Wednesday, July 23, 2014

மயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு! இயற்கை தரும் இளமை வரம்!

மயக்கும் அழகுக்கு மல்லிச் சாறு! இயற்கை தரும் இளமை வரம்!
மலர்களிலேயே அழகான மலர் மல்லிகைதான். தன் கொள்ளை அழகை நமக்கும் அள்ளித்தரும் குணம் கொண்ட மல்லிகையை கொடை வள்ளல் என்றே அழைக்கலாம்! வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை வாரி வழங்குவது எப்படியென்று பார்ப்போமா..

சிலருக்கு கன்னங்களில் கருமையும், மூக்கின் மேல் கரும்புள்ளிகளும் தோன்றி, முக அழகைக் குலைக்கும்.
ஒரு கப் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், 4 லவங்கத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து இவை கலக்கும் அளவுக்கு சுடு தண்ணீர் விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். முகம், மூக்கு, கன்னப் பகுதிகளில் இந்த பேஸ்ட்டால் 'பேக்' போடுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். கருமையும், கரும்புள்ளியும் காணாமல் போவதுடன்.. பருக்களும் நீங்கிவிடும்.

சற்று முன் மலர்ந்த மலர் போல உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா?
ஓட்ஸ் பவுடர் - அரை கப், பச்சைக் கற்பூரம் - 2 சிட்டிகை, மல்லிகைப் பூ சாறு - அரை கப் (ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்).. இவை கலக்கும் அளவுக்கு வெந்நீரைக் கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் ஒளி வீசி மினுமினுக்கும்.

ஒரு டீஸ்பூன் அரைத்த சந்தனத்துடன் மல்லிகைச் சாறு கலந்து பூசி வந்தால்.. வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும். பெண்கள் சிறிது கஸ்தூரி மஞ்சளையும் கலந்து கொள்ளலாம்.

தோலின் மேற்புறம் உள்ள இறந்த செல்களை அகற்றி, புத்துணர்ச்சி தருவதிலும் மல்லிகைக்கு நிகர் மல்லிகைதான்.
உலர்ந்த மல்லிகை - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், தோல் சீவிய ஆப்பிள் - 4 துண்டுகள்.. இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேயுங்கள். பின்னர், ஒரு கைப்பிடி மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரால் முகத்தைக் கழுவினால்.. இறந்த செல்கள் பறந்து, இரட்டிப்பு பளபளப்பு முகத்தை ஆட்சி செய்யும்.

அடிப்படையில் குளிர்ச்சியைத் தரும் தாவரமான மல்லிகையில் கண் மையும் செய்யலாம்.

ஒரு விளக்கில் விளக்கெண்ணெயை ஊற்றி, விளக்கின் பின்னால் இருக்கும் (கரி படியக்கூடிய பகுதி) ஸ்டாண்ட் பகுதியில் அரைத்த சந்தனத்தை தடவுங்கள். பிறகு விளக்கை ஏற்றி, ஸ்டாண்ட் பகுதியில் கரி படிந்ததும் அந்தக் கரியை வழித்து, அதில் மல்லிகைப் பூ சாறு 5 (அ) 6 சொட்டுக்கள் கலந்து கொள்ளுங்கள். இந்த மையால் கிடைக்கும் குளிர்ச்சி, பார்வையைப் பிரகாசமாக்கும்!

பிசுக்கு, பொடுகு, நுனி பிளவு போன்ற 'தலை'யாய பிரச்னைக்கும் தீர்வு தருகிறது மல்லிகை.
உதிரி மல்லிகையை வாங்கி வெயிலில் உலர்த்தி, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூனுடன், 2 டீஸ்பூன் வெந்தயத்தூள் கலந்து வாரம் இரு முறை தேய்த்துக் குளியுங்கள். மேற்கண்ட பிரச்னைகளைக் களைவதுடன், கூந்தலை மிருதுவாக்கி.. செழிப்பாக வளரவும் செய்கிறது இந்த மல்லிகை பவுடர்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள்.. கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, அதில் 2 கப் ஃப்ரெஷ் மல்லிகைப் பூவை போட்டு வையுங்கள். இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால்.. தலை குளிர்ச்சியாக இருப்பதோடு, கூந்தலும் மணமணக்கும்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்சாகமூட்டும் மல்லிகைத் தைலமும், குளியல் பவுடரும் தயாரிப்பது எப்படி தெரியுமா?

தைலம் தயாரிக்க..

20 கிராம் உலர்ந்த மல்லிகைப் பூவுடன், மனோரஞ்சிதம், ரோஜா, மகிழம்பூ, ஆவாரம் பூ.. இவற்றை தலா 10 கிராம் கலந்து அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சுங்கள். வடிகட்ட வேண்டாம். அடி தங்கும் பூவிதழ்களை விட்டு விட்டு, மேலோட்டமாக எண்ணெயை மட்டும் ஊற்றி, உடலில் தடவி கால் மணி நேரம் ஊற விடுங்கள். மல்லிகை, தோலில் உள்ள சுருக்கங்களைப் போக்கும். ரோஜா, மகிழம்பூ, மனோரஞ்சிதம், ஆவாரம் பூ.. இவையெல்லாம் உடலுக்கு பொன்னிறத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

குளியல் பவுடர் தயாரிக்க..
உலர்ந்த மல்லிகைப் பூ 100 கிராம், புங்கங்காய் தோல் - 50 கிராம், ஓமம் - 10 கிராம், தவனம், ரோஜா இதழ், மரிக்கொழுந்து ஆகியவை தலா 50 கிராம் சேர்த்து பவுடராக்குங்கள்.
வாரம் இரு முறை இப்படி குளிப்பதால் குளிர்ச்சியும் வாசனையும் சேர்ந்து குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்கும்.

"மணமே மருந்து!"
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
மல்லிகைப் பூவின் மணமே மருந்துதான் என்பது சித்த ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட நிஜம். மனக் கலக்கம் நீங்கி நிம்மதி பிறக்கச் செய்யும் சக்தி மல்லிகையின் மணத்துக்கு உண்டு.

குழந்தைகள் சரியாக தாய்ப்பால் குடிக்கவில்லையெனில் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிவிடும். மல்லிகைப் பூவை மார்பில் வைத்து கச்சைக் கட்டிக் கொண்டால்.. பால் கட்டியது கரையும். (இப்படிச் செய்யும்போது குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது.)

அடிபட்டு வீங்கிய இடத்தில் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகைப் பூ இலையை வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும்.

காதில் ஏற்படும் வலி, குத்தல், சீழ் போன்றவற்றுக்கு மல்லிகை இலை எண்ணெயை 2 சொட்டு விட்டால் சரியாகிவிடும்.

கால் ஆணியால் அவதிப்படுபவர்கள் மல்லிகை இலையின் சாறெடுத்து காலில் தடவி வந்தால் வலி குறைந்து குணமாகும்.

மல்லிகை இலையை நெய்யில் வறுத்து, ஒரு துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுத்தால் தொண்டை புண், எரிச்சல் உடனடியாக நீங்கும்.



--
*more articles click*
www.sahabudeen.com


Monday, July 21, 2014

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!

ஹமாஸின் தலைவர் (அரசியல்) "Khaled Mashal" உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!


"
ஹமாஸ்" காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். 

"
ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்".

"
உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை."

"
ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்."

"
ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ......". 

தெனமும் தேனைக் குடிச்சாப் போதும்

தெனமும் தேனைக் குடிச்சாப் போதும்


''என்ன வாசம்பா, முகமெல்லாம் வாடிப்போயிருக்கு'' - அம்மணி அக்கறையாய் கேட்க,
 ''அன்னம்மா வீட்டுக் கல்யாணத்துல வேலை செஞ்சதோட அலுப்பு அம்மணி. மூணு நாள் தொடர்ந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டது வயித்தை என்னமோ பண்ணுது.''  
''அதானே பார்த்தேன்... பந்தி பரிமாறினதுலேர்ந்து வெத்தலைப் பாக்கு கொடுத்து வழி அனுப்பற வரைக்கும் அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சேல்ல... அதான் இப்பிடி.''
''உடம்புக்குத்தானே வயசு, தவிர மனசுக்கு இல்லையே. மலையே விழுந்தாலும் தலையால தாங்கணும் அம்மணி. அன்னம்மாவுக்கும் நம்மளைவிட்டா யார் இருக்கா?''

''சரி... சரி... கவலைப்படாதே. அய்யனாரு குடுத்த தேன் இருக்கிறப்ப, அலுப்பு, கொழுப்பு எல்லாமே ஓடிரும்டி. அத்தனையும் உடம்புக்கு சத்து. மனசோட உடம்பும் இளமையா இருக்க, தெனமும் தேனைக் குடிச்சாப் போதும். அதுலயும் நாப்பது வயசுக்கு மேல, தினமும் தேன் சாப்பிடறது ரொம்பவே நல்லது. படுத்த படுக்கையாக் கிடக்கறவங்க, பால்ல கொஞ்சம் தேன் கலந்து குடிச்சிட்டு வந்தா, சீக்கிரமே தெம்பாகி, சுறுசுறுப்பா எழுந்து நடக்க ஆரம்பிச்சிடுவாங்க. கொம்புத் தேன், மலைத் தேன், குறிஞ்சித் தேன்னு தேன்ல அறுபது வகை இருக்கு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்புக் குணம் இருக்கு வாசம்பா. தேன்ல இருக்குற சர்க்கரை ரத்த ஓட்டத்தை சீராக்குறதால உடம்புல களைப்பே தெரியாது.''

''குமட்டல், வாந்திகூட இருக்கே... அதுக்கு என்ன செய்றது?'' என்ற வாசம்பாவிடம், ஒரு ஸ்பூன் தேனில், எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டு தண்ணீர் சேர்த்துக் கொடுத்த அம்மணி, ''வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலைவலினு எல்லாமே சரியாப்போயிரும்'' என்றதும் வாங்கிக் குடித்தாள் வாசம்பா.

''தேன் உடம்பு எடையைக்கூட குறைக்கும்னு சொல்றாங்களே, அது உண்மையா அம்மணி?''

''தேன், கொழுப்பைக் கரைச்சிடும். தேன்ல வெந்நீர் கலந்து குடிச்சா, பருத்த உடம்பு மெலிஞ்சு, ஊளைச்சதை குறைஞ்சு உடல் உறுதியாகிரும். இஞ்சியை சாறு பிழிஞ்சு தேன் விட்டுக் கலந்து சூடுபடுத்திட்டு, ஆறவைக்கணும். இதுகூட வெந்நீர் கலந்து, காலைச் சாப்பாட்டுக்கு முன்னால ஒரு கரண்டியும், சாயாங்காலம் ஒரு கரண்டியும் குடிச்சிட்டு வந்தா, 40 நாள்ல தொப்பை கரைஞ்சிடும். வெங்காயச் சாறுல, தேன் கலந்து சாப்பிட்டா கண்பார்வை பிரகாசமாத் தெரியும். பார்லி கஞ்சியை வடிகட்டி, அதுல தேன் கலந்து குடிச்சா, இருமல், சளித் தொல்லை, நுரையீரல் சம்பந்தமான நோய் எல்லாம் ஓடிருடும். வயித்துப் புண் இருந்தா, சாப்பாட்டுக்கு முன்னால ரெண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, சீக்கிரமே குணமாகும்'' என்றபடியே தேன் பாட்டிலை அலமாரியில் வைக்கப் போனவள், அது தவறிக் கீழே விழுந்து கையெல்லாம் வழிய, அதை அப்படியே நக்கத் தொடங்கினாள்.

''தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்னு சொல்றது உன் விஷயத்துல சரியாத்தான் இருக்கு அம்மணி. நீ பேசுறதைக் கேட்கிறப்பவே காதுல தேன் வந்து பாயுது'' என்றாள் வாசம்பா.

''தேனை வீட்டுக்குக் கொண்டுவர்றதுக்குள்ளயும், வழியிலேயே நிறையப் பேர் கேட்டாங்க. அதோட மகத்துவத்தை சொல்லிச் சொல்லியே, மொத்தத்தையும் குடுத்திட்டேன். உனக்குக் குடுத்தது போக, இருந்த கொஞ்சமும் கொட்டிருடுச்சு. இருக்கிறதையாவது சாப்பிடுறேன்.''

''ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க. தனக்கு மிஞ்சித்தான் தானம் அம்மணி.'

''ஆசையுள்ளவன் அரை வைத்தியன் வாசம்பா. நலம் விசாரிக்கிறதே நல்ல வைத்தியனுக்கு அழகு.''
''நீ சொல்றதும் சரிதான் அம்மணி. தானமா வந்ததை நாம மட்டும் சாப்பிட்டா, வயித்துவலிதான் வரும்'' என்றாள் வாசம்பா.

''வயித்துவலி வந்தாக்கூட, தொப்புளைச் சுத்தி தேன் தடவினா வலி சட்டுன்னு சரியாயிரும். கருஞ்சீரகத்தை தண்ணீ விட்டுக் காய்ச்சி, அதுல தேன் கலந்து சாப்பிட்டுவந்தா, கீழ் வாதம் போயிரும்.''
''தேன்ல இவ்வளவு விஷயம் இருக்கா? என் எள்ளுப்பாட்டி, சின்ன வயசுல என் தம்பிக்குக் கட்டி வந்தப்ப, தேனோட சுண்ணாம்பைக் கலந்து குழைச்சு கட்டி மேல பூசினாங்க. கட்டி நல்லாப் பழுத்து ரெண்டே நாள்ல சரியாயிடுச்சு. இந்தக் காலத்துல மூட்டுவலி, கால்வலி, வீக்கம், கட்டினு டாக்டர்கிட்ட போனாலே, மருந்து மாத்திரைகளை அள்ளித் தர்றாங்க.'' 

''சரியாச் சொன்ன வாசம்பா. மூட்டு வலிக்கும் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நல்லாத் தேனைத் தடவி, தேய்ச்சுவிடணும். கூடவே சாப்பாடு சாப்பிடும்போது, ஒரு ஸ்பூன் தேனையும் சாப்பிட்டு வந்தா, மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. ரொம்ப மாத்திரைகளைச் சாப்பிட்டா, குடல் வெந்துபோயிடும். அதுக்குக்கூட தேன் உதவியாயிருக்கு. மருந்தோட வீரியம் அதிகமா இருந்தா, தேனைப் பால்ல கலந்து குடிக்கலாம். குடல்ல ஏற்படுற பாதிப்புகளை நிறுத்திடும்.'' மூச்சுவிடாமல் சொல்லி முடித்த அம்மணியிடம், கல்யாணத் தோரணத்தில் கட்டியிருந்த வாழைப் பூவை நீட்டினாள் வாசம்பா. 



--
*more articles click*
www.sahabudeen.com


Sunday, July 20, 2014

WEBSITE MALAR JUNETOSSEPEMBER

WEBSITE MALAR JUNETOSSEPEMBER PDF FILE ATTACHED

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don't Loosen Your Belt) ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந் நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.

மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.

குலசை.ஆ.சாமி

http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெப் கேமரா பயன்படுத்தலாமா!


வெப் கேமரா பயன்படுத்தலாமா!

இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கென, கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி இருந்தால், நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் கம்ப்யூட்டர் ஆக இருந்தால், தனியே வெப் கேமரா தேவையில்லை. இப்போ தெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டு வரு கின்றன. வெப் கேமராவினைப் பயன்படுத்து கையில், அதனை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

எல்லாமே லைட்டிங் தான்: 

வெப்கேமரா பயன்படுத்துவது என்பது, ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போன்றதுதான். இங்கே நகரும் ஆப்ஜெக்ட்களைப் படம் பிடிக்கிறோம். எனவே போட்டோ எடுப்பதில் என்ன என்ன அம்சங்களை நாம் கடைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ, அவற்றையே இங்கும் நாம் பின்பற்ற வேண்டும். இதில் முக்கியமானது லைட்டிங். கேமராவின் எல்லையில் வரும் பொருட்கள் மற்றும் ஆட்கள் நல்ல ஒளியில் இருக்க வேண்டியது மிக அவசியம். இதனால் இவற்றின் இமேஜ், நல்ல ஒளியுடனும் துல்லி தமாகவும் இருக்கும். எனவே கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, உங்களை வெப் கேமரா மூலம் படம் எடுப்பதாக இருந்தால் உங்கள் மீது ஒளி விழும் வகையில் சிறிய டேபிள் லைட் ஒன்றை மானிட்டர் அருகே, முன்னால் இருக்கும் பயனாளர் அல்லது பொருட்கள் மீது ஒளி விழும் வகையில் அமைப்பது நல்லது. இதிலும் கூட ஒளி நேரடியாக உங்கள் மீது விழாமல், வெளிச்சத்தின் பிரதிபலிப்பு உங்கள் மீது விழுந்தால், உங்கள் கண்களுக்குக் கூச்சம் இருக்காது. ஒளியும் சிறப்பான முறையில் அமையும்.

பின்புலத்தில் வெளிச்சம்: 

உங்களுக்குப் பின்புலத்தில் இருக்கும் ஒளி எவ்வாறு அமைய வேண்டும் என்பதனையும் இங்கு கவனிக்க வேண்டும். உங்கள் மீது விழும் ஒளியைக் காட்டிலும் பின்புறத்தில் மிகவும் பிரகாசமாக ஒளி இருந்தால், கேமராவில், உங்களுடைய உருவம் தெளி வில்லாமல் பிசிறடித்த நிலையில் இருக்கும். எனவே உங்கள் முன்னால் இருக்கும் ஒளியைக் கூடுதலான நிலையிலும், பின்புற ஒளியை அதற்கும் குறைவானதாக அல்லது திரை வைத்து நீக்கப்பட்ட நிலையிலும் வைக்க வேண்டும்.

கேமரா அமரும் இடம்: 

வெப் கேமரா பயன்பாட்டில் கேமரா அமரும் இடம் முக்கியமான அம்சமாகும். உங்கள் கண்களுக்கு இணையான இடத்தில், கேமரா இருப்பது சிறப்பாகும். இதனால் உங்கள் முகம் தெளிவாக வெளிப்படும். குறிப்பாக, பிசினஸ் குறித்த வீடியோ கான்பரன்ஸில் நீங்கள் இருந்தால், இது உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டும். எனவே நேர் எதிரே இருக்கும் மானிட்டரில், கேமராவை உங்கள் முகத்திற்கு இணையான கோட்டில் வைத்திடவும். அதே நேரத்தில் வெப் கேமராவிற்கு மிக நெருக்கமாக நீங்கள் செல்லக் கூடாது.

மானிட்டர் செட்டிங்ஸ்: 

வெப் கேமரா பயன்படுத்தும் போது உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரை முறையாக செட்டிங் செய்திட வேன்டும். பிரைட் னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் ஆகிய இரு அமைப்புகளையும், கூடுமானவரையில் குறைத்தே அமைக்க வேண்டும். இதனால் மானிட்டரில் இருந்து வரும் ஒளி உங்கள் முகத்தில் அடிக்காமல் இருக்கும். வெப் கேமராவில் நீங்கள் படம் பிடிக்கப்படுவதாக இருந்தால் வெள்ளை நிறத்தில் சட்டை அணிவது நல்லது. இதனால் நல்ல ஒயிட் பேலன்ஸ் கிடைக்கும். கம்ப்யூட்டருடன், எல்.சி.டி. மானிட்டர் பயன்படுத்துவதாக இருந்தால், மேலும் ஒரு கூடுதல் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை மானிட்டரில் போலரைசிங் லைட் வெளிப்படும். இதன் குவியல் படுகையில் உங்கள் கண்களில் கண்ணாடி அணிந்திருந்தால் அது பிரதிபலிக்கப்படும். எனவே கேமரா லென்ஸ் முன்னால் ஒரு போலரைசிங் பில்டர் பொருத்து வது அவசியம்.

பதியும் முன் பொறுமை:

 தொடர்ந்து உங்களைப் படம் பிடித்துப் பதிவதாகவோ, அல்லது உடனுடக்குடன் அனுப்புவதாகவோ இருந்தால், பதியத் தொடங்குமுன் சில விநாடிகள் காத்திருக்கவும். ஏனென்றால் வெப் கேமராவிற்கு போகஸ் செய்து பெறும் படத்தை அட்ஜஸ்ட் செய்திட சிறிது நேரம் தேவை. எனவே பதியும் பட்டனை அழுத்திய பின்னரும், சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்து பின் உங்கள் பாடலை, ஆடலை வைத்துக் கொள்ளுங்கள்.

ஆடியோ பைல்கள்: 

வெப் கேமரா பயன்படுத்துகையில், உங்கள் குரலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால், வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனைச் சார்ந்து இருக்க வேண்டாம். கிளிப் ஆன் மைக் அல்லது ஹெட்செட் மைக்ரோ போனைப் பயன்படுத்தவும். ஏனென்றால் வெப் கேமராவில் உள்ள மைக்ரோ போனால் தெளிவாக ஒலியைப் பதிவுசெய்திட இயலாது.
மேலே சொன்ன குறிப்புகளுடன், தொடர்ந்து கேமரா பயன்படுத்துகையில் கிடைக்கும் அனுபவத்தினையும் இøணைத்து, உங்கள் கற்பனையுடன் வெப் கேமராவினைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான ஒரு கேமரா இயக்குநராக, நீங்கள் உருவாகலாம்.

http://kulasaisulthan.wordpress.com


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்

18 வகையான வலிகளுக்கான சிறந்த நிவாரணிகள்

ஓடியாடி வேலை செய்த காலம் போய், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதேப்போல் அத்துடன் உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்துவிடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.

மேலும் இவ்வாறு மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், அவை இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்துவிடும். எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட, இயற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம், அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம். ஆனால் பலர் இயற்கை பொருட்கள் நல்ல தீர்வைத் தருவதில்லை என்று அதனை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உடலில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் பொருட்கள் எப்போதுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருள் மெதுவாக பிரச்சனைகளை சரிசெய்கிறதோ, அது அந்த பிரச்சனையை முற்றிலும் சரிசெய்துவிடும்.

அதுமட்டுமல்லாமல், எந்த வலிக்கு எந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியாக தெரியாததால், பலரால் இயற்கை பொருட்களால் நல்ல பலனை உடனே பெற முடிவதில்லை. இப்போது அப்படி உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிகளைப் பார்ப்போமா!!!

தேன்: தொண்டை வலி

தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

காபி: ஒற்றை தலைவலி

காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான், உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால், ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு எண்ணெய்: காது வலி

காதுகளில் வலி ஏற்பட்டால், அப்போது பூண்டுகளை தட்டி, கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால், உடனே வலி நீங்கிவிடும்.

கிராம்பு: பல் வலி

சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை, அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு

உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால், பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.

தயிர்: மாதவிடாய் பிடிப்புக்கள்

தயிரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், அது மாதவிடாயின் போது ஏற்படும் தசைப்பிடிப்புக்களை சரிசெய்யும். அதிலும் அந்த நேரத்தில் தினமும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.

உப்பு: பாத வலி

நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.

திராட்சை: முதுகு வலி

முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்

மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.

செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்: நெஞ்செரிச்சல்

அசிடிட்டியினால் ஏற்படும் நெஞ்செரிச்சலின் போது, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்ல தண்ணீரில் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.

தக்காளி: கால் பிடிப்பு

இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படுகிறதா? அப்படியானால், உணவில் தக்காளியை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மீன்கள்: அடிவயிற்று வலி

மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்யக்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப்பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.

ப்ளூபெர்ரி: சிறுநீரகப் பாதை தொற்று

சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால், அத்தகையவர்கள் ப்ளூபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, அந்த பிரச்சனையை சரிசெய்யும்.

ஓட்ஸ்: மாதவிடாய் வயிற்று வலி

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலையில் சாப்பிடுங்கள்.

அன்னாசி: வாயுத் தொல்லை

வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால், அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வதைத் தடுக்கும்.

ஆளி விதை: மார்பக வலி

மார்பக வலி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆளி விதைகளை உணவில் சேர்த்தால், அது அந்த வலியை கட்டுப்படுத்தும்.

புதினா: தசைப்புண்

அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெதுப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தால், அது வலியைக் குறைத்துவிடும்.

http://kulasaisulthan.wordpress.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.

இஃதிகாபின் ஆரம்பம்

இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

இஃதிகாபின் முடிவு நேரம்

இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)

நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2033)
இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)வின் கூடாரம், ஹஃப்ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண்டார்கள். "இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?" என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரீ (2034)

"நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?" என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டுகின்றது.

மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது… (புகாரீ 2041)

நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடாரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக்குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றாவது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.

இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித்தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்திருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித்தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)

தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029)
இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.

பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களின் மனைவியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.
பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்களில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Fwd: வேலை.நெட்





வேலை.நெட்

Link to வேலை.நெட்

Yamaha நிறுவனத்தில் Diploma Trainee Engineer பணிக்கு Diploma பட்டதாரிகள் தேவை – Madurai – July 2014

Posted: 17 Jul 2014 04:30 AM PDT

The post Yamaha நிறுவனத்தில் Diploma Trainee Engineer பணிக்கு Diploma பட்டதாரிகள் தேவை – Madurai – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

KONE நிறுவனத்தில் Engineering Specialist பணிக்கு BE/B.Tech பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014

Posted: 16 Jul 2014 01:18 PM PDT

The post KONE நிறுவனத்தில் Engineering Specialist பணிக்கு BE/B.Tech பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Atmel Corporation நிறுவனத்தில் Associate Software Engineer பணிக்கு BE/B.Tech/ME/M.Tech பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014

Posted: 16 Jul 2014 12:04 PM PDT

The post Atmel Corporation நிறுவனத்தில் Associate Software Engineer பணிக்கு BE/B.Tech/ME/M.Tech பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Teachers Recruitment Board – Assistant Professor பணிக்கு BE/B.Tech/ME/M.Tech பட்டதாரிகள் தேவை – Tamilnadu – July 2014

Posted: 16 Jul 2014 11:50 AM PDT

The post Teachers Recruitment Board – Assistant Professor பணிக்கு BE/B.Tech/ME/M.Tech பட்டதாரிகள் தேவை – Tamilnadu – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Indian Bank – Manager பணிக்கு BE/B.Tech/M.Sc/MBA/CA/M.Phil/Ph.D/PGDBM/PGDBA பட்டதாரிகள் தேவை – Tamilnadu – July 2014

Posted: 16 Jul 2014 11:50 AM PDT

The post Indian Bank – Manager பணிக்கு BE/B.Tech/M.Sc/MBA/CA/M.Phil/Ph.D/PGDBM/PGDBA பட்டதாரிகள் தேவை – Tamilnadu – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

Syntel நிறுவனத்தில் Application Programming/Maintenance பணிக்கு BSC/BCA/BCS/Diploma பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014

Posted: 16 Jul 2014 11:40 AM PDT

The post Syntel நிறுவனத்தில் Application Programming/Maintenance பணிக்கு BSC/BCA/BCS/Diploma பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

TNQ நிறுவனத்தில் Management Trainee பணிக்கு MBA/PGDM பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014

Posted: 16 Jul 2014 11:40 AM PDT

The post TNQ நிறுவனத்தில் Management Trainee பணிக்கு MBA/PGDM பட்டதாரிகள் தேவை – Chennai – July 2014 appeared first on வேலை.நெட்.

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]
You are subscribed to email updates from வேலை.நெட்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com