Tuesday, May 28, 2013

நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

 

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,

அது "கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை", பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். "முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு",

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)

அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற

பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................


இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

நன்றி -செந்தமிழ் நாடெனும்

#இதை ஷேர் செய்யுங்கள் இன்னும் நிறைய பேரை சென்றடையட்டும்...

- Sahid Abdul Fatah

 

Parangi Pettai

Khaleel Baaqavee

Kuwait



--
*more articles click*
www.sahabudeen.com


இன்வெர்ட்டர் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்!

இன்வெர்ட்டர் வகைகளும் பராமரிக்கும் முறைகளும்!

தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு  தலைவிரித்தாடும் இத்தரு ணத்தில், இன்வெர்ட்டர்களை விற் கும் நிறுவனங்களும், வியாபாரிக ளும் சந்தோசத்தில் குதித்துக் கொ ண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட் டர்கள் விற்பனை யாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என் பது குறித்துப் பார்ப் போம்.

"இன்வெர்ட்டர்களில் இரண்டுவகை இருக் கிறது. ஒன்று, சைன்வேவ் இன் வெர்ட்டர் . இரண்டாவது, ஸ்கொயர் வேவ் இன்வெர்ட் டர். இந்த இரண்டு வகையிலும் குறை ந்தபட்சம் 250வாட்ஸ், 400வாட்ஸ் என இரண்டு வகை உண்டு.

250வாட்ஸில்ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.

இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போ து நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள் தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 வாட்ஸ் கொ ண்ட இன்வெர்ட்டர் தான் நடுத்தர மக்க ளுக்கும், சிறு தொழில் செய்பவர்களுக் கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸி யை இயக்கலாம்.

பொதுவாக இன்வெர்ட்டர் கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்ட வுடன் இயங்க ஆரம்பித்து விடும். மின்சாரம் வந்தது ம் அதன் இயக்கம் தானாக வே நின்று விடும். இன்வெ ர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவா கவே சார்ஜ் ஆகிக்கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டு ம்" என்றவர், இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.

இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல் களை தேர்வு செய்ய வேண்டும்.

மூன்று மணிநேரம் கரன்ட்கட் ஆகிற பகுதிக ளில், அதற்கு ஏற்றார் போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வ து நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன் வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரி யை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவன மாக இருப்பது அவசியம்.

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.

இன்வெர்ட்டர் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங் குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்க ளை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன் வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக் குத் தேவையான அளவுமின்சாரத்தை முழுமையாகத் தரும். இத னால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக் ட்ரானிக் பொருட்களில் இரை ச்சலான சத்தம்வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பி ருக்கி றது.

இன்வெர்ட்ட‍ர்களை பராமரிப்பது எப்படி?

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமி ருந்தாலும், இந்த பிரச்னை இன் னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணி யலாம். அந்த சமயத்தில், இன்வெர் ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒரு முறையேனும் கிடைக்கும் மின்சா ரத்தை நிறு த்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தைபயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழு தடையாமல் இருக்கும்.

பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யா விட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரி களில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட கால த்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவு ம் குறைவு தான்".

http://vidhai2virutcham.com

--
*more articles click*
www.sahabudeen.com


Monday, May 27, 2013

வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா? உங்கள் கவனத்திற்கு!

வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா? உங்கள் கவனத்திற்கு!

சாதாரணமாக சிங்கப்பூர் .துபாய் மலேஷியா என சுற்றுலா சென்று வருபவர்களும் ,அங்கு வேலை பார்த்துவிட்டு வருபவர்களும் சந்தோசமாக வாங்கி வருவது LED அல்லது LCD டி.வி. மேலும் சில எலெக்ட்ரானிக் பொருட்கள்..இனி இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டு வரப்படும் டி.வி க்களுக்கு இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இருக்காது என சோனி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவில் விற்கும் விலையை விட அந்த நாடுகளில் இவற்றின் விலை மிகவும் குறைவு. 

உதாரணமாக:- 

SONY 46 அங்குல LCD TV யின் இந்திய விலை ஏறக்குறைய 60000 ரூபாய் அதே TVயை துபாயில் வாங்கினால் வெறும் 37000 ரூபாய்தான்.

அதே போன்று இந்தியாவில் ஏறக்குறைய 25,500 ரூபாய்க்கு விற்பனையாகும் LG 32 INCH LED TV சிங்கப்பூரில் 14000 ரூபாய்க்கு கிடைக்கிறது .

சாம்சங் நிறுவனத்தின் 40-inch 3D LED TV இங்கு 74000 ரூபாய் பாங்காங்கில் அதன் விலை 42000 ரூபாய்தான்.. டி.வி. மட்டுமின்றி நிறைய எலெக்ட்ரானிக் பொருட்களும் மற்ற நாடுகளில் விலை குறைவு.

இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் மூலமாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 டி.வி க்கள் வருகிறது.என Consumer Electronics and Appliances Manufacturers Association என அழைக்கப்படும் CEAMA தெரிவிக்கிறது.

இவ்வாறு குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் காரணமாக இந்தியாவில் மார்க்கெட் நடுநிலை, ,வியாபாரத்திட்டங்கள் மற்றும் சட்டப்படியான விநியோகத்திட்டம் ஆகியவை தடுமாறுகிறது.மேலும் இந்திய சந்தையில் பொருள் வாங்கும் மனநிலை குறைகிறது.என சோனி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சுனில் நய்யார் தெரிவித்தார்.

இதனால் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கியுள்ள சாம்சங்,சோனி ,எல்ஜி மற்றும் பேனசானிக் போன்ற கம்பெனிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே இப்படி வெளிநாடுகளில் வாங்கி இங்கு கொண்டுவரப்படும் டி.வி க்களுக்கு இனி இங்கு வாரண்ட்டி ,சர்வீஸ் சப்போர்ட் ஆகியவை இனி இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பனசானிக் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள பொருட்கள் வாரண்டியுடன் இருந்தாலும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் கிளைகம்பெனிகளிடம் பேசி சர்வதேச வாரண்டிமுறையை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்ததனர்.

இதற்கிடையில் வெளிநாடுகளில் விலை மலிவாக கிடைக்கும் டிவி இங்கு ஏன்அதிக விலைக்கு விற்கப்படுகிறது என கேட்டபோது இங்கு மற்ற நாடுகளை விட வரி விதிப்பு முறைகளின் காரணமாக 30% முதல் 40% அதிக வரி ,உற்பத்தி செலவு மற்றும் பலகட்ட விநியோக முறை ஆகியவை இருப்பதால் இந்த கூடுதல் விலை என்று சாம்சங் நிறுவன தரப்பில் கூறினார்.மேலும் இப்படி வெளி நாடுகளில் இருந்து கொன்து வருவதன் காரணமாக அரசுக்கு வர வேண்டிய வரியிலும் பெரும் இழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

இதுபற்றி அரசு தெளிவான முடிவு எடுக்காத நிலையில் இனி வெளி நாடுகளிலிருந்து வாங்கி வரும் டி.வி.க்களை இங்கு சர்வீஸ் செய்வது என்பது இனி கடினம்தான்.அரசு வரிவிதிப்பு முறைகளை மாற்றி இங்கும் குறைந்த விலையில் டிவிக்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும்.

http://goodluckanjana.blogspot.com/2013/05/blog-post_622.html#.UaGdudg_RSg



--
*more articles click*
www.sahabudeen.com


உங்கள் தலை முடியை பராமரிக்க சில ஆலோசனைகள்.




