Sunday, October 26, 2014

தனியாக செல்லும் பெண்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ள து. கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் ஜாடை மாடையாக கேலிசெய்வது போன்ற தொந் தரவுகள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக தனியாக பயணிக்கும்போது, சர்வ சாதார ணமாக நிகழ்கின் றன. இது போன்ற சூழல்களில், பெண்கள் தங்க ளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனத் தோடும் விழிப்புணர்வோ டும் பயணிப்பது மிக முக்கியம்.

தனியாக பெண்கள் பயணம் செய்வது என்பது பிரம்மப் பிரயத்தனமான செயலாகவே உள்ளது. பெண்க ளை விழுங்குவது போன்று பார்ப்பதில், அலாதி அல்ப சுகம்காணு ம் ஆண்களின் அலைபாயும் கண்களிலிருந்து பெண்கள் தப்பவே முடியாது. பெண்கள், இன்னும் சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பழ மைவாதம் நிலவும் ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம் என்பதை மறக் கக் கூடாது. இதுபோன்ற ஒரு சமூக க்கட்டமைப்பில், பெண்கள் தாங்கள் எவ்வாறு வெளியிடங்களில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளி வாகக் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் கலாச்சாரப் பெருமைக்கு இழுக்கு உண்டாக்காமல் இருக்கவும், தனியாக பயணிக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்றும் சில முக்கி யமான டிப்ஸ் களை கொடுத்துள்ளோம். அதைப்படித்து பார்த்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொ ள்ளுங்கள்.

உடைகளில் கவனமாய் இருக்கவும்

என்னமாதிரி உடைகளை அணிகிறோமோ, அதைப்பொறுத்து தான் கவன ஈர்ப்பின் தன்மை உள்ளது. அதிலும் உடலை இறுக் கிப் பிடிக்கும் உடைகள் மற்றும் குட்டைப் பாவாடைகள் போன்ற உடைகள் அணிவதைத் தவிர்ப்ப தன் மூலம், பெண்கள் தங்கள் மேல் விழும் அந்நியர்களின் தேவை யில்லாத பார்வைகளைத் தவிர்க்க லாம். எப்போதும் சுடிதார் அணிந்து, அதற்கு மேல் துப்பட்டா அல்லது ஷால் அணிவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் ஜீன்ஸ் மற் றும் குர்தாகூட அணியலாம், ஆனால் எப்போதும் ஷால் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண் டும்.

அந்நியர்களுடனான உரையாடல்களைத் தவிர்க்கவும்

அரட்டை அடிப்பதில் ஆர்வம் உள்ளவராய் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், தனி யாகச் செல்லும் போது, அவ் வாறான அரட்டைகளை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில், யாரோடும் தேவை யில்லாத உரையாடல்களில் ஈடுபடு வதை தவிர்க்கவும். மேலும் பயணிப் போர் யாரேனும், உரையாடல் களில் கலந்து கொள்ளும்படி நச்சரித்தால், குறைந்த அளவில் உரையாடல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் எதையும் பகிர்ந்து கொள்ள கூடாது.

உடைமைகளின் மேல் ஒரு கண் வைக்கவும்

உடைமைகள் அருகிலேயே இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவை மீது வைத்திருக்கும் கண் பார் வையிலிருந்து அகல கூடாது. ஏனெனி ல் இது இந்தியா! "வணக்கம்" என்று சொ ல்லி முடிக்கும் முன், பொருள்கள் மாயமாய் மறைந்திருக்கும். ஆகவே எந் நேரமும் விழிப்புணர்வோடு கண்கா ணித்துக் கொண் டே இருக்க வேண்டும்.

விலை உயர்ந்த நகைகளை அணிய வேண்டாம்

பெண்கள் தனியாக வெளியில் செல் லும் விலையுயர்ந்த நகைகளை அணி ந்து செல்ல‍வேண்டாம். இன்னும் சொல் ல‍ப்போனால், தங்க, வைர நகைகளை அறவே தவிர்த்து, கவரிங் நகைகளை யோ அல்ல‍து பிளாஸ்டிக் காலான நவீன வடிவத்தில் உள்ள‍ நகைகளை அல்ல‍து மணிகளை அணிந்து செல்ல‍வும்.

பணப்பையின் மேல் பிரியம் கொள்ளவும்

பணம் வைத்திருக்கும் கைப்பையை மிக அருகிலேயே அல்லது கைகளிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொண்டு செல் லும் பணத்தை ஒரே இடத்தில் வைக் காமல், அவற்றை பிரித்து, பின் பாக் கெட் அல்லது பையின் பக்க வாட்டுப் பகுதிகள் போன்ற, வெவ்வேறு இடங் களில் போட்டு வைக்க வேண்டும். ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ் வின்போது, அச்சூழலில் இருந்து வெ ளியே வருவதற்கு, இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

தைரியமாக இருக்கவும்

முதன்முறையாக தனியாக பயணிப் பவராய் இருப்பின், தைரியமாக நடந் து கொள்ளவேண்டும். அதுவும் முதன் முறையாக தனியாக பயணிக்கிறீர் கள் என்பது வெளியே தெரியும்படி எந்த தருணத்திலும் நடந்து கொள்ளக் கூடாது. என்ன செய்கிறோ ம், எங்கே செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பதாகவே எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். தலை நிமிர்ந்து நடந்து, திடமான குரலில் பேச வேண் டும்.

எதையும் கடன் வாங்க கூடாது

அந்நியர்களிடம் இருந்து எந்த விதமான பொருளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. யாரேனும் பிஸ்கட் அல்லது பழங்கள் கொடு த்தால், அதை பணிவாக மறுத்து விட்டு, இருக்கைக்குத் திரும்ப வேண்டும்.

தனிமையைத் தவிர்க்கவும்

இரயில் / பேருந்தின் ஓரத்தில், ஒரு ஆணின் பக்கத்தில் தனியாக இருப்பதாக உணரும் பட்சத்தில், பெண்கள் அதிகம் உள்ள பகுதி க்கு உடனே செல்ல வேண்டும். அருகில் அமர்ந்திருக்கும் நபரி னால் தர்ம சங்கடமாக உணர்ந்தால், இருக்கை யை மாற்றித் தரக் கோரலாம் அல்லது சக பயணிகளிடம் பேசி, அவர்களை உங்கள் இருக்கையில் அமர்த்தி, அவர்களின் இருக்கையில் நீங்கள் சென் று அமரலாம்.

அதிக பாரமின்றி பயணிக்கவும்

ஏகப்பட்ட லக்கேஜ்களைத் தூக்கிச் செல்ல வேண்டாம். அவ்வளவையும் ஒருவரே கையா ள வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். அதனால், எப்போதும் எடை குறைவாக, ஒரு தோள் பையோ அல்லது ஒரு ட்ராலி பையோ மட்டும் கொண்டு செல்வது நல்ல து. அதே போல், நிறைய நகையோ அல்லது பணமோ கொண்டு செல்வ தும் நல்லதல்ல.

இவ்வ‍ளவையும் மீறி உங்களுக்கு ஆபத்து நேர்ந்தால். .. மேற்கூறிய யாவையும் சரியாக கடைபிடித்தும், உங்களை யாரா வது மிரட்டினாலோ, உடமைகளை பறிக்க‍ முற்பட்டாலோ, அல்ல‍ து பாலியல் பலாத்காரம் செய்ய‍ முற்பட்டாலோ, நீங்கள் செய்ய‍ வேண்டியது என்ன‍ தெரியுமா? ஓர் ஆணின் மென்மையான பகுதிகள் தொண்டை, மூக்கு, கண்கள், நடு மார்பு பகுதி, விதைப்பை, கைகளி ல் உள்ள‍ சுட்டுவிரல் ஆகும். உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அந்நபரின் மேற்கூறிய மென்மையான பகுதிகளில் ஒன்றையோ அல்ல‍து பலவற்றை யோ உங்களால் முடிந்த அளவுக்கு கைகளாலோ அல்ல‍து கால்களா லோ பலமாக தாக்கு ங்கள். இதற்காக கராத்தே குங்பூ போன்ற தற்காப்பு கலைகள் தெரிந்திருக்க‍ வேண்டும் என்றில்லை. உங்களது முழுபலத்தை யும் காட்டுங்கள். உங்களது தாக்கு தலுக்கு உட்பட்ட‍ நபர் நிலைதடுமாறி கீழே விழும்பட்சத்தில், அல்ல‍து மயக்க‍முறும் பட்சத்திலோ அந்த இடத்தைவிட்டு நீங்கள் விரைவாக சென்று விடுங்கள்.

விலாசம் கேட்பதிலும் கவனம் தேவை!

நீங்கள் போகவேண்டிய வீடு அல்ல‍து அலுவலகத்தின் விலாசம் உங்களுக்கு தெரியவில்லை என்றா ல், அவ்விலாசத்தை அப்பகுதியில் இருக்கும் யாரிடமாவதுகேட்டு தெரிந் துகொள்ள‍ முயல்வோம். அப்ப‍டி நாம் கேட்க கூடிய நபரின் தோற்ற‍ம் வைத் து அந்நபரிடம் கேட்கலாமா வேண் டாமா என்பதை தீர்மானிக்க‍ வேண் டும். முதலில் அப்பகுதியை உங்கள் கண்களால் நோட்ட‍மிடுங்கள். உங்கள் உள்ளுணர்வு என்ன‍ சொல்கிறதோ அதன்படி நடந்து கொள்ளுங்கள். மூணு சீட்டு ஆடும் நபர்களிடமோ, குடி போதை யில் தள்ளாடும் நபரிடமோ, வேறு விதமாக காட்சியளிக்கும் சமூக விரோத மனிதர்களிடம் நெருங்கவே நெருங்காதீர்கள்.

http://vidhai2virutcham.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

தனிக்குடித்தனம் – பிரிந்திருந்தாலும் புரிந்திருப்போம்!

சிறுவட்டத்தில் வசதி வட்டத்தில் வாழவிரும்பும் இன்றையகால கட்டத்தில் தனிக்குடித்தனம் தான் 'ப்ராக்டிகல்'. இதில் மாற்று கருத்து குறைவுதான். தனியாக இருக்க விரும்புகிறோமா தனிமைப்பட்டு இருக்க விரும்புகிறோமா ?

தனியாக என்றால் சுயநலம் உண்டு. தனிமைப்பட்டு என்றால் மன நலம் இல்லை.

வயது காரணமாக முதியோர் சில சமயம் சோர்ந்து இருக்கலாம். வேறு வழி இல்லாமல் சேர்ந்து இருக்கலாம் . ஆனால் எப்போதும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது .

பிடித்ததை பிரிந்து இருக்கலாம் . அது தியாகம். பிடித்தவரை பிரி ந்து இருந்தால் அது சுயநலம். பிரி ந்து வாழ்ந்தால் வருவது இன்பமா, சந்தோஷமா, திருப்தியா, அமைதியா , சேமிப்பா, சுதந்திரமா ?

சேர்ந்து வாழ்ந்தால் பெறுவது அன்பா, வெறுப்பா, பாசமா, பாதகமா ?

பிரித்து பார்த்து புரிந்து கொள்ளலாம். பிரிந்து வாழ்ந்து புரிந்து கொள்ளலா ம்.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்.
எது அதிகம் ? அன்பா, வெறுப்பா, பொறுப்பா, வசதியா?

எது குறைவு ? மகிழ்ச்சியா? சுதந்திர மா ?

ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த் தை வெல்லும் என்பார்கள். வார்த்தை க்கு வலிமை உண்டு. வலியும் உண்டு.

வார்த்தை புரிந்து போனதால் வாழ்க் கை பிரிந்த கதைகள் நிறைய உண்டு.

வாழ்க்கை புரிந்துபோகும்போது வார்த்தை வெறும்வெற்றுச் சொ ல்லாவதும் உண்டு. வாழ்க்கை என்றால் நிறையும் உண்டு. குறை யும் உண்டு.

சேர்ந்து இருக்கும் குடும்பங்களில்

- என்ன சமைக்கலாம் என்கிற சர்ச்சை தினம் வரும்

– தாத்தாவுக்கு ரசம் சாதம்

- பையனுக்கு காரக்குழம்பு

- பேரனுக்கு பிஸ்சா அல்லது நூடுல்ஸ்

என்ன தான் செய்வாள் மருமகளும் மாமியாரும் ஒருவரைப் பார்த்தால் மற்றவர்க்கு ஆகாது.

அடுத்து டிவி சர்ச்சை

- IPL பார்க்க விரும்பும் கணவன்

-கார்ட்டூன் பார்க்க விரும்பும் பேரன்

– நியூஸ் அல்லது பஜனை பார்க்க விரும்பும் பெரியவர்

- சீரியல் பார்க்க விரும்பும் மாமியார்

அதனால் இன்று பல வீடுகளில் அஞ்சறைப் பெட்டி போல வெவ் வேறு சரக்கு தான் …சமாசாரம் தான்.

அதையும் மீறி பேரனுக்கு தன பென்ஷனிலிருந்து சைக்கிள் வாங் கித் தரும் தாத்தா . கணவனுக்கு முன்னால் மாமனாருக்கு காபி தரும் மருமகள். எதுசெய்தாலும் நொட்டு சொல்லும் மாமியார். போ க வர ஜாடை யாய் பேசும் நாத்த னார் …!

அது சரி…தனிக்குடித்தனம் போனால் அடிக்கடி ஜொள்ளு விடும் பக்கத்து பிளாட்டு பைத்தியக்காரன். வந்துவந்து வம்புபேசும் எதிர் வீட்டு மாமி. எப்போதும் சண்டை பிடித்துக் கொள்ளும் இளஞ் ஜோடிகளின் சத்தம். எதற் கெடுத் தாலும் பணம் பிடுங்கும் பிளாட் செக்ரெடரி. பார்கிங்குக்கு பிரச்ச னை தரும் செக்யூரிட்டி. அப்போ து நினைத்துப் பார்ப்பது நம் வீட்டு ஹீரோ மாமனாரை…!

குழந்தைக்கு ஜுரம். தூக்கி தூக்கிப் போடும்போது மருமகளுக்கு தூக்கி வாரிப் போடுகிறது. மாமியார் இருந்தால் ஒரு கஷாயம் வைத்து தந்து இருப்பார்.

தினம் தினம் லேட்டாக வரும் கணவன். அப்போது யோசிப்பாள் ...அந்த வீட்டில் எப்போதும் மனிதர் கள் கலகல. உணர்ந்ததில்லை தனிமை யும் பயமும்.

மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான் இலையின் பசுமை. உதிர் ந்தாலோ பிரிந்தாலோ இல்லை சரு காகும். நிறம் மாறும். தினம் வாடும்.

இணைந்து இருக்கும் போது இயல்பு இருக்கும். இயற்கையான உறவு இரு க்கும். உறவுகளின் அர்த்தம் இருக்கும்.

இருட்டும்போது எருமை தெரிவதில்லை. இருக்கும்போது அரு மை தெரிவ தில்லை. அருமை தெரியும்போது ஆனந்தம் உண்டு. அருமை தெரிய வில்லை என்றால் அங்கே கண்ணீரே உண்டு.

தென்னங்கீற்றுகளில் ஓலைகள் பல உண்டு. ஓலைகளும் கீற்று களும் தனித் தனியே… ஆனால் மரத்தில் ஒட்டிக்கொண்டு…! மட்டை விழுந்தால் 'மாறு' ஆகி மாறிப் போகும்.

வாழை மரத்தில் இலைகள் பல உண்டு. விரியாத ஒன்று. விரிந்த இளசு ஒன்று. விரிந்து முதிர்ந்த ஒன்று. விதையிடாமலேயே அடு த்தடுத்த வாழை கன்றுகள் ஒட்டியபடி வளர்வது கண்டிருப்போம்.

வாழ்க்கையும் அப்படித்தான். சேர்ந்து இருந்தால் இனிமை உண்டு.

நிறைவாக நிதானமாக யதார்த்தமாக காலத்திற்கேற்ற ஒரு விஷயம் ஒன்று. ஒரே பில்டிங்கில் தனித்தனி பிளாட்டில் இருக்கலாம். தவறில்லை. சேர்ந்து.. ஆனால் பிரிந்து.. உண்மை புரிந்து..! ஒரே தெருவில்கூட வேறு வீட்டில் இருக்கலா ம். அடிக்கடி வந்து பார்த்துச் செல்ல வச தியாக இருக்கும். நாள் கிழமைக்கு சேர்ந்து கொள்ள வளமையாக இருக்கும். ஒரே ஊரில் கண் காணாத இடத்தில காத தூரத்தில் வெவ்வேறு வீடா? இதுவே என் கேள்வி.

வாழ்க்கை ஒரு வேள்வி. வேள்வியில் பலி பழி இரண்டும் வேண் டாம். எல்லோரும் இன்பமாய் வாழ்வோம் என்ற பிரார்த்தனை இருக்கலாமே ..!

பிரிவோம்…புரிவோம் …ஆனால் இனிமையில் இணைவோம் சந்திப் போம்.

இது பற்றி தனிமையில் அல்ல இணைந்தே சிந்திப்போம் …!

- டாக்டர். பாலசாண்டில்யன்

http://vidhai2virutcham.com



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

குதிகால் செருப்பு வாங்கப் போறீங்களா?

குட்டையான பெண்கள், தங்களுக்கு உயரமும், கம்பீரமான தோற்றமும் கிடைக்க வேண்டுமென்பதற்காக, உயரமான குதிகால் செருப்புகளை தேடி, அதிக விலை கொடுத்து வாங்கி அணிகின்றனர். கூடவே, அசவுகரியம் மற்றும் ஆரோக்கிய சீர்கேட்டையும் சந்திக்கின்றனர்.

* குதிகால் செருப்பணியும் ஐம்பது சதவீத பெண்கள், காலில் சுளுக்கு மற்றும் குதிகால் வலியால் அவதிப்படுவதுண்டு.
*
குதிகாலின் பின்பக்கம், சிலருக்கு சிவந்து வீங்கிஇருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல், குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.
*
இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம், குதிகால் நரம்பு விண்விண்ணென தெறிக் கிற மாதிரி, "நியுரோமா' எனப்படும் கடுமையான வலி எற்படும்.
*
குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது, குதிகால் தசை நார் சுருங்கிப் போகும். அதிக உயரமான செருப்புகளை நீண்ட நேரம் அணியும்போது, முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு, அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க...
*
உங்கள் கால் அளவை, சரியாக தெரிந்து, அதற்கு பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளை தேர்ந்தெடுங்கள். கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி, உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத செருப்புகளை வாங்காதீர்கள்.
*
நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்பதற்காக, அளவுக்கு மீறிய உயரமுள்ள செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்னையை ஏற்படுத்தும்.

* இரண்டு அங்குல உயரம் கொண்ட, குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை; பாதுகாப்பானவை.
*
குதிகால் செருப்பின் உள்ளிருக்கும், "சோல்' ரப்பரால் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான், கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங், செயற்கையான "வினைல்' போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல், இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
*
தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான், காலிற்கு காற்றோட்டமாக அமைந்து, பாதுகாப்பு தரும்.

* பகல் முழுவதும், நடந்து, நடந்து வேலை முடித்து, மாலையில் வீடு திரும்பும் போது, கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, செருப்பு வாங்க, காலை நேரத்தை விட, மாலை நேரம் பொருத்தமானது.
*
செருப்பின் முன்பகுதி, மேற்புறம் முழுவதும் மூடியிராமல், அங்கங்கே காற்று புகும்படி, திறந்த வெளியாக இருக்க வேண்டும்.
*
அதிக நேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகை விட, பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம்.
*
குதிகால் செருப்பு, காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு வேண்டும்; அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும் போது கவனிக்க வேண்டியவை:
*
கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து, உடல் எடையை சமநிலை செய்து விட்டு, நடந்து பழக வேண்டும்.
*
குதிகால் செருப்பணிந்தவர்கள், கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில், கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும் போது முன்னங்காலும், குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப் பதித்து ஏற வேண்டும். அதேபோல், கீழிறங்கும் போது, காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.
*
கால் பாதங்களில் வெந்நீரையும், தண்ணீரையும் மாற்றி, மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்தால், குதிகால் வலியின்றி சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து, சிறிய பந்தின் மேற்பகுதியில், கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின், முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை, குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

http://pettagum.blogspot.in/2013/04/blog-post_5754.html



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பின்சிறப்பும்!

மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

"அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன்09:36)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்" (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,

2) துல் ஹிஜ்ஜா,

3) முஹர்ரம்,

4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, 'ஹராம்' என்பதற்கு 'தடுக்கப்பட்டவை' என்ற பொருளாகும். 'தக்பீரதுல் இஹ்ராம்' என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் 'இஹ்ராமும்' ஆகும். 'இஹ்ராம்' என்பதும் 'தடுக்கப்பட்வை' எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் 'ஹுரும்' என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே 'ஹுரும்' என்பது 'தடுக்கப்பட்டவை' அல்லது 'புனிதமானவை' என்று விளங்க முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

"அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்" (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர்ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!

அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், "இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸாஅலைஹிஸ்ஸலாம்அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்" என்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்" (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்" (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை "ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு" என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்". (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Saturday, October 25, 2014

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!
அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.
http://pettagum.blogspot.in/2013/09/blog-post_9684.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Thursday, October 23, 2014

ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்! அவேர்னஸ் அம்மாக்களுக்கு அழகான கைடு!

முதல் வரவு... இரண்டாவது வரவு...

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார்களுக்கு வரும் கவலை, அந்தப் புது ஜீவனின் வரவால் முதல் குழந்தையின் மனம் வாடிவிடக் கூடாது என்பதுதான். குழந்தை மனதின் சற்று சிக்கலான இந்த உளவியலை பக்குவமாகக் கடக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வெங்கடேஷ் மதன் குமார்.

1. முதன் முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு, சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போதும் அதே அளவில் இருப்பதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது. எனவே, முதல் குழந்தையை வரவேற்ற அதே உற்சாக மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.

2. இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுத்திவிடுங்கள். 'அம்மா வயித்துல உனக்காக, உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது...' என்று தொடர்ந்து சொல்லி வாருங்கள்.

3. ஒவ்வொரு மாதமும் மருத்துவமனைக்குச் செல்லும்போது முதல் குழந்தையையும் அழைத்துச் செல்லுங்கள். 'நீ வயித்துக்குள்ள இருந்தப்போ அம்மா இந்த பழங்கள், மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டதாலதான், நீ அறிவா, ஆரோக்கியமா, அழகா பிறந்தே. அதேமாதிரி குட்டிப் பாப்பாவும் பிறக்க நீதான் அம்மாவுக்கு பழம், மாத்திரை எல்லாம் சாப்பிட்டீங்களானு கேட்டு ஞாபகப்படுத்தணும்...' என்று பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி தொடர்ந்து பேசி, பேறுகாலம் நெருங்க நெருங்க, உங்களுடன் சேர்ந்து அதுவும் தன் குட்டி தம்பி/தங்கையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் மனநிலையை வளருங்கள்.

4.. 'பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட, ஸ்கூல்ல விட, ஹோம் வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க...' என்று முன்கூட்டியே முதல் குழந்தையிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.

5. முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், சேய்க்கு புரிதல் சிரமமும் குறைவாக இருக்கும்.

6.குழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே, 'நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல்' என்று, உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடர்ந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள். செய்யும் சேட்டைகளுக்கான வழக்கமான கண்டிப்புகூட, 'பாப்பா வந்துட்டதாலதான் அம்மாவுக்கு நம்மை பிடிக்காம போயிடுச்சு...' என்று இந்த நேரத்தில் அதற்கு தோன்றும் என்பதால், மிகவும் பொறுமையாக அணுகுங்கள்.

7. பவுடர் டப்பா, டயபரில் ஆரம்பித்து பாத் டப், டாய்லெட் டப், வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதம் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டேதான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்தக் குழந்தைக்குப் புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது, கேம்ஸ், பென்சில் பாக்ஸ், க்ரயான்ஸ் செட் என்று முதல் குழந்தைக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு குட்டி கிஃப்ட் வாங்கிக் கொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கான பொருட்களை, 'பாப்பாவுக்கு இந்த டவல் வாங்குவோமா..?', 'தம்பிக்கு இந்த கலர் வாக்கர் வாங்குவோமா..?' என்று முதல் குழந்தையையே அதை தேர்ந்தெடுக்க வையுங்கள். குழந்தைக்கு பெயரிடும்போதுகூட, முதல் குழந்தையின் சாய்ஸ்களையும் கேட்டு மதிப்புக் கொடுங்கள்.

8. அம்மா, மாமியார், கணவர் என மற்றவர்கள் என்னதான் உங்கள் குழந்தையை குறையில்லாமல் பார்த்துக்கொண்டாலும், குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட என்று கடமையளவில் உங்கள் குழந்தைகளின் தேவைகளில் இருந்து நீங்கள் விடுபட்டிருந்தாலும், மனதளவில் அதனுடனான நெருக்கத்தை தொடர்ந்து பேணுங்கள். குழந்தை ஸ்கூல் விட்டு வந்ததும் ஒரு அணைப்பு முத்தம், 'இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்துச்சு..?' போன்ற விசாரிப்புகள், உங்கள் அருகில் உறங்கும் அரவணைப்பு என்று அதன் மீதான உங்களின் அன்புப் பிடி தளராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

9. இரண்டாவது குழந்தையின் சின்ன சின்ன தேவைகளை முதல் குழந்தையை செய்யச் சொல்லிப் பழக்குங்கள். 'அண்ணா பவுடர் எடுத்து கொடுத்தாதான் பாப்பா போட்டுப்பாளாம்', 'அக்காவுக்குதான் தம்பியோட ஜட்டி எங்க இருக்குனு தெரியுமாம்... எடுத்துட்டு வாங்க செல்லம்...' என்று, நேரடியாக வேலை வாங்காமல், இரண்டு குழந்தைகளுக்குமான பாலமாக அந்தத் தருணத்தை அமைத்துக் கொடுங்கள்.

10.. நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும்போது, எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். 'பெரியவனுக்கு பிறந்தப்போ மூக்கே இல்லை, ஆனா, பாப்பாவுக்கு நல்ல கூர்மையான மூக்கு', 'பெரியவ பிறந்தப்போ அழுதுட்டே இருப்பா, இந்தக் குட்டிப் பையன் சமர்த்தா தூங்குறான்' போன்ற ஒப்பீடுகள் எல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன் உடன்பிறப்பின் மீதான் தீராத பகையையும் (சிப்லிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம்... ஜாக்கிரதை.

11. அதற்காக, 'நீதான் பெரியவன், விட்டுக் கொடுத்துப் போகணும்' என்று பொறுப்புகளை முதல் குழந்தை மீது சுமத்தாதீர்கள். 'சின்னப்பிள்ளைகூட சரிக்குச்
சமமா பிடிவாதம் பிடிக்கலாமா..?' போன்ற வன்சொற்களும் வேண்டாம். தனக்கான அன்பு பங்கிடப்படுகிறது என்ற தவிப்பைத் தவிர, வேறு எதுவும் குழந்தைக்கு இப்போது புரியாது, மனதில் பதியாது.    

12. ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளிகளாக வளர்வதும் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்றாமல் பாசமலர்களாக இருக்க, இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். எந்தவிதத்திலும், சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு இடையில் பாரபட்சம் காட்டாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமே இறுதிவரை பரிமாறும் வகையில் அன்னைதான் வார்த்தெடுக்க வேண்டும் பிள்ளைகளை! 


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com