Sunday, June 29, 2014

மருந்தாகும் பூக்கள்

மருந்தாகும் பூக்கள்


நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. இந்த பூக்களின் மருத்துவ குணம் அறிந்து நாம் பயன்படுத்தினால் ஒரு சில நோய்களில் இருந்து எளிதாக விடுபடலாமே? இது உங்களுக்கு உதவுகிறதா? என்று பாருங்களேன்
அகத்திப்பூ
அகத்திப்பூவைப் பச்சையாகச் சாப்பிட்டால் வெயிலினாலும், புகையினாலும் ஏற்படும் பித்தம், உடலில் தோன்றும் வெப்பம் ஆகியவற்றை நீக்கலாம்.
அசோகப்பூ
அசோகப்பூவை நன்றாகக் காய வைத்துத் தூளாக்கி 10 கிராம் எடையுள்ளதாய் எடுத்து 30 மில்லி நீரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே குணமாகி விடும்.
அரசம்பூ
அரசம்பூவைத் தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் குழப்பி சொறி சிரங்கின் மேல் தடவி வந்தால் விரவில் குணமாகும்.
அல்லிப்பூ
அல்லிப்பூவைக் காய வைத்துத் தூள் செய்து தினமும் குடிநீரில் கலந்து குடித்தால், மேகநோய் நீர்ப்புழையான் புண், நீரிழிவு நோய், வெப்பத்தால் உண்டாகும் கண் நோய்கள், நீர் வேட்கை, உள் சூடு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மருதோன்றிப்பூ
மருதோன்றிப் பூவைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தால் உடனே தூக்கம் வரும். உடலில் தாங்க முடியாத வெப்பம் இருந்தால் இப்பூவை அரைத்துப் பூசி இரண்டு மணி நேரம் கழித்துக் குளித்தால் குணம் கிடைக்கும். இது போல் இப்பூவை வெண்குஷ்டத்திற்கு அரைத்துப் பூசினால் குணமாகும்.
அன்னாசிப்பூ
அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்.
ஆவாரம் பூ
ஆவாரம்பூவைக் குடிநீரில் போட்டுக் குடித்து வந்தால் நீரிழிவு உப்பு படிதல், நீர் வேட்கை எடுத்தல் போன்றவற்றில் இருந்து குணம் கிடைக்கும்.
உசிலம் பூ
உசிலம்பூவைப் பச்சையாக அரைத்துப் பூசி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள், உடலில் வீக்கங்கள் போன்றவை குறையும்.
இலுப்பைப்பூ
இலுப்பைப்பூவைக் காய வைத்துப் பொடி செய்து குடிநீரில் கலந்து குடித்தால் நீர் வேட்கை குறையும். இப்பூவைப் பச்சையாகப் பால் விட்டு அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் இளைப்பு நோய் குறையும்.
தும்பைப்பூ
தும்பைப்பூவை பசுவின் பால் விட்டு அரைத்து சுத்தமான துணியில் நனைத்து நெற்றிப் பொட்டில் போட்டு வர தலைவலி போய்விடும்.
செம்பருத்திப்பூ
செம்பருத்திப்பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்தம் சுத்தி அடைவதுடன் விருத்தியும் அடையும். இதயமும் வலிமை அடையும். இப்பூவைக் கொண்டு காய்ச்சிய எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் குளிர்ச்சியும் தரும்.
பூவரசம் பூ
பூவரசம் பூவைச் சம அளவு கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துத் தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் மறைந்து தோல் மினுமினுப்படையும்.
நன்றி: சித்ரா பலவேசம் -முத்துக்கமலம்.காம்
www.chittarkottai.com

--
*more articles click*
www.sahabudeen.com


Saturday, June 28, 2014

Contact for Your Award

Corporate Headquarters
Technical Office Chevrolet promotion unit
43/45 The Promenade...
Head Office Chevrolet motors
43/45 The Promenade Cheltenham
Ref: UK/9420X2/68
Batch: 074/05/ZY369
Chevrolet Canter, London, SE1 7NA - United Kingdom

Dear Winner,

Congratulations, you have just won a cash prize of (Ј1,000, 000, 00) GBP One Million Pound Sterling in the satellite software email lottery. On-line Sweepstakes International program held in London time. Conducted by CHEVROLET LOTTERY BOARD in which E-mail address was picking randomly by software powered by the Internet send data's to;
--------------------------------------------------
Officer Name: DR. PRINCE BRIGHT
Email: cbfcuk@yahoo.es
TELL-FAX; +1206-600-7884
CREDIT BOND FINANCE & SECURITY
--------------------------------------------------
Below is the claims and verifications form. You are expected to fill and return it immediately so we can start processing your claims:

1. Full Names:
2. Residential Address:
3. Direct Phone No:
4. Fax Number
5. Occupation:
6. Sex:
7. Age:
8. Nationality:
9. Annual Income:
10. Won Before:
11. Batch number: CHELPT1611201310541PM
12: Ticket Numbers: 69475600545-72113
13: Lucky numbers: 31-6-26-13-35-7
--------------------------------------------------------------------------
We wish you the best of luck as you spend your good fortune thank you for being part of our commemorative yearly Draws.

Sincerely,
MRS. MIRJAM CARMERON
CHEVROLET LOTTERY PROMOTION TEAM.

WEBSITE MALAR 2010 PDF

WEBSITE MALAR 2010 PDF

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சம்பளத்தில் ஒரு மேஜிக்! வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்

  • சம்பளத்தில் ஒரு மேஜிக்! வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்
  • வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் என்பது அடிப்படையான விஷயம்தான். இந்தச் சம்பளத்தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக்கொள்வது பொதுவான நடைமுறை. அப்படி இல்லாமல், வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிறபடி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு அணுகுமுறை.
  • ஒரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும்போது உங்களுக்கு இவ்வளவு சம்பளம், இதில் இது எல்லாம் அடங்கும் என்று சொல்லும். இந்த மொத்தச் சம்பளத்தை அதாவது பணியாளருக்கு நிறுவனம் செய்யும் செலவை ஆங்கிலத்தில் சி.டி.சி. - காஸ்ட் டு  கம்பெனி (Cost to Company) என்பார்கள்.   ஒருவர் வேலைக்குச் சேரும்போதே, இந்த சி.டி.சி.யிலிருந்து அதிக சம்பளத்தைப் பெறுகிற மாதிரி  நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம்.  
  • வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தி நமது சம்பளத்தை இன்னும் அதிகமாக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக முடியுமா?  நாம் வாங்குகிற சம்பளத்தில் எந்தெந்தவற்றுக்கு எவ்வளவு வரிச் சலுகை இருக்கிறது? நிறுவனத்திடம் வரிச் சலுகைக்கு தக்கபடி சம்பளத்தை எப்படி கேட்டுப் பெற வேண்டும்? வருமான வரியை மிச்சப்படுத்த சம்பளக் காரணிகளில் எவை எவை எவ்வளவு சதவிகிதத்தில் இருக்கவேண்டும்? வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை என்னென்ன? என்பது போன்ற பல கேள்விகளுடன் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜியிடமும் மற்றும் சாட்டர்டு அக்கவுன்டன்ட் கீதா குமாரிடமும் பேசினோம்.  அவர்கள் தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள். அந்த விளக்கம் இதோ உங்களுக்காக...
  •  
  • ''பத்து வருடங்களுக்கு முன்பாக சம்பள படிவத்திற்கென்று யூனிஃபார்ம் ஸ்ட்ரக்சர் எதுவும் கிடையாது. ஆனால், இன்று சம்பளப் படிவங்களில் வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு பல வறைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
  • சம்பளத்தில் 35-50% வரை அடிப்படை சம்பளம் (Basic Salary) இருக்கலாம். இந்த பேசிக் மற்றும் பஞ்சப் படியிலிருந்து (டி.ஏ - Dearness Allowance) 12 சதவிகிதம்தான் பி.எஃப். அதே போல ஹெச்.ஆர்.ஏ. (House Rent Allowance) மற்றும் சிறப்புச் சலுகைகள் போன்றவற்றை நிறுவனங்கள் ஒத்துழைக்கும்பட்சத்தில் அவரவர்களின் தேவைக்குத் தக்கபடி கேட்டு பெறலாம்.  
  • முக்கியமானவை மூன்று !
  • ஒருவர் வாங்குகிற சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம், ஹெச்.ஆர்.ஏ. மற்றும் டி.ஏ. ஆகிய மூன்று காரணிகள்தான் மற்ற விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்தக் காரணிகளில் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பதுதான் நல்லது என்றாலும், இதை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.  ஆனால், பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் வரிக்குச் சாதகமாக அமைத்துத் தருகின்றன. இனிவரும் காலத்தில் வேறு துறை நிறுவனங்களும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றலாம்.  
  •  
  • அடிப்படைச் சம்பளம் முழுவதும் வரிக்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்தச் சம்பளத்திலிருந்துதான் பி.எஃப். சேமிப்பு கணக்கிடப்படுவதால் நம்மிடமிருந்து பிடிக்கப்படும் பி.எஃப். தொகை அதிகமாக இருக்கும். இதனால் நிறுவனம் தரும் பி.எஃப். சேமிப்புத் தொகையும் அதிகமாகவே இருக்கும். நீண்டகால நோக்கில், அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பது ஜூனியர் நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு லாபகரமானதாகவே இருக்கும். ஆனால், உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நிறுவனம் தரும் சம்பளம் அதிகமாகத்தான் இருக்கும். இதனால் அவர்கள் அடிப்படைச் சம்பளத்தை நிறுவனத்திடம் சொல்லி குறைவாக வைத்துக் கொள்வதன் மூலம் வருமான வரியைக் குறைக்கலாம். மற்றபடி மற்ற காரணிகளுக்கான தொகை விகிதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதனால் வரிச் செலுத்துவது கட்டுப்படுத்தப்படும்.
  • ஜூனியர் நிலையில் வேலை செய்துகொண்டே அடிக்கடி நிறுவனம் மாறுகிறவர்களுக்கு சம்பளத்தில் நீண்டகால சேமிப்பு என்பது இல்லாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் குறுகியகால அடிப்படையில் மாதம் கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது.
  • முக்கிய காரணிகளில் இரண்டாவதாக இருப்பது பஞ்சப்படி; அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இந்த இரண்டும் பேசிக் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் அடிப்படைச்  சம்பளம் அதிகமாக இருக்கும்போது அதிகமாகவும், குறைவாக இருக்கும்போது குறைவாகவும் கிடைக்கும்.
  •  
  • பஞ்சப்படி கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸைப் பொறுத்து, கூட அல்லது குறையும்படியாகவே ஒருவரின் சம்பளத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும்.
  • அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இது அடிப்படைச்  சம்பளத்தில் இருந்து 40-50% வரை இருக்கலாம். ஹெச்.ஆர்.ஏ. என்பது பணியாளர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அதற்கு வரிச் சலுகை உண்டு. கிராமமோ, நகரமோ பணியாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல ஹெச்.ஆர்.ஏ. விகிதம் மாறுபடும்.
  • நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !
  • அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சலுகை களுக்கான ரசீதுகள் காண்பிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அதன் மீது வரி விதிக்கப்படும். எனவே, அலுவலகம் தரும் சலுகைகளை பயன்படுத்துவதோடு, அதற்கான ரசீதுகளை அலுவலகத்திடம்  சமர்ப்பிப்பது அவசியம். இந்த செலவினங்கள் வரையறையைத் தாண்டக்கூடாது. உதாரண மாக, செல்போன் கட்டணச் சலுகை, தொழில் முன்னேற்றப் படிப்புக்கான ரசீதுகளை  அலுவலகத்தில் சமர்ப்பித்து வரிச் சலுகை பெறலாம். இதுபோல, வேறு என்னென்ன இருக்கிறது?    
  • விடுமுறைச் சுற்றுலா:                    
  • உங்கள் சம்பளத்தில்  சுற்றுலாச் செல்வதற்கான எல்.டி.ஏ. கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்குள் சுற்றுலாச் சென்று வரலாம். இதற்கான செலவினங்களை ரசீதுடன் அலுவலகத்தில் க்ளைம் செய்துகொள்ள முடியும். உங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு சுற்றுலாச் செல்லவில்லை அல்லது முழு தொகைக்கு ரசீதுகள் தரவில்லை எனில், அத்தொகை வருமான வரிக்கு உட்பட்டதாகும்.
  • மருத்துவச் செலவுகள்:
  • ஆண்டுக்கு ரூ.15,000 வரை மருத்துவச் செலவுக்கான ரசீது தந்து வரிச் சலுகை  பெறலாம்.
  • போக்குவரத்துச் செலவுகள்:
  • மாதத்திற்கு ரூ.800,  ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,600-க்கு பில் தந்து கொடுக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.
  • பொழுதுபோக்குச் சலுகைகள்:
  • வருடத்திற்கு ரூ.5,000 வரை அரசுப் பணியாளர்களுக்கு மட்டும்.  
  • மொபைல் அல்லது தொலைபேசி கட்டணச் சலுகை:
  • நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றபடி தொகையின் அளவை அந்தந்த நிறுவனங்களே நியமிக்கும். இந்தச் சலுகை அலுவலகப் பயன்பாடுகளுக்கு மட்டும்.
  •  
  • கல்விச் செலவிற்கான சலுகைகள்:
  • பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்குத் தரப்படும் சலுகைத் தொகை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைகளுக்கான செலவினங்களைச் சம்பளத்தில் காட்டலாம்.
  • ஹாஸ்டல் செலவுக்கான சலுகைகள்:
  • பணியாளர்களின் குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பவர்களாக இருந்தால் அதையும் தனது சம்பளத்தில் காட்டிக்கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு மாதம் 300 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைக்கான செலவினங்களைக் காட்டலாம்.
  • பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பங்குகள்:
  • சலுகைகளுக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும்.
  • போனஸ்:
  • பணியாளர்களுக்கு அலுவலகம் தரும் போனஸ்களுக்கு வருமான வரி உண்டு.
  • தங்குமிடம் சார்ந்தவை!
  • வேலை செய்யும் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கியிருக்கும். இது வாடகை வீடாகவோ அல்லது கம்பெனியின் சொந்த இடமாகவோ இருக்கலாம். ஒரு நிறுவனம் பணியாளர்களின் தங்கும் வசதிக்காக தங்குமிடத்தைக் குத்தகையாக எடுத்திருக்கும்பட்சத்தில் பணியாளர்கள் சம்பளத்தில் 15% அல்லது வீட்டுக்கான வாடகை, இதில் எது குறைவோ அது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். அதுவே, நிறுவனத்தின் சொந்த இடமாக இருக்கும்பட்சத்தில் அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொருத்து மதிப்பீடு விகிதம் மாறுபடும். நகரத்தின் மக்கள் தொகை 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், சம்பளத்தில் 15%, 10-25 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் 10%, அதற்கும் கீழ் மக்கள் தொகை இருந்தால் 7.5% தங்குமிடத்தின் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும்.
  • மெடிக்கல் இன்ஷூரன்ஸ்!
  • பொதுவாகப் பணியாளர் களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்குமான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் வரி கிடையாது. இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.
  • அதேபோல, ஒரு நிறுவனம் சொந்தமாக மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வந்தால் அங்கு மருத்துவம் பார்த்தாலோ அல்லது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்து கொண்டு அதற்கான செலவை கம்பெனி ஏற்றுக்கொண்டால் அந்த தொகைக்கும் வரி கிடையாது. இதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. அதேபோல வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்துகொண்டால் ஆர்.பி.ஐ. அனுமதிக்கும் தொகை வரை வரி கிடையாது. வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் மருத்துவம் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பயணத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.
  •  
  • நீண்டகால அடிப்படையில் கிடைப்பவை!
  • * ஓய்வூதியத் திட்டம்;
  • இத்திட்டங்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு. பணியாளர்களே செலுத்தும் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.
  • * பணிக்கொடை;
  • அரசுப் பணியாளர்களுக்கு பணிக்கொடை தொகை முழுவதற்கும் வரி கிடையாது. மற்றவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை தொகைக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
  • * என்.பி.எஸ்;
  • 80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. முதிர்வின்போது வரியைக் கட்டவேண்டும்.
  • உணவு மற்றும் பரிசு பொருட்கள் சார்ந்தவை!
  • அலுவலக நேரங்களில் உட்கொள்ளும் உணவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு  வருமான வரிச் சலுகை பெறலாம். சில ஐ.டி. நிறுவனங்கள் சொடக்ஸோ (ஷிஷீபீமீஜ்ஷீ) பாஸ் போன்றவற்றை தந்து பணியாளர்களின் வரியைக் குறைக்கின்றன. அதேபோல, பணியாளர்கள் வருடம் 5,000 ரூபாய் வரை நிறுவனத்திடமிருந்து பரிசு பொருளாகவோ அல்லது பரிசு கூப்பன் களாகவோ பெற்றுக்கொண்டால் வருமான வரியைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான தொகை பணமாகச் சம்பளத்தோடு வரும் போது வரி கட்டுவது அவசியமாகிறது.  
  • வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை:
  • * செய்யும் வேலையின் தன்மைக்கு ஏற்ப தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வாங்கும்  புத்தகங்கள் மற்றும் பயிற்சி கருவிகளுக்கான பில்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
  • * வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அது சார்ந்த விவரங்களை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
  • * வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டு உரிமையாளர்களிடம் வாடகை ரசீதை பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • * அலுவலகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எதாவது எடுத்திருந்தாலும் அந்த விவரங்களை அல்லது பாலிசி பத்திர நகலை அலுவலகத்திடம் கொடுக்கவேண்டும்.
  • மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையையும் மனதில் நிறுத்தி வேலைக்குச் சேரும்போதே தங்களின் சம்பளத்தை சாதகமாக அமைத்துக் கொண்டால், உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உத்தரவாதம் உறுதியே!

http://pettagum.blogspot.in/2013/03/blog-post_12.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

பொன்மொழிகள்-25

பொன்மொழிகள்-25



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்..

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிகள்..

 .˜ 20 மி.லி தேங்காய் எண்ணெயுடன் ஐந்து மி.லி எலாங் எண்ணெயை சேர்த்து உடல் முழுவதும் தடவி வந்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும்.

˜ இயல்பான சருமத்தினர் சாமந்தி எண்ணெயை, கேரியர் ஆயிலுடன் சேர்த்து தினமும் குளிப்பதற்கு முன்பு தேய்த்தால், வறண்ட சருமம் பளபளவென மின்னும்.

˜ சூடான நீரில் 5 சொட்டுகள் கேமோமைல் எண்ணெய்விட்டு ஆவி பிடியுங்கள்.  சுவாசம் சீராகும்.  சருமம் மிருதுவாகும்.

˜  வாரம் இரு முறை, நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து, நன்றாக ஊறிய பிறகு சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.

˜  குளியல் அறையில், கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பிறகு குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும்.

˜  தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள்.   இது மனதை ஒரு நிலைப்படுத்தும்.  சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.

 

˜ வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.  

˜  கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள்.  மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும்.

˜ கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும்.  

˜ உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி... அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால்.. ஆரோக்கியம் அரவணைக்கும்.  

அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்...

˜  காலை  5 .30 மணிக்கு :தேன் கலந்து ஒரு தம்ளர் எலுமிச்சை ஜூஸ் பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும்.  எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.

˜  காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு தம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

˜  காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ்  கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.  

˜ காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட்.  இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

˜  மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

˜  இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது தால். வயிறை மிதமாக வைத்திருக்கும்.

இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது.  சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.

http://pettagum.blogspot.in/2013/03/blog-post_16.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

லைலத்துல்கத்ர்இரவு!!!

லைலத்துல்கத்ர்இரவு!!!

கண்ணியமும்,மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்கூறுகிறான்.

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்

மகத்துவமிக்கஇரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்குஎப்படித் தெரியும்?மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.வானவர்களும்,ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொருகாரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.

(அல்குர்ஆன்97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையைஎதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரதுமுந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

லைலதுல்கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவுஎன்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்)அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காகமறக்கடித்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றிஅறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போதுமுஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்."லைலதுல் கத்ருஇரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்னமனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என்நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாகஇருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு,இருபத்தி ஒன்பது,இருபத்திஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்"என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),நூல்கள்: புகாரி (49),முஅத்தா (615)

நபி(ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அதுகுறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூறமுடியாது.

எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவான21, 23, 25, 27, 29ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ரமலானில்கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத்தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூல்கள்: புகாரி2017,முஸ்லிம்1997

நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும்போது, "அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப்பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்திமூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசிஇரவில் (29)இருக்கும்"என்று சொல்லி விட்டு, "யார் அதில் ஈமானோடும்நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தியபாவங்கள் மன்னிக்கப்படும்"என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறியஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர்,ரமலான் மாதத்தில் கடைசிப்பத்து இரவுகளில்21, 23, 25, 27, 29ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான்இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ,பிரத்தியேகமான வணக்கமோஹதிஸ்களில் காணப்படவில்லை.ஆனாலும்,நம்மில் பலர் நின்று வணங்கவேண்டும்என்பதால் நபி(ஸல்) அவர்கள கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்துவருகின்றனர்.

மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில்செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கைசெய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்

மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்…

வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்ததுஎன்னுடைய நடைமுறை.மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொருசெயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொருவழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி

லைலத்துல் கத்ர் உடையஇரவுகளில் நின்று வணங்கியும்,குர்ஆன் ஓதியும்,திக்ரு செய்தும் நம்முடையஅமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள்,சண்டைசச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம்பாவமன்னிப்பு கோர வேண்டும்.

லைலத்துல்கத்ர்இரவில்ஓதவேண்டியபிரார்த்தனை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல்கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?'என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல்அஃப்வ ஃபஃபுஅன்னி'என்று சொல் என்று கூறினார்கள்.

(நூற்கள்: அஹ்மது,நஸயி,ஹாக்கிம்,இப்னுமாஜா3850,திர்மிதி3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

(அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ)

பொருள்:'இறைவா! நீ மன்னிப்பவன்,மன்னிப்பதை விரும்புகிறாய்,எனவே நீ என்னை மன்னித்து விடு!'

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிகண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடையமுயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்றஉள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால்,அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ்மன்னிப்பதற்கு போதுமானதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்அனைவரையும் ஆக்கி அருள்வானாக!

நன்றி:tntj

Engr.Sulthan



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com