Saturday, April 6, 2013

* தெரிந்து கொள்வோம் வாங்க-46



--
*more articles click*
www.sahabudeen.com


* தெரிந்து கொள்வோம் வாங்க-46
தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து "கேஷ்' என்ற ஆங்கிலச் சொல் வந்தது. 

* முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 

* உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்கள் ஆப்பிரிக்கர்கள். குறைந்த நேரம் தூங்குபவர்கள் சீனர்கள்.
 

* திருத்தணியைத் தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்டவர் ம.பொ.சிவஞானம்.
 

* கொச்சியில் யூத இனத்தவர்கள் வசிக்கின்றனர்.
 

* மகாத்மா காந்தியைக் கௌரவித்து இதுவரை 49 நாடுகள் தபால் தலையை வெளியிட்டுள்ளன.
 

* நண்டிற்கு தலை என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை.
 

* ஒரு மைல் தூரத்தைக் கடக்க 33 மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன நத்தைகள்.
 

* ஒரு சதுரமைல் வளமான நிலத்தில் 3 கோடியே 20 லட்சம் மண் புழுக்கள் இருக்கும்.
 

* தும்பிகளின் வாழ்நாள் 24 மணி நேரம் மட்டுமே.
 

* முதலைகளால் பின்னோக்கி நகர முடியாது.
 

* பாம்புக்கு காதுகள் கிடையாது. ஆனால், ஒலி அதிர்வுகளை உணரும் திறன் அதன் நாக்குக்கு உண்டு.
 

* ஒரு நத்தைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் பற்கள் இருக்கும்
* ஆமைக்குப் பல் கிடையாது. கடினமான ஈறு போன்ற அமைப்பாலே அது உணவுகளை உண்கிறது.
 

* உயில் எழுதும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள்.
 

* ஸ்பெயின் நாட்டில் தான் முதன் முதலில் நாணயம் தோன்றியது.
 

* துக்கத்தால் வரும் கண்ணீர் நம் உடலில் நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.

 கடல் முயல்!கடல் வாழ் உயிரினங்களில் ஒரு வகையான மீனுக்குக் கடல் முயல் என்று பெயர். இது தோற்றத்தில் பார்ப்பதற்கு முயலைப் போலவே இருக்கும். மீன் இனத்திலேயே அதிக முட்டைகள் இடும் உயிரினம் கடல் முயல் தான். அதாவது, ஒரு மாதத்தில் 11 கோடியே 95 லட்சம் முட்டைகள் இடக் கூடியது. 

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.
 

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.
 

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.
 

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.
 

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.
 

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
 

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.
 
தகவல்:யாழ் இணையம்

Engr.Sulthan

No comments: