Thursday, August 7, 2014

அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்

அஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்

வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள்  வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால்  அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று  வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி  அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

எலுமிச்சை மற்றும் இஞ்சி
எலுமிச்சை  மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும்  பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில்  எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை  சொல்லிவிடலாம்.
ஆரஞ்சு சாறு
வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு  செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
மோர், பால்
தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும்  அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால்,  அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
திராட்சை
வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து  சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும்.
எலுமிச்சை
சூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன்  எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன் போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது.
பூண்டு மருத்துவம்
வீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த  அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று  பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறிஞ்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும்.
சமையல் சோடா
செரிமான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு விட்டதா! ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால்  செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.
கொத்துமல்லி இலை
ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ற்படின் இதை  பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு  தொந்தரவை நீங்கிவிடும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, August 5, 2014

வாசனை வைத்தியம்


வாசனை வைத்தியம்

மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது.
இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும். இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர். அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது.
இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும். சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம். எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது. ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.
எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.
மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
மசாஜ்
வாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ்செய்யலாம்.
சனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல் பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.
புருவத்தின் மேலும் கீழும் நெற்றியிலும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ்செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ்செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ்செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ்செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.
கழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம். கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம். பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.
உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை உதறவேண்டும். உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.
வாசனை செய்திகள்
வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன்? நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது. நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன. நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும். இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, August 3, 2014

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்

LPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( Liquefied Petroleum Gasas) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை
நாம் பார்க்கலாம் .!!

LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும். சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . .

இதுலே D13 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?

இது வருஷத்தை நான்காகப் பிரிச்சு நான்காம் கால் பகுதியைக் குறிக்குது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை

இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2013 டிசம்பர் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ்(Fitness) இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.

காலாவதியானவைகளை இன்னொருமுறை அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம்

சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.

இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.

சரி, எப்போ இது காலாவதின்னு தெரிந்துகொள்ளுவது ?

இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.

The alphabets stand for quarters -
A என்பது மார்ச் (முதல் காலாண்டு)
B என்பது ஜூன் (இரண்டாம் காலாண்டு)
C என்பது செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
D என்பது டிசம்பர் (நான்காம் காலாண்டு)
சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் .

உதாரணமாக D-13 என்று இருந்தால் டிசம்பர் 2013 என்று அர்த்தம்

இதில் 4 ஆங்கில எழுத்துகள் (A, B, C, D) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு (மார்ச் வரை) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை) , மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் வரை), நான்காம் காலாண்டு (டிசம்பர் வரை) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .

பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது. ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டு பண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது. ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .

பொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் (கசிவு ஏற்பட்டால்) திறந்து வைப்பது நல்லது .

சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக (vertically) தான் வைக்க வேண்டும். படுக்க (Horizontally) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி (Like Rocket) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .

வீடுகளுக்கு சிலிண்டர் மாற்றும் போது, நமக்கு வர்ற சிலிண்டரில் இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க. இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.

விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம். எதுக்கும் எல்லாரும் அதிகம் கவனமா இருங்க

http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்


அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
''ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்'' என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.

இயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.
அதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)
கேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.
உருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.

அகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.
பர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.
வெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.
முகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.

அதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.
நமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.
தக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது.
  இதில் வைட்டமின் 'சி' உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.
(தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)

வெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.
தர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
எண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.

வெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
எலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும்
  எடுக்கக் கூடாது.
கேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.
பழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.

மஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
ஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
எண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.
பேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.

பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
சரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.

நார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.

http://kulasaisulthan.wordpress.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்


நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பொருள் ஈட்டச் செல்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு பொருள் ஈட்டச் செல்லும் போது, சிலர் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்கிறார்கள். இன்னும் சிலரோ, குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு, தாங்கள் மட்டும் செல்கிறார்கள். வெளிநாடு செல்லும் பலரும் தங்கள் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்கிறார்கள். தங்களின் ஓய்வுக் காலத்திற்காகவும் மற்றும் குழந்தைகளின் நலனிற்காகவும் இந்தியாவில் சேமிக்க/ முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

இவை அனைத்திற்கும் வங்கிக் கணக்கு என்பது இன்றியமையாதது ஆகிவிடுகிறது. வங்கிக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் (PIO – Persons of Indian Origin) ஆகிய இருவரும் செயல்படுத்திக் கொள்ளலாம். வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை இந்த இருவகையினரும் ஒன்றாகவே கருதப்படுகின்றனர். இக்கணக்குகளைத் திறப்பதற்கு மத்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை. அன்னியச் செலவாணியில் பரிமாற்றம் செய்யும் வங்கிகள் அனைத்திலும் இந்தக் கணக்குகளைத் தொடங்கலாம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென்று பொதுவாக வங்கிகள் மூன்று விதமாக கணக்குகளை செயல்படுத்துகின்றன. அவையாவன:

1.என்.ஆர்.ஓ [NRO Account – Non-Resident Ordinary Rupee Account]

2.என்.ஆர்.ஈ [NRE Account – Non-Resident (External) Rupee Account]

3.எஃப்.சி.என்.ஆர் (பி) [FCNR (B) Account – Foreign Currency Non-Resident (Bank) Account].

ஒருவர் இந்தியாவிலிருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசிக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு ஏற்கனவே வங்கிகளில் இருக்கும் சேமிப்புக் கணக்கை, தான் வெளிநாடுவாழ் இந்தியர் ஆகிவிட்டதை குறிப்பிட்டு, என்.ஆர்.ஓ கணக்காக மாற்றிக்கொள்ள வேண்டும். இனி வங்கிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கணக்கைத் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1.பாஸ்போர்ட்

2.விசா

3.பான் கார்டு

4.வெளிநாடு மற்றும் உள்நாட்டு முகவரிக்கான ஆதாரம்

5.பாஸ்போர்ட் சைஸ் போஃட்டோ

6.முதல் சேமிப்பிற்கான காசோலை

பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களை இதுபோன்ற கணக்குகளைத் தொடங்குவதற்கு நேரடியாக வரச் சொல்கின்றன. ஆகவே அவர்கள் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் முன்போ அல்லது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும்பொழுதோ இக்கணக்குகளைத் தொடங்கிக்கொள்ளலாம். சில வங்கிகள் வெளிநாட்டில் இருந்தவாறே கணக்குகளைத் தொடங்குவதற்கும் வழிவகை செய்து தருகின்றன.

இனி நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான கணக்குகளுக்கான குணாதிசியங்களை கீழே காண்போம்.

என்.ஆர்.ஓ (NRO) (நான் ரெசிடண்ட் ஆர்டினரி – NON-RESIDENT ORDINARY)

இந்த வகையான சேமிப்பு கணக்கினை வங்கிகளில் அல்லது அஞ்சலகங்களில் திறந்து கொள்ளலாம். என்.ஆர்.ஓ அடிப்படையில் கீழ்க்கண்ட வகையான பிற கணக்குகளையும் திறந்து கொள்ளலாம்: நடப்புக் கணக்கு, டெப்பாஸிட் கணக்கு, ரெக்கரிங் டெப்பாஸிட் கணக்கு. வங்கிகள் தங்கள் விருப்பம் போல இந்தக் கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை அளிக்கலாம். ஆனால் என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டுகளுக்கு கொடுக்கப்படும் வட்டி, உள்நாட்டு டெப்பாஸிட்டிற்கு கொடுக்கப்படும் வட்டியைவிட அதிகமாக இருத்தல் கூடாது.

இந்தக் கணக்கினில், வெளிநாடு வாழ் இந்தியர் வெளிநாட்டிலிருந்தோ அல்லது உள்நாட்டிலோ பணத்தைச் செலுத்தலாம். அவர்கள் பெயரில் இந்தியாவில் கிடைக்கும் வீட்டு வாடகை, டிவிடெண்ட் மற்றும் பிற வருமானங்களை இந்த கணக்கில் செலுத்தலாம். இந்த கணக்கில் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்பம் போல காசோலை கொடுக்கலாம். ஆனால் இக்கணக்கிலிருந்து என்.ஆர்.ஈ (NRE) கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியாது. என்.ஆர்.ஓ கணக்கிலிருந்து வரும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். மூலத்தில் வரி பிடித்தமும் (TDS – Tax Deduction at Source) இவ்விதமான கணக்குகளுக்கு உண்டு. இந்தக் கணக்கு இந்திய ரூபாயில்தான் இருக்கும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு வரும்பொழுது, வெளிநாடுகளில் இருந்து தாங்கள் கொண்டுவந்த டிராவலர் செக், கரன்சி நோட்டுகள் போன்றவற்றை இந்தக் கணக்கினில் டெப்பாஸிட் செய்து கொள்ளலாம். இந்த கணக்குகளில் உள்ள பணத்தை (சொத்துவிற்ற பணம் உட்பட) வருமான வரி விதிமுறைகளுக்கு உள்பட்டு வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இன்றைய மதிப்பில் ரூ 6.10 கோடி) வரை தாங்கள் வசிக்கும் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதியும் இந்த கணக்குகளில் உள்ளது.

என்.ஆர்.ஓ கணக்கினை வெளிநாட்டில் வசிக்கும் அல்லது இந்தியாவில் வசிக்கும் மற்றொருவருடன் இணைந்து வைத்துக் கொள்ளலாம். நாமினியை பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. என்.ஆர்.ஓ டெப்பாஸிட்டினை அடமானம் வைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ வங்கிகள் மூலம் கடன் பெறும் வசதியும் உள்ளது.

சொக்கலிங்கம் பழனியப்பன் prakala@gmail.com

http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஈமானின் கிளைகள்

ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.

2) இறைத்தூதர்களை நம்புவது.

3) மலக்குமார்களை நம்புவது.

4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.

5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.

6) உலக அழிவு நாளை நம்புவது.

7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.

8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.

9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.

10) அல்லாஹ்வை நேசிப்பது.

11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.

12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.

13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.

14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.

15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.

16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.

17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.

18) கல்வியைப் பரப்புவது.

19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.

20) தூய்மையாக இருப்பது.

21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.

22) ஜகாத் கொடுப்பது.

23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.

24) இஃதிகாஃப் இருப்பது.

25) ஹஜ் செய்வது.

26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.

27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.

28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.

29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.

30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.

31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)

32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.

33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.

34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.

35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.

36) கொலை செய்யாதிருப்பது.

37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.

38) திருடாதிருப்பது.

39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.

40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.

41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.

42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.

43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.

44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.

45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.

46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.

47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.

48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.

49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.

50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.

51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.

52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.

53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.

54) வெட்கப்படுவது.

55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.

56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.

57) நற்குணத்துடன் நடப்பது.

58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.

59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.

60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.

61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.

62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.

63) நோயாளியை விசாரிப்பது.

64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.

65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.

66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.

67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.

68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.

69) பிறரின் குறைகளை மறைப்பது.

70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.

71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.

72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.

73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.

74) அதிகமாக தர்மம் செய்வது.

75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.

76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.

77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.

78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

.Engr Sulthan



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வேர்ட் ஷார்ட் கட்


வேர்ட் ஷார்ட் கட்

வேர்ட் தொகுப்பிற்கென பல ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு அடிக்கடி பயன்படுத்தக் கூடியதாக ஒரு சில உள்ளன. வாசகர்கள் அவற்றை அவ்வப்போது வெளியிடுங்கள் என்று கேட்டு கடிதங்கள் எழுதுகின்றனர். எனவே கீழே தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் முன்பு இம்மலரில் படித்திருந்தாலும் இதனையும் மனதில் கொள்ள படித்து வையுங்கள்; பயன்படுத்துங்கள்.
Alt + F10 – விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது
Alt + F5 – விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.
Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக் களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற் கொள்ளும்.
Shift + F2– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.
Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.
Ctrl+W, Ctrl+F4 – இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண் டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.
Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.
Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.
F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் சென்று சொற்களைத் தேடி அவற்றிற்குப் பதிலாக வேறு சொற்களை அமைத்திட இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Ctrl+H  ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.
Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.
Alt F, I  பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.
Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன் படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.
Ctrl + >
தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டாவது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)
Ctrl + ]
இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.
Ctrl + Shift + H  தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத் திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.
Alt + Shift + D  நீங்கள் உருவாக்கிடும் ஆவணத்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதியை டைப் செய்திட விரும்புகிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண்டியதில்லை. பலருக்கு தேதி நினைவிலும் இருக்காதே. இதற்காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.
Alt + Shift + T மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்துங்கள். நேரம் அழகாக டைப் செய்யப்பட்டுவிடும்.
Ctrl + Shift + W  வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.
Alt + F11  வேர்ட் தொகுப்பில் பணியாற்று கையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்படுத்தவும்.
Alt V, H  ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தவும்.
Shift + F7  ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com