பகுதி -2: குழப்பங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல்
விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.
குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:
விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது. புதுவிதச் சூழலில் விடுதியில் பல புதியவர்களுடன் வாழ்க்கை பயணிக்கவிருக்கும் தருணத்தில், இனம் தெரியாத சில குழப்பங்கள் பெற்றோர்க்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி ..கண்டிப்பாக மனதில் வியாபித்து நிற்கும்.
குழப்பங்கள் - குழந்தைகளுக்கு:
· அப்பா அம்மாவைவிட ரொம்பவும் கண்டிப்பாக இருப்பார்களோ?
· நண்பர்கள் எவ்விதமாக இருப்பார்கள்?
· உணவு எப்படி இருக்கும்?
· என் வேலை அனைத்தையும் நானே எப்படிச் செய்து கொள்வேன்?
· புதிய மொழி எனக்குப் புரியுமா? என் பேச்சை அவர்கள் புரிந்து கொள்வார்களா?
· எப்போதெல்லாம் வீட்டுக்கு வர முடியும்?
· எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுப்பார்கள்?
· இங்கே கொண்டு வந்து சேர்க்க அப்பா அம்மா ஏன் முடிவெடுத்தார்கள்?
குழப்பங்கள் - பெற்றோர்க்கு:
· நாம் செய்வது சரிதானா?
· நம் குழந்தையால் சமாளிக்க முடியுமா?
· உற்றார் உறவினர் நெருங்கிய நண்பர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?
· பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றோம் என்ற குற்ற உணர்ச்சி உறுத்துமா?
· உடல்நிலை சரியில்லையென்றால் சரியாகக் கவனிப்பார்களா?
· உணவு சரியாகக் கொடுப்பார்களா?
· இப்படிச் செய்வதால் நம்மை வெறுத்துவிடுவானா?
· உணர்வுப் பாதுகாப்பு (Emotional security), சூழல் பாதுகாப்பு (Physical security) எப்படியிருக்கும்?
இது போலப் பலவிதமான குழப்பங்கள் வந்து போகும். அவரவர் சூழலுக்கேற்றவாறு வந்து போகும் குழப்பங்கள்.
இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?
இக்குழப்பங்களைத் தெளிவாக்கிக் கொள்ள நாம் செய்ய வேண்டுவது என்ன?
· உற்றார் உறவினர் நண்பர்கள் ஆலோசனைகளைக் காதும், மனமும் கொடுத்துக் கேட்டுக்கொள்ளுங்கள்...ஆனாலும் இதுகுறித்த முடிவை நீங்கள் இருவர் மட்டும் எடுங்கள்.
· அம்மாவும் அப்பாவும் மனம் விட்டுப் பரஸ்பரம் பேசி இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுங்கள்.
· குழந்தையிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
· குழந்தையையும் மனம் திறந்து பேசச் செய்யுங்கள்.
· எந்தக் காரணத்துக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதோ அதற்கான நியாயத்தை விளக்குங்கள்.
· விடுதியைப் பற்றிய, பாதுகாப்பு பற்றிய தகவல்களைச் சரிவரத் தெரிந்து கொள்ளுங்கள்.
· அத்தகவல்களை உள்ளது உள்ளவாறே குழந்தைகளிடம் சொல்லுங்கள்...கூடுதலாகவோ குறைவாகவோ எதுவும் சொல்ல வேண்டாம்.
· குழந்தையின் நிறைகுறைகளைச் சரிவர மதிப்பிட்டு அதற்கேற்றவாறு அணுகுங்கள்.
· விடுதியில் சேர்ப்பதற்கான காரணம் உங்கள் இருவருக்கும் நியாயமாகத் தோன்றும் என்றால், இதையும் ஒரு பொறுப்பாகக் கொள்ளுங்கள். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
குழந்தைகளை அணுகும்போது கருத்தில் கொள்ளவேண்டியது என்ன?
No comments:
Post a Comment