Showing posts with label CHILD CARE. Show all posts
Showing posts with label CHILD CARE. Show all posts

Sunday, September 25, 2016

உங்கள் செல்லக் குழந்தைகள் கோபம் கொள்கின்றனரா? இதோ கையாள வழிகள்

குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல.

கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம்.

இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

கோபத்தில் அமைதியாக கவனித்தல்

குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது.

அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும்.

குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

உடல் ரீதியான அடக்குமுறைகள் கூடாது

குழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது.

அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும்.

உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும்.

அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.

எடுத்துக் கூறுங்கள்

கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம்.

குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும்.

நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்

மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள்.

இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள்.

நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, September 3, 2016

உங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா?


நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் ப்ரீத்தி - சூரி தம்பதி இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர். கை நிறையச் சம்பளம். ஏராளமான சலுகைகள். இளமையில் ஓடி ஓடி உழைத்தவர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் சிரிப்பையும் ஒவ்வோர் அசைவையும் வளர்ச்சியையும் பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற வேதனை. ஒரு கட்டத்தில் சம்பாதித்தது போதும் என்று வேலையை உதறிவிட்டனர். வருமானத்துக்காக உழைத்த காலத்தில் தங்கள் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஓடும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலான அனுபவமே 'காஞ்சனா பாட்டி குழந்தைகள் காப்பகங்கள்' உருவாவதற்கு இவர்களுக்கு விதையாக அமைந்து இருக்கிறது. இன்று சென்னையில் 14 இடங்களில் குழந்தைகள் காப்பகங்களை நடத்திவருகிறார்கள் ப்ரீத்தி-சூரி.   

பிறந்து மூன்றே மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளைத் தாயின் அரவணைப்புடன் பாதுகாக்கும் குழந்தைக் காப்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? என்னென்ன வசதிகள் தேவை? என்பது பற்றி ப்ரீத்தி - சூரியும், ஆயாவின் மடியில் தவழும் குழந்தைகளின் ஆரோக்கியம்குறித்துக் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீனிவாசனும் இங்கே விரிவாகப் பேசுகின்றனர்.
''இரண்டு மாதக் குழந்தை தனது அம்மாவின் முகம் பார்த்துச் சிரிக்கும். மூன்று மாதங்களில் தலை நிற்கும். நான்கு முதல் ஐந்து மாதங்களில் கவிழ்ந்து படுக்கும். ஏழு முதல் எட்டு மாதங்களில் உட்காரும். ஒன்பது, பத்து மாதங்களில் நிற்கும். ஒரு வயதில் நடக்க ஆரம்பிக்கும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாடுகளுக்கான காலம் வேறுபடலாம். இப்படிக் குழந்தை படிப்படியாக உடல் வளர்ச்சியில் முன்னேறி, தத்தித் தத்தி நடந்து வரும் அழகை இன்றைய பெற்றோர்கள் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சிக்கான பருவம் இந்த மழலைப் பருவம். உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தால்தான், அந்தக் குழந்தையின் வருங்காலம் நன்றாக இருக்கும். எனவே, குழந்தையுடன் செலவிட முதல் ஐந்து வருடங்களை ஒதுக்குங்கள். ஒருவேளை தவிர்க்கவே முடியாமல் காப்பகங்களில் கொண்டுபோய்விட நேரிட்டால், இந்தப் பாதுகாப்பான வழிகளைக் கடைப்பிடியுங்கள்'' என்றவர்கள் காப்பகத்தில் குழந்தைகள் நலமாக இருப்பதற்கான வழிகளைப் பட்டியலிட்டனர்.
குழந்தை எப்போதும் குதூகலமாக இருக்க...
 பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கட்டாயம் தர வேண்டும்.
 
முடிந்தவரை ஆறு மாத விடுப்பைக் கட்டாயமாக்கிக்கொள்வது நல்லது.
  
 குழந்தை எட்டு மணி வரைக்கும் தூங்கட்டும் என்று விட்டுவிட்டு எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு பிறகு அவசர அவசரமாக எழுப்பிக் குளிக்க வைத்து, பால் மற்றும் உணவைக் கொடுத்துக் காப்பகத்தில் கொண்டுவிடும் பெற்றோர்கள்தான் அதிகம். இதனால் குழந்தையும் சரியாகச் சாப்பிடாது. ஆற அமரக் குழந்தையுடன் விளையாட்டுக் காட்டியபடியே சாப்பாட்டை ஊட்டுங்கள். குழந்தையும் ஆர்வமாகச் சாப்பிடும்.
 சூடான சாதத்தைக் குழையப் பிசைந்து ஊட்டும்போது, குழந்தை நன்றாகச் சாப்பிடும். மதியம், மாலை உணவுகளையும் தயாரித்துத் தரும் காப்பகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
 மருத்துவ ஆலோசகர்கள் இருக்கிறார்களா அங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்திருக்கிறார்களா என்பனவற்றைக் கவனியுங்கள். உங்கள் குழந்தையின் ரத்த வகை, ஒவ்வாமை, குடும்ப மருத்துவர், உணவு முறைகள், கொடுக்கும் மாத்திரை மருந்துகள்பற்றிய அனைத்து விவரங்களையும் நீங்களே, ஒரு ஃபைலில் போட்டுத் தந்துவிடலாம்.  
பிஞ்சுக் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். மூக்கில் சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்தால், அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனிப்பது உத்தமம்.
குழந்தைகள் உடுத்துவதற்குத் தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குத் தோல் தொடர்பான பிரச்னை வராமல் இருக்கும். காய்ச்சி ஆறவைத்த நீரை, நன்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் ஊற்றிக்கொடுக்கலாம்.
ஒரு வயதைக் கடந்துவிட்டால், குழந்தையைக் குடும்பத்தினருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடப் பழக்குங்கள். இதனால் காப்பகத்துக்குச் செல்லும்போது மற்ற குழந்தைகளுடன் அது சேர்ந்து சாப்பிடும்.
  மண்ணில் விளையாடும்போது குழந்தைகளுக்குத் தோலில் அரிப்பு, கொப்புளங்கள் வரலாம். காப்பகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனி சோப்பைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  
குழந்தைக் காப்பகத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க மேலும் சில யோசனைகள்...
தரை தளத்தில் இயங்கும் காப்பகங்களைத் தேர்ந்தெடுங்கள்.
 குழந்தைகள் ஓடி விளையாடக்கூடிய அளவுக்கு இடம் தாராளமாக இருக்க வேண்டும். வெளிச்சமும் காற்றோட்டமும் நன்கு இருக்க வேண்டும். காப்பகத்தில் இருக்கும் கதவு, ஜன்னல், டேபிள் எல்லாவற்றின் முனையும் கூர்மையாக இருக்கக் கூடாது என்பதைக் காப்பகம் நடத்துபவர்களிடம் வலியுறுத்துங்கள்.
 ஏ.சி. இல்லாமல் இருப்பதே குழந்தைகளின் உடல் நலத்துக்கு நல்லது.
 சிறிய அறையில் அளவுக்கு அதிகமான குழந்தைகள் இருக்கின்றன என்றால், அந்தக் காப்பகத்தைத் தவிர்ப்பது நல்லது.  
 மூன்று குழந்தைகளுக்கு ஓர் ஆயா என்கிற ரீதியில் இருந்தால்தான் அவரால் ஒவ்வொரு குழந்தையின்மீதும் அக்கறையுடன் தனிக் கவனம் செலுத்த முடியும்.
காப்பகத்தில் உள்ள ஆயாக்கள், முதலுதவிப் பயிற்சி பெற்று இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
  
ஆயாக்களின் உடை மற்றும் விரல் நகங்கள், கை, கால்களைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள்.
 உங்கள் வீடு, அலுவலக நேரம், பயணத்துக்காக ஆகும் நேரம் போன்றவற்றையும் கணக்கிட்டு, அதற்கேற்ப காப்பகத்தைத் தேர்ந்தெடுங்கள்.
 காப்பங்களின் சுவர்கள் வண்ண மயமாக இருந்தால், குழந்தைகள் கூடுதல் உற்சாகத்துடன் இருப்பார்கள்.  
ஓடியாடி வரும் குழந்தைகளுக்கு உடம்பில் சின்னச் சின்னச் சிராய்ப்புகள் ஏற்படலாம். இதற்காகக் காப்பக நிர்வாகிகளிடம் சண்டை போடுவது நல்லது அல்ல.
 குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். காப்பக ஆயாக்களைப் பற்றி விசாரியுங்கள். மற்ற குழந்தைகளைப் பற்றியும் பேசுங்கள். அந்த மழலைக் குரலில் புகாரும் இருக்கலாம். புகழ்ச்சியும் இருக்கலாம். இதை வைத்துக் குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும்!
குழந்தைகள் காப்பகம் நடத்துவோர் கவனத்துக்கு...
 நல்ல மற்றும் கெட்ட பழக்கவழக்கங்களைக் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். காப்பக ஆயாக்கள் ஒருவரிடம் மற்றொருவர் உரையாடும்போது, மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
  கண்களுக்கு எது தென்பட்டாலும், உடனே அதை வாயில் வைத்துக்கொள்ளும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. எனவே, கைக்கு எட்டும் தூரத்தில் எதையும் வைக்காதீர்கள்.
 பற்கள் முளைப்பதால் கடிக்கும் பழக்கம் வரும். மற்ற குழந்தைகளைக் கடிப்பதைத் தவிர்க்க, டீத்தர், நிப்புள் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
 ஒரு குழந்தை கையை நீட்டிப் பேசும்போது மற்றொரு குழந்தையின் கண்ணில் குத்த நேரிடலாம். பென்சில், பேனா, பிரஷ் போன்ற பொருட்களைக் குழந்தைக்குக் கொடுக்கும்போது, ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடைவெளி விட்டு உட்காரவைப்பது நல்லது.
http://www.puthiyatamil.net



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, August 11, 2016

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள். மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!
www.puthiyatamil.net/t49509-topic#ixzz3HtOFCsp6



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, August 7, 2016

குழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்

குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் பிறந்த குழந்தை தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். ஆகவே குழந்தை அழ ஆரம்பித்தால், அது எதற்காக அழுகிறது என்று கண்டுபிடிப்பது சற்று கடினம்.

இங்கு குழந்தைகள் இரவில் அழுவதற்கான சில பொதுவான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தை இரவு நேரத்தில் அழுதால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், நாள் முழுவதும் சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருக்கும். எனவே உங்கள் குழந்தை நாள் முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குழந்தைகள் டயப்பரில் மலம் கழித்துவிட்டால், ஈரத்தினால் அழத் தொடங்கிவிடுவார்கள். எனவே இரவில் துணியால் ஆன நாப்கின்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாமல், இரவில் ஹக்கிஸ் பயன்படுத்துங்கள்.

குழந்தைக்கு பகல் நேரத்தில் சீரான இடைவெளியில் பால் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். அப்படி கொடுக்கும் போது, இரவில் சற்று கண் அயர்ந்து, குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருந்தால், குழந்தைகள் இரவு முழுவதும் அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் வலியை அழுகையின் மூலம் தான் வெளிப்படுத்துவார்கள். மேலும் குழந்தையின் சருமம் மிகவும் சென்சிடிவ் என்பதால், சிறு கொசு கடித்தால் கூட, அவர்கள் இரவு முழுவதும் அழுவார்கள்.

குழந்தைகள் சில நேரங்களில் அருகில் யாரும் இல்லாமல் இருந்தால் அழுவார்கள். அப்போது தாய் அல்லது தந்தை தூக்கி அணைத்துக் கொண்டு, வெதுவெதுப்பான சூழ்நிலை ஏற்பட்டு, அவர்கள் நிம்மதியடைவார்கள்.

குழந்தைகள் தங்களின சருமத்திற்கு தொந்தரவு தரும் வகையில் அரிப்புக்களை உணர்ந்தால், அழ ஆரம்பிப்பார்கள். குறிப்பாக டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு அரிப்புக்கள் ஏற்படும். எனவே அவற்றை கவனித்து அதற்கு சரியான சிகிச்சை அளியுங்கள்.

குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாகவோ அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டாலோ, அவர்களின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு அழ ஆரம்பிப்பார்க்ள.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, June 5, 2016

தாய்ப்பாலே தடுப்பூசிதான்!

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி.

'தன் குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாத் தாய்மார்களின் பிரார்த்தனையும். பெண் கருத்தரித்தவுடன், தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி அறிவுறுத்துவதுடன், ஒவ்வொரு மாதப் பரிசோதனையின்போதும், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைப்பது எங்கள் கடமை.

சீம்பால் (Colostrum)
மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில், பிசுபிசுப்பாகச் சுரக்கும் சீம்பால்தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தை விரும்பிக் குடிக்கும் அளவுக்கு சீம்பால் தித்திப்பாக இருக்கும். சீம்பாலில் ஐ.ஜி.ஏ (Immunoglobulin A) என்ற 'நோய் எதிர்ப்பொருள்' (Antibodies) உள்ளது. இது குழந்தைக்கு எந்தவிதமான நோய்த்தொற்றும் ஏற்படாமல் காப்பதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். சீம்பாலில் ரத்த வெள்ளை அணுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

புகட்டும் முறை
சீம்பாலைத் தொடர்ந்து சுரக்கும் தாய்ப்பாலை இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். ஒரே பக்கமாக பால் கொடுக்கக் கூடாது. அதேபோல் படுத்துக்கொண்டு பால் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் குழந்தையின் வாயில் இருந்து மூக்குக்குள் பால் செல்லக்கூடிய அபாயம் இருக்கிறது. 

பால் கொடுக்கும் முன்பு, மார்புக் காம்புகளை சுத்தம் செய்யவேண்டும்.  தண்ணீரால் சுத்தம் செய்வதைவிட, சில சொட்டுக்கள் தாய்ப்பால் எடுத்து, அதைத் தடவியே சுத்தம் செய்துகொள்ளலாம். இதனால், எந்தத் தொற்றும் குழந்தையை அண்டாது. முதலில் 5 நிமிடங்கள், பிறகு 10 நிமிடங்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தாய்ப்பால் தருமே பலம்!
தாய்ப்பால் குடிப்பதால், குழந்தைகள் பெறும் நலன்களைப் பட்டியலிடுகிறார், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் ரமா சந்திரமோகன்.

  ''குழந்தைக்கு இயற்கை அளிக்கும் முதல் தடுப்பூசி, சீம்பால்தான். நோய் எதிர்ப்பு குணங்கள் அனைத்தும் அதில் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்ததும், முதல் அரை மணி நேரத்துக்கு பயங்கர சுறுசுறுப்பாக இருக்கும். அந்த நேரத்தில் சீம்பால் கொடுக்கப்பட்டுவிட வேண்டும். அதே போல் தாய்ப்பாலில் 88 சதவிகிதம், தண்ணீர்தான். அதுவே தாகத்தையும் தணித்துவிடும் என்பதால், குழந்தைக்குத் தனியாகத் தண்ணீர் தரத் தேவை இல்லை. குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப் பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

  குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தாய்ப்பாலில் உள்ளன. பாலில் இருக்கும் சத்துக்களே குழந்தையின் நோய்த் தடுப்பாற்றலை கட்டமைக்கப் போதுமானது.

  அம்மாவுடனான பிணைப்பு அதிகரிப்பதுடன், பாதுகாப்பாகவும் உணர்கிறது குழந்தை. குழந்தை முழுமுனைப்போடு தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க, அதன் கன்னங்கள் செழுமையாகும். பற்கள் ஒழுங்காக முளைத்து, வளரும்.

  சில குழந்தைகளுக்கு, பால் குடித்த பிறகு நாக்கில் ஒரு வெள்ளைப் படலம் இருக்கும். சுத்தமான துணியை, வெந்நீரில் நனைத்தெடுத்து, நாக்கைத் துடைத்துவிட வேண்டும்.

  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் எடை ஒவ்வொரு மாதமும் 800 கிராம் முதல் ஒரு கிலோ வரை ஏறவேண்டும். பால் குடித்த பிறகு 2 - 3 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு நாளைக்கு 6 - 8 முறை சிறுநீர் கழிக்க வேண்டும். மலம் கழிக்கும்போது, கட்டியாக, கல் போல இல்லாமல், சகஜமாகப் போகவேண்டும். இவையெல்லாம் இருந்தால், குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் அருந்துகிறது என்று அர்த்தம்.'

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் நல்லதே
  பிரசவத்துக்குப் பின், பால் கொடுக்கும் தாய்க்கும் கர்ப்பப்பை சுருங்கி, பழைய நிலைக்குத் திரும்புகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.

  தொடர்ச்சியாகத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், கொடுக்கும் காலங்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு.

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல சத்துக்களும் நிறைந்து எளிதில் செரிக்கும் தன்மை கொண்ட தாய்ப்பால் சிறந்ததாக மட்டுமின்றி ஒரு முழுமையான இயற்கை உணவாகவும் அமைகின்றது.

குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், உயிர்சத்துக்கள் அனைத்தும் சமநிலையில் அடங்கியிருப்பதோடு, நோயை எதிர்க்கும் சக்தி கொண்ட புரதங்களும் (Immunoglobulins) தாய்ப்பாலில் உள்ளன. இவை சளி, இருமல், வயிற்றுப்போக்கு, அலர்ஜியினால் (Allergy) ஏற்படும் ஆஸ்துமா, படை (Eczema) போன்ற வியாதிகள் குழந்தையின் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும் சக்தி வாய்ந்தவை.

தாய்ப்பால் பருகுவதன் மூலம் இதமான அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைப்பதைக் குழந்தை உணர்கின்றது. தாய்க்கும் சேய்க்கும் அதிகப் பிணைப்பு உண்டாகின்றது. தாயும் சேயும் எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி இருக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாய் அவர்களிடையே பிணைப்பு ஏற்படுகின்றது.

குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்கு அதன் சப்பும் உணர்ச்சி தீவிரமாய் இருக்கும். அதன் பின்னர் குழந்தை தூங்க ஆரம்பித்துவிடும். எனவே, குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக தாய்ப்பால் புகட்ட இயலுமோ அவ்வளவு சீக்கிரம் புகட்டத்துவங்குவது நல்லது.

குறிப்பிட்ட காலத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கு (Premature Baby) போதிய சப்பக்கூடிய திறன் இருக்குமாயின் உடனே பால் கொடுக்கத் துவங்கலாம்.

அறுவைச் சிகிச்சையினால் (Ceasarean) பிறந்த குழந்தைகளுக்கு உடனே பால் கொடுக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்காக தாய்க்குக் கொடுக்கப்பட்ட மயக்க மருந்து உணவுகள் தாயின் உடலில் இருந்து முற்றிலும் மறைந்த பின்னரே பால் கொடுக்கவேண்டும்.

சீம்பால் : குழந்தை பிறந்த பின் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குறைந்த அளவில், மஞ்சள் நிறத்துடன், தடிப்பாக சுரக்கும் பால் சீம்பால். இது அதிக சத்துக்கள் கொண்டது. நோயை எதிர்க்கும் சக்தி வாய்ந்த பொருட்கள் (Anti-infective Agents) நிறைந்ததும் ஆகும். சீம்பால் குழந்தைக்கு மிகவும் இன்றியமையாதது; அதிகப் பயனுள்ளது. குறைந்த அளவிலே சுரக்கப்பட்டாலும் முதல் மூன்று நாட்களுக்குக் குழந்தையின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானது.

தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரங்கள் :
குழந்தைக்குத் தேவையான பொழுதெல்லாம் பால் புகட்ட வேண்டும். அதோடு எவ்வளவு நேரம் குழந்தை குடிக்கின்றதோ அவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும். மார்பகம் பால் நிறைந்து இருக்குமாயின் குழந்தை பால் குடிக்கும் இடைவேளை 3 மணிக்கு அதிகமாகக் கூடாது. பால் பருக வேண்டிய நேரத்தில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தால் எழுப்பிப் பால் கொடுக்கவேண்டும். பால் கொடுக்கும்பொழுது குழந்தையின் பால் சப்பும் வேகம் குறையும் பொழுதோ அல்லது பால் குறைந்து மார்பகம் மிருதுவாகும் பொழுதோதான் தாய் தனது அடுத்த மார்பகத்திலிருந்து பால் புகட்ட வேண்டும் பால் குடிக்கத் துவங்கிய முதல் சில நாட்களில் குழந்தை பாலை 2 அல்லது 3 நிமிடங்கள் பருகியவுடன் தூங்கிவிடும். பின்னர் நன்கு பால் குடிக்கப் பருகியவுடன், அநேகமாக 10 நிமிடங்களில் ஒரு மார்பகத்திலிருக்கும் பாலை குடித்துவிடும்.

தாய்ப்பாலை தவிர்க்கவேண்டிய சமயங்கள் :

ஏதாவது மருந்து சாப்பிட வேண்டியிருந்தால் மருத்தவரைக் கலந்தாலோசித்து அவர் பால் கொடுக்கலாம் என்று சொன்னால் மாத்திரமே குழந்தைக்குப் பால் கொடுக்கவேண்டும்.

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான உணவு :

ஏற்கனவே சரிவிகித உணவை உட்கொள்ளும் தாய்மார்கள் பருப்பு வகைகளையும், கீரை வகைகளையும், பீன்ஸ், அவரை வகைகளையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பழங்களையும், பால், தயிர் முதலியவற்றையும் சேர்த்துச் சாப்பிடுவது அவசியம். அசைவ உணவு உட்கொள்பவர்கள், மாமிசமும் முட்டையும் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த பதார்த்தங்கள் அதிகமான மசால் பொடி சேர்க்கப்பட்ட உணவு வகைகள் அளவுக்கதிகமான நெய் இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுப்பதை இந்த மாதத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று கணக்கில்லை. எவ்வளவு காலம் தொடர்ந்து கொடுக்க இயலுமோ அவ்வளவு காலம் கொடுப்பது நல்லது. ஆனால், நிறைய பெண்களுக்குக் குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களுக்குப் பிறகு பாலின் அளவு குறைந்துவிடும். வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு சத்து தாய் பாலிலிருந்து மட்டும் கிட்டாது. எனவே தாய்ப்பால் கொடுப்பதுடன் வேறு இணை உணவுகளும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

தாய்ப்பால் குறையும்பொழுது ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ராகிக்கூழ், அரிசிக்கஞ்சி, மசிக்கப்பட்ட வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம். இதைத் தினம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வந்து 3 அல்லது 4 வாரம் கழித்து அரை டம்ளர் கூழ் அல்லது வாழைப்பழம் கொடுக்கலாம். வேக வைத்த முட்டை, கீரை மசியல் என்று பல வகையான உணவுகளைக் கொடுக்கலாம். கடையில் குழந்தைகளுக்கென்று விற்கப்படும் உணவுகளைக் காட்டிலும் இந்த உணவுகள் நல்லது
http://pettagum.blogspot.in/2014/08/blog-post_5.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, June 3, 2016

உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரும் உத்திகள்!.



குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்!
வெங்கட்டுக்கு இப்போது நாற்பது வயது. நல்ல உத்தியோகம், கைநிறையச் சம்பளம். ஆனாலும், நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகும் விலைவாசியில் திண்டாட்டமாகத்தான் இருக்கிறது. வீட்டு லோன், கார் லோன், பர்சனல் லோன் என்று கடன் கட்டி மாளவில்லை. எவ்வளவோ திட்டமிட்டுச் செலவு செய்தாலும் மாத கடைசியில் கஷ்டம்தான்.
வாழ்க்கை ஏன் இப்படியே போகிறது? விலை ஏற்றம்தான் காரணமா? அல்லது பணத்தை நிர்வாகம் பண்ணுவதில் நமக்குத்தான் கொஞ்சம் சூட்டிகைப் போதவில்லையோ? கார் வாங்குவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டு இருக்கலாமோ? எல்லாரும் வாங்குகிறார்களே என்று வாங்கியது தப்போ? பர்சனல் லோன் வாங்காமல் சமாளித்திருக்கவேண்டும். இப்படி மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள். சரியான நேரத்தில் எடுத்துச்சொல்ல யாரும் இல்லாததால் நேர்ந்த தவறுகள்.

இந்தக் கஷ்டங்கள் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு வரக்கூடாது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்குப் பணத்தைக் கையாளுவதில் நல்ல விழிப்பு உணர்ச்சியை உண்டாக்கவேண்டும். வாழ்க்கைக்குப் பணம் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது அதனைச் சரியாக நிர்வாகம் செய்வது என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தார்.
பண நிர்வாகத்தில் உள்ள சூட்சுமங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர என்ன செய்யலாம்? மூளையைக் கசக்கிக்கொண்டு யோசித்தவர், முதலில் கடைக்கு ஓடிப்போய் ஓர் உண்டியலை வாங்கி வந்து தன் குழந்தைகளிடம் கொடுத்தார்

ஆனால், அது மட்டும் போதுமா? சேமிக்கச் சொல்லித் தருவது நல்ல பழக்கம்தான். உண்டியலை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைகள் பணத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள முடியுமா என்ன என்கிறீர்களா? வேறு என்னவெல்லாம் வழிகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?
முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பண நிர்வாகம் என்பது ஒரு நாளில் கற்றுக்கொள்ளக்கூடிய சமாசாரம் இல்லை என்பதுதான். வெறும் உண்டியலை வாங்கித் தருவதாலோ அல்லது ஒருமுறை சொல்வதினாலோ பணத்தை நிர்வகிப்பதில் உள்ள நுணுக்கங்களை ஒருவர் முழுமையாக உள்வாங்கிவிட முடியாது. இது வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டிய‌ கல்வி. குழந்தையில் ஆரம்பித்து டீன்-ஏஜ் ஆகி பெரியவர் ஆகும் வரை தொடர்ச்சியாகப் பயில வேண்டிய விஷயம்.

பண நிர்வாகம் என்கிற விஷயத்தைப் பொறுத்தவரை, குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதைவிடவும், நம்மைக் கவனித்துக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக நாம் வாழ்ந்து காட்டினாலேபோதும், பண நிர்வாகத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.

குழந்தைகள் எல்லோரும் ஒரே சிந்தனைப்போக்குக் கொண்டவர்கள் கிடையாது. வயதுக்கேற்ப உலகம் பற்றிய அவர்களின் பார்வை மாறும். பணத்தைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எனவே, குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பண நிர்வாகம் பற்றிச் சொல்லித் தரலாம் என்பதை இனி விளக்கமாகச் சொல்கிறேன்.
6 - 10 வயது வரை:
சேமிக்கப் பழக்குங்கள்!
இந்த வயது குழந்தைகளுக்கு முதலில் அடிப்படை விஷயமான சேமிப்பைப் பழக்கினாலே போதும். பெற்றோர்கள் தங்களுக்குத் தருகிற பணத்தில் பாதியை சேமித்துவிட்டு,  மீதியைத்தான் செலவழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதாவது, ரூ.10 தந்தால், அதில் ரூ.5 சேமிப்புக்கு, மீதி ரூ.5தான் செலவுக்கு என்று பழக்குங்கள்.
இதனால் என்ன லாபம்? கையில் வரும் காசு எல்லாமே செலவழிக்கத் தான் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே தோன்றாது. முதல்பகுதி சேமிப்புக்கு, அடுத்த பகுதிதான் செலவுக்கு என்று மனதில் படிந்துவிடும். 'Pay yourself first' என்று சொல்வார்கள். முதலில் உங்கள் எதிர்காலத்துக்கு வேண்டிய பணத்தை எடுத்துவைத்துவிடுங்கள் என்று இதைத் தமிழில் சொல்லலாம்.  இந்தப் பழக்கம் குழந்தைகளின் அடிமனதில் பதிந்துவிட்டால் பெரியவர்களாகி வேலைக்குப் போன பின்னால் தீபாவளி போனஸ், இன்க்ரிமென்ட் என்று ஒரு தொகை கிடைக்கும்போதெல்லாம் முதலில் சேமிப்பில் சேர்த்துவிடுவார்கள்.

இலக்கு அவசியம்!
வெறும் சேமிப்பு என்கிற கட்டத்தைத் தாண்டியபிறகு, அதாவது, சேமிக்கத் தொடங்கிய  ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். 100 ரூபாய் சேமித்தால் பொம்மை வாங்கலாம்; 500 ரூபாய் சேமித்தால் செஸ்போர்டு வாங்கலாம் என்று இலக்கு நிர்ணயிக்கலாம்.
நீங்கள் நிர்ணயிக்கும் இலக்கை உண்டியல்மேல் எழுதி ஒட்டிவிடுங்கள். அப்போதுதான் ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கிறேன் என்பதைக் குழந்தைகள் மறக்காமல் இருப்பார்கள். அந்த இலக்கை அடைந்தவுடன் அந்தப் பொருளை வாங்க உதவி செய்யுங்கள். கஷ்டப்பட்டதற்குப் பலன் கைமேல் தெரிந்தால்தான் குழந்தைகள் பெரிய இலக்குகளை நோக்கி ஓடுவார்கள்.
சிலசமயம் அவர்கள் வாங்கிய பொம்மை உடைந்துவிடக்கூடும். அது நல்லதுக்குத்தான். கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை எளிதில் உடைந்துவிடக்கூடிய பொருளை வாங்கிவிட்டோமே என்று நினைத்து, அடுத்தமுறை, இலக்குகளைச் சரியாக நிர்ணயம் செய்ய குழந்தைகளுக்கு அது உதவும். நீண்டகாலம் சந்தோஷம் தரும் விஷயத்துக்குப்  செலவு செய்யவேண்டும் என்று புரிந்துகொள்வார்கள். இதனால் என்ன லாபம்? பெரியவர்களானதும் சொந்த வீடு உள்பட நீண்டகாலத்துக்கு நன்மை தரும் விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்.

10 வயதுக்கு மேல்:
வங்கிக் கணக்குத் தொடங்குங்கள்!
வங்கியில் குழந்தைபேரில் சேமிப்புக் கணக்குத் தொடங்குங்கள். உண்டியலில் சேமித்ததை வங்கியில் போட்டுவைக்கப் பழக்குங்கள். குழந்தையை வங்கிக்கு அழைத்துக் கொண்டு போவது, அவர்களின் கையாலேயே பணத்தை டெபாசிட் பண்ணுவது, பணத்தை எடுப்பது, செக் போடுவது போன்ற விஷயங்களைச் சொல்லிக்கொடுங்கள். இதனால் என்ன லாபம்?
* வங்கிகளில் சேமித்தால் லாபம் அதிகம். ஏனென்றால் வட்டி, கூட்டு வட்டி கிடைக்கும். உண்டியலில் சேமித்தால் இது கிடைக்காது என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்வார்கள்.
* வங்கிகளில் நடப்பது என்ன, அங்குப் புழங்கும் டெக்னிக்கல் வார்த்தைகள் என்ன என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் அத்துபடியாகும், பயமும் விலகும்.
*  தங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி எங்கே கிடைக்கும், வங்கிகளின் சேவை பற்றியெல்லாம் அலச கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.
* தவறு நேர்ந்தால் எப்படிப் புகார் செய்வது என்று தெரிந்து கொள்வார்கள்.
* காலேஜ் போகும்போது கல்விக் கடன் வாங்கவேண்டி இருந்தால் தைரியமாகப் பேங்க் மேனேஜரிடம் பேசுவார்கள். அதன் லாபநஷ்டத்தைக் கணக்குப் போடத் தெரிந்துகொள்வார்கள்.

செலவுக் கணக்கு எழுதப் பழக்குங்கள்!
தினமும் செலவு விவரங்களை அப்பா, அம்மாவிடம் கேட்டு நோட்டில்  எழுதிவைக்கப் பழக்குங்கள். இது அவர்கள் சேமிப்புக்கு மட்டுமல்ல, வீட்டுச் செலவுக்கும்தான். இதனால் என்ன லாபம்?
குழந்தைகளுக்கும் வீட்டின் வரவு, செலவுகள் எழுதுவது பிடிபட்டுவிடும். செலவுகளைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்தால்தான் பிற்காலத்தில் சரியாகப் பட்ஜெட் போட முடியும். பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால், பணம் எல்லாமே நம் கட்டுக்குள் இருக்கும். பெற்றோரின் சிரமம் புரியாமல் குழந்தைகள் எதாவது வாங்கித்தரச் சொல்வதும் குறையும்.

டீன்-ஏஜ் பிரிவினருக்கு:  
மினி பட்ஜெட் போட பழக்குங்கள்!
'அவனுக்கு என்ன தெரியும்? சின்னக் குழந்தை. அவன் படிப்புல கவனமா இருந்து நல்ல மார்க் வாங்கினாலே போதும்' என்று தயவுசெய்து நினைக்காதீர்கள். கல்வி முக்கியம்; அதைவிட முக்கியம், வாழ்க்கைக் கல்வி என்கிற பண நிர்வாகம். இதற்கு ஒரு சின்ன ப்ராஜெக்டாக ஒரு மினி பட்ஜெட் போட பழக்குங்கள். திருப்பதி, பழநி ட்ரிப் அல்லது பர்த்டே பார்ட்டி போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கான செலவுக்கு உங்கள் டீனேஜ் மகன்/மகளை உட்கார வைத்துப் பட்ஜெட் போடுங்கள். என்னென்ன தலைப்புகள், எந்தெந்த விஷயங்களுக்குச் செலவு செய்யவேண்டும் என்று நோட்டில் எழுதச் சொல்லுங்கள். நோட்டில் எழுதி வைத்தால்தான் மனதில் பதியும். வெறும் மனக்கணக்கு போடுவது தப்புக் கணக்காகவே முடியும். பின்னர் எங்கெங்கே அசல் செலவு பட்ஜெட்டைத் தாண்டும் என்று கணிக்கச் சொல்லுங்கள்.
அந்தப் பயணம் முழுவதும் பிள்ளையின் கையில் நோட்டு இருந்து உடனுக்குடன் எழுதிக்கொண்டே வந்தால் நல்லது. எல்லாம் முடிந்தபின் ஏற்கெனவே போட்ட பட்ஜெட்டை குடும்பமாக அமர்ந்து அலசுங்கள். எங்கே செலவு அதிகமானது, ஏன் என்று அலசினால் அடுத்தமுறை இன்னும் கச்சிதமாகப் பட்ஜெட் போட முடியும்.
இதனால் என்ன லாபம்? பிற்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செலவு செய்யப் பழகுவார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தினால் ஒவ்வொரு இலக்காக விரைவில் அடையலாம். திடீர் பணவரவு வந்தால் தாம்தூம் என்று செலவழிக்க மாட்டார்கள்.

ஆய்வு செய்யப் பழக்குங்கள்!
டீன்- ஏஜ் மகன்/மகள் ரொம்ப நாளாக மொபைல் போன் வேண்டுமென்று நச்சரிக்கிறார்களா? என்ன மாடல் போன், எந்த நெட்வொர்க், என்ன ஸ்கீம், என்ன ஆஃபர் என்று விசாரித்து வரச் சொல்லுங்கள். அதைக் கச்சிதமாகச் செய்கிறார்களா என்பதைப் பாருங்கள்.
கோச்சிங் க்ளாஸில் சேரவேண்டுமா? அடிப்படை தகவல்களைத் திரட்டிவரப் பழக்குங்கள். கட்டணம் எவ்வளவு, ஆசிரியர்கள் தேர்ந்த பயிற்சியாளர்களா, வகுப்பறை எப்படி, லைட்டிங்க், பாத்ரூம் வசதிகள் எப்படி என்று விசாரிக்கச் சொல்லுங்கள்.

ஸ்போர்ட்ஸ் ஷூ வேண்டுமா? எங்கே டிஸ்கவுன்ட் சேல்? கம்ப்யூட்டர் வாங்கவேண்டுமா? என்ன மாடல், என்ன கான்ஃபிகரேஷன், என்ன விலை என்று கேட்கச் சொல்லுங்கள்.
ஒரு விஷயத்தைப் பற்றி ஆய்வு செய்வது என்பது ஏதோ கம்பச் சூத்திரமல்ல; அது பற்றிய அடிப்படையான எல்லா விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்வதுதான் ரிசர்ச். பணம் செலவு செய்யப்போகிறோம் என்றால் நாலு விஷயமும் விசாரிக்கவேண்டும்.

இதனால் என்ன லாபம்? ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்த்து, தகவல் திரட்டி, தீர்க்கமாக அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். பிற்காலத்தில் வீடு, கார், முதலீடு என்று எதையும் ஒன்றுக்கு பத்து தடவை அலசி ஆராய்ந்து வாங்குவார்கள். 'என்னாலே எல்லாம் நாலு கடை ஏறி இறங்க முடியாது. முதல் கடையிலேயே பர்ச்சேஸை முடிச்சிருவேன்' என்று சொல்லமாட்டார்கள். அடுத்தவர், கார் வாங்கினால் தானும் உடனே அதே மாடல் கார் வாங்கி வாசலில் நிறுத்துவேன் என்று வெட்டி பந்தா பண்ணாமல், நம் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு, நிதி நிலைமைக்கு ஏற்ற மாதிரி வாங்குவார்கள்.

குழந்தைகளுக்குக் கஷ்டம் தராமல் உலகமே புரியாமல் வளர்த்தது அந்தக் காலம். வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்தியசாலிகளாகக் குழந்தைகளை வளர்ப்பதே இந்தக் காலம்!
நீங்கள் இந்தக் காலத்துப் பெற்றோர்தானே? பண நிர்வாகம் பற்றி உங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருவீர்கள்தானே!

வழிகாட்டும் இங்கிலாந்து!
இங்கிலாந்தில் நடந்த சமீபத்திய‌ ஆய்வின்படி அங்கே உள்ள 10 வயதான குழந்தைகளில் 98% பேர் சேமிக்க ஆரம்பித்துவிட்டனராம். அதிலும், 43% பிள்ளைகள் (10 வயதானோர்) எங்கெங்கே டிஸ்கவுன்ட் சேல் போடுகிறார்கள் என்று கவனித்து வாங்குகிறார்களாம். ''உலகப் பொருளாதார மந்தநிலை ஆரம்பித்தபோது பள்ளிக்குள் முதல்முதலில் காலடி எடுத்துவைத்தவர்கள் இந்தக் குழந்தைகள். வீட்டில் பெற்றோர் சிக்கனமாக இருப்பதைப் பார்த்து இவர்களும் சிக்கனமாக இருப்பதுதான் பெஸ்ட் என்று புரிந்துவைத்திருக்கிறார்கள்'' என்கிறார், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேன் ஹம்ஃப்ரீஸ். இங்கிலாந்துக் குழந்தைகளைப் பார்த்து நம் குழந்தைகளும் ஃபாலோ பண்ணலாமே!
''குடும்ப பட்ஜெட்டை குழந்தையுடன் போடுவோம்!''
மதுரையில் சேது பொறியியல் கல்லூரி யில் துணைப் பேராசிரியராக இருக் கிறார் மலைச்சாமி.
'என் மூத்த பையன் சரணேஸ்வரன், மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். நாங்கள் ஒவ்வொரு மாதமும் அவனை வைத்தே பட்ஜெட் போடுவோம்.

இந்த மாதம் எதில் துண்டு விழுந்திருக்கிறது, எதில் பணம் மிச்சமாகியிருக்கிறது என்பதையெல்லாம் அவனே விமர்சனம் செய்வான். பள்ளிக் கட்டணத்தை அவனிடமே தந்து கட்டச் சொல்வோம். எதற்கெல்லாம் செலவு செய்யலாம், செய்யக் கூடாது எனவும் குடும்பத்தின் பொருளாதார நிலையை அவனே கணிப்பதால், சிக்கனம் பற்றி அவனுக்கே அருமையாகத் தெரிகிறது'' என்றார்.
''புத்தாண்டு முதல் எங்கள் இளைய மகன் மகாப்ரணேஷ§க்கும் மண் உண்டியல் வாங்கித் தருவதாக முடிவெடுத்திருக்கிறோம். அடிக்கடி திறந்து பார்த்துப் பணம் எடுக்காமல் இருக்கத்தான் இந்த மண் உண்டியல்!'' என்று 'கணக்காக'ப் பேசினார் மலைச்சாமியின் மனைவி கவிதா.

''பயம் போயிடுச்சு!''
12 வயது கோகுல் தன் வங்கி அனுபவத்தைப் பற்றிச் சொன்னான்:
''புதுசா என் பேரில் சேவிங்க்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிச்சு அதில் காசு போட போனோம். அப்பா எல்லாத்தையும் நீயேதான் எழுதித் தரணும்னு சொல்லிட்டார். கைநடுங்கி கையெழுத்து கோணல்மாணலா வந்தது. தப்பா வேற எழுதிட்டேன். கிழிச்சுப் போட்டுட்டு மறுபடியும் எழுதினேன். வேர்த்துப்போய்க் கவுன்டர்ல தந்தப்ப, ஆன்டி சிரிச்சுக்கிட்டே வாங்கிக்கிட்டாங்க. கையெழுத்து சரியில்லைன்னு திட்டுவாங்களோன்னு நினைச்சேன், ஆனா, ஒண்ணும் சொல்லலை. காசு வாங்கிட்டு ஸ்டாம்ப் வச்சு கொடுத்துட்டாங்க. இப்ப எனக்குப் பயம் போயிடுச்சு. அடுத்தமுறை தைரியமா பேங்குக்குப் போயி பணம் போடுவேன்.''

''வீட்டுக் கணக்கை எழுதுவேன்!''
தினமும் வீட்டுக் கணக்கை எழுதும் தருண் சொல்வதைக் கேளுங்கள்:
'நான் வீட்டுக் கணக்கை எழுதுறதால, டாடி, பெட்ரோல் போட்ட செல‌வைச் சொல்ல மறந்துட்டீங்களே, உங்களுக்கு ரொம்பக் கவனக்குறைவுன்னு கேக்க முடியுது. மம்மி, வீட்டுலேருந்தே தண்ணிக்கொண்டு போயிருந்தா வெயில்ல கூல் ட்ரிங்ஸ், மினரல் வாட்டர் செலவை கம்மி பண்ணியிருக்கலாமேன்னு சொல்ல முடியுது. கூடவே ஒவ்வொரு செலவையும் பார்த்து பார்த்து செய்யணுங்கிறதையும் நான் கத்துக்கிறேன்
http://pettagum.blogspot.in/2014/08/blog-post_15.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, April 27, 2016

கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து!

கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து!

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. அதுவும், குழந்தைக்கு ஒரு வயசு ஆகறவரை சொல்லவே வேண்டாம்... வயித்து வலிக்கு அழறதா, எறும்பு கடிச்சு அழறதானு தெரியாம நம்ம முழி பிதுங்கிடும்.
அஞ்சு மாசக் குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க... கடுக்காயை சந்தனம் மாதிரி உரைச்சு குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும். 

ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும். 

சி ல குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்... பிரச்னை சரியாகிடும். 

சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு 'பிள்ளை வளர்ப்பான்'னு பேரே உண்டு! 

சூ டு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போச்சுனா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை தாய்ப்பால்ல ரெண்டு உரை உரைச்சு புகட்டிப் பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூணு வேளை இப்படிக் கொடுத்தா முழுவதுமா குணமாயிடும். ஆனா, ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுனா குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு. 

பொதுவாவே கைக்குழந்தைக்கு மாந்தம், உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுப்போம். அதை எப்படி பண்றதுனு சொல்றேன்... 

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவையுங்க. அப்புறம் அதை எடுத்து வெய்யில்ல சுக்கா காய வச்சுக்கணும். குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுறப்பல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும். 

ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! 
தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலயும் உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க. 

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.

 மார்கழி பனி கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும். 

இப்பல்லாம் 'குழந்தைகளுக்கு தொட்டதுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கக் கூடாது'னு பேசிக் கறாங்களே... இந்த வைத்தியங்கள்லாம் அப்படி பக்க விளைவு எதுவுமில்லாமலே உடம்பை குணப்படுத்திடும். அதுக்கு நான் கியாரண்டி!
http://pettagum.blogspot.in/2014/05/blog-post_3261.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com