‘நரைத்த கூந்தல் எத்தனை அழகு என்பதை வழுக்கைத் தலையர்களிடம் கேட்டுப் பாருங்கள்’ என்கிறது ஆங்கிலப் பொன்மொழி ஒன்று. உண்மைதான்… உறவு, நட்பு, பணம் மட்டுமில்லை… அழகின் அருமைகூட இருக்கும் வரை யாருக்கும் தெரிவதில்லை. போன பிறகு புலம்புவதால் பயனுமில்லை. கூந்தல் அழகும் ஆரோக்கியமும் கூட அப்படித்தான்! போனால் வராது. வருமுன் காப்பது மட்டுமே இந்த விஷயத்துக்கான ஒரே தீர்வு.
கவரிமான், தன் உடலில் இருந்து ஒரே ஒரு ரோமம் உதிர்ந்து விட்டாலும், அந்தக் கணமே உயிரை விட்டு விடுமாம். மானுக்கு மானம் சம்பந்தப்பட்ட அந்த விஷயம், மனிதருக்கோ அழகு சம்பந்தப்பட்டது. முடிதானே என்று அலட்சியப்படுத்தாமல், தக்க நேரத்தில் சுதாரித்துக் கொள்ளலாமே!
வழுக்கைப் பிரச்னையால் வாழ்க்கையே இழந்தவர்கள் பலர். ஆண்களை மட்டுமே காவு வாங்கிக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை, சமீப காலமாக பெண்களையும் குறி வைத்திருக்கிறது. பரம்பரைத்தன்மை, முடி பராமரிப்பில் அக்கறையின்மை, கவலை என ஆண்களின் வழுக்கைக்கு ஆயிரம் காரணங்கள் என்றால், பெண்களுக்கு ஏற்படும் வழுக்கைக்கோ அதைவிட அதிகமான காரணங்கள்… ‘‘முதல் காரணம் ஆன்ட்ரோஜென் என்கிற ஹார்மோன். ஆண்களுக்கு இருக்கக்கூடிய முக்கிய ஹார்மோனான இதுதான், பெண்களுக்கு வழுக்கை விழவும் காரணம்.
அடுத்து அதீத பொடுகு. முடி ஆரோக்கியமா வளர, ஆக்சிஜன் சப்ளையும், ரத்தம் மூலமா கிடைக்கிற சத்துகளும்தான் காரணம். பொடுகு வந்தா, கூந்தலோட வேர்க்கால்களுக்குப் போகற சத்துகள் தடைப்பட்டு, முடி மெலிய ஆரம்பிக்கும். இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்துலயே பார்த்துட்டா, பொடுகுக்கான சிகிச்சையை எடுக்கறது மூலமா வழுக்கையிலேருந்தும் தப்பிக்கலாம்…’’ – ஒரு சின்ன பிரச்னை, ‘தலை’யாய பிரச்னையாக எப்படி உருவெடுக்கிறது என்கிற விளக்கத்துடன் பேசுகிறார் அழகுக்கலை நிபுணரும், அரோமாதெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.
மன அழுத்தத்துக்கும் மண்டை முடிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்கிறார் இவர். ‘‘அதீத மன அழுத்தத்துல இருக்கிறப்ப, எண்ணெய் அதிகம் சுரக்கும். அது நம்ம சருமத்தோட ரெண்டாவது லேயரான டெர்மிஸ்ல சேர்ந்து, மண்டைப்பகுதி சுவாசிக்க முடியாமப் போய், முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உதிர ஆரம்பிக்கும். அடுத்து புழுவெட்டு. மிளகு சைஸ்ல ஆரம்பிச்சு, திடீர்னு மண்டை முழுக்கப் பரவி, வழுக்கையை ஏற்படுத்தும். இது ஆரம்பத்துலயே கவனிக்கப்படணும். தலைமுடியில என்ன பிரச்னைன்னாலும், இப்ப அதைக் கண்டுபிடிக்க ஸ்கேனிங் வசதி இருக்கு. முடியோட வேர்க்கால்கள் எப்படியிருக்கு, அதுக்கு உயிர் இருக்கா, மறுபடி வளரச் செய்ய முடியுமான்னு எல்லாத்தையும் அதுல தெரிஞ்சுக்கலாம்’’ என்கிற கீதா, வழுக்கை வராமலிருக்க சில ஆலோசனைகளையும் சொல்கிறார்.
* தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை குளியல் அவசியம்.
* தலைமுடியை இழுத்து, இறுக்கமா பின்றதோ, கட்டறதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது.
* எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி சின்ன வெங்காயம் எல்லாத்தையும் கரகரப்பா அரைச்சு, வழுக்கை விழுந்த இடத்துல தேய்ச்சு, 10 நிமிஷம் கழிச்சு அலசினா, உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளர ஆரம்பிக்கும்.
* குமுட்டிக்காய்னு ஒண்ணு கிராமங்கள்ல கிடைக்கும். அதை வெட்டினா உள்ளுக்குள்ள ஈரப்பதம் இருக்கும். வழுக்கைப்பகுதி மேல அதைத் தேய்ச்சு, கொஞ்ச நேரம் ஊறவச்சுக் கழுவினா, உதிர்ந்த இடத்துல முடி வளரும்.
* சுகந்த கோகிலா, பே ஆயில், சிடர் உட் ஆயில் – இந்த மூணு அரோமா ஆயில்களையும் தலா 3 சொட்டு எடுத்து, வெள்ளை மிளகுப்பொடியில கலந்து, வழுக்கை விழுந்த இடத்துல தடவிக் காய விட்டுக் குளிக்கலாம்.
நீள முடி வைத்திருப்பதைப் பட்டிக்காட்டுத் தனமாக நினைத்த இளம் பெண்கள் மத்தியில் இன்று மீண்டும் அது ஃபேஷன்! நீளக்கூந்தலும் வேண்டும்… அதே நேரம் மாடர்னாகவும் தெரிய வேண்டும் என்கிறவர்களே அதிகம் இன்று. குட்டைக் கூந்தல் அழகிகளும் புதிய ஸ்டைல்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஹேர் கட்ஸிலும் ஸ்டைலிலும் என்னவெல்லாம் லேட்டஸ்ட்?
‘பேஜ் 3’ பியூட்டி சலூனின் சீனியர் ஹேர் ஸ்டைலிஸ்ட் சுமன் விளக்குகிறார்.
‘‘பொண்ணுங்க மத்தியில நீளமான முடி வச்சுக்கிறது மறுபடி ஃபேஷனாயிட்டிருக்கு. ஆனா, படிய வாரி, பின்னல் போட்டுக்கிறதையோ, அப்படியே விரிச்சு விடறதையோ அவங்க விரும்பறதில்லை. ‘டிஸ்கனெக்ட் லேயர்’னு ஒரு ஸ்டைல் இப்ப ரொம்பப் பிரபலம். இதுல கூந்தலோட நீளம் அப்படியே இருக்கும். முன்னந்தலையில சின்னச் சின்ன மாறுதல்களைப் பண்ணி, மாடர்ன் தோற்றத்தைக் கொண்டுவரலாம்.
அதே போல குட்டையான கூந்தல் உள்ளவங்க ‘மோஹாக்’னு ஒரு ஸ்டைலை விரும்பறாங்க. கூந்தலோட நடுப்பகுதி கொஞ்சம் நீளமாகவும், பக்கவாட்டுல சின்னதாகவும் இருக்கிற மாதிரியான ஸ்டைல் இது. ரொம்பவும் குட்டியான பாப் கட்ஸ்லயும் இப்ப மாற்றங்கள் வந்திருக்கு. ‘ஏ சிமெட்ரி’ங்கிற ஸ்டைல்ல, அத்தனை குட்டி முடியையும் படிக்கட்டு மாதிரி வெட்டிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை ஸ்ட்ரெயிட்டனிங் மோகம் பாடா படுத்திட்டிருந்தது. இப்ப அது போயாச்சு. அலை அலையான, சாஃப்டான முடியைத்தான் பொண்ணுங்க விரும்பறாங்க. பளபளா முடியும் இப்ப ஃபேஷன்ல இல்லை. ‘மேட் ஃபினிஷ்’ லுக்தான் ஹாட்!’’ என்கிற சுமன், ஹேர் கலர்களில் புதுசு என்ன என்றும் பேசுகிறார்.
‘‘பிரைட் கலர்களுக்கு இப்போ மவுசு இல்லை. பிரவுன், ஹனி, காப்பர், காப்பர் ரெட் மாதிரியான வார்ம் கலர்கள்தான் ஃபேஷன். கலரிங் பண்ணவும் ஆசை. அதே நேரம் ஒருவேளை அது பிடிக்கலைன்னா மறுபடி மாத்தணுமேங்கிற குழப்பம்… இப்படி நிறைய பேர் உண்டு. அவங்க ‘கிளிப் ஆன் கலர்ஸ்’ ட்ரை பண்ணலாம். தலைமுடியில விருப்பமான இடங்கள்ல அப்படியே கிளிப் பண்ணிக்கிற மாதிரி ரெடிமேட் மாடல்கள் கிடைக்குது. எல்லா கலர்கள்லயும் இருக்கு. ஏதோ ஒரு பார்ட்டி, போட்டோ ஷூட்னா, இதை கிளிப் பண்ணிட்டுப் போகலாம். முடிஞ்சதும் கழட்டி வச்சிடலாம்…’’ – கிளிப் ஆன் கலர் முடிக்கற்றைகளை நமக்குக் காட்டுகிற சுமன், மணப்பெண் ஹேர் ஸ்டைல்களிலும் ஃபேஷன் மாறியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
