Saturday, April 9, 2016

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!



ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால், நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து, அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவோம். அந்த அளவில் வெளியே அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆகவே பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி நாள் முழுவதும் ஏசியில் இருந்தால், நன்கு குளிர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?
ஆம், ஏசியினால் நல்ல குளிர்ச்சி கிடைத்தாலும், அதனால் பல பிரச்சனைகளை நாம் சந்திப்போம். இங்கு எப்போதும் ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, ஏசியில் அதிகம் இருப்பதை தவிர்த்து, கொஞ்சம் இயற்கை காற்றினையும் சுவாசித்து வாருங்கள்.

நுரையீரல் பாதிப்பு

ஏசியில் இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் நுரையீரல் பாதிப்பு. ஏனெனில் திடீரென்று வெப்பநிலை மாறுவதால், அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சரும பிரச்சனை

அதிக நேரம் ஏசியில் இருந்தால், அது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன், சளி சவ்வுகளிலும் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

சுவாசக் கோளாறு

மற்றொரு பிரச்சனை என்றால், சுத்தமான காற்றினை சுவாசிக்க முடியாமல் போவதுடன், மிகவும் குறைவான காற்று சுழற்சியினால், சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

அலர்ஜி

ஏசி அறையில் சுற்றும் காற்றில் தூசிகள் மற்றும் பூஞ்சைகள் இருப்பதால், அவை அலர்ஜிகளை ஏற்படுத்தி, தும்மலை அதிகரிக்கும்.

எரிச்சல்

ஏசியினால் சருமத்தில் மட்டுமின்றி, தொண்டையிலும் அரிப்புடன் கூடிய எரிச்சல்கள் ஏற்படக்கூடும்.

சளி

ஒரே அறையில் காற்றானது அடைக்கப்பட்டிருப்பதால், ஒருவருக்கு சளி வந்தால், அது மற்றவரை எளிதில் தொற்றக்கூடும். அதிலும் வைரஸ் தொற்றுகள் ஏசி அறையில் எளிதில் பரவக்கூடும்.

கண் பிரச்சனைகள்

ஏசியினால் விழி வெண்படல அழற்சி மற்றும் கண் இமை அழற்சிகள் ஏற்படக்கூடும். அதிலும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கும் இத்தகைய அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வெப்பத்தை தாங்க முடியாது

ஏசியிலேயே அதிக நேரம் இருப்பவர்களால், வெயிலில் சிறிது நேரம் கூட இருக்க முடியாது. அப்படி இருந்தால், சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதுடன், அதிகமாக வியர்க்கவும் செய்யும். அதுமட்டுமின்றி, வைட்டமின் டி குறைபாடுகள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

அதிகப்படியான சோர்வு

எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உள்ளதா? அப்படியானால், அதற்கு காரணம் ஏசி தான். இப்படி அடிக்கடி சோர்வு மற்றும் கடுமையான தலை வலி வந்தால், அதற்கு முக்கிய காரணம் 24 மணிநேரமும் ஏசியில் இருப்பது தான்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42313

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, April 7, 2016

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்
http://pettagum.blogspot.in/2014/06/blog-post_1621.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, April 5, 2016

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!


வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (Bவெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஒனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.. இது யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லாகும்.. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

http://pettagum.blogspot.in/2014/06/blog-post_7.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, April 3, 2016

முக‘வரி’கள் மறைய...

முக'வரி'கள் மறைய...

சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே, தோலில் ஏற்படும் சுருக்கங்கள் 'மூப்பு நெருங்குகிறது' என்பதைச் சொல்லாமல் சொல்லும். இந்தச் சுருக்கங்களைப் போக்க பலரும் பியூட்டி பார்லர், மாற்று மருத்துவ சிகிச்சைகள் எனத் தீவிர முயற்சியில் இறங்குவார்கள். ஆனால், அவர்களின் கவனம் முழுவதும் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதில் இருக்குமே தவிர, கை, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் சுருக்கங்களை பற்றிய அக்கரை இருக்காது. வயதின் மூப்பு, சருமத்தில் எங்கெல்லாம் தெரியும்? வந்த சுருக்கங்களைக் குறைக்கவும், வராமல் தடுக்கவும் என்ன செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ்களைத் தருகிறார் அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.

'நம் தோலில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்கள், தோலுக்கு மிருதுவையும், உறுதித்தன்மையையும் தருகிறது. வயது அதிகரிக்கும்போது புரதங்களின் அளவு உடலில் குறையும். இதன் காரணமாகவே தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. முதலில் உள்ளங்கையின் மேற்புறத்தில்தான் சுருக்கங்கள் தோன்றும். ஏனெனில், இந்தப் பகுதியில்தான் நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிறகுதான் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் தெரியும்.

பொதுவாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சுருக்கங்கள் அதிகம் வருவது இல்லை. வறண்ட தோல் உடையவர்களுக்கு கொலாஜென்  குறைபாட்டால், விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.
35 முதல் 40 வயதுடையவர்களுக்கு சுருக்கம் ஏற்பட்டால், அது இயற்கையாக வயது அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஆனால் 25 முதல் 30 வயதுடைய வர்களுக்கு சுருக்கம் ஏற்படுமானால், அவர்களின் வாழ்க்கைமுறையிலோ, உணவுப் பழக்கத்திலோ பிரச்னைகள் அல்லது மரபு சார்ந்த பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது.

புகைபிடித்தல், சோப் மற்றும் க்ரீம்களை அடிக்கடி மாற்றுதல், சருமத்தில் சூரிய ஒளி அதிகம் படுதல், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மற்றும் நம் முக பாவனைகளும்கூட சுருக்கங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. மேலும், சிலர் தூங்குவதற்கு முன்பு, முகத்தில் க்ரீம்கள், முல்தானி மட்டி, சந்தனம்  என ஏதேனும் பூசிக்கொண்டு படுப்பார்கள். எந்த ஒரு பொருளையும் முகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இதனால், தோல் வறண்டு, அச்சுப் பதிந்து சுருக்கங்கள் ஏற்பட்டு விடும்.

சரும சுருக்கங்களைப் போக்க மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் இருந்தாலும், அவற்றுக்கான கட்டணம் அதிகம். பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். எனவே, சுருக்கங்கள் வந்தவுடன் அதைப் போக்க முயற்சி எடுப்பதைவிட, வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும், என்றும் இளமையாக இருக்கலாம்!' என்கிறார் ஹசீனா.

சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்..
பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும்.
 வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 இளமையை தக்க வைக்க, மீனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மீனில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்கும். 'காட் லிவர் ஆயில்' தோலில் எண்ணெய் சத்தை அதிகரிக்கும்.
 வாரம் ஒரு முறை, குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெய் எடுத்து கை, கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு, சுருக்கங்களைத் தடுக்கும்.
 தயிர், சுருக்கங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படும். கழுத்து மற்றும் கைகளில் தயிரைத் தடவிக் கழுவுவதைத் தொடர்ந்து செய்து வந்தால் சுருக்கங்கள் வராது.
 வெயிலில் வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன், குளிர் காலத்தில் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்தலாம். அதுவும் சருமத்துக்கு ஏற்ற எஸ்பிஎஃப் அளவை பார்த்து க்ரீம்கள் வாங்க வேண்டும்.
 முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆயில் புல்லிங் செய்யலாம்.
 வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும்கூட சருமத்தில் முதுமையை நெருங்கவிடாது.  
 மூளையையும் மனதையும் எவ்வளவு ரிலாக்ஸ்டாக வைத்திருக்கிறோமோ அதே அளவு நம் உடலும் தோலும் சிறப்பாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம், யோக முத்திரைகள் போன்ற பயிற்சிகளைச் செய்வது அவசியம்.
http://pettagum.blogspot.in/2014/06/blog-post_9721.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, April 1, 2016

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!

உயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்!

உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை, என்ற பெருவாரியாகப் பரவும் நோய், இன்றைய உலகில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வாழ்க்கை முறையின் அங்கமாக திகழும் துரித உணவு, சோடா, மன அழுத்தம் இந்திய மக்களையும் கவ்வ ஆரம்பித்து விட்டது. இதன் விளைவு, மூன்றில் ஒரு இந்தியன் கூடுதல் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்கிறது கணக்கு. இந்த நோயினால் இதய நோய்கள், வாத நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் கூட தாக்க வாய்ப்புள்ளது.

இந்த நோய் குணமாக மருத்துவ துறையின் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பது இனியும் நல்லதல்ல என்று அறிவுரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் விரைவில் குணமாகக்கூடியது அல்ல என்பதற்கு உதாரணம், மார்கெட்டில் கிடைக்கும் ஏராளமான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், அதுவும் வித விதமாக. ஆனால் ஒரு சில இயற்கை வழியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே, அந்த உயர் இரத்த அழுத்த நோயை குணப்படுத்த முடியும். அவை என்னவென்று இங்கே காணலாமா?

பூண்டு
இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரவள்ளி
ஆய்வு அறிக்கையின்படி, கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக் காய்
முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்
நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முள்ளங்கி
இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

எள்
சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

ஆளி விதை
ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

ஏலக்காய்
உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.

வெங்காயம்
வெங்காயத்தில் குவர்செட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், அவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் மற்றும் வாதத்திலிருந்து காப்பாற்றும்.

லவங்கப்பட்டை
லவங்கப்பட்டை இதய நோய்கள் தவிர சர்க்கரை நோயையும் தடுக்கும். ஓஹியோவிலுள்ள செயல்முறை உடல் நலம் அறிவியல் மையம் நடத்திய ஆய்வின்படி, 22 நபர்களில் 11 பேருக்கு தினமும் தண்ணீரில் லவங்கப்பட்டை பொடி 250 மி.கி. அளவில் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆறுதல் மருந்து மட்டுமே அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் லவங்கப்பட்டை கலந்த தண்ணீர் அருந்தியவர்களுக்கு 13 முதல் 23 விழுக்காடு வரை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு கூடியது. மேலும் உயர் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது

http://pettagum.blogspot.in/2014/06/10.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, March 29, 2016

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தமிழில்: Mufti
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை)
அழகிய முகமன்
  • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
  • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.
  • வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
  • நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
  • தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
  • மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.
நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்
  • மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.
  • நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.
விளையாட்டும் கவன ஈர்ப்பும்
  • நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.
  • ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.
  • இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை…) பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
  • இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா, ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ
  • வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
  • கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
இனியவளின் ஆலோசனை
  • குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.
  • அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)
  • மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.
  • மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.
  • ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.
பிறரைக் காணச் செல்லும்பொழுது
  • மார்க்கத்தில்/பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).
  • அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.
  • அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.
உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது
  • மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.
  • உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.
  • நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.
  • குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.
  • நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு, உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).
  • முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.
  • திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.
  • எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
  • பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.
பொருளாதார உதவி
  • கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக, கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது).
  • அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.
அழகும் நறுமணமும்
  • நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.
  • எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.
  • அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.
தாம்பத்யம்
  • மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).
  • பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.
  • இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).
  • காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
  • அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.
  • அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.
  • மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).
  • பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.
  • மனைவிக்கு விருப்பமற்ற, கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப் பாதுகாத்தல்
  • படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது
  • தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.
  • உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.
  • காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.
  • இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.
  • ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
  • மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.
  • அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.
  • உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.
  • அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.
  • பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.
  • உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
இஸ்லாமியப் பயிற்சி
கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

  • இஸ்லாத்தின் அடிப்படை
  • அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
  • படித்தல் மற்றும் எழுதுதல்
  • இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
  • பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
  • வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.
மேன்மையான அக்கறை
  • வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.
  • மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).
  • அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது. (உதாரணமாக, அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்).
  • அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)
  • நீங்கள் அருகில் இல்லாததால், தொலைப்பேசிக்கு பதில் அளித்ததற்காக கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)
பொறுமையும் சாந்தமும்
  • மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன).  அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.
  • இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும்.  (உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை).
  • உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைத் திருத்துதல்
  • முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.
  • அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக, படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.
  • அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).
  • மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
  • குர்ஆனில் (4-வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.
  • காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.
  • செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.
மன்னிப்பும் கண்டிப்பும்
  • பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.
  • உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.
  • தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).
  • எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).
  • சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.
  • தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.
  • அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
  • பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.
  • மனைவிமீது கோபம் ஏற்பட்டால், உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.
(உங்கள் இல்லறம் இனிமையாகத் தொடர நல்வாழ்த்துகள்!)
http://www.islamkalvi.com/portal/?p=5003


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, March 27, 2016

அத்திப் பழம்

பாட்டி வைத்தியம் என்றால் பலனில்லாமல் போகாது. அதே சமயம் எந்த பக்க விளைவுகளும் இருக்காது. அத்திப் பழ ரகசியங்களைக் கூறுவதற்காக நெடுநாட்களுக்குப் பின், இதோ வந்துவிட்டாள் உமையாள் பாட்டி! கொல்லப்புற ரகசியங்களில் அத்தியின் தகவல்களை புட்டு புட்டு வைக்கிறாள் இந்த மூதாட்டி.

"என்ன பாட்டி எங்க போனீங்க?! ஆளப் பாக்குறது அத்திப் பூத்தாப்போல இருக்கே?!" என்றேன். அப்படிச் சொன்னவுடன், ஏதோ ஞானியைப் போல சிரித்த பாட்டி, "அத்தி ஒன்னும் அபூர்வமா பூக்காதுடா. அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும்." என்றாள்.

சாவகாசமாக ஆடி அசைந்து சென்று பாட்டி ஆசனத்தில் அமர்ந்த பாட்டி, வெற்றிலையை குதப்பியவாறே அத்தியைப் பற்றி அதுவரை நான் அறியாத பல தகவல்களை தொடர்ந்து சொல்லலானாள்.

அத்திப் பிஞ்ச சமைச்சு சாபிட்டேன்னா மூலக்கடுப்பு அண்டாது

"அத்திப் பிஞ்ச சமைச்சு சாபிட்டேன்னா மூலக்கடுப்பு அண்டாது; அதுமட்டுமில்லாம வயிற்றுக் கடுப்பும் இரத்த மூலமும் காணாமப் போகும். அத்திப் பழம் ஒன்னும் லேசுப்பட்டது இல்ல, அத்திப் பழத்த மணப்பாகு செஞ்சும் காய வச்சு பொடியாக்கி சூரணமாவும் சாப்பிடலாம்."

"சரி..! அதுனால என்ன பலன் கிடைக்கும்"

"ம்… அப்புடி கேளு! இருதயத்த பலப்படுத்தி, இரத்தவிருத்தி செய்யும். அத்திப் பட்டையை பசும் மோர்விட்டு இடிச்சு பிழிஞ்சு சாறெடுத்து நிதமும் 3 முறை 20ml அளவு கொடுக்க பெரும்பாடு நின்னுடும்." எனக் கூறிய பாட்டி, கண்ஜாடையில் அருகில் அழைத்தாள், "என்ன பாட்டி?!" என்று ரகசியம் ஏதும் கூறப்போகிறாள் என நினைத்து காதைக் கூர்மையாக்கி அருகில் சென்றேன்.

"கள் சாப்பிட்டிருக்கியா?" என்றாள் ஒரு குறும்புச் சிரிப்புடன்.

"அய்யோ… அந்த வாடையே ஆகாது பாட்டி. நான் ரொம்ப ஆச்சாரம்" என்றேன். "டேய் எல்லாம் தெரியும்டா நேக்கு! நான் சொன்னது அத்தி மர வேரிலிருந்து எடுக்குற கள்ளுடா. அந்தக் கள்ளோட சக்கரை சேர்த்து சாப்பிட்டா பித்தம் தணியும்டா" என்று சொல்லி அசர வைத்தாள்.

அத்திப் பழத்தில பொட்டாசிய சத்து அதிகம். அதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுது. நார்ச் சத்தும் அதிகமுள்ளதால உடல்பருமன குறைக்குது.

அசந்து நின்ற என்னிடம் தொடர்ந்து அடுக்கினாள் இப்படி, "அத்திப் பழத்தில பொட்டாசிய சத்து அதிகம். அதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுது. நார்ச் சத்தும் அதிகமுள்ளதால உடல்பருமன குறைக்குது. அதோட கால்சியம் சத்தும் அதிகமிருப்பதால எலும்பு திடமாகவும் இருக்க உதவுது. அப்புறம்… அத்தி இலை இருக்குதில்ல?!"

"ஆமா பாட்டி இருக்குது!"

"ஆங்… அந்த அத்தி இலைச் சாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துது. சிலவகை புற்று நோய்கள தடுக்குதுனு கூட கண்டுபிடிச்சிருக்காங்க. அப்புறம் என்னமாதிரி வயசானவா இருக்கா இல்லயா!, அவங்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள தடுக்குது; சிறந்த ஆன்டி ஆக்சிடென்டா (anti oxidant) செயல்படுது."

"பாட்டி… பாட்டி… பாட்டி…!" அவள் சொன்ன வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கொஞ்சம் நிறுத்தினேன்.

"இந்த 'கூகுல் கீகுல்'னு எதோ சொல்றாளே. அதுல போய் உக்காந்து ஆற அமர பாருடா! அதுல நெறைய தகவல் இருக்கும். ஆனா இந்தப் பாட்டி கிட்டதான் தகவலோட உண்மையான அக்கறையும் இருக்கும்" என்று சொல்லி விட்டு, ஓடிவந்த பேரப் பிள்ளைகளை மடியில் கிடத்திக் கொண்டாள் உமையாள் பாட்டி.

அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்)

(1 பழம் = 50gm)
(% சராசரி தினப்படி சத்து)
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%

•அத்தியில் ஆக்ஸலேட் உப்பு உள்ளதால் சிறுநீரக கல் உள்ளவர்கள் அத்தி பழத்தை தவிர்த்தல் நலம்.

