Sunday, April 13, 2014

குழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன?

குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படியையும் கவனம் நிரப்பிக் கடக்க வேண்டும் பெற்றோர்! பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையில்... அதன் அழுகைதான் பல மம்மி களுக்கு அலர்ஜியான விஷயம்!

ஆனால், ''அது ஒரு அற்புதமான மொழி... அதைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பின் சூட்சமம்'' என்று சொல்லும் சென்னை, எழும்பூர், குழந்தை நல மருத்துவமனையின் பதிவாளர் மற்றும் டாக்டர் ஸ்ரீனிவாசன், அந்த மொழியைப் புரிந்து கொள்ளும் சூத்திரங்களைப் பற்றி பேசுகிறார் இங்கே...

''
குழந்தை அழும்போது, என்னவோ ஏதோவென்று அதைவிட அதிகமாக தவித்துப்போகும் தாய் மனது. ஆனால், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு சரிசெய்தால், குழந்தையின் அழுகை நிற்கும், அம்மாவுக்கும் நிம்மதி பிறக்கும்!

பொதுவாக, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் 'குட் சைன்' என்போம். அதுவரை தொப்புள்கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத்துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்... குழந்தையின் அழுகை. எனவே, பிறந்தவுடன் குழந்தை குரலெடுத்து அழுதால்தான்... சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இது 'நார்மல் க்ரை' (Normal cry).

அடுத்த அழுகை, 'ஹங்கர் க்ரை' (Hunger cry)...பசிக்காக அழுவது. இதுவும் இயல்பானதுதான். குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை தாயின் உள்ளுணர்வே எளிதாகப் புரிந்துகொள்ளும். அழும் குழந் தையை எடுத்து பால் புகட்டினால், வயிறு நிறைந்தவுடன் அழுகை அடங்கி குழந்தை தூங்கிவிடும். சில குழந்தைகள் பால் குடித்த பின்னும் அழுவார்கள். காரணம், பால் பருகும்போது அந்த வேகத்தில் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்திருப்பார்கள். இதனால் வயிற்றில் சேரும் காற்றுதான், குழந்தையின் அழுகைக்குக் காரணம். எனவே ஒவ்வொரு முறை குழந்தை பால் குடித்தபின்னும், அதை மெதுவாக தோளில் சாய்த்து, அதன் முதுகில் இதமாக தடவிக் கொடுத்தால், உள்ளே சென்ற காற்று, ஏப்பமாக வெளிவந்துவிடும்.

பால் கொடுக்கும்போது கவனிக்க வேண் டிய விஷயம் ஒன்று இருக்கிறது. தாயின் மார்பகக் காம்புகளில் குழந்தை பால் குடிக்கும்போது முதலில் வரும் 'ஃபோர்மில்க்' (Foremilk) எனப்படும் தண்ணீரானது, குழந்தையின் தாகம் தணிக்கும். பிறகு வரும் கொஞ்சம் அடர்த்தியான 'ஹிண்ட்மில்க்' (Hindmilk), குழந்தையின் பசி தணிக்கும். எனவே, மார்பின் ஒரு காம்பில் முழுக்க பால் குடித்தபின்னே, அதை அடுத்த காம்புக்கு மாற்ற வேண்டும். ஆனால், சில அம்மாக்கள் ஒரு காம்பில் 'ஃபோர்மில்க்' குடித்ததுமே, அவசரமாக அடுத்த காம்புக்கு குழந்தையை மாற்றிவிடுவார்கள். அங்கேயும் 'ஃபோர்மில்க்'கையே குடிக்கும்போது, குழந்தையின் தாகம் தணியுமே தவிர... பசி தணியாது. இதன் காரணமாகவும் குழந்தை அழும். இது புரியாமல்... 'நல்லாதான் பால் குடிச்சுது... ஆனாலும் அழுது அட்டகாசம் பண்ணுது' என்று புலம்புவதில், பலனில்லை.

பெரியவர்களுக்கு சிறுநீர்ப் பை நிரம்பிய வுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட, சிறுநீர் கழிக்கச் செல்கிறோம். ஆனால், பச்சிளம் குழந்தை என்ன செய்யும்? அதன் சிறுநீர்ப் பையில் சிறுநீர் சேர்ந்ததும், அந்த உணர்வை அழுகையாக வெளிப் படுத்தி, சிறுநீர் கழிக்கும். பின் அழுகையை நிறுத்தி விடும். மோஷன் போவதற்கு முன்னும் இப்படி அழும். 'யூரின், மோஷன் போகும்போது அழுதுட்டே போறான்...' என்று இதற்குப் பயப்படத் தேவையில்லை. 'நான் யூரின்/ மோஷன் போகவேண்டும். அல்லது போய்விட்டேன்... என்னை கவனியுங்கள், துணியை மாற்றுங்கள்!' என்பதைத்தான் தன் அழுகையின் மூலம் உணர்த்துகின்றன குழந்தைகள்.

மூன்று மாதக் குழந்தை, வீட்டுக்கு யாராவது புதிதாக வந்தால், பயந்து அழும். அதை தனியாக விட்டுவிட்டு நீங்கள் சமையல், வேலை என்று சென்றுவிட்டால், அந்தத் தனிமை பிடிக்காமல் அல்லது பயந்து அழும். உடை இறுக்கமாக இருந்தால் அழும். தூக்கத்தில் இருந்து எழும்போது, தன் அருகில் யாரும் இல்லை என்றால், கவனத்தை ஈர்க்க, அழும். குளிக்க வைக்கும்போது காதில் தண்ணீர் போய்விட்டால் அழும். எறும்பு, பூச்சி ஏதும் கடித்தால் அழும். குழந்தையை வண்டியில் வைத்து வெளியில் அழைத்துச் செல்லும்போது, காதில் குளிர்காற்று நுழைந்தால் அழும். எனவே, குழந்தையின் ஒவ்வொரும் அழுகைக்கும் ஒரு காரணம் உண்டு. அதைத் தெரிந்துகொள்ளாமல், 'காரணமே இல்லாம அழறான்... உரம் எடுக்கணும்' என்று கிராமத்தில் சொல்வார்கள்'' என்ற டாக்டர் ஸ்ரீனிவாசன்...

''
அழுகைக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, குழந்தையை சமாதானப்படுத்துவது முக்கியம். 'எப்பப் பார்த் தாலும் அழுதுட்டே இருக்கு. கொஞ்ச நேரம் வேலை பார்க்க விடுதா..?' என்று சலித்து, உங்கள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வரும்வரை குழந்தையை அழவிட்டால், அதன் பாதிப்பை பெற்றோர்தான் சந்திக்க வேண்டும். என்ன பாதிப்பு..? ஏதோ ஒரு காரணத்தினால்தான் குழந்தை அழுகிறது என்று, அழ ஆரம்பித்தவுடன் சென்று சமாதானப்படுத்தும் வீடுகளில் வளரும் குழந்தைகள், எதிர்காலத்தில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள். 'அழுதா அழு' என்று விடும்போது, தொடர் அழுகையின் மூலம் அந்தக் குழந்தையின் பிடிவாத குணம் இறுகும். விளைவு, அது அடமன்ட் குழந்தை யாக வளரும் என்கின்றன ஆய்வுகள்.

மொத்தத்தில், அழுகை என்பது... குழந்தை யின் மொழி. அதைப் புரிந்து கொள்ள பெற்றோர்தான் பாடம் படிக்க வேண்டும்!'' என்று புரிய வைத்தார் ஆழமாக!

ஆபத்தான அழுகைகள்!

''
இயல்பான அழுகைகள்... நாமே சமாளிக்கக் கூடியவை. ஆனால், அதற்கு மீறிய அழுகைகளும் குழந்தைகளிடம் உண்டு. அவை முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை. பிறந்த மூன்று மாதங்களுக்குள் இந்த அழுகை களை இனம் காணலாம்'' என்று சொல்லும் டாக்டர் ஸ்ரீனிவாசன் தந்த அந்த அழுகைப் பட்டியல்...

'
பிரெத் ஹோல்டிங் க்ரை' (Breath holding cry): தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், 'குழந்தை மூச்சு விடாம அழுமா..?' என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற்குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக்கேவி அழும்போது சில நொடிகள் மூச்சு நின்று, பின் வரும். அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.

'
வீக் க்ரை' (Weak cry): பிறந்த 15 - 20 நாட்களில் குழந்தை எப்போதும் மெலிதாக அழுதுகொண்டே இருப்பதை இப்படி அழைப்பார்கள். ஏதேனும் தொற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பிருக் கிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். இதைக் குறிப்பிட்டுச் சொல்லி, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

'
ஷ்ரில் க்ரை' (Shrill cry): வீல் வீல் என்று உச்சஸ்தாயில் 10 நிமிடங்கள் வரை குழந்தை நீடித்து அழுவதை இப்படி குறிப்பிடுவார்கள். இப்படி அடிக்கடி அழுதால், அதற்கு வலிப்பு நோய் அல்லது மூளை சம்பந்தமான ஏதோ பிரச்னை இருக்கலாம். மருத்துவரிடம்
எடுத்துச் செல்வது முக்கியம்.

'
லோ பிட்ச் க்ரை' (Low pitch cry): கனத்த குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் குழந்தை அழுவது. இதற்கு, தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதது காரணமாக இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை அவசியம்.

Thanks : VASUKI MAHAL KALYANA MANDABAM blog http://www.blogger.com

http://doctorrajmohan.blogspot.in/2013/02/blog-post_15.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சின்னக்குட்டிகள் சின்னக்குறைகள்! -குழந்தைகளின் பிரச்சனைகளைக் கையாள்வது எப்படி?

குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்' என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக்கும். சாப்பிட வைப்பதற்காக இதுவரை நீங்கள் சொன்ன பொய்களை சரம் கோர்த்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உங்கள் மீதே எறியும். செல்ல அடியை, சின்ன மிரட்டலை மற்றவரிடம் சொல்லி நியாயம் கேட்கும்.

அவர்கள் மீதே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான வேலைகளை எல்லாம் வெகு முனைப்புடன் செய்து கொண்டிருக்கும். நீங்கள் அடிக்கக் கை ஓங்கும் போது கழுத்தைக் கட்டிக் கொள்வதிலிருந்து கன்னம் கடிப்பது வரை அவ்வளவு தொல்லைகள்… எல்லாமே அன்பின் பதிவுகள்!
''சில வாண்டுகள் 5 வயது வரை கை சப்பிக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு 7 வயதிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் தொடரும். இது போன்ற பிரச்னைகளை காலம் தாழ்த்திக் கவலைப்படுவதற்கு பதிலாக முன்பே கவனித்தால் சரி செய்து விடலாம்'' என்கிறார் குழந்தைகள் மருத்துவ நிபுணர் வினோதினி.

 ''தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதே குழந்தை கை சப்புகிறது. தனிமையை உணரும்போது, தாயின் கருப்பையில் பழகிய பழக்கத்தை வெளியுலகுக்கு வந்த பிறகும் தொடர்கிறது. பிறந்த சில மணி நேரங்களில் குழந்தை விரல்களை வாய்க்குள் வைத்து சப்புவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைக்கு தூக்கம் வருகிற போது தாயின் அரவணைப்பும் தாலாட்டும் இல்லாவிட்டால் விரல் சப்பும் பழக்கம் ஏற்படுகிறது. சரியாக தூக்கம் பிடிக்காத போதும் விரல் சப்புவதை விரும்புகிறது.

வளரும் பருவத்தில் தாய், தந்தையின் பாசம், மற்ற குழந்தைகளுடன் விளையாடும் வாய்ப்பு, பேச்சுத் துணை தேவைப்படுகிறது. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் கவனிக்க வேண்டும் என குழந்தை விரும்புகிறது. இது போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போதுதான் விரல் சப்பும் பழக்கம்
உண்டாகிறது. குழந்தையைப் புரிந்துகொண்டு அதன் ஏக்கத்தைப் போக்குவதற்கு மகிழ்ச்சியான சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். விரல் சப்பும் போது விரல்களை வலுக்கட்டாயமாக இழுப்பது, உங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். இப்பழக்கத்தை மெல்ல மெல்ல அன்பான அணுகுமுறையால்தான் மாற்ற வேண்டும்.

ஒரு வயது வரை விரல் சப்பும் பழக்கத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உளவியல் ரீதியாக, இதன் மூலம் பிடித்தமான சூழலை குழந்தை உணருகிறது. ஒரு வயதுக்கு மேல் விரல் சப்பும் பழக்கத்தை மறக்க வைக்க பிடித்த விளையாட்டுகளை விளையாட குழந்தையை அனுமதிக்க வேண்டும். கண்களுக்கும் கைகளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும்படியான செயல்பாடுகளைத் தரலாம். கை எப்போதும் பிசியாக இருக்கும் போது, குழந்தைக்கு விரல் சப்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

தூங்கப் போகும் நேரத்தில் குழந்தைக்கு விரல் சப்பத் தோன்றும். அப்போது அதன் கையில் புத்தகத்தைக் கொடுத்து கதை சொல்வது, அணைத்தபடி தூங்க வைப்பது, கைகளை, கழுத்தை கட்டிக் கொண்டு தூங்க வைப்பது… இப்படி அரவணைப்பை வெளிப்படுத்தினால் குழந்தை மெல்ல மெல்ல அந்தப் பழக்கத்தை மறந்து விடும். சில நாட்கள் விரல் சப்பாமல் இருந்ததைப் பாராட்டி, பரிசளித்து ஊக்கப்படுத்தலாம். 4 வயது வரை விரல் சப்பும் பழக்கம் இருந்தால் குழந்தையின் தாடை பாதிக்கப்படும். பற்களிலும் ஈறுகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

முகத்தின் தோற்றமே மாறிவிடும். பள்ளிக்குச் செல்லும் போது ஆசிரியரோ, மாணவர்களோ கிண்டல் செய்தால் குழந்தை மனதளவில் பாதிக்கப்படும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். கடுமையாக நடந்துகொள்வதற்கு பதிலாக எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இதைச் சரி செய்யலாம். படுக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதும் சாதாரண விஷயம்தான். அதுவே 3 வயதுக்கு மேல் நடக்கும் போது பிரச்னையாகிறது. குழந்தைக்கும் பெற்றோருக்குமான முரண்பாடு அதிகரிக்கும்போது இப் பழக்கம் இருக்கலாம்.

பெற்றோருக்கு சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால், அது குழந்தைக்கும் தொடரும். வேசோபிரசன் என்ற ஹார்மோன் குறைபாட்டின் காரணமாகவும் இது ஏற்படலாம். சிறுநீர் குழாய் மற்றும் சிறுநீர் பையில் ஏற்படும் நோய் தொற்றின் காரணமாகவும் இருக்கலாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணம் உடற்கூறு பிரச்னைகளா என்பதை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இரவு 7 மணிக்கு மேல் நீர் ஆகாரம் அதிகம் தரக்கூடாது. இரவில் பால் குடிப்பதைத் தவிர்த்து திட உணவாகத் தர வேண்டும். அலாரம் வைத்து குழந்தையை எழுப்பி, தூக்கத்தின் இடையில் சிறுநீர் கழிக்கப் பழக்கப்படுத்தலாம். அறையின் வெப்ப நிலை மிகக்குறைவாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை சரி செய்யலாம். குழந்தை, தாய்ப்பால் மறக்கும் போதும் பல்வேறு மன பாதிப்புகளை சந்திக்கிறது. இதனால் தாய்ப்பால் மறக்கடிக்கச் செய்வதிலும் சில வழி முறைகளைக் கடை பிடிக்க வேண்டும்.

6 மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம். அதன் பின் திட உணவுகளை பழக்கப்படுத்தும் போது தாய்ப்பால் கொடுக்கும் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். திடீரென தாய்ப்பாலை நிறுத்தினால் குழந்தை தனித்து விடப்பட்டது போல உணரும். பால் குடிப்பதன் மீதான ஆர்வம் அதிகரித்து அடம் பிடிக்கும். வலுக்கட்டாயமாக தாய்ப்பாலை நிறுத்தும் போது குழந்தைக்கு செப்பரேஷன் ஆங்சைட்டி என்ற மனக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் தாய்ப்பாலை நிறுத்தும் போது குழந்தைகள் மீது தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகமாக வேண்டும்.

இரவு நேரங்களில் தாய்ப்பாலுக்குப் பதிலாக புட்டிப்பால் தரலாம். தாய்ப்பால் குடிக்காத போதும், 'உன்மீது என் அன்பு குறைவதில்லை' என்ற உணர்வை தாய் குழந்தைக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது அவசியம். குழந்தையிடம் காணப்படும் இது போன்ற சிறுசிறு குறைபாடுகளைக் களைய முதல் தேவை தாய் மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்களின் அன்பும் கவனிப்பும். அந்தக் குறைபாட்டில் இருந்து வெளியே வர குழந்தைக்கு எளிய வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். அதிலிருந்து வெளியே வரும்போது பாராட்டிப் பரிசளிக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதன் மூலம் விரைவில் இந்தக் குறைபாடுகளை சரி செய்துவிட முடியும். கண்டுகொள்ளாமல் விட்டால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள இந்தக் குழந்தைகள் சமூகரீதியான சிக்கல்களுக்கு ஆளாகும் இக்கட்டான சூழல் ஏற்படும். குழந்தை, எல்லோராலும் பாராட்டப்பட, தனது முழுத் திறன்களையும் அறிந்து கொள்ள, அதன் சிறு குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பல்லவா!'' என்று விரிவாகப் பேசுகிறார் டாக்டர் வினோதினி.

http://www.myoor.com/handling-childrens-problems/

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

முத்துக்கள் பத்து! --- உபயோகமான தகவல்கள்,

முத்துக்கள் பத்து! --- உபயோகமான தகவல்கள்,


வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத் தரும் ஏ.டி.எம், இந்த அவசர யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருப்பது இயற்கைதானே? நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தை கையாள உதவும் வகையில் சில டிப்ஸ்கள், 'முத்துக்கள் பத்து' என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

தனியே... தன்னந்தனியே..!
அகால நேரங்களிலோ, மிகவும் தனிமையாக நீங்கள் இருக்கும் நிலை ஏற்படும்போதோ ஏ.டி.எம்-மைத் தவிருங்கள். கொஞ்ச நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை... வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம்-களை தேர்ந்தெடுங்கள். ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் வசதி கொண்ட பூத்களை இரவு நேரங்களில் தவிருங்கள். ஏ.டி.எம்-மைப் பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.

கணக்கு எங்கே...  கார்டு அங்கே!
முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவதே சிறந்தது. சில சமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பணம் வராமல், தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.

கார்டை விட்டு கண்ணைத் திருப்பாதீர்கள்!
பெரிய கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாகத் தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இது சம்பந்தபட்ட ஊழியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரும் சேர்ந்து செய்திருக்கும் தில்லாலங்கடி ஏற்பாடு. இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு, ஒரு போலி கார்டைத் தயாரித்துப் பணத்தை லவட்டிவிடுவதுண்டு. எனவே, ஊழியர்கள் கார்டைத் தேய்க்கும்போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்கட்டும்.

கார்டு... கைப்பை... கவனம்!
 சில ஏ.டி.எம் மெஷின்களில் கார்டை நுழைத்ததுமே சரிபார்க்கப்பட்ட பிறகு கார்டை வெளியே எடுத்துவிடலாம். சில மெஷின்களில் நீங்கள் பணம் எடுத்து முடியும் வரை கார்டு மெஷினுக்குள்ளேயே இருக்கும். அப்படிப்பட்ட மெஷின்களிடம் எச்சரிக்கை தேவை. பணத்தை எடுத்துக் கொண்டு கார்டை எடுக்கப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதேபோல கைப்பை மற்றும் இதர பொருட்களை ஏ.டி.எம் அறையிலிருந்து வரும்போது கவனமாகத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்.

'பின் நம்பர்' மறையுங்கள்!
ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கும்போது, ரகசிய எண்களை (பின் நம்பர்) அழுத்துவீர்கள் அல்லவா? அப்போது இயன்ற வரை ஒரு கையால் அழுத்துப் பலகையை மறைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அழுத்துங்கள். சில இடங்களில் உங்கள் ரகசிய எண்ணைக் கேமிரா மூலம் படம் எடுத்து மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியாமல், உங்கள் உடம்பையே ஒரு கேடயமாக உபயோகித்தும் ரகசிய எண் அழுத்துவதை மறைக்கலாம்.

கூரியரிலும் நடக்குது காரியம்!
 உங்கள் ரகசிய எண் கொண்ட விவரங்களைக் கூரியர் மூலம் வங்கியில் இருந்து அனுப்புவார்கள். சில எத்தர்கள், கூரியர் நிறுவன ஊழியர்களை சரிக்கட்டி விவரங்களைத் தெரிந்துகொண்டு, கவரை மீண்டும் ஒட்டி டெலிவரி செய்துவிடுவதுண்டு. கிடைத்த விவரங்களைக் கொண்டு போலி கார்டு தயாரித்து, எப்போது கணிசமான தொகை சேருகிறதோ அப்போது பணத்தை எடுத்து விடுவார்கள். கூரியர் வழியாக ஏ.டி.எம் கார்டு கிடைத்த உடனேயே ரகசிய எண்ணை மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.

பின் நம்பர் பாதுகாப்பு... ரொம்ப முக்கியம்!
ரொக்கப் பணத்தைப் போல, காசோலைப் புத்தகத்தைப் போல ஏ.டி.எம் கார்டும் முக்கியமானது. மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள். பின் நம்பரை வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள். குறைந்தது இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது பின் நம்பரை மாற்றுங்கள். தொலைபேசியிலும் இ-மெயிலிலும் உங்கள் ஏ.டி.எம் எண்ணை யாருக்கும் ஒருபோதும் அளிக்காதீர்கள். ஏ.டி.எம் கார்டிலோ... உங்கள் பர்ஸிலோ பின் எண்ணை எழுதி வைக்கக் கூடாது.

பிறர் கண்பட எண்ணாதீர்கள்!
ஏ.டி.எம் மெஷின் தரும் பணத்தை வெளியில் நிற்பவர்கள் பார்க்கும்படி சரிபார்த்து எண்ணாதீர்கள். நிதானமாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போய் எண்ணுங்கள். எண்ணி முடித்ததும் பாதுகாப்பாகப் பணத்தைப் பத்திரப்படுத்துங்கள்.

செயல்பாட்டை முடக்குங்கள்!
ஏ.டி.எம் கார்டு தொலைந்துபோனால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்புகொண்டு ஏ.டி.எம் கார்டின் செயல்பாட்டை முடக்குங்கள். பிறகு, முறைப்படி வேறு கார்டு பெற நடவடிக்கை எடுங்கள்.

தயார் நிலை அவசியம்!
ஏ.டி.எம் மெஷினை அடைவதற்கு முன்னரே கைப்பை அல்லது பர்ஸில் இருந்து கார்டை எடுத்துத் தயார் நிலையில் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடுங்கள். முடிந்த மட்டும் ஒரே மெஷினைப் பயன்படுத்தும்போது பயன்பாடு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.



--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, April 12, 2014

Check out Dhanush's photos on Facebook.

facebook
Check out Dhanush's photos on Facebook.
If you sign up for Facebook, you'll be able to stay connected with friends by seeing their photos and videos, staying up to date with their latest status updates, exchanging messages and more.
Join Dhanush on Facebook
This message was sent to hatimsaha.saha@blogger.com. If you don't want to receive these emails from Facebook in the future or have your email address used for friend suggestions, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

Friday, April 11, 2014

கருஞ்சீரகம் – அருமருந்து

கருஞ்சீரகம் – அருமருந்து

கருஞ்சீரகத்தினை சிலர் ஹதீஸ்களைக் கூறி வியாபாரம் செய்கின்றனர். இதன் உண்மைத்தன்மையை விளக்க முடியுமா?  வஸ்ஸலாம். (மின்னஞ்சல் வழியாக சகோதரர் பிஸ்ருல்லாஹ்)
தெளிவு:
கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.
"
கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)
பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.
  • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
  • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
  • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
  • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
  • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vinegar) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
  • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
  • நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்
கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பிய நாட்டுப்பகுதியாகும். இது பழமையான ஒரு மணம் ஊட்டும் தாவரப் பொருளாகும். மிகப்பழமையான `ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் உள்ளன. பிளின் என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப் பற்றி கூறியுள்ளார். கிழக்கு – மத்திய நாட்டுப் பகுதிகளில் இது நன்கு வளர்கிறது. இந்தியாவில் பஞ்சாப், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் காட்டுச் செடியாக வளர்கிறது.
இச்செடி 40 முதல் 50 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும்.
கருஞ்சீரகத்தின் பலன்கள் வருமாறு:-
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.
  • சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
  • கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
  • கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
  • கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
  • கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
  • கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
  • கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
  • கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
  • கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
நன்றி: – சா.அனந்தகுமார், அகஸ்தீஸ்வரம்.


--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, April 9, 2014

LAST MONTH MOST VIEWED POSTS IN WWW.SAHABUDEEN.COM



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?

படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?

நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.
மாணவர்கள் தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில் இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம் படிப்பு என்று ஒருவித போராட்ட சூழ்நிலையில் பதட்டத்தோடு காணப்படுவார்கள்.
உண்ணக்கூடாதது :
இப்படி குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்
எடுத்துக்கொள்ள வேண்டியவை :
காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.
பதட்டம் குறைய :
தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் கூத்தாடும். இதை குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும். மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்யலாம் அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம்
சிறப்பாக செயல்பட உதவும். ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும் திறனை மேம்படுத்தும்.
தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே:
தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும். சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம் நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா? மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணங்கள் பொங்கும். இறைவன் மீது நம்பிக்கையுடன் உங்களது ஒரு காலையும், உங்கள் மீது நம்பிக்கையுடன் உங்கள் மறுகாலையும் எடுத்து வைத்து உற்சாகத்தோடு தேர்வு அறைக்கு கம்பீரமாக செல்லுங்கள்.
எது வந்தாலும் வரட்டும் எதிர் கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்போது யாவும் நல்லபடியாக நடக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் வெற்றிக்கும் உயர்வான எதிர்காலத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.
நன்றி: சிறுப்பிட்டி


--
*more articles click*
www.sahabudeen.com