Monday, July 22, 2013

dhanushkumar is still waiting for you to join Twitter...

 
Top corners image
     
 
   
 
 
 

dhanushkumar is still waiting for you to join Twitter...

 
 
  Accept invitation  
 
     
 

Twitter helps you stay connected with what's happening right now and with the people and organizations you care about.

 

Sunday, July 21, 2013

வழுக்கை – ஒரு விளக்கம்



--
*more articles click*
www.sahabudeen.com


வழுக்கை – ஒரு விளக்கம்

தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். 'வந்தால் மலை, போனால் மயிர்' என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது? முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும்? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.

''நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.

நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.

தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.

ஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.

தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.

முதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.

இரண்டாவது நிலை, கேடகன்  நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும்.

மூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.

தலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.

1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.

3. அலோபேசியா ஏரியாட்டா.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
ஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம். www.sahabudeen.com

நம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை:
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.

சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு 'ஓவரி'யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.

ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

கர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.

அலோபேசியா ஏரியாட்டா:
வழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.

இப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.

என்ன மருந்து?
ஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்'' என்கிறார் டாக்டர் பாத்ரா.

நன்றி – குமுதம் -  ஏ.ஆர். குமார்

http://chittarkottai.com

குழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா? எப்போது?

குழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா? எப்போது?

குழந்தைகள் என்றால் அழுவது சகசம். அதே போல  குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருவதும் உண்டு. இருமல் என்பது நோயல்ல.

 

சுவாசக் குழாயில் காற்றானது தடையின்றி போய்வருவதை உறுதி செய்வதற்கு உடல் தன்னச்சையாக எடுக்கும் நடவடிக்கை எனலாம். அதாவது தடைசெய்யும் சளியை அல்லது கிருமியை அகற்றுவதற்கு உடல் எடுக்கும் பாதுகாப்புச் செயற்பாடு எனலாம்.

 

·                     பிறந்த ஒரு மாதம் ஆகாத குழந்தைகளைக்கு கூட இருமல் வரக்கூடும். அத்தகைய குஞ்சுக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பதறியடித்து வருவார்கள்.

·                     மருந்து வேணடும் என்று நட்டுப் பிடிப்பார்கள்.

·                     இருமல் என்றால் நியூமோனியா போன்ற ஆபத்தான நோயாக இருக்கலாம் என்ற பயமே அவர்கள் ஓடி வருவதற்குக் காரணம்.

பெரும்பாலும் குழந்தைகளின் இருமல் ஆபத்தானதல்ல. மருந்துகள் இன்றியே தாமாகக் குணமடைந்து விடக் கூடும்.

 

நீங்களாக மருந்து கொடுக்க வேண்டாம்


சிலர் மருத்துவரிடம் செல்லாமல், தாங்களாகவே பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்தில் சிறிதளவு கொடுத்துப் பார்ப்பதுண்டு. அதைவிட ஆபத்து எதுவும் இருக்க முடியாது. பக்கவிளைவுகள் அதிகம் இருக்கும். அமெரிக்காவின் Food and Drug Administration (FDA) ஆனது 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பதையிட்டு எச்சரித்துள்ளது. 

இந்த எச்சரிக்கையானது

1.        பெரியவர்களுக்கான இருமல் மருந்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதையிட்டு மட்டுமல்ல,

2.        குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதையிட்டும் ஆகும்.

அத்தகைய பல மருந்துகளைத் தடைசெய்தும் உள்ளனர்.

 

குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கே கொடுக்கும்போதும்  ஆபத்துக்கள் ஏற்படுவது ஏன் ?

1.        லேபலில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பெரும்பாலும் அதிகமாக வழங்கிவிடுகிறார்கள்.

2.        அல்லது குறைந்த நேர இடைவெளிகளில் மருந்தைக் கொடுப்பதால் மருந்தின் அளவு அதிகமாகிவிடுகிறது.

