Sunday, October 21, 2012

Quran 100 Q&A

குரான் என்பதின் அர்த்தம் என்ன?

அது ஓதப்பட்டது. ( ஓதப்பட்டது,ஓதக்கூடியது,ஓத வேண்டியது என்றும்அர்த்தப் படுத்தப் படுகிறது)

குரான் முதலில் எங்கே வெளிப் படுத்தப் பட்டது?

மக்காவிற்கு அருகிலுள்ள ஹீரா குகையில்.

எந்த இரவில் குரான் வெளிப் படுத்தப் பட்டது?

லைலதுல் கத்ர் எனும் ஒளி பொருந்திய இரவில். ( கண்ணியமிக்க இரவில்)

குரான் யாரால் வெளிப் படுத்தப் பட்டது?

குரான் அல்லாஹ்வினால் வெளிப் படுத்தப் பட்டது

யார் மூலம் குரான் வெளிப் படுத்தப் பட்டது?

வானவர் ஜிப்ரீல் அலைஹ் ஸலாம் மூலமாக.

குரான் யார் மீது வெளிப் படுத்தப் பட்டது? ( அருளப்பட்டது?)

முகம்மது ஸல் அலை அவர்கள் மீது வெளிப் படுத்தப் பட்டது ( அருளப்பட்டது).

குரானை பாதுகாத்துக் கொள்ள யார் பொறுப் பேற்றது?

அல்லாஹ் தானே குரானை பாதுகாத்துக் கொள்ள பொறுப்பேற்றுக் கொண்டான்.

குரானை தொடுவதற்கான நிபந்தனைகள் என்ன?

ஒருவர் தூய்மையானவராகவும், ஒளு உள்ளவராகவும் இருக்கவேண்டும்.

அதிகமாக படிக்கப் படுகிற புத்தகம் எது?

அதிகமாக படிக்கப் படுகிற புத்தகம் ( குரான்)

குரானின் தலைப்பு ( விவாதப் பொருள்) என்ன?

மனிதன் (மனித வாழ்வியல் நெறி)

குரானில் கூறப்பட்ட குரானின் வேறு பெயர்கள் என்ன?

அல் புர்கான்,அல் கிதாப்,அல் திக்ர்.அல் நூர்,அல் ஹுதா

குரானில் உள்ள மக்கீ சூராக்கள் எத்தனை?

( மக்காவில் அருளப்பட்ட சூராக்கள்)

A) 86

குரானில் உள்ள மதனி சூராக்கள் எத்தனை? ( மதினாவில் அருளப்பட்ட சூராக்கள்)

 A) 28

குரானின் மன்ஜில்கள் (படித்தரங்கள்)எத்தனை?

A) 7

குரானின் ஜுஸுவுகள் எத்தனை?

A) 30

குரானின் அத்தியாயங்கள் எத்தனை?

A) 114

குரானின் ருக்கூ கள் ( பத்திகள்) எத்தனை?

 A) 540

குரானின் வசணங்கள் எத்தனை?

A) 6666

( 6236 என்பதே இன்றைய குரானின் வசணங்கள் - இரண்டு அல்லது மூன்று வசணங்களை ஒரே வசணமாக எடுத்ததினால் - அல்லாஹ் தானே குரானை பாதுகாத்துக் கொள்ள பொறுப்பேற்றுக் கொண்டாதால் நாம் அதிகப் படியாக ஆராயத் தேவையில்லை.)

அல்லாஹ் என்ற வார்த்தை குரானில் எத்தனை முறை இடம் பெற்றிருக்கிறது?

A) 2698

குரானில் எத்தனை வகையான வசணங்கள் இட்ம் பெற்றிருக்கின்றன?

A) 10

குரானின் முதல் ஹாபிஸ் யார்? ( மணனம் செயதவர்)

முஹம்மது நபி ஸல் அலை அவர்கள்

முகம்மது நபி மரணம் எய்திய போது குரானை மணனம் செய்திருந்தவர்கள் எத்தனை பேர்?

A) 22

குரானில் ஸஜ்தா செய்ய வேண்டிய வசணங்கள் எத்தனை?

A) 14

( ஷாபி இமாமின் கருத்துப்படி 15 - (22:77 -அதிகப் படியாக.))

குரானில் முதலில் இடம் பெறும் ஸஜ்தா எந்த ஜுஸ்வின்,அத்தியாயத்தின் ,எத்தனையாவது வசணத்தில் இடம் பெறுகிறது?

7 வது ஜுஸ்வு,7 வது அத்தியாயத்தின் 206 வது வசணம்.

ஸலாத் ( தொழுகை/பிரார்த்தணை ) பற்றி எத்தனை முறை குரானில் கூறப் பட்டுள்ளது?

700முறை

ஸகாத்( தருமம்) பற்றி எத்தனை முறை குரானில் கூறப் பட்டுள்ளது?

 A) 150

யா அய்யுஹன் நபி என்று குரானில் எத்தனை முறை கூறப் பட்டுள்ளது?

11 முறை

குரானில் முஹம்மது நபியை "அஹமது " என்று எங்கு குறிப்பிடப் பட்டுள்ளது?

28 வது ஜுஸ்வின் - சூரா ஸஃப் வின் 6 வது வசணத்தில் ( 61:6)

முஹம்மது (ரசூலுல்லாஹ்)(ஸல்) ,அஹமது(ஸல்) என்று குரானில் எத்தனை இடத்தில் இடம் பெறுகிறது?

முஹம்மது (ரசூலுல்லாஹ்)(ஸல்) - 4 முறை , அஹமது(ஸல்) என்று- 1 முறை.

குரானில் அதிகமான முறை இடம் பெற்று உரையாடப்பட்ட  நபியின் பெயர் என்ன?

மூஸா அலை ஸலாம் .

குரானின் கதீப்-வஹி ( பிரதி எழுதியோர்கள் என யாரை அழைக்கிறோம்?

அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு ,உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு,ஜைது இப்னு ஹாரித்,அப்துல்லா பின் மஸூது.

குரானில் உள்ள வசணங்களை முதலில் எண்ணி சொல்லியவ்ர் யார்?

ஆயிஷா ரலியல்லாஹ் அன்ஹா

யாருடைய அறிவுரையின் படி அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு குரானை தொகுக்கும் பணியினை ஏற்றார்?

உமர் பாரூக் ரலியல்லாஹ் அன்ஹு

யாருடைய ஆணையினால் குரான் முழுவதுமாக எழுத்து வடிவமாக ஆக்கப் பெற்றது?

அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு

குரைஷி பழங்குடியினரின் இலக்கிய நடையில் குரானை ஒதுவதற்கு வரையறுத்தவர் யார்?

உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு

உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹு அவர்களால் தொகுக்கப்பட்ட குரானின் பிரதிகள் எங்கு எத்தனை உள்ளன?

2 பிரதிகள் மட்டும், ஒன்று தாஷ்கன்ட்டுவிலும்,மற்றொன்று இஸ்தான்புல் -லிலும் உள்ளன.

ஹழ்ரத் ஜஆபிர் பின் முதிம் அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு காரணமான ,முகம்மது நபி அவர்களால் தொழுகையின் போது ஓதப் பெற்ற அத்தியாயம் எது?

சூரா தூர் ( மலை)

இஸ்லாத்தின் எதிரியாய் இருந்த உத்பாவின் காதுகளில் ஒளித்து ஸஜ்தாவில் விழ வைத்த முஹம்மது ஸல் அவர்களால் ஓதப்பட்ட அத்தியாயம் எது?

ஹாம் மீம் ஸஜ்தா என்ற அத்தியாயத்தின் முதல் ஐந்து வசணங்கள்.(41:1-5)

உலகில் எற்படுத்தப் பட்ட குரான் கூறும் முதல் ஆலயம் எது? ( உலகின் முதல் ஆலயம் எது குரானின் படி?)

கஃபா

குரான் கூறும் இரு மனித குழுக்கள் யாவர்?

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொள்ளாதோர்.

பின் வரும் சந்ததியினருக்கு அறிவுரை பெறும்  மாதிரியாக யாருடைய ( இறந்த ) உடலை பாதுகாப்பதாக அல்லாஹ் குரானில் கூறுகிறான்?

ஃபிர்அவ்ன் (பரோன்)

ஃபிர்அவ்ன் (பரோன்)( இறந்த ) உடலை தவிர வேறு எதை அறிவுரை பெறும்  மாதிரியாக பின் வரும் சந்ததியினருக்கு வைக்கப் பட்டுள்ளது?

 நோவாவின் கப்பல்

நோவாவின் சேதமடைந்த கப்பல் இறுதியாக சென்றடைந்த இடம் எது?

ஜூதி மலை(க் குகை. )

குரானில் பெயர் கூறப்பட்டுள்ள முஹம்மது ஸல் அவர்களின் தோழர் பெயர் என்ன?

ஜைது பின் ஹாரித்.

குரானில் பெயர் கூறப்பட்டுள்ள முஹம்மது ஸல் அவர்களின் உறவினர் பெயர் என்ன?

அபூ லஹப்.

தன் தாயாரின் பெயரைமுன் நிறுத்தி குரானில் கூறப்படும் நபியின் பெயர் என்ன?

ஈஸா அலை ஸலாம் அவர்களை  "ஈஸா பின் மர்யம் " என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

போர் நடை பெறாமலே "ஃபத்கும் முபீன்" என்று பெயர் கொடுக்கப் பட்ட உடன்படிக்கை எது?

ஹுதைபியா உடன் படிக்கை.

குரானில் கூறப்பட்ட சைத்தானின் வேறு பெயர்கள் என்ன?

இப்லீஸ், அஸ் சைத்தான்

எந்த வகை படைப்புகளில் இருந்து இப்லீஸ்கள் உருவாகின என குரான் கூறுகிறது?.

ஜின்

பனீ இஸ்ரவேலர்களுக்கு ஏவப்பட்ட எந்த வணக்கங்கள் முஸ்லிம் சந்ததியினருக்கும் தொடரும் என குரான் கூறுகிறது?

ஸலாத், ஜகாத் ( தொழுகையும் ,ஜாகாத்தும்) - அல் பகரா:43 ( 2:43)

குரான் கூறும் உறுதியான நாள் எது என கூற் முடியுமா?

யவ்முல் கியாம் ( இறுதித் தீர்ப்பு நாள்)

அவர்களைக் கொண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான் , அவர்களும் அல்லாஹ்வை கொண்டு மகிழ்ச்சி அடைவதாக குரான் கூறும் அவர்கள் யார்?

முஹம்மது நபி ஸல் அவர்களின் தோழர்கள்.

மீண்டும் மீண்டும் குரான் பற்றி கூறப்படும் முஸ்லிம்களுக்கு அல்லாத வேத நூல் எது?

சீக்கியர்களின் வேத நூலான கிரான்த் ஸாஹெப்

எந்த வருடத்தில் எழுத்துக் குறியீடுகள் குரானில் சேர்க்கப் பட்டன?

ஹிஜ்ரி 43

குர்ஆனின் முதல் மெய்யான மாணவர்கள் யார்

அஸ் ஹாபுஸ் ஸூபா.

குரான் துறை முதலில் ஏற்படுத்தப் பட்ட உறைவிட பல்கலை கழகம் எது?

மஜ்ஜிதுன் நபவி ( நபியின் பள்ளி)

அல்லாஹ் மனிதனுக்கு சொல்ல விரும்பும் செய்திகளை எந்த உயர் குணமுள்ள ,இறைப் பற்று மிகுந்த மனிதர்கள் மூலம் சொல்லுகிறான்

நபி, இறைத்தூதர்

எந்த வகையான மனிதர்களை குரான் உருவாக்க முயலுகிறது.

முமீன்

ஒருவனின் நன் மதிப்பு எதைக் கொண்டு அளவிடப் படுகிறது என குரான் கூறுகிறது.

இறையச்சம்

தீமைகளுக்கு காரணமாக குரான் எதைக் கூறுகிறது.

சாராயம் ( போதைப் பொருட்கள்)

குரானில் காணப்படும் முக்கியமான இருவகை வசணங்கள் யாவை?

முஹகாமத், முத்தாஷாபியத்

குரானில் மிகவும் நீளமான ( பெரிய) அத்தியாயம் எது?

ஸூரா அல் பகரா ( பசுமாடு) (இரண்டாவது அத்தியாயம்)

குரானில் மிகவும் சிறிய அத்தியாயம் எது?

ஸூரா அல் கவுஸர்(மிகுந்த நன்மைகள்) (108 வது அத்தியாயம்)

குரான் முதலில் அருளப்பட்ட போது முஹம்மது நபி ஸல் அவர்களின் வயது என்ன?

40 வயது.

முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு மக்காவில் எவ்வளவு காலம் குரான் வெளிப்படுத்தப்பட்டது?

13 வருடங்கள்

முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு மதினாவில் எவ்வளவு காலம் குரான் வெளிப்படுத்தப்பட்டது?

10 வருடங்கள்

குரானின் முதல் அத்தியாயம் எங்கு வெளிப்படுத்தப் பட்டது?

மக்காவில்

குரானின் கடைசி அத்தியாயம் எங்கு வெளிப்படுத்தப் பட்டது?

மதீனாவில்

குரான் முழுமையாக வெளிப்பட எத்தனை ஆண்டுகள் ஆகின?

22 வருடங்கள்,5 மாதங்கள்,14 நாட்கள்.

ஒவ்வொரு ரக்காத் தொழுகையின் போதும் கட்டாயமாக ஓத வேண்டிய குரானின் அத்தியாயம் எது?

ஸூரா அல் ஃபாத்திஹா- (முதல் அத்தியாயம் )

குரானில் எந்த ஸூராவை பிரார்த்தனையாக அல்லாஹ் கற்பித்துள்ளான்?

ஸூரா அல் ஃபாத்திஹா- (முதல் அத்தியாயம் )

ஸூரா அல் பாத்திஹாவை குரானில் முதலில் வைக்க வேண்டிய காரணம் என்ன?

அது குரானின் கதவு

குரானில் எந்த அத்தியாயம் முதலில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது?

ஸூரா அல் ஃபாத்திஹா- (முதல் அத்தியாயம் )

குரானில் காணப்படும் தனிப்பட்ட ஒரு பெண்மணியின்  பெயர் என்ன?

மரியம் அலை ஸல்

குரானின் எந்த அத்தியாயத்தில் அதிக போதனைகள் காணப்படுகிறது?.

ஸூரா அல் பகரா ( 2வது அத்தியாயம்)

முஹம்மதுய் ஸல் அவர்களும், ஜிப்ரீல் அலை அவ்ர்களும் இரண்டாவதாக எங்கு எப்பொழுது சந்தித்துக் கொண்டனர்?

ரமலாண் மாதம் 18 ம் நாள் வெள்ளிக் கிழமையில் ஹீரா குகையில்

குரானின் முதலில் இறங்கிய இரு வசணங்களுக்கு இடைப் பட்ட கால இடைவெளி எவ்வளவு?

2 வருடம்,ஆறு மாதங்கள்

பிஸ்மில்லா இல்லாமல் துவங்கும் குரான் அத்தியாயம் எது?

ஸூரத்துத் தௌபா அல்லது பராத் (9வது அத்தியாயம்)

குரானில் எநத அத்தியாயத்தில் பிஸ்மில்லா என்ற சொற்றொடர் இரு முறை வந்துள்ளது?

ஸூரா அல் நம்ல் ( 27வது அத்தியாயம் - எறும்புகள்)

குரானில் எத்தணை அத்தியாயங்கள் நபி மார்களின் பெயர்களை கொண்டு அழைக்கப் படுகின்றன? அவை யாவை?

6 அத்தியாயங்கள்

1.ஸூரா அல் யூனூஸ்(அத்தியாயம் 10)

2.ஸூரா அல் ஹூத்(அத்தியாயம் 11)

3.ஸூரா அல் யூஸூப்- (அத்தியாயம் 12)

4.ஸூரா அல் இப்ராஹீம்(அத்தியாயம் 14)

5.ஸூரா அல் நூஹ்(அத்தியாயம் 71)

6.ஸூர அல் முஹம்மது.(அத்தியாயம் 47)

குரானின் எந்த அத்தியாயத்தில் "ஆயத்துல் குர்ஸி (வசணங்களின் அரியாசணம்)

3 வது ஜுஸ்வின் முற்பகுதியில் ( 2:255)

அல்ளாஹ்வின் பல்வேறு திரு நாமங்கள் எத்தனை?

A) 99

குரானில் குறிப்பிடப்பட்ட நபிகள் அல்லாத பெயர்கள் என்ன?

லுக்மஆன்,எஹிப்தின் அஜீஸ்( மந்திரி), துல்கர்னைன்

அபூபக்கர் ரலி அவர்களின் காலத்தில் குரானை புத்தக வடிவில் தொகுக்கும் பணியில் குழுவாகசெயலாற்றியவர்கள் எத்தனை பேர்?

75 பேர் கொண்ட குழு

இலட்சக்கணக்கான மக்களால் மனப்பாடம் செய்யப்பட்ட உலகின் ஒரே புத்தகம் எது?

அல் குரான்

குரானின் ஒரு சில வசணங்களை கேட்ட ஜின்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டது யாது?

இணையற்ற போதனைகளை நாங்கள் கேட்டோம் ,அது எங்களுக்கு நேர் வழி காட்டும்

உலகில் பிரசித்தி பெற்ற குரான் ஆங்கில மொழிபெயர்பாளர்கள் யார்?

முஹம்மது மர்மதுகே பிக்காத்தல் ,அல்லாமா யூஸூஃப் அலி,

குரான் உலகில் எத்தனை மொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது?

ஏறக்குறைய 103 மொழிகளில்

குரானை உருது மொழியில் முதலில் மொழி பெய்ர்த்தவர் யார்?

மவுலானா ஷாஹ் ரபியுத்தீதன்  முகாதிஸ் தெகல்வி

இறுதி தீர்ப்பு நாளின் போது நம் நிலமை என்ன என்று குரான் கூறுகிறது? 

ஒவ்வொருவரும் மனக்கவலை கொண்டவர்களாக!.

குரானில் கூறப்பட்ட எந்த நபியின் மூன்று தலைமுறையினரும் நபிகளாக இருந்தனர்?

இப்ராஹீம் அலை ஸலாம்.

உலகில் எந்த புத்தகம் பழமையான சட்ட விதி முறைகளை அழித்தொழித்தது?

அல் குரான்

சொத்துகளையும் ( பிள்ளைகள்),பொருள் வளத்தையும் குரான் என்னவாக கூறுகிறது?

உங்களின் நம்பிக்கையின் சோதனையாகவே

குரானினின் படி யார் "காத்தமுன் நபிய்யீன்" என்று அழைக்கப் படுகிறார்?

நபி முஹம்மது ஸல் அலை அவர்கள்

உலகின் தோற்றத்தையும் ,முடிவையும் மெய்யாகச் சொல்லும் புத்தகம் எது?

அல் குரான்.

மக்காவிற்கு குரான் கூறும் வேறு பெயர் என்ன?

பக்கா,பலதுல் அமீன்

மதீனாவிற்கு குரான் கூறும் வேறு பெயர் என்ன?

யத்ரிப்

பனீஇஸ்ரவேலர்கள் எந்த வழித்தோன்றலகள் என குரான் கூறுகிறது?

நபி யாகூப் அலை ஸலாம்.இவர்கள் இஸ்ராயீல் என்றும் அறியப்படுகிறது.

குரானில் கூறப்பட்ட பள்ளிவாசல்கள் எவை?

1.)மஜ்ஜிதுல் ஹரம் 2.மஜ்ஜிதுல் ஜிரார் 3.மஜ்ஜிதுல் நபவி 4.மஜ்ஜிதுல் அக்ஸா 5.மஜ்ஜிதுத் கூபா

குரானில் கூறப்படும் மலக்கு மார்களின் பெயர்கள் எவை?

ஜிப்ரீல் அமீன் அலை ஸலாம்  2.மீக்காயில் அலை ஸலாம்   3.ஹாரூத் அலை ஸலாம்  4. மாரூத் அலை ஸலாம்

(பி.ஜே அவர்களின் மொழி பெயர்ப்பில் 3.ஹாரூத் அலை ஸலாம்  4. மாரூத் அலை ஸலாம் அவர்களை ஷைத்தான்கள் என்று மொழி பெயர்த்திருந்தார்)

http://www.ayappaditoday.com


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: