Monday, April 7, 2014

இரத்ததானம் கொடுக்கலாமா?

யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்?

« A
குரூப்:

இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத்தான் கொடுக்க வேண்டும்.

« B
குரூப்:

இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும்.

« AB
குரூப்:

இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம்.

« O
குரூப்:

இவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்கவேண்டும்.

'
ஆர்எச்' என்று சொல்கிறார்களே அது என்ன?

இரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற்றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குரங்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர்எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக்காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன்படுத்துகிறார்கள்.

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

«
நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

« 18
வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

«
குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

«
இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.

எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10
நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20
நிமிடம்.

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?

350
மில்லி. நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. எடுக்கப்படுகிற இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?

10
லிருந்து 21 நாட்களில்.

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள்தான் உயிரோடு இருக்கும். பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல். ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து உயிர் காப்பது நல்லதுதானே?

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.

சின்னச்சின்ன உடல்நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்_டை பயன்படுத்துங்கள்.

«
சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

«
ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

«
ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

«
குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

«
அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

«
குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

«
பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

«
சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

«
பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

«
பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

«
இதய நோய்கள் _ வேண்டாம்.

«
இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

«
வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம். மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

«
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

«
நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

«
மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

«
மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

«
காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.

மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

«
சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

«
ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

«
நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

«
இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

«
ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

«
இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

«
நல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.

«
ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.

3. 6
மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

«
இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்

http://pettagum.blogspot.in



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு

உங்கள் கம்ப்யூட்டர் அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டு கிறதா? உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னை களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.

பொதுவாக, கம்ப்யூட்டர் இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் உண்மை. எந்த நேரத்திலும் இது நிகழும் என்பதால், அதனை எந்த நேரத்திலும் நாம் எதிர்பார்க்கவும் வேண்டும்.

உங்கள் சிஸ்டத்தில் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறுவது மிகவும் சகஜமாகிவிட்டது. முதலில் வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர், இப்போது மிகவும் குறைவான வேகத்தில் இயங்குகிறது, அடிக்கடி நீல நிறத்தில் திரையில் எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது, சிபியு கேபினிலிருந்து பிளாஸ்டிக் சற்று கருகியது போல வாசனை வருகிறது, சிறிய கிரைண்டர் ஓடுவது போல சத்தம் வருகிறது போன்ற பேச்சுக்கள் எல்லாம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் குறை கூறும் குற்றச்சாட்டுக்களே. இவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் அல்லது ஆய்வு செய்திடலாம் என்று பார்ப்போம்.

இவை அனைத்திற்கும் இதுதான் தீர்வு என எதனையும் உறுதியாக எழுதித் தந்துவிட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அது இயங்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை, உள்ளாகப் பதிக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஹார்ட் ட்ரைவின் தன்மை இவற்றைப் பொறுத்தே இந்த பிரச்னைகள் ஏற்படும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

நாம் சந்தேகிக்கும் வகையில், சிபியு கேபினிலிருந்து சத்தம் வருகிறது என்றால், நிச்சயமாய் ஐந்து வாரங்களிலோ அல்லது ஐந்து நிமிடங்களிலோ ஹார்ட் ட்ரைவ் இயக்கத்தினை நிறுத்தப் போகிறது என்பதன் அடையாளமே அது. எனவே அது போன்ற சூழ்நிலையில், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த ட்ரைவினை உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தலாம் என்பதனை அறிந்து, அதனை எங்கு வாங்கலாம் என்பதனை முடிவு செய்திடுங்கள்.

சில வேளைகளில், நாம் எந்த புரோகிராமின் ஐகான் மீது கிளிக் செய்தாலும், அது இயங்க, வழக்கத்திற்கு மாறாக, சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் பல காரணங்கள் உண்டு. உங்கள் ராம் மெமரியில் பிரச்னை இருக்கலாம்.

ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை நீங்கள் திறந்து வைத்து இயக்கலாம். அல்லது நீங்கள் அறியாமலேயே, பல புரோகிராம்கள் திறக்கப்பட்டு பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். ரன் விண்டோவில் msconfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், start up என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் பட்டியலைப் பார்க்கவும்.

இதில் உங்களுக்குத் தேவைப்படாத சில புரோகிராம்கள் இருக்கலாம். சிலவற்றின் பெயர்கள் நீங்கள் இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். அவை குறித்து கூகுள் தேடல் மூலம், எத்தகைய பயன் தரும் புரோகிராம்கள் அவை என அறிந்து கொள்ளவும்.

அவை உறுதியாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்கள் எனில், அவற்றிற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, Apply என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றத்தினை இயக்க, நீங்கள் ரீபூட் செய்திட வேண்டிய திருக்கும்.

இன்னொரு பிரச்னை ட்ரைவர் புரோகிராம் களால் ஏற்படும். தேவையற்ற அல்லது ஒருங்கிணைந்து செயலாற்றாத ட்ரைவர் புரோகிராம்கள் இவ்வாறு புரோகிராம் இயக்கத்தினைக் கொண்டு வராது. எனவே குறிப்பிட்ட புரோகிராமிற்கான அப்டேட் செய்யப்பட்ட ட்ரைவர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும்.

சில வேளைகளில், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகையில், மற்றவர்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்துள்ளார்கள் ('Other People Are Logged On to This Computer'); எனவே மூட வேண்டியது அவசியமா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் இருக்கலாம்;

இன்னொருவர் கம்ப்யூட்டரைப் பயன் படுத்தி, தன் பணியை முடித்த பின்னர், லாக் ஆப் செய்திடாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். அந்நிலையில், நீங்கள் பயன் படுத்தி ஷட் டவுண்ட் செய்திட்டால், இந்த செய்தி கிடைக்கும். யூசர் அக்கவுண்ட்ஸ் சென்று, யார் அக்கவுண்ட் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து, அதனையும் சேர்த்து லாக் ஆப் செய்திடவும்.

கம்ப்யூட்டர் பூட் ஆகும் வேளையில் பீப் ஒலிகளை வெளிப்படுத்தி இயங்காமல் நின்றுவிடும். ஒவ்வொரு வகை பீப் ஒலியும் ஒருவகையான சிக்கலைக் காட்டுகிறது. மவுஸ், கீ போர்ட், வீடியோ கார்ட், ஹார்ட் ட்ரைவ் இணைப்பு என எதில் வேண்டு மானாலும் பிரச்னை இருக்கலாம்.

இந்த பீப் ஒலி கேட்க முடியாத வகையில் ஸ்பீக்கரில் பிரச்னை இருந்தால், உங்கள் நிலை சிக்கல் தான். ஒவ்வொன்றாக, நீங்கள் சரி செய்து பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளில், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள, உள்ளே இணைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள்களை நீக்கி மீண்டும் இணைத்தாலே போதும்.

கேபிள்களை இணைத்த கையோடு, கனெக்டர்கள் சரியாகப் பொருந்தி உள்ளனவா என்று பார்க்கவும். சரியான முறையில் பொருத்தாமல், அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், கனெக்டர்களில் உள்ள பின்கள் வளைந்திருக்க சந்தர்ப்பம் உண்டு. அதனைச் சரி செய்திடவும்.

கிராஷ் ஆகாமலேயே, புளு ஸ்கிரீன் தோன்றாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் ரீபூட் ஆகிறதா? சிஸ்டம் கேபின் அதிக சூடு ஆகிறது என்று பொருள். சிபியு மேலாக உள்ள சிறிய மின் விசிறி நன்றாகச் சுழல்கிறதா எனச் சோதனை செய்திடவும். மற்ற மின்விசிறிகளையும் சோதனை செய்துவிட்டு, அவற்றைச் சுத்தம் செய்திடவும்.

சில வேளைகளில், நீங்கள் என்ன டைப் செய்தாலும், அந்த கட்டளை, சிபியுவிற்குச் செல்லாது. கீபோர்டில் இருந்து எந்த சிக்னலும் அனுப்பப்படாத நிலையை இது குறிக்கிறது. உங்கள் கீ போர்ட் யு.எஸ்.பி. கீ போர்டாக இருந்தால், உங்கள் பயாஸ் செட்டிங்ஸ், அதனை இயக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

பழைய PS/2 கீ போர்டு எனில், விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் சென்று, அதனை அன் இன்ஸ்டால் செய்து, கம்ப்யூட்டரை இயக்கவும். கம்ப்யூட்டர் தானாக, அதனை உணர்ந்து இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும்.

சிபியு கேபினிலிருந்து வழக்கத்திற்கு மாறான ஸ்மெல் வருகிறதா? கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் சக்தியை நிறுத்தி, எந்த பகுதியிலிருந்து இந்த வாசனை வருகிறது எனப் பார்த்து, அந்தப் பகுதியை மாற்றி, புதியதாக ஒன்றைப் பொருத்துவதே இதனைச் சரிப்படுத்தும் வழியாகும்.

இன்னும் நம்மால் அறியமுடியாத பிரச்னைகள் இருந்தால், அது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினால் கூட இருக் கலாம். குறிப்பிட்ட அந்த தொகுப்பினை ரீ இன்ஸ்டால் செய்வதே இந்த சிக்கலிலிருந்து உங்கள் கம்ப்யூட்டரை விடுவிக்கும்.

http://pettagum.blogspot.in/2012/12/blog-post_30.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பழைய கார் வாங்குவது எப்படி?

தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கினால், மாதா மாதம் கணிசமான இ.எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பாலான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல்லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்' எனச் சொல்லப்படும் 'பழைய கார்' நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், வாங்கும் பழைய காரிலும் புத்தம் புதிய காரின் ஃபீல் கிடைக்கும்!
பிளானிங் முக்கியம்! 
புத்தம் புதிய கார் வாங்க ஷோ ரூம் போனால், அங்கு நீங்கள்தான் ராஜா. உங்களுக்கு காரைப் பற்றி எடுத்துச் சொல்ல சேல்ஸ் ஆபீஸர் இருப்பார். உங்கள் வீடு தேடி டெஸ்ட் டிரைவ் கார் வரும். ஆனால், பழைய கார் விஷயத்தில் அப்படிக் கிடையாது. நீங்கள்தான் அலைந்து திரிந்து தகவல்களைப் பெற வேண்டும். அதிலும், நீங்கள் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. நல்ல கண்டிஷனலில் இருக்கும் காரா? ஆக்ஸிடென்ட் ஆகாத காரா? இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் எல்லாம் சரியாக இருக்குமா என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதைக் குடையும். அதனால், கார் வாங்கச் செல்வதற்கு முன்பு, தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.

பட்ஜெட் மற்றும் செக்மென்ட்! 
பழைய கார் விஷயத்தில், முதலில் நீங்கள் திட்டமிட வேண்டியது பட்ஜெட்தான். 'கார் என் கைக்கு வருவதற்கு முன் இந்தத் தொகைதான் என்னால் செலவு செய்ய முடியும். இதற்கு மேல் செலவு வைக்கும் என்றால், அந்த கார் எனக்கு வேண்டாம்' என்று திட்டவட்டமாக முடிவெடுங்கள். பட்ஜெட் விஷயத்தில் சரியாகத் திட்டமிடவில்லை என்றால் என்ன ஆகும்? ஒரு பழைய கார் ஐந்து லட்சத்துக்கு விற்பனைக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சார், ஒரு 75,000 எக்ஸ்ட்ரா போட்டா, அதைவிட நல்ல கார் ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்கலாமா?' என்பார்கள்.
லட்சங்களில் டீல் செய்யும்போது, 75,000 ரூபாய் உங்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அந்த காரையும் பார்க்கிறேன் என கடைசி வரை கார்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். கடைசியாகப் பார்த்த காரின் விலை 8 லட்சத்தில் வந்து நிற்கும். மதில் மேல் பூனை போல, எந்த காரையும் வாங்க மனமில்லாமல் குழம்பிக்கொண்டே இருப்பீர்கள். அதனால், பட்ஜெட் விஷயத்தில் கறாராக இருப்பதே நல்லது! பட்ஜட்டைப் பொருத்து காரின் செக்மென்டைத் தேர்வு செய்யலாம். செக்மென்டைப் பொருத்தும் பட்ஜெட்டைத் தீர்மானிக்கலாம். எம்யூவி, எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக், சின்ன கார் என ஐந்து செக்மென்ட் கார் வகைகள் இருக்கின்றன!
ஓனரா, டீலரா? 
பழைய கார் சந்தை, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்ல! அரசு இதைக் கண்காணிப்பதும் இல்லை. டீலருக்கு இது தொழில். உங்களுக்கு இது கனவு. டீலர் உங்களை ஒரு வாடிக்கையாளராகத்தான் அணுகுவார். ஆனால், அவருடைய நடத்தை ஒரு நண்பனைப் போல இருக்கும். டீலரிடம் பழைய கார் வாங்கச் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா வியாபாரத்தைப் போல, இதிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பார்கள். விபத்துக்குள்ளான காரைச் சரி செய்து, பெயின்ட் அடித்து புதிய கார் போல் மாற்றி விற்பவர்களும் உண்டு. உங்களால் இது விபத்தான கார் எனப் மேலோட்டமாகப் பார்த்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால், உங்களுடன் ஒரு தேர்ந்த மெக்கானிக் அல்லது ஆட்டோமொபைல் விஷயங்கள் அறிந்த நண்பரை அழைத்துச் செல்வது நல்லது. அரிதான சமயங்களில், பழைய கார் டீலர்களிடம் சிறந்த விலைக்கு நல்ல காரும் வாங்கலாம்!

பழைய கார் டீலர்களில் இன்னொரு வகையினர் உண்டு. கார் நிறுவனங்களே பழைய கார் டீலர்களாகச் செயல்படுகிறார்கள். டொயோட்டா - யு-டிரஸ்ட், ஹூண்டாய் - அட்வான்டேஜ், ஹோண்டா - ஆட்டோ டெரஸ், டாடா - அஷ்யூர், மஹிந்திரா - எக்ஸ் மார்ட், ஃபர்ஸ்ட் சாய்ஸ், செவர்லே - ஓகே, மாருதி - ட்ரூ வேல்யூ போன்ற நிறுவனங்கள் இப்படிப் பட்ட அமைப்புகள். இவர்களிடம் கார் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இவர்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போவதை விரும்ப மாட்டார்கள். எனவே, உங்களுக்கு இங்கே நல்ல கார் கிடைக்கும். மேலும் வாரன்டி, சர்வீஸ் போன்றவையும் கிடைக்கும். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.
ஓனர்! 
டீலர் வேண்டாம்; அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மூலமாகவோ கார் வாங்க விரும்பினால், முதலில் ஓனரின் வீட்டுக்கு விருந்தாளி போலச் சென்று காரைப் பார்த்து வரலாம். அறிமுகமானவர்களுக்குள் நடக்கும் விற்பனை என்பதால், இரு தரப்பினரும் விலையில் விட்டுக் கொடுத்துப் போவார்கள். திருப்தி ஏற்படும் பட்சத்தில், கார் வாங்கும் படலம் இரு தரப்பினருக்கும் நல்ல அனுபவமாக அமையும். சில சமயங்களில், தெரிந்த நபர் மூலம் தெரியாத யாராவது கார் விற்க இருக்கும் தகவல் வரலாம். அவரிடம் நீங்கள் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், கார் வாங்கும்போது நீங்கள் குறைந்த விலைக்கு நல்ல காரை வாங்கலாம்.

பெட்ரோலா, டீசலா? 
இப்போது இருக்கும் விலை நிலவரத்துக்கு, இதுதான் எல்லோருக்கும் பெரிய கேள்வி. 'காரை அடிக்கடி ஓட்டுவீங்க, ஒரு நாளைக்கே குறைந்தது ஐம்பது கி.மீட்டருக்கு மேலே சுற்றுவேன்... அப்படீன்னா, டீசல் எடுத்துக்குங்க சார். ஆனா, காரையே எப்பவாவதுதான் ஓட்டுவேன். அதுவும் லாங் ட்ரிப்புக்குத்தான்னா பெட்ரோல்தான் உங்களுக்கு சரியா இருக்கும் சார்' - காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த வசனம் ஓரளவுக்கு உண்மை என்றாலும், இது கொஞ்சம் பழைய கார்களுக்குத்தான் சரி! டீசல் கார் என்றாலே மெயின்டெனன்ஸ் அதிகம், சத்தம் அதிகம், அடிக்கடி செலவு வைக்கும் என்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் லேட்டஸ்ட் டீசல் இன்ஜின்கள் ஸ்மூத்தாகவும், சத்தம் குறைவாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜினுக்கும், டீசல் இன்ஜினுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளைத் தவிர, இரண்டும் இப்போது கிட்டத்தட்ட ஒரே தரத்துக்கு வந்து விட்டன.
எனவே, டீசல் கார்தான் வேண்டும் என்றால், முடிந்தவரை குறைந்த கிலோ மீட்டர்களே இயங்கிய லேட்டஸ்ட் மாடலாக எடுப்பது நல்லது. பெட்ரோல் கார் என்றால், சர்வீஸ் இன்டர்வெல் சரியாக உள்ள காராகத் தேர்ந்தெடுங்கள்.
டெஸ்ட் டிரைவ் 
மறக்காமல் டெஸ்ட் டிரைவ் செய்துவிடுங்கள். இது காரினுள் இருக்கும் பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க உதவும். காரில் ஏதாவது அப்-நார்மல் சத்தம் வருகிறதா எனக் கவனியுங்கள். நீங்களேகூட சில விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். மேடு- பள்ளங்களில் ஓட்டிப் பாருங்கள். இது சஸ்பென்ஷன் நல்ல நிலைமையில் உள்ளதா என அறிய உதவும். பிரேக், கிளட்ச் போன்றவற்றை நன்றாகச் சோதியுங்கள். வேகமாக ஓட்டிப் பார்த்து, கார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பாருங்கள்!
வரலாறு! 
கார் ஓனரிடம் சர்வீஸ் ரெக்கார்டுகளை வாங்கிப் பாருங்கள். இது, கார் சரியாகப் பராமரிக்கப்பட்டு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும். மேலும், எதற்காவது இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்களா என்று விசாரியுங்கள். சர்வீஸ் வரலாறைப் பார்த்தால், முக்கியமான பாகம் இதற்கு முன்பு பழுதாகி உள்ளதா எனக் கண்டு பிடிக்கலாம்.

கார் வாங்கியாச்சு... அடுத்து? 
கார் வாங்கியவுடன் பலரும் வேலை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அப்படி இல்லை. கல்யாணத்தில் தாலி கட்டிய பிறகும் எப்படி எண்ணற்ற சடங்குகள் இருக்கிறதோ, அது போல கார் வாங்கிய பிறகும் சில சடங்குகள் உண்டு. முதலில் என்.ஓ.சி, இன்ஷூரன்ஸ், டெலிவரி நோட், ஓனர்ஸ் மேனுவல், ஆர்.சி போன்ற சமாச்சாரங்களை எல்லாம் கைப்பற்றுங்கள். தாமதம் செய்யாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்று, காரை உங்கள் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்யுங்கள். அதன் பின்பு, இன்ஷூரன்ஸ் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண் டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு சென்று, முழுமையாக செக்-அப் செய்து விடுங்கள்.
அப்புறம் என்ன..? ஆசைதான் நிறைவேறியாச்சே... காரில் பயணிப்பதை குடும்பத்துடன் ரசித்து அனுபவியுங்கள்!


http://pettagum.blogspot.in/2012/12/blog-post_30.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com