பெங்களூரு: "எனக்கு சயின்சே அலர்ஜி; என்னிடம் வராதே, நான் கத்துத்தர மாட் டேன்...!' "ஆபீஸ் வேலைக்கே நேரம் போத லே; ஒனக்கு கத்துத்தர நேரம் எங்கே இருக்கு!' இப்படி சொல்லும் பெற்றோரா நீங்கள்... இனி, அப்படி சொல்லாதீர்கள். உங்களுக்கு தெரியாவிட்டாலும், குழந்தையுடன் மணல் வீடு கட்டி விளையாடுவது உட்பட எல்லா விஷயத்திலும் சம்பந்தப்பட்டாலே போதும், குட்டீஸ் அருமையாக படிக்க ஆரம்பித்துவிடும்.
பெங்களூரு நகரில், இது தொடர்பாக பெற்றோருக்கு ஆலோசனை கூற, ஸ்ரீஸ்ரீ அகடமி சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கனடாவில் பல ஆண்டுகள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கல்லுõரி ஆசிரியராக இருந்த சுர்ஜித் வர்மா என்பவர், கருத்தரங்கில் பேசினார். குழந்தைகளுடன் பெற்றோரும் சேர்ந்து தான் கருத்தரங்குக்கு வர வேண்டும் என்று நிபந் தனை விதித்ததால், பல பெற்றோர்கள் வந்திருந்தனர்.
கருத்தரங்கில் அவர் பேசியதாவது:குழந்தைகள் நன்றாக படிப்பது, அவர் களின் பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தையின் கல்வியில், ஒழுக்கத்தில் அதிகமாக எதிர்பார்க்கும் பெற்றோர், அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல், குழந் தையை படிக்க நிர்பந்திப்பது, மதிப்பெண் எடுக்கவில்லையெனில் திட்டுவது போன்ற இம்சைகளை தரக்கூடாது. மணல் வீடு கட்டி விளையாடுவது, "ஸ்கிப்பிங்' ஆடுவது, பாண்டி ஆடுவது போன்றவை முதல், பல விளையாட்டுகள் மூலம், குழந்தைக்கு அறிவியல், கணிதம் போன்ற விஷயங்களில் திறமையை வளர்க்கலாம். "டிவி' பார்க்கும் போது குழந்தையுடன் உட்கார்ந்து பாருங்கள். அப்போதுதான், நீங்களும் தேவையில்லாத தொடர்கள், நிகழ்ச்சிகளை பார்க்க மாட்டீர்கள். அப்போது, குழந்தைக்கும் தானாகவே அந்த பழக்கம் வந்துவிடும். பள்ளியில் அடிக்கடி நடக்கும் அறிவியல் கண்காட்சி, போட்டிகளில் பங்கேற்க அனுமதித்து, நீங்களும் அதில் ஆர்வத்துடன் உதவுங்கள். அப்போது தான் குழந்தைக்கு அறிவியலில் ஈடுபாடு ஏற்படும்.
அறிவியல் சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும், அதை பெற்றோர் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைக்கும் அதில் ஆர்வம் இருக்கும். பதிலை தேடுவர்; ஆசிரியர்களிடம் சந்தேகத்தை போக்கிக்கொள்வர். குழந்தைகளுடன் தாய்மார்கள் அதிக அளவில் கல்வியில் ஒத்துழைக்க வேண் டும். பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும், குழந்தையை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு திறமை வளர்வது மட்டுமில்லாமல், பெண்களுக்கும் சுய நம்பிக்கை, ஆளுமை அதிகரிக்கிறது. அறிவியல் ஆய்வுக்கூடத்தில் தான் அறிவியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. பூக்கள், பலூன், முட்டை, நூல், ஊசி போன்றவற்றை வைத்தே கற்றுக்கொள்ளலாம். அதற்கு குழந்தையுடன் பெற்றோர், அறிவியல் கண்காட்சி எங்கு நடந்தாலும் போக வேண்டும். இவ்வாறு வர்மா கூறினார்.

No comments:
Post a Comment