பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!
வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.
அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது, சிக்கன மாக பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த டிப்ஸ்:
டயர் பராமரிப்பு :
டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.
சிக்னலில் சிக்கனம்:
சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.
ஏர்கன்டிஷன் :
கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.
வேகம் :
வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது நல்லது.
தேவை என்ன?
சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.
ஓவர் லோடு :
தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.
முக்கியமானவை இன்னும் உண்டு.வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.
அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது, சிக்கன மாக பயன்படுத்துவது. முதல் வழி, இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால், இரண்டாவது வழியை நிச்சயம் பின்பற்ற முடியும். கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு என்ன செய்தால் பெட்ரோலின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என 'பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷனி’ல் இருக்கும் அதிகாரிகள் நமக்காக கொடுத்த டிப்ஸ்:
டயர் பராமரிப்பு :
டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.
சிக்னலில் சிக்கனம்:
சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.
ஏர்கன்டிஷன் :
கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.
வேகம் :
வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது நல்லது.
தேவை என்ன?
சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.
ஓவர் லோடு :
தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது.
1. விடிய வாகனத்தை (மோட்டர் குளிர் நிலையில் இருக்கும் போது) ஸ்டார்ட செய்து ஓடும் போது, முதல் சில கிலோமீற்றர்களுக்கு மெதுவாக ஓட்ட வேண்டும். (20 வீதத்திற்கு அதிகமான எரிபொருள் வீணாகும் இந்த நிலையில்)
2. கண்ணாடிகளை இறக்கி விட்டு ஓட்டுவது, அதிலும் 50 மீற்றருக்கு அதிகமான வேகத்தில் செல்லும் போது 20 வீதத்திற்கு அதிகம் வீணாகின்ரது.
3. 1,2,3 கியர்களில் வண்டியை தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக "ரேஸ்" பன்னுவதும் கூடாது.
No comments:
Post a Comment