Friday, October 30, 2015

டூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது?

சமையல் எண்ணெய், பால், கிரைண்டர், வலி நிவாரணி போன்ற பொருட்கள் மற்றும் வங்கிச் சேவை, செல்போன் சேவை குறித்து சர்வே மற்றும் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது சென்னையைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு நிறுவனமான கான்சர்ட். எந்த பற்பசை (டூத் பேஸ்ட்) சிறப்பானதாக இருக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம் தாத்தா/பாட்டி அல்லது அப்பா/அம்மா, "டூத் பேஸ்ட்டை சாப்பிடாதே..!" என்று கண்டிப்பார்கள். அந்த எச்சரிக்கை யையும் மீறி அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு பாதி பேஸ்ட்டை சாப்பிட்டவர்கள் பலர். இப்போதும் அந்த எச்சரிக்கையை நம் குழந்தை களிடம் சொல்கிறோம். காரணம், அதிலிருக்கும் கெமிக்கல்.
இதனால் நம் உடல்நலம் பாதிப் படையுமா என்கிற கேள்விக்கான விடையை கடைசியாகப் பார்ப்போம். அதற்கு முன், பல் தேய்ப்பது பற்றி சில சுவாரஸ்ய மான விஷயங்களைப் பார்ப்போம்.
தினசரி காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது கட்டாயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பலரும் காலையில் கடனே என ஒருமுறை பல் தேய்ப்பதோடு சரி. பல் தேய்க்கும்போது குறைந்தது இரண்டு நிமிட நேரமாவது தேய்க்க வேண்டும். ஆனால், இந்தியர்கள் சராசரியாக 20 நொடிகள் மட்டுமே பல் தேய்க்கிறார்கள்.
பற்பசையின் தரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு டூத் பிரஷ்ஷின் தரமும் முக்கியம். சுமார் 3-6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இனி பற்பசைக்கு வருவோம்.
இதில் பசை, ஒயிட்னர்கள், தண்ணீர், நிறப் பொருட்கள் போன்றவை அடங்கி இருக்கின்றன. இந்திய தர நிறுவனத்தின் தர அளவீடுகளின் அடிப் படையில் பற்பசைகளின் தரம் இருக்கிறதா என ஆராயப் பட்டது. இந்த ஆய்வு மற்றும் சர்வே மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை யின் அனுமதியின்பேரில் நடத்தப்பட்டது. கோல்கேட், குளோஸ்-அப், ஹிமாலயா, டாபர் போன்ற முன்னணி பிராண்ட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பற்பசைகளில் பேக்கிங் மற்றும் லேபிலிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இவை நன்றாக இருக்கிற டூத் பேஸ்ட்கள்  அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. காலையில் கண் விழிக்கும்போது நம்மவர்கள், அழகிய பொருளை பார்க்க விரும்புவதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.
டூத் பேஸ்ட்டில் நுரை வர சோடியம் லரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. இது அதிகமானால் பல் ஈறுகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும், கல்லீரல் மற்றும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. காரீயம், ஆர்ஸனிக் போன்ற கன உலோகங்கள் குறைவாக இருப்பது உடல் நலனுக்கு நல்லது.
அதே நேரத்தில், டூத் பேஸ்ட்டில் உள்ள ஃபுளோரைட் பற்சொத்தையை தடுக்க உதவுகிறது. பற்பசை சாப்பிடுவதால் ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நாம் குடிக்கும் காபி-யின் பாதிப்பை விட குறைவுதான்.
டூத் பேஸ்ட்கள், வாய் துர்நாற்றத்தைப் போக்குவது, பல் கரை மற்றும் காரை போக்குதல், பூச்சி தொல்லை, பற்சொத்தை போன்றவற்றிலிருந்து நம் பற்களை காப்பதோடு, பற்களை பளிச்சிடவும் வைக்கிறது.
எது பெஸ்ட் நிறுவனம் என்பது அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது. வாசகர்கள் படித்து பயன் பெறவும்.
-சி.சரவணன்
 பற்களில் காரை படிந்துள்ளதா? இனி கவலை எதற்கு?
என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூ ரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(potassium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்தவேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, October 28, 2015

ஹோட்டல்களில் சாப்பிடுவோர் கவனிக்க..!!!

நோய் ஏற்படுவதைத் தடுக்க நான்கு விஷயங்களில் சுகாதாரம் மிக அவசியமான முதன்மை இடத்தில் இருக்கிறது. எந்தவொரு உணவுக்கூடமும்-நட்சத்திர ஓட்டல்கள் முதல் சாலையோர கையேந்தி பவன் வரை- உண்பவர் உடல்நலன் கெடும் எனத் தெரிந்தே உணவுப்பொருள்களை வழங்குவதில்லை. அவர்கள் தரும் உணவுப்பொருள் உடலுக்குக் கேடாக மாறிப்போவது நான்கு காரணங்களால்தான்.
1.அவை-உணவு வழங்குவோர்,
2. கையாள்பவர்,
3.சமையலரிடம் சுகாதாரமின்மை,
4.வழங்கப்படும் குடிநீர், காற்றில் மிதந்து உணவில் கலக்கும் தூசி, பொட்டலம் கட்டப் பயன்படும் பொருள்கள்.

ஓட்டல்களில் உணவு வழங்குபவரின் அழுக்கு உடை, அவர் கைகளைத் துடைக்கும் (ஏற்கெனவே அழுக்கடைந்த) துணி, குடிநீர் ஊற்றப்படும் டம்ளர் அனைத்தும் கிருமிகளின் உறைவிடமாக இருக்கின்றன. பொட்டலம் கட்டப்பயன்படுத்தும் நாளிதழ்களின் அச்சு மையில் உள்ள காரீயம், உணவை விஷமாகச் செய்துவிடுகிறது. இந்தச் சிறிய விஷயங்களில் ஒழுங்குமுறையை, சுகாதார விழிப்புணர்வை உணவுத் தொழில் புரிவோரிடம் ஏற்படுத்த முடிந்தால், மருத்துவமனைகளைத் தேடும் நோயாளிகள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியும்.
ஓட்டலில் உணவு வழங்குவோர், கையாள்வோர், சமையலர்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தைக் கடுமையாகவும், கட்டாயமாகவும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  நிலையான ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இந்த உரிமம், பயிற்சி என்பது போதாது. ஏனென்றால், இன்றைய நாளில் தமிழகம் முழுவதும் கையேந்தி பவன்கள் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவிட்டன. முன்பெல்லாம் வெறும் கூலித் தொழிலாளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்ற நிலைமை மாறி,  தற்போது நடுத்தர வருவாய்ப் பிரிவினர்கூட கையேந்தி பவன்களில் சாப்பிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இங்கே சாப்பிடத் தயங்குவோர் பொட்டலம் கட்டிக்கொண்டு வீடுபோய்ச் சாப்பிடுவதும் அதிகரித்து வருகிறது.
இதற்குக் காரணம்,  ஒரு சாதாரண ஓட்டலில் விற்கப்படும் உணவுப் பொருள் விலைக்கும்,  கையேந்தி பவனில் கிடைக்கும் உணவுப் பொருள் விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதுதான். இதற்குத் தொழில்ரீதியாகவும், முதலீடு ரீதியாகவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் யார் எங்கு சாப்பிட்டாலும் அவரது உடல்நலன் கெடாதபடி சுகாதார உணவாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதை நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.
கையேந்தி பவன்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். அவற்றுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதைக் காட்டிலும், அவை முறையாகவும் சுகாதாரமாகவும் செயல்படும் வகையில் ஒழுங்குபடுத்துவதும்,
  இதில் ஈடுபட்டு இருப்போருக்கு சுகாதாரம் குறித்த முறையான பயிற்சி அளிப்பதும்தான் அரசு இன்று செய்ய வேண்டியது.
ஓட்டல்களைக் கண்காணிக்க உணவு ஆய்வாளர் எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இருக்கிறார் என்றாலும், இன்றைய நாளில் அவரது தீவிரக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில், முன்னெப்போதையும் விட மிக முக்கிய சமூகப் பொறுப்பு அவருக்கு இப்போது உள்ளது. இது வெறும் பதவி என்பதைக் காட்டிலும் மேலான சமூகக் கடமை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், நோய்த்தொற்றுகள் பலவற்றைத் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திவிட முடியும்.
கையேந்தி பவன்களுக்கான நல்ல குடிநீரை உள்ளாட்சி அமைப்புகளே கட்டணம் பெற்று லாரிகள் மூலமாக வழங்குதல், உணவுக் குப்பைகளை உடனுக்குடன் வாரிச்செல்லுதல் போன்றவை நகரச் சுகாதாரத்துக்கு மட்டுமன்றி,  கையேந்தி பவன் நடத்துவோர் மற்றும் அங்கே உணவு உண்போருக்கும் நன்மை தரும்.
உணவின் சுவை,
  உணவின் வகை, அவை சமைக்கப் பயன்படும் உணவுப்பொருள், உண்ணும் சூழல், மின்விசிறி அல்லது குளிரூட்டு வசதி, பொருளின் விலை இவை அனைத்தும் இடத்திற்கேற்ப மாறுபடலாம். ஆனால், எல்லா நிலைகளிலும் சுகாதாரமான உணவு என்பதில் மாறுபாடு இல்லாதபடி பார்த்துக் கொள்வது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
நன்றி http://velecham.blogspot.com/


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Monday, October 26, 2015

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?


ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள "பாஸ்போர்ட் சேவக் கேந்திரா" Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services)
 மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
ஆர்டினரி (Ordinary)
அப்பிசியல் (Official)
டிப்ளோமேட்டிக் (Diplomatic)
ஜம்போ (Jumbo) 
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.

1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
ரேசன் கார்டு
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
 விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
 நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து  கொள்ள : http://passport.gov.in/cpv/FeeStructure.htm  
 புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
 காணாமல் போனால் சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
 காணாமல் போனால் சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
 தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் "Non Traceable" சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு "தட்கல் திட்டம்" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்

அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
வாக்காளர் அடையாள அட்டை
இரயில்வே அடையாள அட்டைகள்
வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
வங்கி அலுவலக புத்தகம்
எரிவாயு இணைப்பிற்கான ரசீது
ஓட்டுனர் உரிமம்
பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, October 24, 2015

பத்திரப்பதிவின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.

* இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை அந்த இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று தெரிந்து கொள்வது நல்லது. பின்னர் அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

* அதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்தரை நாடி பத்திரம் எழுதும் நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

அப்போது பத்திரத்தில் சேர்க்க வேண்டிய முக்கியமான விவரங்கள் விடுபட்டு போகாமல் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

அதற்கு நேரடியாக முத்திரைத்தாளில் எழுத தொடங்காமல் முதலில் ஒரு பேப்பரில் எழுதி பார்த்து விவரங்கள் அனைத்தும் இடம் பெற்று இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

* ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுத வேண்டும்.

* முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தமான விவரங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமாக சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்கு உண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம்,

 சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும்.

* வாங்கும் இடத்தின் அளவு எவ்வளவு? அது இருக்கும் திசை, அதை சூழ்ந்துள்ள விவர குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

* இந்த விவரங்களில் பிழைகள் எதுவும் இல்லாதவாறு சரி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக அவசர கதியில் பத்திரப்பதிவுக்கான வேலை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பிழைகள் நிகழ்வதை பெரும்பாலும் தடுக்கும்.

* பத்திரப்பதிவு செய்யும் நாளில் வாங்கும் சொத்துக்கு கொடுத்திருக்கும் முன்தொகை போக மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு மொத்த பணத்தையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* பத்திரத்தில் சொத்தை வாங்குபவர், விற்பவர், சொத்தை விற்பனை செய்பவர்க்கு வாரிசுகள் இருந்தால் அவர்கள்,
  சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்து போடவேண்டும்.

* பத்திரப்பதிவு செய்யும் நாளில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருப்பதற்கு ஏதுவாக சில மணி நேரத்துக்கு முன்பே அனைவரும் சென்று விட வேண்டும்.

* பத்திரத்தில் இடம்பெறும் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும் சமீபத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.

* ஆவண சரிபார்ப்புக்கு பின்னர் பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கவேண்டும்.

 சில நாட்களுக்கு பிறகு அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து பத்திரத்தை வாங்கி விட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்யக்கூடாது.

அதுபோல் பத்திரம் வாங்கிய உடனே பட்டா மாற்றத்துக்கும் உடனே விண்ணப்பித்து விட வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, October 22, 2015

ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற...!

பாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்... நோய் எதிர்ப்பு சக்தி!
அந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்... இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம்.
அந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இறுகிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு.
சளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், "எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்"ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் - இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் "சி" இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் "சி" அவசியம்.
சளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம்.
சைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழம்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம்.
சிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும்.
முட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும்.
ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள்.
காளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிறவங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது அனுபவஸ்தர்கள் சொல்லக் கேட்டது.
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_5933.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, October 20, 2015

மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்." மேலும் கூறினார்கள்: "மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்." (முஃஜமுத் தப்ரானி)
        முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.
    அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
   "நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே!  நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்" என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)
    இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.
    நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். "குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே' என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின்  அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?" (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) "எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை" என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் "எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
    உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல "குழந்தைகளை முத்தமிடமாட்டேன்' என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: "உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"  முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்."  அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி
    ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள்  கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.
   (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
    நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் "எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது' என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் "விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் "உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு" என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)
       இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது
http://pettagum.blogspot.in/2014/01/blog-post_6064.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, October 18, 2015

கணினியில் இருந்து கண்களைக் காக்க

கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

1. முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20 டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதேபோல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்களை வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தாதவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

2. அறையில் ஒளி அமைப்பு பல நேரம் நம் கண்களுக்குப் பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணிபுரிவீர்கள் என்று கூறவும். அப்போது மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியை வடிவமைப்பார்கள்.

3. மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணிபுரிந்து கொண்டிருந்தால், அதிகபட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்குப் புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறைதான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை கண் சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4. கணினியில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள்.

இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடலாம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, October 16, 2015

வேர்டில் கவனித்தீர்களா

வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பணி ஆகும். ஆனால், பலர் கீழே நான் தரப்போவதனைக் கவனித்திருக்க மாட்டீர்கள். பொதுவாக நீங்கள் ஒரு வாக்கியத்தை முடித்து முற்றுப் புள்ளி வைத்தவுடன், அடுத்த வாக்கியத்தைத் தொடங்குகையில் முதல் சொல்லின் முதல் எழுத்து தானாகவே பெரிய எழுத்து என்று சொல்லப்படும் கேப்பிடல் லெட்டரில் தொடங்கும். ஆனால், ஒரு வாக்கியம் ஏதேனும் ஒரு எண்ணுடன் முடிந்தாலோ, அல்லது "you" என்ற சொல்லுடன் முடிந்தாலோ, அடுத்த வாக்கியம் அது போல கேப்பிடல் எழுத்துடன் தொடங்காது. (இதைப் படித்தவுடனேயே வேர்டைத் திறந்து செக் செய்திடப் போகவேண்டாம். தொடர்ந்து படிக்கவும்)

இவை இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை போலத் தோற்றமளித்தாலும், இரண்டின் தன்மையும், தீர்வுகளும் வெவ்வேறானவை. அவற்றை இங்கு பார்க்கலாம். தூணித என்ற சொல்லை அடுத்து வரும் வாக்கியம் பெரிய எழுத்தில் தொடங்காததற்கு AutoCorrect ன் exclude என்ற பைலில் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, கீழ்க்கண்டபடி செயலாற்றவும். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,

  1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். Office பட்டன் அழுத்தி Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
    2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
    3. அடுத்து AutoCorrect Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
    4. இங்கு Exceptions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து AutoCorrect Exceptions என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
    5. இனி First Letter என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தனித்து இடம் பெறும் சொற்களின் பட்டியல் கிடைக்கும். இதில் "you" என்ற சொல்லைத் தேடிப் பெறவும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
    7. அடுத்து Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இந்த சொல்லுக்கான தனித்தன்மை நீக்கப்பட்டது. திறந்திருக்கும் அனைத்து டயலாக் பாக்ஸ்களையும் மூடவும்.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சொற்கள் அல்லது சுருக்கக் குறிகள் இடம் பெறும்போது, அடுத்த வாக்கியத்தின் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அமையாது. வழக்கமாக Mr., Ms., Dr., என்ற சுருக்கு சொற்களே இடம் பெறும். ஆனால் மேலே சொல்லப்பட்ட சொற்களும் சில இடம் பெற்றுள்ளதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

அடுத்து AutoCorrect Exceptions டயலாக் பாக்ஸை மீண்டும் பார்க்கவும். கீழாக, Automatically Add Words to List என்ற செக் பாக்ஸ் இருப்பதைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால், AutoCorrect செயல்பாடு, நீங்கள் டைப் செய்கையில் என்ன என்ன தேவைகளை விரும்புகிறீர்கள் என்பதனைக் கண்காணித்து, அவற்றிற்கேற்ப தன் பொருளடக்கத்தினை மாற்றிக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, வேர்ட் தானாக சொல் ஒன்றை மாற்றுகையில், நீங்கள் பேக் ஸ்பேஸ் பயன்படுத்தி, உங்கள் விருப்பப்படியே, சொல்லை அமைத்தால், வேர்ட் அதனை உணர்ந்து, வாக்கியத்தின் இறுதி சொல்லை அதன் நிறுத்தக் குறியுடன் இந்த பட்டியலில் அமைத்துக் கொள்ளும். இப்படித்தான், "you" என்ற சொல் இதில் இடம் பெற்றிருக்கும். வேர்ட் இது போல உங்களைக் கண்காணித்துச் செயல்பட வேண்டாம் என நீங்கள் எண்ணினால், Automatically Add Words to என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம்.

எண்ணுடன் ஒரு வாக்கியம் முடியும் போது ஏற்படும் பிரச்னை இன்னொரு வகையானதாகும். பழைய வேர்ட் பதிப்புகளில், எண்கள் டைப் செய்து பின்னர் புள்ளி வைத்தால், அடுத்த வாக்கியத்தில், வேர்ட் தானாக முதல் சொல்லின் முதல் எழுத்தினைப் பெரிய எழுத்தாக அமைத்து வந்தது. சில இலக்கணவாதிகள், இதனை சரி இல்லை எனக் குற்றம் சாட்டினார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு எண் இறுதியில் இடம் பெறக் கூடாது. அப்படி இடம் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்றால், அது எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். இதனால், மைக்ரோசாப்ட் அதற்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வந்தது. எண்களும் தொடர்ந்து புள்ளியும் டைப் செய்தால், அடுத்த சொல் சிறிய எழுத்திலேயே தொடங்கியது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, October 14, 2015

பென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி

Quickly remove USB devices without using Safe Removal

ரீமூவல் டிவைஸ் என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி
  போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள். 

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.


சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,

தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி?  
என்பதைப் பார்ப்போம்.

  1. உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
  2. இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
  4. தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
  5. கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும் அதில் காட்சியளிக்கும்.
  6. தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
  7. தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின் பெயரைத் தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
  8. இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com