Saturday, April 16, 2011

ஆடையணிவதின் ஒழுக்கங்கள்


ஆடையணிவதின் ஒழுக்கங்கள்

ஆடை இறைவனின் அருளாகும்
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)
வெப்பத் தி­ருந்து உங்களைக் காக்கும் சட்டைக ளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தி னான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட் கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான் (அல்குர்ஆன் 16 : 81 )
அழகிய ஆடை அணிதல்
இப்னு மஸ்வூத் (­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்என்று கூறினார்கள்நூல் : முஸ்­ம் (131)
தூய்மையான ஆடையை அணிய வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போதுஇவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று  கூறினார்கள்
அறிவிப்பவர் : ஜாபிர் (­)  நூல் : அபூதாவூத் (3540)
ஆடையணியும் போது வலது புறமாகத் துவங்குதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது புறங்களி­ருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ‎ýரைரா (­)  நூல் : அபூ தாவூத் (3612)
புத்தாடை அணியும் போது ஓதவேண்டிய துஆ
நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகுஅல்லாஹ‎ýம்ம லகல் ஹம்து. அன்த கஸவ்தனீஹி, அஸ் அலுக ஹைரகு வஹைர மாஸ‎ýனிஅ லஹ‎ý. அவூது பிக மின் ஷர்ரிஹி ஷர்ரி மாஸ‎ýனிஅ லஹ‎ý” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (­)  நூல் : திர்மிதி (1689 )
பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
1.    
ஆடை இறைவன் இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிய மிகப்பெரும் அருட்கொடையாகும்.
2.    
அழகிய முறையில் ஆடையணிவது இறைவனுடைய விருப்பத்திற்குரியதாகும்
3.    
அழுக்கான ஆடையை தூய்மையாக்கிய பிறகுதான் அணியவேண்டும். தூய்மையற்ற ஆடை அணிவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.
4.    
ஆடையை அணியத் துவங்கும் போது வலது புறத்தி­ருந்து ஆரம்பம் செய்ய வேண்டும்
5.    
புத்தாடை அணியும் போது ஓதவேண்டிய துஆவை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆடையணிவதில் தடைசெய்யப்பட்ட முறைகள்
ஆடையை தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்லுதல்
மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான் இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றதுஎன்ற இறைவசனத்தை நபியவர்கள் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (­) ” அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்என்று கூறிவிட்டுஅல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்­க்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (­) நூல் : முஸ்­ம் (154)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்இறைநம்பிக்கையாளனின் ஆடை கணுக்கா­ன் பாதிவரை ஆகும்
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (­) நூல் : அபூ தாவூத் (3570)
நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள், ”கணுக்கால்களுக்கு கீழே தொங்கும் (கையில் ) கீழங்கி(யை அணிகின்றவர்) நரகத்தில் (புகுவார்).
அறிவிப்பவர் : அபூ ‎ýரைரா (­) நூல் : புகாரி (5787)

நபி (ஸல் ) அவர்கள்யார் தனது ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” என்று கூறினார்கள். அபூ பக்ர் (­) ” அல்லாஹ்வின் தூதரே நான் கவனமாக இல்லாவிட்டால் எனது கீழங்கியின் இருபக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விடுகின்றதுஎன்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்நீஙகள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவர் அல்லர்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (­) நூல் : புகாரி (5784)
கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது . மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (­) நூல் : புகாரி (367)
ஒப்பனை செய்தல்
நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும்பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (­) நூல் : புகாரி (5885)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    
கணுக்கா­ன் பாதி வரைதான் ஆடைஇறுக்க வேண்டும்.
2.    
பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்கவும் மாட்டான் பேசவும் மாட்டான் பரிசுத்தப்படுத்தசவும் மாட்டான். இதி­ருந்து இது எவ்வளவு கடுமையான பாவம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்
3.    
கைகளை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது.,
4.    
ஆண்கள் பெண்களைப் போல் ஒப்பனை செய்வதும் பெண்கள் ஆண்களைப் போல் ஒப்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
வெள்ளை ஆடையும் காவி ஆடையும்
வெள்ளை ஆடை அணிதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்வெண்மையான ஆடைகளை அணியுங்கள் ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (­) நூல் : திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”
அறிவிப்பவர் : ஸமுரா பின் ‎ýன்துப் (­) நூல் : திர்மிதி (2734)
காவி ஆடை அணிவது கூடாது.
அம்ருப்னு ஆஸ் (­) அவர்கள் அறிவிக்கிறார்கள் . நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போதுஇது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே என்று கூறினார்கள்.”
நூல் : முஸ்­ம் (3872)
அம்ருப்னு ஆஸ் (­) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ” உன்னுடைய தாயா இதை (அணியுமாறு) ஏவினார்கள்?” என்று கேட்டார்கள். நான்இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள்இல்லை அதை எரித்து விடுஎன்று கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் (3873)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    
வெள்ளை ஆடை அணிவது தூய்மையானதும் சிறப்பிற்குரியதும் ஆகும்.
2.    
காவி ஆடை அணிவது கூடாது. அது இறைமறுப்பாளர்களின் ஆடையாகும்.
3.    
காவி நம்மிடம் இருந்தால் அதை எரித்து விடவேண்டும்.
பட்டாடை அணிதல்
பட்டாடை ஆண்களுக்கு ஹராம் ஆகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்பட்டாடை அணிவதும் . தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”
அறிவிப்பவர் : அபூ மூஸா (­) நூல் : திர்மிதி (1642)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”சாதரணப்பட்டையோ அலங்காரப்பட்டையோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் இறைமறுப்பாளர்களாகிய அவர்களுக்கும் மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியதாகும்.”
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (­) நூல் : புகாரி (5426)
பட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்
அறிவிப்பவர் : ‎ýதைஃபா அல்யமான் (­) நூல் : புகாரி (5837)
நபி (ஸல்) அவர்கள்இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதி­ருந்து சிறிதளவும் அணியவே முடியாதுஎன்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (­)  நூல் : புகாரி (5830)
ஆடையில் ஓரிரு வரிகள் பட்டு இருந்தால் அதை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்
நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உமர் (­)  நூல் : புகாரி (5828)
மருத்துவத்திற்காக பட்டாடையை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்
அனஸ் (­) அவர்கள் அறிவிக்கிறார்கள். ” அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (­), ‎ýபைர் (­) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
நூல் : புகாரி (2919 )
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
பட்டாடை அணிவதின் சட்டங்கள்
1.    
பட்டாடை ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும். பெண்கள் பட்டாடை அணிவது கூடும்.
2.    
ஆடையில் ஓரிரு வரிகள் அளவிற்கு பட்டு கலந்திருந்தால் அதனை ஆண்கள் அணிந்து கொள்ளலாம்,
3.    
அதைப் போன்று மருத்துவத்திற்காகவும் ஆண்கள் பட்டாடை அணிந்து கொள்ளலாம்.
4.    
மேற்சொல்லப்பட்ட காரணங்கள் தவிர வேண்டுமென்றே பட்டாடை அணிபவன் மறுமையில் அதனை அணியமாட்டான். அதாவது நரகம் புகுவான்.
5.    
பட்டாடையின் மீது அமர்வதும் தடைசெய்யப்பட்டதாகும்
பெண்கள் ஆடை அணியும் முறை
பர்தா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)
ஆயிஷா (­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். மூமினான பெண்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார் என்பதை யாரும் அறியமாட்டார்கள்றீல் : புகாரி (372)
கணுக்காலுக்கு கீழ் ஆடை அணிவது கூடாது
நபி (ஸல்) அவர்கள்யார் பெருமையுடன் தன்னுடைய ஆடையை இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.” அப்போது உம்மு ஸலமா (­) அவர்கள்அப்படியென்றால் பெண்கள் தங்கள் ஆடைகளின் ஒரங்களை எப்படி விடுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” (முழங்கா­ருந்து ) ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்என்று கூறினார்கள். அதற்கவர்கள்அப்போதும்  அவர்களுடைய பாதங்கள் வெளிப்பட்டால் (என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ”(முழங்கா­­ருந்து) ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும். அதற்கு மேல் அதிகமாக்க வேண்டாம்என்று கூறினாôகள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (­)  நூல் : திர்மிதி( 1653)
­ எழுப்பக் கூடிய சலங்கைகள் அணிந்து வெளியே செல்லக் கூடாது
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24 : 31
பின்வரக்கூடியவர்களுக்கு முன்னால் பர்தா அணியாமல் இருக்கலாம்
தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். ( அல் குர்ஆன் 24 : 31)
பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது ஏற்றுக் கொள்ளப்படாது
அறிவிப்பவர் : ஆயிஷா (­) நூல் : திர்மிதி(344)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1.    
பெண்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்துதான் செல்ல வேண்டும். பர்தா என்பது முகம், இரு முன்கைகள், பாதங்கள் ஆகியவற்றை தவிர மற்ற உடலுறுப்பகளை வெளியே தெரியாத வண்ணம் மறைக்கக் கூடிய ஆடையாகும்.
2.    
பெண்கள் குர்ஆனில் கூறப்பட்டவர்களைத் தவிர வேறு எவர் முன்னாலும் பர்தா இல்லாமல் இருப்பது கூடாது.
3.    
­ எழுப்பக் கூடிய சலங்கை போன்றவைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லக் கூடாது.
4.    
பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
5.    
கணுக்காலுக்கு கீழ் ஆடை அணிவது கூடாது
செருப்பணிதல்
செருப்பணியும் பொழுது முத­ல் வலது புறத்தை முற்படுத்த வேண்டும்.
ஆயிஷா (­) அவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்) அவர்கள் உளூச்செய்யும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும் , காலணி அணிந்து கொள்ளும் போதும் வலப்பக்கத்தி­ருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.”  நூல் : புகாரி ‏5854)
கழற்றும் போது இடது புறத்தை முற்படுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்நீங்கள் செருப்பணியும் போது முத­ல் வலது கா­ல் அணியுங்கள். அதைக் கழற்றும் போது முத­ல் இடது கா­ல் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும் , கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூ ‎ýரைரா (­) நூல் : புகாரி (5856)
ஒரு கால் செருப்பில் நடப்பது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்நீங்கள் ஒரே ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு செருப்புக்களையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள். அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்
அறிவிப்பவர் : அபூ ‎ýரைரா (­)  நூல் : புகாரி (5856)
செருப்பணிந்தும் தொழலாம்
சயீத் அபூ மஸ்லமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் அனஸ் (­) அவர்களிடம்நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுது வந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள்ஆம் (தொழுது வந்தார்கள்) என்று சொன்னார்கள்நூல் : புகாரி (5850)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
செருப்பணித­ன் ஒழுக்கங்கள்.
1.    
அணியும் போது வலது காலை முற்படுத்த வேண்டும்.
2.    
கழற்றும் போது இடது காலை முற்படுத்த வேண்டும்.
3.    
ஒரு கா­ல் மட்டும் செருப்பணிந்து நடப்பது கூடாது.
4.    
செருப்பணிந்து தொழுவது கூடும். ஆனால் செருப்பில் அசுத்தங்கள் இருப்பது கூடாது.. மேலும் இன்றைய காலங்களில் பள்ளிவாசல்களில் தூய்மையான விரிபபுகள் விரிக்கப்பட்டிருப்பதால் செருப்பணிந்து சென்றால் அவை மிகவும் அசுத்தமாகும். எனவே பள்ளிவாசல் போன்ற தூய்மையான இடங்களில் செருப்பணிவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

No comments: