எப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்?
செல்வங்களில் எல்லாம் முதன் மையான செல்வம், நோயற்ற வாழ்வு தான்.
இத்தகைய செல்வத்தைப் பெற, நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. சுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழி களை கடைப்பிடித்தாலே, ஆரோக் கியமான வாழ்வை பெறலாம். அதற்கான வழிமுறைகளில், மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்து வது. கைகளை கழுவுவதால், நோய் தீருமா என்று சிலருக்கு தோன்றலாம். ஆம். காற்றின் மூலமும், நீரின் மூல மும், பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
உலகளவில் சுகாதாரத்தை முன் னிறுத்தி சொல்லப்படும் விஷயங் களில், கை கழுவும் முறைதான் முதன் மையானது. உலக சுகாதார அமைப்பு, அக்டோபர் 15-ம் நாளை, உலக கை கழுவும் நாளாக அறிவித்துள்ளது. இந் நாளில், கை கழுவும் முறை பற்றியும், அதனால் உண்டாகும் நன்மை பற்றி யும், உலகம் முழுவதும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
கை கழுவும் முறையை, பின்பற்றா மல், பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது, வளரும் நாடுகள்தான். இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண் ணும் வழக்கம் கொண்டுள்ளன. இந்தி யாவில், கைகளை கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப் போக்கு நோயால் ஆண்டிற்கு, ஐந்து லட்சம் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். www.sahabudeen.com
இதனால் உலகளவில், 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகா தார அமைப்பு தெரிவிக்கிறது. இத னால், வளரும் நாடுகள் மற்றும் பின் தங்கிய நாடுகளில், கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. மேலும், குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை, கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் சுத்தம் செய்வ தால் மட்டுமே அழிக்க முடியும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி போன்ற பல நோய்களுக்கு கார ணம், அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெ பைலோகாக்கஸ் ஆரியஸ்கிருமி, நகங் களின் இடுக்குகளில் ஒட்டி, உண வருந்தும் சமயம் உட்சென்று,குடலில் பெருகி நோயை தோற்றுவிக்கிறது.
எப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்?
* காலையில் இருந்து எழுந்த வுடன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மலம் கழித்தபின், சோப்பு போட்டு, கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
* எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் அவசியம்.
* வாகனம் ஓட்டி வந்த பின், உடனே கை கழுவுதல் நல்லது.
* குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும்.
* கைகளை அவசர அவசரமாக, கழுவக் கூடாது. குறைந்தது, 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்தக் கூடாது.
* கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் நெருங்காத வண்ணம், 60 சதவீதம் தடுக்கலாம்.
http://pettagum.blogspot.in/2012/09/blog-post_8397.html
--
No comments:
Post a Comment