Saturday, April 6, 2013

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் 'ஏ' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
*
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
*
எலும்புகளை பலப்படுத்தும்.
*
இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*
முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
*
புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*
பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

http://www.vaazgavalamudan.blogspot.com/2011/12/blog-post_4324.html

--
*more articles click*
www.sahabudeen.com


உங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் கண்டறிய..



--
*more articles click*
www.sahabudeen.com


உங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் கண்டறிய..


உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா? Anti Virus நிறுவினால் மட்டும் போதாது. அந்த Antivirus software வைரஸ்கள் சரியாக நீக்குகிறதா? என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் எதிர்ப்பை சரிவர நிறைவேற்றுகிறதா என கண்டறிய இந்த முறை உங்களுக்கு உதவும். முதலில் நீங்களே உங்கள் கணினியில் சோதனைக்காக ஒரு வைரஸ் நிரலை உருவாக்க வேண்டும். 

 

வைரஸ் நிரலை உருவாக்க...
உங்கள் கணினியல் ஒரு சாதாரண வைரஸ் கோப்பை உருவாக்க கீழ்க்கண்ட நிரல் வரிகளை நோட்பேடில் எழுதிக்கொண்டு அதை virus என்ற பெயரில் சேமித்துவிடுங்கள். 

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

பிறகு கணினியில் உள்ள ஆட்ன்டி வைரஸ் மென்பொருள் கொண்டு உங்கள் கணினியை வைரஸ் ஸ்கேன்(Scan) செய்யுங்கள். இப்போது நீங்கள் உருவாக்கிய சோதனை வைரஸ் நிரல் அதில் காண்பிக்கப்பட்டால் உங்களுடைய ஆன்ட்டி வைரஸ் நன்றாக இயங்குகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.. 

இல்லையென்றால் உங்களுடைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை Update செய்து ஆக வேண்டும்.. அல்லது அதற்கு மாற்றாக மற்றொரு நல்ல ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நிறுவுவதே உங்கள் கணினியை வைரஸிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி.

நீங்கள் சோதனைக்காக உருவாக்கிய வைரஸ் நிரலால் எந்த பிரச்னையும் வராது என்பதை நினைவில் வைக்கவும். 

http://www.thangampalani.com/2012/06/antivirus-software-checking.html#

* தெரிந்து கொள்வோம் வாங்க-46



--
*more articles click*
www.sahabudeen.com


* தெரிந்து கொள்வோம் வாங்க-46
தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து "கேஷ்' என்ற ஆங்கிலச் சொல் வந்தது. 

* முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 

* உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்கள் ஆப்பிரிக்கர்கள். குறைந்த நேரம் தூங்குபவர்கள் சீனர்கள்.
 

* திருத்தணியைத் தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்டவர் ம.பொ.சிவஞானம்.
 

* கொச்சியில் யூத இனத்தவர்கள் வசிக்கின்றனர்.
 

* மகாத்மா காந்தியைக் கௌரவித்து இதுவரை 49 நாடுகள் தபால் தலையை வெளியிட்டுள்ளன.
 

* நண்டிற்கு தலை என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை.
 

* ஒரு மைல் தூரத்தைக் கடக்க 33 மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன நத்தைகள்.
 

* ஒரு சதுரமைல் வளமான நிலத்தில் 3 கோடியே 20 லட்சம் மண் புழுக்கள் இருக்கும்.
 

* தும்பிகளின் வாழ்நாள் 24 மணி நேரம் மட்டுமே.
 

* முதலைகளால் பின்னோக்கி நகர முடியாது.
 

* பாம்புக்கு காதுகள் கிடையாது. ஆனால், ஒலி அதிர்வுகளை உணரும் திறன் அதன் நாக்குக்கு உண்டு.
 

* ஒரு நத்தைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் பற்கள் இருக்கும்
* ஆமைக்குப் பல் கிடையாது. கடினமான ஈறு போன்ற அமைப்பாலே அது உணவுகளை உண்கிறது.
 

* உயில் எழுதும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள்.
 

* ஸ்பெயின் நாட்டில் தான் முதன் முதலில் நாணயம் தோன்றியது.
 

* துக்கத்தால் வரும் கண்ணீர் நம் உடலில் நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.

 கடல் முயல்!கடல் வாழ் உயிரினங்களில் ஒரு வகையான மீனுக்குக் கடல் முயல் என்று பெயர். இது தோற்றத்தில் பார்ப்பதற்கு முயலைப் போலவே இருக்கும். மீன் இனத்திலேயே அதிக முட்டைகள் இடும் உயிரினம் கடல் முயல் தான். அதாவது, ஒரு மாதத்தில் 11 கோடியே 95 லட்சம் முட்டைகள் இடக் கூடியது. 

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.
 

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.
 

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.
 

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.
 

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.
 

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
 

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.
 
தகவல்:யாழ் இணையம்

Engr.Sulthan

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்

அனைத்து கணித வகைகளுக்கும் (அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை) தீர்வு நொடியில்

கணிதம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும் நமக்குத் தான்
இந்த பதிவு. பள்ளியில் இருந்து கல்லூரி வரை கணக்கு என்றாலே
ஒரு வித பயம் தான் ஆசிரியர்கள் கூட சில நேரங்களில் தடுமாறுவது
உண்டு இனி அந்த பிரச்சினை இல்லை. உங்கள் கணித கேள்விகளை
இந்த இணையதளத்தில் கொடுத்தால் உடனடியாக பதில் வரும்
அதுவும் சாதாரணமாக இல்லை. " Step by Step" என்று சொல்லக்கூடிய
வழிமுறையுடன் அல்ஜிப்ராவில் இருந்து ட்ரிகினாமெண்டிரி வரை
அனைத்துக்கும் பதில் அளிக்கிறது. எந்த கணக்கு போட்டாலும்
விடையை சரியாக அளிக்கிறது.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இதில் சேரலாம். இலவசமாக
இணையதளத்தில் ஒரு கணக்கு உருவாக்கி உங்கள் கேள்விகளை
கேட்கலாம். கிராப் மட்டும் தான் எனக்கு வராது என்கிறீர்களா அதற்கும்
இவர்களிடம் பதில் உண்டு. ஒவ்வொரு வகையிலும் இலட்சத்திற்கும்
மேற்பட்ட மாதிரி கணக்கும் உள்ளது.

வீட்டுப்பாடம் என்று தனக்கு தெரியாத கணக்கை கொடுக்கும்
ஆசிரியர்களிடம் இருந்து கண்டிப்பாக அப்பாவி மாணவர்களை இது
காப்பாற்றும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும் தங்களுக்கு
எழும் சந்தேகங்களுக்கு இந்த இணையதளம் மிக உதவியாக இருக்கும்.
இணையதள முகவரி :  http://www.mathway.com

ஆசிரியர்களும் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு இனி எளிதாக
விடை காணலாம். பயனுள்ளதாக இருந்தால் இந்த தகவலை நம்
நண்பருக்கும் தெரியபடுத்துங்கள்.

நன்றி:www.winmani.com

Engr.Sulthan



--
*more articles click*
www.sahabudeen.com


Friday, April 5, 2013

தன்னம்பிக்கை உடையவரா நீங்கள்? ஒரு சுயபரிசோதனை


மனிதன் வாழ்வில் பெறும் வெற்றியும் தோல்வியும் அவனுடைய தன்னம்பிக்கையை பொறுத்தே அமைகின்றது.
ஆண், பெண் வேறுபாடு இல்லாமல், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தன்னம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் யோசிக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை உள்ளதா? இல்லையா? என்று. நீங்களே உங்கள் தன்னம்பிக்கையின் அளவை தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை இல்லாதவருக்கான விஷயங்களை கவனித்துப் பாருங்கள். அவற்றிலிருந்து நீங்கள் பெருமளவு நீங்கள் முரண்பட்டு நின்றால், நீங்கள் அதிக தன்னம்பிக்கை உள்ளவர் என்று அர்த்தம்.

·  எண்ணங்கள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் எண்ணங்கள் கீழ்கண்டவாறு இருக்கும்.
*
என்னால் முடியாது
*
இது மிகவும் கஷ்டம்
*
இது எப்படி என்று எனக்கு தெரியாது
*
இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை
*
இதை நான் செய்வதை விட இவர் செய்வது சிறப்பாக இருக்கும்.
*
என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
உணர்வுகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் உணர்வுகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* சந்தேகம்
*
வரப்போவதை நினைத்து பயம்
*
எதிர்கொள்ளும் விஷயத்தைப் பற்றிய கவலை
*
தன்னைப்பற்றியே வெறுப்பு, கோபம்
*
புதிய சூழ்நிலையில் எதையோ நினைத்து பயம்
*
மனக்கசப்பு
*
குற்ற உணர்ச்சி மற்றும் ஊக்கமின்மை
நடத்தைகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் நடத்தைகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* எதையாவது செய்து மாட்டிக் கொள்வதைவிட பேசாமல் இருந்துவிடலாம் என்ற போக்கு
*
பரிந்துரைகள் சொல்வதில் இடர்பாடு
*
யாராவது செய்யட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிடல் அல்லது எதையும் முந்தி செய்யாமலிருத்தல்
*
புதிய விஷயங்களை தவிர்த்தல் அல்லது மாற்றம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளாமலிருத்தல்.
*
தெரிந்த விஷயத்தைப் பற்றிக்கூட தொடர்ந்து அடுத்தவரிடம் ஆலோசனை மற்றும் உறுதிப்படுத்துவதற்கு கேட்பது.
*
எல்லாவற்றுக்கும் தயங்குவது. தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை.
*
கடைசி பெஞ்சில் அமர்வது
*
மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தல்
உடல்ரீதியான அறிகுறிகள்:
தன்னம்பிக்கை இல்லாதவரின் உடல் ரீதியான அறிகுறிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
* தலைகுனிந்து நிற்பது.
*
கண்களைப் பார்த்து பேசாதது
*
அமைதியின்றி அங்கும் இங்கும் அலைவது
*
பதட்டத்துடனும் படபடப்புடனும் காணப்படுவது
*
சோம்பலாகவும் அக்கறையின்றியும் காணப்படுவது.
இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. இதில் எது உங்கள் குணத்துடன் பொருந்திப் போகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மேற்கூறியவை அனைத்தும் தகர்த்து உங்களை வெற்றியாளராக மாறுங்கள்.
நீடூரிக்காக
தொகுப்பு
- கோவை பஷீர், நைஜீரியாவிலிருந்து
Source : http://niduri.com/?p=803


--
*more articles click*
www.sahabudeen.com



Wednesday, April 3, 2013

கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள குறிப்புகள்..!


நீங்கள் கணினியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி புரிபவரா? உங்கள் கண்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.

ஆயர்வேத மருத்துவ அடிப்படைத் தகவல்(Ayarveta Medical Basic Information) என்ன சொல்கிறதெனில், மனிதனின் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (Land, water, fire, air, space) என ஐம்பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றாய் தொகுத்து உருவாக்கப்பட்டதே மனிதனின் உடல்.

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் எப்படி பாதுகாப்பு அளிப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

தொடர்ந்து இடைவிடாமல் கணினியில் உட்கார்ந்துகொண்டு வேலைப் பார்ப்பவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும். உடல் சோர்வில் கண்களும் அடங்கும். கணினியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்பு கண்கள்தான்.

அடிக்கடி computer Screen Blink ஆவதால்தான் கண்களுக்குப் பிரச்னையே உண்டாகிறது. தொடர்ந்து இவ்வாறான ஒளிகளை கண்கள் சந்திப்பதால் உடலில் உள்ள உயிர்த்துடிப்பை இயக்குகிற காற்று சிரமத்திற்கு ஆட்படுகிறது. அடிக்கடி ஒளிரும் கணினித் திரையால் உடலில் உள்ள உணர்ச்சி மண்டலம், புலன் உணர்வு மற்றும் மூளை போன்ற நரம்பு தொடர்பான இத்தியாதிகள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆட்படுத்தப்படுகின்றன.

உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று அதிக சிரமத்திற்கு உள்ளாவதால்தான் மனதும் சோர்வடைந்து மன இறுக்கம் ஏற்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு மூளைக்கு வேலை கொடுப்பதால் அதிக உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது.

மனச்சோர்வு, உடல் சோர்வு, கண்கள் சோர்வடைவதை எப்படி தடுப்பது?
அமெரிக்க மருத்துவரான ஜூடித் மாரிசன் இதற்கென சில வழிமுறைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். பெண் மருத்துவரான இவர் ஆயுர்வேத முறைப்படி நல்லெண்ணையை முகம் முழுவதுமாக பூசி மசாஜ் செய்யச்சொல்கிறார்.

பிறகு முழங்கையில் தொடங்கி விரல் நுனிகள் வரை நல்லெண்ணையை (Sesame oil)தடவி நன்றாக மசாஜ் செய்யச் சொல்கிறார்.

சில நேரம் கணினியின் இயக்கத்தை நிறுத்திவிட்டோ, அல்லது எழுந்து வெளியில் சென்று ஒரு ஐந்து நிமிடமாவது அலவலாவச் சொல்கிறார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இப்படி ஐந்து நிமிடம் ஓய்வு எடுத்தால் உடலும், மூளையும் ஒரு சீரான நிலைக்கு மீண்டும் திரும்பும்.

அவ்வப்போது உங்கள் கைவிரல்களை நீட்டி மடக்கலாம். நீங்கள் உங்கள் கை விரல்கள், மற்றும் கைகளை இலேசாக அழுத்தி மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

கணினி இருக்கையில் உட்கார்ந்தவாறே கூட உங்கள் கண்களுக்கு நீங்கள் ஓய்வளிக்கலாம் (You can rest your eyes) . உள்ளங்கை கொண்டு உங்கள் கண்களை மூடிக்கொண்டு. நான்கு புறமும் கண்களை சுழற்றுவதன் மூலம், ஒரு நேர்க்கோட்டுப் பார்வையில் வேலை செய்த உங்கள் கண்களும், கண் தசை நார்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கலாம். இயல்பு நிலைக்கு கண் தசைநார்கள்(Eye ligaments) திரும்புவதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வு, அயற்சி நீங்கும்.

கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், அக்கவுண்டன்ட், முழுநேர பதிவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், மற்றும் மாணவர்கள் (Data entry operators, accountant, full-time bloggers, software engineers, and students) ஆகியோர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி நல்ல பலனைப் பெறலாம். இரவில் இந்த நல்லெண்ணை மசாஜ் செய்துகொள்ளலாம்.

பகலில் கைவிரல்கள், தோள்பட்டை, பின்னங்கழுத்து, முதுகுத் தண்டு (Fingers, shoulder, hind neck, spinal cord) ஆகியவற்றை நீங்களே பிடித்துவிட்டுக்கொள்வதன் மூலம் இலேசாக நீவிக்கொள்வதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, முழங்கை வலி (Back pain, neck pain, elbow pain) ஆகிய வலிகளிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள முடியும். அடிக்கடி கண்களுக்கு பயிற்சி அளித்துக்கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


--
*more articles click*
www.sahabudeen.com



Monday, April 1, 2013

டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!



வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்நுட்ப சாதனங்கள் பல. பலரும் அதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறோம். டேப்ளட் பிசி வாங்கும் முன் நாம் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.

டேப்ளட் பிசிக்களை பலரும் விரும்ப காரணம்:
(Top reasons to like a tablet)
குறிப்பாகச் சொல்வதானால் மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். கல்வித் தொடர்புடைய சாதனங்களாகவும் அவைகள் பயன்படுவதும் ஒரு முக்கிய காரணம். 


அதுபோன்றதொரு பயனுள்ள தொழில்நுட்பச் சாதனம்தான் டேப்ளட் பிசி.. பிசினஸ் செய்பவர்கள் முதல், மாணவர்கள் வரை அனைவருமே இதை வாங்க முனைகின்றனர். உங்களுக்கும் இதுபோன்றதொரு எண்ணம் வந்திருக்கலாம். டேப்ளட் பிசி(Tablet Pc) வாங்குவதற்கு முன்பு ஒரு சில விடயங்களை யோசித்து, பிறகு வாங்குங்கள்..!

குறைந்த விலையில் கிடைக்கும் ஆகாஷ் டேப்ளட்டிற்கு பிறகு பல்வேறு நிறுவனங்களின் டேப்ளட் பிசிக்கள் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 4000 த்திலிருந்து ஆரம்பிக்கிறது.

டேபிளட் பிசிக்களின் வகைகள்:
(Kinds of Tablet PC)
டேப்ளட் பிசியில் இரண்டு வகை உண்டு. போன்பேசும் வசதியுடன் கூடிய டேப்ளட் பிசி. மற்றொன்று போன் பேசும் வசதியற்ற டேப்ளட் பிசி. நீங்கள் வாங்கும் டேப்ளட் பிசியில் SIM card slot உடன் உள்ள டேப்ளட் பிசியாக இருந்தால் அதில் போன் பேசிக்கொள்ள முடியும். தற்போது நம் நாட்டில் கிடைக்கும் டேப்ளட் பிசிக்கள் 7" கொண்டவையாகவே கிடைக்கிறது. டேபிளட் பிசிக்கள் அனைத்துமே டச் ஸ்கிரீன் கொண்டவைதான். அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று resistive touch screen, மற்றொன்று capacitive touch screen. 


முதல் வகை touch screen-ல் டேப்ளட் பிசியுடன் கொடுக்கப்பட்டிருக்கிற சிறு குச்சியைப் போன்ற பென்சிலில் தொட்டு இயக்குவது. இரண்டாம் வகை capacitive touch screen -ல் மென்மையான தொடுதலில் இயங்குபவை. இவ்வாறான டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம்.


Tablet PC க்கள் Android இயங்குதளங்களைக் கொண்டே இயங்குகிறது. இந்த ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களில் சில வகை android operating systems பதிப்புகள் உள்ளது. அதாவது கணினியில் விண்டோஸ் xp, விண்டோஸ் 7, விண்டோஸ் 99, இருப்பதைப் போன்று ஆண்ட்ராய்டிலும் Android 2.2., android gingerbread, android 3.1, android 4 என ஒரு சில பதிப்புகள் கிடைக்கின்றன. நம் நாட்டில் கிடைக்கக்கூடிய மலிவு விலை ஆன்ட்ராய் இயங்குதளங்கள் android 2.2, android 2.3 ஆகியவைகளே.. இந்த இயங்குதளங்களைக்கொண்ட டேப்ளட் பிசிகளில் video Call செய்ய முடியாது.

அவ்வாறு பேச வேண்டுமானால் இதற்கென உள்ள டான்கோ(TANGO)என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீடீயோ சாட் செய்யலாம். Tango மென்பொருளை டவுன்லோட் செய்ய இணைப்பைக்கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்த இயங்குதளங்கள் இயங்கும் டேப்ளட் பிசிகளில் Gtalk-ல் chat செய்ய முடியும். ஆனால் பேசுவதற்கு முடியாது. skype பயன்படுத்துபவர்கள் இதன்மூலம் பேசலாம்.

SIM Slot
உடன் கூடிய டேப்ளட் பிசிக்களில் போன் பேச முடியும். Bluetooth வசதியுடன் கூடிய டேப்ளட் என்றால் கூடுதல் பயன் பெறலாம். இந்த வசதியுடைய டேப்ளட் பிசியுடன் ஹெட்செட்டை இணைத்து பேசிக்கொள்ளலாம். இதனால் மற்றவர்கள் நாம் பேசுவதை கேட்பது தவிர்க்க முடியும் blue tooth வசதி இல்லாத டேப்ளட் பிசிக்களில் பேசலாம். ஆனால் speaker மூலமே கேட்க முடியும். இதனால் அருகில் உள்ளவர்களும் நம்முடைய பேச்சை கேட்க முடியும். இதைத் தவிர்க்க Blue tooth வசதியுடன் டேப்ளட் பிசிக்களை தேர்ந்தெடுத்து வாங்குவது நலம். கொஞ்சம் கூடுதல் பணம் போட்டால் இந்த வசதியுடனை டேப்ளட் பிசிக்களை வாங்கிவிடலாம்.

Tablet Pc -External Keyboard:

டேப்ளட் பிசிக்களுக்காகவே மினி கீபோர்ட்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்த மினி கீபோர்ட்களை டேப்ளட் பிசியுடன் இணைத்து பயன்படுத்தலாம். Tablet Pc உடன் Keyboard இணைக்க USB Port அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும். 



யு.எஸ்.பி ஹோஸ்ட் மோட் எனேபிள் செய்து கணினியுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். இதன் மூலம் கணினியிலிருந்து டேப்ளட் பிசிக்கும், டேப்ளட் பிசிலிருந்து கணிக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம். சாதாரணமாக மினி யு.எஸ்.பி போர்ட் மட்டுமே டேப்ளட் பிசியில் இணைக்கப்படிருக்கும். நாம் வழக்கமாக பயனப்டுத்தும் pen-drive, மற்ற USB பொருட்களை இதில் பயன்படுத்த முடியாது. 
தோல் உறை பாதுகாப்புடன் கூடிய டேப்ளட் பிசி மினி கீபோர்ட் உடன்
2G வசதி கொண்ட டேப்ளட் பிசிக்கள் விலை குறைவாக கிடைக்கும். 3G வசதியுடன் வெளிவரும் டேப்ளட் பிசிக்கள் சற்று விலை அதிகம். சாதாரணமாக டேப்ளட் பிசிக்களின் எடை 350 கிராம் முதல் 450 கிராம் வரை இருக்கும். இந்த டேப்ளட் பிசிக்கல் அனைத்துவித வீடியோ பார்மட்களையும் ஆதரிக்காது. எனினும் அதற்குரிய மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்டுத்துவதன்மூலம் அனைத்து வகை வீடியோக்களையும் Support செய்யுமாறு அமைத்துக்கொள்ளலாம்.

டேப்ளட் பிசிக்களில் உள்ள மற்ற வசதிகள்:
(Features of Tablet Pc)
GPS, Bluetooth, 2-G, GPRS, WiFi, branded camera
போன்றவை டேப்ளட் பிசியில் உள்ள மற்ற வசதிகள்.

இதில் பல்வேறு பட்ட கேம்ஸ்களும் விளையாடலாம். இதற்கு உங்கள் டேப்ளட் பிசியில் இருக்கும் மெமரி அளவு முக்கியம்.

இதில் Internal Memory, External memory, Rom, RAM என நான்கு வகை மெமரிகள் இருக்கும். Internal Memory என்பது டேப்ளட் பிசியினுள்ளேயே Inbuilt ஆக இருக்கும். மெமரி கார்ட்டைப் போன்றது இது. இந்த மெமரியில் நமக்கு வேண்டியதை நாம் பதிந்துவைக்கலாம். 8GB அதற்கு மேலும் சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

External memory
என்பது நாம் கையில் எடுத்துச்செல்ல்கூடிய வகையில் இருக்கிற மெமரி கார்ட் ஆகும். 32GB வரை சப்போர்ட் செய்யும் திறனுடையது டேப்ளட் பிசிக்கள். இப்போது அதிகளவு மெமரி சப்போர்ட் செய்யும் டேப்ளட் பிசிக்களும் கிடைக்கின்றன. இத்தகைய மெமரிகார்ட்களில் நமக்கு வேண்டிய டேட்டாக்களை பதிந்து பயன்படுத்த முடியும்.

சாதாரண கணினியைப் போன்றே இதிலும் RAM ன் பணி டேப்ளட் பிசிக்களின் வேகத்தை நிர்ணயிக்கும் பொருளாக பயன்படுகிறது. இது தற்போது 512MB, 1GB, 2GB, 4GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.

ROM -
என்பது Read only memory என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில்தான் நாம் நிறுவும் மென்பொருள்கள் பதியப்படும். குறிப்பாக tablet Pc system softwares அனைத்தும் இதில்தான் பதியப்படும்.

Tablet Pc-
க்களில் தமிழ்:
(Tamil in Tablet PC)
இதில் தமிழையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக Opera Mini Browser மூலம் இணையத்தில்லுள்ள தமிழ்த் தளங்களை படிக்க முடியும். ஆண்ட்ராய்ட் லேட்டஸ்ட் வெர்சனில் இது இன்னும் சுலபமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது புதிய டேப்ளட் பிசிக்கள் எண்ணற்ற வசதிகளுடன் சந்தையில் கிடைக்கிறது.

புதிதாக டேப்ளட் பிசி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களையும், Google Play Application களையும் ஆதரிக்கும்  Tablet PC மற்றும் Phone களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள். கீழே கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறுபட்ட மாடங்களில் உங்களுக்கான Tablet PC, மற்றும் Phone நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

Update:

Google Play
யில் உள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும் Tablet PC மற்றும் Phone களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனங்கள்:

Acer, Anydata, Archos, Asus, Compal, Coolpad, Dell, Enspert, Foxconn, Fujitsu, Funai Electric, Gigabyte, Hisense, Hon Hai Precision Industry Co., HTC, Huawei, INQ Mobile, Intel, iriver, Kobo, KT Tech, Kyocera Corporation, Lenovo, LG, Logitech, Micromax, Motorola, NEC, OpenPeak, Panasonic Corporation, Panasonic Mobile Communications, Pantech, Pegatron, Philips Electronics, Positivo, Quanta Corporation, Samsung, SHARP, SK Telesys, Sony, Sony Ericsson, mitomo Electric Networks, TCT Mobile Limited (Alcatel), Teleepoch, Toshiba, Vizio, ZTE,


--
*more articles click*
www.sahabudeen.com