Saturday, May 31, 2014

Fwd: வேலை.நெட்




வேலை.நெட்

Link to வேலை.நெட்

Hablis Hotels -ல் Steward பணிக்கு Any Degree /Diploma பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 05:49 PM PDT

The post Hablis Hotels -ல் Steward பணிக்கு Any Degree /Diploma பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Artech நிறுவனத்தில் Trainee பணிக்கு BE/B.Tech பட்டதாரிகள் தேவை Across India – May 2014

Posted: 30 May 2014 05:45 PM PDT

The post Artech நிறுவனத்தில் Trainee பணிக்கு BE/B.Tech பட்டதாரிகள் தேவை Across India – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

CSS Corp நிறுவனத்தில் Technology Support பணிக்கு Any Degree/Diploma பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 05:38 PM PDT

The post CSS Corp நிறுவனத்தில் Technology Support பணிக்கு Any Degree/Diploma பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Reliance General Insurance நிறுவனத்தில் MIS Executive பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 05:32 PM PDT

The post Reliance General Insurance நிறுவனத்தில் MIS Executive பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

HCL நிறுவனத்தில்Technical Support Officer பணிக்கு BE/B.Tech/B.Sc/BCA/MCA பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 05:26 PM PDT

The post HCL நிறுவனத்தில்Technical Support Officer பணிக்கு BE/B.Tech/B.Sc/BCA/MCA பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

CSS Corp நிறுவனத்தில் IT Recruiter பணிக்கு BE/B.Tech/B.Com/B.Sc பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 05:20 PM PDT

The post CSS Corp நிறுவனத்தில் IT Recruiter பணிக்கு BE/B.Tech/B.Com/B.Sc பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

MIOT மருத்துவமனையில் HR Trainee/ Junior Executive பணிக்கு BHM/MBA/PGDM பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 04:50 PM PDT

The post MIOT மருத்துவமனையில் HR Trainee/ Junior Executive பணிக்கு BHM/MBA/PGDM பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Ziqitza Health Care நிறுவனத்தில் Staff Nurse பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 30 May 2014 04:40 PM PDT

The post Ziqitza Health Care நிறுவனத்தில் Staff Nurse பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Reliance நிறுவனத்தில் Customer Service Associates பணிக்கு +2 படித்தவர்களுக்கு வேலை – Chennai, Hyderabad – May 2014

Posted: 29 May 2014 10:48 PM PDT

The post Reliance நிறுவனத்தில் Customer Service Associates பணிக்கு +2 படித்தவர்களுக்கு வேலை – Chennai, Hyderabad – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

SITEL நிறுவனத்தில் Technical Support பணிக்கு Any பட்டதாரிகள் தேவை Chennai- May2014

Posted: 29 May 2014 10:34 PM PDT

The post SITEL நிறுவனத்தில் Technical Support பணிக்கு Any பட்டதாரிகள் தேவை Chennai- May2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
You are subscribed to email updates from வேலை.நெட்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

அல்சரின் அறிகுறிகளும் அதை குணப்படுத்துவதற்கான வழிகளும்!

அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.

முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் அவசரத் தன்மை கொண்டவை. குறிப்பாக மலம் ஒரு இருண்ட நிறத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அல்சரை குணப்படுத்தும் சில விதிமுறைகளை பார்ப்போமா!!!

1. சிவப்பு முட்டைகோஸை சாறெடுத்து அருந்தலாம் அல்லது அப்படியே உண்ணலாம்.

2. தொடர்ந்தோ அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டாலோ, அது அல்சரின் முதல் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே இந்த நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

3. ஒருவேளை மருந்துகள் சாப்பிட்டும், நிலைமை மோசமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளில் ஏதாவது ஒன்றை பரிசோதிக்க வேண்டும்.

- உயர் இரையக தொடர் (upper gastrointestinal (G.I) series): அல்சர் உள்ளதா என்பதை அறிய பேரியம் என்ற பானத்தை குடித்துவிட்டு x-கதிர்களை எடுக்க வேண்டும்.

- எண்டோஸ்கோப்பி (endoscopy): உணர்வற்ற நிலையில் இருக்கும் போது, மருத்துவர் உங்கள் வாய் வழியாக மெல்லிய குழாய் ஒன்றை செலுத்துவார். அக்குழாய் தொண்டை மற்றும் உணவுக்குழாய் மூலம் வயிற்றை சென்றடையும். அந்த குழாயின் முடிவில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமரா மூலம் மருத்துவர் செரிமான பாதையை பார்த்து, அங்குள்ள ஒரு திசு மாதிரியை ஆய்வு செய்வார்.

- ஆன்டிபாடிக்களுக்கான ரத்தப் பரிசோதனையின் மூலம் எச்.பைலோரி (h.phylori) பாக்டீரியா உள்ளனவா என்பதை அறியலாம். எச்.பைலோரி பாக்டீரியா இருக்கிறதா என்று அறிய மல பரிசோதனை செய்ய வேண்டும். யூரியா என்ற பொருளை கரைத்து குடித்த பின், உங்கள் மூச்சை சரி பார்க்கும் மூச்சுப் பரிசோதனையை செய்ய வேண்டும்.

4. அல்சர் நோய் உள்ளதை உறுதி செய்த பின் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்சரை சரி செய்யலாம்.

5. புத்தம் புதிய பழ வகைகள், காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அல்சர் குணமாவது மட்டுமல்லாமல், அதனை வராமலே தடுக்கலாம்.

6. ஃப்ளேவோனாய்டுகள் கொண்ட உணவு மற்றும் சாறு வகைகளை சாப்பிட வேண்டும். ஆப்பிள்கள், செலரி, கிரேன் பெர்ரீஸ், பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றிலும், சில வகையான தேநீர் வகையிலும், இந்த ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன.

7. காரசாரமான உணவை உண்ட பின் அல்சர் வலி அதிகரித்தால், அவற்றை நீக்கவும். காரசாரமான உணவுகளை உண்ணுவதால் அல்சர் வருவதில்லை என்று மருத்துவர்கள் இப்பொழுது கூறினாலும், சில ஆய்வுகள், இது போல் உணவு உண்ட பின் வலியின் அறிகுறி அதிகமாவதாக கூறுகிறது.

8. காபியை முழுமையாகவோ தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கார்போனேட் பானங்கள் மற்றும் காப்ஃபைன் நீக்கப்பட்ட பானங்களையும் நீக்க வேண்டும். இந்த பானங்கள் அனைத்தும் வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகரிக்கச் செய்து புண்களின் அறிகுறிகளை மிகவும் மோசமாக்கிவிடும்.

9. அல்சர் பூரணமாக குணமாகும் வரை மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.


10. அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அல்சரின் அறிகுறிகளை கட்டுப்படுத்த தன்னிச்சை அமில முறிவுகளை பயன்படுத்தலாம்.

நன்றி:http://www.tamilcloud.com

http://www.onlytamil.in/2013/04/blog-post.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

உங்கள் முக அழகைப் பாதிக்கிறதா கருவளையம் ! இதோ அதை மறைய வைக்க சில டிப்ஸ் !


உங்களை பளிச்சென்று காட்டுவதே முகம் தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். பல பெண்களுக்கு அவர்களின் கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு.நாம் இங்கே அவர்களின் கண் குறைபாட்டை குறிப்பிடவில்லை.அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை தான் குறிப்பிடுகிறோம்.கண்களுக்கு கீழ் நோக்கினால் இந்த கருவளையத்தைக் கண்டுபிடித்து விடலாம். அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகையேக் கெடுத்து விடும். இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, ஏற்பட்டு இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.

கருவளையத்தை எப்படி விரட்டுவது?

கருவளையத்தை விரட்டுவதற்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

http://www.valaitamil.com/eye-circle-remover-tips_7233.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

மாணவர்களுக்கு போசாக்கான அவசர உணவுகள்

 பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம்.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை.



சிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல்.

அதிகாலையில் பாடசாலை, திரும்பி வந்ததும் அவசரமாக எதையாவது வயிற்றில் திணித்துவிட்டு ரியூசனுக்கு ஓட வேண்டும்.

நின்று நிதானித்து ரசித்துச் சுவைத்துச் சாப்பிட நேரமும் இல்லை. அவர்களுக்குப் பிடித்த சாப்பாடும் வீட்டில் கிடையாது.

என்ன செய்யலாம்?  

சமையலறையில்  காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகளை அமெரிக்காவின் Academy of Nutrition and Dietetics தந்திருக்கிறது  

·         உரித்த முழு வாழைப்பழத்தை யோகொட்டினுள் (yogurt) அமுக்கி எடுங்கள். அதை ஏதாவது crushed cereal அரிசிமாக் குருணல், அல்லது ரவை போன்ற ஒன்றில் போட்டு உருட்டி எடுங்கள். பிரிட்ஜில் வைத்து உறையவிட்டு பின் உண்ணக் கொடுங்கள். குளிரக் குளிர போஸாக்கான உணவு என்பதால் மறுக்காமல் விரும்பி உண்பார்கள். 

·          பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்ரதுக் கலவுங்கள். சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போஜனை நிறைந்தது. 

·         அலங்கார சான்விட்ச் . பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம்.

·         பீநட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான்(Bran flake)  பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள். உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.

நம்ம நாட்டிற்கு

இவை யாவும் பிரிட்ஜ் வசதியுள்ளவர்களுக்குத்தானே. இன்னமும் மின்சாரமும் பிரிட்ஜ்சும் கிடைக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

பொரிச்ச அரிசிமா, உழுந்துமா புளுக்கொடியல்மா என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலி்ல் போட்டு வைத்திருந்துதான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.

இன்றைக்கும் கூட இவற்றைத் தயாரித்து வைக்கலாம்.



அவல் மற்றொரு சுலப உணவு. தேங்காயப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம். சற்றுப் போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம்.

அவசரத்திற்கு புருட் சலட்டிற்கு ஐஸ்கிறீம் சேர்த்துக் கொடுக்கலாம். பழச்சத்துடன் பால் சீனி கலந்திருப்பதால் புரதம், இனிப்பு விற்றமின் அனைத்தும் அதில் கிடைக்கும்

http://hainallama.blogspot.in/2013/03/blog-post.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, May 29, 2014

நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?

நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?

மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில……….
நிர்வாகம்
கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள்
சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது M.Phil, M.Tech, Phd, போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகாரம்
தேர்ந்தெடுக்கும் கல்லூரி, மத்திய, மாநில அரசுகளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.
உள்கட்டமைப்பு வசதிகள்
தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
கல்லூரியின் பிரபலம்
புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும். கடந்த ஆண்டு கல்லூரியின் மொத்த தேர்ச்சி விகிதத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.
பாடத்திட்டங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள்தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.
இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.
கட்டணம்
கட்டணங்களை பொறுத்தவரை சிலர் அட்மிஷனின் போதே முழு செமஸ்டருக்கான பணம் மற்றும் ஹாஸ்டல் கட்டணம் போன்ற மற்றக்கட்டணங்களையும் சில்ர் செலுத்தி விடுகின்றனர். ஆனால் கல்லூரி எதிர் பார்த்த அளவில் இல்லாவிட்டாலோ, அல்லது அதைவிட நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டாலோ நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தாலும் அதனை திரும்ப பெற முடியாது ஆகவே பகுதி பணம் மட்டும் ஆரம்பத்தில் செலுத்தினால் வீண்விரயத்தை தவிர்க்கலாம்.
பிற வசதிகள்
விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்


--
*more articles click*
www.sahabudeen.com


Tuesday, May 27, 2014

பழகத் தெரிந்தாலே பலே வெற்றி

பழகத் தெரிந்தாலே பலே வெற்றி

பழக்க வழக்கங்கள்தான் உறவு வட்டத்தை வலப்படுத்தும். தொடர்புகளை பலப்படுத்த,  நம் மீதான நல்ல அபிப்பிராயங்களே கைகொடுக்கும். தனிப்பட்ட முறையில், பிறர் அலுவலகங்களில், விசேஷ வைபவங்களில், பொது இடங்களில் பழகும் முறைகளைப் பண்படுத்தும் போது நம்மீதான நேசம் வளர்கிறது. அதற்கான ஆக்கபூர்வமான டிப்ஸ், இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.  இதுவும் ஒருவகை புதையல் வேட்டைதான்பலே வெற்றிக்கான பளீர் டிப்ஸ்கள் கீழே  உங்களுக்காக..
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 1
நடைப்பழக்கம் மேற்கொள்கிறீர்கள். நன்கு தெரிந்தவர் எதிரே வருகிறார். உற்சாக மிகுதியால் ஓரங்கட்டி அரட்டையை ஆரம்பித்து விடாதீர்கள். தொடர்நடை கலோரிகளை எரிப்பதற்காக. சைகையில் வணக்கம் சொல்லி, புன்சிரித்து நகர்ந்து விடுங்கள். அது, உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். அவருடைய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 2
உங்கள் வசம் உங்கள் அறிமுக அட்டைகள் நிச்சயம் இருக்கும். அதற்காக அறிமுகமாகும் அனைவருக்குமே அதைத் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்தச் சந்திப்பின் மூலம் அவர் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அவராகவே கேட்டுப் பெறுவார். பலரும், சந்தித்த அடுத்த நிமிடமே அந்த அட்டையை எடுத்து நீட்டுவார்கள். அலுவலகரீதியான சந்திப்பு களில் மட்டும் உடனே அறிமுக அட்டையைத் தரலாம். சம்பிரதாய மற்ற அறிமுகங்களிலோ, சந்திப்புகளிலோ விடை பெறும்போது தேவைப்பட்டால் மட்டுமே அறிமுக அட்டையைக் கொடுங்கள்.
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 3
நண்பர் ஒருவருடன் பொது இடத்திலோ அல்லது அவருடைய அலுவலகத்திலோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர் பேசுவதை வைத்தே என்ன விஷயமென யூகித்து விடுகிறீர்கள். அவர் போனை வைத்ததும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு அந்த உரையாடல் பற்றிய கருத்து முத்துக்களை உதிர்க்க வேண்டாம். இது நம்மைப் பற்றி மிகவும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
நன்றி: நமது நம்பிக்கை


--
*more articles click*
www.sahabudeen.com


Sunday, May 25, 2014

காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!

காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!

அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
'காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?' என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.
பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.
காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.
நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம்.
'பசித்தால் பத்தும் பறந்து போகும்' என்பார்கள். பசி வந்தால் நமக்கே எதுவும் புரியாது. அவ்வாறெனில் குழந்தைகளை கேட்கவேண்டுமா? மூளையின் செயல்பாடுகளுக்கு பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக பிஸ்கெட்டும், பிரெட்டும் சாப்பிட்டுவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளோ வகுப்பில் தூங்கி வழிகின்றனர். குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளார்கள் என்றால் அதற்கு காலை உணவை சாப்பிடவில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.
குழந்தைகளுக்கு காலை உணவு சரியில்லை என்றால்
வகுப்பில் தூங்கி வழிவார்கள்
படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள்
உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்
படிப்பது எதுவும் உள்ளத்தில் பதியாது
படிப்பு ஒரு சுமையாக மாறும்
படித்தவற்றை நினைவூட்டுவது கடினமாகும்.
ஆனால், குழந்தைகளுக்கு காலை உணவை அளிக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த குழப்பமான மனோநிலையில் உள்ளனர். ஏன் குழந்தைகள் காலை உணவை சாப்பிடமால் பள்ளிக்கூடம் செல்கின்றார்கள்? பல காரணங்கள் உள்ளன.
பசியில்லை, பள்ளிக்கூடம் செல்லும் அவசரத்தில் காலை உணவில் அக்கறை இல்லை, ஸ்கூல் வேன் வந்துவிடுமே என்ற பதட்டம், எப்பொழுதும் ஒரே காலை உணவு என்பதால் அதில் ஏற்படும் வெறுப்பு, ருசியின்மை, இரவில் தாமதமாகும் உணவு பழக்கம், பெற்றோரிடம் நேர மேலாண்மை இல்லாமை, சரியான திட்டமிடல் இன்மை, போதிய உறக்கம் இல்லாமை, அளவுக்கதிகமான பாட சுமை, பெற்றோரின் அவசரமான வாழ்க்கை முறை, அசிரத்தை என கூறலாம்.
மேலேக் கூறப்பட்ட ஏதேனும் ஒரு காரணமே உங்கள் குழந்தைகளின் காலை உணவு இழப்பதன் பின்னணியில் அடங்கியிருக்கும். காலையில் பசி அவ்வளவாக இருக்காது. இந்நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு காலை முதல் பெல் அடித்தவுடன் பசி வயிற்றை கிள்ளத் துவங்கும். ஆனால் என்ன செய்ய? மதியம் வரை அடக்கிக் கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை. இத்தகையதொரு சூழலில் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா?
ஆகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை அளிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணரவேண்டும்.
யூனிஃபார்ம் உடுத்தி, ஷூவும், ஷாக்சும் அணிந்து, டை கட்டினால் எந்த குழந்தையும் டிப்-டாப்பாக மாறிவிடும். ஆனால், வெளி அலங்காரத்தில் காரியமில்லை. நல்ல ஆடை அணிவதில் இருக்கும் கவனத்தையும், ஆர்வத்தையும் சத்தான உணவை குழந்தைக்கு அளிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். அப்பொழுதே அக்குழந்தை சமர்த்தாக படிப்பில் கவனம் செலுத்தும்.
இவ்விஷயத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள்:
1.குழந்தைக்கு 7 மணிக்கே இரவு உணவை தயார் செய்து கொடுங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்கவேண்டும்.
2.இரவு 9 மணிக்கு குழந்தையை தூங்க அனுமதியுங்கள்.
3.காலை ஃபஜ்ர் வேளையில்(5 to 6) குழந்தையை எழச் செய்யுங்கள்.
4.காலையில் சற்று நேரம் ஏதேனும் விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள்.
5.குழந்தை குளித்து முடித்து காலை உணவை முடிக்கும் வரை ஜோக்குகள், கதைகள், பாடல்கள் சொல்லலாம். இதனால் அவர்கள் உற்சாகமடைவார்கள்.
6.காலை உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா? என்பதை கவனியுங்கள்.
7.காலை உணவு குறித்து முந்தைய இரவே திட்டமிடுங்கள்.
8.வாரத்தில் 7 தினங்களும் 7 வகையான காலை உணவை தயாரியுங்கள்.
9.நேர மேலாண்மையை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.
10.காலை எழுந்தவுடன் காலைக் கடன்கள், மார்க்க கடமைகள்(தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல்), ஆடை அணிவது, சாப்பிடுவது ஆகியவற்றிற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் பிற்காலத்தில் சிறந்த பிள்ளைகளாக மாறுவார்கள். அதேவேளையில் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். சொல்வதை விட நாம் செய்து காட்டும் பொழுதுதான் குழந்தைகள் அதில் இருந்து பாடம் படிப்பார்கள்.
காலை உணவு என்ன ஜோக்கா?
காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும். 'சாம்பார் ஈஸ் எ வெஜிடபிள் சூப்' என்று கூறுவதுண்டு.
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சைக் காய்கறிகளின் சத்துக்கள் இணைந்த இட்லி-சாம்பார் காம்பினேசன்  காலை உணவு தான் குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்பது நிரூபணமாகியுள்ளது.
எல்லாம் அடங்கிய பால் 'மில்க் ஈஸ் எ கம்ப்ளீட் ஃபுட்' என பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தை பால் குடிப்பதற்கு தயங்கும். ஆகையால் முற்றிலும் பால் குடிக்காவிட்டால் வைட்டமின்களின் குறைபாடுகள் ஏற்படும். நோய்களை உருவாக்கும். இதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
ஐஸ்க்ரீம் பிடிக்காத குழந்தைகள் இல்லை எனலாம். ஆகவே பாலில் ஐஸ்க்ரீம் தயாரிக்க தேவையான பவுடரை சேர்த்து புட்டிங் தயாரித்து கொடுக்கலாம். சில நாட்கள் பால் பாயசம் தயாரித்து கொடுங்கள். பாலுடன் ஆப்பிள் அல்லது இதர பழவகைகளை சேர்த்து ஜூஸ் தயாரித்துக் கொடுங்கள்.
பழ வகைகள்
பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம்.
காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும்
மதிய உணவு
காலை உணவைப் போலவே மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு தயாரிப்பதற்கு எளிதான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரியுங்கள். மதிய உணவில் குழந்தையின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மதிய உணவில் அடங்கியிருக்கிறதா? என்பதை கவனிக்கவேண்டும். மதிய உணவுடன் பழ வகை ஏதேனும் கொடுத்து அனுப்புங்கள்.
எளிதான வேலை என கருதி பலரும் குழந்தைகளுக்கு நூடில்ஸ் தயாரித்து பள்ளிக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் அக்குழந்தை நூடில்ஸ் குழந்தையாக மாறிவிடும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும். சோறு அதிகமாக கொடுப்பதை விட மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேருங்கள்.
ஆகவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களது காலை உணவில் அதிக கவனம் செலுத்துவோம். சோம்பலை கைவிட்டு, திட்டமிட்டு. ரசித்து சமைத்து அதனை அன்புடன் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். அவர்கள் சிறந்த பிள்ளைகளாக வளர கைக்கொடுங்கள்!
நன்றி: தூதுஓன்லைன்.காம்


--
*more articles click*
www.sahabudeen.com