Wednesday, May 30, 2012

குழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்

குழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்

 

. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.

3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.

4. நூலகத்திற்கு அடிக்கடி கூட்டிச் செல்லுங்கள். அங்கிருந்து புத்தகம் எடுத்து வீட்டில் படித்துவிட்டு திரும்ப ஒப்படைக்கும் முறைக்கு பழக்கப்படுத்துங்கள்.

5. தினமும் சிறிது நேரமாவது குழந்தையுடன் அமர்ந்து நீங்களும் படியுங்கள்.

6. குழந்தை உடைகளைத் தானே அணிந்துகொள்ள தேவையான நேரத்தை அளியுங்கள்.

7. தேவையான நேரம் உறக்கம் கொள்ள அனுமதியுங்கள்.

8. குழந்தைகளுக்குத் தனியான ஒரு அலமாரி ஒதுக்குங்கள். அவர்களது பொருட்களை அங்கு வைத்து பராமரிக்கப் பழக்குங்கள்.

9. குழந்தையின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்துகொள்ள வலியுறுத்துங்கள்.

10. வீட்டில் சிறு தோட்டத்தை அவர்களுக்காக கொடுங்கள் அல்லது சில தொட்டிச் செடிகளையாவது கொடுங்கள். செடிகளை வளர்த்து அனுபவம் பெறட்டும்.

11. தினமும் குழந்தைகளுடன் சிறு நடை (walking) செல்லுங்கள். அவர்கள் வேகத்துக்கு மெதுவாக நடக்கவேண்டும். அப்பொழுது சுற்றியுள்ள விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே செல்லுங்கள்.

12. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

13. குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் நீங்களும் உடன் பாருங்கள். பின் என்ன பார்த்தீர்கள் என்பது பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.

14. வீட்டில் ஒவ்வொரு பொருளையும் எங்கு வைக்க வேண்டும் என பழக்குங்கள்.

15. அடிக்கடி குழந்தைகளைக் கொஞ்சுங்கள்.

 


--
*more articles click*
www.sahabudeen.com



நீங்கள் எந்த வகை?

நீங்கள் எந்த வகை?

'எம்புள்ள நல்லவனா, வல்லவனா வளரணும்!' என்பதுதான் இங்கு எல்லா பெற்றோர்களின் பொது விருப்பமும்! ஆனால், அதற்கான சரியான சூழ்நிலையை, மனநிலையை எத்தனை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பதற்கான விடை, திருப்திகரமானதாக இல்லை!

''ஏன்... நல்ல ஸ்கூல், கம்ப்யூட்டர், கராத்தே, டிரெஸ், டூர்னு என்ன குறை வச்சோம் அவங்களுக்கு...?" என்று பொங்கும் பெற்றோர்களிடம்,
 

''நீங்க அவங்களுக்கு என்னல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கீங்கனு 'மெட்டீரியலிஸ்டிக்'-ஆ பட்டியல் போடாம, நீங்க அவங்ககிட்ட எவ்வளவு தூரம் புரிதலோட நடந்திருக்கீங்கறதை யோசிச்சுப் பாருங்க. குறிப்பா, பருவ வயதுப் பிள்ளைங்ககிட்ட..." என்று சொல்லும் சென்னை, 'போதி' கவுன்சிலிங் நிறுவனத்தின் மனநல ஆலோசகர் பாரதி ராஜ்மோகன், டீன் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அந்த மனவித்தையைப் பற்றிப் பேசினார்!

''பெற்றோர்களில் நான்கு வகையுண்டு. பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் 'சரி' சொல்லும் சப்மிஸ்ஸிவ் பேரன்ட் (Submissive Pஅரென்
ட்),
 

பிள்ளைகளை தங்களின் விருப்பங்களுக்கு அடிபணிய வைக்கும் அரகன்ட் பேரன்ட் (Arrogant Parenட்),
 

பிள்ளைகளின் விருப்பத்துக்கும் இடம் தரும் சப்போர்ட்டிவ் பேரன்ட் (supportive pareந்ட்)

அதெல்லாம் உனக்குத் தெரியாது' என்று ஒதுக்காமல், எல்லாவற்றிலும் பிள்ளைகளை முழுமையாக ஈடுபட வைத்து, அவர்களின் முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் டைரக்ட்டிவ் பேரன்ட் (Directive Parenட்).
 

இதில் 'டைரக்ட்டிவ் பேரன்ட்'-ஆக இருப்பதுதான், டீன் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை தன்னிச்சையான, அதேசமயம் சரியான முடிவெடுக்கும் மனிதர்களாக உருவாக்கும்!

இந்த காலப் பிள்ளைகள் விரும்புவது மரியாதைக்குரிய பெற்றோரை அல்ல, ஃப்ரெண்ட்லியான பெற்றோரை. அப்படியிருக்கும் பெற்றோர்களிடம்தான் அவர்கள் பயம், தயக்கங்கள் இன்றி தங்களின் பட்டாம்பூச்சி வயது நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்'' என்று சொன்ன பாரதி,

"வீட்டுக்குப் புதிதாக நண்பர், தூரத்து உறவினர், தெரிந்தவர்கள் என்று யாராவது ஒருவரை அம்மா அல்லது அப்பா அழைத்து வரும்போது, அவர்களைப் பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். 90 சதவிகிதம் பேர் நல்லவர்களாக இருக்கலாம். மீதி 10 சதவிகிதத்தைப் பற்றி நமக்குத் தெரியாதே! அப்படிப்பட்டவர்களால் சமயங்களில் விபரீதமாக ஏதாவது நடக்கும்போது... 'அன்னிக்கு வந்தாரே' என்று குழந்தைகள் ஈஸியாக அடையாளம் காட்டுவதற்கு வசதியாக இருக்கும். நடை, உடையில் தவறான நபராக தெரிந்தால், 'அந்த அங்கிளை இனிமே வீட்டுக்கு வரச் சொல்லாதப்பா' என்றுகூட தைரியமாக குழந்தைகள் சொல்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும்'' என்று உருப்படியான சில உஷார் டிப்ஸ்களையும் தந்தார்!

 


--
*more articles click*
www.sahabudeen.com



குழந்தை சாப்பிட மறுப்பதற்கு...

குழந்தை சாப்பிட மறுப்பதற்கு...

இன்றைக்கு பெரும்பாலான வீட்டின் பெற்றோர்கள் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று "குழந்தை சாப்பிட மறுக்கிறது டாக்டர், எவ்வளவுதான் திட்டி, அடிச்சாலும், அல்லது பாராட்டி, வீதிக்கு சென்று ஊட்டினாலும் சாப்பிட மறுக்கிறது. இதற்காக நாங்கள் கஷ்டப்படுகிறோம். ஏதாவது பசி எடுக்கிற மாதிரி மருந்து கொடுங்கள்" என்கின்றனர். 

பொதுவாக குழந்தை வளரும் பருவத்தில் உடல்நலமும் மனநலமும் பெற்றிருந்தால்தான், பிற்கால வாழ்க்கை மகிழ்ச்சியும் பயனும் நிறைந்ததாக இருக்கும். மாறாக குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படின் அது மனநலத்தை அப்பருவத்திலும் பிற்கால வாழ்க்கையிலும் வெகுவாகப் பாதிக்கிறது. இதைப் பெற்றோரும் மற்றோரும் அவர்களது அனுபவங்கள் வாயிலாக அறியலாம்.
 

இத்தகைய பாதிப்புகள் அன்றாடச் செயல் குறைபாடுகள், நடத்தைக் குறைபாடுகள், இசைவின்மைப் பழக்கங்கள், என்று கொண்டு செல்லும் என்கிறார். தமிழ்நாடு மாநில மனநல சங்கத்தின் தலைவர் எஸ்.எம். பதூர் மொய்தீன் அவர் மேலும் கூறியதாவது:-
 

உணவு உண்பதில் சில குழந்தையிடம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை இருவகைப்படும். அவை உண்ணமறுப்பது, அளவுக்கதிகமாக உண்பது.
 

உடல்நோய் ஏதுமில்லாமல் இருக்கும்போது குழந்தை உணவு உண்ண மறுத்தால் நிச்சயமாக மனம் சம்பந்தப்பட்ட காரணமாகத்தான் அது இருக்க முடியும்.
 

பெரும்பாலும் இதற்கடிப்படையானது, பெற்றோர் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொண்டுள்ள கோட்பாடுகளும் குழந்தைகளைக் கையாளும் முறைகளுமேயாகும். பசியின்மை என்று சொல்லுவதற்கும், உண்ண மறுப்பதற்கும் முக்கிய காரணங்கள், கவன ஈர்ப்பு, எதிர்ப்பு மனப்பான்மை, பகற்கனவு, பயம், பதற்றம், பெற்றோரின் மனோபாவம்.
 

கவன ஈர்ப்பு என்பது பெற்றோரின் கவனத்தை உண்ண மறுப்பதின் மூலம் ஈர்க்க எண்ணுவது அல்லது இதன் மூலமாகப் பெற்றோரையும் மற்றோரையும் தன் வசப்படுத்த நினைப்பதேயாகும். உண்ண மறுப்பது மறைமுகமாகத் தனது எதிர்ப்பு மனப்பான்மையை காட்டுவதேயாகும். இரண்டு வயதில் இருந்து மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் இது மிகவும் சாதாரணம். இதனால்தான் இப்பருவம் எதிர்ப்பு பருவம் எனக்கூறப்படுகிறது.
 

பகற்கனவு என்பது குழந்தை தனியாக அமர்ந்து கொண்டு ஏதாவது ஒன்றைப் பற்றி மிகப்பிரமாதமாகக் கற்பனையில் மூழ்குவதாகும். பயம், பதற்றம், கவலை அல்லது பெற்றோரின் மனோபாவத்தைப் பொறுத்தும் குழந்தை உணவு உண்ண மறுக்கலாம். குழந்தையை கேலி செய்தல், அதிக அளவில் செல்லம் கொடுத்தல், எதற்கெடுத்தாலும் பயமுறுத்துதல், எதிர்ப்புத் தெரிவித்தல் போன்ற காரணங்களால் குழந்தைக்கும் பெற்றோருக்கும் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் உருவாகின்றன.
 

எவ்வளவுக் கெவ்வளவு மன இறுக்கமும், உணர்ச்சியும் மிகுந்தவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகளைப் பெற்றோர்கள் மிகவும் கவனமாக கையாளவேண்டும். உணவளிக்கும் போது குழந்தையை அடித்தோ பயமுறுத்தியோ, அழவைத்து சாப்பிட வைக்கக்கூடாது. அதன் போக்கில் விட்டு சாப்பிட வைக்கவேண்டும்.
 

குழந்தைக்கு ஏதாவது மனக்கஷ்டமோ, பிரச்சினைகளோ இருப்பின் அவைகளை அறிந்து மனநல மருத்துவர் துணையோடு பெற்றோர்கள் கையாண்டால் இப்பிரச்சினைக்கு மிக எளிதில் தீர்வு கண்டு விடலாம் என்கிறார் மருத்துவர் எஸ்.எம். பதூர் மொய்தீன்.

எப்போதும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடுங்க, அது அவர்களை நல்லவர்கள் ஆக்கும் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி முடிவு. 

குழந்தைகளின் வளர்ச்சியில் குறுக்கிடும் குடும்பங்களின் பழக்க வழக்கங்கள் பற்றி அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதன் முடிவில் கூறிய அம்சங்கள்:
 

பெற்றோர் எப்போதும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். அதனால், குடும்பப் பின்னணியைக் குழந்தைகள் அறிந்து கொள்ள வழி ஏற்படும். அதன்மூலம் அதிக தன்னம்பிக்கை, அடுத்தவருடன் பேசும் முறை, நட்பை வெளிப்படுத்தும் திறன், பல்வேறு கருத்துகளைச் சகித்துக் கொள்ளும் தன்மை ஆகியவற்றைக் குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். சேர்ந்து சாப்பிடுவதால் குடும்பப் பாசம், விட்டுக் கொடுக்கும் தன்மை, உதவும் குணம் ஆகியவை அதிகரிக்கும்.
 

அதேபோல, குடும்பத்தில் ஏற்படும் இறப்பு, நெருக்கடி போன்ற எதிர்மறை விளைவுகளைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மனம் திறந்து விவாதிப்பதால் உணர்ச்சி கரமான சூழலைக் கையாளும் திறனைக் குழந்தைகள் பெறமுடியும். மொத்தத்தில் பெற்றோரின் நெருக்கம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் நல்லவர்களாக உருவாவது நிச்சயம்.

 


--
*more articles click*
www.sahabudeen.com



அருட்கொடையாம் தொழுகை

அருட்கொடையாம் தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி

உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்

இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற

உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது

நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.

 


--
*more articles click*
www.sahabudeen.com



Tuesday, May 29, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!
  
  
* பன்னீர்ப் பூ இரவில் மலரும்.
 

* கார்த்திகைப் பூ என்றழைக்கப்படுவது காந்தள் மலர். 

* இரு குரங்கின் கை எனப்படுவது முசுமுசுக்கை. 

* உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள். 

* உலகின் மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் ùஸகோயா பூங்காவில் உள்ள ஷெர்மன் மரம். 

*உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கூடம் நம் இந்தியாவில் தான் இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்ள சிட்டி மாண்டிசேரி பள்ளிதான் உலகிலேயே மிகப் பெரிய பள்ளி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில், சுமார் 22,612 மாணவர்கள் பயில்கின்றனர். 

*ஒட்டகத்துக்கு மூன்று இரைப்பைகள் உள்ளன. 

* பெயர்கள் பற்றிய படிப்புக்கு ஓனோமாஸ்டிக் என்று பெயர். 

* இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி. 

* தங்கம் அதிகளவில் வெட்டி எடுக்கப்படும் நாடு தென்னாப்ரிக்கா. 

* உலகின் மிகப் பெரிய பாலைவனம் சகாரா பாலைவனம். 90 லட்சம் சதுர பரப்பளவு கொண்டது இந்தப் பாலைவனம். 

* சாதாரணமாக ஒரு பல்ப்பின் ஆயுள்காலம் 3,000 மணி நேரம் ஆகும். 

* சிலந்திப் பூச்சிகளில் குண்டு வீசும் வண்டு என்ற ஒரு வகை வண்டு உண்டு. இவ்வண்டுகளின் வயிற்று அடிப்பாகத்தில் சிறிய சுரப்பி உண்டு. இந்தச் சுரப்பியில் உள்ள ஒரு வகை திரவமும் வெடிக்கம் தன்மை கொண்டது. அதனால் இதற்கு இப்பெயர் வந்தது. 

* டென்னிஸ் மட்டைகள் மகாகனி, சிக்மோர், பீச் ஆகிய மூன்றுவித மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 

* நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கணினி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா ஆகும். 

* ஆஸ்ட்ரிச் என்னும் பறவை கல்லை தின்னும் தன்மை உடையது. 

* உராங் உடான் என்ற குரங்கினத்தை "கானகத்தில் கிழவன்' என்று மலேசிய மக்கள் அழைக்கின்றனர். 

* ஒரே கவிஞர் இரு நாடுகளுக்குத் தேசிய கீதம் எழுதிய பெருமையைப் பெற்றவர் ரவீந்தரநாத் தாகூர். இவர் இந்தியா மற்றும் வங்கதேசத் தேசிய கீதங்களை எழுதியுள்ளார். 

* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும். 

* ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும். 

* பாரி, ஆய் அண்டிரான், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடையேழு வள்ளல்கள் ஆவர். 

* தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாமல் இருப்பது போலவே, திருக்கோட்டியூர் மாதவன் கோயில் கோபுரத்தின் நிழலும் கீழே விழுவதில்லை.

* கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி இராமநாதபுரத்திலுள்ள நாட்டரசன் கோட்டையில் உள்ளது. 

* சீதையின் தந்தை பெயர் ஜனகர். தாயின் பெயர் சுநயனீ. 

* துப்பாக்கியை ஏமப்பூட்டு, துமிக்கி என்றும், பீரங்கியை குண்டு குழாய் என்றும், ரிவால்வரை சுழலி என்றும் அழகிய தமிழ்ப் பெயர்கள் சூட்டி அழைத்தவர் தேவநேயப் பாவாணர். 

மாமிசம் உண்ணும் தாவரம் இந்த பிட்சர் தாவரம். சிறு பூச்சிகளைப் பிடித்து தின்னும். இந்தத் தாவரம் ஆசியாவில் உள்ளது. பிட்சர் தாவரத்தின் இலைகள் ஜாடி போல் வளைந்து காணப்படும். இது மிகவும் இனிப்பான சாறு ஒன்றை சுரக்கும். இந்தச் சுவை மிகுந்த சாறை குடிக்கச் செல்லும் பூச்சிகள், இந்த ஜாடிக்குள் மாட்டிக் கொள்ளும். ஜாடியின் அடியில் ஜீரணம் செய்யும் அமிலங்கள் சுரக்கும். 
 அங்கே அப்படியே இந்தப் பூவினால் விழுங்கப்பட்டு விடும் பூச்சிகள். அய்யோ பாவம்! 

Engr.Sulthan

 


--
*more articles click*
www.sahabudeen.com



குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்


* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
* சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
* குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
* மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
* குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
* குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
* கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
* ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
* கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
* பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
* வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
* மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
* மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
* இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
* சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.
* சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.
* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
* சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
* ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
* எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..
* வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.
* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
* குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
* துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.
* குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.{niftybox}

Monday, May 28, 2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 26/05/2012

ஜாங்கிரி.. பூங்கிரி.. டோங்கிரி.., 26/05/2012

ஹிட்டு:

மத்திய அரசு என்கிற மன்னாரன் கம்பெனில பாதி ஷேர் வச்சுருக்கற மம்தாபானர்ஜி அறிவிச்சுட்டாங்க போராட்டம்………….

மத்திய அரசுல கால்வாசி ஷேர் வச்சுருக்கர கலிஞரும் அறிவிச்சுட்டாருபோராட்டாம்……….

மக்களே ஒழுங்கு மரியாதையா………கேக்குற காச குடுத்து பெட்ரோல்போட்டுக்கிட்டு போயிக்கிட்டே இருங்க………..இல்ல அடுத்ததா மன்னுமோகனும்,பன்னியாஜியும் போராட்டம் அறிவிச்சா நீங்கல்லாம் தாங்க மாட்டீங்க…………….

அப்டேட்டு:

இன்னைக்கு ரிசர்வ் பேங்கு ஓனரு வேற ஏதோ புதுசா ஐடியாகுடுத்துருக்காருன்னு எனக்கு நீயூஸ் வந்துருக்கு………..

பெட்ரோல் விலை ஏத்துனதுல மக்கள் எல்லாம் செம காண்டானதுல சூடுஜாஸ்தியாயி படுத்த படுக்கையா எமர்ஜென்சி வார்டுல இருந்த இந்தியாவோடபொருளாதாரம் எந்திருச்சு உக்காந்துருச்சாம்…….

அதே மாதிரி டீசல், கேஸ் விலையையும் ஏத்துனா இன்னும் மக்கள் சூடானாஉக்காந்துருக்கற இந்தியாவோட பொருளாதாரம் ஓட ஆரம்பிச்சுருமுன்னு அந்தவெளங்காவெட்டி ஐடியா குடுத்துருக்கு……

குட்..டு:

கலிஞரு ஒரு அரசியல் ஜா நக்கியார் என்கிறத நான் ஒத்துக்கறேன்….

இந்த மலையாளிங்களுக்கு கலிஞரு அளவுக்கு மூளையேகிடையாது……….பெட்ரோல் விலை ஏத்துன மறு நாளே போராட்டம் பந்துன்னுஅறிவிச்சு ஏத்துன ஏழரையில ஒன்னரைய வாங்கிக்கிட்டு மூடிக்கிட்டுபோய்ட்டாயிங்க……

ஏத்த போற டீசல், கேஸுக்கும் வேற தனியா இன்னொரு தடவ போராட்டம்பன்னனும்………லூசு பசங்க………..பொறுமை வேனாம்

விலைவாசி இருக்கற நிலைமையில ஒரே விஷயத்துக்கு ரெண்டு தடவயாபோராட்டம் பன்னுறது…………எங்க கலிஞருட்ட கத்துக்கங்கப்பா………

ஜெட்டு:

ஆகாஷ் ஏவுகனை சோதனை வெற்றி……..போதுமா மக்களே சும்மா பெட்ரொல்விலை ஏழர உவாவுக்கு ஏத்துனதுக்கே கொதிச்சு போயிருந்தீங்களே……இப்பசந்தோஷம் தானே……போயி புள்ளைங்கல படிக்க வைங்க பக்கிபய மக்களே………….

அவுட்டு:

இந்த வாத்தி வேலை பாக்குறவங்க யாராவது சின்ன புள்ளைங்கக்கிட்ட சிலுவண்டிதனம் பன்னுனா………வூட்டுக்கு அனுப்பிடுவேன்னு அதிமுக அம்மாசொல்லிருக்காங்க…………வாத்தியாருங்கல்லாம் தவ்வி குதிக்காம கறுப்பு ஆடுகளவெளியில அனுப்ப அம்மாவுக்கு ஒத்துழைக்கனும்

அம்மா அப்பப்ப இது போல சில நல்ல சட்டங்கள போட வாழ்த்துக்கள்….(இந்ததயிரியமெல்லாம் நம்ம தமிழினத்த ஒழிச்சுகட்ட வந்த கலிஞருட்டகிடையாது…………..)

தொட்டு:

நம்ம மதுரை இளைய ஆதினம் இருக்காரே, அவரோட பேட்டிய பாக்குற மாதிரிஆயிடுச்சு, அதுல அப்படி என்ன சொன்னாருன்னா?

நான் கறை படியாதவன்…….ஆனால் கறைப்படுத்த பட்டேன்அப்படின்னுசொன்னாரு……………கேட்ட எனக்கு கிர்ருன்னு ஆயிடுச்சு……கறைப்படுத்த ப்பட்டவருஎப்படி கறைபடியாம இருக்காரு…….சரி நமக்குதான் புரியலோயன்னு…………திரும்பகஷ்டபட்டு தேடி நித்யானந்தாவோட அந்த வீடியோவ பாத்தா……….பாத்தா…………அடஉன்மைதாங்க……..

இவரு கைய தலைக்கு வச்சுக்கிட்டு கம்முன்னுதான் படுத்துருக்காருரஞ்சிதான்என்னன்னோமோ பன்னி கறையாக்கிடுச்சு…..

அவரு கை கறை படாத கைதான் 100% கன்ஃபார்ம்………….

http://www.duraigowtham.blogspot.in


--
*more articles click*
www.sahabudeen.com