Monday, April 20, 2015

புது வருடமும் புனித பணிகளும்

புது வருடமும் புனித பணிகளும்

 மனிதன் பல மணி நேரங்கள் பல வருடங்கள் செய்ய வேண்டிய நன்மைகளை ஒரு சில மணிநேரங்களில், ஒரு சில நாட்களில் செய்தால் அவைகளை அடைய முடியும் என்று கருதி, கருணை மிகு ரஹ்மான் சில அமல்களை எளிதாக்கித் தந்துள்ளான். அத்தகைய அமல்களில் ஒன்று தான் எம்மை எதிர்நோக்குகின்ற முஹர்ரம் மாதமாகும்.
 முஸ்லீம்களின் கணக்கின்படி இது மாதங்களில் முதலாவது மாதமாகும். முஹர்ரம் என்றால் சங்கை மிக்கது என்று பொருள். இம்மாதத்தையொட்டியே இக்கட்டுரை வரையப்படுகிறது. ஏதோ புது வருடமும் அதிலே ஆற்ற வேண்டிய பெரிய பணிகளும் இருப்பதைப் போன்று தலைப்பு இருந்தாலும் உண்மை அதுவல்ல. இம்மாதத்தில் எது புனித பணி? அது எத்தனை? எதனைச் செய்ய வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் மிகவும் துள்ளியமாக தெளிவுபடுத்தி விட்டுச் சென்று விட்டார்கள்.
 முஹர்ரம் மாதம் சங்கைமிக்கதாகும்
நபியவர்கள் கூறினார்கள் 'ரமழான் நோன்புக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குறிய நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். பர்ழான தொழுகைக்கு அடுத்த நிலையில் மிகவும் சிறப்புக்குரிய தொழுகை இரவிலே நின்று வணங்குவதாகும்|' (முஸ்லிம்:1982)
 இம்மாதத்திலே நோன்பு வைப்பதனால் இம்மாதம் சிறப்புறுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
 நபியவர்களிடம் முஹர்ரம் 10-ம் நாள் நோற்கப்படும் நோன்பு பற்றி வினவப்பட்ட போது அது 'முன் சென்ற வருடத்திற்கு பரிகாரமாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம்:1977 இப்னு மாஜா:1728)
 அதாவது இவ்வருடம் அந்த நோன்பை நோற்றால் போன வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு இந்நோன்பு பரிகாரமாக அமைகிறது. பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நோற்கின்ற நோன்புக்கு 1 வருடம் செய்த பாவங்களை மன்னிக்கின்றான் என்றால் இறைவன் நம்மீது எவ்வளவு கருணையுள்ளவனாக இருக்கிறான் என்பதை சிந்திக்க வேண்டும். குறைந்த பட்சம் 1 வருடப் பாவத்துக்கு 1 வருடம் நன்மையாவது செய்தாக வேண்டும். ஆனால் மனிதனுக்கு அது சுமையாக அமையும் என அறிந்து வெறும் இரண்டே நாட்களில் அதனை எளிதாக்கியுள்ளான். இது அவனுடைய கருணைக்கு அளவு கோலே இல்லை என்பதைக் காட்டுகிறது.
 இது கட்டாயக் கடமையல்ல
இந்நோன்பைப் பொறுத்தவரை விரும்பியவர் நோட்கலாம் விரும்பியவர் விடலாம். யார் மீதும் குற்றம் கிடையாது. ஏனெனில் இந் நோன்பு ஆரம்ப கால கட்டத்தில் கடமையான ஒன்றாக இருந்து பின்னர் சுன்னத்தாக மாற்றப்பட்டது.
 அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிப்பதாவது: ஜாஹி லியா (அறியாமைக் கால) மக்கள் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு வைப்பவர்களாக இருந்தனர். நபியவர்களும் முஸ்லீம்களும் ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்நோன்பை நோற்று வந்தனர். எப்போது ரமழான் கடமையாக்கப்பட்டதோ அப்போது நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக முஹர்ரம் 10ம் நாள் (ஆஷுறா) அல்லாஹ்வுடைய (அல்லாஹ் கணக்கில் கொள்ளும்) நாட்களிள் ஒன்றாகும். எனவே விரும்பியவர் அத்தினத்தில நோன்பு வைக்கலாம் விரும்பியவர் விடலாம். (முஸ்லிம்:1951)
 எனவே இந்நோன்பை தெரிவு செய்யும் உரிமை நம்மிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிக நன்மை சம்பாதித்துக் கொள்ள விரும்புபவர் மேற்கண்ட ஹதீஸ்களை கவனத்தில் கொண்டு நோன்பு நோற்கவோ விடவோ முடியும்.
 இதை எப்போது நிறைவேற்ற வேண்டும்?
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபியவர்கள் மதீனாவிலிருந்த போது யூதர்கள் ஆஷ_ரா தினமன்று நோன்பு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த நபியவர்கள் இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் இது மகத்தான நாளாகும். அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தாரையும் பாதுகாத்து பிர்அவ்னையும் அவனைச் சேர்ந்தவர்களையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்துமுகமாக மூஸா(அலை) இத்தினத்தில் நோன்பு வைத்தார். அதனால் நாங்களும் நோன்பு வைக்கிறோம் என்றனர்;. அதற்கு நபியவர்கள் "மூஸா (அலை) அவர்களை மதிப்பதற்கு உங்களை விட நெருக்கமானவர்களும் அதிக தகுதியடையோரும் நாங்களே! என்று கூறி தானும் நோன்பு நோற்று ஏனையோரையும் ஏவினார்கள்" (புஹாரி:2004)
 நாங்களும் சுன்னாவைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் நபியவர்களை உயிரை விடவும் நேசிக்கிறோம் என்று பாசாங்கு செய்பவர்கள் இந்த யூதர்களை விடக் கேவலமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்று நாங்களும் மூஸாவை (அலை) நேசிக்கிறோம் என்று கூறிவிட்டு சும்மா இருக்கவில்லை. அதை செயல்படுத்தி (நோன்பு நோற்று) காட்டினார்கள். அதனால்தான் நபியவர்கள் அவர்கள் நோன்பு நோற்றிருப்பதைப் பார்த்து இன்று உங்களுக்கு என்ன நாள்? என்று கேட்கிறார்கள்.
 ஆனால் அல்லாஹ்வுக்காக ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கு சுன்னா என்றால் அது உயிரை விட மேலாகத்தான் இருக்கும். அதிலே நடிப்போ கலப்போ இருக்காது.
 எத்தனை நோன்புகள்?
முஹர்ரம் பிறை 9,10 (அதாவது கத்தாரில் வரும் 13ம் 14ம் தேதிகளில் புதன் வியாழன்) ஆகிய இரு தினங்களிள் நோற்க வேண்டும்.
 இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாவது: முஹர்ரம் 10-வது நாள் நபியவர்கள் நோன்பு நோற்று ஏனையோரையும் நோற்கும் படி ஏவிய போது ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே! அத்தினம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாகும் என்றனர். அதற்கு நபியவர்கள்: அப்படியானால் இன்ஷா அல்லாஹ்! வருகின்ற வருடம் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்போம் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன் நபியவர்கள் மரணித்து விட்டார்கள். மற்றுமொறு அறிவிப்பில் "நான் உயிருடனிருந்தால் 9-வது தினத்தையும் சேர்த்து நோன்பு வைப்பேன்" என்று கூறினார்கள். (முஸ்லிம்:1915,1916)
 இந்நோன்பின் சிறப்புக்கள்
  • இத்தினம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குறியதாகும்.
  • முன் சென்ற 1வருடத்தில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரம்.
  • மூஸா (அலை)யை கண்ணியப் படுத்துதல்.
  • யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்தல்.
ஆகியவை இந்நோன்புக்குரிய சிறப்பம்சங்களாகும்.
 இத்தினத்தில் செய்யக்கூடாதவை
குறிப்பாக "ஷீஆ"க்கள் (இஸ்லாத்தில் இல்லாத பிரிவினர்) இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து அதனைப் பிரகடனப்படுத்தியுள்ளனர். காரணம் இதே தினத்தில்தான் ஹுசைன் (ரழி) கர்பலா எனும் இடத்தில் கொல்லப்பட்டார்கள் அதனால் இது கவலைக்குரிpய தினம் என்று கருதி "யா ஹு சைன் யாஅலீ" என்றெல்லாம் கூறி தங்கள் முகங்களை தாங்களே செருப்பால் அறைந்து ஆடைகளை கிழித்து வாள் கத்தி போன்றவற்றால் தங்களது உடல்களை கீறி கிழித்து அதிலே இறப்பவர் உயிர்த்தியாகி என்று கருதி இப்படி செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இது மிக வண்மையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும். நபியவர்கள் கூறினார்கள்: "யார் கண்ணங்களில் அறைந்து கொண்டும் ஆடையை கிழித்துக் கொண்டும் அறியாமைக் காலத்தில் சொல்லும் வார்த்தைகளைக் கூறி அழைக்கிறாறோ அவர் முஹம்மதின் மார்க்கத்தைச் சேர்ந்தவரல்ல".(புஹாரி:1212)
 முஹம்மத் நபியின் மார்க்கத்தில் இல்லாமல் இருப்பவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள மேற்கூறிய ஹதீஸ் நல்ல அளவுகேளாக அமைந்துள்ளது. குறிப்பாக ஷீஆ"க்களையே பார்த்து கூறியதைப் போன்றுள்ளது.
 இன்னும் சிலர் எல்லா மதத்தவர்களுக்கும் புது வருடம் வருவது போன்று இஸ்லாத்தில் முஹர்ரம் வருகிறது. எனவே நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதி குளிக்கப் போய் சேத்தை அள்ளிப் பூசிய கதையாக மாரியுள்ளது. குறிப்பாக வாலிபக் கூட்டம் இதில் கலாச்சார மோகக் காற்றினால் சறுகுகள் போன்று ஆகிவிடுகின்றனர். இதற்கென வாழ்த்துக்களும் அதற்காக, இன்னும் அதை மெருகூட்ட மதுபானங்களும் பியர்களும் அவர்கள் இவ்வருடத்தை வரவேற்கிறார்களாம். கேவலம் என்னவோ இவர்கள் வரவேற்காவிட்டால் இந்த மாதம் வராமல் எங்கோ ஓடிப் போய் விடும் போலும்.
 இந்த வாலிபர்கள் நன்றாக விளங்கிக் கொள்ளட்டும்! இந்த மாதத்திலே இந்த நாளுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் தனிச் சிறப்பே தவிர இது புது வருடம் என்பதற்காக எந்தச் சிறப்பும் கிடையாது. இம்மாதத்தை வரவேற்கக் கூடாதா? அதில் என்ன தவறு? என்று நினைத்தால் உண்மையிலையே அம்மாதத்தை வரவேற்க விரும்பினால் முஹர்ரம் பிறை 9-ம் 10-ம் தினங்களில் வரும் நோன்பை நோற்றால் அதுவே போதும். இதற்காக வீண் செலவுகள் எதுவும் தேவை இல்லை. அதே போன்று யார் யாரெல்லாம் காதலர் தினம் பிறந்த தினம் இறந்த தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களோ அவர்கள் எதுவித சிரமமும் இன்றி எளிதாக பாவத்தை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொள்கிறோம் என்பதை நினைவில் இருத்தி கொள்ளட்டும்!
 அவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தில் போடப்படும் போதெல்லாம் உங்களுக்கு இது பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? என்று கேட்கப் படும்."(முலக்:8)
 அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.
அன்புடன்  அபூ அத்லாஃ


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, April 18, 2015

ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.
எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.
மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)
இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனிதர்களை இறைவன் படைக்கும் முன்பே ஜின் இனத்தை இறைவன் படைத்துவிட்டான். மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன்(இறைவன்) ஜின்களைப் படைத்தான்.       (அல்குர்ஆன் 55:15)
இந்த இனம் மனிதர்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்ததா…என்றால் சிலர் அப்படிக் கூறினாலும் அதற்கு தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆதம் (அலை) படைக்கப்பட்டு அவருக்கு ஸூஜூது செய்ய இறைவன் கட்டளையிட்டபோது ஷெய்த்தான் மறுத்து ஆணவம் கொண்டான் என்பதை நாம் அறிவோம். இப்லீஸ் – ஷெய்த்தான் போன்ற பெயர்களால் குறிப்படப்படும் அந்த மனிதமகா எதிரிகள் தனி படைப்பல்ல அவைகளும் ஜின் இனத்தை சார்ந்தவைகள்தான்.
(இப்லிஸாகிய) அவன் ஜின் இனத்தை சேர்ந்தவனவான். (அல் குர்ஆன் 18:50)
ஆதமுக்கு ஏன் ஸஜ்தா செய்யவில்லை என்பதற்கு ஷெய்த்தான் எடுத்து வைத்த வாதம், தான் ஜின் இனத்தை சார்ந்தவன் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
'நான் உனக்கு கட்டளையிட்ட போது நீ ஆதமுக்கு ஸஜ்தா செய்யாமல் உன்னை தடுத்தது எது.. என்று இறைவன் கேட்க, நான் ஆதமைவிட மேலானவன் நீ என்னை நெருப்பினால் படைத்தாய். அவரை மண்ணினால் படைத்தாய் என்று கூறினான். (அல் குர்ஆன் 7:12)
நான் நெருப்பால் படைக்கப்பட்டவன் என்று ஷெய்த்தான் சொன்னதிலிருந்து ஷெய்த்தானியக் கூட்டம் முழுவதும் ஜின் இனத்தை சேர்ந்தவைதான் என்பது தெளிவாகின்றது.
இந்த ஜின் கூட்டம் முழுவதும் மலக்குகளுடன் இருந்துள்ளார்கள் என்ற விபரத்தை ஆதமுக்கு ஸூஜூது செய்யுங்கள் என்று கூறும் இறைவசனங்களிலிருந்து – சிந்திக்கும் போது – விளங்கலாம்.
மலக்குகளை நோக்கி நாம் சொன்னோம் ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று. (அல் குர்ஆன் 2:34 இன்னும் பல இடங்களில் இந்த சம்பவம் இடம் பெறுகிறது)
நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள் என்று நாம் சொன்னோம்.             (அல் குர்ஆன் 2:38)
'அனைவரும் இறங்கி விடுங்கள்' என்ற வார்த்தை மலக்குகளை விடுத்து மற்ற ஜின் இனத்திற்கும் ஆதம் – ஹவ்வா ஆகிய மனித இனத்தவர்களுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
இதுவரை நாம் கண்ட விபரத்தின் சுருக்கும் என்னவென்றால்
மனிதர்களுக்கு முன்பே ஜின் இனம் படைக்கப்பட்டு விட்டது
அவர்கள் மலக்குகளுடனே இருந்துள்ளார்கள்.
ஷெய்த்தான் – இப்லீஸ் போன்ற தீய சக்திகள் அனைத்தும் ஜின் இனத்தை சார்ந்தவையாகும்.
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டதாகும்.
ஆதம் ஹவ்வா இருவருடனும் சேர்ந்து இவர்கள் பூமிக்கு இறங்குகிறார்கள்.
இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்துக் கொண்டும் இருக்கின்றன.
அவர்களுக்கும் இறைத்தூதர்கள் உள்ளனர்
(மறுமை நாளில் இறைவன் ஜின் – மனித கூட்டத்தாரை நோக்கி) ஜின் – மனித கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை படித்துக் காட்டவும், இந்நாளில் சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா…என்று (இறைவன்) கேட்பான். அதற்கு அவர்கள் நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சிக் கூறுகிறோம் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் இந்த உலக வாழ்வில் அவர்கள் மயங்கி நிராகரிப்பவர்களாகவே இருந்தது தான். (அல் குர்ஆன் 6:30)
ஜின் கூட்டத்தாரே உங்களிலிருந்தே உங்களுக்கு தூதர் வந்துள்ளார் என்று இறைவன் கூறுவதிலிருந்து ஜின்களுக்கு ஜின் இனத்திலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை விளங்கலாம். ஆனாலும் இவர்கள் மனித தூதர்கள் சிலரிடமும் அவர்கள் கொண்டுவந்த வேதத்திலும் பாடம் கற்றுள்ளார்கள்.
இவர்களுக்கு ஜின் இனத்திலிருந்து தூதர்கள் வந்தார்கள் என்பது முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு தான். முஹம்மத்(ஸல்) மனித குலத்திற்குறிய தூதராக மட்டுமில்லாமல் ஜின் இனத்திற்குறிய தூதராகவும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த குர்ஆன் மனித – ஜின் ஆகிய இரு இனங்களுக்கும் பொதுவானதாகும்.
இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் – வேதங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்தே மனித சமூகம் போன்று ஜின் இனமும் ஒரு பெரிய சமூகமாக ஆண் – பெண், சந்ததி பெருக்கம், பிறப்பு வாழ்வு, இறப்பு என்று மனித இயல்பில் பெரும் பகுதி கொடுக்கப்பட்டவை ஹராம் – ஹலாலுக்கு உட்படுத்தப்பட்டவை என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்களுடன் நடந்த சந்திப்பு.
(நபியே) இந்தக் குர்ஆனை செவியேற்பதற்காக ஜின்களிலிருந்து சிலரை நாம் உம்மிடம் திருப்பியதும் அவர்கள் அங்கு வந்தபோது மௌனமாக இருங்கள் என்று(உடனிருந்தவர்களிடம்) சொன்னார்கள். குர்ஆன் படிப்பது முடிந்ததும் தம் சமூகத்தாரிடம் சென்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர். (அல் குர்ஆன் 46:29)
(ஜின்கள்) கூறினார்கள் 'எங்களுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தை செவிமடுத்தோம். அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கிறது. தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப் படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் – நேரான மார்க்கத்தின் பக்கமும் (நமக்கும் சேர்த்து) வழிக்காட்டுகிறது.(அல் குர்ஆன் 46:30)
எங்களுடைய கூட்டத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து அவரை ஈமான்(நம்பிக்கைக்) கொள்ளுங்கள். இறைவன் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பான். நோவினைத் தரும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான் என்றும் கூறினார்கள் (அல் குர்ஆன் 46:31)
ஆனால் எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்கவில்லையோ அவரால் பூமியில் (சத்தியத்தை)இயலாமலாக்க முடியாது. அவனையன்றி பாதுகாப்போர் எவருமில்லை. (அல் குர்ஆன் 46:32)
இது நபி(ஸல்) தாயிபிலிருந்து திரும்பும் வழியில் குர்ஆனை ஓதி வரும் போது ஜின்கள் செவியேற்று அவர்களை விசுவாசித்த சம்பவமாகும். இந்த சந்தர்பத்தில் ஜின்கள் தம்மிடம் வந்ததையோ – குர்ஆனை சேவியேற்று சென்றதையோ நபி(ஸல்) அறியவில்லை. பின்னர் இறைவன் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். இதை 72 வது அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்திலிருந்து அறியலாம். மேலும் அந்த அத்தியாயத்தில் இறைவனுக்கு இணை கற்பித்து முஷ்ரிக்குகளாகவும் – காபிர்களாகவும் இருக்கும் ஜின்கள் பற்றியும் படைத்த ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு ஏகத்துவத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழும் ஜின்கள் பற்றிய விபரமும் கூறப்பட்டுள்ளது.
46:30 வது வசனத்தில் மூஸாவிற்கு பிறகு இது இறக்கப்பட்டுள்ளது என்ற ஜின்களின் கூற்றிலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள முக்கிய நபிமார்களையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களையும் ஜின்கள் அறிந்திருந்தனர் என்பதையும் அவற்றின் மீது நல்ல ஜின்கள் விசுவாசம் கொண்டிருக்கக் கூடும் என்பதையும் விளங்கலாம்.
ஜின்களுக்கும் தூதுத்துவ செய்தியை எடுத்துக் கூறும் பொறுப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டப் பிறகு ஜின்களின் பிரதிநிதிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து – அழைத்து சென்ற விபரம் முஸ்லிம் – திர்மிதி – அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஜின்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்த இரவில் அந்த சந்திப்பில் தாமும் கலந்துக் கொண்டதாக கூறும் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள். அந்த இரவில் ஜின்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவத்தையும் – ஜின்களின் காலடி சுவடுகள் – அவர்கள் சமைத்த பாத்திரங்கள் – அடுப்புகள் குறித்தும் அறிவிக்கிறார்கள்.(திர்மிதி 3311)
இந்த சந்திப்பிற்கு பிறகு தான் நபி(ஸல்) கீழ் கண்ட அறிவிப்பை செய்கிறார்கள்.
நீங்கள் மல ஜலம் கழித்தால் விட்டை மற்றும் எலும்பால் சுத்தம் செய்யாதீர்கள் ஏனெனில் அவை உங்கள் சகோதர ஜின்களின் உணவாகும். (அபூஹூரைரா – இப்னு உமர் – ஜாபிர் போன்ற நபித்தோழர்கள் இந்த செய்தியை அறிவித்து இதில் உடன் படுகிறார்கள். முஸ்லிம் – திர்மிதி – அபூதாவூத் – ஹாக்கிம்)
ஜின்களும் – சுலைமான் (அலை) அவர்களும்.
தாவூத்(அலை) அவர்களின் மகனான சுலைமான்(அலை) அவர்களுக்கு இறைவன் வல்லமை மிக்க அரசாங்கத்தையும் – ஆற்றல் மிகுந்த வலிமையையும் – மெய் சிலிர்க்கக் கூடிய மொழியாற்றலையும் கொடுத்திருந்தான். இவற்றிர்க்குரிய ஆதாரங்களை முதலில் அறிவோம்.
சுலைமானுக்கு நாம் கடுமையாக வீசும் காற்றையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அது அவரது ஏவலின் படி பாக்கியம் பொருந்திய பூமிகளுக்கு அவரை எடுத்துச் செல்லும். (அல் குர்ஆன் 21:81)
ஷைத்தான்களிலிருந்து கடலில் மூழ்கி(முத்தெடுத்து) வரக் கூடியவர்களை வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 21:82)
சுலைமானுக்கு ஜின்கள் – மனிதர்கள் – பறவைகள் ஆகியவற்றிலிந்து படைகள் திரட்டப்பட்டு அவை தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. (அல் குர்ஆன் 27:17)
எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஒரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ஓ! எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுக்குள் நுழைந்துக் கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாத விதத்தில் உங்களை நசுக்கி விடாதிருக்க… என்று கூறிற்று. இதைக் கேட்டு (சுலைமான்) அவர் புன்னகைத்தார் (அல்
சுலைமானுக்கு காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம் அதன் காலை பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகி ஓட செய்தோம். ஜின்களில் உழைப்பவற்றிலிருந்து அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். (அல் குர்ஆன் 34:14)
இந்த வசனங்கள் அனைத்தும் சுலைமான்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அருட்கொடையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. அவருக்கு மட்டும் இப்படிப்பட்ட அருட்கொடை கிடைக்கக் காரணம் என்ன?
அவர்கள் இறைவனிடம் முறையிட்ட முறையீடுதான்!
எனக்கு பின்னர் எவருமே அடைய முடியாத ஒரு அரசாங்கத்தை எனக்கு அன்பளிப்பாக கொடுப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய் என்று கூறினார்           (அல் குர்ஆன் 38:35)
சுலைமான் நபி அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அவர்களுக்கு பின் எவருமே அடைய முடியாத பெரும் அரசாங்கத்தை அவர்களுக்கு வழங்கினான். அதற்குரிய ஆதாரங்களைத் தான் மேலே கண்டோம். அந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்ததில் ஜின்களும் அடங்கும். பலசாலியான ஜின்கள் – முத்துகுளிக்கும் ஷைய்த்தான்கள் எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்தன.
வீட்டிற்கு வரும் – ஜின்கள் – பாம்புகள்
ஜின் என்ற அரபு பதத்திற்கு – மறைவானது – என்று பொருள். ஜின் என்ற படைப்பு கண்ணுக்குப் புலப்படாததாக இருப்பதால் அவற்றிர்க்கு அந்தப் பெயர் வந்தது. சில உயிரினங்கள் உருமாற்றம் பெரும் தன்மையைப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். அதே போன்று ஜின்களும் பல வடிவங்களில் உருமாற்றம் பெரும் சக்தியைப் பெற்றதாகும்.
ஜின்கள் மூன்றுவகைப்படும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
1) பாம்பு வடிவில் உள்ளவைகள். 2) (கண்ணுக்கு புலப்படாமல்) பூமியில் வாழ்பவை 3) ஆகாயத்தில் பறப்பவை. (அபூ தஅல்பா (ரலி) ஹாக்கிம்)
பொதுவாக பாம்பினத்தை ஜின்கள் என்று குறிப்பிடலாம் இதற்கு குர்ஆனில் ஆதாரம் கிடைக்கிறது. (பார்க்க 27:10)
பாம்புகள் அனைத்தும் ஜின்கள் இல்லை ஆனால் ஜின்களில் சிலது பாம்புகளிலும் அடங்கும். இதை கருத்தில் கொண்டுதான் வீட்டில் உலவும் பாம்புகளை எடுத்தவுடன் அடித்து விட வேண்டாம் ஏனெனில் அவை ஜின்களாகக் கூட இருக்கலாம் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
ஜின்கள் கடும் விஷம் உள்ள பாம்புகளின் உருவில் இருக்காது என்பதால் கடும் விஷம் உள்ள பாம்புகளை எங்கு கண்டாலும் உடனே அடித்து விட வேண்டும்.
நபி(ஸல்) மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருக்கும் போது "பாம்புகளைக் கொள்ளுங்கள் – முதுகில் வெள்ளைக் கோடுள்ள பாம்பையும் – குட்டையான சிதைந்த வாலுள்ள பாம்பையும் கொள்ளுங்கள் அவை இரண்டும் கண் பார்வையை அழித்து விடும்" என்றார்கள். (இப்னு உமர்(ரலி) புகாரி 3297)
விஷமுள்ள பாம்புகளை நபி(ஸல்) குறிப்பட்டுக் காட்டியதிலிருந்து அத்தகையப் பாம்புகளை காலம் கடத்தாமல் அடித்து விட வேண்டும். நல்லப் பாம்பை அடிக்காமல் விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் இந்த ஹதீஸ் கட்டுப்படுத்தாது. அவை கட்டாயம் அடிக்கப்பட வேண்டிய பாம்புகளாகும்.
வீட்டில் தென்படும் பாம்புகளில் ஜின்களும் அடங்கும் அதனால் அதை உடனே அடிக்காமல் போய்விடு என்று கூறுங்கள் மூன்றுமுறை கூறியும் போகாவிட்டால் அதை அடியுங்கள் என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (அபூ லுபாபா(ரலி) புகாரி 3298 – முஸ்லிம்)
பாம்புக்கு காது கேட்குமா… தமிழ் அறியுமா… என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமல்லை. பாம்புக்கு செவி புலன் கிடையாது என்பது உண்மைதான். பாம்புக்கு தான் செவி புலன் கிடையாதே தவிர பாம்பு வடிவில் வரும் ஜின்னுக்கு செவிபுலன் உண்டு. "போய்விடு" என்ற அறிவிப்பு ஜின்னுக்குத் தானே தவிர பாம்புக்கு அல்ல. நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் பொய் இருக்காது என்பதால் எந்த மொழியில் சொன்னாலும் ஜின்களுக்கு விளங்கும் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுலைமானுக்கு கட்டுப்பட்டதாக இருந்தால் போய் விடு என்று ஹதீஸ் இருப்பதாக நாம் அறிந்தவரை தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அவ்வாறு நபி(ஸல்) சொல்லி இருக்க முடியாது என்று புரிந்துக் கொள்ளலாம்.
சுலைமான்(அலை) அவர்களுக்கு ஜின்கள் கட்டுப்பட்டன என்பது உண்மை. இந்த கட்டுப்பாடு எதுவரை நீடித்தது? அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தான் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இதை நாமாக சொல்லவில்லை. குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்.
(சுலைமான்) அவர் மீது நாம் மரணத்தை விதித்த போது அவரது கைத் தடியை அறித்த நிலத்து பூச்சி (கரையான்)யைத் தவிர வேறெதுவும் ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழவே 'மறைவான விஷயங்களை நாம் அறிந்திருந்தால் இழிவு தரும் இந்த கடின வேலையில் நீடித்திருக்கத் தேவையில்லை என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (அல்குர்ஆன் 34:14)
சுலைமான் (அலை) இறந்து அது ஜின்களுக்கு தெரிய வந்ததும் அவரது கட்டுப்பாட்டிலிருந்து ஜின்கள் விடுபட்டு விட்டன என்பதை இந்த வசனம் தெளிவாக அறிவித்து விடுகிறது. எனவே இன்றைக்கும் ஜின்கள் சுலைமானுக்கு (அலை) அவர்களுக்கு கட்டுப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். (ஜின்கள் கட்டுப்படுவதாக இருந்தால் அவற்றிர்க்கு கட்டளையிட சுலைமான் (அலை) உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையென்றால் ஜின்களுக்கு கட்டளையிடுவது யார்?)
ஒரு வேளை இன்றைக்கும் கட்டுப்படுவதாகவே வைத்துக் கொள்வோம் – ஒரு பேச்சுக்குதான் – வைத்துக் கொள்வோம்.
பிறரது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிர்க்கு நாம் எப்படி ஆர்டர் போட முடியும்.
ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் ஆசிரியரைப் பார்த்து மாணவன் நீங்கள் தலைமையாசிரியருக்கு கட்டுப்பட்டவராக இருந்தால் எனக்கு அதிக மார்க் போடுங்கள் என்கிறான்.
முகலாய மன்னர்களுக்கு நீங்கள் கட்டுப்படுபவர்களாக இருந்தால் எங்களுக்கு வரி கொடுங்கள் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள்.
இதுவெல்லம் அறிவுப்பூர்வமான வாதம் என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். சுலைமான்(அலை) அவர்கள் பற்றிய நிலையும் அப்படித்தான். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் யாராவது இப்படி சொல்லி இருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கும். அவர்கள் மவுத்தாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி சொல்வது எந்த வகையிலும் பொருந்தவில்லை.
இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் மட்டும் வசப்பட்டு இருக்கவில்லை. காற்றும் வசப்பட்டிருந்தது. இன்றைக்கு வேகமாக புயல் காற்று வீசும் போது "நீ சுலைமானுக்கு கட்டுப்பட்டால் வீசாமல் நின்று விடு" என்று யாராவது சொல்ல முடியுமா… ஜின்களுக்கு ஒரு நியாயம் காற்றுக்கு ஒரு நியாயம் கற்பிக்க முடியாது.ஏனெனில் இரண்டும் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டது தான்.
சுலைமானுக்கு கட்டுப்பட்டால் என்று ஹதீஸ் இருப்பதாக யாராவது கூறினால் ஹதீஸ் என்னையும் அது இடம் பெறும் நூலையும் கேளுங்கள் முடிந்தால் அந்த காப்பியை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஜின்கள் பற்றி ஓரளவு இந்தக் கட்டுரையில் விளக்கியுள்ளோம். ஜின்களை வசப்படுத்த முடியுமா… போன்ற மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்கள் எங்களுக்கு எழுதலாம். (இறைவன் மிக்க அறிந்தவனாக இருக்கிறான்)
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, April 16, 2015

பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)

பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)


01) மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.
(ويسئـلونك عن المحيض قل هواذى فاعـتزلواالنساءفى المحيض ولاتـقربوهن حتى يـتهرن (2:222)
'இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்'அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்'
எனவே அல்லாஹ் இங்கு மாதவிடாயானது தூய்மையற்ற நிலை என்றும், அவள் சுத்தமாகும் வரை அவளுடன் உடலுறவு கூடாது என்றும் கூறுகிறான். அத்துடன் இதற்கான கால எல்லையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறாததால் ஒவ்வொரு பெண்ணும் தாம் முழுமையாக சுத்தமாகும் வரை தொழுகை, நோன்பு, உடலுறவு போன்றவைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.
மாதவிடாய் உண்டான பெண்ணுக்கு எந்த வகையான நோன்பும் நோற்க அனுமதி இல்லை, ஆனால் விடுபட்ட பர்ளான நோன்பை சுத்தமானதும் கட்டாயம் நோற்க வேண்டும். விடுபட்ட தொழுகையை தொழ வேண்டியதில்லை.
'நாம் இதனை(மாதவிடாய் காலத்தை)க் கடந்தோம், அப்போது நாம் எமது நோன்பை பூர்த்தி செய்யும்படி பணிக்கப்பட்டோம் ஆனால், தொழுகையை பூர்த்தி செய்ய வேண்டும் எனப் பணிக்கப்படவில்லை'.(முஸ்லிம்)
'மாதவிடாய் உண்டான பெண்ணும் ஜனாபத்துடன் இருக்கும் ஒருவரும் குர்ஆனிலுள்ள எதையும் ஓதக் கூடாது' எனும் ஹதீஸ் பலயீனமானது. இதை ஆதாரமாக எடுத்து செயல்பட முடியாது.குர்ஆன் ஓத கூடாது என்றிருந்தால் நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருப்பார்கள், அல்லாஹ்வோ, அவனது தூதரோ தடை செய்யாததை எமக்கு தடை செய்ய முடியாது,
'எனக்கு மாதவிடாய் உண்டாகியிருந்த போது நபி(ஸல்) அவர்கள் என் மடியில் சாய்ந்திருந்து குர்ஆன் ஓதினார்கள்' (புகாரி 297)
மாதவிடாய் உண்டான பெண்கள் தவாஃப் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா(ரலி) ஹஜ்ஜின் போது மாதவிடாய் உண்டாகி இருந்தார்கள். அவர்களை பார்த்து நபி(ஸல்) இவ்வாறு கூறினார்கள், 'ஒரு யாத்ரீகர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள் ஆனால் கஃபாவை வலம் வருவதை மாத்திரம் நீங்கள் சுத்தமாகும் வரை செய்யாதீர்கள்'
 (புகாரி)
பள்ளிவாயலில் மாதவிடாய் பெண்கள் தங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
'மணமாகாத இளம் கன்னிகளும், மாதவிடாய் உண்டான பெண்களும், பெருநாள் தினத்தில் நற்காரியங்களில் பங்கெடுக்க வேண்டும்' என கூறிய நபி(ஸல்) அவர்கள், 'ஆனால்இ,மாதவிடாய் உண்டான பெண்கள் முஸல்லாவை (தொழும் இடத்தை) விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்' என முடித்தார்கள். (புகாரி)
கணவர் தன் மாதவிடாய் உண்டான மனைவியுடன் தடுக்கப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளை முத்தமிடவும், கொஞ்சிக் குலாவவும் அனுமதியுண்டு.
' அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள், நபியவர்கள் (எனது மாதவிடாயின் போது) ஓர் இஷாரை (இடைக்கு கீழ் அணியும் ஆடை) அணிந்து கொள்ளும்படி கட்டளையிட்டு, அதன் பின் என்னுடன் குலாவுவார்கள்' (புகாரி)
மாதவிடாய் உண்டான பெண் கணவனுக்குறிய கடமைகளை செய்ய வேண்டும்
'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்' என்றார்" என ஹிஷாம் அறிவித்தார்.(புகாரி)

ஒருவர் தனது மனைவியை மாதவிடாய் உண்டாகி இருக்கும் போது விவாகரத்து செய்யமுடியாது.

(
إِذَاطَـلّقْـتُمُ النِّسـاءفَطلّـقوهُنَّ لِعِدّتِهِنَّ (65:01) 

'நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக
 விவாகரத்து செய்யுங்கள்.

அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்கள், மாதவிடாய் உண்டாகி இருந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிக்கிறார்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறுகின்றார். 'அப்போது நபி(ஸல்) அவர்கள், அவருக்கு (உங்கள் மகனுக்கு) கட்டளையிடுங்கள், அவளை திரும்ப எடுத்து, அவள் சுத்தமாகும் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் அடுத்த மாதவிடாய் உண்டாகி சுத்தமாகும்வரை காத்திருக்கும்படி கூறுங்கள். அதன் பின்னர் அவர் அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்பினால், அவ்வாறு செய்துகொள்ளலாம். சிலவேலை அவர் அவளை விவாகரத்து செய்ய விரும்பினால் அவளுடன் உடலுறவுகொள்வதற்கு முன்னர் விவாகரத்து செய்யலாம். இதுதான் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வதற்கு அல்லாஹ்
 விதித்துள்ள கால வரையாகும்'. (புகாரி)
தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் பொறுத்திருக்க வேணடும். (2:228)
இத்தாவுடைய பாடத்தில் விரிவாக பார்க்கலாம் (இன்ஷா அல்லாஹ்)

02).இஸ்திஹாதாத்
இது மாதவிடாயிலிருந்து வித்தியாசமாகும். இஸ்திஹாதாத் என்பது ஒரு பெண்ணுக்கு தொடராக வெளிவரும் இரத்தம். இந்நிலையில் அவள் மீது தொழுகை, நோன்பு, கடமையாகும் என்பதனை அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கும் பின்வரும் ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
'எனக்கு (மாதவிடாய் காலங்களில்) நிற்காது இரத்தம் வெளிவருகின்றது. ஆதனால் நான் சுத்தமாக இல்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா? என பாத்திமா பின்த் அபீ ஹுபைஸ் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' அது ஓர் இரத்த நாலத்தலிருந்து வருவதாகும். நீர் வழமையாக மாதவிடாய்உண்டாகும் நாட்களுக்கு மட்டும் தொழுகையை விட்டுவிடும் பின்னர் குளித்துவிட்டு தொழுகையை மேற்கொள்ளும்' என்றார்கள்(புகாரி)

உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள், "இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்" என்று கூறினார்கள். (நூற்கள்: அபூதாவூத், இப்னுமாஜா)

எனவே உதிரப்போக்குடையவள் வழமையாக மாதவிடாய் காலத்தை தவிர்ந்த ஏனைய காலங்களில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்ளவேண்டும்
03. நிஃபாஸ்
பிரசவத்திற்கு பின்னோ அல்லது பிரசவத்திற்கு சற்று முன்னோ வெளியாகும் இரத்தத்தையே நிஃபாஸ் என்பர். பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கும் மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான். இவ்வாறு வெளியாகும் இரத்தம் இத்தனை நாட்கள்தான் என்று குறிப்பிட்டு கூற முடியாது. பிரசவத்திற்கான காலவரை 40 நாட்கள் என்று பதிவாகியுள்ள ஹதீஸ் பலவீனமானதாகும். ஒரு முஸ்லிம் ஆதாரமான ஹதீஸ்களை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பதால் இதன் படி செயற்பட முடியாது எமக்கு எப்போது இரத்தம் வெளிவருவது நிற்கின்றதோ அப்போது முதல் எமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அது 30, 40, 60, 80, நாட்களாகவோ இருக்கலாம். 40 எடுத்தல் என்ற பெயரில் பல சடங்குகளை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
• 40 கழியும் வரை உ றவினர் வீட்டுக்கு அழைக்காமை
• அவ்வாறு யாரும் சென்றால் அந்த வீட்டைக் கழுவுதல்
• 40 ஆம் நாள் சாப்பாடு

இவையெல்லாம் இஸ்லாம் காட்டித்தராத வழி முறைகள். இவைகளை கட்டாயமாக புறக்கனிக்க வேண்டும்.
04.கடமையான குளிப்பு

மாதவிடாய் உண்டான ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமானதும் குளிப்பது கட்டாயக் கடமையாகும்.

'மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எவ்வாறு குளிப்பது?

மர்மஸ்தலத்தை கழுவவேண்டும் பின்னர் தொழுகைக்கு உழூச் செய்வது போன்று செய்துவிட்டு கால்களை கழுவ முன் குளித்துவிட்டு சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவவேண்டும்.
 
'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உழூச் செய்வது போன்று உழூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
 (புகாரி 249)
கடமையான குளிப்பு குளிக்கும் போது தலையையும் உடலையும் நன்றாக தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி எமக்கு கிடைப்பது அறிதாகவுள்ளதால் வாசனையுள்ள சோப் (soap) பயன்படுத்திக்கொள்ளலாம்
'உங்களில் ஒவ்வொருவரும் ஸித்ர் மரத்தின் (இலைகள் கலந்த) நீரைப் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் நீரை ஊற்றி மயிரின் வேரை சென்றடையும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் அவள் தனது தலையில் (நீரை) ஊற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு கஸ்தூரி கலந்த பருத்தித் துன்டொன்றை எடுத்து அதன் மீது சுத்தம் செய்து கொள்ள வேண்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இ அப்போது 'அதைக் கொண்டு எவ்வாறு சுத்தம் செய்வது? என்று வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ் என்று அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். இரத்த அடையாளங்கள் நீங்கும் வரை சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்'(ஸஹீஹ் முஸ்லிம்)


'அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?' எனக் கேட்டார். 'கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து நீ சுத்தம் செய்' என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வெட்கப்பட்டுத் தங்களின் முகத்தைத் திருப்பினார்கள். அல்லது 'அதைக் கொண்டு நீ சுத்தம் செய்' என்று கூறினார்கள். அப்போது நான் அந்தப் பெண்ணைப் பிடித்து என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் இழுத்து நபி(ஸல்) அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதை அவளுக்கு விளக்கினேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(புகாரி)

மாதவிடாய் உண்டான பெண் தனது தலை முடியின்; அடிப்பாகம் வரை நீர் செல்வதை தடுக்கும் வகையில் முடியை நெருக்கமாக பின்னிடாத வரையில் முடியை அவிழ்த்து விடுவது கடமையில்லை.
'நான் தலை முடியை நெருக்கமாக பின்னிவிட்ட ஒரு பெண் எனவே உடலுறவு கொள்வதனால் (மாதவிடாய் உண்டான) குளிப்பதற்கு பின்னிவிடப்பட்ட முடியை அவிழ்த்து விட வேண்டுமா? என்றுகேட்டேன். இல்லைநீங்கள்' மூன்று முறை கை நிறைய நீரை எடுத்து உங்கள் தலையில் ஊற்றிக் கொண்டால் போதுமானது. பின்னர் உங்கள் மீது நீரை ஊற்றுங்கள். இவ்வாறு நீங்கள் சுத்தம் அடைவீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
மாதவிடாய் உண்டான ஒரு பெண் குறிப்பட்ட தொழுகைக்குறிய வேலையில் சுத்தமடைவாளாயின் உடனே குளித்து தொழுது கொள்ள வேண்டும். சில வேலை பயணத்தில் இருக்கின்றால் நீர் கிடைக்கவில்லை அல்லது நீரை பயன்படுத்தினால் தீங்கு(நோய்) ஏற்படும் என்ற அச்சம் இருந்தால் அவள் தயம்மும் செய்துகொள்ளலாம்.
குளிரான ஓர் இரவில் அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களுக்குக் குளிப்புக் கடமையானபோது அவர்கள் தயம்மும் செய்து 'உங்கள் ஆத்மாக்களை நீங்கள் கொலை செய்தீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மீது இரக்கமுடையவனாக இருக்கிறான்" (திருக்குர்ஆன் 04:29) என்ற இறைவசனத்தை ஓதினார்கள். இந்த விஷயத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது அவர்கள், அவரை குறையேதும் கூறவில்லை. (புகாரி)


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, April 14, 2015

தயிர்சாதமா! ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்! தயிரின் அற்புதங்கள்


''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்' உணவு என்று சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி. 

ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
''இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ' மற்றும் 'லாக்டோ' என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.

 நன்மைகள்

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

 உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.

 தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.

 உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

 கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

 சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

 கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, April 12, 2015

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
1. பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி ஜமாஅத்துடன் கடமையான தொழுகையை தொழாமல் பள்ளியிலிருந்து வெளியேறுவது இஸ்லாமிய ஒழுக்கங்களைச் சார்ந்ததல்ல.
. 1521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِى الشَّعْثَاءِ قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-..مسلم
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத் தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூ ஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியி லிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521
2. பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது
470- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ قَالَ : كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ فَجِئْتُهُ بِهِمَا قَالَ مَنْ أَنْتُمَا ، أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم. بخاري
நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித் தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இரு வரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர் களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .
3 விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்
1081 – حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنِ ابْنِ عَجْلاَنَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- نَهَى عَنِ الشِّرَاءِ وَالْبَيْعِ فِى الْمَسْجِدِ وَأَنْ تُنْشَدَ فِيهِ ضَالَّةٌ وَأَنْ يُنْشَدَ فِيهِ شِعْرٌ وَنَهَى عَنِ التَّحَلُّقِ قَبْلَ الصَّلاَةِ يَوْمَ الْجُمُعَةِ.ابو داود
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்கு வதையும், தவறிப்போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார், நூல்: அபூ தாவூத் 1081.
4. பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
415- حَدَّثَنَا آدَمُ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : حَدَّثَنَا قَتَادَةُ قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا.مسلم
பள்ளியில் காரி உமிழ்வது பாவம் அதற்கு பரிகாரம் அதைப் பொதைத்து விடுவ தாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் கூறினார்கள். புகாரி 415, முஸ்லிம் 1259.
5. பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொலை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.
1282 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِى عَطَاءٌ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الثُّومِ – وَقَالَ مَرَّةً مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ.مسلم
இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் – மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் கூறினார்கள்.முஸ்லிம் 1282.
6. பள்ளிக்குள் செல்பவர் பள்ளியின் காணிக்கையான இரண்டு ரகஅத்துகளை தொழுது விட்டு அமர்வது சுன்னத்தாகும்
444- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ.بخاري
உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத் துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள். புகாரி 415.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com