தெரிந்து கொள்வோம் வாங்க-44
* உலகின் எல்லா பகுதிகளிலும் மேலிருந்து கீழே குதிக்கும் போது, இடப்பக்கமாகத்தான் சற்றே விலகி விழுகிறார்கள். காரணம், சூரியனை இட, வலமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தப் பக்கம்தான் அழுத்தம் அதிகம். நீச்சல் வீரர்கள், பாராசூட் வீரர்கள் என அனைவரும் இதனால்தான் இடது பக்கமாகவே படு இயல்பாக குதிக்கிறார்கள்.
* உலகிலேயே முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்கள் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கேயி. 1953-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இந்த சாதனையை நிகழ்த்தினார்கள்.
* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய மிக வயதான பெண்மணி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தமேவர்தனாவே என்பவர். 2002 மே 16-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அவருக்கு வயது 64.
* நாணயங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.
* இந்தியாவில் கி.மு.4-ம் நூற்றாண்டிலிருந்து நாணயம் புழக்கத்தில் உள்ளது.
* இன்றும் தங்க நாணயங்கள் ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
* ரஷியாவில் பண்டையக் காலத்தில் சுவரொட்டி அளவு ரூபாய் புழக்கத்தில் இருந்தது.
* அல்பட்ராஸ் என்னும் வெண்ணிறக் கடற் பறவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு முட்டைதான் இடுகிறது.
* கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 150 முட்டைகள் இடும்.
* ஸ்டிக்கிள் பாக் என்ற மீன் கடற் தாவரங்களைக் கொண்டு கடலின் அடியில் கூடு கட்டி வாழும்.
* அட்லாண்டிக்கின் ஒரு பகுதியான ஸர்காúஸô கடல் உலகிலேயே மிக ஆழமானது. சில இடங்களில் அதன் ஆழம் 19,680 அடிகளாகும்.
* ரஷியாவில் உள்ள அஜாவ் என்ற கடல்தான் ஆழமற்றது. இதன் அதிகபட்ச ஆழமே 42.64 அடி தான்.
* நேபாளத்தின் தேசிய விலங்கு பசு.
* பால் பாயின்ட் பேனாவைக் கண்டறிந்தவர் ஜான்டி லார்டு.
* ஒரு சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம்.
* உலகின் மிகப் பெரிய விமானம் போயிங்-747 ரக விமானம் ஆகும்.
* கறுப்பு நிறக் கொடி துக்கம் மற்றும் எதிர்ப்பை உணர்த்துகிறது.
* இந்திய ரயில்வே 1853-ம் ஆண்டு மும்பையிலிருந்து, தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூர முதல் பயணத்தை துவக்கியது. இன்று உலகின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் மொத்த ரயில் பாதை நீளம் 63,028 கி.மீ. பணியாளர்களின் எண்ணிக்கை 1.54 மில்லியன்.
* தமிழ்நாடு நிலப்பரப்பில் 7-வது இடத்தையும், மக்கள் தொகையில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.
* தமிழகத்தில் படிப்பறிவு விகிதம் 73.47%.
* இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்க்கண்ட். இது 2000-ம் ஆண்டில் உதயமானது.
* இந்திய யூனியன் பிரதேசங்களில் மிகப் பெரியது அந்தமான் நிகோபார் தீவுகள். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட நீதித்துறைச் சார்ந்த பிரச்சினைகளுக்கு கோல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
* லட்சத் தீவின் பரப்பளவு 32 சதுர கி.மீட்டர். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கேரளா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.
* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.
* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன.
* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.
* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.
* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
*நிலவை விட சூரியன் பல மடங்கு பெரியது நமக்குத் தெரிந்தது தான். ஆனாலும் புவியிலிருந்து பார்க்கும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவாகத் தெரிவது ஏன் தெரியுமா?
நிலவின் விட்டத்தை போல் சூரியனின் விட்டம் 400 மடங்கு பெரியது. அதேபோல், புவியிலிருந்து நிலா உள்ள தொலைவை போல் புவியிலிருந்து சூரியன் 400 மடங்கு தொலைவில் உள்ளதே காரணம் ஆகும்.
* வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.
* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.
* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.
* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.
* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.
* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.
*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.
* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.
* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.
* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.
* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை.
*பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நெப்போலியனை முடிசூட்ட, பாரீஸ் நகரிலுள்ள நாத்திரிடாம் "சர்ச்'சில் ஏற்பாடு நடந்தது. நெப்போலியன், போப் 7-வது பயஸ் முன் மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தார். முறைப்படி போப் அவரது தலையில் அபிஷேக எண்ணெய்யைப் பூசி, செங்கோலைக் கையில் கொடுத்தார்.
முடிசூட போப் எத்தனித்த போது, நெப்போலியனே முடியை எடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டு, தன் மனைவிக்கும் முடி சூட்டினார். கூடியிருந்த மக்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர்.
* யானையால் தாண்ட முடியாது.
* பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது.
* நெருப்புக் கோழியின் கண் அதனுடைய மூளையைக் காட்டிலும் பெரியது.
* நீலத் திமிங்கலம் இதயம் ஒரு கார் அளவும், நாக்கு யானையின் நீளத்திற்குச் சமமானது.
* பூனை மற்றும் நாய் மனிதர்களைப் போலவே இடக்கை, வலக்கை பழக்க முடையவை.
* எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
தகவல்:யாழ் இணையம்
Engr.Sulthan
--
*more articles click*
www.sahabudeen.com
No comments:
Post a Comment