Wednesday, May 7, 2014

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்
ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து பயந்து ஓட்டினார்கள்!

இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். 'ஏகப்பட்ட படிவங்களை
நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!' என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்துகொண்டு, லைசென்ஸ§க்கே விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். 'வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்' என்று தவறான நினைப்பில் இருப்பவர்களும் நிறைய!

'
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பல  விதங்களில் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்' என்கிறார், சென்னை திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்
 லைசென்ஸ் பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார் இங்கே...

பழகுநர் உரிமம் எடுக்க (LLR) குறைந்தபட்ச தகுதிகள் என்ன?

உங்களுக்குப் பதினாறு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். பதினெட்டு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள்(வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

1.
முகவரி ஆதாரம் (உ&ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).

2.
வயது ஆதாரம் (உ&ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).

3.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் & 1 (இந்தப்படிவத்தில் 'அ' இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப்பரிசோதித்து, 'நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்' எனச் சான்றளிக்கவேண்டும்), மற்றும் படிவம் & 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்படவேண்டும்.).

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, ரூ.30/& செலுத்தி பழகுநர் உரிமம் (LLR) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர்
உரிமம்(Driving licence) லிவீநீமீஸீநீமீ) பெற கண்டிப்பாக நேரில் ஆஜராக
வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற
விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4&ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்
(
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் படிவம் 5 இணைக்க
வேண்டும்).

மேலும், இத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

1.
பழகுநர் உரிமம்,
2.
வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷ¨ரன்ஸ்),
3.
பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம்,
4.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

இவற்றுடன் உரிமம் வழங்க ரூ. 200&ம் தேர்வுக் கட்டணமாக ரூ.50&ம் செலுத்த வேண்டும்.

எவ்வாறு பரீட்சை நடைபெறுகிறது?

வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில்
அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக்
காட்டினால் ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான்
உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார்.  சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.

வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது?

உதாரணத்துக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போகிறீர்கள் என்றால், திருச்சியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேராகச் சென்று பழைய உரிமத்தைக் கொடுத்துவிட்டு புதிய விலாசம் கொண்ட உரிமத்தை வாங்க முடியாது.

விலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்

உங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து 'உண்மையான உரிம நகல்தான்' என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு
அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச்
சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.

உரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா?

இல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.

உரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப்பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில்
சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்.
ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.

அசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா?

கூடாது. ஏனென்றால், தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்துபோனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தரவேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு 'நகல் உரிமம்' தர பரிந்துரை செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். போக்குவரத்து அலுவலகத்தில் பதிவேடுகளில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொண்டு நகல் உரிமம் வழங்குவார்கள்.

உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?

டிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும்
புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும்
உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் 'என் மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது' என ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Monday, May 5, 2014

வெளிநாட்டில் வேலை... ஏமாறாமல் இருக்க இதைப் படிங்க !

வெளிநாட்டில் வேலை... ஏமாறாமல் இருக்க இதைப் படிங்க !
வெளிநாட்டில் வேலையா? எங்கே, எங்கே?' என்று கேட்டு ஓடியது அந்தக் காலம். வெளிநாட்டில் வேலை என்றாலே சந்தேகத்தோடு ஒதுங்குவது இந்தக் காலம். காரணம், வெளிநாட்டு வேலை என்று நம்பிப் போய், அடியும், மிதியும் பட்டு ஊருக்குத் திரும்புகிற அனுபவம் பலருக்கு. ஆனாலும், முறையான வழியில் உஷாராகப் போகிறவர்கள் கைநிறைய பணத்தோடு திரும்பவே செய்கிறார்கள்.

வெளிநாட்டு வேலைக்குத் தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வது? யாரிடம் சென்று சரியான தகவல் பெறுவது? உண்மையான முகவர் என்பவர் யார்? அவரை எப்படி நாம் அடையாளம் காண்பது? என்கிற கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்தபோதுதான் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் கே.இளங்கோவனைச் சந்தித்தோம். அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம். தெளிவான விளக்கத்தைத் தந்தார் அவர்.

''தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக, வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் நம்பகமான சான்றிதழுடன் இந்நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதற்கான முக்கிய நோக்கம், அதிக சம்பளம் கிடைக்கும்; புது கலாசார சூழலில் வேலை செய்ய முடியும் என்பதால்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யும் நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா போன்றவை. இங்கு வேலை வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் காரணம் கிடையாது; அங்கு செல்வதற்கான விதிமுறைகளும் குறைவு'' என்றவர், ஏஜென்ட்கள் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்.

சரியான முகவரா?
''வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்தபின்பு முதல் நடவடிக்கையாக, சரியான முகவரைத் தேர்வு செய்ய வேண்டும். சரியான முகவராக இருந்தால் அவரிடம் கண்டிப்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் எம்.ஓ.ஐ.ஏ. (Ministry Of Overseas Indian Affairs) தரும் அங்கீகாரச் சான்றிதழ் மற்றும் லைசென்ஸ் நம்பர் இருக்கும். இந்த நிறுவனத்திடம் அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றால் மட்டுமே அயல்நாட்டுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகவராகப் பணியாற்ற முடியும்.

சரியான முகவர் யார் என்கிற விவரங்கள் www.poechennai.in என்ற வலைதளத்தில் நமது இந்திய அரசால் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விவரங்கள், அவர்களின் பணி அனுபவம், முகவர்களின் தரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். சரியானவர்கள் யார் என்ற விவரம் இருப்பதுபோலவே கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்கள் யார் என்பதையும் அதில் குறிப்பிட்டிருப்பார்கள். இதை முன்னதாகவே பார்ப்பதன் மூலம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் முகவர்களை அணுகாமல் தப்பித்துக்கொள்ளலாம்.

சில முகவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வேலை வாங்கித் தருபவர்களாக இருப்பார்கள். எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ, அந்த நாட்டு முகவர்களை அணுகும்போது வேலை இன்னும் எளிமையானதாக முடியும். இப்போதெல்லாம் முகவர்கள் அவர்களின் விவரங்களுடன், எம்.ஓ.ஐ.இ.-ன் அங்கீகார எண்களுடன் செய்தித்தாள்களில் விளம்பரங்களை தருகிறார்கள். இதைக் கவனிப்பதன் மூலம் சரியான முகவர்களை எளிமையாக நம்மால் அடையாளம் காணமுடியும்.

நேர்முகத் தேர்வின்போது..!
நேர்முகத் தேர்வின்போது எலெக்ட்ரீஷியன், பிளம்பர் என ஒவ்வொரு வேலைக்கும் டிரேடு டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்தமான அல்லது தனியார் டிரேடு டெஸ்ட் சென்டர்கள் இருக்கின்றன. அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுப்பவர்களின் வேலை தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக டெஸ்ட்கள் நடத்தப்படும். நமது வளாகத்தில் அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக நேர்முகத் தேர்வை நடத்தும்போது இங்கேயே டிரேடு டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

இந்த நேர்முகத் தேர்வின்போது வேலைக்காக தேர்வு செய்யப்படுபவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் வெளிநாட்டில் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு, பணி நேரம், வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, அதிக நேரம் வேலை செய்தால் கூடுதல் சம்பளம் தரப்படுமா, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமா, மெடிக்கல் இன்ஷூரன்ஸ் வசதியை நிறுவனம் செய்து தருமா, விமானப் போக்குவரத்திற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்கிறதா என்பனவற்றை நன்கு கவனித்த பின்னரே ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட வேண்டும். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு அந்தப் படிவத்தின் நகல் ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

இ.சி.ஆர் (Emigration clearance required)
வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் அவருக்கு தரப்படும் மதிப்பெண் சான்றிதழிலேயே இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று தரப்பட்டுவிடும். ஆனால், பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பி.ஓ.இ. (Protecter of Emigration) அமைப்பிடமிருந்து கண்டிப்பாக இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்று வாங்கி முகவர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும். அயல்நாட்டிற்கு செல்லும் சான்றுகள் அத்தனையையும் முகவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் இந்த இமிகிரேஷன் க்ளியரன்ஸ் சான்றையும் அவர்களே வாங்கி தந்துவிடுவார்கள். இந்த இ.சி.ஆர். என்பது 18 நாடுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது.

சமர்ப்பிக்க வேண்டியவை!
பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் முன்னனுபவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதுதவிர, தங்களது உடல் முழுவதையும் பரிசோதனை செய்து குறை எதுவும் இல்லாதபடி மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் முகவரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இந்த நடைமுறை விஷயங்கள் முடிவுக்கு வந்ததும் விசா எடுப்பதற்கான விஷயங்கள் ஆயத்தமாகிவிடும்.

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்கள் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம், எம்ப்ளாய்மென்ட் விசாவில்தான் செல்ல வேண்டும். டூர் விசாவில் சென்றுவிட்டு அங்கு உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்தால் பிரச்னைதான் ஏற்படும். எம்ப்ளாய்மென்ட் விசாவை கையில் வாங்கியதும், அதில் வேலை செய்வதற்கான விவரங்கள் போடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்'' என்று உஷார் டிப்ஸ்களைத் தந்தார் அவர்.

எப்படி விண்ணப்பிப்பது?
அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தாங்கள் பணிக்குச் செல்ல விரும்பும் துறைகளில் இரண்டு வருட அனுபவம் இருப்பது நல்லது. 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இமிக்ரேஷன் தொல்லை இருக்காது. விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் கட்டணம் 450 ரூபாயில் இருந்து 1,015 ரூபாய் வரை (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) வசூலிக்கப்படுகின்றன. இவற்றோடு சேவை வரியும் வசூலிக்கப்படும்.

சேவைக் கட்டணம்!
ஒன்றரை மாதச் சம்பளம் அல்லது  அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கும் சேவை கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகையை முகவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்பவர் கட்டணமாக கொடுத்தால் போதுமானது.
ஆக, இந்த விஷயங்களை எல்லாம் கவனித்து, வெளிநாட்டில் வேலைக்குப் போனால், எந்த வகையிலும் ஏமாறாமல் பொன்னும் பொருளும் சேர்த்துகொண்டு தாயகம் திரும்பலாமே!


செய்யவேண்டியவையும்... செய்யக் கூடாதவையும்!
அரசு அங்கீகாரம் பெற்ற அயல்நாட்டு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் முகவர்களை மட்டுமே அணுகவேண்டும்.
அயல்நாடு வேலை வாய்ப்பு குறித்த எந்தவொரு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, பண பரிவர்த்தனைகளாக இருந்தாலும் சரி, அதற்கான ரசீதுகளை உடனுக்குடன் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.

மெயின் முகவர்களின் உதவியுடன்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்தவொரு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் அது இவர்களின் மூலம் நடைபெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். துணை முகவர்களை நம்பி எந்தவொரு டாக்குமென்ட்களையும், பண பரிவர்த்தனைகளையும் செய்யக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் கூடுதல் செலவு ஆவதுடன் வேலை கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

வெளிநாட்டிற்குச் சென்ற பின்னரோ அல்லது வேலை தேடும் சமயங்களிலோ பாஸ்போர்ட் புதுப்பிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
வெளிநாட்டில் எந்த நிறுவனத்தாருக்காக நீங்கள் வேலை பார்க்கச் செல்கிறீர்களோ, அந்த நிறுவனத்தைத் தவிர்த்து கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக மற்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்க்கக் கூடாது.

வேலை ஒப்பந்த காலத்திற்குள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்த நாட்டில் இருக்கும் இந்தியத் தூதரகத்திடமோ அல்லது எந்த முகவரின் உதவியுடன் வெளிநாட்டிற்கு சென்றீர்களோ அவர்களிடமோ தெரியப்படுத்தலாம்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் காலத்தில் எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் ஐ.டி. கார்டுடன்தான் செல்லவேண்டும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்கவேண்டுமே தவிர்த்து, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
எந்த நாட்டில் வேலை செய்து வருகிறீர்களோ, அந்த நாட்டின் வேலைக்கான சட்டதிட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.


 உதவிக்கு அணுகுங்கள் !
வெளிநாட்டு வேலை தொடர்பான விளக்கங்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: Overseas Manpower Corporation Limited, Government Industrial Training Institute Campus for Women, No.42, Alandur Road, Thiru-vi-ka Industrial Estate, Guindy, Chennai-32.

மேலும், விண்ணப்பங்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு 2250 2267, 2250 1538 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணலாம்.

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உதவிக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை அழைத்துக் கூடுதல் தகவல்களைப் பெறலாம். தாங்கள் அணுகும் ஏஜென்சி நிறுவனம் உண்மையானதா என்று அறிய மேலே சொன்னபடி
www.moia.gov.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள
www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தைக் காணுங்கள்.


--
*more articles click*
www.sahabudeen.com


Sunday, May 4, 2014

கொழுக் மொழுக் குழந்தை அழகா? ஆபத்தா?


சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இந்தியாவின் 18 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் 7 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் மாணவர்களிடம் உடல் நலம் தொடர்பாக ஓர் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், 10 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 22.84 சதவிகிதம் பேருக்குக் கூடுதல் உடல் பருமன் இருந்ததைக் கண்டறிந்தனர். டெல்லி, மும்பை, சென்னை போன்ற முக்கியமான எட்டுப் பெருநகரங்களைச் சேர்ந்த குழந்தைகளில் 24.9 சதவிகிதம் பேர் கூடுதல் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்ததையும் கண்டறிந்து உள்ளனர். அதாவது நான்கில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று நகர்ப்புறங்களில் அதிகரித்துவரும் குழந்தைகளின் கூடுதல் உடல் பருமன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கொழுகொழுவென இருப்பது என்ன அவ்வளவு கெட்ட விஷயமா என்று பலரும் நினைக்கலாம். கூடுதல் உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக உருவாக்கப் பல தரப்பிலும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும் உடல்பருமன் குறைப்பு ஆலோசகர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் பேசினோம்.

'நம் தமிழகத்தில் மட்டும் அல்ல... உலகம் எங்கும் உள்ள தாய்மார்கள் மத்தியிலும், 'கொழுகொழு என இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியமான குழந்தை' என்ற கருத்து நிலவுகிறது. குழந்தையாக இருக்கும்போது 'பேபி ஃபேட்' என்று சொல்லப்படும் கொழுப்பானது பெரியவர்களானதும் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். இதனால், அதிக அளவில் உணவைப் புகட்டி, அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுக்கக் கூடுதல் உடல் பருமனோடு இருக்க வழிசெய்துவிடுகின்றனர். உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளில் 4.2 கோடி குழந்தைகள் கூடுதல் உடல் பருமனுடன் உள்ளனர்.

குழந்தைகள் கூடுதல் உடல் பருமனுடன் இருப்பது என்பது, கடந்த 20, 30 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்த பிரச்னை. இந்தியாவில் 16 சதவிகிதக் குழந்தைகளும் உலக அளவில் 33 சதவிகிதக் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்கள் நம்மைப் பயமுறுத்துவதற்கு அல்ல, அபாயத்தின் தொடக்கத்தில் இருக்கின்றோம் என்று எச்சரிக்கை மணி அடிப்பதற்காகவே என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே இதை நாம் தடுக்கவில்லை எனில், குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படும்.

கூடுதல் உடல் பருமன் உள்ள குழந்தையை மற்றவர்கள் கேலி- கிண்டல் செய்வதன் மூலம், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கூடுதல் உடல் பருமனால் சுவாசித்தலில் பிரச்னை ஏற்படலாம். உடல் பருமனாக உள்ள ஐந்து முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், 70 சதவிகிதம் பேருக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில், சர்க்கரை நோய்ப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எலும்பு மூட்டு மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படலாம்.

20-30 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் நடந்தே பள்ளிக்குச் சென்றனர். தினமும் வீட்டைச் சுற்றி உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து மணிக்கணக்கில் விளையாடினர். வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட்டனர். நம்முடைய அம்மாக்கள் சமையலில் காய்கறிகள், பழங்களுக்கு உணவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். பூச்சி மருந்துகள், ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளையே சாப்பிட்டார்கள். அனைத்துக்கும் மேலாக நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவது என்பது அபூர்வமாக நடக்கும். அதிக ஆற்றல்கொண்ட உணவு வகைகளைச் சாப்பிட்டாலும் விளையாட்டு போன்ற உடல் உழைப்பின் மூலம் அது சமன்செய்யப்பட்டது.

ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழ். அருகில் உள்ள கடைக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட, பைக் தேவைப்படுகிறது. பள்ளிக்கூடப் பேருந்தில் பயணம். பள்ளியில் விளையாட அனுமதி இல்லை. பல பள்ளிக்கூடங்களில் விளையாட்டு மைதானங்களே இல்லை. பள்ளிக்கூடம் முடிந்து டியூஷன் மற்றும் இதரப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவே நேரம் சரியாக இருக்கிறது. அனைத்தையும் முடித்து வீட்டுக்கு வந்தால், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் என்று ஒரே இடத்தில் உட்கார்ந்தே நேரம் செலவாகிறது. வீட்டில் சத்தான சாப்பாட்டுக்குப் பதில் நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள். இடைஇடையே அதிக அளவில் நொறுக்குத் தீனிகள். இவ்வளவும் சேர்ந்து நம்முடைய குழந்தைகளை கூடுதல் உடல் பருமன் உள்ளவர்களாக மாற்றிவிட்டது. இதற்குத் தீர்வும் உள்ளது. வாழ்க்கை முறையில், உணவு முறையில் ஒரு சில சிறிய மாற்றங்களைச் செய்தாலே போதும்... குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக மாறிவிடுவார்கள்.'' என ஆறுதல் வார்த்தவர் மேற்கொண்டும் நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்களைப் பட்டியல் போட்டார்.

எதிர்காலச் சந்ததிகளை சக்தி மிகுந்தவர்களாக - சர்வபலம் கொண்டவர்களாக மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. கூடுதல் உடல் பருமனைக் குறைப்பது சிரமம் மிகுந்த வேலை அல்ல என்கிற நம்பிக்கை நமக்குள் விழுந்தாலே, நம் குழந்தைகளை வலுவானவர்களாக மாற்றிவிடலாம்!    

- பா.பிரவீன்குமார்

படங்கள்: தி.விஜய்

 பெற்றோர்கள் செய்ய வேண்டும்?

'கூடுதல் உடல் பருமனா? என் குழந்தைக்கா? இல்லவே இல்லை...' இதுதான் பெற்றோர்களின் மனப்பான்மையாக உள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ ஆய்வு ஒன்று 77 சதவிகிதத் தந்தைகளும், 33 சதவிகிதத் தாய்மார்களும் தங்களின் கொழுகொழு குழந்தை கூடுதல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதைத் தெரியாமலே உள்ளனர்.

 ஒரு குழந்தை சரியான, ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அந்தக் குழந்தையின் தாய்தான். குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி கொடுப்பதற்குப் பதில் பழங்கள், காய்கறிகளைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கலாம்.

 காலை உணவைத் தவிர்ப்பது நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற அளவை (மெட்டபாலிக் ரேட்) குறைத்துவிடும். இதனால் கொழுப்பு நம்முடைய உடலில் அதிக அளவில் தங்கிவிடுகிறது. காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பல குழந்தைகள் சாப்பிடாமலேயே சென்றுவிடுகின்றன. சில குழந்தைகள் குறைவாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள். இந்த நிலையை மாற்றி, காலையில் கட்டாயம் சாப்பிடவையுங்கள்.

 

 குழந்தைகள் நம்மிடம் இருந்துதான் கற்கின்றன. எனவே, உணவு விஷயத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடக்கும்போது குழந்தைகளும் அதைப் பின்பற்றும்.

 உங்கள் குழந்தைக்கு பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிட வாங்கிக்கொடுத்தால், அன்றைக்கு அவர்களின் விளையாட்டு நேரத்தை அதிகரியுங்கள். இதனால், அன்று சேர்ந்த அதிகப்படியான கலோரி எரிக்கப்பட்டுவிடும்.

 தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம் போன்றவற்றைப் பயன்படுத்துவது அவர்கள் பிறப்புரிமை அல்ல; நேரம் கிடைக்கும்போது மேற்கொள்ளக்கூடியது என்ற மனநிலையை ஏற்படுத்துங்கள்.

 குழந்தைகளுக்கான தனியறையில் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர்களை வைக்க வேண்டாம்.

 தொலைக்காட்சியைப் பார்த்தபடி சாப்பிட அனுமதிக்காதீர்கள். உடல் பருமனுக்கு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே உணவு உட்கொள்வது மிக முக்கியக் காரணம்.

 ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

 தொலைக்காட்சியைப் பார்க்கும்போது இடைவேளை நேரத்தில், ''அதை எடுத்து வா, இதை எடுத்து வா'' என்று  குழந்தைகளின் உடல் உழைப்பை ஊக்குவியுங்கள்.

 உடல் உழைப்பு

குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினர் (6 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள்) தினமும் குறைந்தது 60 நிமிடங்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்ற அளவில் வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு உடற்பயிற்சி செய்வது போதுமானது.

விளையாட்டு மைதானத்தில் நேரம் செலவிட்டாலே போதும், குழந்தைகள் ஆரோக்கியம் காக்கப்படும்.

பள்ளிக்குச் செல்வதற்குத் தயாராகாத குழந்தைகளை நன்கு விளையாட அனுமதியுங்கள். விழுந்துவிடும், அடிபட்டுவிடும் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்காதீர்கள்.

ஓரளவுக்கு வளர்ந்த குழந்தைகளை உடற்பயிற்சி ஆலோசகர் முன்னிலையில்,  கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற குழுவாக விளையாடும் விளையாட்டுக்களிலோ அல்லது ஓட்டம், உயரம் தாண்டுதல் போன்ற தனி நபர் விளையாட்டுக்களிலோ ஈடுபட அனுமதியுங்கள்.

குழந்தைகள் விளையாடுவதற்குப் பள்ளிகள் அனுமதிக்க வேண்டும். உடற்கல்வி வகுப்பு கட்டாயம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் உடற்பயிற்சி ஆசிரியர் இருக்க வேண்டும்.

http://pettagum.blogspot.in/2013/02/blog-post_15.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com