களுக்கோ, மற்ற காரிய ங்களுக்கோ, வெளிïருக்கு குடும் பத்துடன் செல்லும் போது, கூட்ட ம் அதிகமாக இருப்பதால், படுக்க இடம் கிடைக்காது. இம்மாதிரி நேரங்களில், படுக்க இடம் கிடைத்தால் போதும் என்பதை விட, தூ ங்க இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்குஇடநெருக்கடி ஏற்பட்டு விடும்.

 

இப்படி இடைஞ்சலில் இட நெருக்கடியில் தூங்கும்போது, நம் இஷ்டத்துக்கு கையை, காலை நீட்டியெல்லாம் தூங்க முடியாது. இப்படித் தூங்கினா ல், மறுநாள் காலையில் இடுப் பு வலி கண்டிப்பாக வரத்தான் செய்யும். டிரெயினில் பயணம் செய்யும்போது கூட, பெர்த்தில் நன்றாக நீட்டி, மடக்கி, உருண்டு, புரண்டு எல்லாம் தூங்க முடியாது.

 

கார், பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும் இதே நிலைதான். மறு நாள் காலையில் இடுப்பு வலி ஏற் படத்தான் செய்யும். சிலபேர் ஆட் டோவில் போகும்போது, அந்த ஆட் டோவையே சொந்தமாக விலைக் கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் விரித்து, கால்களையும் விரித்து, ஒரு சோபாவில் ஜமீன்தார் சாய்ந்து உட்கார்ந்திருக்கிற மாதிரி, உட்கார் ந்து கொண்டு வருவார்கள்.

 

ஆட்டோ திடீரென்று ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கும் போது , `அய்யோ, இடுப்பு போயிடுச்சே' என்று கத்துவார்கள். இது தேவையா? ஆட்டோவில் மட்டுமல்ல, கார், பஸ் முதலிய எதில் பய ணம் செய்யும்போது, பின்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கா ராமல், முன்பக்கம் அதிகம் உடல் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, முன் னாலிருக்கும் கம்பியைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண் டும்.

 

இப்படி உட்கார்ந்திருந்தால் வ ண்டி தூக்கிப் போடும் போது, நமது தண்டு வடத்துக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. இடுப்பு வலியும் வராது. அமெரிக்காவுக்கு, விமானத்தில் சுமார் 15 மணி நேரம் ஒரே இடத் தில் உட்கார்ந்து பயணம் செய்தால் கூட, இடுப்பு வலி ஏற்படும். எனவே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து, விமானத்துக்குள்ளேயே, ஒரு ரவுண் ட் அடித்து விட்டு, மறுபடியும் வந்து உட்காருங்கள்.

 

சாதாரணமாக வீட்டில் உட்கார்ந்திரு க்கும்போது கூட, கூன் போடாமல், தோள்பட்டை யெல்லாம் நேராக இல்லாமல், ஒரு பக்கமாக உடலை சாய்த்து, மிகவும் சோர்வாக இருப்ப து போல், எப்பொழுதும் உட்காராம ல், முன்பக்கம் குனிந்து உட்காராமல், முதுகை நேராக நிமிர்த்தி வைத்து உட்கார கற்றுக் கொள்ளுங்கள். ஆபீஸில் வேலை பார்ப்ப வர்கள், நாற்காலியில் சுமார் பத்து மணி நேரமாவது உட்கார வேண் டி வரும்.

 

இவர்கள் எல்லோருமே, குனியாமல், கூன் போ டாமல் நிமிர்ந்து உட்கா ர பழகுங்கள். உட்கார்ந் து கொண்டே போன் பேசுவதைத் தவிர்த்து, நின்றுகொண்டு அல்ல து நடந்து கொண்டு பே சுங்கள். முடிந்த வரை நின்று கொண்டு செய்கிற வேலைகளை, உட்கார்ந்து கொண்டு செய் யாதீர்கள். இடுப்பு வலி வராமல் தடுக்கலாம்.

 

அதிக எடையுள்ள பொருளைத் தூக்காதீர்கள். தூக்க முயற்சி செய் யாதீர்கள். எவ்வளவு எடை நீங்கள் தூக்குகிறீர்கள் என்பது முக்கிய மல்ல. அதை எப்படித் தூக்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். இடுப்பு வலி வராமல் இருக்க, மேற்கண்ட விஷயங்களை கையாண்டு பாரு ங்கள். இடுப்பு வலியிலிருந்து தப்பிக்கலாம்.

https://vidhai2virutcham.wordpress.com



--
*more articles click*
www.sahabudeen.com