Wednesday, May 1, 2013

மொக்கை ஜோக்ஸ்

மொக்கை ஜோக்ஸ்

ஆசிரியர் : என்னிடம் இருக்கும் ஐந்து ஆப்பிள் பழங்களில் மூன்றை உங்க அக்காவுக்கு கொடுத்துவிட்டால் பாக்கி என்ன வரும் ?

மாணவன்: சந்தேகம் தான் சார் வரும் ...

 

பெண்கள் வாந்தி எடுத்தால் அம்மா அப்பா: ஐயோ மோசம் போயிட்டோமே யார் அந்த ராஸ்கல்.

பையன்கள் வாந்தி எடுத்தால் அம்மா அப்பா: நாயே குடிச்சுட்டு வாந்தி எடுக்கறயா?

 

விவேகானந்தர்: அற்பமாக இருக்கும் 10 இளைஞர்களை கொண்டு வாருங்கள். அவர்களை சிற்பமாக்கி காட்டுகிறேன்

நித்யாநந்தர்: சிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொண்டு வாருங்கள். அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன்

 

கண் அடித்து பார்த்தேன் அவள் மயங்கவில்லை.

கட்டையால் அடித்து பார்த்தேன் உடனே மயங்கி விட்டாள்

 

இது புதுமொழி பொது மொழி :

1.ஒரு பான சோத்துக்கு ஒரு குண்டான் குழம்பு

2.தம்பி உடையார் அண்ணன் நாடார்

3.ஊரான் பிள்ளைய ஊட்டி வளர்த்த உன் மனைவி உன்ன சந்தகேபடுவா

4.நல்ல மாட்டுக்கு 5 கிலோ புண்ணாக்கு

 

ரோட்ல முன்னாடி ரெண்டு பொண்ணுங்க போயிட்டு இருந்தங்கு பின்னாடியே ரெண்டு பசங்க வந்தாங்கு கொஞ்ச துரம் போனவுடனே அந்த பொண்ணுங்க அந்த பசங்க கைல ராக்கி கட்டிடங்கு அதுக்கு அந்த பசங்க என்ன சொன்ணங்கு தெரியுமா?
...

....

....

....

....

.....

.....

.....

மச்சான் நீ என் தங்கச்சிய கட்டிக்கோ நான் உன் தங்கச்சிய கட்டிக்கிறேன்

 

தந்தை: டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

மகன்: அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்

 

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான 5 வாழ்க்கை தத்துவங்கள்:

1) எமன் சிரிச்ச 80இல் மரணம் உமன்(woman) சிரிச்ச 20இல் மரணம்

2) தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி பொண்ணு சிரித்த முஞ்சுல வளரும் தாடி

3) ஹோட்டெல இருக்கும் மசால் வடை திரும்பி பார்க்க வைக்கும் ரெட்டை ஜடை

4) ஆடிக்கு பின்னால் ஆவணி பசங்க தடிக்கு பின்னால தாவணி

5) பல்லவன் பஸ் கலர் பச்சை ஒரு பொண்ணு பின்னாடி போன நீ எடுப்ப பிச்ச...

 

காதலித்து பார்....
.
.
விண்ணில் மிதப்பாய்...!!
.
காற்றில் பறப்பாய்.....!!!!
.
நீரில் நடபாய்...!!!!!

.....

......

......

.....

......

......

புறியவில்லையா...!!!!!
.
செத்து போயிருவ பக்கி....!!

 

மனைவி : என்ன செய்யறிங்க?

கணவன் : ஒன்னும் செய்யல.

மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.

கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.

 

மனைவி: ஏங்ககொஞ்சம் வாங்ககுழந்த அழுவுது

கணவன்: அடி செருப்பால! உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

 

நீங்க எல்லாரும் அறிவளிங்கனு நினைச்சிங்கன்ன இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.

பாட்டி வடை சுட்ட கதையில, வடையை சுட்டது பாட்டியா? காகாவா?

 

"கண்ணா....சூசைட் பண்ணா ஆசையா...? லவ் பண்ணிக்கோ!

ரெண்டாவது சூசைட் பண்ண ஆசையா...? அதே பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ!

 

கணவன்: நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவே?
மனைவி: நானும் உங்க கூடவே செத்துப்போயிருவேன்
கணவன்: அப்பவே ஜோசியக்காரன் சொன்னான், செத்தாலும் "சனி" உன்ன விடாதுன்னு.

 

மனைவி: ஏங்க நான் மாசமா இருக்கேன்..
கணவன்: உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னயா?
மனைவி: போங்க நான் காலேஜ் படிக்கும்போதே சொன்னதுக்கு அடிச்சாங்க. இப்ப எப்படி சொல்றதாம்.

 

கணவன்: என்னோட கண்ண நல்லா பாரு. என்ன தெரியுது?
மனைவி: உங்க உண்மையான அன்பு தெரியுதுங்க..
கணவன்: நாசமா போச்சு. தூசு விழுந்திருக்குடி. அதை எடு.

 

கணவன்: டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.
மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.
கணவன்: கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.
மனைவி: ??????

 

மனைவி: என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன்: கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.

 

டீச்சர்: ஒளியின் வேகம் சத்ததின் வேகத்தை விட அதிகம். அதனால்தான் முதலில் நமக்கு மின்னல் தெரிகிறது. பின்னர் இடிசத்தம் கேட்கிறது.
மாணவன்: எங்க வீட்டுல கரண்ட் போனபிறகு ஜெனரேட்டர் போடுறோம். சத்தம் முதல்ல வருது. அப்புறம்தான் வெளிச்சம் வருது. எப்படி???

 

பெற்றோர் :ஏங்க சார் எங்க பொன்னு கிளாமரா வரலைனு திட்டினீங்களம் ?
ஆசிரியர் : நாசமா போச்சு ? உங்க பொன்னுக்கு கிராமர் வரலைனுதான் திட்டினேன்.

 

ஒரு பையன் ரேடியோ ஸ்டேசனுக்கு போன் செய்து...

பையன்: ஹலோ சார் நான் ரோட்டுல ஒரு பர்ஸ கண்டெடுத்தேன். அதுல 15000 பணமும், ஒரு கிரெடிட் கார்டும் அப்புறம் மிஸ் பிரியா, நம்பர் 12, அடையார், சென்னை அப்படிங்கிற அடையாள அட்டையும் இருக்குது.

ஆர் ஜே: எவ்வளவு நேர்மை சார். யூ ஆர் கிரேட். இப்போ அந்த பிரியாகிட்ட இந்த பர்ஸ் கொடுக்கனுமா? எப் எம் வழியா நாங்க சொல்லனுமா?

பையன்: இல்லையில்ல... அந்த பொண்ணுக்கு ஒரு பாட்ட நான் டெடிகேட் பண்ணனும். அதுக்குத்தான் கூப்பிட்டேன்.

 

கணவன் : ஐயையோ! திடீரென நெஞ்சு வலிக்குதே..?
மனைவி : என்னங்க நீங்க! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!

 

கணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற ?
மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!

 

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிப் பால் குடிச்சு தான் வளர்ந்தீங்களா ?
கணவன் : எப்படி கண்டுபுடிச்சே?
மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

 

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

 

(புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்)
கடைக்காரர்: சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?
வந்தவர்: பின்ன! இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க..!??

 

"மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?"
"ஏன்?"
"மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"

 

"நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?"
"ஆமா, ஆன்ட்டி...
"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"

 

திதாக கல்யாணம் ஆன பெண் தன்னுடையா அம்மாவிற்கு போன் செய்து பேசுகிறாள்

பெண்: அம்மா இன்னிக்கு வீட்ல ஒரே சண்டை..
அம்மா: இதெல்லாம் எல்லார் வீட்டுலயும் நடக்கிறதுதாம்மா. நானும் உங்கப்பாவும் கூட அடிக்கடி சண்டை போடுவோம்.
பெண்: அது எனக்கு தெரியும்மா. அதனாலதான் உன்கிட்ட கேட்குறேன் அந்த பிணத்தை என்ன செய்றது??
அம்மா: ???????????????????????

 

அப்பா நாளைக்கு ஒரு சின்ன மீட்டிங் ஸ்கூல்ல இருக்குது. வாங்கப்பா...
அது என்னடா சின்ன மீட்டிங்கு..
நீங்க, நான் பிரின்ஸ்பால் மட்டும்..

 

ஒருவன்: என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?
மற்றொருவன்: இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் !!
ஒருவன்: இருந்தும் !!
மற்றொருவன்: வீட்டுக்குள்ளேயே சுத்துதே! அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்
ஒருவன்: ????????

 

ஆசிரியர்: தலை வலி'ன்னு 1 நாள் லீவ் எடுத்த சரி, கால்வலி'ன்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு, ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
மற்றொரு மாணவன்: எனக்கு பல் வலி சார்...........!!!!
ஆசிரியர்: ?????

 

கணவன்: எனக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்சனை..
மனைவி: நமக்கு கல்யாணம் ஆயிருச்சு. இனிமேல் எனக்கு உனக்குன்னு பிரிச்சு பேசாதீங்க. நமக்குன்னு சொல்லுங்க.
கணவன்: சரி நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகுது என்னோட செகரட்டரி மூலமா..
மனைவி: ???????????????????????

 

டாக்டர் : பல்லு எப்படி விழுந்துச்சு?
நோயாளி : அதை யார் கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் WIFE சொல்லிருக்கா டாக்டர்.....

 

 

சாமி... நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்...?"
அடப்பாவி... நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?"
நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?"

 

ஒரு வங்கியில் கொள்ளையன் வங்கியை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவனிடம் நான் வங்கியை கொள்ளை அடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர் ஆம் என்றான்.

உடனே கொள்ளையன் அவனை சுட்டுவிட்டான்.
பிறகு ஒரு ஜோடியிடம் வந்து பெண்ணிடம் நான் கொள்ளையடித்ததை நீ பார்த்தாயா என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் நான் பார்க்கவில்லை. ஆனால் இவர் பார்த்துவிட்டார் என்றாள்.

 

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

 

பள்ளியில் இருந்து சீக்கிரமாக வீட்டுக்கு வரும் மகனை பார்த்து தாய் கேட்டாள்.
அம்மா:- ஏன்டா ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட..?
மகன்:- டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் மட்டும் தான்மா சரியா பதில் சொன்னேன்..அதான் என்னை மட்டும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க....
அம்மா:- (சந்தோசம் தாங்காமல்) செல்லகுட்டி.... என் கண்ணு....டீச்சர் அப்படி என்ன கேள்விடா கேட்டாங்க..?
மகன்:- (பத்தடி தள்ளி நின்று...) என் மேல ராக்கட் விட்டது யாருன்னு கேட்டாங்கம்மா...

 

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது

 

டீச்சர் : இந்த SENTANCE-அ தமிழ்ல TRANSLATE பண்ணு.. " I SAW A FILM YESTERDAY"
டிங்கு: நான் நேத்து '' படம் பார்த்தேன்.



--
*more articles click*
www.sahabudeen.com


No comments: