Sunday, July 10, 2011

டெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்!

டெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்!


சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பிரபல நகைக் கடைக்குச் சென்றிருந்தார். சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை வாங்க வேண்டும் என்பது அவரது திட்டம். கையில் சுமார் எழுபதாயிரம் ரொக்கம் இருந்தது. மீதியை டெபிட் கார்டு மூலம் 'ஸ்வைப்செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்.நகையைத் தேர்வு செய்து, பில் போட்டு, கையிலிருந்த பணத்தோடு, மீதிப் பணத்துக்கு டெபிட் கார்டை எடுத்து நீட்ட, கடைக்காரரோ கார்டிலிருந்து வெறும் 25,000 ரூபாய் மட்டுமே 'ஸ்வைப்செய்ய முடியும் என்று சொல்ல, நண்பர் டென்ஷனாகி விட்டார். சரி பக்கத்திலிருக்கும் ஏ.டி.எம். சென்டரிலிருந்து பணமாக எடுத்து பில் செட்டில் செய்துவிடலாம் என்ற யோசனையோடு அங்கு சென்றால், அந்த மெஷின் அவுட் ஆப் ஆர்டர்... பிறகென்ன நல்ல நேரத்தில் நகை வாங்கலாம் என வந்த  குடும்பத்தினரோடு, அவர்  மல்லுகட்டிய அவஸ்தை தனிக் கதை..

உள்ளபடி பார்த்தால், டெபிட் கார்டுகளின் வசதிகள், சௌகர்யங்கள் என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பது தவிர, வேறு வகைகளில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? என்கிற விஷயங்கள் பலருக்குத் தெரிவதில்லை. இதனால்தான் மேற்சொன்னதுபோல பல குழப்பங்கள் நடக்கின்றன.உங்கள் டெபிட் கார்டு பற்றி அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..

ஏ.டி.எம். பரிவர்த்தனைகள்!

கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் அல்லாமல் மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்தில் ஐந்து முறைதான் பணமெடுக்கலாம். அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மினி ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் என்கொயரி மற்றும் பின்நம்பர் மாற்றுவது போன்ற பணமல்லாத பரிவர்த்தனைக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது என்றுதான் இதுநாள்வரை இருந்தது. ஆனால், கடந்த ஒன்றாம் தேதி முதல் பிற வங்கி ஏ.டி.எம்.களில் பண பரிவர்த்தனை மட்டுமின்றி நிதியல்லா பரிவர்த்தனையும் சேர்த்து மொத்தம் ஐந்து முறைக்கு மேல் சென்றால் இனி கட்டணம் வசூலித்து விடுவார்கள்.  ரிசர்வ் வங்கியின் புதிய ஆணை இது.

இருப்பினும், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில வங்கிகள் சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக இதர வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஐந்து முறைக்கு மேல் செய்யப்படும் நிதியல்லா பரிவர்த்தனைகளுக்கு இருபது ரூபாய்க்குப் பதில் 8.50 ரூபாய் மட்டுமே கட்டணம் என சில வங்கிகள் அறிவித்துள்ளன.

ஏழு நாட்களில் திரும்பக் கிடைக்கும்!

சில இடங்களில் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது பணம் வராமல் போய்விடும். ஆனால், நமது கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டிருக்கும். இது சம்பந்தமாக புகார் கொடுத்தால் பன்னிரண்டு நாட்களுக்குள் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், பன்னிரண்டு நாட்கள் என்பதை புகார் வந்த ஏழு நாட்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், அதற்குமேல் தாமதமாகும் ஒவ்வொரு நாட்களுக்கும் 100 ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் ஆர்.பி.ஐ. சில மாதங்களுக்குமுன் கூறியிருக்கிறது. எனவே, இனி பணம் திரும்ப கைக்கு கிடைக்க தாமதமானால் வட்டியும் கிடைக்கும். 

எவ்வளவு பணம் எடுக்கலாம்?  

சம்பளக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கை வைத்திருப் பவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம்.-மிலிருந்து பணம் எடுக்கலாம். சில வங்கிகள் 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கின்றன. அதுவும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் மட்டுமே இந்த அளவுக்கு எடுக்க முடியும். மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். மையம் எனில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதனால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு பண பரிவர்த்தனை செய்ய  முடியும் என்பதை வங்கி அதிகாரிகளைச் சந்தித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஷாப்பிங் செய்யும்போது...

ஒரு நாளைக்கு ஏ.டி.எம்.-மில் எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ, அதே மதிப்பிலான தொகைக்கு மட்டுமே ஷாப்பிங்கில் 'ஸ்வைப்செய்ய முடியும். சில வங்கிகள் உங்களது பேலன்ஸ் தொகைக்கு ஏற்ப ஷாப்பிங் செய்யும் லிமிட்டை வரையறுத்துள்ளன. சம்பளக் கணக்கு எனில் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை மட்டுமே ஒரு நாளைக்கு ஷாப்பிங்கின்போது 'ஸ்வைப்செய்ய முடியும். ஐந்து லட்சம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், நாளன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம், அதுபோல ஷாப்பிங் செய்யவும் முடியும்.

டெபிட் கார்டு தொலைந்தாலோ, அல்லது திருடு போய்விட்டது என்றாலோ அதனால் நமக்கு பெரிய அளவில் பாதிப்புகள் வராமல் தடுக்கவே இது மாதிரியான கட்டுப்பாடுகளை வங்கிகள் வைத்துள்ளன. ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டைப் பயன்படுத்துவது பற்றி ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொருவிதமான நடைமுறையைப் பின்பற்றுகிறது. அனைத்து வங்கிகளும் ஒரே நடைமுறையைக் கொண்டுவந்தால் பெரும்பாலான சிக்கல்கள் தீரும். ஷாப்பிங் மையங்களில்  டெபிட் கார்டை ஸ்வைப் செய்யும்போதும், பின் நம்பரையும் சேர்த்தே பயன்படுத்துவதாக இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். சில வங்கிகளின் ஸ்வைப் மெஷினில் இந்த வசதிகள் உள்ளன.

ஆன்லைன் ஷாப்பிங்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு பொருட்களை வாங்கலாம். ஆன்லைனில் ஷாப்பிங் எனில் உங்கள் டெபிட் கார்டின் ரகசிய குறியீடு எண் கொடுக்க வேண்டியிருக்கும். இதிலும் எச்சரிக்கை தேவை.ஷாப்பிங் போவதே ஒரு ஜாலி அனுபவம்தான். டெபிட் கார்டு இருக்கே என்று ஹாயாகப் போகிறவர்கள் உங்கள் லிமிட் எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு போனால் தேவையில்லாத அவஸ்தைகளைத் தவிர்க்கலாம்!

மொத்தமாக எடுப்பதில் ஆபத்தா?

ஏ.டி.எம். குறித்து ஜோக்குகளுக்கு மட்டுமல்ல, பரபரப்பு செய்திகளுக்கும் எப்போதும் பஞ்சமிருப்பதில்லை. லேட்டஸ்ட் பரபரப்பு நூறு ரூபாய் நோட்டுகளாக வந்தால் அதில் ஒரு சிக்கல் ஏற்படும் என்பதுதான்! உதாரணமாக அதிக தொகை எடுக்கும்போது எல்லாமே நூறு ரூபாயாக வரும்பட்சத்தில் பாதிப் பணம் வராமலே போய்விடும் என்ற பரபரப்பு செய்திதான் அது.

''ஆனால் இது உண்மை கிடையாது. இப்படி ஒரு குறைபாட்டுடன் யாராவது ஏ.டி.எம். வைப்பார்களா என்ன?! பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் உள்ள இயந்திரங்களின் வாய்ப்பகுதி, அதிகளவிலான நோட்டுகளைத் தரும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த ஏ.டி.எம். மெஷினே நூறு ரூபாய் நோட்டுக்குப் பதில் ஐந்நூறு ரூபாய் வேண்டுமா, ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வேண்டுமா என்பதில் ஆரம்பித்து இவ்வளவு தொகையை ஒரே தடவையில் தரமுடியாது என்பது வரை தெரிவித்து விடும். அதனால் பிரச்னை எழுவதற்கே வாய்ப்பில்லை'' என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!   

ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்

ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்


இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.

1. உங்களுடைய  மின்னஞ்சல் முகவரியை உங்கள் தளங்களிலோ, அல்லது வேறு தளங்களிலோ பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால்username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம். உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மெயில் ஐடிக்களை சேகரிப்பதற்காகவே நிறைய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை ஈமெயில் ஐடி என்பதை கணித்து சேகரிக்கும்.

2. சில தளங்களில் Newsletter-ல் சேருமாரும், அல்லது சில ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய இமெயில் ஐடியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானதுதானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

3. Gmail, Yahoo போன்றவற்றை மொபைல்களில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற மொபைல்களுக்கான சாஃப்ட்வேர்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Password-ஐ கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள். சில சமயம் என் நண்பர்களிடமிருந்து தினமும் ஸ்பாம் மெயில்கள் (Spam Mails) வந்துக் கொண்டிருந்தன. அவர்களில் அதிகமானோர் Nimbuzz பயன்படுத்தியிருந்தார்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான ஈமெயில்கள் நமக்கு வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மெயில் ஐடிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மெயில்கள் வரும். சில சமயம் ஆபாச மெயில்களும் வரும். அது போன்ற மெயில்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மெயில்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும்.  அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்! பிறகு நமது பணம் களவாடப்படும்.

5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று இமெயில்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மெயில்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள். 

யுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு

யுஎஸ்பி பென் ட்ரைவினை பாதுகாக்க எளிய வழிகள் நான்கு

நண்பர்களே உங்களிடம் இருக்கும் யூஎஸ்பி பென் ட்ரைவை பாதுகாக்க சில வழிகள் இங்கே கூறுகிறேன்.  முடிந்தவரை இந்த வழிகளை உபயோகித்து பென் ட்ரைவினை அதிக நாட்கள் உபயோகியுங்கள்.

இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது.  கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.  அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.  அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.  பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன்.  

Disabled Autorun
ஆட்டோ ரன் நிறுத்தம்

பென் ட்ரைவினை கணினியில் செருகியவுடன் ஆட்டோ ரன்  ஆகும்.  இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும்.  இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும் பென் ட்ரைவினில்.  இதை முதலில் தடுக்க வேண்டும்.  இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.

இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது.  இதை நிறுவினால் உங்கள் கணினியில் சிடி, டிவிடி, பென் ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது.  அதாவது Auto Play Run தானாக நடக்காது.

Microsoft Auto Run Disabled Patch Download Link

Scan Your Pen Drive - 
பென்ட்ரைவினை சோதித்தல்

ஒவ்வொரு முறை உங்கள் பென் ட்ரைவினை கணினியில் செருகும் பொழுது உங்கள் கணினியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும்.  இதன் மூலம் கணினியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும்.  அத்துடன் பென் ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.

அதற்கு உங்கள் கணினியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும்.  ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டி வைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள்.  பென் ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணினியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.

Safely Remove Your Pen Drive  பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்

இது முக்கியமான ஒன்று நிறைய நண்பர்கள் எப்பொழுதும் இந்த தவறினை செய்கிறார்கள்.  அது என்னவென்றால் பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென் ட்ரைவ் வழியாக திறப்பது.  சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென் ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.  இதனால் என்னாகிறது பென் ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும்.  இதனால் சீக்கிரம் பென் ட்ரைவ் பழுதாகிறது.  இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென் ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.  

அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென் ட்ரைவினை பிடுங்குவது.  எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.

அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது.   யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும்  இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.

USB Removal or Ejector Tool Download Link

General Tips -
சில பொதுவான வழிமுறைகள்

அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள் அத்துடன் வீட்டினுள் கணினி ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென் ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள்.  ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் டேட்டாக்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.   சில நேரங்களில் யூஎஸ்பி பென் ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணினியில் உபயோகப்படுத்தாதீர்கள்.   தண்ணீரில் விழுந்த பென் ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.

அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும் அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென் ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும்.  ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.