* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது.
* எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கிப் பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேவையான போது உபயோகித்துக் கொள்ளலாம்.
* எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள்.
* பழைய சாக்ஸுகளைத் துடைப் பத்தின் கைப்பிடிப் பக்கம் மாட்டிக் கட்டி விட்டால் துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.
* உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது.
* காலையில் செய்கிற காய்கறிகள் மீந்து விட்டனவா? பஜ்ஜி மாவில் அவற்றைக் கலந்து எண்ணெயில் போட்டுப் பொறித்தெடுத்தால் வித்தி யாசமான சுவையுடன் தூள் பஜ்ஜி கிடைக்கும்.
* கொசுவை விரட்ட உபயோகிக் கும் மேட் தீர்ந்து விட்டதா? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள். கொசு வராது.
* காரணமே இன்றி திடீரென வயிற்றை வலிக்கிறதா? உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் தண் ணீரைக் குடித்து விட்டால் வலி பறந்து விடும்.
* காலை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் கைக்குட்டை யைத் துவைக்க மறந்து விட்டீர்களா? அதை ஒரு முறை அலசி, சமைத்து வைத்துள்ள சூடான பாத்திரங்களின் மேல் சிறிது நேரம் பரப்பி வைத்து விடுங்கள். பட்டாகக் காய்ந்து விடும்.
* சைனஸ் தொல்லையால் படுக்கும் போது தலைவலிக்கிறதா? படுக்கும் போது தலையணையை ஒரு நியூஸ் பேப்பரால் சுற்றி விட்டு அதன் மேல் தலை வைத்துப் படுங்கள். வலி இருக்காது.
* ரசம் கொதித்து இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் கறிவேப் பிலைப் பொடியைத் தூவி இறக் கினால் வாசனை ஊரைத் தூக்கும்.
தனியே கறிவேப்பிலை போட வேண் டிய அவசியமுமில்லை.
* மிக்சியில் மாவு அரைக்கும் போது அது சீக்கிரமே சூடாகி விடும். இதைத் தவிர்க்க, மாவில் கொஞ்சம் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம்.
* கூடியவரையில் சமையலை இரும்புப் பாத்திரத்திலேயே செய் யுங்கள். அதனால் நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்து விடும்.
* அப்போதே அரைத்த தோசை மாவில் தோசை ஊற்றினால் கசக்கும். அதைத் தவிர்க்க அதில் மோர் கலப் பதற்குப் பதில் பழைய சாதத்துத் தண்ணீ ரைக் கொஞ்சம் கலந்து செய்யலாம்.
* தக்காளிப் பழங்கள் மீந்து விட்டால் அதை அரைத்து வடிகட்டி தோசை மாவுடன் சேர்த்து, கொஞ்சம் காய்கறி களை நறுக்கிப் போட்டு தோசையாக ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
* காலையில் செய்த உருளைக்கிழங்கு மசாலா மீந்து விட்டதா? அதை லேசாக சூடு படுத்தி, பிரெட் அல்லது பன் உள்ளே வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
* தேங்காய் சாதம் செய்கிறீர்களா? அத்துடன் வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு, காய்கறிகளையும் வதக்கிப் போட்டுச் செய்யலாம்.
* பூண்டு குழம்பு செய்யப் போகிறீர்களா? பூண்டை எப்படி உரிப்பது என்று மலைக்க வேண்டாம். முதல் நாள் இரவே பூண்டை ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அடுத்த நாள் உரிக்க சுலபமாக இருக்கும்.
* அரிவாள் மனையின் முகப்புப் பகுதி யில் ஒரு வெங்காயத்தைக் குத்தி வைத்து விட்டுப் பிறகு நறுக்கினால் கண்ணீர் வராது.
* புதினாவை மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி போன்றவை செய்தால் வித்தியாசமான சுவையுடனும், நிறத்துடனும் இருக்கும்.
* மாதவிலக்கு சரியாக வராத பெண்கள் மாதவிலக்காகும் போது முதல் மூன்று நாட்களுக்கு கொள்ளுக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம். மாதவிலக்கும் முறைப்படும். உடலின் ஊளைச்சதைகளும் குறையும்.
* ரவை தோசை செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பை அரைத்துக் கலந்து செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.
* பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி விட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவினுள் போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.
* சீயக்காய் வாங்கி அரைக்கும் போது அத்துடன் சாதாரணமாகச் சேர்க்கும் பொருட்களுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யையும் போட்டு அரைக்க பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.
No comments:
Post a Comment