3.        இரண்டு மூன்று இருமல் மருந்துகளை மாறி மாறிக் கொடுப்பதால் மருந்தில் உள்ள சில கூறுகளின் அளவு அதிகரித்து விடும்.

எனவே குழந்தைகளுக்கு அவசரப்பட்டு இருமலுக்கென மருந்துகள் கொடுக்க வேண்டாம். ஆனால் அதற்குப் பதிலாக வீட்டில் செய்யக் கூடிய சாதாரண நடைமுறைச் சிகிச்சைகளை முயலுங்கள்.

 

·                     மூக்கில் உள்ள சளியை சுத்தமான வெள்ளைத் துணியினால் துடைத்து எடுப்பது,

·                     சேலைன் மூக்குத் துளிகளை உபயோகிப்பது,

·                     ஆவி பிடிப்பது


போன்ற சாதாரண வீட்டுச் சிகிச்சைகள் போதுமானதாக இருக்கும்.

மருத்துவரை நாடவேண்டியது எப்போது?


ஆனால் எல்லா இருமல்களுக்கும் அவை போதுமானவையல்ல. சில வகையான இருமல்களுக்கு மருத்துவரை நாடுவது அவசியமாகும்.

·                     மேற்கூறிய சாதாரண சிகிச்சைகள் செய்தும் இருமல் குணமாகாது அதிகரித்துச் சென்றால் மருத்துவரை நாட வேண்டும்.

·                     இருமலுடன் காச்சலும் அதிகமாக இருந்தால். சாதாரண தடிமன் காய்ச்சலுடனும் இமுமல் வரலாம் அல்லது நியுமோனியா போன்ற கடுமையான நோயுடனும் வரலாம் என்பதால் மருத்துவரைக் காண வேண்டியதாயுள்ளது.

·                     மூச்சு எடுப்பதில் குழந்தைக்குச் சிரமம் இருந்தால்.

·                     குழந்தை மிகவும் சோர்வுற்று இருந்தால், அல்லது சினமுற்று தொடர்ந்து அழுதால்.

·                     பால் குடிப்பது குறைந்தால், அல்லது உணவு உட்கொள்ள மறுத்தால்.

·                     இருமல் கடுமையாக இல்லாவிடினும், நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தால் மருத்துவரைக் காண வேண்டும். ஆஸ்த்மா, சயரோகம், அல்ர்ஜி ஆகியவற்றால் ஏற்படும் இருமல்கள் நீண்ட நாட்கள் தொடரலாம்.

 

சில விசேட இருமல்கள்


சில இருமல்கள் ஆபத்தானவை. சில உடனடி ஆபத்து இல்லாவி;டாலும் அவசியம் மருத்துவரை நாட வேண்டிவையாகும். இவற்றில் பலவற்றை, இருமல்களின் ஒலியிலிருந்தே பகுத்தறிந்து கண்டறிய முடியும்.

இருமலின் ஒலி வேறுபாடுகள்

 

குரைப்பு இருமல்


குரல் அடைத்து சத்தம் சிரமப்பட்டு வெளியே வருவது போன்ற இருமல் சற்று ஆபத்தானது. மூச்சுத் திணறுவது போலவும் இருக்கும். Stridor முச்சுக் குழாயின் மேற்பகுதியில் குரல் வளையுள்ளது. இது வைரஸ் கிருமித் தொற்றால் சுருங்குவதால் இவ்வாறான இருமல் ஏற்படுகிறது. முகக்pயமாக 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஏற்படும். ஆதற்குக் காரணம் அந்த வயதில் அவர்களது சுவாசப் பாதை இயல்பாகவே ஒடுக்கமாக இருப்பதேயாகும்.

ஏங்கிருந்து வந்தததெனத் தெரியாதவாறு திடீரென ஏற்பட்டால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

 

குக்கல் இருமல் (Whooping Cough)

குக்கல் இருமல் தனித்துவமானது. ஆனால் இப்பாழுது காண்பது அரிதாகிவிட்டது. காரணம் குழந்தைகளுக்கு அவர்களின் 2ம், 4ம், 6ம் மாதங்களில் போடப்படும் தடுப்பூசியில் pநசவரளளளை  பக்றீரியாவிற்கு எதிரான மருந்து இருப்பதுததான்.

குக்கல் இருமலின் போது குழந்தையானது ஒரு இருமலுக்கும் அடுத்த இருமல்களுக்கும் இடையே மூச்சு விடமுடியாதபடி தொடர்ந்து இருமும். அவ்வாறு தொடர்ந்து இருமி மூச்சடைத்து கண்கள் பிதுங்குவது போல வருவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.

அதன் இறுதியில் நீண்ட கூகூகூகூ என்ற ஒலி எழும்பும். இதை வைத்தே நோயைக் கண்டுபிடித்துவிடலாம். ஒருவர் இருமும்போது வெளியேறும் சளியின் நுண்துளிகள் ஊடாக மற்றவர்களுக்கு விரைவில் பரவக் கூடியது. ஆயினும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒழுங்காகத் தடுப்பூசிகள் போடப்படுவதால் அதிகம் காணப்படுவதில்லை. www.sahabudeen.com

இழுப்பு இருமல் (Wheeze)

 

·                     இந்நோயாளர்களின் சுவாச ஒலியை ஆஸ்த்மாவின் கீதம் எனலாம். மூச்சை உள்ளெடுப்பதில் சிரமம் இருக்காது.

·                     ஆனால் வெளியே விடுவது சிரமமாகவும் இசையொலி போலவும் இருக்கும்.

·                     மோசமான நிலை எனில் வெளிப்படையாகக் கேட்கும்.

·                     இல்லையேல் ஸ்டெதஸ்கோப் ஊடாகக் கேட்கும்.

·                     நிறையச் சளி உள்ளே இருப்பது போலவும் ஆனால் இருமியபோதும் அது வெளியே வராது உள்ளே 'கொள கொள' எனக் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.


ஆஸ்த்மாவில் மட்டுமின்றி சில வைரஸ் தொற்று நோய்களிலும் இந்த இசை ஒலி இருமல் ஏற்படலாம்.

இருமலின் காலநேர வேறுபாடுகள்

 

இருமல் ஒலிகள் சில நோய்களைக் குறிப்பதைப் போலவே, இருமல் எந் நேரத்தில் வருகிறது அல்லது அதிகரிக்கிறது என்ற காலநேரமும் அந்த இருமல் எதனால் ஏற்படுகிறது எனச் சுட்ட உதவக் கூடும்.


இரவு இருமல்


பகல் முழவதும் உற்சாகமாக ஓடியாடித் திரியும் சில குழந்தைகள் இரவில் கடுமையாக இருமிக் கொண்டிருக்கும். இது பெற்றோரின் தூக்கத்தையும் நிம்மதியையும் குலைக்கும்.

·                     சாதாரண தடிமனின் போது அல்லது சைனஸ் தொல்லையின்போது அவற்றிலிருந்து சளியானது தொண்டைப் பகுதியில் இறங்குவதால் இவ்வாறு இருமல் வருகிறது.

·                     ஆஸ்த்மா தொல்லை உள்ளவர்களுக்கும் இரவில் இருமல் வருவதுண்டு. இதற்கு படுக்கையில் இருக்கும் படுக்கைத்தூசிப் பூச்சியானது காரணமாலாம்.

·                     ஆனால் முக்கிய காரணம் இரவுநேரத்தில் ஏற்படும் சுவாத்திய மாற்றமாகும். அத்தகைய சிலருக்கு அதிகாலையில் இருமல் அதிகரிப்பதும் அவ்வாறான சுவாத்திய மாற்றம்தான்.

பகல் நேர இருமல்

·                     பகல் நேரத்தில் இருமல் அதிகரிப்பது சுற்றுச் சுழலில் உள்ள தூண்டல் காரணிகள்தான்.புகை முக்கியமாக அந்த அறையில் யாராவது சிகரட் புகைப்பது

 

·                     சமையலறைப் புகை மற்றும் சமைக்கும்போது எழும் காரமான மணங்கள்.

·                     வாசனைத் திரவியங்கள்,          air freshener

·                     வளர்ப்புப் பிராணிகளது முடிகள்


இவை சுவாசத் தொகுதியைத் தூண்டுவதால் இருமல் ஏற்படலாம்.

 

இருமலுடன் வாந்தி


பல குழந்தைகளுக்கு இருமலுடன் வாந்தியும் வருவதுண்டு. இது பொதுவாகக் கடுமையான இமலுடன் ஏற்படுவதுண்டு.

·                     ஆஸ்த்மா போன்ற கடுமையான இருமலுடனும் வாந்தி வரலாம்.

·                     தடிமன், காய்ச்சல், போன்ற வைரஸ் தொற்று நோய்களுடன் வரும் இருமலுடனும் வாந்தி வரலாம்.

இத்தகைய வாந்திகள் பயப்பட வேண்டியவை அல்ல. இருந்தபோதும் வாந்தி தொடர்ந்தால் மருத்துவரை நாடவேண்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

http://www.hainallama.blogspot.in/2012/07/blog-post_2641.html



--
*more articles click*
www.sahabudeen.com


தலைமுடி உதிர்வதைத் தடுக்க...

தலைமுடி உதிர்வதைத் தடுக்க...

 

முப்பது வயதைத் தாண்டியதும் முன் வழுக்கை(front Bald ) விழும் என்று சொல்வார்கள்.. காரணம் பல கூறப்பட்டாலும், வயது முதிர்வும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வயதில்தான் பொறுப்புகள் அதிகம் வந்து சேரும். 

அதிக மனச்சுமைகள் வந்து சேரும் வயது இந்த நடுத்தர வயது. அலுவலகப் பணி(Office work,), குடும்பச் சிக்கல்கள்(Family Issues) இப்படி அனைத்தும் ஒட்டுமொத்தமாக வந்து மனதை குழப்பமடையச் செய்யும் வயது..இது.  இதனால் ஏற்படும் சோர்வு(Debility), கவலை(Anxiety) போன்ற காரணங்களாலும் முடி உதிரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.. 

உடல்கோளாறுகள் காரணமாகக்கூட தலைமுடி உதிரும். சரி.. இத்தகைய முடி உதிர்வைத் தடுக்க முடியாதா? என்றால் நிச்சயம் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதலில் உங்களுடைய பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதற்கான சுமூக முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாத, மனதை பாதிக்கத்தக்க வகையில் இருக்கும் பிரச்னைகளை மனதிற்குள் செலுத்தாமல் அந்தப் பிரச்னைகளை வெளியே தூக்கி எறிய வேண்டும். 

இந்த இரண்டும் செய்தால் மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட முடி உதிர்வையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். 

முடி உதிர்வை தடுக்கும் இரண்டாவது(The second way to prevent loose hair) வழிதான், அதற்குரிய முறையான வைத்தியம்..

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்:(Methods to prevent hair shedding)

1. ஆயில் மசாஜ் (Oil Masage)

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கவும். விரல் தாங்கும் சூட்டில் எண்ணெயை தலையில் தடவி விரல்களால் மசாஜ் செய்து விடுங்கள்..

2.
தலையில் எண்ணையைத் தேய்க்கும்போது மயிர்கால்களில் படும்படி தடவும். முடியானது மிகவும் மென்மையான தன்மையுடையதால் அதிகமாக போட்டு கசக்கித் தேய்க்ககூடாது. மிதமாகத் தேய்க்கவும். பிறகு டவல் ஒன்றை எடுத்து அதை வெந்நீரில் நனைத்துப் பிழிந்துகொள்ளுங்கள். ஈரமாக்கிய துண்டை தலையில் நன்றாக இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு தலைக்கு குளித்துப் பாருங்கள்.. உங்களுக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு தலைமுடிக்கும் புத்துணர்வு கிடைக்கும். 

3.
இந்த முறையை நாள்விடாமல் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாலம்.

முடி உதிர்வைத் தடுக்க தேங்காய்ப்பால்:(Coconut milk is used to prevent loose hair)


தேங்காய்ப்பாலின் மகத்துவத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவி அதிலிரிருந்து பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீருடன் கலந்து இளஞ்சூடாக்கவும். சூடாக்கிய தேங்காய்பால் நீரை கைத்தாங்கும் வெப்பத்தில் இருக்கும்போது தலையில் தேய்க்கவும்..பதினைந்து நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் முடி உதிரும் பிரச்னை நாளடைவில் கட்டுக்குள் வரும். முடியும் உதிராது..

ஆலிவ் ஆயிலின் அற்புதம்:(The Perfect Olive Oil)

ஆலிவ் எண்ணையைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு தலைமுடிப் பிரச்சனை விரைவில் தீரும்.

ஆலிவ் எண்ணையின் பயன்கள்: 

1.
பொடுகை நீக்குகிறது. 2. நரைமுடி தோன்றாமல் காக்கிறது. 3. கூந்தலை வலுப்பெறச் செய்கிறது. 4. முடி உதிர்வை தடுக்கிறது.

இந்த ஆலிவ் எண்ணையுடன் பாதாம் எண்ணையும் கலந்து தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும். www.sahabudeen.com

தேங்காய்ப்பால் மட்டுமா? பசும்பால் கூட...(Cow 's milk also prevents hair shedding)

பசும்பால் முடிஉதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. புதிதாக கறந்த பசும்பாலை காய்ச்சி தலையில் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் அதை ஊற விடவும். இப்போது உங்களுக்குப் பிடித்த நல்ல ஷாம்பூவை போட்டு குளித்துவிடுங்கள்.. உங்கள் தலைமுடி பளபளவென மின்னும்.. கூடவே முடி உதிர்தலும் தடுக்கப்பட்டுவிடும். தொடர்ந்து செய்துப் பாருங்கள்.. பலன் நிச்சயம்.

நோய்த்தீர்க்கும் பந்தயத்தில் வெல்லும் வெந்தயம்:(Turmeric prevents hair shedding)


வெந்தயம் தலைப்பில் உள்ளவாறே, முக்கிய வைத்தியங்களில் பயன்படுகிறது. தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மாபெரும் மருந்து. அந்தக் காலங்களில் வெந்தயத்தை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தார்கள். அப்போது பெண்களின் தலைமுறை "கருகரு"வென இருந்தது. இப்போது கருமைநிறம் கொண்ட கூந்தல் உடையவர்கள்கூட அதை சாயம்(hair dye) பூசி வெளுத்துவிடுகிறார்கள். இயற்கையான கூந்தலே பெண்களுக்கு என்றுமே அழகுதரும். 

வெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து தலைத்துக் குளித்துவர முடிஉதிரும் பிரச்னை நாளடைவில் ஒழிந்துபோகும். கூந்தலுக்கு பளபளப்புத் தன்மைத்தரக்கூடிய இந்த வெந்தயம்.

முடிஉதிரும் பிரச்னை யார் யாருக்கெல்லாம் வரும்?


இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை.. இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். சிலருக்கு பாரம்பரியமாக வரும்.. சிலருக்கு இது அவரவர்கள் பணிபுரியும் சூழலுக்கேற்ப அமையும்.. தூசி மிகுந்த, வெப்ப மிகுந்த சூழல்களில் பணிபுரிபவர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் அதிகம் இருக்கும். இவ்வாறானவர்கள் தங்களின உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியமாகும். 

வேறு சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும், மருந்து மாத்திரைகளால் கூட, பக்கவிளைவாக முடிஉதிரும் பிரச்சனை இருக்கும். இவைற்றையெல்லாம் கவனமுடன் கையாளும்போது மிக விரைவாக முடிஉதிரும் பிரச்னையை சரி செய்யலாம்..

http://www.thangampalani.com/2012/07/to-prevent-hair-losing.html



--
*more articles click*
www.sahabudeen.com