ஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய
டிஜிட்டல் கேமிராவால் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும் போது அந்த கோப்பின் பெயர் Image048.jpg, Image049 etc.,இப்படிததான் இருக்கும் அதனால் அந்த கோப்பின் பெயரை வைத்துக்கொண்டு எந்த ஒரு உருப்படியான தகவலையும் நம்மால் பெறமுடியாது.
ஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய அந்த கோப்பினை செலக்ட் செய்துகொண்டு F2கீயை அழுத்தி அல்லது Right கிளிக்Renameயை செலக்ட் செய்து அந்த கோப்பின் பெயரை எடிட் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கோப்பாக F2 அழுத்தி பெயர் மாற்றா வேண்டுமானால் அது எவருக்குமே பிடிக்காத காரியம்.
அதனால் தான் அந்த கோப்புகள் அனைத்தயும் உங்களின் அர்த்தமுள்ள பெயர்களாக மாற்ற இதோ ஒரு எழிய வழி.
- முதலில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய கோப்புகளை அனைத்தயும் செலக்ட் செய்யவும்.
- F2 கீயை அழுத்தவும். உடனே அனைத்து கோப்புகளின் செலக்சனும் மறைந்து முதலில் உள்ள கோப்பு மட்டுமே எடிட் செய்ய முடியும்.
- இப்போது உங்களின் விருப்பமான பெயரை அதில் எழுதி (Delhi Visit) Enter பட்டனை தட்டவும்.
- அவ்வளவுதான் அந்த முதல் கோப்பு Delhi Visit.jpg என்ற பெயர் மற்றம் செய்யப்பட்டிருக்கும் அதற்க்கு அடுத்தடுத்த கோப்புகள் Delhi Visit(1).jpg, Delhi Visit(3).jpg …இப்படியாக மாற்றப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment