Thursday, December 1, 2011

Resume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்


Resume என்பது வேலை தேடுபவர்களின் மந்திர சொல் திறமையிருந்தும் Resume ஐ சரிவர தயாரிக்காத்தால் வேலை இழந்தவர்கள் பலர். Resume என்பது உங்களைப்பற்றிய தெளிவான அறிமுகத்தை கொடுத்து உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாகும்  . எனவே Resume தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .கீழே கொடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் Resume தயாரியுங்கள் .

*  நீங்கள் எந்த நிறுவனத்திற்கு Resume அனுப்பும் போதும் ,எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை ஒரு விண்ணப்பமாக எழுதி அதனுடன் Resumeஐ இணைத்து அனுப்புங்கள் .
* Resume எழுதும் போது தாளின் இடது ஓரத்தில் முதலில் உங்கள் பெயரினை தெளிவாக எழுதுங்கள், வலது ஓரத்தில் உங்களின் சமீபத்திய தெளிவான புகைப்படத்தை இணையுங்கள்.

*  அதிகப்படியான கட்டங்கள், கலர்ஷேடுகள், தெளிவற்ற ஃபான்ட் , அதிகமான அடிக்கோடு இடுதல் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
*  இமெயில் முகவரியை குறிப்பிடும் போது உங்களின் பெயரோடு தொடர்புடைய இமெயில் முகவரியை கொடுங்கள் அதை விட்டுJollyboy_Rsp@gmail.com போன்ற பெயர்கள் உடைய  இமெயில் முகவரியை கொடுக்காதீர்கள் அது எதிர்மறை விளைவுகளை ஏற்ப்படுத்தும்

*  நோக்கங்களை(Objective) தெளிவாக குறிப்பிடுங்கள்
*  கல்வித்துறை குறித்த தகவல்களை எளிமையாக கொடுங்கள்
*  உங்களின் தனித்துவமான திறனை குறிப்பிடுங்கள் அதை  தவிர்த்து கல்லூரியில் படித்த பாடங்களையெல்லாம் கொடுக்காதீர்கள் உதாரணமாக
கல்லூரியில் படித்த J2EE,Visual Basic, Oracle, C++, HTML, Data Management போன்றவைகளை Resume இல் கொடுத்து இருந்தீர்களானால் அதை பற்றி உங்களை 10 நிமிடம் பேச சொன்னால் உங்களால் தொடர்ச்சியாக பேச முடியுமா  என யோசியுங்கள்.

* பிறந்த தேதி,திருமணநிலை, பாலினம், மதம் , தெரிந்த மொழிகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை சரியாக கொடுங்கள்.
*  Hw r u , Looking 4 ur reply , போன்ற SMS பாணியில் விவரங்களை கொடுக்காதீர்கள்
* நீங்கள் தயாரித்த Resumeஐ உங்களின் இரண்டு அல்லது மூன்று நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்த பின்பே நிறுவனங்களுக்கு அனுப்புங்கள்

*  இமெயிலில் அனுப்பும் போது PDF வடிவில் அனுப்புங்கள் இதனால் ஃபான்ட் பிரச்சனைகள் தவிர்க்கப்படும்  
*  இமெயிலில் அனுப்பும் போது அட்டாச்மென்ட்களில் உங்களது Resumeக்கு உங்களின் பெயரில் பெயரிடுங்கள் உதாரணமாக   Guru resume போன்று கொடுங்கள் வெறுமனே Resume என  கொடுக்காதீர்கள்
*  இமெயிலில் அனுப்பும் போது சப்ஜெக்ட் லைனிலேயே முக்கியமான வார்த்தைகளை குறிப்பிடுங்கள் எக்காரணம் கொண்டும் சப்ஜெக்ட் இல்லாமல் இமெயில் அனுப்பாதீர்கள்
* உங்களது Resumeஐ அடிக்கடி புதிப்பியுங்கள் ஒரு முறை பிரின்ட் எடுத்துவிட்டு அதையே எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் .

No comments: