இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...
பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும்கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்புவிளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவுநேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வைதிறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமேவெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்துஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...
•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாதகாரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர்காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோமற்றொருவர் காரை ஓட்டலாம்.
•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வதுபாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில்நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள்மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாகதெரியும்.
•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கைவிளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்கவேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தைஏற்படுத்தும்.
•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.
•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.
•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்திடீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.
நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்கபகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தைதண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.
•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தைஅவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவுமற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிகவிபத்துக்கள் நிகழ்கின்றன.
காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.
நன்றி: http://thatstamil.oneindia.in/lifestyle/automobiles/2011/night-driving-safety-tips-aid0090.html
Engr.Sulthan
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment