Friday, May 23, 2014

நீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes

நீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes

இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வருமாம்!!!
உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சொல்ல முடியாத அளவில், உலகிலேயே அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.
Diabetes is a disease that has attacked more than 1/3rd of the world's population. Our modern lifestyles are to be blamed for the rapid pace at which the number of diabetics is growing in the world. But along with the number of diabetics, the myths about diabetes are also growing at an alarming pace.
மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
There is a lost misinformation about diabetes that leads to myths and speculations. Most of us do not know the facts about diabetes. Almost everyone these days has a close friend or family member who is a diabetic. We collect diabetes facts from these personal sources and construct the myths around this disease.
சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!!
There is lot to know about diabetes and these myths only cloud our judgement. Whether or not you have high blood sugar, you have to know certain facts about diabetes. It is impossible to control diabetes without busting some basic myths. That is why, FriendsTamil is busting the worst myths about diabetes today.
These are some of the most dangerous myths about diabetes that needs to be busted.
  • உண்மை – 1 : "சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.
  • I don't eat sweets so I won't get diabetes:Diabetes is a lifestyle disorder; it has nothing to do with your sugar consumption. And even if you don't eat sweets, the carbohydrates that you eat will be broken down into glucose in your body.
  • உண்மை – 2: "இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.
  • If the doctor puts me on insulin, my diabetes is in the last stage: Diabetes does not have any stages like cancer. Your blood sugar can be high, low or normal. If you take insulin and control your diabetes, you can live a healthy life for decades.
  • உண்மை – 3 "நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.
  • I am diabetic so I don't eat any carbs at all: Carbs are the fuel of the body and even diabetics cannot cut out carbs completely. You have to exercise and take medications for diabetes. Try to eat fibrous carbohydrates instead of refined ones.
  • உண்மை – 4 "நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
  • Pumpkin and all other 'sweet' vegetables are taboo for diabetics: Diabetics should not eat foods that have a high glycemic index as they raise your blood sugar levels quickly. Pumpkin may taste sweet but does not have a high glycemic index. In fact it is beneficial for treating insulin resistance.
  • உண்மை – 5 "நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,
  • Diabetics must always have sugar substitutes: It is better to have natural sugars like honey and fruits instead of saccharine. This is because many sugar substitutes are carcinogenic; regular intake of these artificial sugars can cause cancer.
  • உண்மை – 6 "என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.
  • No one in my family has diabetes so I am safe Diabetes is hereditary to a large extent. However, it is mainly a lifestyle disorder. So if you don't get time to exercise and have a very stressful life, you are in the high risk zone for getting diabetes.
  • உண்மை – 7 "குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • I am not obese so I can't be diabetic: Obesity definitely increases the chances of getting diabetes. However, diabetes can also make you lose weight. So be careful if you drop pounds abruptly and effortlessly.
  • உண்மை – 8 "குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.
  • Kids don't have type 2 diabetes : We usually think that kids only have type 1 diabetes which is a birth defect. Considering the amount of junk food that kids eat today, it is not unheard of for kids to develop type 2 diabetes as well.
  • உண்மை – 9 "கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்
  • Gestational diabetes is temporary thus not a threat: It is true that gestational diabetes goes away after the pregnancy is over. However, women who suffer from gestational diabetes are at high risk to develop type 2 diabetes later in life.
  • உண்மை – 10: "நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
  • I take insulin/medications for diabetes so I can eat whatever I want: To control diabetes, you need to alter your diet and lifestyle. Taking insulin or medications does not give you the license to eat or do whatever you want.
நன்றி: நண்பன் தமிழ்


--
*more articles click*
www.sahabudeen.com


Wednesday, May 21, 2014

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

உங்கள் செல்வாக்கு வட்டம்
"யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால், எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்". இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப் படுகிற செய்தி.
ஆனால் அந்தத் தயாரிப்பை அவ்வளவு எளியதாய் வடிவமைக்க எவ்வளவோ கடினமான நிலைகளை அவர்கள் கடந்து வந்திருக்க வேண்டும்.
மார்க்கெட்டிங் என்பது, ஒரு தயாரிப்பைக் கையாள்வது எவ்வளவு சுலபம் என்பதை கஷ்டப் பட்டு சொல்கிற காரியம். சந்தைப்படுத்துவதில், சரியான உத்திகள் கையாளப்பட்டால் அதுவரை எத்தனை சிரமப்பட்டிருந்தாலும் அத்தனையும் மறக்கும் விதமாக மாபெரும் வெற்றி சாத்தியமாகி விடும்.
அமெரிக்க சந்தையில் கால்வைப்பது என்று டொயோட்டா நிறுவனம் முடிவு செய்தபோது டொயோபெட் என்ற காரைக் கொண்டுவந்தது. அமெரிக்க சந்தையில் அது பெரும் தோல்வியைக் கண்டது. ஆனாலும், நீண்டகால அடிப்படையில், அமெரிக்காவின் கார் தயாரிப்பில் காலூன்ற அந்த அனுபவத்தை டொயோட்டா அடிப்படையாகக் கொண்டது.
விதம்விதமான முயற்சிகளால் சந்தையில் தன்னை தக்க வைத்துக் கொள்கிற எந்தத் தயாரிப்பும், தான் எட்டிய உயரம் பாதுகாப்பானது என்று நின்றுவிட முடியாது. தான் அடைந்திருக்கும் இடத்தைத் தக்க வைக்க அவ்வப்போது சிலவற்றை சரிபார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
"எளிதாகக் கையாளலாம்", "எங்கும் கிடைக்கிறது" என்பது போன்ற உத்திகளைத் தாண்டி, உங்கள் தயாரிப்பை தேடிப் பெறுவதில் வாடிக்கையாளர்கள் தனி அக்கறை காட்டுகிறார்களா என்பதை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு, போட்டி தயாரிப்புகள் மத்தியில் பெயர் சொல்லி கேட்டு வாங்கப்படுகிறதா என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
"கடைக்காரரே! நல்லெண்ணெய் கொடுங்க!"
"எந்த நல்லெண்ணெய்மா". இந்த விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கும். தயாரிப்பை பெயர் சொல்லிக் கேட்டு வாங்கும் அளவு அவர்களுடைய மனங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் சூத்திரம்.
ஹியாட் ஹோட்டல்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளன. அதில் பணிபுரியும் உயர் அலுவலர்கள், ஒவ்வோர் ஆண்டும், ஒரு வார காலம், அந்த ஹோட்டல்களில் ரூம்பாய் வேலை பார்ப்பார்கள். வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நேரடியாய் அறிந்து கொள்வதற்கான உத்தி இது.
போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசப் படுவதற்கான முயற்சிகளை ஒரு தயாரிப்பை உருவாக்கிய பிறகும் தொடர முடியும். தயாரிப்பின் தன்மையில், தோற்றத்தில், உள்ளடக்கத்தில் அவ்வப்போது செய்துவரக்கூடிய மாற்றங்கள், சந்தையின் தேவைக்கேற்ப புதுமைகளைப் புகுத்தி தயாரிப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
அதேநேரம், ஒரு தயாரிப்போ சேவையோ ஆரம்ப நிலையிலேயே சந்தையில் தனித்த முத்திரை பதிக்கும் விதமாக உருவெடுத்து அதனாலேயே அபரிமிதமான வளர்ச்சியை அடையவும் முடியும்.
உலகின் பல பகுதிகளிலும் உருவான ஹாலிடே இன் தொடக்கத்திலேயே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது. எந்த ஊரில் ஹாலிடே இன் தொடங்கப்பட்டாலும், ஊருக்கு வெளியே, ஊரின் எல்லை தொடங்கப்படும் இடத்தை ஒட்டி ஹாலிடே இன் விடுதிகள் அமைக்கப்பட்டன.
சுற்றுலா பயணிகளுக்கும் வழியில் தங்கிச் செல்லும் பயணிகளுக்கும் இது மிகவும் வசதியாக இருந்தது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், புற வழிச்சாலைகள் பெரிய அளவில் உருவாகத் தொடங்கியபிறகு, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாய் இத்தகைய உணவகங்கள் அதிக அளவில் வளர்கின்றன.
சந்தையை அடையாளம் காணுவதில் புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். உருவாகும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்பதையே இது காட்டுகிறது.
சந்தையில் வாடிக்கையாளர்கள், தொடர்ந்து வாங்கும் விதமாகவும் தேடி வாங்கும் விதமாகவும் உங்கள் தயாரிப்பை நிலை நிறுத்துவதில் இருக்கும் நன்மைகளை, ஒரு சிறு கணக்கின் வழியாகக் கண்டு கொள்ளலாம்.
வாரம் ஐம்பது ரூபாய்க்கு ஒரு தயாரிப்பை ஒருவர் தொடர்ந்து வாங்குகிறார் என்றால், அவர் மட்டும் 2400 ரூபாய்கள் ஒரு வருடத்தில் தருகிறார். அவரது குடும்பத்தினர் – உறவினர் – நண்பர்கள் என்று பலரையும் சென்றடைய அந்த நிறுவனம் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. அவருடைய மனநிறைவே அதற்கு வழி செய்து கொடுத்து விடும்.
அந்தத் தயாரிப்பையே அளவிலோ தரத்திலோ கொஞ்சம் மேம்படுத்தி பழைய பெயருக்கு முன்போ பின்போ இன்னொரு சொல்லை இணைத்து விலையை அதிகரித்து அறிமுகம் செய்தால், இதே வாடிக்கையாளர் தொடர்ந்து வாங்குவதோடு இன்னும் புதிய வாடிக்கையாளர்களையும் அந்த நிறுவனம் தன்னுடைய செல்வாக்கு வட்டத்துக்குள் கொண்டு வர முடியும்.
சந்தையில் இருத்தல், சந்தையை மதிப்பீடு செய்தல், சந்தையை ஈர்த்தல் ஆகியவற்றை ஒரு நிறுவனம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் அலுவலர் வெற்றி பெறுவது தயாரிப்பின் பலத்தாலும் தன்னுடைய பலத்தாலும்தான். இந்த இரண்டும் இணைகிற போது ஒரு தயாரிப்பு தன்னை நல்லவிதமாக நிலை நிறுத்திக் கொள்கிறது.
'பெரியோர்களே! தாய்மார்களே!!' என்ற பொதுப் பிரச்சாரத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாது. தனி மனிதர்களாகவே எந்த நிறுவனமும் வாடிக்கையாளர்களை மதிப்பிட முடியும். இதற்கு, Particle Market என்றொரு புதிய பெயரை மார்க்கெட்டிங் உலகம் சூட்டியிருக்கிறது. ஒரு சமூகம் – ஒரு குடும்பம் – என்ற அளவு கோல்களைத் தாண்டி, ஒரு தனிமனிதர் எடுக்கிற முடிவுகூட அந்தக் குடும்பத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இன்று ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் எனில் அவர்களிடம் குறைந்தது ஆறு செல்ஃபோன்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் வயது- விருப்பம்- வருமானம் இவற்றுக்கேற்ப வெவ்வேறு தயாரிப்புகளில் செல்ஃபோன்கள் அவர்கள் கைகளில் தவழ்கின்றன.
இதையே வேறு விதமாகப் பார்த்தால், ஒவ்வொரு தனிமனிதரையும் மனதில் கொண்டு, அவர்கள் ரசனைக்கேற்ப ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு, போட்டி தயாரிப்புகள் மத்தியில் பெயர்சொல்லி கேட்டு வாங்கப்படுகிறதா என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
நன்றி: நமதுநம்பிக்கை


--
*more articles click*
www.sahabudeen.com


Monday, May 19, 2014

மாணவர்களும், தொழுகையும்

தொழுகை, ஒவ்வொரு முஸ்லிமின் இரண்டாவது கடமை.  மறுமையில் முதல் விசாரணை தொழுகை குறித்தே கேட்கப்படுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கடமை.

தொழுகையை வலியுறுத்தும் வசனங்கள் மட்டுமே குர் ஆனில் 31 இடங்களில் வருகின்றன. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையினை இறைவனருளால் நம்மில் பலர் கைக்கொள்கிறோம், அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நம் பிள்ளைகளிடம் இதை முறையாக நிலைநிறுத்துகிறோமா?
 பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களாகிய நம் பிள்ளைகள் தொழுகையின்மீது சற்று அசிரத்தையாகவே இருக்கின்றார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்குப் பல காரணங்களைக் கூறிக்கொள்கிறோம்: பள்ளிகளில் இடவசதியில்லை; நேரம் கிடைப்பதில்லை; அனுமதிப்பதில்லை; என்று பல சமாதானங்களைக் கூறிக்கொள்கிறோம். 

 உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்.

 மேலேயுள்ள ஹதீஸில், பத்து வயதாகிவிட்டால் அடித்தேனும் தொழவையுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, சிறார்களுக்கும் தொழுகை எத்துணை அவசியமானது என்று புரிந்துகொள்ளலாம்.

 31 : 17. ''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக. நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக. உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்". 

 நபி லுக்மான்(அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரை இது!! சிறுவயது முதலே தொழுகையைத் தவறாது கடைபிடிக்கச் செய்வதன்மூலம், தன் கடமைகளைத் தட்டிக் கழிக்காமல், பொறுப்புடன் நிறைவேற்றத் தயங்காத, தடைகளைக் கண்டு தளராத, மனத் திண்மை படைத்த,ஒரு நல்ல மூமினான பிரஜையை நாட்டிற்குத் தரும் கடமையை நிறைவேற்றுகிறோம். ஆகவே, சால்ஜாப்புகள் சொல்லிக் கொண்டிராமல், மாணவர்களுக்கும் தொழுகையைப் பேணுவதை அறிவுறுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

 இஸ்லாமியரல்லாதவர்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தொழுவதில் சிரமங்கள் இருப்பது உண்மையே. இதனை நிவர்த்தி செய்யும் வழிகளில் பெற்றோர்கள் ஈடுபட்டு, எப்படியேனும் மாணவர்களைத் தொழச் செய்யவேண்டும்.  பள்ளி நிர்வாகத்தினரோடு தன்மையாகப் பேசி, வேண்டுகோள் விடுக்கலாம். தமிழ்நாட்டில் பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் தொழுவதற்கு ஒத்துழைப்பு நல்குகிறார்கள். லுஹர் தொழுகை நேரம், பள்ளியின் மதிய இடைவேளையின்போது வருவதால், பலரும் இதற்கு ஆட்சேபிப்பதில்லை.

 இன்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில், 9, 10, 11, 12ம் வகுப்புகள் காலை 6.30 மணி முதல் மாலை 7 மணி வரை நடத்தப்படுகின்றன. எனும்போது, லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய மூன்று வேளைகளும் பள்ளி நேரத்திலேயே வருவதால் மாணவ, மாணவியர் மூன்று தொழுகைகளையும் கல்விக்கூடத்தில் தொழ வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.  

 பள்ளிகளில் சேர்க்கையின்போதே, பெற்றோர் இதனை உறுதிசெய்யவேண்டும்.  தற்போது படித்து வரும் பள்ளிகளிலும், முஸ்லிம் பெற்றோர்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுக்க வேண்டும். நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில், மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் தயாராக இருக்க வேண்டும். சேர்க்கை கொத்தாகப் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில், பள்ளி நிர்வாகம் மறுக்கவியலாது.
 ஜும் ஆ தொழுகை:
  அன்றாடத் தொழுகைகளான லுஹர், அஸரைத் தொழுவதில் மாணவர்களுக்கோ, அதை அனுமதிப்பதில் பள்ளி நிர்வாகங்களுக்கோ சிரமமிருக்காது.  ஆனால், வெள்ளிக்கிழமைக் கடமையான ஜும் ஆ தொழுகையை - கல்விக்கூட வளாகத்தை விட்டு வெளியே சென்று தொழவேண்டிய இதை - நிறைவேற்றுவதில்தான் அதிகச் சிரமம் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இருக்கிறது.  ஏனெனில், இத்தொழுகை பள்ளிவாசலுக்குச் சென்று  ஜமா அத்தாகத் தொழ ஒவ்வொரு ஆணின் கட்டாயக்கடமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது. 

 'ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

 ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களைக் கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

 ஜும் ஆத் தொழுகையைத் தவிர்ப்பதால், மார்க்கக் கடமையிலிருந்து தவறுவதோடு, சமூகச் சிந்தனைகளை - சமுதாய அக்கறையை இளவயதிலேயே பசுமரத்தாணியாகப் பதிக்கும் குத்பா உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் தவறிப்போகிறது. 

 கல்விக்கூடங்கள் இதை அனுமதிக்காததன் காரணம், பெரும்பாலும் மாணவர்கள் தனியே வெளியே சென்றுவர விரும்பாதது மற்றும் மதிய இடைவேளையைத் தாண்டி தொழுகை நேரம் நீட்டப்படும் சாத்தியம் இருப்பதாலுமே. இவற்றை பெற்றோர்கள் சரியாக கையாண்டு, அதற்கானத் தீர்வுகளுடன் நிர்வாகத்தை அணுகினால், நிச்சயம் ஒத்துழைப்பு நல்குவார்கள். 

 கும்பகோணம் அருகில், அம்மாச்சத்திரத்தில் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில், மாணவர்களை ஜும் ஆத் தொழுகைக்காக, தம் பள்ளி வாகனத்திலேயே அழைத்துச் செல்கிறார்கள். இதுபோன்ற ஏற்பாடுகளை நிர்வாகத்துடன் கலந்துபேசிச் செய்யலாம். தகுந்த முறையில் நம் கடமைகளை எடுத்துக்கூறி முயன்றால், நிச்சயமாக ஆதரவு கிடைக்கும்.

 அலுவலகங்களில் பெரும்பாலும் இச்சிரமங்கள் இருப்பதில்லை. கல்விக்கூடங்களில்தான் இந்நிலைமை உள்ளது.
 அரசிடம் கோரிக்கை:
  சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின், 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான CBSE பள்ளித் தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெற்றன. இந்தியாவில் தேர்வு நேரம், காலை 10.30 - 1.30 என்பதால், மாணவர்களால் ஜூம் ஆ செல்ல முடியவில்லை. ஒன்றிரண்டு தேர்வுகள் எனில் தவிர்க்க இயலாத நிலை என்று பொறுத்துக் கொள்ளலாம். மார்ச் 1-ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 17-ம் தேதி முடியும் 12-ம் வகுப்பு தேர்வுகளில், ஐந்து தேர்வுகள் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்றன. இதுபோலவே, பல அரசுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், அரசு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை ஜும் ஆ நேரத்தில் இடம்பெறுகின்றன.
 நாம் மத்திய-மாநில அரசுகளிடம் முக்கியத் தேர்வுகளை ஜும் ஆ நேரத்தை அனுசரித்து வைக்கும்படி கோரிக்கை வைக்க வேண்டும்.  கவனிக்க, நாட்களை மாற்றச் சொல்லவில்லை. நேரத்தை மட்டுமே மாற்றக் கோருகிறோம்.

 அரசிடமே நேரடி கோரிக்கை வைத்து உரிமை பெறுவதன்மூலம், மற்ற தனியார் நிர்வாகங்களும் முஸ்லிம்களின் தொழுகையின் முக்கியத்துவத்தை உணருவார்கள். நாமும் ஒவ்வொரு பள்ளி-கல்லூரி-நிர்வாகத்திடம், தனித்தனியாக வேண்டுகோள் வைப்பதைத் தவிர்க்கலாம். புரிந்துணர்வு இல்லாத நிர்வாகத்தினரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவும் தேவை இல்லாமல், நமது உரிமையாகக் கேட்டு வாங்கலாம்.

 அண்டை மாநிலமான கேரளாவில், பல்வேறு மதத்தினர்களும் அடங்கிய "சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு", மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. இயக்குனரகத்திற்கு தேர்வு நேரங்களை மாற்றியமைக்கும்படி இவ்வருடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. வேண்டுகோள் ஏற்கப்படவில்லையெனினும், முயற்சியாவது செய்தார்கள் என்பது பாராட்டிற்குரியது.  பல்வேறு இயக்கங்களைக் கொண்ட நம் தமிழகத்தில் ஒரு சிறுமுயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லையென்பது வருந்தத்தக்கதே.

 இதற்கு இன்னொரு காரணம், இஸ்லாமியக் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் மிகமிகக் குறைவு. ஆகவே, நம்மால் பள்ளி கூட்டமைப்புகளில் நம் குரலைப் பதிவு செய்ய முடியவில்லை. அதிக அளவில் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நிறுவுவதன் இன்னொரு அவசியமும் புலப்படுகிறது. 

 இவ்வளவு கஷ்டப்பட்டாவது தொழ வேண்டுமா என்று கேட்பவர்களுக்குப் பதில் இதுதான்:
 107 : 4,5. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். 

29 : 45. .... இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். 
 
 நம் சந்ததிகள் தொழுகையைப் புறக்கணிப்பதன் மூலம் வரும் கேடுகளால் அழிந்துபோகாமல் காப்பது, பெற்றோர்களாகிய நம் கடமை. இன்று உலகத்தில் பல்வேறு அழிமானங்கள், தீயவைகள் மாணவர்களை - எதிர்காலத் தூண்களைக் குறிவைத்து  நடைபெற்று வருகின்றன. அவற்றிலிருந்தெல்லாம் நம் பிள்ளைச் செல்வங்களை, இளைய சமுதாயத்தை, நாளைய நம்பிக்கைகளைக் காக்கக்கூடியது தொழுகை ஒன்றுதான்!!

-ஹுசைனம்மா

 சமரசம் மே 16-31 இதழில் வெளியானது.

Saturday, May 17, 2014

மரணத்தைப் பரிசளிக்கும் இனிப்பு நிறைந்த மென்பானங்கள்

முன்னைய காலங்களில் உணவுடன் நீர்தான் அருந்துவார்கள். ஆனால் இப்பொழுது கூடவே மென்பானம்  பலருக்கும் தேவைப்படுகிறது.  கோக்கோ கோலா, பன்ரா, கிரீம் சோடா எனப் பல.  போதாக்குறைக்கு இப்பொழுது Energy drinks ம் சேர்ந்துவிட்டன.

அந் நாட்களில் காய்ச்சல் வந்தால் ஒரு ஒரேஜ் பார்லி, வயிறுப் பொருமல் என்றால் ஒரு ஜின்ஜபியர் என ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் என எப்பொழுதாவதுதான் மென்பானம் அருந்துவார்கள். இப்பொழுது இனிப்பு பானங்களின் பாவனை அதீதமாக அதிகரித்திருப்பதை அறிவீர்கள்.

முன்பு Dinner என வெளியே சாப்பிடப் போனால் சூப் எடுப்பார்கள். இப்போ மென்பானங்கள்தான். மற்றைய பானங்கள் (மது) பற்றி இதில் நான் பேசவில்லை.

இவற்றை அருந்துவதால் 2010 ல் இல், உலகளாவிய ரீதியில் 180,000 மரணங்கள் நிகழ்ந்திருக்கிறது,
அவற்றில்...

  • நீரிழிவு இருந்து 132.000 பேரும், (சுமார் 75%) 
  • இருதய நோய்களிலிருந்து (CVD) 44.000 மரணங்களும், மற்றும்
  • புற்றுநோய் காரணமாக 6000 இறப்புகளும் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

இனிப்புப் பானங்களில் கலோரிப் பெறுமானம் அதிகம் உள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிக்கிறது, அதனால் உடற் திணிவுக் குறியீடு (BMI) அதிகரிக்கிறது.

இதன் காரணமாக நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

இந்த இனிப்புப் பானங்கள் என்றால் என்ன? கீழே உள்ளவற்றைப் பாருங்கள். ஆனால் இவை மாத்திரமல்ல வேறு பலவும் இருக்கலாம்.

  • கலோரி குறைப்புச் செய்யாத எல்லா மென் பானங்கள் 
  • இனிபூட்டப்பட்ட பழச் சாறுப் பானங்கள்
  • ஸ்போர்ட் பானங்கள்
  • எனர்ஜிப் பானங்கள்
  • இனிப்பூட்டப்பட்ட தேயிலைப் பானங்கள்

(Sugary drinks include, but are not limited to, the following types of drinks:
Non-diet carbonated beverages
Fruit-ades such as lemonade, fruit punch, powdered fruit drinks, and fruit drinks containing less than 100% fruit juice
Sports drinks
Flavored waters
Energy drinks
Sweetened teas)

பொதுவாக 30 அவுன்ஸ் அளவுள்ள மென்பானத்தில் 15 முதல் 18 தேக் கரண்டி சீனி இருக்கிறது. இது 240 கலோரிகளைக் கொடுக்கிறது.
 

மேற் கூறியவற்றில் பெரும்பாலன மரணங்கள் மத்திய மற்றும் குறைந்தளவு வருமானங்கள் உள்ள நாடுகளிலேயே நிகழ்கின்றன. அதாவது நமது நாடுகளில்

அமெரிக்க இருதய சங்கம் (American Heart Association ) கீழ்கண்ட பரிந்துரையைச் செய்துள்ளது.

The AHA recommends that adults don't exceed 450 calories a day or 36 oz a week from sugar-sweetened beverages.

In a 2012 statement position statement, the AHA and American Diabetes Association stated that non-nutritive artificial sweeteners can be a tool to help people lower their added sugar and calorie intake, as long as they don't eat extra calories to compensate for the lower calories in the diet drinks.

குறைந்த கலோரி இனிப்பூட்டிகள், கலோரி வலுவற்ற இனிப்பூட்டிகள்,செயற்கை இனிப்புகள்,
 (Low-calorie sweeteners, artificial sweeteners, and noncaloric sweeteners) என போசாக்கற்ற இனிப்புகளை (Non-nutritive sweeteners) வகைப்படுத்துகிறது அமெரிக்க இருதயச்சங்கம்.

இனிப்புப் பிரியமானவர்கள் இனிப்புச் சத்தற்ற அத்தகைய இனிப்புகளை எடுக்கலாம் என அமெரிக்க இருதய சங்கம் கூறுகிறது.
 

அத்தகைய போசாக்கற்ற அதாவது கலோரி வலுவற்ற இனிப்புகள் எவை?
உதாரணங்கள் கீழே,

  • Aspartame (NutraSweet® and Equal®)
  • Acesulfame-K (Sweet One®)
  • Neotame
  • Saccharin (Sweet'N Low®)
  • Sucralose (Splenda®)

வளர்ந்த ஒருவருக்கான தினசரி கலோரித் தேவை 2500 ஆகும். பெண்களுக்கு 2000 கலோரிகள். இது தினமும் சாப்பிடும் சகல உணவு மற்றும் பானங்கள், நீராகாரம் அடங்கலாக  யாவற்றிலிருந்து கிடைக்க வேண்டியதாகும்.

எனவே அத்தகைய இனிப்பான மென்பானங்களிலிருந்து 450 கலோரிக்கு மேல் எடுக்கக் கூடாது என்கிறது. இது அமெரிக்கர்களுக்கான அறிவுரை.
 

நாம் அந்தளவு கூட எடுக்கக் கூடாது. எமது உடலமைப்பு வித்தியாசமானது. நாம் மேலும் குறைந்தளவு எடுப்பதே உசிதமானது.
 

நீங்களும் உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் மேற் கூறிய நோய்களுக்கு ஆட்பட்டு காலத்திற்கு முந்திய மரணங்களுக்கு ஆளாகக் கூடாது எனின் இனிப்புச் செறிவு அதிகமான
  அத்தகைய பானங்களை முற்றாகத் தவிருங்கள்.

முடியாவிட்டால் மிகக் குறைந்தளவே குடியுங்கள்.
 

Facebook ல் இது பற்றி நான் எழுதியிருந்தபோது நண்பர் Kkshivak Kumar அவர்கள் எமது மூதாதையர் இளநீர்,பதநீர்,மோர் போன்றவற்றைப் பருகி ஆரோக்கியமாக வாழ்ந்ததை நினைவூட்டினார்.

http://hainallama.blogspot.in/2013/03/blog-post_22.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

குழந்தைக்கு கொடுக்கும் கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியுமா?

(நன்றி : ஒன் இந்தியா வலைத்தளம் )

பிறந்த குழந்தை ஆரோக்கியமாகவும், வலுவோடும் இருப்பதற்கு காரணம் தாய்ப்பால் தான். அதிலும் பிரசவம் முடிந்ததும், முதலில் வெளிவரும் தாய்ப்பாலானது மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். இந்த பாலைத் தான் கொலஸ்ட்ரம் என்று சொல்வார்கள். இந்த பாலானது குழந்தை பிறந்து ஒரு மணிநேரத்திற்குள் வெளிவரும். இந்த நேரத்தில் சிலர் இந்த பாலை குழந்தைக்கு கொடுக்காமல், அப்போது பவுடர் பாலைக் கொடுப்பார்கள் அல்லது சர்க்கரை தண்ணீரை கொடுப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுக்கு இந்த கொலஸ்ட்ரம் பாலின் நன்மை தெரியாததே ஆகும்.

உண்மையில் இந்த பாலில் தான், சாதாரண தாய்ப்பாலை விட அதிகமான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பாலை குழந்தைகள் பருகினால், குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். எனவே இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவு என்னவென்று பார்த்தால், அது கொலஸ்ட்ரம் தான். இப்போது அந்த கொலஸ்ட்ரம் பாலின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

* கொலஸ்ட்ரம் பாலில் புரோட்டீன்களும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பால் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம், இதில் அதிகமான அளவில் கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

* அதுமட்டுமின்றி இந்த பாலில் கரையக்கூடிய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இது சற்று கெட்டியான நீர்மமாக இருப்பதால், இதனை குழந்தைக்குக் கொடுக்கும் போது, இதுவரை நீரில் ஊறிக் கொண்டிருந்த குழந்தையின் உடலானது வெளியே ஒரு புதிய சுற்றுசூழலுக்கு வருவதால் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.

* கொலஸ்ட்ரம் பாலில் சோடியம், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் குளோரைடு போன்ற குழந்தையின் முறையான நரம்பு மண்டலம், மூளை மற்றும் இதய வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

* இந்த பாலை குழந்தைக்கு கொடுக்கும் போது, அவர்களுக்கு உடலில் இருந்து வெளிவரும் முதல் கழிவானது (மலம்) எந்த ஒரு பிரச்சனையுமின்றி எளிதாக வெளிவரும்.

* மேலும் இந்த பாலில் ஆன்டிபாடிகள் அதிகம் உள்ளது. இந்த ஆன்டிபாடிகள் குழந்தையின் இரைப்பையில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கும்.

* இந்த பாலின் மற்றொரு சிறப்பு என்னவெனில், இந்த பாலை குழந்தைக்கு கொடுத்தால், அதில் உள்ள சத்தானது, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நன்மையைத் தரும்.

* அதுமட்டுமல்லாமல், குழந்தைக்கு மிகவும் சிறிய சிறுநீரகம் என்பதால், அதற்கு போதிய நீர்மத்தை வைத்திருக்கும் சக்தி இல்லாதால், சிறுநீரகமானது ஒருவித அழுத்தத்துடன் இருக்கும். எனவே இதனை குழந்தைகள் குடிக்க, அவர்களின் சிறுநீரகமானது சற்று வலுப்பெறும்.

எனவே இத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய கொலஸ்ட்ரம் பாலை குழந்தைகளுக்கு கொடுக்க மறக்க வேண்டாம்.

http://www.babyclinics.blogspot.in/2013_03_03_archive.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பொடுகுத் தொல்லை போக்க சிறந்த வழி இதோ!

குளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. இது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இத்தகைய பொடுகை நீக்க பல வழிகள் உள்ளன. மேலும் இந்த பொடுகுத் தொல்லை நீண்ட நாட்கள் நீடித்தால் முகப்பரு, சரும வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஆகவே பொடுகு இருந்தால் சாதாரணமாக நினைக்காமல், அதனை உடனடியாக நீக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் ஒரு முறை அதனை நீக்க முயற்சித்தால், அது மறுமுறையும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அது சருமத்தை பாதிப்பதற்கு முன் பொடுகை நீக்கிவிட வேண்டும்.

அதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் தான். மேலும் அந்த பொடுகை நீக்குவதற்கு நிறைய எண்ணெய்கள் வீட்டிலேயே இருக்கின்றன.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

அனைத்து வீடுகளிலுமே தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வைத்து சூப்பராக பொடுகை நீக்கலாம்.

அதிலும் அந்த தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.

தயிர், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

பொடுகை நீக்கும் பொருட்களில் சிறந்தது தான் தயிர். இது பொடுகை மட்டும் நீக்குவதோடு, கூந்தலை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாற்றும்.

பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து வறட்சியை நீக்கும். எலுமிச்சை இறந்த செல்கள் மற்றும் பொடுகை போக்கும். ஆகவே அந்த மூன்று பொருட்களையும் கலந்து, தலைக்கு குளிப்பதற்கு முன் 1 மணிநேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

செம்பருத்தி எண்ணெய்

குளிர் காலங்களில் எண்ணெய் மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அப்போது சரும வறட்சி அதிகமாக இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகம் ஏற்படும்.

எனவே அப்போது செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.

வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்

வெந்தயம் பொடுகை எளிதில் நீக்கிவிடும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, பின் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைக்கு தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

இதனால் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால் பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். பின் கூந்தலும் வலுவடையும்.

நல்லெண்ணெய்

கூந்தல் வறட்சியை போக்கும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் சிறந்த ஒன்று. இந்த எண்ணெயை அடிக்கடி தடவி வந்தால், வறட்சி நீங்கி பொடுகு வராமல் இருக்கும்.

அதிலும் இதனை லேசாக சூடேற்றி வேண்டுமென்றால் எலுமிச்சையை சேர்த்து கலந்து, தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால் கூந்தல் நன்கு பொலிவோடு பொடுகின்றி இருக்கும்.

நன்றி:http://www.sikams.com

http://www.onlytamil.in/2013/03/blog-post_30.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Fwd: வேலை.நெட்






வேலை.நெட்

Link to வேலை.நெட்

Wipro நிறுவனத்தில் International – Non Voice Process பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 15 May 2014 07:30 PM PDT

The post Wipro நிறுவனத்தில் International – Non Voice Process பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Thomson Reuters நிறுவனத்தில் Trainee Content Analyst பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Bangalore – May 2014

Posted: 15 May 2014 07:20 PM PDT

The post Thomson Reuters நிறுவனத்தில் Trainee Content Analyst பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Bangalore – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Hirebridge நிறுவனத்தில் Associate Software Engineer பணிக்கு BE/B.Tech/BCA /B.Sc/MCA/M.Sc பட்டதாரிகள் தேவை Bangalore – May 2014

Posted: 15 May 2014 07:00 PM PDT

The post Hirebridge நிறுவனத்தில் Associate Software Engineer பணிக்கு BE/B.Tech/BCA /B.Sc/MCA/M.Sc பட்டதாரிகள் தேவை Bangalore – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Mentor Graphics நிறுவனத்தில் Associate Application Engineer பணிக்கு BE/B.Tech/MCA/BCA//B.Sc/M.Sc பட்டதாரிகள் தேவை Bangalore – May 2014

Posted: 15 May 2014 06:50 PM PDT

The post Mentor Graphics நிறுவனத்தில் Associate Application Engineer பணிக்கு BE/B.Tech/MCA/BCA//B.Sc/M.Sc பட்டதாரிகள் தேவை Bangalore – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Infosys நிறுவனத்தில் Non-Voice Process பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014

Posted: 15 May 2014 06:40 PM PDT

The post Infosys நிறுவனத்தில் Non-Voice Process பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை Chennai – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

IBM நடத்தும் Off-Campus தேர்வுக்கு BE/B.Tech/ME/M.Tech/MCA பட்டதாரிகள் தேவை Across India – May 2014

Posted: 15 May 2014 06:30 PM PDT

The post IBM நடத்தும் Off-Campus தேர்வுக்கு BE/B.Tech/ME/M.Tech/MCA பட்டதாரிகள் தேவை Across India – May 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
You are subscribed to email updates from வேலை.நெட்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com