Saturday, August 4, 2012

கோவையில் நாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை

கோவையில் நாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மை

இறைவனின் திருப்பெயரால்

நான் சொல்லுவதெல்லாம் உண்மை....

உண்மையை தவிரவேறில்லை...........கோவையில் இருந்து ஓர்.......... 

சுதந்திரம்..................ஆஹா அருமை ஆனால் அதை பெறுவதற்குள் மத கலவர மழை பெய்து ரத்தமும்...........சதையுமாய் கிடந்தது வட மாநிலங்கள்.

சென்னை மாகாணம்,.. நீதி கட்சி பெரியாருக்கு ஜாதி ஒழிப்புக்கு நேரம் போறவில்லை, திராவிட கட்சி தலைவர்களுக்கு  மனிதம் தெரிந்திருந்தது அதனால் மரண வலி வராமல் பார்த்து கொண்டார்கள்

தமிழ்தேசம், இந்தி ஒழிப்பு, குல கல்வி ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு பல ஒழிப்புகள் இங்கே பாக்கி ஆகவே நாங்க பயங்கர பிஸி தமிழர்களின் மன நிலை.. நல்லது.

1969 முதல் 1976 வரை தமிழகத்தில் தி.மு.க.வின் அலங்காரம்

1972 அக்டோபரில் ஆவேசமாக வெளியேறினார் எம்.ஜி.ஆர் கருணாநிதியின் 'கார்னர்' விளையாட்டை காரி துப்பி விட்டு

1977 எம்.ஜி.ஆர் ஆட்சி "யாரங்கே" கொண்டுவாருங்கள் கருணாநிதியை. இவர் அறிவியல் பூர்வ ஊழல்வாதி நான் சுத்த கரங்களுக்கு "சொந்தக்காரன்",

எம்.ஜி.ஆர். எல்லா படங்களும் வெற்றி, நாளை நமதே.. ஆட்சியும் நமதே

1980, தேர்தல் மீண்டும் வெற்றி இனித்தது எம்.ஜி.ஆர் க்கு நல்ல விருந்து ஆனால் தொண்டையில் முள் சிக்கி கொண்டு உறுத்தியது.

அந்த முள் "சிறுபான்மையினர் ஓட்டு வங்கி தி.மு.க விற்கு உள்ளது"

" யாரங்கே அழைத்து வாருங்கள் பிராமணர்களை இனி இவர்கள் தான் என் நன்பர்கள்"

தி.மு.க வின் ஜாதி ஒழிப்பு பிரச்சாரம், பிராமண எதிர்ப்பு பிரச்சாரமமாய்  இயற்கையாய் அமைந்தது நன்மைக்கே,

அதே நேரம் கருணாநிதியும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கி சிதையாமல் இருக்க எல்லா லீக்குகளையும்  வீக் ஆக்கிக்கொண்டிருந்தார்,

அப்பொழுது சிறுபான்மையினர் ஆயுள் காப்பாளர் கருணாநிதி தான்.

1981 "முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும் பொழுது இந்துக்களுக்கு ஏன் அமைப்பு இருக்க கூடாது " அடி மனதில் இருந்த கருத்து ஆழமாய் வெளியேறியது எம்.ஜி.ஆர்க்கு.

ஆட்சி போதையில் அவர் எடுத்த வாந்தி அந்த அசிங்கத்தில் இருந்து முளைத்தார்கள் பல கலவர தலைவர்கள் 

1981. இந்து எழுச்சி மாநாடு..

''ஆதரவுக்கு ஆண்டவர் எம்.ஜி.ஆர் இருக்கிறார் ஆகவே ஆரம்பிங்கள்'' 

தமிழகமெங்கும் ஷாகா பயிற்சி வகுப்புகள்

முஸ்லிம்களை எப்படி ஒழிக்க வேண்டும் தின வகுப்புகள் ஆரம்பம்

விநாயகர் சதுர்த்தி கலவரங்கள்

பொது கூட்டங்களில் முஸ்லிம்களை கொச்சைப்படுத்துவது

கூடவே பாப்ரி மஜ்ஜித் பிரச்சினை விஸ்வரூபம்

ஷபானு வழக்கில் ஷரியத்தில் விளையாடியது

தமிழக முஸ்லிம்கள் பதட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலை 

லீக்கினர் ஓடினர் ஆயுள் காப்பாளரிடம்..... "அவர் நிலையே அந்தோ பரிதாபம்" 

பொறுத்தது போதும்... ஆயக்குடியில் இருந்து ஆவேசமாய் புறப்பட்டார் அஹமது அலி (பழனி பாபா)

போதும் எம்.ஜி.ஆர் புராணம், திருக்குர்ஆர்னும் வேணும் என்ற முடிவெடுத்தார்

வீதிதோறும் பொதுக்கூட்டம், தேதி தோறும் வழக்குகள், பேச்சில் மொழி இல்லை வெறி இருந்தது.

இஸ்லாமிய இளைஞர்கள் இரவில் ரகசியமாய் பார்த்தார்கள் பாபா வின் பேச்சை... பகலில் சொன்னார்கள் இவர்தான் சரி.....

நன்றி..... உங்கள் பேச்சே எங்கள் உணர்வு ஆவேசமாய் ஆமோதித்தார் சையது அஹமது பாஷா(பாஷா பாய்) 

1983 ஜூன் முதல் நோன்பு... காமத்தில் மிஞ்சி நிற்பது கதிஜாவா கன்னிமேரியா?

திருக்கோயிலூர் சுந்தரம் கத்தி கத்தி பேசினான் கோவையில்

கத்தியால் பதில் அளித்தார் பாஷா பாய்

1984 ஜூலை "விநாயகர் சதுர்த்தி" பெயரால் மத கலவர வியாபாரம் செய்து. கோடியில் புரண்ட கேடி ராமகோபாலனுக்கு மனநிலை சரியில்லை

மதுரை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்தியம் அளித்தார் பாஷா பாய் 

அஹமது அலியின் பேச்சு சையது அஹமது பாஷா வின் செயல்... ரெடி... இஸ்லாமிய இளைஞர்களும்.. கூடவே அரசியலும் 

களத்தில் கலவரம், கருணாநிதி, ஜெயலலிதா

வியாபாரம் ஆரம்பம் T.K.மார்க்கெட்டில். 1986 கேரள முஸ்லிம்கள் வியாபாரத்தில் போட்டியா?

ஒழிக்க வேண்டும் என்ன செய்யலாம் ஆலோசித்தார்கள் மூகாம்பிகை மணியும், பரமசிவமும்

"கழுதை கெட்டால் குட்டிசுவர்" உடனே ஆரம்பித்தார்கள் "இந்து முன்னணி" 

வியாபாரத்திற்கும் பாதுகாப்பு இல்லையா பதிலுக்கு என்ன செய்யலாம், A.A.A.அஜீஸ் தலைமையில் உருவானது ஜிகாத் இளைஞர் மையம்...... 

வியாபாரம் கலவரத்துடன் ஆரம்பம் ஆனது..., கூடவே விநாயகர் சதுர்த்தி

1987 ஞாயிறு. கெம்பட்டி காலனியில் இந்து முன்னணி நிகழ்ச்சி அந்த வழியாக சென்ற அப்துல்ரகுமானும் , கரீமும் தாக்கபட்டார்கள்

செவ்வாய், T.K.மார்க்கெட்டில் வரலாறு கண்ட கலவரம் அலாவுதீன்/சீராஜ்/அப்துல் ரஹ்மானுக்கு, அரிவாள் வெட்டு...

அவர்களுக்கும் வெட்டு... நிறைய பேருக்கு காயம்,

நிறைய பேருக்கு கடை போனது... நிறைய பேருக்கு கனவுகளும் போனது. அலாவுதீனுக்கு தியாகி பட்டமும் கிடைத்தது

வியாபாரத்திற்கு செல்லும்போது காய் அறுக்கும் கத்தி பத்தாது கழுத்தறுக்கும் கத்தியும் தேவை என்பதை உணர்ந்தார்கள்.......

களரியும், ஷாகாவும் புறம்போக்கு நில கோயில் போல ஆங்காங்கே முளைத்தது 

சிறை அழைத்தது.... 

1988 சிவேரியர் வீதி தெருச்சண்டை முஸ்லிம்கள் 24 பேர் கைது. காவல்துறையின் கடும் தாக்குதல்,

இந்து முன்னணியினர் 26 பேர் மீது வழக்கு மட்டும்.... நல்ல நீதி 

சிறை இப்படித்தான் இருக்குமா!..வாய் பிளந்து பார்த்தார்கள்..

சிறைக்குள்ளும் மோதல் ஆகவே சிறைக்குள்ளும் சிறை அதிகாரிகள் பிரிவினையை ஏற்படுத்தினார்கள்.

தனி தனி ஏரியா, வெளியே கெம்பட்டிகாலனியும் கோட்டை மேடும் பிரிந்தது போல 

கொலை... கொலை... யாய் முந்திரிக்கா தமிழகத்தில் முந்தியது கோவை..... 

1988 லத்திப் கொலை

1989 ஏப்ரல் ஹக்கீம் செல்வபுரத்தில் கொலை

1989 நசீர் V.H.ரோட்டில் கொலை

1989 கணேஷ் (வீரகணேஷ்) கொலை

1990 அஹமது கபீருக்கு ரத்தினபுரியில் மரண வெட்டு

1990 சிவா (வீர சிவா) வெட்டவில்லை அறுக்கப்பட்டான்

1990 தப்லீக் ஜமாத் ஜியாவுல் ஹக் பூ மார்க்கெட்டில் கொலை

1991 சேத்துபட்டு R.S.S அலுவலகத்தில் குண்டு வெடிப்பு

1992 பாப்ரி மஜ்ஜித் இடிப்பு

கோவையில் மத அடையாளத்துடன் நடமாட முடியாத சூழ்நிலை உருவானது

1993 அல் உம்மா முறைப்படி ஆரம்பம்

1993 CBI ஆல் பாஷா பாய் கைது

1993 கோவையில் 17 முஸ்லிம்கள் தடாவில் கைது

நியமான கோரிக்கையை வலியுறுத்தி போஸ்டர் ஓட்டினால் கூட தேசிய பாதுகாப்பு சட்டம்

1994 கோவையில் சிறை காணாத முஸ்லிம் இளைஞர்களே இல்லை என்ற சூழ்நிலை உருவானது,

கொத்து கொத்தாக இளைஞர்கள் கைது. போலீஸ் அடி, பஜ்ர்   தொழுகைக்கு சென்றாலே கொல்லப்படுவோமோ என்கிற சூழ்நிலை,

தாடி வைப்பது தேச விரோத குற்றம் போன்ற பார்வை, பர்தா அணிந்த பெண்களை சோதனை என்ற பெயரால் வேதனை

கோவையை போலவே, மேலப்பாளையம், நாகூர் போன்ற முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காவல்துறை அராஜகம்.

காக்கி கலர்களை பார்த்தாலே முஸ்லிம்களுக்கு கால்கள் நடுங்கியது,

பல்வேறு கட்சிகள் இருந்தும், சமுதாய கட்சிகள் உட்பட முஸ்லிம்களுக்கு குரல்கொடுக்க பயந்த காலம்,

வழக்குகள் வழக்கமாகியது, நிபந்தனை கையெழுத்தால் கோவை முஸ்லிம் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் உலா சென்றார்கள்,

சென்ற இடமெல்லாம் சமுதாய உணர்வுட்டினார்கள்

1996 ஜன 6.. நோன்பு.. அகமது அலி(பழனி பாபா) பொள்ளாச்சியில் படுகொலை

1996 திருப்பூரல் 2 முஸ்லிம்கள் படுகொலை

அதே நேரத்தில் கோவை ரத்தினபுரியில் சம்சுகனி கொலை

குனியமுத்துரில் யூசுப் கொலை, பிறகு.. 

1997 செப். கொலைகள்

சண்முகம் குனிசை-கண்ணன் செல்வபுரம்-மூர்த்தி அண்ணாநகர்-டிக்காராம் V.H.ரோடு- ரமேஷ் காந்திபுரம் 

கலவர உச்சம்.... 

1997 நவம்பர், காவலர் செல்வராஜ் கொலையை தொடர்ந்து 17 முஸ்லிம்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொலை,

முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் சூறை, கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறை முஸ்லிம்கள் வீட்டை விட்டு வரமுடியாத சூழ்நிலை

1998 பிப் 14 கோவை குண்டு வெடிப்பு

மீண்டும் முஸ்லிம்களின் சொத்துகள் சூறை , சுற்றி  வளைத்து வளைத்து முஸ்லிம் கைது .

வெளியெடுக்க வழியின்றி தவித்தது சிறைவாசி குடும்பம் உடனே உதயமானது சிறுபான்மை உதவி அறக்கட்டளை 882 / 2001 எடுத்து வழக்கை கையில் வென்றது 49  பேர் போக மீதமுள்ள சிறைவாசிகளை .

பிறகும் ஓயவில்லை இப்போது சென்றது உயர் நீதீ மன்றத்துக்கு மீதமுள்ள சிறைவாசிகளின் வழக்கை வென்றெடுக்க அல்ஹம்துலில்லாஹ் .

http://www.youtube.com/watch?gl=IN&hl=en&client=mv-google&v=429ySpMtOMQ&nomobile=1
 
 (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை(சிறைவாசிகள்  ) விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். அல் குரான் - 9 : 60 
 
                                                                                                                          

 உங்கள் ஜகாத் மற்றும் ஸதக்காகளை வழங்க தொடர்புக்கு ,
 சம்சுதீன் - 0091 - 9786519783 
கிச்சன் புஹாரி -0091 - 9786997481
 
மண்ணடி அப்துல்ல்லாஹ் - 0091 - 8124794275
 
ஐக்கிய அரபு அமீரகத்தில்
  - 0551237089 
சவுதியில்சகோ. தமீம் அன்சாரி - 0598849885
  
 

CHEQUE, DD மற்றும் MO ஆக அனுப்புபவர்கள் "CHARITABLE TRUST FOR MINORITIES " ICICI BANK A/C NO : ௬௦௫௩௦௧௨௦௮௪௯௦, என்ற பெயரில் அனுப்ப வேண்டிய முகவரி. .
சிறுபான்மை உதவி அறக்கட்டளை
,
96
, வின்சென்ட் ரோடு , மாலை முரசு அருகில்,
 
கோட்டை
, கோவை - 641001,
PHONE-0091-422-4216834.....

 


--
*more articles click*
www.sahabudeen.com



No comments: