Thursday, April 5, 2012

டிப்ஸ்... டிப்ஸ்....!


1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்
கொண்டு கழுவினால் சுத்தமா சூப்பரா கழுவி எடுத்து விடலாம்.

2. மிக்சியில் காரமான பொருள் அரைத்து விட்டு உடனே ஸ்வீட்டுக்கு தேங்காய் (அ) முந்திரி அரைக்கனும் என்றால் முதலில் மிக்சியில் கொஞ்சம் சோப், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுங்கள் அடுத்து மறுபடி தண்ணீர் போட்டு நன்கு கழுவி விட்டு ஒரு டேபுள் ஸ்பூன் மைதா (அ) அரிசி மாவு போட்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைத்து கீழே ஊற்றி விட்டு அரைத்தால் அந்த கார வாடை அடிக்காது.

3. அரைக்கும் போது மிக்சி சூடாகமல் இருக்க கொஞ்சமா ஐஸ் வாட்டர் ஊற்றி அரைக்கவும்.

4. இல்லை பிரெட் துண்டுகளை போட்டு நன்கு ஓடவிட்டு எடுத்து விட்டு கூட அரைக்கலாம்
மருதாணி நன்கு சிவக்க
போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்
புருவத்தில் முடி வளர
புருவத்தின் முடி வளர விளக்கெண்ணெயையை தினமும் இரவு உறங்குவதற்கு முன் புருவத்தில் தடவி வரவேன்டும்
இதயம் வலிமை பெற
முருங்கை பூவை சுத்தபடுத்தி அதை எண்ணெய் கலந்து அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரக்க
சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும்.
மாதவிடாய்
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
கர்ப்பப்பை வலுவடைய
முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்
கூந்தல் உதிரும் பிரச்னையா?
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
உடல் இளைக்க
தினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.
பூண்டு எளிதாக உரிக்க
பூண்டு எளிதாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் காய வைத்து உரிக்க வேண்டும்
தயிர் புளிக்காமல் இருக்க
தயிரில் ஒரு தேங்காய் துண்டு போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்
இஞ்சி பூண்டு விழுது கலர் மாறாமல் இருக்க
இஞ்சி பூண்டு விழுது டன் சிறிது உப்பு சிறிது எண்ணெய் சேர்த்து வைத்தால் கலர் மாறாமல் அப்படியே இருக்கும்
பிரியாணியின் சுவை அதிகரிக்க
பிரியாணி செய்வதற்கு முன் சிக்கனை தயிர் இஞ்சி பூண்டு மஞ்சள் பொடி போட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் பிரியாணி செய்தால் பிரியாணியின் சுவை அதிகரிக்கும்
உப்புமா ருசியாக இருக்க
எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா ருசியாக இருக்கும்
பாகற்காய் பழுக்காமல் இருக்க
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
புளியோதரை சூப்பராக இருக்க
ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும்
ரவா உப்புமா
ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
மெதுவடை
மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.
பாகற்காய்
பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்.
ரசம் ருசி அதிகரிக்க
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 
மோர் குழம்பு கமகமக்க
மோர்க்குழம்பு செய்யும்போது ஊறவைத்த துவரம்பருப்பு சீரகம் பத்து சின்னவெங்காயம் பச்சைமிளகாய் தேங்காய் அனைத்தையும் அரைத்து சேர்த்தால் வாசனை கமகமக்கும்
தூக்கம் நன்றாக வருவதற்கு
இரவில் தூங்கும் முன்பு பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தூக்கம் நன்கு வருவதுடன் காலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
தலைவலி சரியாக
கறுப்பு மிளகை பாலில்கலந்து நைசாக அரைத்து பத்து போட்டால் தலைவலி பறந்து விடும்
இளநரை மறைய
வெந்தயம் வால்மிளகு சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தேங்ங்காய் எண்ணெயில் கலந்து தடவிவர இளநரை மறையும்
மீன்குழம்பு மணக்க:
மீன் குழம்பு தாளிக்கும் போது வெந்தயம் போட்டு தாளிக்க மணமும் ருசியும் அதிகரிக்கும்.
பூரி மொறு மொறு என இருக்க:
பூரி செய்யும் போது கோதுமைமாவுடன் சிறிது வறுத்த ரவையை சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என இருக்கும்
கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி,மசக்கை நீங்க
புதினா,சிறிதளவு புளி, ஒருஸ்பூன் உளுந்து ,
காய்ந்தமிளகாய் 4 எண்ணெயில்வதக்கி துவையல் அரைத்து
வெறும்வயிற்றில் சுடு சாதத்தில் போட்டு சாப்பிட்டால்வாந்தி,மசக்கை நீங்கும்

No comments: