Friday, April 29, 2016

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…!

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதுஅவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதுஎப்படி?

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல்,சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.

மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

http://pettagum.blogspot.in/2014/05/blog-post_160.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, April 27, 2016

கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து!

கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து!

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. அதுவும், குழந்தைக்கு ஒரு வயசு ஆகறவரை சொல்லவே வேண்டாம்... வயித்து வலிக்கு அழறதா, எறும்பு கடிச்சு அழறதானு தெரியாம நம்ம முழி பிதுங்கிடும்.
அஞ்சு மாசக் குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க... கடுக்காயை சந்தனம் மாதிரி உரைச்சு குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும். 

ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும். 

சி ல குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்... பிரச்னை சரியாகிடும். 

சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு 'பிள்ளை வளர்ப்பான்'னு பேரே உண்டு! 

சூ டு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போச்சுனா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை தாய்ப்பால்ல ரெண்டு உரை உரைச்சு புகட்டிப் பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூணு வேளை இப்படிக் கொடுத்தா முழுவதுமா குணமாயிடும். ஆனா, ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுனா குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு. 

பொதுவாவே கைக்குழந்தைக்கு மாந்தம், உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுப்போம். அதை எப்படி பண்றதுனு சொல்றேன்... 

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவையுங்க. அப்புறம் அதை எடுத்து வெய்யில்ல சுக்கா காய வச்சுக்கணும். குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுறப்பல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும். 

ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! 
தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலயும் உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க. 

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.

 மார்கழி பனி கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும். 

இப்பல்லாம் 'குழந்தைகளுக்கு தொட்டதுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கக் கூடாது'னு பேசிக் கறாங்களே... இந்த வைத்தியங்கள்லாம் அப்படி பக்க விளைவு எதுவுமில்லாமலே உடம்பை குணப்படுத்திடும். அதுக்கு நான் கியாரண்டி!
http://pettagum.blogspot.in/2014/05/blog-post_3261.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Monday, April 25, 2016

“ரிஸ்க்” எடுப்பவரா நீங்கள்?

 "ரிஸ்க்" எடுப்பவரா நீங்கள்?

  •  "வயசுப்பெண்கள் இருக்கும் வீட்டில் திண்ணை வீடு ரிஸ்க்!
  • வீரப்பன் காட்டுப் பக்கம் பண்ணை வீடு ரிஸ்க்!"
என்று கவிஞர் வைரமுத்து சில வருடங்களுக்குமுன் ஒரு படத்திற்கு எழுதியிருந்தார். மனிதர்கள் இரண்டு விதம், "ரிஸ்க்" எடுத்துதான் பார்ப்போமே" என்று இறங்குபவர்கள், "எதுக்குங்க ரிஸ்க்" என்று பதுங்குபவர்கள். இந்த இரண்டு வகையான மனப்பான்மையும் எல்லோரிடமுமே எடுக்க வேண்டிய 'ரிஸ்க்'கிற்கேற்ப மாறி மாறி வரும்.
ஆனால், எந்த ரிஸ்க் எடுக்கக்கூடியது, எது எடுக்க வேண்டாதது என்று இரண்டு வகையாகப் பிரித்து விடமுடியாது. ஏனெனில், இந்த இரண்டு வகைகளில் மட்டும் அவை அடங்குவதில்லை.
நீங்கள் 'சட்'டென்று நிராகரித்துவிடக் கூடிய 'ரிஸ்க்' ஒன்று உண்டு. அதற்கு நிஜமான பெயர் "வேண்டாத வேலை". உங்களுக்கு சம்பந்தமில்லாத துறையில், பணத்துக்கோ பெயருக்கோ உத்திரவாதமில்லாத நிலையில், உருவாகிற எந்த வேலையையும் "வேண்டாத வேலை" என்று நிராகரித்து விடலாம். முயற்சி செய்து பார்த்து பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்ய வேண்டாம்.
இன்னொரு வகை ரிஸ்க், இதற்குத் தம்பி மாதிரி. அதற்குப் பெயர் "அவசரமாய் முடிவெடுப்பது" "சிந்தித்துச் செய்யாத எந்த வேலையும் தோல்வியில்தான் முடியும்" என்பார் பீட்டர் டிரக்கர். உண்மைதான்! "வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன் பேர்வழி" என்று, முழு விபரங்களையும் கேட்காமல் அவசரக் கோலத்தில் காலைவிட்டு, பிறகு கையைச் சுட்டுக் கொள்வது தவறு. இந்த வகை ரிஸ்க்கும் வேண்டாத வேலைதான். ஆனால், வாழ்க்கையில் ஒரு சில 'ரிஸ்க்' அவசியம் எடுக்க வேண்டிய பட்டியலில் இருக்கும். உங்களுக்கு நன்கு பரிச்சயமான துறையிலேயே ஒரு புதிய வாய்ப்பு, புதிய அறிமுகம் போன்றவற்றுக்கு நேரத்தையும் பணத்தையும் தொடர்ந்து செலவிடலாம். இவற்றில் தோல்விக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இழப்பு ஏற்பட்டாலும் குறைவாகத்தான் ஏற்படும். "புத்தி கொள்முதல்" என்று அதையும் வரவு வைத்துவிட வேண்டியதுதான்.
அதேபோல, எடுக்கவே கூடாத ரிஸ்க் என்றும் ஒன்று உண்டு. உங்களை விடப் பலமடங்கு பெரிய அளவில் அதன் சக்தி இருக்குமென்றால், "அய்யோ! நம்மால் ஆகாதுங்க!" என்று நாசூக்காக விலகிக் கொள்வதில் தவறில்லை. பாண்டவர்கள் அனைத்தையும் வைத்து சூதாடியது மாதிரியான 'மெகா' அளவு ரிஸ்க் எடுத்தால் வனவாசம் போக வேண்டியதுதான். உங்கள் சொத்துக்கள், முதலீடுகள் எல்லாவற்றையும் காவு கேட்கும். இத்தகைய பேராசை வலைகள் அடிக்கடி விரிக்கப்படும். "இருப்பதையும் விட்டுவிடக் கூடாது" என்ற எச்சரிக்கை உணர்வுடன், அந்தப் பக்கமே போகாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.
இவையெல்லாம் இருக்கட்டும். உங்கள் தொழிலில் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களை மட்டுமே சார்ந்து உங்கள் மொத்த செயல்பாடுமே இருக்கும் என்றால், அதுதான் நீங்கள் எடுக்கிற மிகப்பெரிய ரிஸ்க்.
முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு தனி கவனத்துடன் தரமான சேவையைத் தருவது என்பது வேறு. அவர்களை நம்பியே ஒரு நிறுவனத்தை நடத்துவதென்பது வேறு. உயிருக்குயிராகப் பழகிவரும் தாம்பத்ய வாழ்க்கையிலேயே விரிசல் ஏற்படும்போது, வணிகத்தில் மாற்றுக் கருத்துக்கள் இப்போது இல்லையென்றாலும் எப்போதாவது ஏற்படக் கூடும்.
"ஆனாக்கா இந்த மடம், ஆகாட்டி சந்தைமடம்" என்கிற மனப்பான்மை, தொழிலில் எப்போதுமே பாதுகாப்பான விஷயம்தான்.
ஒரு விஷயம் ரிஸ்க்கா இல்லையா என்று முடிவெடுக்கும்போது கனவுகளில் மட்டுமே கணக்குப் போடக்கூடாது. யதார்த்தமான விஷயங்களில் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்க வேண்டும். "இவ்வளவு வரும், அவ்வளவு வரும்" என்ற கணக்கெல்லாம் சரிதான். இழப்புகள் எவ்வளவு நேரும், நேர்ந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதை எல்லாரும் சேர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியம்.
ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது நியாயமான அளவு அச்சமும் சந்தேகமும் நியாயம் தான் என்கிறார்கள் நிர்வாகவியல் நிபுணர்கள். "அஞ்சாவது அஞ்சாமை பேதைமை" என்கிறார் திருவள்ளுவர்.
அச்சப்பட வேண்டிய விஷயங்களில் அளவுக்கதிகமான துணிச்சலுக்கு "அசட்டுத் துணிச்சல்" என்று பெயர்.
எனவே, ரிஸ்க் எடுப்பது நல்லதுதான். அதன் ஆழம், அகலம், உயரம் அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு தடவை தீர யோசித்து முடிவெடுங்கள். "ரிஸ்க்" ரசிக்கத்தக்க வாய்ப்புகளாக மாறி வெற்றி வாசலைத் திறந்துவிடும்.
ஜீவிதா


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, April 23, 2016

கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த 30 சிறந்த வழிகள்

என்னதான் நம் வாழ்க்கையுடன் கம்ப்யூட்டர் இணைந்து விட்டாலும், பாதுகாப்புடன் அதனைப் பயன்படுத்த நூறு சதவிகித உத்தரவாதம் தர முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம். சாலையில் விபத்து நேர்கிறது என்பதற்காக நாம் சாலையில் நடக்காமலோ, பயணம் செல்லாமலா இருக்கிறோம். கவனமாகச் செல்வதில்லையா!  
அது போல கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலும் சில எச்சரிக்கை வழிகளைக் கையாண்டால், பாதுகாப்பாகப் பணி புரியும் சூழ்நிலையை உருவாக்கலாம். கீழே இதற்கான சில சின்ன சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன. இவை பலமுறை இங்கு கூறப்பட்டாலும் அவற்றை மீண்டும் நினைவில் கொண்டு அமல்படுத்துவது நல்லதல்லவா!

1. பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், இதில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளை பேட்ச் பைல் என்ற வகையில் தருகிறது. மாதம் ஒருமுறை தரப்படும் இந்த பேட்ச் பைல்களை நம் கம்ப்யூட்டர்கள் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் தாமாகப் பெற்று அப்டேட் செய்திடும் வகையில் நம் சிஸ்டத்தில் செட் அப் செய்து வைக்க வேண்டும். 

2. இன்டர்நெட் உலகில் பல வைரஸ் புரோகிராம்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே இதனைக் கண்டறிந்து தடுக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாய் வரும் வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு வழிகள் கிடைக்காமல் போகலாம்.

3. ஏதேனும் ஒரு வழியில், இமெயில் அல்லது டவுண்லோட் ஆகும் புரோகிராம் போன்றவற்றின் மூலம், பல ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து, நம் சிஸ்டத்தில் உள்ள நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அடுத்தவருக்கு அனுப்புகின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட், விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது. 

4. நம் கம்ப்யூட்டருக்குள் வரும் ஸ்பை வேர் புரோகிராம்களைத் தடுக்கும் ஒரு வழி பயர்வால் ஆகும். நம் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டால் அதிலிருந்தும் இது போன்ற புரோகிராம்களைச் செல்ல விடாமல் பயர் வால் தடுக்கிறது. எனவே இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இதுவும் தரப்படுகிறது. ஸோன் அலார்ம் போன்ற இலவசமாகக் கிடைக்கும் பயர்வால்களையும் பயன்படுத்தலாம்.

5. பயர்வால் புரோகிராம் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும். இவை இரண்டு வைத்துக் கொண்டாலும் ஒரு முறை ஒன்றைப் பயன்படுத்து வதே நல்லது.

6. நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

7. எந்த பாஸ்வேர்டையும் எந்த நேரமும் மாற்றக் கூடிய வசதியினை இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் தருகின்றன. எனவே பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 

8. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

9. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை சிறிய அளவில் மாற்றிக் கொள்ளலாம். 

10. ரௌட்டர் இல்லாமல் பிராட்பேண்ட் கனெக்ஷன் வைத்துக் கொள்ளக் கூடாது. அது வயர்டு அல்லது வயர்லெஸ் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவை கட்டாயம் NAT மற்றும் SPI ஆகியவற்றை சப்போர்ட் செய்திட வேண்டும். 

11. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

12. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும். ஆட்டோ ரன் நிறுத்த எக்ஸ்பி சிஸ்டத்தில் கை வைக்க வேண்டும். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம். 

13. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.

14. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே அதன் தளத்தைத் தொடர்பு கொள்ளவும்

15. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும். ஒரு வேளை அவரும் ஏமாந்திருப்பார் என்று எண்ணினால் அவருக்கு இது குறித்து இமெயில் ஒன்று அனுப்பிக் கேட்கவும். 

16. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும். 

18. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

19. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள். 

20.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

21. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் 'https'என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும். 

22. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

26. பொதுவான பப்ளிக் கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள். 

27. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும். 

28. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

29. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

30. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.
http://www.anbuthil.com/2014/05/30.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, April 21, 2016

இரத்தசோகை எப்படிக் கண்டறிவது ?

இரத்தசோகை எப்படிக் கண்டறிவது ?

உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? சோம்பலாகவும் தலைச்சுற்றும் இருக்கிறதா?

அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.

களைப்பாயிருக்கிறதா? காரணங்களும் காரியங்களும்..
இரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு செங்குருதிக் கலங்கள் Red blood cells இல்லாமையே ஆகும். கண்கள் நாக்கு, உடல் போன்றவை வெளிறியிருப்பதிலிருந்து இது இருப்பதை மருத்துவர்கள் ஊகிப்பார்கள்.

Hb%
  என்ற சுலபமான குருதிப் பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்தலாம்.
Hb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

அறிகுறிகள் என்ன?
கீழ்காணும் அறிகுறிகள் இரத்தசோகை இருப்பதை உணர்த்தலாம். அவ்வாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து அது இருக்கிறதா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும்.
  • களைப்பு. வழமைபோல நடக்கவோ வேலை செய்யவோ முடியாது விரைவில் களைப்படைதல் முக்கிய அறிகுறியாகும்.
  • மூச்சிளைப்பு, குருதியில் போதிய செங்குருதிக் கலங்கள் இல்லாததால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகிறது. அதை ஈடு செய்ய வேகமாகச் சுவாசித்து ஒட்சிசனைப் பெற முயல்கையில் மூச்சிளைப்பு தோன்றுகிறது.
  • தலைப்பாரமாக இருத்தல், தலை அம்மல் - மனச்சோர்வு, சிந்திக் முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மூளைக்கு போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் அறிகுறிகள் இவை.
  • கை கால்கள் வழிமையான சூடு இன்றிக் குளிர்ந்திருத்தல்.
  • சருமம் வழமையைவிட வெளிறியிருத்தல். கண் நாக்கு நகங்கள் போன்றவையும் வெளிறியிருக்கும்.
  • நெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு - உடற்திசுக்களுக்கு வேண்டிய ஒட்சிசனை 
இரத்தசோகை உள்ளவரின் இருதயம் ஈடுகொடுக்க முடியததால் வேகமாகத் துடிப்பதால் படபடப்பும், இருதயத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காததால் நெஞசுவலியும் வரலாம்.

இரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.

முன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம்.

ஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்ணாது குப்பை உணவுகளை உண்பதுதான்.
http://hainallama.blogspot.in/2014/05/blog-post_21.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, April 19, 2016

சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா?

சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா?

நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்குக் கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்கக் காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிரப் பிரச்சனைக்கு அல்ல.
நமக்கு அடிக்கடி தலைவலி, சளி, காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. இதன் காரணமாகத் தான் ஒரு சிலருக்கு உடல் நிலை பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்கு முக்கியக் காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே!
கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால், அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களாக இருப்பார்கள். உடனே மருத்துவனைக்குச் சென்று பார்த்து மருத்துவர் "ஒன்றுமில்லை" என்று கூறி அவர் கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்ட பிறகு தான் நிம்மதியடைவார்கள்.
ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும் காரணம், இதைப் போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்துக் கொள்வார்கள்.
நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே நம் உடல் அதன் பணியை செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துக் கொண்டால், நம் உடல் அதற்குப் பழகி விடும். எனவே பின்னர் வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது. எனவே, நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து (பழகி) விடும்.
முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போகப் போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது அதிக சக்தி மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும். அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது. இரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான். எதிர்ப்பு சக்தி குறைவதே நம் உடலுக்கு வரும் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம். நம்முடைய உடலின் "Firewall" தான் எதிர்ப்பு சக்தி grey சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா? .
இதைப் போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் [Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache)] மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்குப் பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால், உடலின் உஷ்ணமாகக் கூட இருக்கலாம், இதற்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும். இதைப் போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதைப் போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.
குறிப்பு
மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே. இதற்காக நாமே நம்மை மருத்துவராகக் கருதிக் கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அடிக்கடி நேர்கிறது / குணமாகவில்லை என்றால், மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
http://www.giriblog.com/2014/06/dont-take-tablets-often.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, April 17, 2016

கணினி பற்றிய டிப்ஸ் சில

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள்.

நாமும் டவுண்லோட் செய்திடுவோம். டவுண்லோட் செய்தபின் எங்கு அந்த பைல் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. பல இடங்களில் தேடி அலுத்துப் போய்விடுவோம். இது போன்ற நேரங்களில் கீழ்க்காணும்படி செயல்படவும். Tools அழுத்தி பின் கிடைக்கும் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + ஜே (Ctrl+J) அழுத்தினாலும் இந்த விண்டோ கிடைக்கும். இங்கு ரைட் கிளிக் செய்தால் நீங்கள் டவுண்லோட் செய்த பைல் காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Open Downloading Folder என்பதில் கிளிக் செய்தால், பைல் இருக்கும் போல்டர் காட்டப்படும்.

குறிப்பிட்ட டெக்ஸ்ட்டை மறைக்க

வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்துக் காட்ட விரும்பினால் அதற்கான வழிகளை வேர்ட் தருகிறது. மறைத்த பகுதியை மீண்டும் காட்டும் வகையில் அமைக்கலாம். இதற்கான வழி:மறைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். பின் மெனு பாரில் Fontsதேர்ந்தெடுத்து அதில் Effects பிரிவைக் கிளிக் செய்திடுக. புதிய விண்டோ ஒன்று கிடைக்கும். 

அதில் Hidden என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Ctrl+A என்னும் பாக்ஸின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் இtணூடூ+அ கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

டாஸ்க் பார் / டூல் பார்

பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் இரண்டு டெக்னிக்கல் சொற்றொடர்கள். டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் கலரை மாற்றலாம். இடத்தையும் நாம் விரும்பினால் மாற்றலாம். இந்த பாரை மேற்புறமாக அல்லது இடது வலது பக்கங்களில் அமைத்துக் கொள்லலாம். இதன் இடது பக்கத்தில் தான் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நாம் இயக்கும் புரோகிராம்களின் பைல்களுக்கான பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒரே புரோகிராமில் பல பைல்களைத் திறந்தால், அவை அனைத்தும், புரோகிராமின் குரூப் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் அமையும். எந்த பைலைக் கொண்டு திரையின் மீது கொண்டு வர விரும்புகிறீர்களோ இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் போதும்.

இந்த டாஸ்க் பாரில் குயிக் லாஞ்ச் டூல் பாரினையும் அமைக்கலாம். புரோகிராம்களை இயக்க இது ஷார்ட் கட் வழியாகப் பயன்படுகிறது. இதில் புரோகிராம்களின் ஐகான்கள் அமர்ந்திருக்கும். இதனை ஒரு கிளிக் செய்தால், புரோகிராம்கள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பாரின் இறுதியில் வலது பக்கம், சிஸ்டம் தொடங்குகையில் இயங்கி பின்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்களைக் காணலாம். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் தொடங்கும்போதே இயக்கப்படும் சில புரோகிராம்கள் இதில் இருக்கும். கடிகார நேரம் இதில் காட்டப்படும்.

டூல் பார் என்பது சின்ன ஸ்ட்ரிப். புரோகிராம் ஒன்றின் ஐகான்களைக் கொண்டிருக்கும். பொதுவாக இவை அனைத்து மெனுக்களுக்கும் காட்டப்படும். நம் விருப்பப்படி புரோகிராம்களின் டூல் பார்களை அமைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளுக்கான ஐகான்களை மட்டும் அமைத்துக் கொள்ளலாம். வியூ மற்றும் டூல்பார்ஸ் சென்று இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.

உடனடி சிடி இயக்கத்தை நிறுத்த

கம்ப்யூட்டரின் டிவிடி அல்லது சிடி டிரைவில் ஒரு சிடியைப் போட்டவுடன் அது உள்ளிருக்கும் பைலுக்கேற்ப இயங்கத் தொடங்குகிறது. அல்லது என்ன செய்திட? என்று மெனு கொடுத்துக் கேட்கிறது. கம்ப்யூட்டரின் ஆட்டோ ரன் பைல் சிடியை இயக்குகிறது. 

இது எதற்கு? சிடி போட்டால் சிவனே என்று இருக்க வேண்டியதுதானே? நமக்கு அதில் உள்ள பைல் வேண்டும் என்றால் நாம் இயக்க மாட்டாமோ? என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்கு அந்த சிடி இயங்குவது பிடிக்கவில்லையா? ட்ரேயைத் தள்ளியவுடன் அதனைப் படிக்க கம்ப்யூட்டர் முயற்சிக்கிறது அல்லவா? உடனே ஷிப்ட் கீயை அழுத்துங்கள். சிடி இயங்காது. நின்றுவிடும். ஆனால் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அதன் டைரக்டரியில் உள்ள பைல்களை நீங்கள் கையாளலாம்.  

ஷிப்ட்+எப்5 என்ன நடக்கும்?

வேர்டில் நூற்றுக் கணக்கான ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஆனால் இவற்றில் மிக முக்கியம் என பலரும் கருதுவது ஷிப்ட் + எப்5 கீகள் இணைந்த ஷார்ட் கட் கீ தான். இதனை அழுத்துவதன் மூலம் அதற்கு முன் நாம் டாகுமெண்ட்டில் எங்கு எடிட் செய்தோமோ அந்த இடத்திற்கு கர்சர் தாவும். அடுத்ததாக பொதுவான ஒன்று. 

அது கண்ட்ரோல் + இஸட். இது அப்போது மேற்கொண்ட செயலை நீக்கும். இதனைத் திருப்பி திருப்பி அழுத்துவதன் மூலம் நாம் மேற்கொண்ட செயல்கள் அனைத்தும் பின் வரிசையில் நீக்கப்படும். ஏதேனும் நீக்கிய ஒன்றை மீண்டும் வேண்டும் என்றால் கண்ட்ரோல் + ஒய் அழுத்தினால் போதும்.
http://www.anbuthil.com/2014/06/usefull-computer-tips.html#ixzz36BqI0z2N

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, April 15, 2016

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!
சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?
சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது. அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.
சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.
சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.
சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோஎக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.
சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.
மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!
இன்னொரு முக்கியமான விஷயம்சாப்பிட்ட உடன் உறவு வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, உறவு பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு உறவு வைத்துக்கொள்வதே நல்லது.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Wednesday, April 13, 2016

ஆரோக்கியமான 6 காலை உணவுகள்!!!

ஆரோக்கியமான 6 காலை உணவுகள்!!!

காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அது உங்கள் கலோரியை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு உண்ணும் உணவு தானியத்தை வாங்குவதற்கு முன்பாக அதன் ஊட்டச்சத்தை பார்க்க பரிந்துரைக்கப்பட்டாலும், அனைத்து உணவு தானியங்களையும் ஆடை நீக்கிய பாலில் கலந்து உட்கொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

மேலும் கூடுதல் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும். இருப்பினும் உங்களுக்கு உங்கள் உணவு தானியங்கள் இனிப்புடன் இருக்க வேண்டுமானால், வெண்ணிற சர்க்கரை பழங்களான வாழைப்பழம், கிஸ்மிஸ் அல்லது ஏதாவது சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். உலர்ந்த பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். காலை உணவை வயிறு நிறைய சாப்பிட்டால், மதிய வேளையில், பசியில் காய்ந்து போகாமல் இருக்கலாம். உடலை கட்டமைப்புடன் வைக்க தீவிர உடற்பயிற்சியில் இருப்பவர்களும் கூட இந்த பழக்கத்தால் அதிக பயனை அடையலாம். அவர்களின் உடல் எடையை குறைக்கச் செய்யவும் இது மிகவும் உதவியாக இருக்கும். இங்கு மிகவும் ஆரோக்கியமான சில காலை உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

கஞ்சி
கஞ்சி என்பது மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும். வளமையான கனிமங்கள் அடங்கியுள்ள இதில், நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். தித்திப்பாக இருப்பதற்கு சிறிது வெல்லத்தை வேண்டுமானால் அதில் கலந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதன் மேல், நற்பதமான பழங்கள் அல்லது கிஸ்மிஸ் மற்றும் பாதாம்களை தூவி விடுங்கள்.

கார்ன் ஃப்ளேக்ஸ்
அளவுக்கு அதிகமான கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸை கொண்டுள்ள கார்ன் ஃப்ளேக்ஸ், பள்ளிக் குழந்தைகளுக்கும், ஏன் பெரியவர்களுக்குமே சிறப்பான பயனை அளிக்கும். முக்கியமாக மழைக்காலத்தில் இது சிறந்த காலை உணவாக விளங்கும். அதற்கு காரணம், அவற்றில் அதிகளவில் ஈரப்பதம் இருப்பதால், உங்கள் உடல் அதிக அளவிலான நீரை கொண்டிருக்கும்.

கோதுமை ஃப்ளேக்ஸ்
இது கோதுமை கஞ்சியின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமே. எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு தானியங்களுக்கு பதிலாக இதையும் முயற்சி செய்து பார்க்கலாம். இருப்பினும் கூடுதல் கால்சியத்துடன் செறிவூட்டப்படாமல் இருந்தால், அதனை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை,

ஓட்ஸ் கஞ்சி
அதிக கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு கிண்ணம் அளவிலான ஓட்ஸ் கஞ்சியை காலையில் உட்கொள்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதில் கூடுதல் சர்க்கரையை சேர்க்கக் கூடாது. ஓட்ஸ் கஞ்சியில் உள்ள அதிக நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்கும். அதனால் மன அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கும்.

ம்யூஸ்லி (Muesli)
ம்யூஸ்லியில் கிஸ்மிஸ், பாதாம் மற்றும் நான்கு வகை தானியங்கள் கலந்திருப்பதால் அது ஒரு சிறந்த காலை உணவாக திகழ்கிறது. மற்றவைகளை காட்டிலும் இதில் சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருப்பதால், வளரும் பிள்ளைகளையும், விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களையும் அதிக ஆற்றலுடன் வைத்திருக்கும். அதனை பால் அல்லது தயிருடன் கலந்து உண்ணலாம். அதனை எண்ணம் போல அலங்கரித்து, மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகவும் கொடுக்கலாம்.

அவல்
அவல் என்பது இந்தியாவில் பயன்படுத்தும் புகழ்பெற்ற உணவு வகையாகும். இந்த அவல் மிதமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகவும் அமையும். ஆனால் அவல் என்பது லேசாக தான் வதக்கப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் உண்ணுகிற கார்ன் ஃப்ளேக்ஸ் மற்றும் ஓட்ஸ் கஞ்சிக்கு பதில், சாக்லெட், தேன் மற்றும் பழங்கள் நறுஞ்சுவையூட்டப்பட்ட தானியங்களை தேர்ந்தெடுத்தும் உண்ணலாம். இது முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். முயற்சி செய்து பாருங்களேன்!

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42311


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, April 12, 2016

Your Resume Matches Our Requirements

Your resume has been short-listed by Morgan Farm here in Canada . For details, send your updated resume for our perusal.

HRD Admin,
Owen Morgan.

Monday, April 11, 2016

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்!!!

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்!!!

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது.

சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன. ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும்.

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

வால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.

க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.

இது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=158&t=42312

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com