- வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்
- பருப்பை வேக வைக்கும் போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டால் சீக்கிரமே வெந்து விடும்.
- கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.
- கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
- பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.
- தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.
- சிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம்.
- சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொள்ளவும்.
- கோதுமை மாவை பிசையும் போது வாழைப் பழத்தையும் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.
- பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
- தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.
- சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வேண்டாம்.
- நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் ஊற வைத்தால் கூட போதும்.
- இட்லிக்கு மாவை மிக்சியில் அறைக்கும் போது ஊற வைத்த அரிசி, உளுந்தம் பருப்பை சிறிது நேரம் குளிர்பதன பெட்டியில் வைத்துவிட்டு அரைத்தால் மாவு சூடாவது தவிர்க்கப்படும்.
- முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
- ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.
- முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
- முட்டையை வேக வைத்தாலும் சரி ஆம்லேட் போட்டாலும் சரி பயன்படுத்துவதற்கு முன்பு அதனை லேசாக கழுவி விடவும்.
- பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
- பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
- பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்கவும்.
- தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நல்லது.
- பாலைக் காய்ச்சும் முன்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து, அந்த நீரை கீழே ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடுவதை தவிர்க்கலாம்.
- பாயசம் செய்யும் முன்பு ஜவ்வரிசையை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கலாம்.சேமியாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அவல் பாயாசம் செய்யும் போது ஒரு கப் பாலும், ஒரு கப் தேங்காய் பாலும் சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
- ஏலக்காயின் மேல் பகுதிகள் சில குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே பாயாசத்தில் ஏலக்காயின் விதைகளை மட்டும் தட்டிப் போட்டால் போதும்
- அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.
- அரிசியில் பூச்சி பிடிக்காமல் இருக்க அரிசி கொட்டும் பாத்திரத்தில் வேப்பிலைகளைப் போட்டு பின்னர் அரிசி கொட்ட வேண்டும்.
- எதையும் அப்படியே வைத்தால் பூச்சி பிடித்துவிடும்.அவ்வப்போது சூரிய ஒளியில் வைத்து எடுக்க வேண்டும்.
- தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
- தோசைக்கு அரைக்கும் அரிசியில் அல்லது உளுந்தம் பருப்பில் சிறிது வெந்தயத்தைப் போட்டு அரைத்தால் உடலுக்கும் நல்லது. தோசை நன்கு சிவந்து வரும்.
- இட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.தக்காளியை பத்திரமாக பாதுகாக்க ஒரு எளிய வழி உள்ளது. அதனை தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். எளிதில் அழுகாது.
- தக்காளி காயாக இருந்தால் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்காதீர்கள்.
- தக்காளியின் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
- பூரி நன்றாக உப்பி வர வேண்டும் என்றால், பூரி மாவில் வறுத்த ரவையை சேர்த்தால் போதும்.
- பூரி செய்யும் போது சிறிது மைதா மாவு, 1 தேக்கரண்டி ரவையை சேர்த்து செய்தால் பூரி அதிக நேரம் மிருதுவாக இருக்கும்.
- பூரி செய்யும் மாவில் ஒரு வாழைப்பழத்தைப் போட்டு பிசைந்து செய்தால் சுவையும், மிருதுத்தன்மையும் கூடும்.
- பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
- பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
- ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.
- குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
- குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
- பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.
- வெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நாற்றம் இருக்கும்.
- அந்த அசைவ நாற்றத்தைப் போக்க எளிய வழி உள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை மற்றும் கத்தியைக் கழுவினால் போதும். நாற்றம் போய்விடும்.
- வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
- டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
- தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.
- உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
- காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.
- http://pettagum.blogspot.in/2013/12/blog-post_2932.html
--
No comments:
Post a Comment