Thursday, August 6, 2015

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி…

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Tuesday, August 4, 2015

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!


'பாய்' என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் பதிவு செய்கிறேன்.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிதமிழன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்
முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.
இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.
இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. 
* கம்பளிப் படுக்கை குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். 
* கோரைப்பாய் உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும். 
*பிரம்பு பாய் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். 
* ஈச்சம்பாய் வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும். 
* மூங்கில் பாய் உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும். 
* தாழம்பாய் வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும். 
* பேரீச்சம்பாய் வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும். 
* இலவம்பஞ்சு படுக்கை உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
* மலர்ப்படுக்கை ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும். 
* இரத்தினக் கம்பளம் நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Sunday, August 2, 2015

தியானம்" செய்யும் முறை


தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.  எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.  நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம்.  தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.  வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.  கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.  இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.  கண்களை மேதுவாக மூடுங்கள்.  அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.  உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.  மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.  கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.  கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.  மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.  ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.  நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.  மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு. மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.  மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.  நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.  மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.  கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.  இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.  மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.  காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.  மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும்தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.  நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.  இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.  எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.  கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.  எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.  இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.  சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.  அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.  இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.  இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.  எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.  இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.  இதுதான் தியான நிலை.  http://iminder.blogspot.in/2013/10/blog-post_4098.html
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



வேர்ட் டிப்ஸ்,எக்ஸெல் டிப்ஸ்


வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது. 
1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கும். 2. டயலாக் பாக்ஸின் இடது பிரிவில், Save என்பதில் கிளிக் செய்திடவும். 3. வலது பக்கத்தில் உள்ள Default File Location என்ற பீல்டில், Browse பட்டனை அழுத்தவும்.இப்போது வேர்ட் காட்டும் டயலாக் பாக்ஸில், பிரவுஸ் செய்து டைரக்டரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த டைரக்டரியை ஸ்டார்ட் அப் டைரக்டரியாகப் பயன்படுத்த விருப்பமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். 4. அடுத்தடுத்து இருமுறை ஓகே பட்டனை கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்த டைரக்டரி, மாறா நிலை டாகுமெண்ட் பைல்களை சேவ் செய்திடும் டைரக்டரியாக அமைக்கப்படும்.
மெனு பட்டன்களை இடம் மாற்ற: நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ள மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம். 
இதற்கு முதலில் Alt கீயை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.
டேபிளில் பார்டர்கள் தேவையா?: வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றபடி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவை யில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.
பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் வேலை ஆகும். 
ஒரு சில சொற்கள் அல்லது வரிகளில், ஏதேனும் பார்மட்டிங் வேலையை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் செயல்படலாம். முதலில் பார்மட் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், அந்த பகுதியில், மவுஸ் கர்சரைக் கொண்டு, ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில், Font கிளிக் செய்தால் Font Dialogue Box கிடைக்கும். தேவையான பார்மட்டிங் பணியை நிறைவு செய்திடுங்கள். இறுதியில் ஓகே கிளிக் செய்து முடிக்கவும்.
எக்ஸெல் டிப்ஸ்  பார்மட்டிங் ஷார்ட்கட்: எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண் டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.
பெர்சனல் தகவல்களை மறைக்க: எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று நீக்கலாம். ஒவ்வொரு பைலாக இதனை மேற்கொள்வதைக் காட்டிலும், ஒர்க்ஷீட்கள் உருவாகும்போது இத்தகைய தகவல்களை இணைக் காமல் இருக்க செட்டிங்ஸ் மேற்கொள்ளலாம். இதற்கு Tools > Options என முதலில் தேர்ந்தெடுக்கவும். இங்கு Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்குள்ள டேப்களில் Security டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோ பிரிவில் Remove Personal Information from File Properties on Save என்று இருப்பதைப் பார்த்து, அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து ஓகே கிளிக் செய்து அனைத்தையும் மூடவும். இனி பெர்சனல் தகவல்கள் சேர்க்கப்பட மாட்டா. 
எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்கள், கீழே குறிப்பிட்ட வழிகளில் செயல்படவும். இந்த தொகுப்பில் Document Inspector என்று ஒரு வசதியைக் காணலாம். இதன் மூலம் பைல் ஒன்றின் பல தகவல்களைப் பார்க்கலாம். Office பட்டன் கிளிக் செய்து, Prepare | Inspect Document எனச் செல்லவும். இப்போது கிடைக்கும் டாகுமெண்ட் இன்ஸ்பெக்டர் டயலாக் பாக்ஸில், கண்காணிப்பில் இருக்க வேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் Inspect என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒர்க் புக்கில் இருக்கும் பெர்சனல் தகவல்களைக் காட்டி, அவற்றில் எவை எல்லாம் இருக்கக் கூடாது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும். அவ்வாறே செயல்படலாம்.
ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க்ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா அமைந்துள்ள வலது ஓர செல்லுக்கு எடுத்துச் செல்லும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள். அதுதான் இல்லை. ஏற்கனவே ஒரிஜினலாக, இறுதியாக எந்த செல்லுக்குச் சென்றதோ, அந்த செல்லுக்குத் தான் செல்லும். 
எடுத்துக்காட்டாக, நீங்கள் அமைத்த ஒர்க் ஷீட் ஒன்றில் H20 செல் கீழாக, இறுதியானதாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நீங்கள் மூன்று படுக்கை வரிசைகளையும், ஒரு நெட்டு வரிசையினையும் இடையே நீக்குகிறீர்கள். இப்போது Ctrl+End கீகளை அழுத்தினால், கர்சர் G17 செல்லுக்குத்தானே செல்லும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இல்லை. அதற்குப் பதிலாக H20 என்ற செல்லுக்கே செல்லும். இதற்குக் காரணம் என்னவென்றால், நீங்கள் ஏற்படுத்திய மாற்றம், பைலில் பதியப்படாததே ஆகும். எனவே, மாற்றத்திற்கேற்ற வகையில் இறுதி செல் காட்டப்பட வேண்டும் என்றால், பைலை சேவ் செய்தால் போதும். மாற்றத்தின் அடிப்படையில் கடைசி செல்லைக் காட்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?


கருவுற்றிருக்கும் போது பயணங்களை, குறிப்பாக வெளியூர்ப் பயணங்களைப் பெண்கள் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இதுபோன்ற சமயங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதாவது Threatened Abortion எனும் நிலை உண்டாகலாம். அதுபற்றி இப்போது விளக்கமாகச் சொல்கிறேன்.கருவுற்றிருக்கும் ஆரம்ப மாதங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அதுபோலதான் ரஞ்சிதாவுக்கும் ஏற்பட்டது. சென்ற செப்டம்பர் 10_ம் தேதிதான் அவளுக்குக் கடைசியாகப் பீரியட்ஸ் வந்தது. அக்டோபர் 21_ம் தேதி என்னிடம் வந்தவளுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்ததில் அவள் தாய்மை அடைந்திருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பமுற்றதற்கான தலைசுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட, அந்தக் குடும்பம் சந்தோஷப்பட்டது. 
அதுவும் ரஞ்சிதா _ சிவகுமார் தம்பதியருக்கு அது முதல்குழந்தை எனும்போது சந்தோஷத்துக்கு சொல்லவும் வேண்டுமா…எதிர்பாராதவிதமாக சில நாட்களில் (நவம்பர் 11) அவளுக்கு சிறுசிறு துளிகளாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அது நின்றுபோனது. மீண்டும் அடுத்தமாதம், அதாவது டிசம்பர் 9_ம் தேதியும் அவளுக்கு முன்பு போலவே ரத்தப்போக்கு ஏற்பட…. பதறிப்போனது குடும்பம். பதற்றத்தோடு என்னை அணுகியதும் ரஞ்சிதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தேன். கரு எந்த பாதிப்பும் இல்லாமல் நார்மலாக இருப்பது தெரியவந்தது.பீரியட்ஸ் சமயத்தில், கருவுற்ற சில பெண்களுக்கு இதுபோல ரத்தப்போக்கு ஏற்படும். இதற்குக் காரணமுண்டு. கரு உண்டாகி, வளரும்போது அது பெரும்பாலும் கருப்பையை இடைவெளியே இல்லாமல் அடைத்தபடி நின்றுவிடும். அப்படி உருவாகும் கரு, 
கர்ப்பப்பையை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளி விட்டு நிற்கும்போதுதான் இதுபோல ரத்தப்போக்கு ஏற்படுகிறது.பாதிப்பு ஏதும் உண்டா? இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
சில மருத்துவர்கள் இதுபோன்ற ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த 'எண்ணெய் ஊசி' என்று பரவலாக அழைக்கப்படும் ஒருவித ஹார்மோன் ஊசி போட்டுவிடுவார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பேஷண்டோ அவருடைய சொந்தக்காரர்களோ கூட எண்ணெய் ஊசி போட்டுவிடச் சொல்லி எங்களிடம் கேட்பார்கள். இந்த ஊசி போடுவதால் எல்லாம் பெரிய பலன் இல்லை. உண்மையில் அபார்ஷன் ஆகப்போகிறதென்றால் அதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. உருவான கருவில் சில சமயம் க்ரோமோசோம் (ஒருவருடைய தோற்றத்தையும் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் பொருள் இது!) குளறுபடிகள் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கருவை மேற்கொண்டு வளரவிடாமல் இயற்கையே அழித்துவிடும் ஒரு வழிதான் அபார்ஷன். பாதிக்கப்பட்ட அதுபோன்ற கருவை மேலும் பொத்திப் பாதுகாக்காமல் வெளியே வரவிடுவதுதான் நல்லது.
தாம்பத்திய உறவின்போது ரத்தப்போக்கு வந்தால்… கருவுற்றிருக்கும் சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பயமுறுத்துவதுண்டு. இதுவும் அபார்ஷன்தானோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் வாயில் பகுதி மிகவும் மிருதுவாகிவிடும். அந்தப் பகுதியில் அதிகப்படியான ரத்தம் தேங்கி நிற்கும். உறவு கொள்ளும்போது இந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு அதனால் அந்த மிருதுப் பகுதியிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என்பது புரியாமல் சிலர் அபார்ஷன் ஏற்பட்டுவிட்டதாகப் பதறிப்போவார்கள். இதையெல்லாம் தவிர்க்கத்தான் கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப்போக்கு ஏற்படுவதால் வேலையே செய்யாமல் பெண்கள் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்பதில்லை. பயணங்களைத் தவிர்த்துவிட்டு வழக்கம்போல வீட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள் ஓரிரு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைக்குச் செல்லலாம்.
மசக்கை வாந்தி ஏன்? கருவுற்ற சில மாதங்களுக்குப் பெண்கள் சர்வகாலமும் வாந்தி எடுப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த மசக்கை வாந்தி எதனால் ஏற்படுகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. 'குழந்தைக்கு நிறைய முடி இருந்தால் வாந்தி அதிகமா வருமாம்!' என்ற பொதுவான நம்பிக்கைகளிலும் அறிவியல் உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தி எடுக்கும் அறிகுறிதான் என்றாலும் கரு நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் நல்ல அறிகுறி இது. இந்த மசக்கை வாந்தி பிரச்னையை சில மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்திவிடலாம்.
மசக்கைக்கு மாத்திரை சாப்பிடலாமா? 'மாத்திரையெல்லாம் போட்டால் குழந்தை கலைஞ்சிடும். கை, கால் விளங்காமல் பிறக்கும்' என்று சிலர் பயமுறுத்துவார்கள். இந்த பயத்துக்குக் காரணம் உண்டு. பல வருடங்களுக்கு முன் மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்த Thalidomide எனும் மாத்திரையை வெளிநாட்டவர் கண்டுபிடித்து அதை விற்பனைக்கும் கொடுத்தார்கள்.
மாத்திரையும் கச்சிதமாக செயல்பட்டு வாந்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், மாத்திரை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள், கை கால் சரியான வளர்ச்சி பெறாமல் பிறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் அந்த மாத்திரை மார்க்கெட்டில் காணமல் போனது வேறு விஷயம். அந்த சரித்திரத்தை மறக்காதவர்கள்தான் இன்றைக்கும் மசக்கை வாந்திக்கு மாத்திரை போடக்கூடாது என்கின்றனர்.
வாந்தியைக் கட்டுப்படுத்த இன்று கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானவைதான். என்றாலும், எந்தவித மாத்திரையையுமே மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் போட்டுக் கொள்ளவேண்டும்.
ஸ்கேன் ஏன் செய்யவேண்டும்? 'குழந்தை நல்லாதான் வளருதானு ஒரு ஸ்கேன் செய்து பாத்துட்டா போச்சு!' என்று, படிப்பறிவில்லாத பேஷண்டுகள்கூட சர்வசாதாரணமாக ஸ்கேனிங் பற்றிப் பேசுமளவுக்கு, இன்று மக்கள் மத்தியில் அத்தனை பிரபலமாகிவிட்டது ஸ்கேனிங் கருவி. அல்ட்ரா சவுண்ட் எனும் ஒலி அலைகளை உடலில் செலுத்தி குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேனிங் உதவுகிறது. மனித காதுக்கு எட்டாத ஒலி அலைகளை உடலில் செலுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
கருவுற்ற பெண்ணுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்வது வழக்கம். இன்று யூரின் டெஸ்டோடு ஒரு ஸ்கேன் செய்தும் பார்த்துவிடுகிறோம். கர்ப்பப் பையில்தான் கரு வளர்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் கரு தப்பிதமாக கருக்குழாயில் வளர்ந்துவிடுதுண்டு. இதுபோன்ற பிரச்னைக்குரிய கேஸ்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட கரு அபார்ஷன் கட்டத்தைத் தாண்டி வளர்வதைக் தடுக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது.
சிலருக்கு பீரியட்ஸ் ரெகுலராக வராது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் தேதியை (Due date) துல்லியமாகக் கணிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஸ்கேனிங் செய்து குழந்தையின் அளவு பார்த்து குழந்தை பிறக்கப்போகும் தேதியைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். பிறக்கப்போவது இரட்டைக் குழந்தையாக இருந்தால் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஸ்கேனிங் உதவுகிறது.
ஒரு பெண் கருவுற்றிருப்பது உறுதியாகி 6_10 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யலாம். பொதுவாகவே ஒருவருக்கு கர்ப்ப காலத்தின்போது வெவ்வேறு கட்டங்களில் மொத்தமாக மூன்று ஸ்கேன்கள் செய்து பார்த்தால் போதும். பிரச்னைக்குரிய கருவுக்கு டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கும் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம்.
எப்போதெல்லாம் ஸ்கேன் செய்வது? முதல் ஸ்கேனை 8_10 வாரத்துக்குள் செய்யலாம். அடுத்ததாக 20_22 வாரங்களுக்குள் செய்யலாம். இந்த சமயத்தில் ஸ்கேன் செய்யும்போது மூளை, இதயம், கிட்னி போன்ற குழந்தையின் முக்கிய உடல்பாகங்களின் வளர்ச்சி துல்லியமாகத் தெரியும். மூன்றாவது ஸ்கேனை எட்டாவது மாதத்தில், அதாவது 32_34வது வாரங்களுக்குள் செய்துவிடலாம்.
எத்தனை ஸ்கேன் செய்து பார்த்தும் சில குழந்தைகள் ஒரு காது மடங்கியோ, சில விரல்கள் இல்லாமலோ அவ்வப்போது பிறப்பதுண்டு. ஸ்கேன் செய்து பார்த்தும் இப்படியாகிவிட்டதே என்று சிலர் மருத்துவர்களிடம் வருந்துவது உண்டு. சிலர் கோர்ட் படியேறுவதும் உண்டு. உண்மையில் ஸ்கேனிங் மூலம் ஒரு குழந்தை 100% நார்மலாக வளர்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
சில சமயங்களில் கருவுற்றிருக்கும் பெண் ரொம்ப குண்டாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அல்ட்ரா சவுண்ட் அலைகள் சரியாக நுழையமுடியாமல் போக வாய்ப்புண்டு. அப்படியாகும்போது சில பகுதிகள் துல்லியமாகத் தெரியாமல் போகலாம். மேலும் ஸ்கேன் செய்யும்போது குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். குழந்தையின் இடதுபுறம் முழுமையாகத் தெரியும் சமயங்களில் வலது புறத்திலுள்ள சில தகவல்கள் பதிவு ஆகாமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஸ்கேன் ரிசல்ட் துல்லியமாக இல்லாமல் போக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆணா, பெண்ணா தெரிஞ்சுக்க முடியுமா? 'யு.எஸ்ல எல்லாம் அஞ்சாம் மாசமானதுமே குழந்தை ஆணா, பெண்ணானு சொல்லிடறாங்க தெரியுமா? நீங்க ஏன் அப்படிச் சொல்ல மாட்டேங்கறீங்க?' என்று என்னுடைய சில பேஷண்டுகள் கேட்பதுண்டு. யு.எஸ். போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை சந்தோஷத்துடனேயே பெற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லையே… ஆண் குழந்தையென்றால் பெற்றெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் சில பெற்றோர், பெண் குழந்தை என்றதும் அதை அழிக்கத் துடிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால்தான் அரசாங்கம் Sex Determination¬ò யை (குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிதல்) தடைசெய்துள்ளது.
உண்மையில் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று, அந்தப் பத்து மாதமும் பொறுத்திருந்து பார்ப்பதில்தான் த்ரில்லே இருக்கிறது. இது அனுபவசாலிகளுக்கு மட்டுமே புரிந்த விஷயம்…
நன்றி: Dr.ஜெயசிறீ  – குமுதம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



கருத்தரிப்பதில் சிக்கலா…?

கருத்தரிப்பதில் சிக்கலா…?

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் அவர்கள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை எப்படிச் சரிப்படுத்துவது எனச் சொல்கிறார்.
முன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம்…. தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்...
பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.
இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.
இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.
இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.
இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.
சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.
பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.
Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, August 1, 2015

Simba Games 20 Free Spins - Expire Today

Idea Mail
20 free spins

Greetings,

The good fairies at Simba Games have decided to wave their magic wand in your direction and grant you a wish — 20 free spins, no deposit required! This is just a little help to set you on your path to fulfilling your dreams. You see, Simba Games is an enchanted gaming site where anything can happen and you'll be dazzled the minute you step inside.

PLAY NOW
Claiming your bonus is easier than saying "Abracdberh"
(trust us, we know):
  1. Visit SimbaGames (get your wish list ready)…
  2. Register (after all, we want to know who our next big winner is) …
  3. Get 20 SPINS totally free — no deposit required!
We've granted you a wish, now it's your turn to make it come true!
PLAY NOW
Yours,

The Good Fairies at Simba Games

* Simba Games Bonus Terms and Conditions apply.