‘‘70, 80-கள்ல சினிமா ஹீரோயின்கள் மத்தியில பிரபலமா இருந்த ஹேர் ஸ்டைல்ஸ் இப்ப மறுபடி ஃபேஷனாக ஆரம்பிச்சிருக்கு. முன்பக்கம் கொஞ்சம் தூக்கின மாதிரியான உயரமான ஹேர் ஸ்டைல், பின் பக்கம் பின்னலோட சேர்ந்த கொண்டைன்னு கல்யாணப் பொண்ணுங்க அந்தக் காலத்து ஹேர் ஸ்டைலை ட்ரை பண்றதுல ஆர்வமா இருக்காங்க. தவிர வட இந்தியக் கலாசாரத்தோட தாக்கத்தால, இன்னிக்கு எல்லா கல்யாணங்கள்லயும் மெஹந்தி ஃபங்ஷன், பேச்சிலர்ஸ் பார்ட்டி, ரிசப்ஷன்னு நாலஞ்சு நாள் விசேஷங்கள் சகஜமாயிட்டிருக்கு. ஒவ்வொரு விசேஷத்துக்கு ஒவ்வொரு விதமான ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கிறதும் இப்ப ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட்… தனக்குப் பொருத்தமா இருக்குமா, இருக்காதான்னு தெரிஞ்சுக்க ட்ரையல் பார்க்கற வசதிகளும் வந்தாச்சு. போட்டோவையோ, வீடியோவையோ பார்த்து, ‘அடடா… இது நமக்கு பொருத்தமாவே இல்லையே… வேற ஸ்டைல் பண்ணியிருக்கலாமோ’ன்னு வருத்தப்படற அவசியமும் இல்லை…’’ – சுமன் சொல்கிற தகவல்கள், கல்யாணத்துக்குத் தயாராகிற பெண்களுக்குக் கட்டாயம் உதவும்.
படிய வாரிய கூந்தலையோ, மடித்துக் கட்டிய பின்னலையோ இன்றைய பெண்கள் விரும்புவதே இல்லை. பத்து வயதிலேயே கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங் என பார்லர்களுக்கு படையெடுக்கிறார்கள். விளைவு? முப்பது பிளஸ்சிலேயே முன்னந்தலையில் வழுக்கை, பின்னந்தலை முடியோ எலிவால் மாதிரி மெலிந்து போவது என எல்லாம் வருகிறது. ‘‘கலரிங் ஆகட்டும், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் மாதிரியான விஷயங்களாகட்டும், கெமிக்கல் சிகிச்சைகள் எல்லாமே கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடியவைதான். ஆசைக்காக வாழ்க்கையில ஒரு முறை வேணா அதை ட்ரை பண்ணி அழகு பார்க்கலாம். ஆனா, நிரந்தரமா அதே தோற்றம் வேணும்னு அடிக்கடி கெமிக்கல் சிகிச்சைகளை எடுத்துக்கிறது கூந்தலுக்கு நல்லதில்லை” என்கிறார் அழகுக்கலை நிபுணர் உஷா.
‘‘ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங்னு எந்த சிகிச்சையை செய்யறதுன்னு முடிவெடுத்தாலும், முதல்ல நம்பகமான அழகுக்கலை நிபுணர்கிட்ட ஆலோசனை எடுங்க. உங்க கூந்தலோட தன்மை எப்படிப்பட்டது, அதுக்கு கெமிக்கல் சிகிச்சையைத் தாங்கற அளவுக்கு சக்தி இருக்கா, பக்க விளைவுகள் என்னென்ன… இப்படி எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. சில வகை கெமிக்கல் சிகிச்சைகளுக்கு, அது முடிஞ்ச பிறகான பராமரிப்பும் முக்கியம். அந்தந்த சிகிச்சைக்கேத்த மாதிரியான ஷாம்பு, கண்டிஷனர், சீரம்னு எல்லாத்தையும் முறைப்படி உபயோகிக்கணும். இல்லைன்னா முடி உடையும், வறண்டு போகும், கொட்டும். ‘போஸ்ட் கேர்’னு சொல்லப்படற சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்புக்குத் தயாராகிறவங்க மட்டும் கெமிக்கல் சிகிச்சைகளைப் பத்தி யோசிக்கலாம். மத்தவங்களுக்கு அது நல்லதில்லை…’’ – எச்சரிக்கிறார் உஷா.
‘முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்’ என ஒரு பிரபல வாசகம் உண்டு. முடியில்லா சீமாட்டிகளும் விதம் விதமாக முடியலாம் இன்று.  எப்படி?
‘‘மண்டைப் பகுதி தெரியற மாதிரி கம்மியான முடி உள்ளவங்க, எலி வால் மாதிரி மெலிஞ்சு போன கூந்தல் உடையவங்க, முன்னந்தலையில முடி கொட்டி வழுக்கை விழுந்தவங்க… இப்படி எல்லாருக்கும் இத்தனை நாளா, ‘விக்’ மட்டும்தான் ஒரே தீர்வா இருந்தது. இப்ப ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’ வந்து, பெண்களோட டென்ஷனை விரட்டிடுச்சு…’’ – நல்ல விஷயத்துடன் ஆரம்பிக்கிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா.
‘‘விக், தலை முழுக்க மறைக்கும். கனமா இருக்கும். செயற்கையா தெரியும். எப்படா எடுத்துப் போடப் போறோங்கிற அளவுக்கு இம்சையா இருக்கும். ஹேர் எக்ஸ்டென்ஷன்ல இப்படி எந்தப் பிரச்னைகளும் இருக்காது. சிலருக்கு பின் பக்கம் முடி கம்மியா இருக்கும். பின்னலும் போட முடியாது. போனி டெயிலும் போட முடியாது. பின்பக்க முடியை அடர்த்தியா காட்டற மாதிரி ஹேர் எக்ஸ்டென்ஷன் வைக்கலாம். ஒரு சிலருக்கு முன் பக்கம் மண்டை தெரியற அளவுக்கு முடி கம்மியா இருக்கும். அந்த இடத்தை மட்டும் எக்ஸ்டென்ஷனால மறைக்கலாம். வேற சிலருக்கு ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கும். ஆனா, முடி கொட்டுமேங்கிற பயத்துலயே தவிர்ப்பாங்க.
அவங்களும் எக்ஸ்டென்ஷன் உபயோகிக்கலாம்.  அளவெடுத்து தைக்கிற டிரெஸ் மாதிரிதான் இதுவும். அவங்கவங்க மண்டைப் பகுதியை அளவெடுத்து, அவங்க முடியோட தன்மை, கலர்னு எல்லாத்தையும் மேட்ச் பண்ணி செய்யணும். செயற்கை முடி, ஒரிஜினல் முடின்னு ரெண்டுலயும் பண்ணலாம். நிஜ முடியில பண்றதுன்னா அதை அலசலாம். கலர் மாத்தலாம். செயற்கை முடியில அதெல்லாம் சாத்தியமில்லை. கல்யாணப் பெண்கள்லேருந்து, மாடல்கள், நடிகைகள்னு பலரும் இப்ப ஹேர் எக்ஸ்டென்ஷன் உதவியோடத்தான் நடமாடிக்கிட்டிருக்காங்க’’ என்கிறவர், இதில் ஒரு சதவிகிதம்கூட பக்க விளைவில்லை என்பதை ஹைலைட்டாக சொல்கிறார்.
‘‘3 – 5 கிளிப் இருக்கும். அதை தலையில தேவையான இடத்துல நாமளே பொருத்திக்க வேண்டியதுதான். வெளியிடத்துல உங்க கூந்தலை யாராவது இழுத்துப் பார்த்தாலோ, தொட்டுப் பார்த்தாலோ கையோட வந்துடுமோங்கிற பயமே வேண்டாம். இதைப் பொருத்திக்கிட்டு நீச்சலடிக்கலாம், டான்ஸ் ஆடலாம், விளையாடலாம்… ராத்திரி படுக்கப் போகறதுக்கு முன்னாடி கழட்டி வச்சிட்டு, காலையில கிளம்பற போது, ஹேர் பேன்ட், கிளிப் வச்சுக்கிற மாதிரி, இதையும் வச்சுக்கிட்டு ரெடியாகலாம். அளவு, முடியோட தன்மையைப் பொறுத்து 500 ரூபாய்லேருந்து, 50 ஆயிரம் வரைக்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன் கிடைக்குது’’ என்கிற மேனகா, விருப்பமுள்ளோருக்கு ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்வதில் ஒரு வாரப் பயிற்சியும் அளிக்கிறார்.
The hair is the richest ornament of women
   என்றார் மார்ட்டின் லூதர். இருப்பவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ,
இல்லாதவர்களுக்கு நிச்சயம் புரியும் இந்த உண்மை!

Sunday, May 26, 2013

Fwd: {TamilTafseer} காகித பூங்கா அமைப்போம்



வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ



காகித பூங்கா அமைப்போம் மண்ணரைக்கு பூக்கள் தர


அன்பிற்கினிய இஸ்லாமிய உடன்பிறப்புகளே,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சில தினங்களுக்கு முன்னால் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ஒரு ஊர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் 

ஒன்றும். வழமை போல அழைப்பிதழிலிருந்து சில மணி நேரங்கள் திருமணம் தாமதம். சரி மஸ்ஜிதில் இருக்கும் நேரத்தை நல்ல வகையாக 

கழிக்கலாமே என எண்ணி எதாவது நூல்கள் இருக்கிறதா என்று பள்ளியைசுற்றி வர ஆரம்பித்தேன். அல்லாஹ் அக்பர் அங்கு இருந்த சில வகை 

சவூதியிலே இலவசமாக தரப்பட்ட குர் ஆன்கள் , இன்னும் சில இந்திய குர் ஆன்களும் (மிக பழைய நிலையில் ), தன்னை தொட்டே பல வருடங்கள் 

ஆகுகின்றன என்பதை தன் மீதிருந்த ஒட்டடையாலும், அழுக்குகளாலும் சொல்லிக்கொண்டிருந்தது. 

உலகில் உள்ள அழுக்கு எண்ணங்களையும், மனித இதய அழுக்குகளை நீக்க வந்த உலகப்பொதுமறையில் நிலை அது.

இன்றிலிருந்து எந்த பள்ளிவாசலுக்கு சென்றாலும் அங்கிருக்கும் ஒரு சில குர்ஆன்களை  எடுத்து அதன் தூசுகளை துடைத்துவிட்டு வைத்துவரலாம் 

என்று உறுதி பூணவைத்தது. 

அதோடு முடிந்துவிட்டதா என்றால் இல்லை. 

முழு மஸ்ஜிதையும் சுற்றி முடிந்தாகிவிட்டது. ஆனால் , ஒரு இஸ்லாமிய நூலைக்கூட அங்கு காண முடியவில்லை. 

இன்றைய இஸ்லாமிய பல்கலைகழகங்களின் நிலை இது.

அதுவும் இஸ்லாமியர்கள் பெருவாரியாக செலவ சீமான்களாக வாழும் ஊர் அது.

இந்த மஸ்ஜிதுகள் நபியவர்களின் காலத்தில் அறிவின் கேந்திரங்களாக திகழ்ந்தன.

இன்னும் வாசிப்பே சுவாசிப்பு என்ற மூலமந்திரத்தோடு திருமறையின் முதல் வசனம் சொல்லித்தர, 

அதை தன் புறமுதுகுப்பு பின் காடாசியவர்களாய் இந்த சமுதாயம். 

இஸ்லாமிய உம்மாவின் இடைகால வரலாறு நமக்கு சொல்லித்தருகிற பாடம்.. இஸ்லாத்தை வெற்றி கொள்ள / வேறருக்க புறப்பட்ட கூட்டத்தினர்

பெற்று சென்றதென்னவோ அறிவுக்கருவூலங்களான புத்தகங்களைத்தான். 

சிலர் எடுத்துச்சென்றனர், சில ஆற்றைக்கடக்க பாலங்களாகினார்கள், இவை இருந்தால் மீண்டும் எழுந்து விடும் இந்த சமூகம் என்று தீயிட்டு

 கொழுத்தினர் சிலர். 

அந்த இஸ்லாம் குறித்தான இஸ்லாமிய நூலகளின் நிலைதான் மேலே சொன்னது. 


கடல்கடந்து பொருளீட்டச்சென்றிருக்கும் என் இஸ்லாமிய சகோதரனே.

தயவு கூர்ந்து உங்கள் ஊர்களின் சில இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி மஸ்ஜிதுகளில் வையுங்கள். 

வருகிற ஒருவர் ஒரு செய்தியை படித்து அதை செயல்படுத்தினாலும் ஈடுஇணையில்லா நற்கூலி பெறுவீர்கள் உங்கள் ரப்பிடம். 

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்களின் காட்டிய வழிக்கு உரித்தாக்குவோம் நாம் கப்ருடைய வாழ்வை.

நம் கட்டிய அழகு கோட்டைகளும், சொகுசு வாகனங்களும், C மதிப்பில் இருக்கிற நம் வங்கிக்கணக்குகளாலும் நம் கப்ருக்கு வளங்களை சேர்க்காது.

மாறாக, பெருமானார் பேசுவார்கள்:

ஒருவன் மரணித்த பின்னால் அவனின் எல்லா செயல்களும் அவனிடமிருந்து துண்டிக்கப்பட்டுவிடும்.. ஆனால் அவனின் மூன்று செயல்கள் அவனின்  

மண்ணறைக்கு வந்து கொண்டே இருக்கும். 

1. சதக்கா ஜாரியா (நிலையான தருமம் - அதிலிருந்து தொடராக பயன்பெறப்படுமே அது)

2. பயன் தரும் கல்வி 

நீங்கள் மேல செய்த செயல் இவை இரண்டிலும் அடக்கம். 

நீங்கள் வாங்கி வைக்கும் ஒரு புத்தகம் உங்கள் மண்ணறைக்கு தொடர்ந்து பூத்துக்குலுங்கும் பூக்களை அனுப்பும் என்றால். ஏன் இன்னும் தயக்கம்.


3. தன் பெற்றோருக்கு து ஆ செய்யும் நல்ல குழந்தை. 

நாம் அப்படி வாங்கி வைத்தாலும் நம்மூர் பள்ளிவாசலில் வருவோர் போவோர் எடுத்து சென்று விடுவார்களே என்ற நீங்கள் கேட்கும் கேள்வி காதில் 

விழுத்தான் செய்கிறது. 

என்ன செய்வது சில நேரம் அப்படியும் நடந்துவிடலாம். ஆனால் எல்லா நேரமும் அப்படியே இருக்காது. 

புத்தகத்தை வாங்கி அதன் உள் பகுதியில் 

" இது வக்பு செய்யப்பட்ட பொருள் இதை யாராவது திருடிச்சென்றால் கணக்கு தீர்க்கப்படும் கியாமத் அன்று என்று எழுதி வைத்துவிட வேண்டியது

 தான்"

இதற்கு மேலும் சொறணை இல்லாத ஜென்மம் என்றால்  நாம்மால் என்ன செய்ய முடியும். (நம் வீட்டில் வைத்திருந்தாலும் ஆட்டையை 

போட்டுவிடுவார்கள் )

ஆனால்.... நாம் வைக்கும் எண்ணத்திற்கு கண்டிப்பாக கூலி உண்டு என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை.

நல்ல எண்ணத்தோடு அதற்கு தக்க கூலி உண்டு என்ற எதிர்பார்ப்போடு நாமும் செய்வோம், நண்பர்களை செய்யத்தூண்டுவோம். ஒரே ஊராக 

இருந்தால் கூட்டாக சேர்ந்து மாதம் இரண்டு மூன்று என்று சேர்த்தாலே ஒரு நூலகம் ஆகிவிடும். 

நல்ல செயல்களில், சிந்தைகளில் கூட்டாகிற நிலையை இறைவன் தருவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்


- ஹஸனீ





 




--
You received this message because you are subscribed to the Google Groups "Tamil Tafseer" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamiltafseer+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, May 25, 2013

தந்தையின் சிறப்பு

தந்தையின் சிறப்பு

மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில் ( துணையாசிரியர்: இனிய திசைகள் மாத இதழ் )

தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.

தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.

தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.

"ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள்.  (நூல்: இப்னுமாஜா 3653)

ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.

அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)

ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின்  பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.  (17: 23)

இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள்  பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள்  இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)

ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே  சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய  பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (நூல்: இப்னுமாஜா 2283)

முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)

ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன்  சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.

ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)

ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். "இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளை" என்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.  

மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின்  பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.

ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!

"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

நூ அப்துல் ஹாதி பாகவி M. A.,M.Phil. 

மொழிபெயர்ப்பாளர் 

ரஹ்மத் அறக்கட்டளை 

(நுங்கம்பாக்கம்)

சென்னை 



--
*more articles click*
www.sahabudeen.com