இரத்தசோகை எப்படிக் கண்டறிவது ?
உங்களுக்கு களைப்பாக இருக்கிறதா? சோம்பலாகவும் தலைச்சுற்றும் இருக்கிறதா?
அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.
களைப்பாயிருக்கிறதா? காரணங்களும் காரியங்களும்..
அடிப்படைக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அது இரத்தசோகையாகவும் இருக்கலாம்.
களைப்பாயிருக்கிறதா? காரணங்களும் காரியங்களும்..
இரத்தசோகை என்பது உங்கள் குருதியில் போதியளவு செங்குருதிக் கலங்கள் Red blood cells இல்லாமையே ஆகும். கண்கள் நாக்கு, உடல் போன்றவை வெளிறியிருப்பதிலிருந்து இது இருப்பதை மருத்துவர்கள் ஊகிப்பார்கள்.
Hb% என்ற சுலபமான குருதிப் பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்தலாம்.
Hb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்ன?
Hb% என்ற சுலபமான குருதிப் பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்தலாம்.
Hb% ஆனது ஆண்களில் 13 ற்கு குறையாமலும் பெண்களில் 11ற்கு ற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்ன?
கீழ்காணும் அறிகுறிகள் இரத்தசோகை இருப்பதை உணர்த்தலாம். அவ்வாறு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து அது இருக்கிறதா இல்லையா என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ள முடியும்.
- களைப்பு. வழமைபோல நடக்கவோ வேலை செய்யவோ முடியாது விரைவில் களைப்படைதல் முக்கிய அறிகுறியாகும்.
- மூச்சிளைப்பு, குருதியில் போதிய செங்குருதிக் கலங்கள் இல்லாததால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காது போகிறது. அதை ஈடு செய்ய வேகமாகச் சுவாசித்து ஒட்சிசனைப் பெற முயல்கையில் மூச்சிளைப்பு தோன்றுகிறது.
- தலைப்பாரமாக இருத்தல், தலை அம்மல் - மனச்சோர்வு, சிந்திக் முடியாதிருத்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும். மூளைக்கு போதிய இரத்தம் இல்லாததால் ஏற்படும் அறிகுறிகள் இவை.
- கை கால்கள் வழிமையான சூடு இன்றிக் குளிர்ந்திருத்தல்.
- சருமம் வழமையைவிட வெளிறியிருத்தல். கண் நாக்கு நகங்கள் போன்றவையும் வெளிறியிருக்கும்.
- நெஞ்சு வலி, நெஞ்சுப் படபடப்பு - உடற்திசுக்களுக்கு வேண்டிய ஒட்சிசனை
இரத்தசோகை உள்ளவரின் இருதயம் ஈடுகொடுக்க முடியததால் வேகமாகத் துடிப்பதால் படபடப்பும், இருதயத்திற்கு போதிய ஒட்சிசன் கிடைக்காததால் நெஞசுவலியும் வரலாம்.
இரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.
முன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம்.
ஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்ணாது குப்பை உணவுகளை உண்பதுதான்.
http://hainallama.blogspot.in/2014/05/blog-post_21.htmlஇரத்தசோகை உள்ளவர்களை அடிக்கடி காண முடிகிறது. வேறு காரணங்களாக வரும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது பலருக்கு இரத்தசோகை இருப்பதைக் கண்டறிய முடிகிறது. இருந்தபோதும் பலரது இரத்தசோகைகள் கடுமையானவை அல்ல.
முன்பு இரத்தசோகையை வசதியற்ற, போசாக்குள்ள உணவு உண்ண முடியாதவர்களிடம் மட்டுமே கண்டோம்.
ஆனால் இப்பொழுது நல்ல வசதியுள்ளவர்களிடமும் காண்கிறோம். இதற்குக் காரணம் போசாக்கான உணவுகளை உண்ணாது குப்பை உணவுகளை உண்பதுதான்.
--
No comments:
Post a Comment