Sunday, July 17, 2016

எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்



தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை 'தின ஒழுக்கம்' என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.
மாசுக்களால் பாதிப்பு

சுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது.  வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள். 'சனி நீராடிய' அந்தக் காலத்தில் சரும நோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது. ஆனால், இன்றோ, தீபாவளிப் பண்டிகை நாளில்கூட எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு, ஷாம்பூ போடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லது அல்ல. ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும். தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமேகூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.  
ஏராள நன்மைகள்

உடல் உறுப்புகள் பாதிக்கும். தோல், கல்லீரல், எலும்பை இணைக்கும் பகுதிகள், தசைகள், தோலில் உள்ள திசுக்கள் பாதிப்புக்கு உள்ளாகும். 'இன்சோம்னியா மஸ்குலர் பெயின்' என்ற தூக்கமின்மை பாதிப்பு ஏற்படும். விரைவிலேயே வயோதிகத் தோற்றத்தை தரும். ரத்த சம்பந்தமான பிரச்னைகள் வரும். மேலும், அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், கவலை, எரிச்சல், சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தலைதூக்கும். உடலில் உஷ்ணம், பித்தம் அதிகரிக்கும். பொதுவாக, உடலினுள் இருக்கும் சூடுதான் நோயை அதிகரிக்கச் செய்கிறது. உள்ளுக்குள் உஷ்ணம் அதிகமாகும்போது வைரல் இன்ஃபெக்ஷன் ஏற்படும். காமாலை, அல்சர், வைரல் நோய்கள், வயிற்றுவலி, கண் நோய்கள் என வரிசைகட்டி வரும்.  
மனம் லேசாகும்

சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும்.  மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, 'உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு...' என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.

வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும். மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும். பேன், பொடுகுத் தொல்லை இருக்காது. முடி நன்றாக வளரும். முன்னந்தலையில் வழுக்கை விழாது. எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும். சரும வறட்சி நீங்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.
எப்படிக் குளிக்க வேண்டும்

ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள்கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
ஆஸ்டியோபொரோசிஸ், வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் 'சுக்கு தைலம்' வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம். வேர்க்குரு இருந்தால் 'அருகம்புல் தைலம்', 'வெட்டிவேர் தைலம்' தடவிக் குளிக்கலாம். குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்.

யாருக்கெல்லாம் தேவை இல்லை
காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், அடிபட்டு உள் காயம்பட்டவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம். மசாஜ் செய்யவே கூடாது.  
வீட்டிலேயே தயாரிக்கலாம்
2, 3 கைப்பிடி அருகம்புல்லுடன் 2 ஸ்பூன் கார்போக அரிசி, 10 கிராம் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்துவிடவேண்டும்.  இந்த எண்ணெயை மிதமான தீயில் புகை வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி, தலைக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு பயத்த மாவைத் தேய்த்து அலசலாம்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'சந்தனாதித் தைலம்' வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம்.  

 எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.  
 அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது.  சட்டென சளி பிடிக்கலாம்.  
 உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில்  இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும்  நெருங்காது.  
- ரேவதி
http://suransukumaran.blogspot.in/2014/09/blog-post_5.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, July 15, 2016

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்துவதற்கு

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்த பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம்.மடிக்கணினிகளில் புதிதாக பற்றரிகள் கூடுதலான நாட்களுக்கு உழைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

கணினி செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.

இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப் படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

1. ஸ்லீப் மோட்(Sleep mode): இது ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக்கம் டிவிடியில் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் Pause அழுத்தித் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஒப்பாகும். கணினியின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படும்.

இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மென்பொருள் இயக்கங்களும், திறந்திருக்கும் டாகுமெண்ட்களும் நினைவகத்தில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில் இயக்கி விடலாம். அடிப்படையில் இது Standby செயல்பாட்டினைப் போன்றதாகும். குறைவான காலத்திற்கு கணினியின் செயல்பாட்டினை நிறுத்த வேண்டும் எனில் இதனை மேற்கொள்ளலாம்.

2. ஹைபர்னேட்(Hibernate): இதனை மேற்கொள்கையில் திறந்திருக்கும் உங்களுடைய டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கில் சேவ்செய்யப்படுகின்றன. கணினி shut down செய்யப்படுகிறது.

இந்த ஹைபர்னேட் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் ஸீரோ மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. மீண்டும் இதற்கு மின்சக்தி அளிக்கப்படுகையில் அனைத்தும் விட்ட இடத்திலிருந்து இயக்க நிலைக்கு வருகின்றன. அதிக நேரம் பயன்படுத்தப் போவதில்லை எனில், உங்கள் கணினியினை குறிப்பாக மடிக்கணினியினை இந்த நிலைக்கு மாற்றலாம்.

3. ஹைப்ரிட் ஸ்லீப்(Hybrid Sleep): ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இணைந்ததுவே ஹைப்ரிட் ஸ்லீப் ஆகும். இது பொதுவாக டெஸ்க்டொப் கணினிகள் மட்டுமே பயன்படுத்தும் வசதி.

இந்த நிலையை மேற்கொள்கையில் திறந்து பயன்படுத்தக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்களும், சார்ந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளும், ஹார்ட் டிஸ்க் மற்றும் நினைவகத்தில் வைக்கப்படும். உங்கள் கணினி மிகக் குறைந்த மின்சக்தியில் உறங்கிக் கொண்டிருக்கும்.

நீங்கள் மீண்டும் வேலையைத் தொடங்க எண்ணி இயக்கியவுடன் மிக வேகமாக இவை பயன்பாட்டிற்குக் கிடைக்கும். டெஸ்க்டொப் கணினிகளில் இது மாறா நிலையில் இயங்கும்படி வைக்கப்பட்டுள்ளது.

மடிக்கணணியில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. எனவே உங்கள் டெஸ்க்டொப் கணினியை எப்போது ஸ்லீப் மோடில் போட்டாலும், அது உடனே ஹைப்ரிட் ஸ்லீப் மோடுக்குச் சென்றுவிடும்.

ஹைப்ரிட் ஸ்லீப் மோட், டெஸ்க்டொப் கணினிகளுக்கு ஏற்றதாகும். மின்சக்தி கிடைக்கும்போது, விண்டோஸ் இயக்கம் மெமரியை விரைவாக அணுக இயலவில்லை என்றால், உடனே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து கோப்புகளையும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்ளும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, July 13, 2016

உங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா ??? இதை செய்து பாருங்கள் !!


மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.
ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.
இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.
ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.
உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.
2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.
3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.
4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.
5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.
6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.
7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.
8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.
9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்
10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.
11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.
12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.
13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.
14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.
15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.
16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி……ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்
www.tamilnewsbbc.com


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Monday, July 11, 2016

PASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....!

இன்று பலர் தங்களது தேவைகளை எளிதான முறையில் பூர்த்தி செய்து கொள்ள ஆன்லைன் சேவையை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஆன்லைன் சேவையை பயன்படுத்த தங்கள் அக்வுன்டின் கடவுச்சொல்லை பயன்படுத்தி தங்கள் சேவைகளை தொடர்வார்கள்.இவ்வாறு பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை பல செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டுகள் திருடி அதனை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார்கள் .
                                        
 இவ்வாறு எளிமையான சொல்லை கடவுச்சொல்லாக கொடுத்தால் அந்த கடவுச்சொல்லை திருடதான் செய்வார்கள். எனவே அவர்களால் திருட இயலாத சொல்லை கடவுச்சொல்லாக கொடுக்க வேண்டும். அப்படி என்ன கடவுச்சொற்களை கொடுத்தார்கள் என பார்ப்போமா....

அடோப் நிறுவனத்தின் அறிக்கை

மேலும் கடந்த அக்டோபர் 4 அன்று அடோப் நிறுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அது என்னவென்றால் 38 மில்லியன் அக்வுட்டுகள் மற்றும் அவற்றின் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படி திருடப்பட்டதற்க்கு காரணம் அக்வுட்டின் உரிமையாளர்கள் மற்றவர்கள் திருடும் வகையில் கொடுத்த கடவுச்சொற்கள் தான்.

கொடுக்கக்கூடாத கடவுச்சொற்கள்

1.123456
2.123456789
3.password
4.admin
5.12345678
6.qwerty
7.1234567
8.111111
9.photoshop
10.123123
11.1234567890
12.000000
13.abc123
14.1234
15.adobe1
16.macromedia
17.azerty
18.iloveyou
19.aaaaaa
20.654321.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, July 9, 2016

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காய் என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம். 
ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.
வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது.
ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியன மலிந்துள்ளன.
ஏலக்காயை உணவில் சேர்ப்பதற்கான காரணம் அதன் மணந்தரும் தன்மைக்காக மட்டுமல்ல அது வாயுவை வெளியேற்றக் கூடியது. செரிமானத்தை துரிதப்படுத்தக் கூடியது. குடலின் சளிப் படலத்தை குளிர்விக்கச் செய்வது, இதனால் சீரண உறுப்புகள் செம்மையாகச் செயல்பட ஏதுவாகின்றது.
ஆயுள் வேத நூல்களின் படி ஏலக்காய் குடலிலுள்ள வாயுச் சத்தையும் நீர்ச்சத்தையும், கட்டுக்குள் வைத்து உண்ட உணவை விரைவிலும் முற்றிலுமாகவும் சீரணிக்க உதவுகின்றது என்பது தெரிய வருகின்றது ஏலக்காயில் நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் நறுமணம் தருவதாகவும் இருக்கிறது.
வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது. வாய் துர்நாற்றத்துக்கான வேறு எக்காரணம் ஆனாலும் அவற்றைக் கண்டிக்க கூடியதும் ஏலக்காய் மட்டும் ஆகும். குடல்புண் (அல்சர்) என்பது மிகச் சாதாரணமாக இன்று எல்லோராலும் சொல்லப்படுவதாக உள்ளது.
இது மிகத் துன்பம் தருவது மட்டுமின்றி பல அறுவைச் சிகிச்சைக்கும் நம்மை ஆளாக்குகிறது. ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் உட்சுவர் பகுதிகளுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.
ஏலக்காயில் உள்ள எண்ணெய் சத்து ஒருவகை குளிர்ந்த தன்மையை உண்டு பண்ணி வயிற்றெரிச்சலைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஏலக்காய் நுரையீரலின் ரத்த ஓட்டத்தை தூண்டிச் செம்மைபடுத்த வல்லது. இதனால் நுரையீரலைச் சரியாக இயக்கி சுவாச நாளங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.
ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சளி, இருமல் ஆகியவற்றினின்று நிவாரணம் தருகின்றது. நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளித்தள்ளவும் ஏலக்காய் உதவுகின்றது. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் உடலுக்கு சக்தியைத் தரும் ஒரு புதையலாகக் கருதப்படுகிறது.
உடலிலுள்ள ரத்தம், நீர்மம் திசுக்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான பொட்டாசியம் ஆகும். ஏலக்காயில் மிகுந்துள்ள இச்சத்து இதயத்துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை (பி.பி) சமப்படுத்த உதவுகின்றது. ஏலக்காயில் உள்ள செம்புச் சத்து, இரும்புச் சத்து, ரிமோபிளேவின், விட்டமின் சி, நியாஸின் ஆகியவை சிகப்பு அணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானவை.
சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையிலிருந்து விடுதலை தருகிறது. ஏலக்காயில் நல்ல ஊட்டச்சத்தும் (டானிக்) தூண்டும் சத்து இருப்பதால் உடலுக்கு பலம் தருவதோடு உடல் உறவுக் குறைபாடுகளை போக்கக் கூடியது. விந்து முந்துதல் மற்றும் இயலாமை ஆகிய குறைபாடுகளைப் போக்கும் மருந்தாகக் கூடியது, உடல் உறவில் வன்மையும் நீண்ட நேரத்தையும் தரக் கூடியது.
இரண்டு அல்லது மூன்று ஏலக்காய்களைப் பொடித்து எடுத்துக் கொண்டு அத்துடன் சிறுதுண்டு இஞ்சி, நான்னைகந்து இலவங்கப்பூ (கிராம்பு) சிறிது தனியா (கொத்துமல்லி விதை) ஆகியவற்றை சேர்த்து அரைத்து வெந்நீருடன் உள்ளுக்குச் சாப்பிடுவதால் செரிமான மின்மைக்கும் வயிற்றை நிரப்பிய வாயு வெளியேறுவதற்கும் உதவும்.
ஏலக்காய் டீ தலைவலியையும் போக்கும். ஒரு கப் தேனீர் எனில் வழக்கமான தேயிலை தூளைச் சற்று குறைத்து பதிலாக இரண்டு ஏலக்காய் பொடித்து சேர்த்து தேனீர் வைத்துக் குடிக்க சீரணமின்மையால் வரும் தலைவலியோடு சாதாரணமாக வரும் மன அழுத்தம் தணியும்.
நான்கைந்து ஏலக்காயும் சிறிது புதினா இலைகளும் சேர்த்து அரை தம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டிப் போதிய சுவை சேர்த்து மிதமான சூட்டோடு குடிப்பதில் விக்கல் உடனே நிற்கும்.
வெறும் ஏலக்காயை மட்டும் நான்கு போட்டு கொதிக்க வைத்து அத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடிக்க தலை கிறுகிறுப்பு, வெயிலில் அலைந்ததால் வந்த மயக்கம் போகும்.
அடிக்கடி வாயு வெளியேறுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்னால் அலுவலகத்துக்குப் போகவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏலக்காய் இருக்க ஏன் அஞ்சுவது, ஏலக்காயை நன்கு காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு வேண்டும்போது அரை தேக்கரண்டி பொடியை எடுத்து 150 மி.கி நீரிலிட்டு கொதிக்க வைத்து உணவு உண்ணும் முன் இதைப் பருகி வர வாயுத்தொல்லை வேறோடு வெட்டி எடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு செரிமானமின்மையாலோ வேறு காரணங்களாலோ வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடித்து அதைத் தேனில் குழைத்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை நாவில் தடவி வர உடனே வாந்தி ஆவது நிற்கும்.
நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பிலிட்டுப் புகைக்கச் செய்து அப்புகையை நுகரச் செய்வதால் குழந்தைகளின் ஜலதோஷம், மூக்கடைப்பு குணமாகும். ஏலரிசி, சுக்கு, லவங்கம், சீரகம் இவை நான்கையும் ஓரெடையாய்க் கொண்டு பொடித்து தூளாக்கி வேளைக்கு 17கிராம் வீதம் கொடுத்து வர வயிற்று வலி குன்மம் இவை நீங்கும்.
இரண்டு அல்லது மூன்று ஏலக்காயைப் பொடித்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாலோடு காய்ச்சி போதிய சுவை சேர்த்து இரவு படுக்குமுன் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி சோகையும் நீங்கும்.
http://azeezahmed.wordpress.com/


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, July 7, 2016

தொப்புள் கொடி

தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! "தொப்புள் கொடி உறவுகள்" நிறைய உண்டல்லவா நமக்கு. "நிஜமான" தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.
கருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று "எல்லாமே" தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை.  முதலில் தொப்புள்கொடியின் வேலை என்ன என்று பார்ப்போம்.
பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை, தேவையான ஆக்ஸிஜனை மூச்சுக்காற்று வழியாக நுரையீரல் உதவியுடன் பெற்றுக் கொள்கிறோம். இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு நுரையீரல் வேலை செய்யாது என்பதால், அதன் வேலையை தொப்புள் கொடி செய்யும்.
குழந்தையின் இதயம் இரத்தத்தைப் பம்ப் செய்யும்போது, அந்த இரத்தம் தொப்புள் கொடியில் உள்ள இரண்டு artery – தமனிகள் வழி சென்று, "நஞ்சு " எனப்படும் Placenta – ப்ளாஸண்டாவுக்குச் செல்கிறது. அங்கு, குழந்தையின் இரத்தத்தில் உள்ள கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு, தாயிடமிருந்து ஆக்ஸிஜன் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், ஊட்டங்கள் ஆகியவை பெறப்பட்டு, குழந்தையின் இரத்தத்தில் கலக்கின்றன. பின்னர் அதே தொப்புள்கொடியில் உள்ள vein – சிரை வழியே மீண்டும் குழந்தை உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இது பிரசவம் வரை தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல். இதன் கட்டுப்பாடு குழந்தையின் இதயத்திடமே உள்ளது என்பதை நினைவில் கொள்க.
 இந்தப் பரிமாற்றம் நடைபெறும்போது, குழந்தையின் இரத்தமும், தாயின் இரத்தமும் கலந்துவிடாதபடி பாதுகாக்கும் முறையில் ப்ளாஸண்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசவ வலி தொடங்கியதும், தொப்புள் கொடியினுள் இரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. பிரசவம் நடந்ததும், சில நிமிடங்களில் தொப்புள் கொடியின் மீது  நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரு முனைகளிலும் க்ளிப்கள் போட்டு, அதன்மூலம் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பின் கத்தரித்து விடுவார்கள். இதுதான் பிரசவத்தின்போது வழமையாகச் செய்யப்படுவது.   அவ்வாறு நிறுத்துவது குழந்தையின் நுரையீரல் வேலை செய்ய ஆரம்பிக்கத் தூண்டுவதற்கு இலகுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிறந்தபின், குழந்தை நுரையீரல் வழிதானே சுவாசிக்க வேண்டும்.
தொப்புள் கொடியினுள் உள்ள Vein மற்றும் Artery யை பிரிக்க, அவற்றின் நடுவே Wharton jelly என்கிற கொழகொழப்பான பொருள் உள்ளது. மருத்துவர்கள் தொப்புள்கொடியில் க்ளிப் போட்டு செயற்கையாக நிறுத்தாவிட்டால், பிரசவம் நடந்த மூன்று நிமிடங்களில், தட்பவெப்ப மாறுபாட்டால், இந்த ஜெல்லி பொத பொதவென்று பெருகி இயற்கையாகவே அந்த Vein மற்றும் Arteryயை இறுக்கி, செயல்பாட்டை நிறுத்திவிடும்.
 க்ளிப் போடுவதற்குள், கொடியில் உள்ள இரத்தம் தானாகவே குழந்தையின் உடலில் சென்றுவிடுவது நல்லது. தொப்புள் கொடி இரத்தத்தில் அரிய, பயன்மிகுந்த ஸ்டெம் செல்கள் இருப்பதால், இந்த இரத்தம் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும். குழந்தையின் இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகும். பல்வேறு உடல் நலிவுகளிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் குழந்தை பாதுகாக்கப்படும். உடலில் இரத்த அளவு கூடும். இதே அளவு இரத்தம் குழந்தையின் உடலில் சுரக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால் இந்த இரத்தத்தை தவற விடக்கூடாது. ஆகையால், பொதுவாக மருத்துவர்கள் க்ளிப் போடுவதற்குமுன் கொடியில் இரத்தம் வடியும்வரை காத்திருந்து க்ளிப் போடுவார்கள்.
தொப்புள் கொடியில் உள்ள இந்த இரத்தத்தை நாமாக குழந்தையின் உடலுக்குள் செலுத்த முடியாது. ஏனெனில், குழந்தையின் இதயம்தான் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
மேற்சொல்லியவை எல்லாமே சிசேரியன் அல்லது சுகப்பிரசவம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே நடக்கும்.
இந்த இரத்தத்தின் சிறப்பை, தற்போது "cord blood banking" பிரபலமடைந்து வருவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். தொப்புள் கொடியில் உள்ள இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உட்பட பல்வேறு அரிய நோய்களுக்கான மருந்தாகக் கருதப்படும் பொருட்கள் இருப்பதால் இந்த இரத்தத்தை எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைப்பது பெருகி வருகிறது. இரத்தப் புற்றுநோயின் சில வகைகள், லிம்ஃபோமா என்ற புற்றுநோய், இன்னும் மருந்தே இல்லாத சில வகை அரிய நோய்கள் – குறைபாடுகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஸ்டெம் செல்கள்தான் ஒரே தீர்வு. மேலைநாடுகளில் ஒருவரின் குடும்பத்தில் இவ்வகை நோய்கள் இருந்திருந்தால், அவர்கள் எதிர்காலத் தேவை கருதித் தம் குழந்தைகளின் தொப்புள் கொடி இரத்தத்தை அதற்கென உள்ள வங்கிகளில் சேமித்து வைப்பதுண்டு.  அதே குழந்தைக்கு பின்னாளில் அந்த இரத்தத்தைப் பயன்படுத்த முடியாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதுதவிர, தம் குடும்பத்திற்குத் தேவைப்படாவிட்டாலும், மற்றவர்களுக்கு உதவலாம் என்ற நல்லெண்ணத்திலும் – இரத்த தானம், இறந்தபின் கண் தானம் உறுப்புதானம் செய்வதுபோலவும் – சிலர் சேமிப்பதுண்டு.
இவை தாண்டி, நவீன மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிக்காகவும் இந்த இரத்தம் பெரிய அளவில் தேவைப்படுகிறது. பல மருந்து நிறுவனங்கள் தம் ஆராய்ச்சிக்காக, பெரும்பணம் கொடுத்து இந்த இரத்தத்தை – ஸ்டெம் செல்களைச் சேகரிக்கின்றன.
இப்படிப் பல வகைகளில் இந்த தொப்புள் கொடி இரத்தத்திற்கு டிமாண்ட் இருக்கிறது.
பொதுவாக இந்தியாவில், இதுவரை இந்த இரத்தத்தின் சிறப்பு அறியப்பட்டதில்லை என்பதாலோ, அல்லது இயல்பாகவே அதன் இரத்தம் முழுதும் குழந்தைக்குச் செலுத்தப்பட்டு விடுவதாலுமோ  பிரசவத்தில் தொப்புள் கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது திடீரென இத்தொப்புள் கொடி இரத்தத்திற்குத் தேவை அதிகரித்து வருவதால், அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி பெற்றோர்களைச் சேமிக்கத் தூண்டுகிறார்கள்.
எனினும், இது குறித்துச் சில சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. சில இடங்களில் பெற்றோரின் அனுமதியின்றி, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அந்த இரத்தத்தை மருத்துவர்கள் எடுத்து வெளியில் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே, அதிக இரத்தம் கிடைப்பதற்காக – அதன்மூலம் அதிகப் பணம் பெறுவதற்காக, குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை க்ளிப் போட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
இது பிறந்த குழந்தையின் அனுமதியின்றி, அதன் நலனை பின் தள்ளி,  பெறப்படும் 'இரத்த தானம்' என்றும் கூறப்படுகிறது. (Involuntary blood donation)
மருத்துவர்கள் எல்லாரையும் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நல்ல மருத்துவர்களின் இடையில், சில புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்வர். நாம், நம்மளவில் கவனமாக இருந்துகொள்வதே நல்லது. ஆகவே, உங்களின் பிரசவ மருத்துவரிடம், இதுகுறித்துப் பேசுங்கள். Delayed cord clamping செய்யச் சொல்லிக் கேளுங்கள். தாய் – சேயின் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்கள் நாம் சொல்லமலே செய்துவிடுவார்கள். நீங்கள் அறிந்த கர்ப்பிணிகளிடம் இத்தகவலைக் கூறுங்கள்.
எனினும், சில சந்தர்ப்பங்களில் – குறைமாதக் குழந்தை, பிறவிலேயே சில வகைக் குறைபாடுகளுள்ள குழந்தை போன்ற சமயத்தில்- Early cord clamping செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஹுஸைனம்மா


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, July 5, 2016

உறவை பேனுதல்!

அல்லாஹ் கூறுகிறான்: – "இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்" (அல்-குர்ஆன் 25:54)
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் அந்த நபருடன் உள்ள இரக்கம் காட்டுதல், கருனை என்னும் உறவை துண்டித்து விடுகிறான்
. அல்லாஹ் கூறுகிறான்: – "எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ – அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது" (அல்-குர்ஆன் 13:25)
"இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்" (அல்-குர்ஆன் 2:27)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: – "தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்" அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) மற்றும் அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்: புகாரி (ஹதீஸ் எண்:5985 & 5986)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: – "உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) "உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்' என்று கூறினான்" என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:5988)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: – "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் 'சற்று பொறு' என்றான். 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்றது உறவு. உடனே அல்லாஹ் '(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்றது உறவு. 'இது உனக்காக நடக்கும்' என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்" ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:7502)
எனதருமை சகோதர சகோதரிகளே! உறவைத் துண்டித்து வாழ்வதன் தீமைகளைப் பற்றி இந்த அளவுக்கு கடுமையாக அல்-குர்ஆனும் ஹதீஸ்களும் எச்சரிக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் சர்வசாதாரணமாக ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என இரத்த பந்த உறவுகளைக் கூட துண்டித்து வாழ்வதைக் காண்கிறோம். இஸ்லாம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது என்றால், 'ஒருவர் மற்றொருவருக்குப் பிடிக்காத ஒன்றைப் பேசுவாராயின் அல்லது தம் உறவை துண்டித்து வாழ முயற்சிப்பராயின் உண்மையான முஃமினான அவர் அவ்வாறு பேசுபவரிடம் கனிவான சொற்களைக் கூறி, அவருடைய தவறுகளை மன்னித்து, மறைத்து, அவருக்கு மரியாதை தந்து, அவரிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்வாராயின்,  இன்ஷா அல்லாஹ் தவறாக நடக்க முற்பட்டவர் நாண முற்றவராக தன்னைத் தானே திருத்திக் கொள்வார். இது இஸ்லாம் காட்டும் அழகிய வழி முறையாகும். மேலும் இது அல்லாஹ்விடம் வெகுமதிகளைப் பெற்றுத் தரும் நற்குணமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: – எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?' (இருக்கின்றார்?) நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக!
அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். (அல்-குர்ஆன் 41:33-36) "இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்" (அல்-குர்ஆன் 24:22) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: – "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்" என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி (ஹதீஸ் எண்- 6138) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
"ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஆதாரம் புகாரி (ஹதீஸ் எண்-6076) எனவே நாம் நம் உறவினர்களைப் பேணி வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக, நம்மை ஆக்கியருள வல்ல அல்லாஹ் போதுமானவன்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, July 3, 2016

மிக்ஸி பயன்படுத்துவது எப்படி?

இன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..

மிக்ஸியை பயன்படுத்தும் போது லோ பவராக இருந்தால் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மிக்ஸியில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் பழுதடைந்துவிடும். மிக்ஸரில் பவர் ஏற்றும் போது முன்றில் இரண்டு பங்கு தான் போட வேண்டும்.

ஜாரில் போட்டு அரைத்தது முடித்ததும் உடனே அதில் தண்ணீர் ஊற்றி மிதமான வேகத்தில் வைத்து ஒரு சுற்று சுற்றி அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.

மாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைப்பதால் மிக்ஸி எளிதில் பழுதாகிவிடும்.

மிக்ஸின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகிவிடும். மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும்.

ஜாடுகளின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாடை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.

மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் ஜாடுகளின் அடிப்பாகத்தில் இரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும்.

அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம். இட்லிக்கு மிக்ஸியில் அரிசி அரைக்கும் போது இரவே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்
http://pettagum.blogspot.in/2014/09/blog-post_95.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, July 1, 2016

இளமைக்கு 25 வழிகள்!


யாராவது உங்களை 'அங்கிள்' என்றோ 'ஆன்ட்டி' என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். "சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, "சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?

அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

1 'ஆன்ட்டி ஏஜிங்' என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்'தான் நினைவுக்கு வரவேண்டும். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.

2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.

4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.

5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!

6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்' சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.

7 "மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது" என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும்.

8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.

9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.

10 அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.

13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.

14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.

15 குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.

16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.

17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

18 கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்' போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்'குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ் க்ரீம்'களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.

19 தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான். ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.

20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.

21 உடல் 'ரிலாக்ஸேஷனு'க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.

22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே' என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.

23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்' என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.

24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.

25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது?

http://www.muthamilmantram.com


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com