Sunday, October 27, 2013

பெண்களும் நகை திருட்டுகளும்

பெண்களும் நகை திருட்டுகளும்

     பெண்களுக்கு நகை மேல் உள்ள ஆசை மட்டும் என்றுமே   குறையாது.  ஒரு சில பெண்கள் இதில் விதிவிலக்கு . அவர்கள்  திருமணத்திற்கு அல்லது முக்கிய நிகழ்சியின்   போது வீட்டில் உள்ள  நகைகளையும்   எல்லாம் அணிந்து கொண்டு மற்றவரிடத்தில் பெருமையையும் , செல்வம்  இருப்பதாய் காட்டி கொள்வதாக எண்ணுகிறார்கள்.இன்னும் சிலர் நகைக்கடை பொம்மை போல நகைகளை அணிந்து இருப்பர்.அதுவே ஆபத்தானது என்பதை உணர தவறி விடுகிறனர் .அதுவே திருடர்களுக்கு மிக சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடுகிறது.பாடுபட்டு சேர்த்த பணத்தில் கொண்டு வாங்கிய நகைகளை ஒரு சிலர் பாதுகாக்க தவறி விடுகிறார்கள் .தொடர்சியாக நடை பெற்ற திருட்டுகள் இப்படி ஒரு பதிவை எழுத துண்டியது.

     தமிழ் நாட்டில் மின்வெட்டு குறைந்தது 12  மணி நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது .இதை பயன்படுத்தி திருடர்கள் வழி பறி செய்ய எதுவாக அமைந்து விடுகிறது .பொதுவாக எல்லோருக்கும் உடல் உழைப்பு குறைந்து விட்டது.அதனால் உடல் பயிற்சி அவசியமாகி விட்டது.வீட்டில் உள்ள  பெண்களுக்கு  உடல் பயிற்சி செய்ய  உடல் பயிற்சி  கருவிகள் வாங்க வேண்டுமானால் ஒரு பெரிய தொகை தேவைப்படும் .இதனால்காலையும் ,மாலையும்  நடை பயிற்சி தான் காசில்லாத எளிய வழி .

    இந்த நடைப்பயிற்சி  தான் பெண் தன் கணவருடன் தனியாக காலையில் 5 மணிக்கு  செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்..இதை வெகு நாள் கவனித்து கொண்டு இருந்த திருடர்கள் அந்த பெண் ஒருவர் தனியாக    செல்லும் போது இரு சக்கர வாகனதில் தலை கவசம் வந்த இருவர் கழுத்திலுள்ள10 பவுன் தாலி சங்கலியை பறித்துகொண்டு சென்று விடநேர்.அதன் பிறகு  அவர் கூச்சல் போட்டு  மற்றவர்கள் பின் தொடர்ந்தும்  தேடியும் அவர்களை  பிடிக்க முடிய வில்லை .நல்ல வேலையாக அவர் கையில் அணிந்து இருந்த  8 பவுன் காப்பு திருடர்களுக்கு தென்பட வில்லை .அதனால்  அது தப்பியது.இந்த சம்பவம் நம் வசிக்கும் பகுதியின் அடுத்த தெருவில் நடந்தது தான் அதிர்ச்சி.

  சில நாட்களுக்கு முன்னே மற்றும்  ஒரு பெண் தன் குழந்தையை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பகலில் சென்று கொண்டு இருந்திருக்கிறார் .பின் தொடர்ந்த திருடர்கள்  தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வண்டியை மடக்கி குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி   அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பறித்து சென்று விட்டனர் .இத்தனைக்கும் அது ஒரு மிக  முக்கியமான சாலை .

      உறவினர் ஒருவர் திருமணதிற்கு  சிற்றுந்து (minibus) வந்த உறவினர் திருட்டு பயம் காரணமாக தன் நகைகளை 12 சிறிய கைப்பையில் போட்டு அதை பெரிய பையில் உள்ளே வைத்திருக்கிறார்.பேருந்தில் அருகில் இருந்த பெண் தன் நாணயத்தை போட்டு தேடி இருக்கிறார் . உறவினர் திருமண வீட்டிற்கு வந்த பின் தேடிய போது தன் தெரிந்துகிறது நகை பையை அருகில் இருந்த பெண் திருடி சென்று விட்டது.இத்தனைக்கும்   உறவினர் அவருடைய அத்தையுடன்  ஒரே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து இருக்கிறார்.பிறகு பேருந்தில் தேடி ,காவல்துறையில் புகார் கொடுத்ததும் ஒன்றும் பலனில்லை .

        உறவினர் புகார் கொடுக்க சென்ற போது காவல்துறை நடந்து கொள்ளும் விதம் எழுதுவதற்கு அசிங்கமாக இருக்கிறது, புகார் பெற்று நடவடிக்கை எடுக்க 10,000 ரூபாய் மேல் செலவு செய்தும் ,நகை கிடைக்காமலும் ,மன நிம்மதி போனதும் தன் மிச்சம் .இது எரிகிற வீட்டில் பிடிங்குவதெல்லாம்  லாபம் என்ற மன நிலையை தான் காட்டுகிறது. இதானால் தன் என்னவோ நகையும் போயும் மேலும் பணத்தையும் ஏன் இழக்க வேண்டும் என்று   பலர் புகார் கொடுக்க போவதில்லையா ? என்ற சந்தேகமும் வருகிறது.

         ஆபரண தங்கத்தின் விலை1 பவுன் 25,000 ரூபாய் தாண்டி விற்கிறது.வழிப்பறி செய்யும் திருடர்களுக்கு  தங்கம் தன் குறியாக இருக்கிறது.ஒரு சில நகைகளை போட்டு கொள்ளலாம் ,அதனால் தவறில்லை .பெற்றோர் சிலர் தன் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த நகைகளை போட்டு அழகு  பார்பதாக எண்ணி ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்கள் .அவர்களுக்கு அதன் மதிப்பு தெரிவதில்லை .கவரிங் நகைகளை பயன்படுத்தலாம், திருட்டுபோனாலும்கவலைப்படதேவையில்லை.  வழிப்பறி செய்யப்பட்ட சிலர் ,திருடர்கள் வந்த வாகனத்தின் எண் ,வாகனத்தின் பெயர் எதையுமே கவனிப்பதில்லை .மக்களிடையே போதிய விழிப்புணர்வை இல்லை என்பதையே காட்டுகிறது
.
           சந்தர்ப்பமும் ,சூழ்நிலைகளும் தன் ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது.சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் , வறுமை ,இயலாமை ,போதை பொருட்கள் ,மதுவுக்கு  அடிமை ,எல்லாம்  மனிதன் தவறு செய்ய வழிவகுக்கிறது.
                       வசதி படைத்தவன் கொடுக்கமாட்டான் ,
                       வயிறு காஞ்சவன்   விடமாட்டான்,
                       திருடனாய் பார்த்து திருந்த விட்டால்,
                      திருட்டை  ஒழிக்க முடியாது.    என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது.

http://nathiyinvaliyilorunaavai.blogspot.in/2012/10/blog-post.html

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

No comments: