Monday, October 5, 2015

குங்குமப்பூ!

குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல்வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப்பட்டு வருகிறது.காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மையிலும், சிவப்பிலும், மணத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது. ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.

கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவரும் குங்குமப் பூ, இந்தியாவுக்குக் கடல் வணிகர்கள் மூலம் பரவியிருக்க வேண்டும் என்று `ராஜதரங்கிணி' என்ற நூல் கூறுகிறது.

காஷ்மீரைத் தவிர உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமாபுமிலும், உத்தரகாண்டிலும் இது பயிராகிறது. கி.மு. 750-ம் ஆண்டுக்கு முன்பே நம் நாட்டுக்குக் குங்குமப் பூ வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது பழம்நூல்கள் மூலம் தெரியவருகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து சிறிது தொலைவில் உள்ள, பண்டைய காலத்தில் `பத்மபூர்' என்றும் தற்போது `பாம்பர்' என்றும் அழைக்கப்படும் கிராமத்தில் விளையும் குங்குமப் பூ மிகவும் பிரசித்தி பெற்றது.

சுமார் ஐயாயிரம், ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசங்களில், குளிரும் வெயிலும் ஒருங்கே கூடிய பள்ளத்தாக்குகளில் குங்குமப் பூ அமோகமாய் தளதளவென்று விளைகிறது. இதைத் தவிர மூவாயிரம், நான்காயிரம் அடி உயர்ந்த பிரதேசங்களில் 40-ல் இருந்து 60 அங்குல மழையும், குளிர்காலத்தில் பனியும் பெய்யும் இடங்களில் எல்லாம் குங்குமப் பூ பயிராகிறது.

குங்குமப் பூ செடி உயரமாக வளர்வதில்லை. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் வரை குங்குமப் பூ இதில் மலர்கிறது. வெங்காய வடிவத்தில் உள்ள குங்குமப் பூ கிழங்கை பூமியில் நட்டு இதைப் பயிராக்குகிறார்கள். இந்தக் கிழங்கை மக்கள் உண்ணவும் செய்கிறார்கள்.

காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதக் கடைசியில் குங்குமப் பூக்களைச் சேகரிக்கும் வேலை தொடங்குகிறது. கைகளாலே பறித்து வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் உலர வைக்கிறார் கள். நன்றாக உலர்ந்த பிறகு மலரில் இருந்து இதழ் நரம்புகளைப் பிரித்தெடுக்கிறார்கள். நரம்பின் மேல்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது உயர்தரமான குங்குமப் பூவாகக் கருதப்படுகிறது.

1.             கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்குங்குமப்பூ

 

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.

இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன்




--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com



Sunday, October 4, 2015

வீட்டுக்குறிப்புக்கள்!

  • வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிருக்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்  
  • பரு‌ப்பை வேக வை‌க்கு‌ம் போது ஒரு கா‌ய்‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டா‌ல் ‌சீ‌க்‌கிரமே வெ‌ந்து ‌விடு‌ம்.
  • கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.
  • கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
  • பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.
  • தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.
  • சிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம். 
  • சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொ‌ள்ளவு‌ம்.
  • கோதுமை மாவை ‌‌பிசையு‌ம் போது வாழை‌ப் பழ‌த்தையு‌ம் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.
  • பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
  • தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.
  • சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வே‌ண்டா‌ம்.
  • நன்றாக கொதி‌க்க வை‌த்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்ன‌ர் ஊற வை‌த்தா‌ல் ‌கூட போது‌ம்.
  • இ‌ட்‌லி‌க்கு மா‌வை ‌மி‌க்‌சி‌யி‌ல் அறை‌க்கு‌ம் போது ஊற வை‌த்த அ‌ரி‌சி, உளு‌ந்த‌ம் பரு‌ப்பை ‌சி‌றிது நேர‌ம் கு‌ளி‌ர்பதன பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து‌‌வி‌ட்டு அரை‌த்தா‌ல் மாவு சூடாவது த‌வி‌ர்‌க்க‌ப்‌படு‌ம்.
  • முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தே‌க்கர‌ண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
  • ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.
  • முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
  • மு‌ட்டையை வேக வை‌த்தாலு‌ம் ச‌ரி ஆ‌ம்லே‌ட் போ‌ட்டாலு‌ம் ச‌ரி பய‌ன்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு அதனை லேசாக கழு‌வி ‌விடவு‌ம்.
  • பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
  • பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
  • பா‌ல் கா‌ய்‌ச்சு‌ம் பா‌த்‌திர‌த்தை இர‌ண்டு நா‌ட்களு‌க்கு ஒரு முறையாவது வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.
  • தினமு‌ம் ஒரே பா‌த்‌திர‌த்‌தி‌ல் பாலை‌க் கா‌ய்‌ச்சாம‌ல் இர‌ண்டு பா‌த்‌திர‌ங்களை மா‌ற்‌றி மா‌ற்‌றி பய‌ன்படு‌த்துவது‌ம் ந‌ல்லது.
  • பாலை‌க் கா‌ய்‌ச்சு‌ம் மு‌ன்பு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி ‌சி‌றிது கொ‌தி‌க்க வை‌த்து, அ‌ந்த ‌நீரை ‌கீழே ஊ‌ற்‌றியது‌ம் பா‌ல் கா‌ய்‌ச்‌சினா‌ல் பா‌ல் கெடுவதை த‌வி‌ர்‌க்கலா‌ம். 
  • பாயச‌ம் செ‌ய்யு‌ம் மு‌ன்பு ஜ‌வ்வ‌ரிசையை ‌சி‌றிது நேர‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வை‌க்கலா‌ம்.சே‌மியாவை வாண‌லி‌யி‌ல் போ‌ட்டு லேசாக வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • அவ‌ல் பாயாச‌ம் செ‌ய்யு‌ம் போது ஒரு க‌ப் பாலு‌ம், ஒரு க‌ப் தே‌ங்கா‌ய் பாலு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.
  • ஏல‌க்கா‌யி‌ன் மே‌ல் பகு‌திக‌ள் ‌சில குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌க்காம‌ல் போகலா‌ம். எனவே பாயாச‌த்‌தி‌ல் ஏல‌க்கா‌யி‌ன் ‌விதைகளை ம‌ட்டு‌ம் த‌ட்டி‌ப் போ‌ட்டா‌ல் போது‌ம்
  • அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.
  • அ‌ரி‌சி‌யி‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌க்காம‌ல் இரு‌க்க அ‌ரி‌சி கொ‌ட்டு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌‌ல் வே‌ப்‌பிலைகளை‌ப் போ‌ட்டு ‌பி‌ன்ன‌ர் அ‌ரி‌சி கொ‌ட்ட வே‌ண்டு‌ம்.
  • எதையு‌ம் அ‌ப்படியே வை‌த்தா‌ல் பூ‌ச்‌சி ‌பிடி‌த்து‌விடு‌ம்.அ‌வ்வ‌ப்போது சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் வை‌த்து எடு‌க்க வே‌ண்டு‌ம். 
  • தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
  • தோசை‌க்கு அரை‌க்கு‌ம் அ‌ரி‌சி‌யி‌ல் அ‌ல்லது உளு‌ந்த‌ம் பரு‌ப்‌பி‌ல் ‌சி‌றிது வெ‌ந்தய‌த்தை‌ப் போ‌ட்டு அரை‌த்தா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. தோசை ந‌ன்கு ‌சிவ‌ந்து வரு‌ம்.
  • இட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.த‌க்கா‌ளியை ப‌த்‌திரமாக பாதுகா‌க்க ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதனை த‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் போது‌ம். எ‌ளி‌தி‌ல் அழுகாது.
  • தக்காளி காயாக இரு‌ந்தா‌ல் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்கா‌தீ‌ர்க‌ள்.
  • த‌க்கா‌ளி‌யி‌ன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
  • பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.
  • பூ‌‌ரி செ‌ய்யு‌ம் போது ‌சி‌றிது மைதா மாவு, 1 தே‌க்கர‌ண்டி ரவையை சே‌ர்‌த்து செ‌ய்தா‌ல் பூ‌ரி அ‌திக நேர‌ம் ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்.
  • பூ‌ரி செ‌ய்யு‌ம் மா‌வி‌ல் ஒரு வாழை‌ப்பழ‌த்தை‌ப் போ‌ட்டு ‌பிசை‌ந்து செ‌ய்தா‌ல் சுவையு‌ம், ‌மிருது‌த்த‌ன்மையு‌ம் கூடு‌ம்.  
  • பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம். 
  • குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
  • குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
  • பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.
  • வெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நா‌ற்ற‌ம் இரு‌க்கு‌ம்.
  • அ‌ந்த அசைவ நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை ம‌ற்று‌ம் க‌த்‌தியை‌க் கழுவினால் போதும். நா‌ற்ற‌ம் போ‌ய்‌விடு‌ம். 
  • வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
  • டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
  • தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.
  • உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
  • காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.
  • http://pettagum.blogspot.in/2013/12/blog-post_2932.html


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Friday, October 2, 2015

பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா?

பேட்டரியை இப்படி கூட சேமிக்கலாமா?

ஆண்டராய்ட் மொபைலோ.. ஆர்ட்னரி மொபைலோ….! லேப்டாப் கம்ப்யூட்டரோ….டேப்ளட் கம்ப்யூட்டரோ…. அட எதுவா இருந்தாலும் நமக்கு ஒரு பெரிய தலைவலியை கொடுக்கிறது பேட்டரி பிரச்னைதாங்க…
அடிக்கடி பேட்டரி லோன்னு (Battery Low) காட்டி, நமக்கு எரிச்சலை ஏற்படுத்தற விஷயம் இது… என்னசெய்யலாம்..? வாங்க பார்க்கலாம்..
ஒரு முக்கியமான விஷயத்தை முதல்லேயே சொல்லிடறேன்.. சாதாரணமா நூத்துக்கு 60 பேர் சரியா பேட்டரி சார்ஜரை பிளக் இன் செய்கிற (Battery Charger Plugin) முறையே தெரியறதில்ல…
உங்களோட கம்ப்யூட்டரா, ஆண்ட்ராய்ட் போனோ.. டேப்ளட்டோ… (android, computer, tablet, cellphone)அது எந்த ஒரு எலக்ரானிக் சாதனமா இருக்கட்டுமே..எதுவா இருந்தாலும் அதுக்கு சார்ஜ் போடறதுக்கு ஒரு முறை இருக்குங்க..

அதாவது,
சார்ஜ் செய்ற ஒயரில் இருக்கிற முனைகளை அந்தந்த பகுதிகள் சரியா செருகிவிட்டுட்டு அப்புறம்தான் கரண்ட் சுவிட்சே ஆன் (Power Switch) பண்ணனும்…நிறைய பேர் இப்படி செய்றதில்லை..
முதல்ல கரண்ட் பாக்ஸ் பிளக்ல வயரை செருகி சுவிட் ஆன் பண்ணிட்டு.. அப்புறமா லேப்டாப்ல செருகுவாங்க…
அல்லது சுவிட்போட்டவாக்ல இருக்கிற பிளக்பாய்ண்ட்ல அப்படியே ஒயர் செருகி, லேப்டாப்புக்கு சார்ஜ் பண்ணுவாங்க…
இப்படியெல்லாம்செய்யவே கூடாதுங்க… இரண்டு பக்க முனைகளையும் அந்தந்த போர்ட்கள்ல செருகின பிறகுதான்… கரண்ட் சுவிட்சை ஆன் பண்ணனும்..அதுதான் சிறந்த முறை…
நேரடியா கரண்ட் பாய்ஞ்சுகிட்ட இருக்கிற ஒயரே அப்படியே லேப்டாப், போன்ல செருகினா.. பேட்டரி சீக்கிரமா ரிப்பேர் ஆகிடும்… சார்ஜ்ம் நிக்காது…

1. நிறைய நேரம் கரண்ட்ல போட்டா நிறைய சார்ஜ் ஏறிடும்னு நாம நம்பறோம்..அதுதாங்க தப்பு… அந்த பேட்டரிக்குன்னு ஒரு கெபாசிட்டி இருக்கு…குறிப்பிட்ட நேரத்துல… குறிப்பிட்ட அளவுதான் அது சார்ஜ் பண்ணிக்கும்.. அதுக்க மேலயும் நீங்க கரண்ட்ல போட்டு வச்சிருந்தாலும் சார்ஜ் ஆகாவே ஆகாதுங்க…
2. இப்படி ரொம்ப நேரம் சார்ஜ் போட்டிருந்தால்… அந்த பேட்டரி சூடாகுமே தவிர, அந்த கெபாசிடிக்கு மீறி துளிகூட பேட்டரில கரண்ட் தங்காதுங்க… பேட்டரி சூடேறிச்சுன்னா..அப்புறம் சொல்லவே வேண்டாம்.. இது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும்…கடைசியில ரிப்பேர்தான் ஆகும்…
3. தொடர்ந்து கரண்டு பாய்ந்தால் மட்டுமில்லீங்க.. நீங்க தொடர்ந்து போனை யூஸ் பண்ணிட்டே இருந்தாலும் கூட போன் சூடாகிடும்…. இது உங்களுக்கே தெரியும்… ஒரு கேம் விளையாடறீங்க… ஒரு மணி நேரம்.. ரெண்டு மணி நேரம் கூட ஆகிடும்… அப்போ உங்க கையே சுடற அளவுக்கு ஹீட் ஆகியிருக்கும்.. எல்லாமே பேட்டரியிலிருந்து போனுக்கு கரண்ட் சப்ளை ஆகிறதாலயும், மற்ற பகுதில் மின்சாரத்தில இயங்குறதாலயும்  வெளிப்படுற வெப்பம்தான் காரணம்.
4. லேப்டாப் கம்ப்யூட்டர்ல இருக்கிற பேட்டரியும் அப்படிதாங்க…. தொடர்ந்து லேப்டாப் கம்ப்யூட்டரை பயன்படுத்தறதால கம்ப்யூட்டரும் சூடேறும் (Computer heating)…. பேட்டரியும் சூடேறும்… கொஞ்சநேரம் லேப்டாப்பை நிறுத்தி வைக்கிறதுதான் சரியான தீர்வு.. சூடேற..சூடேற யூஸ் பண்ணிட்டே இருந்தால் அப்புறம் உங்களுக்குத்தான் நஷ்டம்…

WiFi, Bluetooth யூஸ் பண்ணிட்டு, மறக்காம அதை ஆப் பண்ணிடுங்க… நம்ம எப்பவுமே புளூடூத் ஓப்பன் பண்ணி பைல் டிரான்ஸ்பர் பண்ணுவோம்.. ஆனால் அதை ஆப் பண்ண மறந்திடுவோம்.. அதுதான் பிரச்னை… தொடர்ந்து தேவையில்லா அப்ளிகேஷன்கள் பின்னணியில் இயங்கினால் தேவையில்லாம சிஸ்டம் சூடாகிற வேகம் அதிகமாகும்.. பேட்டரிக்கும் பளு அதிகமாகும்.. அப்புறம் பிரச்னைதான்…
ஏதாவது அப்ளிகேஷன் அல்லது சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்யும்போது, ஏற்கனவே இருக்கிறத தேவையில்லாத அப்ளிகேஷனை அன்இன்ஸ்டால் செய்வது நல்லது. (Uninstall unwanted application) நிறைய அப்ளிகேஷன்களோட டவுன்லோட் செய்யும்போது டவுன்லோட் வேகம் பாதிக்கும்.. சிஸ்டமும் திணறும்….

தொடர்ந்து ஒரு லேப்டாப்பிலும் கேம்ஸ் (Continuous gaming) விளையாடிட்டே இருந்தாலும், லேப்டாப் சூடாகும்…சூடான பேட்டரியும் பாதிக்கும் (Battery Spoil)..
வேறென்ன செய்தால் பேட்டரியோட பேக்கப்பை அதிகநேரம் வச்சிருக்கலாம்?
உங்களோட சிஸ்டத்திலோ அல்லது ஆண்ட்ராய்டிலோ திரையின் வெளிச்சத்தை கரெக்டா வச்சிக்கோங்க..(Correct Screen Lightning) அதிக வெளிச்சமாக இருந்தால், பேட்டரியும் அதிகம் செலவாகும். தேவையான அளவு வச்சிக்கிட்டாலே போதுமே…இதனால கண்ணுக்கும் அதிக பிரச்னை வராது.
லேப்டாப்பை ஆப் பண்ண நினைச்சீங்கன்னா.. Turn Off வசதியை பயன்படுத்துங்க…முறையா இப்படி செய்வதால பேட்டரி வீணாவதை தடுத்து நிறுத்தலாம்


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com