•அத்தி பழத்தை காயவைத்து மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அத்தி பழம் ஜாம் செய்தும், அத்திப்பழ டானிக் செய்தும் அருந்தலாம்.

•அத்திபழத்தில் chlorogenic acid உள்ளதால் BP & DM கட்டுப்படுத்துகிறது

•அத்தி பழமானது சாலட், கேக், ஐஸ்கிரீம், சான்ட்விச், ஸ்வீட், சூப் இவை தயாரிப்பதில் பயன்படுகிறது.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42158

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, March 25, 2016

வீட்டு/சமையல் குறிப்புகள்

  1. புடவையில் வைத்து தைக்கும் சின்ன கலர் ஜமுக்கியை ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து  முழுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக  வைக்கலாம். அல்லது கண்ணாடி அலமாரியிலும் வைக்கலாம். பார்பதற்கு அழகாக இருக்கும்.
  2. சமைப்பதற்க்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
  3. நகைகளில் உள்ள அழுக்கை எடுக்க ஒரு தேக்கரண்டி உப்பை நீரில் கலந்து அதில் நகைகளை போட்டு சிறிது நேரம் ஊற விடவும். பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால்  நகைகளில் உள்ள அழுக்குகள் போய் விடும்.
  4. ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது.
  5. முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும்.
  6. எவர்சில்வர் பாத்திரத்தில் இருக்கும் கரையை போக்க கரை இருக்கும் இடத்தில் சிறிது புளி வைத்து தேய்த்து கழுவினால் கறை போய் விடும்.
  7. முகம் பார்க்கும் கண்ணாடியை பழைய நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று ஆகிவிடும்.
  8. டைல்ஸ்க்கு இடையில் இருக்கும் அழுக்கை போக்க பிளீச்சிங் பவுடர் சிறிது எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி பட்ஸ் கொண்டு அழுக்கு இருக்கும் இடங்களில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து பிறகு துடைத்தால் பளிச்சென்று ஆகி விடும். டைல்ஸ்சையும் இதே முறையில் சுத்தப்படுத்தலாம்.
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
  10. நாம் தினமும் உபயோகிக்கும் பாத்திரங்களை சோப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் பளிசசென்று ஆகி விடும்.
  11. சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.
  12. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.
  13. வெண்டைக்காயயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும்.
  14. பூண்டின் தோலை சுலபமாக உரிக்க அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை ஆப் பண்ணி விட்டு தேவையான பூண்டு பற்களை போட்டு கிளறி மூடி வைத்து விடவும். 10 நிமிடம் ஆனதும் எடுத்து உரித்தால் சுலபமாக தோல் வந்து விடும். 
  15. பிரிஜ்ஜை சுத்தப்படுத்த 1/2 தேக்கரண்டி பற்பசையை எடுத்து தண்ணீரில் கலக்கி மெல்லிய காட்டன் துணியால் துடைத்து பின்னர் வெறும் தண்ணீரில் துடைத்தால் பிரிஜ் பளிச்சென்று ஆகி விடும்.
  16. ரவா தோசை சுடும் போது மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.
  17. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
  18. தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும்.
  19. ஒரு கைப்பிடி சாதத்தை மிக்ஸ்சியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து அவித்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
  20. காப்பி பில்டரில் அடிப்பாகத்தில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொண்டால் காஸ் அடுப்பை ஆன் பண்ணி சிம்மில் வைத்து பில்டரை இடுக்கியால் பிடித்து பர்னருக்கு மேல் காட்டினால் அடைத்துக் கொண்டிருக்கும் தூள்கள் விழுந்து விடும்.
  21. பிரியாணி சமைப்பதற்கு எப்போதும் புதிதாக அரைத்த இஞ்சி பூண்டு விழுதை உபயோகித்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.
  22. மோர்க்குழம்பு செய்யும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி குழம்பில் சேர்த்தால் நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.
  23. பால் இளஞ்சூட்டோடு இருக்கும் போது உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக உறையும்.
  24. ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
  25. வீட்டில் ஒரு பத்தி ஸ்டாண்ட் அதிகமாக இருந்தால் அதன் துவாரங்களில் சிறிய கலர் பூக்களை வைத்து சாமி படம் முன் வைக்கலாம்.                                                     
  26. மிளகாய் வத்தலை மிக்ஸ்சியில் தூள் செய்யும் போது சிறிது கல் உப்பை சேர்த்து திரித்தால் நன்கு தூளாகி விடும். 
  27. பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி கார்ன் ப்ளோர் (சோள மாவு) சேர்த்து செய்தால் பூரி மிருதுவாக இருக்கும்
http://pettagum.blogspot.in/2014/04/blog-post_7013.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com