Sunday, August 7, 2016

குழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்

குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏனெனில் பிறந்த குழந்தை தனக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். ஆகவே குழந்தை அழ ஆரம்பித்தால், அது எதற்காக அழுகிறது என்று கண்டுபிடிப்பது சற்று கடினம்.

இங்கு குழந்தைகள் இரவில் அழுவதற்கான சில பொதுவான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தை இரவு நேரத்தில் அழுதால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், நாள் முழுவதும் சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருக்கும். எனவே உங்கள் குழந்தை நாள் முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குழந்தைகள் டயப்பரில் மலம் கழித்துவிட்டால், ஈரத்தினால் அழத் தொடங்கிவிடுவார்கள். எனவே இரவில் துணியால் ஆன நாப்கின்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தாமல், இரவில் ஹக்கிஸ் பயன்படுத்துங்கள்.

குழந்தைக்கு பகல் நேரத்தில் சீரான இடைவெளியில் பால் கொடுத்துக் கொண்டிருப்பீர்கள். அப்படி கொடுக்கும் போது, இரவில் சற்று கண் அயர்ந்து, குழந்தைக்கு பால் கொடுக்காமல் இருந்தால், குழந்தைகள் இரவு முழுவதும் அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் வலியை அழுகையின் மூலம் தான் வெளிப்படுத்துவார்கள். மேலும் குழந்தையின் சருமம் மிகவும் சென்சிடிவ் என்பதால், சிறு கொசு கடித்தால் கூட, அவர்கள் இரவு முழுவதும் அழுவார்கள்.

குழந்தைகள் சில நேரங்களில் அருகில் யாரும் இல்லாமல் இருந்தால் அழுவார்கள். அப்போது தாய் அல்லது தந்தை தூக்கி அணைத்துக் கொண்டு, வெதுவெதுப்பான சூழ்நிலை ஏற்பட்டு, அவர்கள் நிம்மதியடைவார்கள்.

குழந்தைகள் தங்களின சருமத்திற்கு தொந்தரவு தரும் வகையில் அரிப்புக்களை உணர்ந்தால், அழ ஆரம்பிப்பார்கள். குறிப்பாக டயப்பர் அணிவதால் குழந்தைகளுக்கு அரிப்புக்கள் ஏற்படும். எனவே அவற்றை கவனித்து அதற்கு சரியான சிகிச்சை அளியுங்கள்.

குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாகவோ அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டாலோ, அவர்களின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு அழ ஆரம்பிப்பார்க்ள.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: