Monday, July 21, 2014

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!

ஹமாஸின் தலைவர் (அரசியல்) "Khaled Mashal" உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!!


"
ஹமாஸ்" காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். 

"
ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்".

"
உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை."

"
ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்."

"
ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ......". 

No comments: