Sunday, August 26, 2012

மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!


மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, "தலை வலிக்கிறது' என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.

மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன. உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, "ஆன்டாசிட்' மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.

கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது. காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

 

--
*more articles click*
www.sahabudeen.com



நபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்

நபிமார்கள் பற்றிய அரிய தகவல்கள்

நபிமார்கள் மனிதர்களில் மாண்புடையவர்கள்.இவர்கள் அல்லாஹ்வின் வாக்கே உலகில் மேலானது. இறைவனல்லாத ஏனையோரின் வாக்கு கீழானது என்னும் தாரகமந்திரத்தை தம் மூச்சாகக் கொண்டு செயல் பட்டவர்கள் . மக்களை அறியாமை இருளிலிருந்து ஒளியின் பால் அழைப்பதற்காக பாடுபட்டவர்கள். அவர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்றவர்களும் உண்டு. ஏற்காதவர்களும் உண்டு. ஏற்காதோர் இறைத் தண்டனைக்கு ஆளாகி அழிந்தனர். ஓரிறைக் கொள்கையை உலகில் பிரச்சாரம் செய்த அந்த உத்தமர்கள் பற்றிய அரிய தகவல்களை வினா விடைவாயிலாக கீழே காண்போம்.

1. (மர்யம் பின்த் இம்ரான்) இம்ரானின் மகள் மர்யத்தை வளர்ப்பதற்கு பொறுப்பேற்றவர்
யார்?
நபி ஸகரிய்யா ( அலை).

2. மூஸா (அலை) அவர்களின் அமைச்சராகச் செய்ல்பட்டவர் யார்?
ஹாரூன் (அலை).

3. மீனால் விழுங்கப்பட்ட இறைதூதர் யர்?
நபி யூனுஸ் ( அலை).

4. யூஸுஃப் (அலை) அவர்களின் உடன் பிறந்த சகோதரர் யார்?
புன்யாமீன்.

5. தந்தையில்லாது பிறந்த இறைதூதர் யார்?
நபி ஈஸா(அலை)

6. எந்த இறைதூதரின் மகன் (காஃபிர்) இறை நிராகரிப்பாளன்?
நூஹ் நபியன் மகன்.

7. எந்த நபியின் தந்தை (காஃபிர்)இறை நிராகிப்பாளன்?
நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தந்தை.

8. தான் உழைக்காமல் உண்ணமாட்டார். அந்த நபி யார்?
நபி தாவூது (அலை)

9. தாவூது நபியின் நோன்பு எவ்வாறிருந்தது?
ஒருநாள் நோன்பிருப்பார். மறுநாள் நோன்பை விட்டுவிடுவார்.

10. நீண்ட காலம் நோயுற்று பொறுமை காத்த நபி யார்?
நபி அய்யூபு (அலை)

11. கொடுங்கோலன் பிர்அவ்னிடம் "நீங்கள் இருவரும் சென்று பிரச்சாரம் செய்யுங்கள்!"
என்று யாருக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான்?
மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய இருவருக்கும்.( 20:43)

12. யூனுஸ் (அலை) எந்த மக்களுக்கு இறைதூதராக அனுப்பப்ட்டார்கள்?
நீனவா மக்களுக்கு.

13. எந்த நபியை நம்ரூத் மன்னன் நெருப்புக் குண்டத்தில் போட்டான்?
நபி இப்றாஹீம் (அலை) அவர்களை.

14. ஈஸா நபியவர்கள் எந்த சமூயத்திற்கு நபியாக அனுபப்பட்டார்கள்?
பனீ இஸ்ரவேலர்களுக்கு!

15. சிறையிலடைக்கபட்ட இறை தூதர் யார்? நபி யூஸுஃப் (அலை).

16. "இப்னுத் தபீஹைன்"(அறுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரின்) மகன் யார்?
நபி முஹம்மது (ஸல்). (இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயீலும், அப்துல் முத்தலிபின் மகன்
அப்துல்லாஹ்வும் பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்).

17. "கலீலுல்லாஹ்" (இறைவனின் உற்ற நண்பர்) என அழைக்கப்பட்டவர் யார்?
நபி இப்றாஹீம் (அலை)

18. "கலீமுல்லாஹ்" (இறைவனிடம் உரையாடியவர்) என அழைக்கப்படுபவர் யார்?
நபி மூஸா (அலை)

19. "ஹபீபுல்லாஹ்" ( இறைவனின் நேசத்தை அதிகம் பெற்றவர்) யார்? நபி முஹம்மத் (ஸல்)

20. "தபீஹுல்லாஹ்" ( பலியிட அழைத்துச் செயல்லப்பட்டவர்) யார்?
நபி இஸ்மாயீல் (அலை)

21.ரூஹுல்லாஹ் ( இறைவனால் ரூஹ் ஊதப்பட்டவர்) யார்?
நபி ஈஸா (அலை).

22. அபுல் பஷர் ( மனிதத்தந்தை) யார்.
முதல் மனிதர் ஆதம் (அலை).

23. அபுல் அன்பியா (நபிமார்களின் தந்தை எனப்படுபவர் யார்?
நபி இப்றாஹீம் (அலை). இவர்களிலிருந்தே அதிகமான நபிமார்கள் தோன்றியதால் இவ்வாறு
அழைக்கப்படுகின்றனர்.

24.நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கிணற்றில் எறியப்பட்டு எத்தனை நாட்கள் அங்கே
இருந்தனர்?
மூன்று நாட்கள்.

25. நபி யூஸுஃப் (அலை) அவர்கள் எத்தனை நாட்கள் சிறவைக்கப்பட்டனர்?
ஏழு வருடங்கள்.

26. எந்த மலையில் வைத்து நபி மூஸா (அலை) அவர்களிடம் இறைவனிடம் பேசினான்?
தூர்ஸீனா மலையில் .(2:63)

27. நபி ஹூது (அலை) அவர்கள் எந்த சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள்?
ஆது மக்களுக்கு!

28. ஷுஐபு (அலை) அவர்கள் எந்த மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்?
மத்யன் மக்களுக்கு!

29. ஹாரூன் (அலை) அவர்கள் எதில் சிறந்து விளங்கினர்?
நாவன்மையில் (ஃபஸாஹத்துல் லிஸான்)

30. அறிஞர் கிள்ரை காண்பதற்காக மூஸா (அலை) அவர்களுடன் சென்ற இளைஞர் யார் ?
யூஷஃ பின் நூன்.

31. இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்பிலிட்ட மன்னன் யார்? அவன் எவ்வாறு
அழிக்கப்பட்டான்?
நம்ரூத் என்னும் கொடியவன். மூக்கு வழியாகக் ஒரு கொசுவை அனுப்பி அதன்
கொடுமையால் அழிக்கப்பட்டான்.

32. தமூத் மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர் யார்?
நபி ஸாலிஹ் (அலை).

33. தாவூது (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?
ஸபூர் வேதம்.

34. நூஹ் நபியின் கப்பல் ஒதுங்கி நின்ற மலை எது?
ஜூதி மலை.(அல்-குர்ஆன் 11:54)

35. மகன்,தந்தை,பாட்டனார் மூவரும் இறைதூதராக இருந்தனர், அவர்கள் யார்?யூஸுஃப்
அவர் தந்தை யஃகூபு, அவர் தந்தை இப்றாஹீம் ஆகியோர் இறை தூதர்களாவர்.

36. மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?
தவ்ராத் வேதம்.

37. ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம்?
இன்ஜீல் வேதம்.

38. ஈஸா (அலை)அவர்களின் தோழர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?ஹவாரிய்யூன்.(3:52)

39.மன்னன் ஜாலூத்தை கொன்ற நபியார்?
நபி தாவூது (அலை) (2:251)

40.தச்சராக வேலை செய்த நபி யார்?
ஸகரிய்யா (அலை).

37.ஈஸா (அலை) அவர்கள் பிறந்த ஊர் எது?
பலஸ்தீன்.

38.நபி ஸுலைமான் அவர்களின் கடிதத்தை பல்கீஸ் அரசிக்கு கொண்டு சென்ற தூதர் யார்?
ஹுத்ஹுத் பறவை. (27:20)

39. தந்தையும் மகனும் நபியாக இருந்தவர்கள் யார் யார்?
நபி இப்றாஹீமும் நபி இஸ்மாயீலும்,நபி இஸஹாக்கும், நபி யஃகூபும், நபி யஃகூபும் நபி
யூஸுஃபும், நபி தாவூதும் நபி ஸுலைமானும், நபி ஸகரிய்யாவும் நபி யஹ்யாவும்
ஆகியோராவார் (அலைஹிமுஸ்ஸலாம்)

40. நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவை?
அவை ஒன்பது (17:101) 1.அஸா பாம்பாக மாறுதல் ,2.கை ஒளி பெறுவது,4.தூஃபான் வெள்ளம்,
5.வெட்டுக்கிளி, 6.பேன், 7.தவளை,8.இரத்தம்,9. கடும் பஞ்சம் ( அல் குர்ஆன்.27:12,
7:108)

41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள்?
ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

42.இப்றாஹீம் நபியின் மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தனர்?சிலைகளையும்,
நட்சத்திரங்களையும்.

43.இப்றாஹீம் நபியின் மனைவியும் இஸ்ஹாக் நபியின் தாயாரும் யார்?
ஸாரா அம்மையார்.

44.கத்தீபுல் அன்பியா ( நபிமார்களில் நாவலர்) யார்?
நபி ஷுஐபு (அலை)

45.உலகில் தோன்றிய நபிமார்களின் தலைவர் யார்?
நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

46.நபி ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவை? 1. களி மண்ணால்
செய்த பறவை உயிர் பெறுதல். 2. பிறவிக்குருர் கண்பார்வை பெறுதல்.3. குஷ்டரோகிகள் நலம்
பெறுதல் 4. இறந்தோரை உயிர்பித்தல் 5. பிறர் உண்பதை (வீட்டில் உள்ளவற்றை பார்க்காமலே)
கூறுதல்) ( குர்ஆன்: 3:49,5:110)

47. ஸூரா கஹ்பில் கூறப்பட்ட "அப்துன் ஸாலிஹ்" (நல்லடியார்) யார்?
கிள்ர் (களிர்) (அலை)

48. நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் முக்கியமானவை யாவை?
1.உலகுக்கே சவாலாவிருக்கும் பொதுமறை அல் குர்ஆன்.2. மிஃராஜ் (விண்வெளிப்) பயணம்.3.
சந்திரனைப் பிளந்தது. 4.கைவிரல்களிலிருந்து தண்ணீர் ஊற்றாக ஓடியது.5. வஹீ மூலம்
மறைவான செய்திகளைக் கூறியது.6. கல் ஸலாம் உரைத்தது.7. மாடு பேசியது. 8. நோயாளரை நலம்
பெறச் செய்தது. 9. சிறிதளவு உணவை பெரும் கூட்டம் உண்ணுமளவு அதிகரித்தது.10.
பேரீத்தம் மரம் அழுதது.11. பேரீத்தம் பழங்கள் பெரும் குவியலாகப் பெருகியது.12.
எதிரிகளின் கொலைச் சூழ்ச்சிகளிலிருந்து காத்தது.13. துஆக்களை இறைவனால்
ஏற்க்கப்படுவது. போன்ற நூற்றுக்கணக்கான அற்புதங்கள் 'நிகழ்ந்தன.

49. இப்றாஹீம் நபி செய்த தொழில் என்ன?
விவசாயம்.

50. ஆதம் (அலை) அவர்களின் மகன் ஹாபீலைக் கொன்றது அவரது சகோதரர் காபீல்

41.நபி மூஸா அவர்கள் எகிப்தை விட்டு ஓடிப்போனபோது என்ன தொழில் செய்தார்கள்?

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்?

42.நபிமார்களின் தந்தையென யார் அழைக்கப்படுகிறார்?


நபி இப்றாஹீம் (அலை)

43.இப்றாஹீம் நபியின் மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தனர்?

சிலைகளையும், நட்சத்திரங்களையும்

44.இப்றாஹீம் கபியின் மனைவியும் இஸ்ஹாக் நபியின் தாயாரும் யார்?

ஸாரா

45.கத்தீபுல் அன்பியா ( நபிமார்களில் நாவலர்) யார்?

நபி ஷுஐபு (அலை)

46.உலகில் தோன்றிய நபிமார்களின் தலைவர் யார்?

நபி முஹம்மது (ஸல்) அவர்கள்

 


--
*more articles click*
www.sahabudeen.com



LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு

LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு

 

இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.

 

ஸ்கிரீன் அளவு: 

முதலில் நாம் வாங்க இருக்கும் டிவி யின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூ றுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பத ற்காக மிகச்சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.

சரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவி யின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கினால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூர த்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.

LCD, LED, PLASMA

 

அனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.
பொதுவாக 42 அங்குல அகலத்திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப்பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும். பிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி, ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டி க்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம்? இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.

 

அடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.

 

இவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிக ழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும். நம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்ப ரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள்வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகிய வற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.


காண்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ரெஸ்பான்ஸ் டைம்

காண்ட்ராஸ்ட் ரேஷியோ இதில் அதிகம்; அதனால் விலை கூடுதல் என்றெல்லாம் சொல்வதை டிவி விற்பனை மையங்களில் கேட்கலாம். இந்த விகிதங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்தினை ஏற்படுத்தாது. இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறையில் அளந்து தெரிவிக்கின்றன. ஒவ்வொரு டிவிக்கும் அதனைப் பார்க்கும் சூழ்நிலை வேறு படுவதால்,காண்ட்ராஸ்ட் ரேஷியோவினை ஒரு பெரிய அடிப்படை விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஆனால் ரெஸ்பான்ஸ் டைம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு பிக்ஸெல் முழு கருப்பிலிருந்து முழு வெள்ளை நிறத்திற்கு மாறும் நேரமே ரெஸ்பான்ஸ் டைம் ஆகும். பிளாஸ்மா டிவிக்களில் இந்தரெஸ்பான்ஸ் டைம் மிக வேகமாக இருக்கும். ஆனால் எல்.சி.டி. டிவிக்களில் அவை 8 மில்லி செகண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் நல்லது. (ஆனால் இந்த வித்தியாசத்தை நம் கண்களால் கண்டறிய முடியாது). வேகமான விளையாட்டுகள், வேகமான நிகழ்வுகளைக் கொண்ட திரைப்படங் களைப் பார்க்கும்போதும், கன்ஸோல் வழியாக விளையாடு கையிலும் இந்த வேறுபாடு தெரிய வரலாம்.


சுவருடனா? டேபிளிலா?

இந்த வகை டிவிக்கள் அனைத்துமே சுவர்களில் இணைத்துப் பார்க்கும் வகையில் வெளிவருகின்றன. இவற்றை டேபிளில் வைத்துப் பார்க்கவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இதற்கான சரியான வால் மவுண்ட் ஸ்டாண்ட் கொண்டு, அதற்கான பயிற்சி பெற்றவரைக் கொண்டு சுவற்றில் மாட்டுவதற்கான சிறிய ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும்.

 

ஆனால் நீங்கள் டிவியை அப்படி, இப்படி சிறிது தூரம் நகர்த்தி வைத்துப் பார்ப்பவர் என்றால், பாதுகாப்பான டேபிளில், உரிய ஸ்டாண்டில் வைத்து இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இப்படி வைக்கும் போது 20% திருப்பிக் கொள்ளலாம்.


இணைப்புகள்:

 

இன்றைக்கு வீடியோ இணைப்புகள் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. HDMI, Component, Composite, PC எனப்பலவகை இணைப்புகளை டிவிக்களில் பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டர்களையும் இணைக்கலாம். இப்போது வரும் டிவிக்களில்குறைந்தது 10 வீடியோ இணைப்புகள் உள்ளன.

 

இவற்றிற்கான சரியான கேபிள்களை தேர்ந்தெடுத்து, அதற்கான ஸ்லாட்டுகளில் பயன்படுத்துவது சிறப்பான வெளிப்பாட்டினைத் தரும். புதிய வசதியாக யு.எஸ்.பி. போர்ட்களும் இந்த டிவிக்களில் தரப்படுகின்றன. யு.எஸ்.பி. டிரைவ்களில் இருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்கலாம் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை டிவிக்களின் பின்புறம் தரப்பட்டுள்ளன. எனவே சுவர்களில் மவுண்ட் செய்யப்படும் டிவிக்களில், மாட்டிய பின்னர் இணைப்புகளைச் செருகுவது சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது.

 

சுவரில் பொருத்தும் முன்பே, சரியான நீள முள்ள கேபிள்களை இணைத்து வை த்துக்கொள்ள வேண்டும். அல்லது எப்படி கவனமாகச் சேதம் ஏற்படாமல் டிவியைக் கழட்டி பொருத்துவது என்று தெரிந்து கொள்ள வெண்டும். டிவிக்களை வாங்கு முன் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பவசதிகள் நீங்கள் வாங்க இருக்கும் டிவி யில் எந்த அளவில் உள்ளது என்று பார்க்கவும். இது மற்ற டிவிக்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும். கடைகளில் விற்பனையாளர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பிளாக் ஸ்ட்ரெட்ச்: 

டிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித தொழில் நுட்பங்கள் கையாளப்படுகி ன்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடு த்து அமையும் போது கருப்பு அதன் தன்மையிலிருந்து சிறிது குறை வாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.

பி.ஐ.பி.: 

பிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப் பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.

ஷார்ப்னெஸ் கண்ட்ரோல்: 

 

படக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம்பெறலாம். ரிமோட் கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில் படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்க ளை எரிச்சல் அடையச்செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப் னெஸ் கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.

பிரைட்னெஸ் சென்சார்: 

அறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.

காண்ட்ராஸ்ட் ரேஷியோ: 

பிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.

ரெசல்யூசன்:

திரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது. எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம் மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array) 640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x 768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட் எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980 x1080.

 

ஆஸ்பெக்ட் ரேஷியா: 

காட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த விகிதம். வழக்கமான டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3 பங்கு உயரம். அகல த்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.

கோம்ப் பில்டர்: 

வண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில் நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள் தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும். 

பி.எம்.பி.ஓ: 

பீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு மகிழ 30 வாட்ஸ் போதுமானது.

ஸ்டீரியோ பிளே பேக்: 

 

டிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.

ரெஸ்பான்ஸ் டைம்:

டிவியின் திரை ஒரு கட்ட ளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக லட்சத் தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல் கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால் காட்சி சிதறும்.

http://vadakaraithariq.blogspot.in

 

 


--
*more articles click*
www.sahabudeen.com



வீட்டு வைத்தியம்! தினமும் வெந்நீர் குடிக்கலாம்

வீட்டு வைத்தியம்! தினமும் வெந்நீர் குடிக்கலாம்

'பாட்டி வைத்தியம்' சொன்ன பாட்டியிடமிருந்து 'வைத்திய' ரிலே கட்டையை கைப்பற்றியிருக்கும் பாட்டியும், நல்ல அனுபவசாலி! ''அலோபதியில எத்தனை மருந்து வந்தாலும், அவசரத்துக்கு நம்ம கை வைத்தியம் மாதிரி வரவே வராது'' என்று அழுத்தமாக சொல்லும் அவரது எளிமையான குறிப்புகள் ஆரம்பமாகின்றன.

கிணறு வெட்ட பூதம் கிளம்புறாப்ல, சின்ன பிரச்னைக்கு கண்ட கண்ட இங்கிலீஷ் மருந்தைச் சாப்பிட்டு, அதனால புதுசு புதுசா வியாதிகளை வரவழைச்சுக்கக் கூடாது.

'ஆயிரம் வியாதிக்கும் அடுப்பங்கரையில இருக்கு வைத்தியம்'னு பெரியவங்க சொல்றதுண்டு. யோசிச்சுப் பார்த்தா, எதனால பிரச்னையோ.. அதனாலயே அதைத் தீர்க்க முயற்சிக்கறதுதான் புத்திசாலித்தனம்னு புரிய வரும்.

சமையலறையில நாம எண்ணெயையும் நெய்யையும் கொட்டியோ, இல்ல.. ஒரேயடியா வறுத்துப் பொரிச்சோ செய்யற பண்டத்தாலதான் பல வியாதிகளும் நமக்கு வர்றது. 'கிச்சன்''வெட்டு வெட்டு'னு வெட்டிட்டு, வயித்து வலிக்கு டாக்டரைத் தேடி ஏன் ஓடணும்? இதுக்கான மருந்தும் கிச்சன்லயே இருக்கு. நம்ம இஞ்சி, சுக்கு, ஏலம், கிராம்பு, கீரை, கொத்துமல்லி விதை, அரிசி திப்பிலி, கண்ட திப்பிலி, பூண்டு.. இதுல எல்லாம்தான் இருக்கு சூட்சுமம்!

இதையெல்லாம் வெச்சு என்ன செஞ்சா.. என்னென்ன வியாதிகள்லாம் ஓடும்னுதான் உங்களுக்கு நான் சொல்றதா இருக்கேன்.

ஆச்சு.. மழைக்காலம் வந்துடுச்சு. சாதாரண நாள்லயே ஸ்வீட், எண்ணெய்ப் பலகாரம்.. எல்லாத்தையும் தொட்டுப் பார்க்கக்கூட இந்த டீன்&ஏஜ் குழந்தைகள் பயப்படும். 'கொலஸ்ட் ரால்' பயம், ஊளைச் சதை, இடுப்புல மடிப்பு, தொப்பை வேற.. ஜீன்ஸ் போட முடியாம.. என்ன கஷ்டம்டியம்மா!

விதவிதமா அகர்வாலையும், ஸ்ரீகிருஷ்ணாவையும், ஆனந்த பவனையும் படைச்சுப்புட்டு, இந்த மாதிரியான பயத்தையும் பகவான் படைச்சிருக்க வேண்டாம்னு தோணுது.. இல்லையா?!

இனிப்போ, எண்ணெய்ப் பல காரமோ.. அளவாச் சாப்பிட்டா பிரச்னையே இல்ல. கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டா, நாக்கு முழுக்க மைதா மாவைத் தடவின மாதிரி 'வழவழ'னு ஆகிடும் சிலருக்கு.

உடம்பும் அங்கேயிங்கே சதை இல்லாம உருவி விட்டாப்ல இருக்கணும். அஜீரணம், ஏப்பம், நாக்கு கொழகொழப்பு இதெல் லாமும் வரக் கூடாதுன்னா, இதைப் படிங்க முதல்ல..

ஸ்வீட்டோ, காரமோ.. இல்ல, வடை பாயசத்தோட சாப்பாடோ.. சாப்பிட உக்கார்றதுக்கு முன்னால, நாக்கு பொறுக்கற சூட்டுல ஒரு டம்ளர் வெந்நீரைக் குடிச்சிருங்க குழந்தைகளா.. அதேமாதிரி, சாப் பிட்டதுக்கு அப்புறமாவும் ஒரு டம்ளர் வெந்நீர்.. அந்த வெந்நீர் 'வெதவெத'னு இருக்கக் கூடாது. அதுக்காக நாக்கைச் சுட்டுக்கவும் கூடாது. நாக்கு பொறுக்கற சூடு.. ஞாபகம் வெச்சுக்கங்க!

இதுல.. அதாவது, இந்த வெந்நீர் வைத்தியத்துல.. பல ஆச்சர்யமான சமாசாரங்கள் அடங்கியிருக்கு...

1. சாப்பிடறதுக்கு முந்தி குடிக்கிற வெந்நீர், நம்ம வயிறு ஃபுல் ஆன மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஜாங்கிரி, முள்ளுத் தேங்குழல் இப்படி பேச்சு வாக்குல வளைச்சுக் கட்ட முடியாது. வடையோ, பாயசமோ கொஞ்சம் சாப்பிட்டாலும் 'போதும்'னு சொல்ல வைக்கும்.

2. அது மட்டுமில்லாம, இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதால, நாக்கு கொழகொழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டை கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள்.. எல்லாம் மறைஞ்சுடும். உள்ளே சுத்தமா இருந்தா, வெளியேயும் சுத்தமா இருக்கலாம்.

இதுக்காகத்தான் அந்தக் காலத்துல சுமங்கலி பிரார்த்தனை, திதி.. இது போன்ற சமயங்கள்ல, சாப்பாட்டு இலைக்குப் பக்கத்துல சுக்கைத் தட்டிப் போட்டு வெந்நீரை வச்சுடு வாங்க.

நாம தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். உடலையும் முகத்தை யும் நல்லா வெச்சுக்கலாம்.

இந்த பாட்டி எதைச் சொன்னாலும், உடனே ஃபாலோ பண்ற மாதிரிதான் இருக்கும். கவலையே வேண்டாம் கண்ணு களா. அத்தனைக்கும் மருந்து இருக்கு நம்ம கையிலயே..

 


--
*more articles click*
www.sahabudeen.com



Saturday, August 25, 2012

Dhuva-6



 

 

 

Thanks & Regards

Dameen Ansari  A

Extn 3322

 



--
*more articles click*
www.sahabudeen.com



மருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: -1


அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை"

ஸஹீஹுல் புஹாரி - பாகம்
  6 : அத்தியாயம் 76 :  ஹதீஸ் எண் 5678

1. பேரிச்சம்பழம்

செய்வினை விஷம் குணமாக! 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும். யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ, செய்வினையா அவரை அண்டாது. 

வாய்வுத் தொல்லை நீங்க! 
வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு படுகிறார்கள். அவர்கள் காலையில் பிஸ்கட், பன், ரொட்டி என்று எதையும் உண்ணாமல் 11 பேரீச்சம்பழம் வீதம் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் வாய்வுத்தொல்லை நீங்கி நல்ல குணம் பெறலாம். 

2. ஜைத்தூன்

ஷைத்தான் நெருங்காதிருக்க 
அலி! ஜைத்தூன் பழத்தைச் சாப்பிடுங்கள். அதன் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வோரிடம் 40 நாட்களுக்கு ஷைத்தான் நெருங்க மாட்டான்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள். 

வலி, வாதம், வீக்கம், மறுப்பு நீங்க 
இடுப்பு வலி, முதுகுவலி, கைகால் குடைச்சல், மூட்டுக்களில் வலி என்று இருப்பின் அந்த இடத்தில் ஜைத்தூன் எண்ணையைத் தடவி நன்றாகத் தேய்த்து விட்டால் வலி, குடைச்சல் எல்லாம் குணமாகிவிடும். கால் கைகள் அப்படியே சிலருக்கு மரத்து போய்விடும். அப்போது இந்த எண்ணையை லேசாக சூடாக்கி அந்த இடத்தில் தேய்த்தால் மறந்து போனது நீங்கி இரத்த ஓட்டம் சீராகி விடும். 

3. பேரிக்காய்

இதயம் வலுவடைய 
அதிகாலையில் வெறும் வயிற்றில் பேரிக்காய் சாப்பிட்டால் நெஞ்சடைப்பு, இதயகனம், இதயபலஹீனம், மார்புவலி நீங்கி இதயம் பலப்படும்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

அழகான குழந்தை பிறக்க 
கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் உண்ணக கொடுங்கள். அதனால் குழந்தை அழகாகப் பிறக்கும். இதய அழுத்தம், இதயவலி (முதலிய நோய்கள்) ஏற்படாமல் இதயம் நன்கு செயல்படும்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

4. கருஞ்சீரகம்

நினைவாற்றல் பெருகிட 
அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும். 
குறிப்பு:
 கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது. 

சர்க்கரை வியாதி நீங்கிட 
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி பரிபூரணமாக குணமாகி விடும். 

5. கோதுமை

இதய பலத்திற்கு 
இதயமும், மூளையும் வலுவடைவதற்கும், வயிற்றுக் கிருமிகள் மற்றும் வயிற்றிலுள்ள கசடுகள் எல்லாம் நீங்கி இரைப்பை சுத்தமாக இருப்பதற்கும் தப்னியா (அதாவது கோதுமை மாவில் பால் ஊற்றி பாயாசமாகக் காய்ச்சி இறக்கிய பின்பு தேவையான இனிப்புக்கு தேன் கலந்த உணவை) உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். 

சத்தான உணவு 
தொலிக் கோதுமை ரொட்டித்துண்டை எடுத்து, அதில் பேரீச்சம்பழம் வைத்து, இதுவே சிறந்த சாலன்: இதுவே சிறந்த சாலன் என்று இரண்டு தடவை நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சொன்னார்கள் என்று யூசுப்பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள்: கோதுமையுடன் பேரீச்சம்பழம் சேர்த்த உணவை எல்லா சத்துக்களும் நிறைந்த பரிபூரணமான உணவுஎன்று மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

6. உப்பு

பைத்தியம் ஏற்படாதிருக்க 
கொஞ்சம் உப்பை உண்டு உணவை உண்ணத் தொடங்குங்கள். அவ்வாறே உண்டு முடிந்த உடனும் கொஞ்சம் உப்பை உண்ணுங்கள். அதனால் பைத்தியம், குஷ்டம், குடல் வியாதி, மற்றும் பல்வலி போன்ற எழுபது வியாதிகள் உங்களை அண்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

குளுமை குறைந்திட 
வெள்ளரிக்காயை உப்பில் தொட்டுத் தின்பார்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். அதனால் வயிற்றுக் குளுமை குறைந்து விடும் என்பார்கள்.. இவ்வாறு தின்பதால் மார்புச்சளி, பித்தம் வெளியேறிவிடும். உண்ணும உணவு ஜீரனமாகவும் செய்யும் என்று திப்புன்னபவியில் குறிப்பிடுகிறார்கள். 

7. இறைச்சி

உடல் அழகு பெற 
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும், நாளைய சொர்க்கவாசிகளுக்கும் சிறந்த உணவாகும் என்றும், இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் வளர்ச்சியடைந்து அழகு பெரும். மேலும், மேனியின் நிறமும் மினுமினுப்பாகவும் இருக்கும் என்றும், இதை உண்ணுவதால் உள்ளத்திற்கு ஆனந்தமேற்படுகிறது என்றும்  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

உடல் சதைபோட 
ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி உண்ணுங்கள். அதனால் உடல் அழகுபெரும். உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். நாற்பது நாட்கள் இறைச்சி உண்ணாமலும் இருக்காதீர்கள். அதனால் குணம் கெட்டு விடும் என்று அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

8. முட்டை

ஆண்மைக் குறைவு நீங்க 
யா ரசூலஅல்லாஹ்! என்னுடைய ஆண்மை போதிய வலுவில்லாமல் இருக்கிறது. என்று ஒரு ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் முறையிட்டார்கள். அவருடைய ஆண்மைக் குறையை உணர்ந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முட்டையை உண்ணுங்கள். ஆண்மை அதிகரிக்கும்என்று ஏவினார்கள். 

தாது பலம் பெற 
எல்லாம் வல்ல இறைவா! எனக்கு தாதுபலம் மிக்க குறைவாக இருக்கிறது என்று ஒரு நபி அல்லாஹ்விடம் முறையிட்ட போது, “முட்டையை உண்ணுங்கள். தாது பலம் மிகும்என்று அல்லாஹ் அந்த நபிக்குச் சொன்னான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

9. தேன்

பலஹீனமே இல்லாதிருக்க 
தேனைப்பற்றிய பழைய மருத்துவக் குறிப்பு இது. அதாவது அதிகாலையிலும், இரவில் நித்திரை செய்வதற்கு முன்பாகவும் ஒரு வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சப்பழச்சாறையும், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் 

1. உடல் எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்
2. ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் நீங்கிவிடும்.
3. குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கி விடும்.
 
4. குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்து விடும்.
 
5. இதய பாதிப்புக்கள் நீங்கி இதயம் பலம்பெறும்.
 
6. புதிய இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும்.
 

ஜீரண சக்திக்கு 
நாம் உண்ணும உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பல சத்துக்களைத் தனித்தனியாக பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்பப்படுகிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரண சத்து குறைந்திருப்பதால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்று விடும். இரைப்பையின் பணி கெட்டு விடுமானால் பின்பு உடம்பு அவ்வளவுதான். 

10. பால்

நோய்கள் வராதிருக்க 
பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை உடல் பெற்று விடும். இதன் மூலம் இதயபாதிப்பு நீங்கி இதயம் பழம்பெரும். மூளை சக்திபெரும். முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் இருக்கும். ஜீரண சக்தி அதிகமாகும். 

நரம்புத்தளர்ச்சி நீங்க 
பசும்பாலில் முருங்கைப்பீசினை இடித்துக் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கம் மற்றும் நரம்புக்கோளாறுகள் எல்லாம் குணமாகும். (142) முருங்கைக்காயின் உட்பகுதிச் சதையையும் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்து தினசரி காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் டி. பி நோய் வலிமை இழந்து நாளடைவில் குணமாகி விடும். (143) தலைவலி நீங்க மிளகைப் பசும்பாலில் அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகிவிடும். 

11. தண்ணீர்

ஜீரண சக்திக்கு 
உணவில் இடையிலும், உணவு உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என்றும் பழங்களைத் தின்றவுடன் தண்ணீர் அருந்தக்கூடாது அதனால் மரணம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், குளித்தவுடன் தண்ணீர் குடித்தால் ஜலதோஷம் உண்டாகும் என்றும், ஐஸ் நீரை பொதுவாக அருந்தினால் பற்கள் சீக்கிரம் ஆட்டம் கண்டுவிடும் என்றும், தொண்டைக்கட்டி வலி உண்டாகும், இரைப்பையில் ஊறும் ஜீரணநீர் குறைவாகவே சுரக்கும் என்றும், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடல் பலஹீனமடைந்து இளைத்து விடும் என்றும், பூமிக்கு அடியில் ஓடும் தண்ணீரும் கிணற்றில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும் கெடுதல் தரக்கூடியவை என்றும், கிணற்றுத் தண்ணீரையும், ஆற்றுத் தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல்நலத்தைக் கெடுத்து விடும், அவ்வாறே வெந்நீரையும், தண்ணீரையும் கலந்து குடிப்பது உடல் நலத்தை பாதிக்கும் என்றும் ஜாலீனுஸ், அப்கராத் அபூநயீம் போன்ற மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள். 

12. மழைத் தண்ணீர்

எல்லா நோய்களும் நீங்கிட 
எனக்கு ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மருந்தை கற்றுத்தந்தார்கள். அம்மருந்து ஒன்றே போதும். வேறு எந்த மருந்தும் தேவை இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோய்களையும் இந்த ஒரு மருந்தின் மூலமே குணப்படுத்தி விடுவான்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு சமயம் ஸஹாபாப் பெருமக்களிடம் கூறியபோது, அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகிய நாற்பெறும் ஸஹாபாக்களும் அதை தத்தமக்குக் கற்றுத்தருமாறு வேண்டினார்கள். அப்போது வேறு எதிலும் படாத சுத்தமான மழைத் தண்ணீரில் ஃபாத்திஹா, இக்லாஸ், ஃபலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் எழுபது எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொண்டு, எப்படிப்பட்ட நோயால், செய்வினை மற்றும் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களும் காலையும், மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் என்னை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக் நிச்சயம் அந்த நோய் நீங்கிவிடும். மலட்டுத்தன்மை உடையவர் இவ்வாறு இதைக் குடித்து வந்தால் நிச்சயம் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பெறுவார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அருளினார்கள். 

13. ஜம்ஜம்

நினைத்தது நிறைவேற 
இந்த ஜம்ஜம் நீரை எந்த எண்ணத்துடன் யார் அருந்துகிறோமோ அது அவருக்கு நிறைவேறும். நான் மறு உலகில் தாகமில்லாதிருக்க இதை அருந்துகிறேன்என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக இப்னு முபாரக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகிறார்கள். 

14. சுர்மா

கண்ணொளி பெருகிட
நீங்கள் தூங்கப்போகும் முன்பு சர்மாவை உங்களுடைய கண்களில் இட்டுக் கொள்ளுங்கள். நிச்சயமாக இது கண்களுக்கு கூடுதல் ஒளிதரும். இமை முடிகளை முளைப்பிக்கச் செய்யும் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

15. பூண்டு

புண்கள் ஆறிட 
பூண்டை பால் விட்டு அரைத்து புண்கள், வெயில் கொப்பலங்களில் வைத்தால் விரைவில் ஆறிவிடும். புண் ஆணையைக் கூட வெளியாக்கிவிடும். இன்னும் அநேக மருத்துவ குணங்கள் பூண்டிற்கு உண்டு. ஆனால் மூல வியாதியஸ்தர்கள் பூண்டை உபயோகிக்ககூடாது. 
1. பக்காவாததிற்கு நல்லது. இதை வேகவைத்து வைகொப்பளித்தால் பல்வலி நீங்கி பற்கள் உறுதிப்படும். நவாச்சாரத்துடன் கலந்து வேன்குஷ்டத்திற்கு பத்துப் போட்டால் அது குணமாகும்.
 
2. பல தன்நீர்களை குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பூண்டு சாப்பிட்டால் போதும். அந்தத் தண்ணீரால் எந்த தீமையும் ஏற்படாது.
 
3. தேள், பின்பு கடித்து விடாத்ல் பூண்டைத் தட்டி கடிவாயில் பத்துப் போட்டால் குணமாகி விடும்.
 

16. மருதோன்றி இலை

வயிற்றுவலி, தலைவலி நீங்க 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு தலைவலிக்குமானால் மருதொன்றியை அரைத்து தலைக்கு பத்து போடுவார்கள். மேலும் அல்லாஹ்வின் ஆணையால் இது நிச்சயம் பலன் தரும் என்றும் கூறுவார்கள். 

17. அத்திப்பழம்

உடல் அழகு பெற
 
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 

18. அதிமதுரம்

தொண்டைவலி நீங்க 
பால்குடி பருவத்தில் குழந்தைக்கு தொண்டையில் ஒருவித அடைப்பு போன்ற வியாதி ஏற்படும். அதைப் போக்குவதற்காக தாய்மார்கள் அரபிய நாட்டில் குழந்தையின் வாயில் விரலை விட்டு அழுத்துவார்கள். (நம் நாட்டிலும் சில இடங்களில் இப்படி செய்வதுண்டு) இதைக்கண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இது மிகவும் தீங்கானது என்பதை உணர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு தொண்டை வியாதி ஏற்பட்டால் விரல்விட்டு அழுத்தி வேதனை செய்யாதீர்கள். அதற்குப் பகரமாக அதிமதுரக்குச்சியை உபயோகப்படுத்துங்கள்என்று அருளிய ஹதீஸை அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

மாதத்தீட்டு ஒழுங்காக வர 
சில பெண்களுக்கு சரியாக மாதாமாதம் தீட்டு வராமல் கஷ்டப்படுவார்கள். அவ்வாறே சில பெண்கள் தீட்டுக்காலத்தில் வயிற்று வழியால் சிரமப்படுவார்கள். அப்போது அதிமதுரக்குச்சியைச் சாப்பிட்டு வந்தால் தீட்டு சரியாக வர ஆரம்பித்து விடும். வயிற்று வழியும் நீங்கி விடும். 

19. முள்ளங்கி

பசி உண்டாக 
முள்ளங்கியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும். 
1. தாதுபலம் மிகப்பலமாக இருக்கும்.
2. கிட்னியில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
 
3. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு நல்ல வலுவேட்படுத்தும்.
4. முடி உதிர்வதைத் தடுத்து அது நன்கு வளர்ச்சியடையச் செய்யும்.
5. முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால் தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும்.
 
6. முள்ளங்கியைத் தட்டி தேள், பாம்பின் கடிவாயில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி விடும்.
7. இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.
 
8. முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.
9. முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு திமமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெறுவதற்கு இதைவிடச் சிறந்த மருந்து இனியொன்று இல்லை.
 

20. மாதுளம்பழம்

ஷைத்தான் விரண்டோட
எந்த வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்) மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள். 

கண்ணோய் நீங்கிட
மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும், மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது. 

இரத்தம் சுத்தமாக 
இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும். 
1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.
2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.
3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.
4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். மாதுளைப்பழத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.
 

www.sahabudeen.com