அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன.
மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே. இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!! லிப்ஸ்டிக் பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
ஹெட்போன் தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.
இறால் கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
நாக்கு எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும். பட்டாம்பூச்சி இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.
யானை பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
ஆங்கில மொழி ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
புகைப்பிடித்தல் இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
முழங்கை ட்ரிக் கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.
சிலந்தி உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.
தும்மல் சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
பிறப்பு குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
முதலை பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.
கரப்பான்பூச்சி வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள். வெங்காயம் யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம். தூசிப்படிந்த வீடு வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.
கர்ப்பமான மீன் வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.
--
No comments:
Post a Comment