Tuesday, April 28, 2015

நான் – ஸ்டிக் பாத்திரம்

நான் ஸ்டிக் பாத்திரம்

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் நா‌ன்‌ ‌ஸ்டி‌க் வாண‌லி ம‌ற்று‌ம் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா? ஆ‌ம் எ‌ன்றா‌ல் இ‌னி முழு‌ச் சமையலு‌க்கு‌ம் அதையே‌ப் பய‌ன்படு‌த்துவது ந‌ல்லது.
அதாவது ம‌ற்ற பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ய்க‌றிகளை‌ச் சமை‌க்கு‌ம் போது அத‌ன் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியா‌கி ‌விரையமா‌கி‌ன்றன.
எனவே நா‌ன் ‌ஸ்டி‌க் அதாவது எ‌ண்ணெ‌ய் ஒ‌ட்டாத வகை‌யி‌ல் வடிவமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் கா‌ற்க‌‌றிகளை சமை‌ப்பத‌ற்கு‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் அத‌ன் மூல‌ம் கா‌ய்க‌றிக‌ளி‌ல் இரு‌ந்து முழு ச‌க்‌தியு‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் சமைய‌ல் ‌நிபுண‌ர்க‌ள்.
மேலு‌ம், மு‌ட்டை பொ‌ரி‌ப்பத‌ற்கு‌ இதுபோ‌ன்ற நா‌ன் ‌ஸ்டி‌க் வாண‌லி அ‌ல்லது தவாவை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ஆலோசனை வழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள்.
எதுவாக இரு‌ந்தாலு‌ம் ‌நா‌ன் ‌ஸ்டி‌க் பொரு‌ட்க‌ளி‌ல் அத‌ற்கென இரு‌க்கு‌ம் மர‌க் கர‌ண்டியை ம‌ட்டு‌ம் பய‌ன்படு‌த்தவு‌ம். ‌மிருதுவான நா‌ர்களை‌க் கொ‌ண்டு தே‌ய்‌த்து கழு‌வினா‌ல் ‌நீ‌ண்ட நாளை‌க்கு நா‌ன் ‌ஸ்டி‌க் தவா‌க்க‌ள் ‌நிலை‌த்து வரு‌ம்.
நான் ஸ்டிக் கடாய், தவா போன்ற பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? கீழே உள்ள குறிப்புகளை படித்து, மனதில் பதித்துக் கொள்ளவும்.
* குறைந்த மிதமான சூடு போதுமானது.
* சமைக்கும் பொருட்கள் ஏதுமின்றி, தீயின் மேல் இருக்கக் கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால், பூசப்பட்ட கோட்டிங் பாழாகி விடும்.
* மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைக்க வேண்டும்.
* உபயோகிக்கும் முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.
* சுத்தம் செய்யும் போது, சோப்புத் தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கிளீனிங் பவுடர் பயன்படுத்தக் கூடாது.
* கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை பாத்திரத்தில் பயன்படுத்தக் கூடாது.
* மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக் கரண்டியோ பயன்படுத்துவது நல்லது.
* நான் ஸ்டிக் பாத்திரங்களை, மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல், அதற்கென்று உள்ள ஆணியில் மாட்டி பாதுகாக்க வேண்டும்.
* பல முறை உபயோகித்த பின், சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம், பாத்திரத்தின் பாதி அளவிற்கு நீர் ஊற்றவும். அதில், ஒரு தேக்கரண்டி ப்ளீச்சிங் பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும். பிறகு மிதமான சூட்டில், பத்து நிமிடங்கள் சூடேற்றவும். கொதி வரும் நிலையில், மரக்கரண்டி கொண்டு, அழுத்தமில்லாமல் தேய்த்தால், சுத்தமாகி விடும். பின், சோப்பு நீரில் கழுவி, சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.



--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, April 26, 2015

விஷமாகும் சர்க்கரை!


நேற்று, பணக்கார வீடு... இன்று, வீட்டுக்கு வீடு... 
ஸ்பெஷல் ஸ்டோரி


-
 மிகமிக முக்கியமாக ஸ்வீட்டுக்குத்தான் இதில் முதலிடம் கொடுத்து வைத்திருக்கிறோம். இளசு முதல் பெருசு வரை எல்லோரும் ஏகப்பட்ட ஸ்வீட்களோடு, தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்திருப்போம். தீபாவளிக்கு மட்டுமா... பிறந்த நாள், திருமண நாள், தேர்வில் வெற்றி பெற்ற நாள்... இப்படி விதம்விதமான கொண்டாட்டங்களுக்காகவும் ஸ்வீட்களை அள்ளிக் கட்டுகிறோம். ஆனால், இவற்றின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கண்ட கண்ட நோய்கள்... குறிப்பாக, சர்க்கரை நோயின் பிடியில் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது... என்பதை மட்டும் மூளையில் ஏற்றிக் கொள்ளவே மறுக்கிறோம்!

உலகில் சர்க்கரை நோயில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இதற்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ... தீபாவளியை அடுத்து வரும் வகையில், 'நவம்பர் 14' அன்று 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என்பதை அமைத்திருக்கிறார்கள் போலும்!

ஒரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி' என்று சொல்லப்பட்ட இந்த நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை... என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம்... வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான். அதனால்தான், 'வாழ்க்கை முறை நோய்' என்றும் இதற்கு பெயரைச் சூட்டி வைத்துள்ளனர்.

''சரியான புரிதலும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை பெருகக் காரணம்'' என்று எடுத்ததுமே தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் சென்னையைச் சேர்ந்த 'சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்' கருணாநிதி.
'
'சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன என்பதை முதலில் நாம் அனைவருமே உணர வேண்டும். சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. இதைத்தவிர கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்தப் பணியை கணையத்தில் சுரக்கும் 'இன்சுலின்' என்கிற ஹார்மோன் தொடர்ந்து செய்கிறது. அதனால் ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே 'சர்க்கரை நோய்' என்கிறோம்'' என்று நோய் பற்றி சொன்ன டாக்டர், அதற்கான அறிகுறிகள், நோயின் வகைகள், தடுப்பு முறைகள், உணவுகள் என்று அனைத்தையும் விரிவாகவே விளக்கினார்.

அறிகுறிகள்!
''அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்... உடல் பருமன். இதில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை' என்று சொல்லக்கூடிய 'ப்ரீ டயாபீட்டிஸ்' வகையும் உள்ளது.

டைப்-1: உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்-1 சர்க்கரை நோய் என்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை, 'கிருமிகள்' என்று நினைத்துத் தாக்கி, அழித்துவிடும். இதனால், இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டு, வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்த வேண்டிய சூழல் உருவாகும்.

டைப்-2: உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால், அது குறைந்த அளவாகவோ... அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கர்ப்பக் கால சர்க்கரை நோய்: பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே 'கர்ப்பக் கால சர்க்கரை நோய்' என்கிறோம். இவர்களில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்து தேவைப்படுகிறது. இந்த நோய், பிரசவத்துக்குப் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், பின்னாளில் சர்க்கரை நோய் தாக்குதலில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

ப்ரீ டயாபீட்டிஸ்: சர்க்கரை நோயாளிகளைவிட, ப்ரீ டயாபீட்டிஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 'சர்க்கரை நோய் எந்நேரமும் தாக்கக்கூடும்' என்று 'வானிலை அறிவிப்பு' ஸ்டைலில் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும்.
இந்த நான்கு நிலையிலும் இருப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்படலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்துகள், இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை!

இப்படி கண்டறியுங்கள்!
சாதாரண ரத்தப் பரிசோனை மூலமாகவே கண்டறிய முடியும் என்றாலும். முழுமையாக உறுதிபடுத்திக் கொள்ள ஜி.டி.டி பரிசோதனை, ஹெச்.பி.ஏ.1 சி பரிசோதனை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கைக்கு அடக்கமாக கிடைக்கும் 'குளுக்கோ மீட்டர்' கருவி மூலமாக, நாமே நம் விரலில் இருந்து 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விலை 1,500 ரூபாய். இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ் 'இது 10 முதல் 15 சதவிகிதம் சர்க்கரையின் அளவை துல்லியமாக காட்டுவதில்லை' என்பதுதான்'' என்ற டாக்டர், தொடர்ந்து நோய்க்கான காரணிகளைப் பற்றி சொன்னார்.

நோய்க்கான காரணிகள்..?
''டைப்-2 சர்க்கரை நோய்... 45 வயதைக் கடந்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது மற்றும் எடை அதிகரிப்பதுதான் காரணம். மரபியல் காரணமாகவும் இந்த நோய் தாக்கும். பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வருவதற்கு 80 முதல் 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால், 60 சதவிகித வாய்ப்பு இருக்கும். இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, 25 வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம்... உணவுப் பழக்கம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவையே.

இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்' நிலையில் இருக்கும்போதே வளர விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்'' என்ற டாக்டர் கருணாநிதி,

''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக, 'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து'' என்று எச்சரிக்கை செய்தார்.

வாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்!
உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

காலை உணவு... தவிர்க்க வேண்டாம்!
காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி... இதையட்டிய நேரங்களில் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் உச்சத்தில் இருக்கும். இந்நேரத்தில் சாப்பிடும்போது... கூடுதல் உழைப்பு இன்றியே, 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால், உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனியே சமைக்க வேண்டும் என்பது கிடையாது. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம். 'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும் நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம் முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள்... இனிப்பு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம். மற்றவர்கள் இனிப்புப் பொருட்களை தவிர்ப்பதுதான் நல்லது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம்.

துடிப்பான வாழ்க்கைமுறை..!
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்... இனியாவது தினமும் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதைச் செய்ய முடியாதவர்கள் எளிய நடை பயிற்சி, வீட்டு வேலைகளை செய்தல், மாடிப் படிகளில் ஏறி இறங்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.

உணவு... உஷார்!

தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்ஸா, பர்கர், கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாடு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

குறைக்க வேண்டியவை: தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு. அசைவம் மிகவும் குறைக்கப்படவேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக் கொள்ளலாம்.

எடுக்க வேண்டியவை: ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை... வயது, உடல் உழைப்பு, எடை, இதர நோய்களைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். பழங்களை கடித்துச் சாப்பிட வேண்டுமே தவிர, சாறாக அருந்தக் கூடாது.

சிறுநீரகங்கள் ஜாக்கிரதை!
'அதுதான் சர்க்கரைக்கு மருந்து, மாத்திரைகள் இருக்கின்றனவே...' என்றபடி இஷ்டம்போல மாத்திரைகளை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தால்... ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னைகள் ஆரம்பமாகிவிடும். இத்தனை நாட்களாக உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்த அதே டாக்டர், ''அடடா... கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சே. ம்... இத்தனை வருஷமா மருந்து, மாத்திரையா சாப்பிட்டிருக்கீங்க. அதோட வீரியம் சும்மா இருக்குமா, கிட்னியை காலி பண்ணிடுச்சு'' என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். பிறகென்ன, கிட்னி பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வாழ்க்கையே நரகமாகிவிடும்!
சர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில் பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



விஷமாகும் சர்க்கரை!


நேற்று, பணக்கார வீடு... இன்று, வீட்டுக்கு வீடு... 
ஸ்பெஷல் ஸ்டோரி


-
 மிகமிக முக்கியமாக ஸ்வீட்டுக்குத்தான் இதில் முதலிடம் கொடுத்து வைத்திருக்கிறோம். இளசு முதல் பெருசு வரை எல்லோரும் ஏகப்பட்ட ஸ்வீட்களோடு, தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்திருப்போம். தீபாவளிக்கு மட்டுமா... பிறந்த நாள், திருமண நாள், தேர்வில் வெற்றி பெற்ற நாள்... இப்படி விதம்விதமான கொண்டாட்டங்களுக்காகவும் ஸ்வீட்களை அள்ளிக் கட்டுகிறோம். ஆனால், இவற்றின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கண்ட கண்ட நோய்கள்... குறிப்பாக, சர்க்கரை நோயின் பிடியில் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது... என்பதை மட்டும் மூளையில் ஏற்றிக் கொள்ளவே மறுக்கிறோம்!

உலகில் சர்க்கரை நோயில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இதற்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ... தீபாவளியை அடுத்து வரும் வகையில், 'நவம்பர் 14' அன்று 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என்பதை அமைத்திருக்கிறார்கள் போலும்!

ஒரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி' என்று சொல்லப்பட்ட இந்த நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை... என்கிற அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதற்குக் காரணம்... வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான். அதனால்தான், 'வாழ்க்கை முறை நோய்' என்றும் இதற்கு பெயரைச் சூட்டி வைத்துள்ளனர்.

''சரியான புரிதலும், விழிப்பு உணர்வும் இல்லாததுதான் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை பெருகக் காரணம்'' என்று எடுத்ததுமே தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் சென்னையைச் சேர்ந்த 'சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்' கருணாநிதி.
'
'சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகளே... சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன என்பதை முதலில் நாம் அனைவருமே உணர வேண்டும். சாப்பிடும் உணவு, உடலில் உள்ள திசுக்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. இதைத்தவிர கல்லீரலும் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த குளுக்கோஸ் திசுக்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக ரத்தத்தில் கலக்கிறது. இந்தப் பணியை கணையத்தில் சுரக்கும் 'இன்சுலின்' என்கிற ஹார்மோன் தொடர்ந்து செய்கிறது. அதனால் ஒருவருக்குப் போதிய அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்றாலோ... அல்லது சுரக்கப்படும் இன்சுலின் போதிய அளவு ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, பிரச்னையை ஏற்படுத்தும். இதையே 'சர்க்கரை நோய்' என்கிறோம்'' என்று நோய் பற்றி சொன்ன டாக்டர், அதற்கான அறிகுறிகள், நோயின் வகைகள், தடுப்பு முறைகள், உணவுகள் என்று அனைத்தையும் விரிவாகவே விளக்கினார்.

அறிகுறிகள்!
''அடிக்கடி தாகம், சிறுநீர் கழித்தல், பசி ஆகிய மூன்றுமே சர்க்கரை நோயின் அறிகுறிகள். சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணம்... உடல் பருமன். இதில் டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்று மூன்று வகை உள்ளன. இதைத்தவிர, 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை' என்று சொல்லக்கூடிய 'ப்ரீ டயாபீட்டிஸ்' வகையும் உள்ளது.

டைப்-1: உடல், இன்சுலினை முற்றிலும் சுரக்காத நிலையை டைப்-1 சர்க்கரை நோய் என்கிறோம். பெரும்பாலும் குழந்தைகளுக்கே இது ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது, இன்சுலினை சுரக்கும் சுரப்பிகளை, 'கிருமிகள்' என்று நினைத்துத் தாக்கி, அழித்துவிடும். இதனால், இன்சுலின் சுரப்பு முற்றிலும் தடைபட்டு, வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிடும். அல்லது இன்சுலின் பம்ப் பொருத்த வேண்டிய சூழல் உருவாகும்.

டைப்-2: உலக அளவில் காணப்படும் 90 சதவிகித சர்க்கரை நோயாளிகள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். உடலானது இன்சுலினை உற்பத்தி செய்யும். ஆனால், அது குறைந்த அளவாகவோ... அல்லது தேவையான ஆற்றல் இல்லாததாகவோ இருக்கும். பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கர்ப்பக் கால சர்க்கரை நோய்: பெண்கள் சிலருக்கு, கர்ப்பக் காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், கணையத்தால் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும். இதையே 'கர்ப்பக் கால சர்க்கரை நோய்' என்கிறோம். இவர்களில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதத்தினருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மாத்திரை, மருந்து தேவைப்படுகிறது. இந்த நோய், பிரசவத்துக்குப் பிறகு தானாக மறைந்துவிடும். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், பின்னாளில் சர்க்கரை நோய் தாக்குதலில் சிக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

ப்ரீ டயாபீட்டிஸ்: சர்க்கரை நோயாளிகளைவிட, ப்ரீ டயாபீட்டிஸ் நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். 'சர்க்கரை நோய் எந்நேரமும் தாக்கக்கூடும்' என்று 'வானிலை அறிவிப்பு' ஸ்டைலில் எச்சரிக்கை செய்யப்பட வேண்டிய இவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு என்பது சராசரிக்கும் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சர்க்கரை நோய் என்று குறிப்பிடும் அளவுக்குக் குறைவாக இருக்கும்.
இந்த நான்கு நிலையிலும் இருப்பவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மிகமிக அவசியம். முதல் மூன்று நிலைகளில் இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் தேவைப்படலாம். கூடுமான வரையிலும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக கட்டுப்படுத்துவதே நல்லது. எல்லை மீறும்போது, மருந்துகள், இன்சுலின் இவற்றை விட்டால் வேறு வழியில்லை!

இப்படி கண்டறியுங்கள்!
சாதாரண ரத்தப் பரிசோனை மூலமாகவே கண்டறிய முடியும் என்றாலும். முழுமையாக உறுதிபடுத்திக் கொள்ள ஜி.டி.டி பரிசோதனை, ஹெச்.பி.ஏ.1 சி பரிசோதனை என பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கைக்கு அடக்கமாக கிடைக்கும் 'குளுக்கோ மீட்டர்' கருவி மூலமாக, நாமே நம் விரலில் இருந்து 0.3 மைக்ரோ மில்லி ரத்தம் எடுத்து, சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விலை 1,500 ரூபாய். இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ் 'இது 10 முதல் 15 சதவிகிதம் சர்க்கரையின் அளவை துல்லியமாக காட்டுவதில்லை' என்பதுதான்'' என்ற டாக்டர், தொடர்ந்து நோய்க்கான காரணிகளைப் பற்றி சொன்னார்.

நோய்க்கான காரணிகள்..?
''டைப்-2 சர்க்கரை நோய்... 45 வயதைக் கடந்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடற்பயிற்சியைக் குறைத்துக்கொள்வது மற்றும் எடை அதிகரிப்பதுதான் காரணம். மரபியல் காரணமாகவும் இந்த நோய் தாக்கும். பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வருவதற்கு 80 முதல் 90 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால், 60 சதவிகித வாய்ப்பு இருக்கும். இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, 25 வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம்... உணவுப் பழக்கம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவையே.

இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு, ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்' நிலையில் இருக்கும்போதே வளர விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்'' என்ற டாக்டர் கருணாநிதி,

''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப் பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக, 'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக் கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து'' என்று எச்சரிக்கை செய்தார்.

வாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்!
உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

காலை உணவு... தவிர்க்க வேண்டாம்!
காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி... இதையட்டிய நேரங்களில் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் உச்சத்தில் இருக்கும். இந்நேரத்தில் சாப்பிடும்போது... கூடுதல் உழைப்பு இன்றியே, 500 கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால், உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனியே சமைக்க வேண்டும் என்பது கிடையாது. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம்.

சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம். 'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும் நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம் முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான உடற்பயிற்சி செய்பவர்கள்... இனிப்பு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம். மற்றவர்கள் இனிப்புப் பொருட்களை தவிர்ப்பதுதான் நல்லது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம்.

துடிப்பான வாழ்க்கைமுறை..!
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்... இனியாவது தினமும் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யத் தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதைச் செய்ய முடியாதவர்கள் எளிய நடை பயிற்சி, வீட்டு வேலைகளை செய்தல், மாடிப் படிகளில் ஏறி இறங்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.

உணவு... உஷார்!

தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட், மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்ஸா, பர்கர், கொழுப்பு அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, நண்டு, இறால், ஆடு, மாடு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

குறைக்க வேண்டியவை: தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு. அசைவம் மிகவும் குறைக்கப்படவேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்) எடுத்துக் கொள்ளலாம்.

எடுக்க வேண்டியவை: ஆப்பிள், கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம், பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை... வயது, உடல் உழைப்பு, எடை, இதர நோய்களைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். பழங்களை கடித்துச் சாப்பிட வேண்டுமே தவிர, சாறாக அருந்தக் கூடாது.

சிறுநீரகங்கள் ஜாக்கிரதை!
'அதுதான் சர்க்கரைக்கு மருந்து, மாத்திரைகள் இருக்கின்றனவே...' என்றபடி இஷ்டம்போல மாத்திரைகளை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தால்... ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னைகள் ஆரம்பமாகிவிடும். இத்தனை நாட்களாக உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்த அதே டாக்டர், ''அடடா... கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சே. ம்... இத்தனை வருஷமா மருந்து, மாத்திரையா சாப்பிட்டிருக்கீங்க. அதோட வீரியம் சும்மா இருக்குமா, கிட்னியை காலி பண்ணிடுச்சு'' என்று சிம்பிளாக சொல்லிவிடுவார். பிறகென்ன, கிட்னி பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வாழ்க்கையே நரகமாகிவிடும்!
சர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில் பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



நோ டென்ஷன்! இனி இல்லை மன அழுத்தம்!



'இந்த விஷயத்தை எப்படிச் சமாளிக்கப்போறேன்னு தெரியலையே?' என்கிற நினைப்புதான் மன அழுத்தத்தின் ஆரம்பம். ஒரு குழப்பமான மனநிலையில் இருந்து மீள்வதற்குள், அடுத்தடுத்த பிரச்னைகள் வந்து சுமையாக இறங்கும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்கிற மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இப்படி, தொடர்ந்து மன அழுத்தம் நேரும்போது, உடல் சார்ந்த பல்வேறு நோய்கள் நம்மை வாட்டி எடுக்கத் தொடங்கிவிடும்.  
 வேலைக்காக... குடும்பத்தையோ, குடும்பத்துக்காக... வேலையையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்னைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக்கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளிடம்கூட மன அழுத்தம் புகுந்துவிட்டது என்பதுதான் வேதனை.  

மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கத் தெரிந்துகொண்டால், ஆரோக்கியமாக வாழ முடியும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பம் இயற்கையாகவே வந்துவிடாது. அவற்றை நாம் கற்று நம் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப அமைத்துக்கொண்டால் மன அழுத்தத்தை வெல்லலாம்.

'வா‌ய்‌ ‌வி‌ட்டுச் ‌சி‌ரி‌த்தா‌ல், நோ‌ய் ‌வி‌ட்டு‌ப் போகும்' எ‌ன்ற பழமொ‌ழி, மன அழு‌த்த‌த்‌துக்கு மிகச் சரியாகப் பொரு‌ந்து‌ம். மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏற்படுத்தும் பாதிப்புகள்,  அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றி மனநல மருத்துவர்கள் பி.ஆர்.ராஜேஷ் குமார், ஆவுடையப்பன், பொது மருத்துவர் நாகராஜன் ஆகியோர் இங்கே  பகிர்ந்துகொள்கின்றனர்.  
  இனி, எல்லாம் சுகமே! வாழ்த்துக்கள்!

மன அழுத்தம்: 
ஏதாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ உங்களின்  திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மன அழுத்தம்' (ஸ்ட்ரெஸ்) என்று கூறலாம். இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.
ஆபத்து ஏற்படும்போது நம் உடம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவும் மன அழுத்தம் இருக்கிறது.
நமக்கு ஆபத்து நேரப்போகிறது என்று நாம் உணரும்போது (அது உண்மையாகவோ அல்லது நம்முடைய கற்பனையாகவோ இருக்கலாம்) அதை எதிர்கொள்ள, நம் உடலே சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.அந்தப் பிரச்னையை எதிர்த்துப் போராடுவதற்கும் தப்பிப்பதற்கும் நம்மைத் தயார்படுத்தும்.

மன அழுத்தம் ஏற்படும்போது நம் நரம்பு மண்டலம், அட்ரினல் மற்றும் கார்டிசோல்  ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. ரத்தத்தில் கலக்கும் இந்த ஹார்மோன்கள், உடல் முழுவதும் பாய்ந்து அவசரநிலையை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்துகிறது. இதனால், இதயம் வேகமாகத் துடிக்கும். தசைகள் கடினம் அடையும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுவாசம் வேகமாகும். நம் அனைத்துப் புலன்களும் பிரச்னையைக் கூர்ந்து கவனிக்கும். இந்த உடல்ரீதியான மாற்றம், நம்முடைய பலத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். எதிர்வினை புரியும் நேரத்தை விரைவுபடுத்தும். பிரச்னையை நாம் எதிர்க்கவும்  தப்பிக்கவும்  இவை உதவுகின்றன.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை உடலின் சமநிலையைப் பாதிக்கும்போது, அதுவே அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. மன அழுத்தத்தின்போது இதயம் வேகமாகச் செயல்படத் தூண்டப்படுகிறது. இந்தக் கூடுதல் சுமை, இதயத்தில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.
மன அழுத்தத்தின் காரணங்கள்: 
சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
மன அழுத்தம்- மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்பந்தம் ஆகியவற்றால் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனவிரக்தி: 
ஓர் இலக்கை அடைய, பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது, 'மனவிரக்தி' ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாம் யதார்த்தம் இல்லாத இலக்குகளையும், எதிர்பார்ப்புகளையும், ஒப்பீடுகளையும் மனதில் வைத்து விரக்தியடைகிறோம். உதாரணத்துக்கு, சுமாராகப் படிக்கக்கூடிய ஒரு மாணவனை, அவனது பெற்றோர், அதிகப் பணம் செலவழித்து பிரபலமான ஒரு பள்ளியில் சேர்க்கின்றனர். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அவன் முதலாவதாக வருவான் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், விரக்திதான் மிஞ்சும். அதேபோல சிலர், ஒரே நாளில் பல வேலைகளைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். வரிசையாக, பல பணிகளைச் செய்ய கால நிர்ணயம் செய்வார்கள். ஆனால், பணிகளைக் குறித்த நேரத்தில் செயல்படுத்தமுடியாமல் விரக்தி அடைவார்கள்.

மாற்றம்: 
அமைதியான நதியில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது நம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், நம் பொறுமைக்கும், சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும் சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம்- திருமணம், பதவி உயர்வு, மகப்பேறு, பண வரவு போன்ற சந்தோஷமான நிகழ்வாகவோ... குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நஷ்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வாகவோ இருக்கலாம்.

முரண்பாடுகள்:
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகள் கணக்கில் அடங்காதவை. காலையில் எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்வது வரை முரண்பாடுகளுடனேயே போராட வேண்டியுள்ளது. இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, காலையில் எழுந்திருக்க வேண்டிய கட்டாயமும் கண்ணைக் கட்டும் ஆனந்தத் தூக்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும்போது எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் முரண்பாட்டுக்கு ஆளாகிறோம்.

நிர்பந்தம்: 
 மன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.  நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவையே இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும், மனதுக்குப் பிடித்தவாறு வாழவும் பலரால் முடிவது இல்லை. 

மன அழுத்தம் ஏற்படுத்தும் உடல்ரீதியான பாதிப்புகள்:
''மன அழுத்தம் ஏற்படும்போது அது உங்கள் நரம்பு மண்டலம், மூளை, இதயம், ரத்த ஓட்டம், சிறுநீரகம், இனப்பெருக்க மண்டலம் என பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கிறது.''

சுவாச மண்டலம்
மன அழுத்தம் அதிகரிக்கும்போது மூச்சை அதிக அளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.

இதயச் செயல்பாடு
திடீரென ஏற்படும் மன அழுத்தமானது இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் ரத்தம் பம்ப் செய்யப்படும்போது ரத்தக் குழாய்கள், இதய தசைகள் அதிக அளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இப்படி நடக்கும்போது, ரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்படும், மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்
மன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிக அளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது, புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இரைப்பையின் செரிமானம்  பாதிக்கப்படும். இதனால் ஊட்டச்சத்து தரும் பலனும் பாதிக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலம்
மன அழுத்தத்தின்போது அதிக அளவில் சுரக்கப்படும் கார்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோடிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சரியான கால இடைவெளியில் மாதவிலக்கு வராமை போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.  உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் - மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.

இனி இல்லை மன அழுத்தம்:
உளவியல்ரீதியான முரண்பாடுகளில் மூன்று வகை உள்ளன
1பிடித்த இரண்டு விஷயங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பது. மாணவன் ஒருவருக்கு மருத்துவம், பொறியியல் என இரண்டும் கிடைக்கும்போது, எதைத் தேர்வுசெய்வது என்பதில் முரண்பாடு இருக்கும். இரண்டுமே பிடித்திருக்கிறது. ஆனால், ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றபோது மன அழுத்தம் வரும்.

2பிடிக்காத இரண்டு விஷயங்களில் கண்டிப்பாக ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது முரண்பாடு உருவாகும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு வயிற்றுவலி வந்து, 'அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்' என்று டாக்டர் கூறும்போது முரண்பாடு தோன்றும். ஏனெனில், அவருக்கு வயிற்றுவலியையும் சகித்துக்கொள்ள முடியாது; அதற்குச் செய்யப்பட உள்ள அறுவைசிகிச்சையையும் ஏற்க மனம் வராது. ஆனால், இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மன அழுத்தம் வரும்.

3ஒரு விஷயத்தில் சாதக பாதக அம்சங்கள் இரண்டுமே இருக்கும்போது அதைச் செய்வதில் முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, தனது ஒரே மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தொலைதூரத்தில் உள்ள ஒரு சிறந்த கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்கலாம் என்று எண்ணுகிற நேரத்தில், மகனைப் பிரிய வேண்டுமே என்ற வருத்தம் வாட்டி எடுக்கும். மகனின் எதிர்காலமா அல்லது மகனின் பிரிவா என்பதில் முடிவெடுக்க முடியாமல் முரண்பாடு ஏற்படும்.
இந்த மூன்று வகைகளும் மன அழுத்தத்துக்கு வழிவகுப்பவை.

மனஅழுத்தம்கெட்டதா?
பொதுவாக மன அழுத்தம் உள்ளவர் என்றால் எப்போதும் எதிர்மறையான சிந்தனை கொண்டவர், எந்த ஒரு வேலையை முடிக்கவும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவர், சிடுமூஞ்சி என்பதுபோன்ற எண்ணம் இருக்கும். அதனால் மன அழுத்தம் என்றாலே தவறானது என்ற கருத்து உள்ளது. இதுவே தவறு. சிலருக்கு மேல்படிப்பு படிக்க வேண்டும், பதவி உயர்வு பெற வேண்டும், திருமணம் நிகழ்ச்சி, சொந்த வீடு வாங்க விரும்புவது போன்ற நல்ல நோக்கத்துக்காகவும் மன அழுத்தம் ஏற்படலாம்.

மன அழுத்தத்தின் வகைகள்:
தற்காலிகமானது, நீண்ட காலம் இருப்பது என மன அழுத்தத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.
வேலைக்கு நேர்முகத் தேர்வு செல்லும்போது, பரீட்சை எழுதச் செல்லும்போது என எப்போது வேண்டுமானாலும் மன அழுத்தம் ஏற்படலாம். இவை எல்லாம் தற்காலிகமானவை. இதனால் பெரிய அளவில் 
பிரச்னை இருக்காது.
நீண்ட காலம் மன அழுத்தம் இருப்பதை, தனிப்பட்ட பிரச்னை, சமூகம் அல்லது சுற்றுப்புறச்சூழல் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

தனிப்பட்ட பிரச்னை:
இதய நோய், சர்க்கரை நோய் போன்ற உடல் நலப் பிரச்னைகள்.
அவமரியாதை, செய்த தவறை நினைத்து வருந்துவது போன்ற உணர்வுபூர்வமான பிரச்னை, நண்பர்கள் இல்லாதது, பிரச்னை என்று வரும்போது உதவுவதற்கு யாரும் இல்லாதது, உறவு ரீதியான பிரச்னை, பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், நண்பர்களின் திடீர் மரணம், வாழ்க்கைமுறை மாற்றங்கள், பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்காததால், பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் போன்றவை. இவை நீண்ட காலம் இருக்கக்கூடியவை.
சமூகப் பிரச்னை:
பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் பார்க்கும் வேலைதான், மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தவிர அரசியல், மதம், சாதி போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறை தொடர்பான நம்பிக்கைகள், வாக்குவாதங்கள் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மன அழுத்தத்தின் அறிகுறிகள்:
நம் எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வில் ஏற்படும் மாற்றங்கள், உடல் ரீதியான மாற்றங்கள், நடத்தை மாற்றங்கள் என மன அழுத்தத்தின் அறிகுறிகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.  
1. எண்ணத்தில் ஏற்படும் மாற்றங்கள்
நினைவாற்றல் பிரச்னை, கவனச் சிதறல், தவறாக மதிப்பிடுதல், எதையும் எதிர்மறையாகப் பார்ப்பது, கவலை.
2.  உணர்வில் ஏற்படும் மாற்றங்கள்
சோகமான மனநிலை, எரிச்சல், முன்கோபம், எதிர்ப்பு, அமைதியாக முடியாத நிலை, தனித்திருக்கும் உணர்வு, மகிழ்ச்சியற்ற மனநிலை.
3. உடல் ரீதியான மாற்றங்கள்
வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, குமட்டல், நெஞ்சு வலி, அதிவேக இதயத்துடிப்பு, பாலியல் உணர்வு இன்மை.
4. நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்
அதிகம் சாப்பிடுதல், சாப்பிட விருப்பமின்மை,  தூக்கம் அல்லது தூக்கமின்மை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருத்தல், பொறுப்புகளைத் தட்டிக்கழித்தல், மது, சிகரெட்  போதைப்பொருட்கள் பயன்படுத்துதல், எப்போதும் 'உதறல்' மனப்பான்மை.
மன அழுத்தம் ஏற்படும்போது என்ன நடக்கிறது?
ரத்த அழுத்தம் அதிகரித்து, மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். செரிமான மண்டலத்தின் பணிகள் குறையும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறையும். தசைகளில் அழுத்தம் ஏற்படும். தூக்கம் தடைபடும்.

மன அழுத்தம் ஏற்படும்போது செய்யும் தவறான விஜயங்கள்:
மன அழுத்தத்தை எதிர்கொள்கிறேன் பேர்வழி என்று நாம் செய்யும் காரியங்கள் உடல் நலத்துக்கே வேட்டு வைத்துவிடும்.  மன அழுத்தத்தைச் சமாளிக்க பலர் செய்யும் காரியங்கள், எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடியவை.

பொதுவாக மன அழுத்தம் ஏற்படும்போது எல்லோரும் செய்யக்கூடியவை:
சிகரெட் புகைப்பது, அதிக அளவில் மது அருந்துவது, அதிக அளவில் சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் உடனான உறவைத் துண்டிப்பது, தூக்கம் வேண்டி மருந்து மாத்திரை, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது,
அதிக அளவில் தூங்குவது, மற்றவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது,  வன்முறைச் செயல்களில் இறங்குவது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 1
தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்ப்போம்
எல்லா மன அழுத்தங்களையும் தவிர்க்க முடியாது. அதேபோல எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் இருப்பதும் நல்லது அல்ல. இருப்பினும் மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
'நோ' சொல்லிப் பழகுங்கள்
மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக, அனைத்தையும் செய்யவேண்டியது இல்லை. உங்களின் திறன், வரையறை எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துகொண்டு அதில் உறுதியாக இருங்கள். பொதுவாழ்வோ, தனிப்பட்ட வாழ்வோ எதுவாக இருந்தாலும் உங்களால் முடியாத விஷயங்களில் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இதனால், குறிப்பிட்ட காலத்தில், வாக்களித்த விஷயத்தைச் செய்ய முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க முடியும். கூடுதல் பொறுப்பு சுமத்தப்படும்போது, உங்கள் திறன் மற்றும் எல்லையை உணர்ந்து நாசூக்காக அதைத் தவிர்த்துவிடுங்கள்.
உங்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் நபர்களைத் தவிர்த்திடுங்கள்.
தொடர்ந்து குறிப்பிட்ட நபரால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், முடிந்தவரை அவரைத் தவிர்த்துவிடுங்கள். அவர் உங்கள் குடும்பத்தில் ஒருவர், உயர் அதிகாரி எனவே அவர்களைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், அவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

சுற்றுப்புறச்சூழலை உங்கள் வசப்படுத்துங்கள்.
போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினால், அலுவலகத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகச் சென்றுவிடுங்கள். அல்லது போக்குவரத்து நெரிசல் குறைந்த சாலையைப் பயன்படுத்துங்கள். இரவு செய்தி கேட்கும்போது பதற்றம் ஏற்படுகிறது என்றால், டி.வி.யை அணைத்துவிடுங்கள். இதுபோன்று சுற்றுப்புறச்சூழ்நிலையை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும்போது, மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

செய்யக்கூடியது, செய்யக் கூடாதவை பற்றிய அட்டவணை தயார்செய்யுங்கள்
உங்களின் தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகள், பொறுப்புகள், செய்யவேண்டிய வேலைகள் பற்றிய அட்டவணையை முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள். இதில் அதிகப்படியான நடவடிக்கைகள் இருந்தால் அதில், 'எது மிகவும் அவசியமானது', 'எது செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை' என்பதைக் கண்டறியுங்கள். தேவையற்றது என்று நீங்கள் நினைப்பவற்றுக்கு அட்டவணையில் கடைசி இடம் கொடுங்கள், அல்லது அவற்றை நீக்கிவிடுங்கள்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 2
உங்கள் நிலைமையை மாற்றுங்கள்
மன அழுத்தம் ஏற்படும்போது நிகழ்பவற்றைத் தவிர்க்க முடியாது, ஆனால் அவற்றை மாற்றியமைக்க முயற்சிக்கலாம். மன அழுத்த நேரங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பட்டியலிட்டு, அவற்றை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைப்பற்றிப் பார்க்கலாம்.
மன அழுத்தத்தை அடக்கிவைக்காமல், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
உங்கள் மீது அக்கறைகொண்டவர்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் பற்றி வெளிப்படையாகவும் அதேநேரத்தில் மரியாதையான முறையிலும் வெளிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை வெளியில் கொட்டாவிடில், மனதை அது அழுத்திக்கொண்டே இருக்கும். இதனால், எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது நிம்மதி பிறக்கும்.

சமரசத்துக்குத் தயாராக இருங்கள்
ஒருவரிடம், 'உங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளுங்கள்' என்று கூறுகிறோம் என்றால், அதேபோல நம்மை மாற்றிக்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இருவரும் சிறிதளவாவது வளைந்துகொடுத்துச்செல்லத் தயாராக இருந்தீர்கள் என்றால், மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

உறுதியாக இருங்கள்
பிரச்னையை தைரியமாக எதிர்கொண்டு, அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் காணுங்கள். தேர்வுக்குத் தயாராகிவருகிறோம்... அந்த நேரத்தில் முக்கிய உறவினர், நெருங்கிய நண்பர் வருகிறார் என்றால், அவர்களிடம், ''ஐந்து நிமிடங்கள்தான் என்னால் பேச முடியும்'' என்று தைரியமாகச் சொல்லுங்கள்.
சிறப்பான நேர மேலாண்மை
மிக மோசமான நேர மேலாண்மைதான் அதிக அளவிலான மன அழுத்தத்துக்குக் காரணமாகிறது. குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை அந்த நேரத்தைத் தாண்டியும் செய்ய முடியவில்லை என்றால், மன அழுத்தம் அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, முன்கூட்டியே திட்டமிட்டு வேலை செய்யுங்கள். வேலையை இழுத்தடிக்காதீர்கள். இதனால் மன அழுத்தம் உங்கள் கட்டுக்குள்ளேயே இருக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள் 3
 மன அழுத்தத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஏற்றபடி மாறிவிடுங்கள்.
உங்களால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷங்களை மாற்றியமைக்க முடியவில்லை என்றால், அதற்கு ஏற்றபடி உங்களை மாற்றிக்கொள்வதும் அதையே நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதும் ஒரு வழிதான்.
பிரச்னைகளை மாற்றியமையுங்கள்.
மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை நேர்மறையான கண்ணோட்டத்துக்கு மாற்றிவிடுங்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சூழல், ஒலிபெருக்கிச் சத்தம் இவற்றை நினைத்து எரிச்சல்படாமல், அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த பாடல் கேட்பது, போன்று சூழ்நிலையை  மாற்றிக்கொள்ளுங்கள்.
எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.
நீண்ட காலக் கண்ணோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மன அழுத்தம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இந்தப் பிரச்னை ஒரு மாதத்தில் சரியாகக்கூடியதா? ஒரு வருடத்தில் சரியாகக் கூடியதா? இதுபற்றிக் கவலைப்படுவது உண்மையில் நியாயமானதுதானா என்று உங்களை நீங்களே கேளுங்கள். பதில் இல்லை என்று வருமேயானால், உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை வேறு நல்ல விஷயத்துக்குச் செலவிடுங்கள்.
தர நிர்ணயத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. இது தவிர்க்கக்கூடிய மன அழுத்தமாகும். உங்களுக்கோ, மற்றவர்களுக்கோ ஏதேனும் ஓர் அளவுகோலை நிர்ணயித்துவிட்டு, அதை அப்படியே எதிர்பார்க்காதீர்கள். ஓரளவுக்கு நியாயமான தர அளவுகளை நிர்ணயுங்கள். 'இதுவே போதுமானது' என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  4
உங்களால் மாற்ற முடியாத விஜயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்துக்கான சில காரணிகளைத் தவிர்க்க முடியாது. நமக்கு நெருக்கமானவர்களின் மரணம், மிக மோசமான நோய்கள், நாடு தழுவிய அளவிலான பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றை நம்மால் தடுக்க, தவிர்க்க முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில், இந்த விஷயங்களை ஏற்றுக்கொள்வதுதான் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரே வழி. இது மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால், நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் நம்மால் மாற்ற முடியாத ஒரு விஷயத்தை நினைத்து வருந்திக்கொண்டிருப்பதைவிட, அதை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிதானது.
 
கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள்
நம் வாழ்வில் பல்வேறு விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறியது. குறிப்பாக மற்றவர்களின் நடவடிக்கைகள்.
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
நல்ல நம்பிக்கைக்குரிய நண்பர், மனநல மருத்துவரிடம் சென்று உங்கள் பிரச்னைகள் பற்றி மனம்விட்டுப் பேசுங்கள். இதனால் மன அழுத்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க முடியாவிட்டாலும், மனதில் உள்ள சுமை குறையும்.

மன்னிக்கப் பழகுங்கள்
குற்றம் குறைகள் நிறைந்த உலகில், தவறுகள் செய்யும் மக்கள் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். தவறு செய்கிறார்கள் என்றாலும் அவர்களை மன்னித்து உங்கள் வழியில் நடைபோடுங்கள். இது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  5
கேளிக்கை மற்றும் ஓய்வுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்
என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் ஓய்வு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடும்போது அவை மறைந்துவிடும். அன்றாட வாழ்வில் கேளிக்கை மற்றும் ஓய்வுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குபவர்களுக்கு, வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.

செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள்
அன்பை அள்ளித்தந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவை செல்லப்பிராணிகள். அதனுடன் பழகுவது உங்கள் உடல் மற்றும் மன நலத்துக்கும் ஆரோக்கியம் அளிக்கும். நாய்  பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் ஒரு நிமிடம் நேரத்தைச் செலவிடுவதும்கூட செரடோனின், ப்ரோலாக்டின் மற்றும் ஆக்சிடோசின் போன்ற நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச்செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைத் தாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மனப்பதற்றம் குறைகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடு மேம்படுகிறது.
உங்களை மகிழ்விக்கும் விஜயங்களுக்குச் சிறிது நேரத்தைச் செலவிடுங்கள்
மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, இசைக்கருவியை வாசிப்பது போன்ற உங்களுக்கு அமைதி மற்றும் ஆசுவாசம் அளிக்கும் விஷயங்களுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். எப்போதும் நகைச்சுவை உணர்வோடு இருங்கள். மனம்விட்டுச் சிரிப்பது பல்வேறு வகைகளில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வழிகள்  6
ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறுங்கள்
மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்திக்கொள்வது, மனஅழுத்தம் இன்றி வாழ வழிவகுக்கும்.
உடற்பயிற்சி செய்யுங்கள்
மன அழுத்தத்தில் இருந்து காக்கும் முக்கியப் பணியை உடற்பயிற்சி செய்கிறது. எனவே, தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். நேரமில்லையெனில், வாரத்துக்கு மூன்று முறையாவது செய்யலாம். குழுவாக இணைந்து செய்யக்கூடிய ஏரோபிக்ஸ் நடனம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அது மன அழுத்தத்துக்குக் காரணமான ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும்.
யோகா, தியானம் பழகுங்கள்:
தினமும் கண்களை மூடி 15 முதல் 30 நிமிடங்களுக்கு மூச்சை ஆழமாக இழுத்துவிட்டபடி தியானம் செய்யுங்கள். அது மனதை அமைதிப்படுத்தும். இதேபோன்று உடலை ஓய்வுபெறச் செய்யும் பல்வேறு யோகப் பயிற்சிகளை, பயிற்சியாளரிடம் முறையாகக் கற்றுக்கொண்டு, மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுங்கள்
உங்கள் உடலுக்கு எது ஆரோக்கியமானதோ அந்த உணவைத் தேர்ந்தெடுங்கள்.  சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலில் போதுமான அளவு ஆற்றல் இருக்க அவசியம்.
வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டுங்கள்
மன அழுத்தம் ஏற்படும் நேரத்தில் வீட்டு வேலைகளைச் செய்யுங்கள். அது தினசரி செய்யும் வேலையாக இருந்தாலும்கூட, அவற்றை வித்தியாசமான முறையில் செய்யுங்கள். மனதை மயக்கும் இசையைக் கேட்டபடி வேலை செய்யுங்கள். இதனால் கலோரிகள் எரிக்கப்படுவதுடன், வேலை முடிவில் மன அழுத்தமும் ஓட்டம் பிடித்திருக்கும்.
பழச்சாறு வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சுப் பழச்சாறு பருகுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வைட்டமின் சி, மன அழுத்தத்துக்குக் காரணமான கார்டிசோல் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரஞ்சு, திராட்சை, ஸ்டிராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கும் பலம் சேர்க்கும்.
மது, சிகரெட் மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்த்திடுங்கள்
மன அழுத்தம் அதிகரிக்கும்போது பலரும் நாடுவது மது மற்றும் சிகரெட்டைத்தான். இது மன அழுத்தத்தில் இருந்து எளிதில் விடுவிப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் இது தற்காலிகமானது. தவிர வேறு பல பிரச்னைகளுக்கும் அது வழிவகுத்துவிடும். முகமூடி அணிந்துகொண்டால் பிரச்னை மறைந்துவிடாது. எனவே, தெளிவான மனநிலையுடன் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள். பிரச்னை முற்றிலும் விலகும்.
போதுமான தூக்கம்
ஒரு நாளைக்குக் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். தினமும் குறித்த நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். சரியான தூக்கம் இல்லை என்றால் சோர்வு, அசதி ஏற்பட்டு அன்றைய தினம் முழுவதும் எரிச்சலுடனே இருக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



தெர்மோக்கோல் - ஒரு விழிப்புணர்வு பார்வை....


பிளாடிக்கை வீட பன்மடங்கு சுற்று சூழலை கெடுக்கும் தெர்மோக்கோல் !!! ஒரு விழிப்புணர்வு பார்வை...!!!

இன்றைய காலகட்டத்தில் நாம தினம்தோறும் பயன்படுத்திவரும் தெர்மொகோல் என்னும் POLYSTYRENE-ஐ பற்றி பார்ப்போம்... இதன் வேதியல் பெயர் பாலிஸ்ட்ரெயின் என்பதாகும்.எப்படி நகல் எடுப்பது ஜெராக்ஸ் என்று அழைக்கபடுகிறதோ.. அது மாதிரி இதுவும் தெர்மொகோல் என்று அழைக்கபடுகிறது. 

இதுவும் ஒரு பாலிமர் தான்...பிளாஸ்டிக்-ன் அனைத்து தன்மைகளும் இதுக்கும் உண்டு..இந்த தெர்மொகோல்-ஐ நாம பயன்படுத்தாத துறையே இல்லை எனலாம்.. உச்சகட்டமாக அதிகமாக பயன்படும் துறை... PACKAGING..எனப்படும் பொருட்களை பாதுகாக்க.இன்று நாம் வாங்கும் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக சிதையாமல் இருக்க..இந்த POLYSTYRENE எனப்படும் தெர்மொகோல்-ல் PACK பண்ண பட்டு வருகிறது.பழம் முதற்கொண்டு,, செல்போன்,,T.V, FRIDGE,,இப்படி இது பயன்படாத இடமே இல்லை எனலாம். உணவு விஷயத்திலும் இந்த தெர்மொகோல் (சாப்பிட,,,பார்சல்)மிக அதிகமாக பயன்படுகிறது.
இதன் பயன்பாட்டுக்கு அப்புறம்,இவை அனைத்தும் தூக்கி எறியபடுகிறது. இவை மிக லேசானது என்பதால் அனைத்தும் நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது.
முக்கியமாக இந்த தெர்மொகோல் அனைத்தும் நமது நீர் நிலைகள் அனைத்திலும் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது..

நமது வீட்டு சாக்கடை,,தெரு சாக்கடை,,பாதாள கழிவுநீர் குழாய் அடைப்பு போன்றவைகளில் இவை அடைத்துக்கொண்டு தரும் துன்பங்கள் கணக்கில் அடங்கா.

மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை இல்லாததால்...இவை பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும். பிளாஸ்டிக் போல இதுவும் மக்காத தன்மை உள்ளது.பிளாஸ்டிக்-ஆவது சிலபல நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது.ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு .... மக்கும் தன்மையே கிடையாது...
ஒரு நாளைக்கு இவை உற்பத்தி செய்யப்படுபவை பல ஆயிரம் கிலோக்கள்...இவை அனைத்தும் பூமிக்கு கேடு...

வெளி நாடுகளில் இவை அழிக்கபடுவதில்லை...இந்த விஷயத்தில்
அவர்களுக்கு நல்ல புரிதல் இருப்பதால்...இவற்றை சேகரித்து மறு சுழற்சியாக செய்கிறார்கள்...இவற்றை COLLECT செய்யவே தனியாக துறை இருக்கின்றது. முக்கியமாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சி செய்யப்பட்டவையே...

இவற்றை நாம் எப்படி பாதுகாப்பாக அழிக்கலாம்.???

1.முடிந்த அளவுக்கு இவற்றை மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்வோம்.

2.கைவினை பொருட்கள் செய்யதெரிந்தவர்கள்...இவற்றை பயன் படுத்தி பொம்மைகள்,மற்றும் இதர பயன் தரும் பொருட்கள் செய்து பணம் ஈட்டலாம்...

3.பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்...

4.முடிந்தவரை இவற்றை பொது இடங்களில் தூக்கி எரியாமல் வீட்டிலேயே எங்கேயாவது பரண் மேல் போட்டு வைக்கலாம்...(தீ பிடிக்கும் அபாயம் உள்ளது)

5.மறு சுழற்சிக்கு இவற்றை COLLECT பண்ணுமாறு மற்ற தொழில் நிறுவனங்களையோ, அரசாங்கத்துக்கோ கோரிக்கை விடுக்கலாம்.

6.இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

7.இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல் ) கொண்ட வாயுக்கள் 
வெளியேறும்.ஓசோன் படலத்தை வீணாக்கிவிடும். 

8.முக்கியமாக குழந்தைகள் இதை சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
பொதுவாக நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களில் இந்த தெர்மொகோல் இல்லாத இடமே இல்லை எனலாம். பிளாஸ்டிக் போன்று இதன் அபாயம் வெளியில் தெரியாமல் இருக்கின்றது. பிளாடிக் ஆவது அதன் மேல் எந்த எடை பொருட்கள் இருந்தாலும் .   பூமியில் படிந்து மக்க ஆரம்பிக்கும்.  ஆனால் இந்த தெர்மொகோல் 
பூமியில் ஒரு போர்வை போல் படர்ந்து நம் இயற்க்கை அன்னையை அழித்துக்கொண்டிருக்கிறது.  இதை படிக்கும் அன்பர்கள்.சற்றே சிந்தித்து... இவற்றின் தீமைகளை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்...
இயற்கையை காப்போம்...மண் வளம் காப்போம்... 


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?
  இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது....
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!
http://iminder.blogspot.in/2013/11/blog-post_18.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, April 24, 2015

வேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது

வேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது
பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில
வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக
இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம்
எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.
உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.
அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.
தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக்
செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.

4.
பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.
அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.
அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக்
செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும்
வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி
இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல்
ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove
hardware
என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து
நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள்
பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!
http://www.pettagum.blogspot.in/2013/10/blog-post_13.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, April 23, 2015

என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?


- மா.பாரி, முன்னாள் உதவிப் பொது மேலாளர், லஷ்மி விலாஸ் வங்கி  வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன.   ஆனாலும்கூட, டிராக்டர் வந்தாலும் உழுவதற்கு எருதுகளையே பயன்படுத்துவேன் என்று அடம் பிடிக்கும் விவசாயிகளைப் போல பல வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் முதியவர்கள் சிறு தொகைக்கான பரிமாற்றங்களுக்கும் வங்கிக்குச் செல்வதற்கே விரும்புகிறார்கள். ஒருபுறம் வங்கிக்குச் செல்வதையே பழக்கமாக்கிக் கொண்ட மனம்.  மற்றொருபுறம் அறிவியல் சார்ந்த புதிய உத்திகளைக் கையாளுவதில் உள்ள பயம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில விவரங்களும் பாதுகாப்புக் கவசங்களும் உங்கள் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும்.   என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?  வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இன்றைய இணையதளச் சேவைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை விவரம் பெறுவதற்கான சேவைகள் மற்றும் பணப் பரிமாற்றச் சேவைகள்.    Ø    தனது கணக்கிலுள்ள இருப்புத் தொகைகள், வைப்பு நிதிகளின் முதிர்வு தேதிகள், கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், கணக்கு விவரங்கள் (Account Statement), காசோலைப் புத்தகம் பெறுவதற்கான விண்ணப்பம், காசோலைத் தடுப்பிற்கான விண்ணப்பம் (Cheque Stop Payment Request), பல்வேறு வங்கிச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் போன்றவை முதல் வகைச் சேவையிலே அடங்கும்.  Ø    தனது கணக்கிலிருந்து அதே வங்கியில் தான் அல்லது மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்கில் செலுத்துவதற்கான                                                                                                                                பணப் பரிமாற்றம்; மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளில் வரவு வைப்பதற்கான பரிமாற்றங்கள்; ரயில் முன்பதிவு, மின்வணிகம், தொலைபேசி, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றிற்கான தொகைகளைச் செலுத்துதல் போன்றவற்றிற்கு இன்டர்நெட் பேங்கிங் பேருதவியாக அமைகிறது.  வங்கிக்குச் செல்ல வேண்டாம், எங்கும் வரிசையில் நிற்க வேண்டாம், பணத்தைப் பாதுகாக்க வேண்டாம். அனைத்துச் சேவைகளும் 24 மணி நேரமும் கிடைக்கும். (வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு (NEFT அல்லது RTGS) மட்டும் குறிப்பிட்ட கால வரையறை உண்டு). ரயில் முன்பதிவு, மின்வணிகம் மற்றும் நுகர்வோர் கட்டணங்களை ஏடிஎம் அட்டை மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் செலுத்த இயலும்   முதலாவதாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே விண்ணப்பத்தைக் கொடுத்து  இன்டர்நெட் பேங்கிங் வசதியைப் பெற வேண்டும்.  விண்ணப்பத்திலேயே மேற்கண்ட வசதி, விவரம் பெறுவதற்கு மட்டுமா அல்லது பணப்  பரிமாற்றத்திற்கும் தேவையா என்பதைக் குறிப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின்னர் வங்கியானது அந்த வசதிக்கான கடவுச் சொல்லை (Pass Word) தங்கள் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தங்களது வங்கிக் கிளையின் மூலமாகவோ அனுப்பி வைக்கும். குறிப்பிட்ட வங்கியின் இணைய தளத்தில் நுழைந்து வங்கியால் கொடுக்கப்பட்ட தங்கள் நுகர்வோர் அடையாளச் சொல்லையும் (User ID) மற்றும் கடவுச் சொல்லையும் உபயோகித்து தாங்கள் விண்ணப்பித்திருந்த சேவைகளைப் பெறலாம்.  பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியைச் சொந்தக் கம்ப்யூட்டர் மூலமே அணுகுகின்றார்கள். அதுவே நல்லதும் கூட. அதனோடு பி.எஸ்.என்.எல், டாடா, ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற இன்டர்நெட் சேவை தருவோரின் மூலம் பெறப்பட்ட இன்டர்நெட் வசதியும் (Internet Connection) தேவை.    பாதுகாப்பு அடுக்குகள் இன்டர்நெட் சேவைக்கென உள்ள கடவுச் சொல்லைத் தவிர, பணப் பரிமாற்றத்திற்கெனத் தனியாக ஒரு கடவுச் சொல்லும் தரப்படும். பணப் பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  பரிமாற்றத்தின் போது பெரும்பாலான வங்கிகள் ஒருமுறைக் கடவுச் சொல்லாகக் (One time Pass Word) குறிப்பிட்ட எண்ணை முன்னரே பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளரின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பும்.  பணப்பரிமாற்றத்திற்கு அந்தக் கடவுச் சொல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒருவகையிலே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்குப் பாதுகாப்பாகும்.   இணையதளம் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து திருடப்படுவதும், பொய்யான இணைய தளங்களை உருவாக்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுவதும் பாதுகாப்பு அடுக்குகளை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றன.  கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள்.  வங்கியிலிருந்து பெறப்பட்ட கடவுச் சொல்லை உபயோகித்து உடனடியாக வேறு கடவுச் சொல்லைத் தேர்ந்தெடுங்கள். புதிய கடவுச் சொல் எண், எழுத்து மற்றும் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கட்டும்.            (Ex.: LTvn#45a) அவ்வப்பொழுது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுங்கள்.  குறிப்பிட்ட வங்கியின் இணையதளத்தில் நுழைவதற்குத் தங்களுக்கு வந்த மின்னஞ்சலை உபயோகித்தோ அல்லது தங்கள் செயல்பாடின்றித் தாமாகவே உதயமான இணையதளங்கள் வழியோ முயல வேண்டாம்.   வங்கியின் இணையதள முகவரியை நேரடியாக டைப் செய்தல் நலம். தங்கள் வங்கியின் இணைய தள முகவரி "https://" என்று துவங்க வேண்டும் ("http://" என்று அல்ல), முன்குறிப்பிட்ட முகவரித் துவக்கத்தில் உள்ள 's' இணையதளம் பாதுகாப்பானது (secured) என்பதைக் குறிப்பிடுகிறது. முகவரிப் பட்டை (Address Bar) பூட்டுக் குறியுடன் துவங்கிப் பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட இணையதளம் பாதுகாப்புச் சான்று உடையது என்று பொருள்.  எந்த வங்கியும் இணைய தளம் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் தனிப்பட்ட மற்றும் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. ஆகவே தங்கள் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்கும் யாருக்கும் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழி பதில் கொடுக்க வேண்டாம். அத்தகைய மின்னஞ்சல்களின் இணைப்புகளையும் திறக்க வேண்டாம். தேவைப்பட்டால் குறிப்பிட்ட வங்கியின் கிளைக்கு நேரடியாகச் சென்று விவரங்கள் கேட்கலாம்.  இன்டர்நெட் சென்டர் மற்றும் நெட்ஒர்க் மூலம் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களை உபயோகப் படுத்திப் பணமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.  கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் செய்த நடவடிக்கைகள் மற்றும் தாங்கள் தட்டச்சு செய்த எண்களையும் எழுத்துக்களையும் அப்படியே மீட்டெடுப்பதற்குச் சில மென்பொருள்கள் (Key Logger) உதவிபுரியும். ஆகவே பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட  கம்ப்யூட்டர்கள் மூலம் பணமாற்றம் செய்தல் கூடாது.  அறிவியல் வழங்கிய கொடைகளான மின்சாரம், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்களும் நிகழ்கின்றனதான். ஆனாலும் அவற்றின் உபயோகம் ஒவ்வொருநாளும் அதிகரிக்கின்றனவே. தக்க பாதுகாப்புக் கவசங்களும் முன்னெச்சரிக்கைகளும் இணைந்தால் இன்டர்நெட் பேங்கிங் வங்கிச் சேவையை லகுவாக்கித் தரும்.  அது இன்றைக்கு மனிதனுக்குக் கிடைத்த சாபமல்ல வரம்தான் என்பதும் உணரப்படும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



வெந்நீரினை குடிப்பதால் என்ன நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா?


பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.  சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லையே இருக்காது.  அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.  வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.  வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பது நல்லது.  நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.  மிருதுவான சருமம் பெற பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.  கால்கள் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு வாளியில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலந்து அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.  பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.  தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.  சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



உங்கள் தட்டில் உணவா... விஷமா? பால்... குடிக்கலாமா? கூடாதா?

 
டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்


'காபி, டீ உடலுக்கு நல்லதுதான்' என்று ஏற்கெனவே கூறினேன். 'ஏதாவது கெடுதல் இருந்தால்... அது காபி, டீயில் கலக்கப்படும் சர்க்கரை, அல்லது சுகர்ஃப்ரீ, அல்லது பாலுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்படும் க்ரீமர் ஆகியவற்றால்தான்' என்றும் சொன்னேன். இப்போது பால் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா! பால் பற்றி சர்ச்சைக்குரிய பல விஷயங்கள், உலகெங்கும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் 'பால் சைவமா... அசைவமா?' என்றொரு கேள்வி இருக்கிறது. 'சைவம்' என்றுதானே எல்லோரும் குடித்து வருகிறோம். காசநோய் பாதிப்புடன் என்னிடம் வந்த ஒருவருடனான இந்த உரையாடலைப் படித்துவிட்டு, அதை முடிவு செய்யுங்கள்.
'
'நன்றாக எலும்பு, ஈரல், மீன், முட்டை எல்லாம் சாப்பிடுங்கள்.''
''இல்லை டாக்டர், நான் சைவம்.''
''அப்படியானால் பால் நிறைய உபயோகியுங்கள்.''
''இப்போதுதானே டாக்டர் சொன்னேன்.... நான் சுத்த சைவமென்று.''
'அதனால் என்ன... பால் சைவம்தானே.'
''என்ன சார், பால் எங்கே கிடைக்கிறது... தென்னை மரத்திலா, பனை மரத்திலா... பசுவில்தானே! அது எப்படி சைவமாகும்?''

- இப்படி கோபத்துடன் அவர் சொன்ன பிறகுதான், 'பால் அசைவ உணவு' என்கிற உண்மையை உணர ஆரம்பித்தேன்.
'பால் குடிப்பது இயற்கைக்கு முரணானது' என்கிற கருத்தும் தற்போது மெள்ள பரவி வருகிறது. இது, நம்நாட்டு சமூக ஆர்வலர்களோ, சித்த மருத்துவர்களோ மட்டும் கூறும் கருத்தல்ல. அயல்நாடுகளைச் சேர்ந்த பிரபல மருத்துவர்கள், விஞ்ஞானிகள்கூட இப்படித்தான் சொல்கிறார்கள்.

'பால்' என்பது குழந்தைக்காகத் தாய் சுரக்கும் அற்புத உணவு. இளம் உயிருக்கேற்ற ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்புச் சத்துக்களும் நிறைந்த உணவு அது. ஒவ்வொரு பாலூட்டும் விலங்குக்கும் இது பொருந்தும். ஒரு காலகட்டம் வரை இது கட்டாயத் தேவை. பிறகு, அவை வளர்ந்து சுயமாக உணவு தேடி உண்ண ஆரம்பித்தவுடன், பால் சுரப்பது நின்றுவிடும். அதன் பிறகு, எந்த ஜீவராசிக்கும் பால் தேவையே இல்லை. மனிதனைத் தவிர, வேறு எந்த உயிரினமும் குழந்தைப் பருவத்துக்குப் பிறகு பாலைத் தேடுவதில்லை. மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதும் பாலுக்காக அலைகிறான். அதுவும் மற்றொரு ஜீவராசியின் பாலுக்கு! மாடு, ஆடு, ஒட்டகம், கழுதை எதையும் அவன் விடவில்லை!

நம்நாட்டு மருத்துவ நூல்கள், பாலை நல்ல மருந்தாகத்தான் சித்திரிக்கின்றன. 'குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்றுதான் கூறுகின்றன. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், 'அது உண்மை' என்பது புரியும்.  

ஆனால், மருந்து என்பதை மறந்து, சத்து என்று பலரும் பருகிக் கொண்டிருக்கிறோம். 'பாலில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்), புரதச்சத்து, பொட்டாசியம் நிறைய இருக்கிறது. ஒரு கப் பாலில் சுமார் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இது, எலும்புகளையும் பற்களையும் பாதுகாக்க உதவும்' என்றுதான் எல்லாரும் நம்புகிறோம். ஆனால், 'உண்மை இதற்கு மாறானது' என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 94-ம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்கன் 'எபிடெமியாலஜி ஜர்னல்' மூலமாக டாக்டர் கிளைன் வெளியிட்ட செய்தியில், 'இடுப்பு எலும்பு முறிவு, பால் பருகும் மக்களிடம்தான் அதிகம். பால் அதிகம் பருகாத நாடுகளில் இது குறைவு' என்று கூறியிருக்கிறார்.

ஜான் ஹங்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஆஸ்கி, 'பால் குடிக்காதீர்கள்' என்று ஒரு புத்தகமே எழுதிஇருக்கிறார். 'பாலில் கால்சியம் நிறைய இருந்தாலும், பாலின் அமிலத் தன்மையால் எலும்புகளிலிருந்து கால்சியம் உருகி நீரில் வெளியேறுகிறது. ஆகவே, எலும்புகள் பலவீனமாகின்றன' என்பது அவருடைய வாதம்.

ரத்த சோகை (அனீமியா), பலவகை அலர்ஜிகள், டைப்-1 சர்க்கரை நோய், ஆண்களுக்கு புராஸ்டேட் சுரப்பு புற்றுநோய், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், பால் ஒவ்வாமை இப்படி பலவிதமான பிரச்னைகளுக்கும்... ஆஸ்துமா, சைனஸ் போன்றவற்றை அதிகப்படுத்துவதற்கும் பால் ஒரு காரணியாக இருக்கிறது என்பதும் விஞ்ஞானிகள் பலரின் ஆராய்ச்சி முடிவு.

இதில் சமீப ஆண்டுகளாக இன்னொரு புதிய ஆபத்தும் வந்திருக்கிறது. மாடுகள் சீக்கிரம் பெரிதாக வளர்ந்து கசாப்புக்குத் தயாராக வேண்டும்... நிறைய பால் கொடுக்க வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக... துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone -RBGH) ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு மூன்றாம் மாதத்திலிருந்தே இதை போடுவதால், 15 மாதத்திலேயே அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கிறது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பவுண்டு பால் சுரக்கும் மாடுகள், 20 ஆயிரம் பவுண்டு பால் சுரக்கின்றன. மாடுகளின் மாமிசத்திலும் இந்த ஹார்மோன் கலந்திருப்பதால், 'இதைச் சாப்பிடும் மனிதர்களுக்கு நிறைய பக்க விளைவுகள் வரலாம்' என்பது ஒரு கருத்து. ஹார்மோன் ஊசியின் இன்னொரு விளைவு, இந்த ஊசி போடப்பட்ட மாடுகளின் பாலைக் குடிப்பதால்... சர்க்கரை நோய், பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல், அதீத மார்பக வளர்ச்சி, ஆண்களுக்கும் மார்பக வளர்ச்சி என்று ஏகப்பட்ட பிரச்னைகள் வரலாம். ஆண்களுக்கான மார்பக அறுவை சிகிச்சை அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வருகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இத்தகைய பிரச்னைகள் எழுந்திருப்பதால்... கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் அனைத்து நாடுகள் என உலகின் பெரும்பாலான பாகங்களில், மாடுகளுக்கான ஹார்மோன் ஊசி தடை செய்யப்பட்டு விட்டது. நம்நாட்டில், வழக்கம்போல பன்னாட்டுக் கம்பெனிகள் அந்த ஊசியை விற்பனை செய்து லாபம் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது... நாம், தூங்கிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு நடுவே... 'ஆஸ்துமா, அலர்ஜி, லாக் டோஸ் ஒவ்வாமை போன்ற குணங்கள்... பச்சை பாலில் குறைவு. இன்சுலின் போன்ற வளர்ச்சிப் பொருட்களின் அளவும் குறைவாக இருக்கும்' என்றும் நம்பப்படுவதால், பதப்படுத்தப்படாத பச்சைப்பால் உபயோகிப்போர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

மக்காச்சோளம், தானியங்கள் போன்ற உணவில் வளர்ந்து, ஹார்மோன் ஊசியால் பெருத்து, 'அமுதசுரபி'யாகப் பால் சுரந்து, 'பாஸ்ட்சரைஸ்' முறையில் பதப்படுத்தும் பாலைவிட, பூச்சிக்கொல்லிகள் தெளிக்காத புல்வெளியில் மேய்ந்து, தனியார் வீடுகளில் கிடைக்கும் பச்சைப் பால் மிகவும் உயர்ந்தது என்கிற கருத்தும் வலுத்து வருகிறது.

'பால் அவசியம் வேண்டும்' என்று நீங்கள் முடிவு செய்தால், இதையே பின்பற்றுங்களேன்!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



Wednesday, April 22, 2015

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..

ஒட்டகம் ஓர் ஒப்பற்ற அதிசயம்..

ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் 'பாலைவனக்கப்பல்'.
ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்அரபிகள்முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் 'தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்' என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான 'கப்பலில்', மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. 'கடலுக்கு கப்பல்பிரயாணம் பாலைக்கு ஒட்டகபிரயாணம்' என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது…., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பானஒட்டகத்துக்கு…. எப்படி ஒப்பாகும்?
(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ…..ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ' ..! ' போட்ட இடங்களுக்கு அடுத்து 'சுபஹானல்லாஹ்'சொல்லிக்கொள்ளுங்கள்.)
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும்இவை, பொதுவாக 50ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்உணவில்லாமல்பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும்செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில்
50°செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரைதன் எடையில்22%இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8%எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- 'அவன் உடம்பில் 88%நீர்ச்சத்துதான் இருந்தது' என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில்12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா,அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம்கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்கேட்கவே வேண்டாம்அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர்அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை10நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்துஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர்அறைகளில்நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிசேமித்துக்கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள்அதன் உண்மையானஅளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோதன்னுடைய சிறுநீரையும்குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள்8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடைகிட்னியாகஇருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும்.அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் 'விசேஷ லிவர்' ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசுசிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன்கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்புநின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட 'குளுகுளு' இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு விட்டமின் 'C' அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரிபாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றிஅதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°Cலிருந்து 41.7°Cவரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில்55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றைசுவாசித்து வெளியேற்றினோம் என்றால்16மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும்வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில்,மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..!மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இருகுளம்புகளையும் சேர்த்து மிக அகன்றவட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும்பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டுமடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்றுமடக்கும்இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள்அதன்மீதுஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும்,  கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போதுகொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்றுமணற்புயல்பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன் 'கை'யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள்மணலோதூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன்
உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு 
மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்புவாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்திகூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..! அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும்,நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாகஉண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
"அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது" என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடிவிளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீபயணம்செய்யும் ஒட்டகம்…, நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும்தாரளமாககிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோமுறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும்முட்டாள் ஒட்டகம் எப்போதோஓடிபோயிருக்கலாமே..! இப்படிபாலைவனத்தில் கஷ்டப்படவேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்…) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்
"(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே…! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள்பகுத்தறிவைகேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் போலிவார்த்தைகள்பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில்உணராலாம்.
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com